மறுநாள் அலுவலகம் முடிந்து தேவாவிற்காக சுவாதி ,வரு இருவரும் பார்க்கங்கில் காத்து கொண்டு இருந்தார்கள் ..
“வாசுவும் தேவாவும் பேசிக்கொண்டே கீழே இறங்கி வந்தார்கள் வாசு சுவாதியை ஒரு நிமிடம் கண்கள் கலங்க பார்த்து விட்டு பிறகு அவள் பார்த்தவுடன் திரும்பிக் கொண்டான் “..
“தேவா சிரித்துக் கொண்டே இந்தப் புழப்பிற்கு நாண்டு கொண்டு சாகலாம் என்றான் வாசு தான் இன்னும் கொஞ்ச நாள் அப்புறம் தெரியும் டா நீ எப்படி இருப்பாய் என்று என்றான்”…
“நான் எப்பவும் இப்படித்தான் இருப்பேன்”. “அதோட பாக்குறேன் எப்படி இருக்க என்று ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ வரு பின்னாடி சுத்தல அன்னைக்கு எழுதி வச்சிக்கிறேன்டா “என்றான்..
” தன் நண்பன் சொன்னது இன்னும் கொஞ்ச நாட்களில் நடக்க போகிறது என்பதை அப்போது தேவா அறியவில்லை “சிரித்துக் கொண்டே அப்படியா பார்க்கலாம் என்று விட்டு வருவின் அருகில் வந்து நின்றான்…
“வரு நான் சுவாதியுடன் சென்று தைக்க கொடுத்து விடுகிறேன் என்று சொன்னாள். அமைதியாக ஒரு நிமிடம் அவளைப் பார்த்துவிட்டு என்னுடன் தைக்க கொடுக்க வரலாம்” .
“சரி என்று விட்டு சுவாதி உனக்கு ஏதாவது நல்ல கடை தெரியுமா என்று தேவா கேட்டான். அண்ணா உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என்றால் நானும் கூட உங்களுடன் பிளவுஸ் தைக்கு கொடுக்க வரட்டா என்றாள் “..
“இருவருமே வாருங்கள் என்று வாசுவையும் பார்த்து சொல்லிவிட்டு நால்வரும் அவர்களது தனித்தனி வண்டியில் டைலர் கடையை நோக்கி சென்றார்கள்”..
” சுவாதிக்கு தெரிந்த நல்ல டெய்லர் கடை அங்கு சென்றவுடன் நிறைய ஒர்க்கிங் பிளவுஸ் காட்டினார்கள் ஆனால் வருவிற்கு எதை தேர்வு செய்வது என்று தெரியவில்லை”..
” சுவாதியும் எதையெதையோ சொன்னாள் வரு அமைதியாக இருந்தவுடன் தேவா தன் தலையில் தட்டிக் கொண்டு “வாய் அடிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது” என்று வாய்விட்டு அவளைப் பார்த்து சொல்லிவிட்டு அவனாக இரண்டு மூன்று டிசைன்கள் தேர்வு செய்து அதில் ஒரு சில ஆல்ட்ரேஷன் சொன்னான்”…
“வாசுவும் சுவாதியும் வாயை பிளந்து கொண்டு தேவாவை பார்த்தார்கள்” “திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் ஆனால் இவளுக்காக புடவை எடுக்கிறான் “நகை எடுக்கிறான் ..
இப்போது “பிளவுஸ் டிசைன் கூட சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று பார்த்தார்கள்”இவளுக்காக என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறான் என்று யோசித்தார்கள்..
அதன் பிறகு “தேவா தான் அனைத்தையும் சொல்லிவிட்டு திரும்பும் போது சுவாதியும் வாசுவும் தன்னையே அப்படி பார்ப்பதை பார்த்துவிட்டு இருவர் கண் முன் கையை அசைத்தான்”..
இருவரும் “தேவாவை பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக இருந்தார்கள் பிறகு நாள் வரும் துணியை தைக்கக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார்கள் “..
தேவா சுவாதியின் பக்கம் திரும்பி சுவாதி ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா என்று கேட்டான் ஏன் அண்ணா இல்லை என்றாள்.
“அருகில் உள்ள கடைக்கு சென்று ஏதாவது சாப்பிட்டுவிட்டு சொல்லலாமே என்றான் சரி என்று விட்டு நால்வரும் சென்றார்கள் என்ன தேவையோ அதை அவர்களுக்கு தேவையானது ஆர்டர் பண்ணி சாப்பிட்டுவிட்டு அவர்களது இருப்பிடத்தை நோக்கி சென்று விட்டார்கள்”..
இப்படியே நாட்களும் உருண்டோடியது “திருமணத்திற்கு ஒரு வாரம் என்று வந்து நின்றது இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு தேவா வரு இருவரும் அலுவலகத்திற்கு பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்வதாக இருந்தது” ..
“எம் டி இடம் தேவா ஏற்கனவே பேசி விட்டான் தேவா தனிப்பட்ட முறையில் எம்டியை பார்த்து தனக்கு திருமணம் என்பதையும் சொல்லியிருந்தான் ஆனால் திருமணத்திற்கு பத்திரிக்கை இப்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்புதான் தேவா வருவையும் அழைத்துக் கொண்டு சென்று தனது எம்டிக்கு வைத்து விட்டு வந்தான்”..
“அவரும் சிரித்த முகமாக வாங்கிக்கொண்டு தன் வளர்ப்பு மகன் தேவாவை எப்பொழுது டா உன்னை இப்படி ஒரு கோலத்தில் பார்ப்பேன் என்று இருந்தேன் வரு அதை நிறைவேற்றி விட்டாள்”..
“நீதான் அவனை இனி அடக்கி ஆள வேண்டும் என்று சிரிப்புடன் சொன்னார் வருவும் சிரித்துக் கொண்டே செய்து விட்டாள் போச்சு சார் என்று சிரித்தாள் பிறகு இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்”…
“அவனுக்கு அப்பா என்றால் உனக்கு மாமா இல்லையா என்று கேட்டார் மாற்றிக் கொள்ள கொஞ்ச நாளாகுமே” என்று சொன்னாள் உனக்கா மாற்றி கொள்ள கொஞ்ச நாளாகும் என்றான் தேவா. எம்டி கணேசனும் தேவாவும் சிரித்தார்கள் இருவரையும் பார்த்து லேசாக சிரித்தாள்…
பிறகு அங்கே இரவு உணவு முடித்துக் கொண்டு அவர்களது இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள் இப்படியே நாட்கள் உருண்டோடி திருமணத்திற்கு ஒரு வாரம் என்று வந்து நின்றது..
அப்பொழுது “வரு தான் இனி தேவா வீட்டிற்கு திருமணமாகி அந்த வீட்டு மருமகளாக தான் செல்வோம் இறுதியாக கல்யாணத்துக்கு முன்பு ஒரு நாள் சென்று விட்டு வரலாம் என்று எண்ணி தேவா வீட்டிற்கு வந்தாள் “..
அப்பொழுது “அரசி வரவேற்பரையில் உட்கார்ந்து இருந்தார் என்ன மாமியாரே தனியாக உட்கார்ந்து இருக்கிறீர்கள் உங்களது ஜோடி புறா எங்கே என்றாள்” “இந்த வாய்க்கொழுப்புக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்லை இது மட்டும் அடங்கவே மாட்டேங்குது” என்றார்..
“அதை அடக்கி காட்டுங்க என்று சொல்லி சிரித்தாள் அவரும் சிரித்து விட்டு பார்க்கிறேன் நீ அடங்குறியா இல்ல அடக்கறியா என்று என்றார் வரு சிரித்துவிட்டு அவரது அருகில் உட்கார்ந்து என்ன தனியா உட்கார்ந்திருக்கீங்க என்றாள்”..
“ஆதுவும் அவனும் உள்ளே பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் படிப்பு சம்பந்தமாக அதுவும் உங்க பெரிய பையனுடைய ஆதுவை ஏன் தனியா விட்டீங்க என்றாள் “..
“அவள் பெரிய மகன் என்றவுடன் முறைத்தார் சரி சரி உங்க வளர்ப்பு மகன் சரியா என்று விட்டு அவர் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டாள் பிறகு கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு சரி நேரம் ஆகிறது”..
” நான் ஆதுவை பார்த்து பேசி விட்டு செல்கிறேன் என்று எழுந்தாள் ஆதுவையா இல்லை என்று விட்டு அமைதியாக இருந்தார் “இதோட அந்த சிடுமூஞ்சியை பார்க்க தான் எவ்வளவு தூரம் வராங்க பாருங்க”…
“அதுதான் டெய்லி ஆபீஸ்ல பாக்குறேன் அதை விட்டுவிட்டு வீட்டில் பார்க்க வர தனியாக இவ்வளவு தூரம் வராங்களோ என்று விட்டு நகர்ந்தாள் “..
“மேடம் அங்கு பார்க்கும்போது அப்பொழுது இங்கே பகல் வேளையில் வந்து பார்த்துவிட்டு சொல்லலாமே என்றார் பகலில் வந்தால் உங்களை வேண்டுமானால் பார்க்கலாம்”..
” உங்கள் கணவரையும் பார்க்க முடியாது உங்கள் மகனை சுத்தமாக பார்க்கவே முடியாது என்றாள் நீ யாரை சொல்கிறாய் என்று தான் புரியவில்லை என்றார் சடன் பிரேக் போட்டது போல் வரு நின்று விட்டு நீங்களே ஒத்துக் கொண்டீர்கள் மாமியாரே என்று விட்டு சிரிப்புடன் நகர்ந்தாள்”..
“அவள் சொல்லிய பிறகு தான் மகன் என்பதை நாம் வாய் வார்த்தையாக சொல்லவில்லை என்றாலும் தேவாவையும் குறிப்பிட்டு இருக்கிறோம் என்று எண்ணிவிட்டு போகும் வருவை முறைத்தார்” …
“வரு போகும்போது ஆதுவும் தேவாவும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது ஆது தேவாவை பிடித்து வைத்து அண்ணா உங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா இல்லையா? “என்று கேட்டான் ..
“இருவரும் பேசிக் கொண்டிருந்ததால் இருவரும் என்னதான் பேசுகிறார்கள் என்று கேட்கலாம் என்று வரு வெளியே அமைதியாக இருவரும் பேசுவதை கேட்டாள் விருப்பம் இல்லாமல் இதுவரைக்கும் வந்திருக்கிறது “என்றான் தேவா…
“உங்களுக்கு திருமணத்தில் சம்மதம் சரி வரு அண்ணியை பிடித்திருக்கிறதா ? “என்றான் டேய் இது என்ன கேள்வி என்றான் நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள் உங்களது வருங்கால மனைவியாக என்றான்…
“இன்னும் ஒரு வாரத்தில் எனக்கும் அவளுக்கும் திருமணம் அதை நினைவில் வைத்துக் கொள் என்றான் நான் கேட்பது உங்களுக்கு புரியவில்லை” என்று நினைக்கிறேன்..
“நீங்கள் வரு அண்ணியை விரும்புகிறீர்களா ?என்று கேட்கிறேன் என்றான் தேவா தனது தம்பியை அடிக்க கை ஓங்கி விட்டு கீழே விட்டான் ” ஆது படிக்கும் வேலையை பார் என்றான் …
“அண்ணா நிச்சயத்திற்கு முன்பு எப்படியோ ஆனால் இப்போது உங்கள் மனதில் வரு அண்ணி இருக்கிறார்கள் என்று இத்தனை நாட்கள் எண்ணினேன் “ஆனால் நிச்சயமான இத்தனை நாட்களிலும் நீங்கள் வரு அண்ணியிடம் பேசி நான் ஒரு நாள் கூட பார்த்ததில்லையே”..
” நீங்கள் அடிக்கடி ஏதோ யோசனையாக இருக்கிறீர்கள் இந்த யோசனையை பார்க்கும் போது ஆரம்பத்தில் வரு அண்ணியை பற்றி யோசிக்கிறீர்கள் என்று யோசித்தேன் “ஆனால் இப்பொழுது கொஞ்ச நாட்களாக எனக்கு பயமாக இருக்கிறது…
” எங்களுக்காகவும் வீட்டிற்காகவும் நீங்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டீர்களோ” என்று என்றான் வரு கூட தேவா என்ன சொல்வான் என்று காத்துக் கொண்டிருந்தாள்”..
ஆனால் “தேவா வருவின் தலையில் இடியை இறக்குவான் என்று அப்போது வரு எண்ணவில்லை ஆதுவுமே தன் அண்ணன் அவரது மனதை தன்னிடம் திறப்பார் என்று சந்தோஷத்தில் தனது அண்ணனின் முகத்தையே பார்த்தான்”..
ஆனால் “தேவா வயதுக்கு மீறிய பேச்சு பேசுகிறாய் ஆது என்று விட்டு டேய் எனக்கு அவள் மேல் விருப்பம் என்றெல்லாம் இல்லை சரியா” ! “வீட்டில் எனக்கு பெண் பார்த்தாள் ஒத்துக் கொள்வேன் அல்லவா ?அது போல் தான் நான் அப்பா அம்மாவுக்காகவும் உனக்காகவும் ஒத்துக் கொண்டேன்”..
“இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் அவ்வளவுதான் என்று விட்டு வேகமாக வெளியில் வந்தான் தேவா அங்கு அதிர்ச்சியாகி நிற்கும் வருவை தேவா அங்கு எதிர்பார்க்கவில்லை” ஆதுவும் கூட தன் அண்ணன் பின்னாடியே பேசிக்கொண்டே வந்தவன் வருவை அங்கு எதிர்பார்க்கவில்லை…
“இருவரும் வருவை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி நின்றார்கள் வரு என்று தேவா கை பிடித்தான் தேவா இதற்கு மேல் நீங்கள் எதுவும் பேச வேண்டியதில்லை என்பது போல் தனது கையை உயர்த்திக் காண்பித்து விட்டு நகர்ந்து விட்டாள்”..
“ஆது பின்னாடியே அண்ணி அண்ணி என்று கத்திக் கொண்டு வந்தான் ஆனால் அதை காதில் கூட வாங்காமல் வரு ஹாலிற்கு வந்தாள் அரிசியுடன் சரி வரேன் அத்தை என்று விட்டு நகர்ந்தாள் “..
“அவருக்கு வருவின் முகம் ஏதோ ஒரு போல் இருப்பதை உணர்ந்து விட்டு வரு என்று அழைத்தார் ஒரு நிமிடம் நின்று தனது கண்ணீரை உள்ள இழுத்து விட்டு நேரமாகிறது அம்மா தேடுவார்கள் என்று விட்டு கிளம்பினாள்”..
“பின்னாடியே ஆது அண்ணி அண்ணி என்று கத்திக் கொண்டு வருவதை கூட காதில் வாங்காமல் செல்வதை பார்த்துவிட்டு ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்றும் எண்ணி விட்டு தனது இளைய மகனை பார்த்தார்”…
“அவன் தன் தாயைப் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டான் பின்னாலே தேவா வருவதையும் பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்தார்”..
” வரு படியில் இறங்கி வரும் போது தீரன் வீட்டுக்குள் வந்தவர் என்னம்மா இன்று சீக்கிரம் கிளம்பி விட்டாய் என்று கேட்டார் இல்லை மாமா இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் அல்லவா நேரம் கழித்து சென்றாள் அம்மா திட்டுவார்கள் என்றவுடன் அது உண்மை தானே அதனால் சீக்கிரம் கிளம்புகிறாள் என்று எண்ணிவிட்டு சரி என்று விட்டு மேலே ஏறி வந்தார் தீரன்”..
“இருந்தாலும் அவருக்கும் அவளது முகம் ஏதோ ஒன்று காட்டி கொடுத்ததால் அமைதியாக மேலே படி ஏறினார் வீட்டுக்குள் வந்தவுடன் தனது மனைவியும் இளைய மகனும் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு தேவாவை பார்த்தார்”…
” அவன் அமைதியாக கைகட்டி கொண்டு நின்றவுடன் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து விட்டு ஆதுவை கூப்பிட்டார் ஆது தனது தந்தையை கட்டிக்கொண்டு அழுதவன் அப்பா எல்லாம் என்னால்தான்”..
” நான் ஏதோ ஒன்று கேட்க போய் அதை இப்பொழுது அண்ணனின் வாழ்க்கை பாதித்து விடும் போல என்றவுடன் ஆது என்று தேவா கத்தினான் “..
“அவனை ஏண்டா அடக்குகிறாய் என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அரசி கத்த ஆரம்பித்தார் எந்த ஒன்றும் நல்லதாக நடந்து விட்டால் இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்காது தானே”..
” ஆனால் ஒரு பெண்ணின் மனதை மொத்தமாக கொள்வதில் அப்பா பிள்ளை இருவரும் ஒரே போல இருக்கிறீர்கள் என்று விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டார் “..
“திரனுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் தனது மகன் தேவா ஏதோ செய்யக்கூடாத ஒரு பெரிய தவறை செய்து இருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்தார்” தேவா இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பான் .வருவா எப்படி சமாதானம் செய்வான் வரு சமாதானம் ஆகி விடுவாளா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
தனிமையின் காதலி
Interesting
Interesting ipo deva eppadi varu va samadhanam
இந்த தேவா ஒரு சரியான சிடு மூஞ்சிதான்.
Interesting update