Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 3

பூவிதழில் பூத்த புன்னகையே 3

மறுநாள் காலையில் “தீரன் பாருவிடம் கோவிலுக்கு வருமாறு சொல்லி இருந்தார்” அவரும் கோவிலுக்கு தானே என்று எண்ணிவிட்டு கோவிலுக்கு சென்றார்..

கோவிலுக்கு சென்று பார்வதி சாமியை தரிசனம் செய்து கொண்டிருக்கும் வேளையில் “தீரன் பார்வதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டார்”

தனது கழுத்தில் ஏதோ ஊர்வது போல் இருந்தவுடன் பார்வதி கண்ணை திறந்து பார்த்துவிட்டு தனது கழுத்தில் கை வைக்கும் நொடி தனது “கழுத்தில் புதிதாக மஞ்சள் நிறம் கூட காயாத தாலி” தொங்குவதை பார்த்துவிட்டு பின்னால் திரும்பிப் பார்த்தார்..

தான் உயிருக்கு உயிராக நேசித்த தீரன் “தன் கழுத்தில் தனக்கே தெரியாமல் தன்னுடைய விருப்பத்தையும் கேட்காமல் தாலி கட்டுவது” உணர்ந்து விட்டு அவரை ஓங்கி ஒரு அறை விட்டுவிட்டு கோவிலில் உட்காருந்து அழுது கொண்டிருந்தார்..

தீரன் எவ்வளவோ சமாதானம் செய்தார் நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம் என்றார் “நீ உனது தோழிக்காக என்னையே தார வார்த்து கொடுக்க எண்ணி விட்டாயே” நான் அதன்பிறகு என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை..

” நீ நம் காதலில் உறுதியாக இருந்திருந்தால் நான் ஏன் இப்படி உனக்கே தெரியாமல் உன் கழுத்தில் தாலி கட்ட போகிறேன்” என்றார்..

அதற்காக இவ்வாறு செய்வீர்களா என்று பார்வதி தீரனிடம் கேட்டார் “நீ என்னை வேண்டாம் என்று எண்ணி என்னை விட்டு விலகி விட்டாள் இல்லை சென்று  விட்டாள்” அதான்  எனக்கு வேற வழி தெரியவில்லை பாரு…

எனக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் தேவையும் இல்லை நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் அப்படி இருக்கும் பட்சத்தில் நீயே என்னை வேறொரு பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுத்தால் நான் என்ன செய்வது என்றார் ..

பார்வதிக்கும் அவருடைய வலி புரிந்தது இருந்தாலும் அவர் இவ்வாறு செய்திருக்க வேண்டாமே என்று எண்ணினார் பிறகு இருவரும் ஆசிரமத்திற்கு சென்றவுடன் “ஆசிரமத்தில் இருப்பவர்கள் இவர்கள் இருவரையும் வாழ்த்தி விட்டு பார்வதியை இனிமேல் நீ உன்னுடன் தான் வாழ்ந்து கொண்டு செல்ல வேண்டும்” என்று சொல்லிவிட்டார்கள் …

தீரன் இதை ஏற்கனவே யோசித்து தான் இருந்தார் “பார்வதி அதிர்ச்சியாக தீரனை பார்த்தவுடன் திரன் கண் மூடி திறந்து ஆசிரமத்தில் இருப்பவர்களிடம் நான் பார்த்துக் கொள்கிறேன்” அம்மா எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை ..

நான் பார்வதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் போதே பார்வதியின் முழு பொறுப்பும் என்னுடையது தான் என்றும் எனக்கு தெரியும் என்றார் ..

பிறகு பார்வதியும் தீரனும் ஆசிரமத்தில் இருக்கும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் “நீங்கள் யோசிக்காமல் செய்த விஷயம் நம்மை எங்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறது பார்த்தீர்களா” என்றார்..

தீரன் சிரித்துக் கொண்டே “நீ இதை யோசிக்கவில்லை என்று சொல் நான் யோசிக்காமல் எந்த விஷயத்தையும் செய்யவில்லை” என்னிடம் ஒரு அளவிற்கு வருமானம் இருக்கிறது…

இருப்பதை வைத்து நாம் வாழ்ந்து கொள்ளலாம் உனக்கு அதில் ஒன்றும் கஷ்டம் இல்லையே என்றார் “பார்வதி தீரனை முறைத்துவிட்டு நான் உங்களை உண்மையாக தான் நேசிக்கிறேன் நீங்கள் கொண்டுவரும் சம்பளத்தை வைத்து என்னால் வாழ்க்கையை ஓட்ட முடியும்”.

“நான் ஒன்னும் ஆடமரத்துக்கு ஆசைப்படவும் இல்லை நாம் ஒன்றும் ஆடமரத்தில் இதுவரை வாழ்ந்து விடவும் இல்லை “எப்படி வாழ வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சொன்னார்..

தீரன் சிரித்துக் கொண்டே அப்புறம் என்ன வா என்று கை நீட்டினார் “பார்வதியும் அவரது கைக்குள் தன் கையை வைத்தவுடன் பார்வதியை தீரன் தனது தோளில் சாய்த்து கொண்டார்”..

இத்தனை நாட்களாக தீரன் ஒரு வீடுஎடுத்து தான் தங்கி இருந்தார் அந்த வீட்டிற்கு பார்வதி அழைத்துச் சென்றார் ஏற்கனவே அங்கு சமையல் பாத்திரங்கள் அனைத்தும் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை..

அது ஒரே ஒரு அறை கொண்ட சிறிய வீடு பார்வதி தீரன் இருவரையும் வீட்டுக்குள் வரவேற்று உபசரிக்க என்று தீரனின் நண்பன் தனது குடும்பத்தினை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்..

பிறகு அவர்களே ஆரத்தி எடுத்து பார்வதி தீரன் இருவரையும் வீட்டிற்குள் அழைத்தார்கள் மூன்று நாட்கள் பார்வதி கல்லூரி செல்லாமல் இருந்தார் மூன்று நாட்களுக்குப் பிறகு பார்வதி கல்லூரி சென்றார் ..

“பார்வதி மூன்று நாட்களாக கல்லூரி வரவில்லை என்றவுடன் அரசிக்கு சிறிது அச்சமாக இருந்தது மூன்று நாட்களாக பார்வதி வரவில்லையே” ஏன் என்று தெரியவில்லையே ..

ஃபோன் பண்ணினால் கூட எடுக்கவில்லையே என்று எண்ணினார் மூன்று நாட்களுக்கு பிறகு “பார்வதி கல்லூரி வரும்போது அவரது கழுத்தில் தாலி தொங்குவதை அரசி பார்த்துவிட்டு பாரு உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா” சொல்லவே இல்லை..

யாரை திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் “ஏன் படித்து முடித்த பிறகு திருமணம் செய்திருக்கலாமே என்று அவர் மேல் உள்ள அக்கறையாலும் உரிமையாலும் அவரிடம் நிறைய கேள்விகளை கேட்டார்”..

” அரசி  கேட்ட இத்தனை கேள்விகளுக்கும் பார்வதியிடம் இருந்து வந்தது என்னவோ கண்ணீர் மட்டும் தான்” தன் மீது இவ்வளவு அக்கறையையும் அன்பும் வைத்திருக்கும் அரசியை நாம் ஏமாற்றி விட்டோமோ என்று எண்ணினார் …

அரசி பார்வதி என்ன ஆச்சு நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீ அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் அவர் என்ன பேசுவது என்று தெரியாமல் “எனக்கும் எங்கள் ஆசிரமத்தில் இருக்கும் தீரனுக்கும் திருமணம் ஆகிவிட்டது மூன்று நாட்களுக்கு முன்பு” என்றவுடன் அரசியின்  மனம் முழுவதுமாக உடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

அவர் இப்படி ஒன்றை நினைக்கவில்லை அரசி பார்வதியை ஆழ்ந்து பார்த்தார் என்னை மன்னித்துவிடு அரசி “நானும் தீரனும் மூன்று வருடங்களுக்கு மேலாக விரும்பி கொண்டிருக்கிறோம்” பள்ளி காலத்திலிருந்து விரும்பி கொண்டிருக்கிறோம் …

இருவரது விருப்பத்தையும் மூன்று வருடங்களுக்கு முன்பு தான் சொல்லிக் கொண்டோம் “மேடம் என்னிடம் நீங்கள் இருவரும் விரும்புகிறீர்கள் என்று கூட சொல்லி இருக்கலாமே”..

” நான் அவரை விரும்புகிறேன் என்று சொன்ன பிறகு இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லையே”

” உனக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையை நான் தட்டி பரித்து விடுவேன் என்று என்னை தவறாக எண்ணி விட்டாயா” அந்த அளவிற்கு “கேவலமாக தான் நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாயா “..

இதுதான் என் நட்பின் அடையாளமாக என்று கேட்டார் பார்வதியின் மனது உடைந்து விட்டது “அவர் முழுவதாக சொல்வதற்கு முன்பே  அரசி அவராக ஒன்றை யோசித்துக் கொண்டு பார்வதியிடம் பேசுவது நிறுத்திவிட்டார்” ..

பார்வதியும் எவ்வளவோ அரசியிடம் தன் பக்க நியாயத்தை சொல்ல வந்தார் ஆனால் அரசி பார்வதி சொல்ல வரும் எதையும் கேட்பதாக இல்லை இவ்வாறு “பார்வதி தினமும் கல்லூரி முடிந்து விட்டிற்குச் சென்று தீரனிடம் அழுது புலம்புவார் எங்களுடைய நட்பில் விரிசல் வர நீங்கள் தான் காரணம்” என்று சொல்லிக் கொண்டு அழுது கரைவார்…

அவரது புலம்பலையும் அழுகையும் காதலித்த மனம் தாங்காது அன்று “கல்லூரி வாசலில் அரசியை பார்த்து நடந்து உண்மைகள் அனைத்தையும் சொல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார்”..

தீரன் வந்தவர் அரசிடம் நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றார் அரசி தனது கண்ணீரை துடைத்து விட்டு “என்னிடம் பேசுவதற்கு உங்களுக்கு இன்னும் என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்” ..

“நீங்கள் நான் உங்களிடம் வந்து என்னுடைய விருப்பத்தை சொல்லும் பொழுதே நான் பார்வதியை விரும்புகிறேன் என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை”

நான் அமைதியாக விலகி இருப்பேன் என்னுடைய காதல் உண்மை தான் “நீங்கள் வேறு ஒருவரை விரும்புகிறேன் என்றால் உங்களை தொல்லை செய்து என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களை கட்டாய படுத்தி இருந்து இருக்க மாட்டேன்”..

“நீங்கள் விரும்பியவருடன் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஒதுங்கி தான் இருந்திருப்பேன்”ஆனால் நீங்கள் இப்படி ஒரு துரோகம் செய்வீர்கள் என்று எண்ணவில்லை …

நீங்கள் எனக்கு துரோகம் செய்தால் கூட அது எனக்கு பெரிய வலி இல்லை “எனக்கு நெருங்கிய தோழியாக எனக்கு உண்மையாக இருந்த என்னுடைய தோழி அவளுடைய சுயநலத்திற்காக எனக்கு துரோகம் செய்துவிட்டால்” அதை தான்  என்னால் “இப்பொழுது அல்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது” ..

எனக்கு “அப்படி ஒரு தோழியே இல்லை என்று நான் முடிவு செய்து விட்டேன்” என்றார் “கொஞ்சம் நான் சொல்வதை கேளுங்கள் பார்வதி மேல் எந்த தவறும் இல்லை என்றார் தீரன்” …

அப்பொழுது பார்வதி தீரனின் கையை பிடித்து வேண்டாம் சொல்ல வேண்டாம் என்றார் “அரசி இருவரையும் பார்த்து கை தட்டி சிரித்துவிட்டு உங்களது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் நான் குறுக்கே வரமாட்டேன்” என்னுடைய காதல் உண்மை தான் அதற்காக உங்களை பிரிப்பேன் என்று சொல்லவும் மாட்டேன் …

ஆனால் உங்களுக்கும் எனக்கும் இதற்கு மேல் எந்த சம்பந்தமும் இல்லை “என்னை தேடி நீங்களும் உங்கள் மனைவியும் வர வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்று இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்து விட்டார் ..

அன்றிலிருந்து பார்வதியிடம் அரசி முகம் கொடுத்து பேசவில்லை “தீரன் வீட்டிற்குச் சென்ற பிறகு ஏன் அரசிடம் அனைத்து உண்மையையும் சொல்லி இருப்பேனே ஏன் தடுத்தாய் என்றார்”.

“வேண்டாம் நான் உங்களை யாரிடமும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை நெருங்கிய தோழியாகவே இருந்தாலும் அவளிடம் உங்களை விட்டுக் கொடுக்க நான் விரும்பவில்லை” நீங்கள் தான் எனக்கு தெரியாமலே என் கழுத்தில் தாலி கட்டினீர்கள் என்று தெரிந்தால் அரசி உங்களை தவறாக எண்ண கூடும்…

நான் அதை விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு தீரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதார் இப்படியே அவர்களது நாட்கள் ஓடியது தீரன் தான் பார்வதியை படிக்க வைத்தார் ..

மேற்கொண்டு படிக்கிறாயா என்று கேட்டதற்கு வேண்டாம் என்று சொல்லி விட்டார் “நான் வேலைக்கு செல்கிறேன் என்று பார்வதி சொன்னதற்கு வேண்டாம் பாரு நான் சம்பாதிப்பது வைத்து நம் வாழ்க்கையை ஓட்டலாம் “என்று சொல்லிவிட்டார்..

சரி  “உனக்கு விருப்பம் இருந்தால் செல் ஆனால் எனக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று எண்ணத்துடன் நீ வேலைக்கு செல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்
.

பார்வதிக்கு அப்படி ஒன்றும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை “தீரனுக்கு உதவும் வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு  சொன்னாரே தவிர” அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லாததால் அமைதியாகி விட்டார் …

அப்படியே ஒரு வருடம் ஓடியது தீரன் ஒரு அளவிற்கு நல்ல தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார் “தீரன் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை தாங்கள் வளர்ந்த ஆசிரமத்திற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார் “…

இப்படியே அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது.. அப்படி ஒரு நாள் வரும் வரை..

           ×××××

வரு மனதில் முழுவதும் தேவாவை நினைத்துக் கொண்டே அவளது அலுவலகத்தை நோக்கி சென்றாள் ..

வரு வருவதற்கு முன்பாகவே தேவா அலுவலகத்திற்கு வந்திருந்தான் “வரு தேவா வந்து ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு தான் வந்தால் “..

“தனது அறைக்குள் தனது அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே வரும் வருவை முறைத்துப் பார்த்தான் தேவா” டைம் கூட உங்களுக்கு தெரியாதா எப்போது வர சொன்னால் எப்போது வருகிறீர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்…

முக்கியமான மீட்டிங் என்று தானே சொல்லி இருந்தேன் “நாம் நமது அலுவலகத்தில் எந்த மீட்டிங்கும் வைத்து இல்லை நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு வருவதற்கு”..

” வேறு ஒருவர் வைத்திருக்கும் மீட்டிங்கில் நாம் கலந்து கொள்ள போகிறோம் அது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா”

“இப்படி நீங்கள் வேலை செய்தால் நம் கம்பெனியை எப்படி நாம் கொஞ்சம் முன்னேற்றி செல்வது என்றான் “வரு அவனை மனதிற்குள் திட்டினால் ஆமாம் “இவன் உழைத்த கம்பெனி பார் இதை வேறு இவன் முன்னேறி நாமும் முன்னேற்ற வேண்டுமாம்” என்று லேசாக முனகினால் …

போதும் “நீங்கள் முனங்கியது எனக்கு கேட்கிறது உங்களது முனகளை நிறுத்திவிட்டு நாம் மீட்டிங் கிளம்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யலாம் என்று நினைக்கிறேன்”

உங்களது இடத்திற்கு சென்று அனைத்து பைல்களையும் சரி பார்த்து எடுத்துக் கொண்டு வாருங்கள். நேரமாகிறது என்று வருவை அனுப்பி வைத்தான் …

வரு இரண்டு முறை தேவாவை திரும்பிப் பார்த்துவிட்டு மூன்றாவது முறை ” கதவின் அருகே சென்றவுடன் அவனை பார்த்து கண்ணடித்துவிட்டு “வேகமாக கதவை சாற்றி விட்டு சென்றாள் “வருவை பார்த்து தேவா முறைத்துவிட்டு இவளை எப்படி தான் திருத்துவது என்று தெரியவில்லை “…

“நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நேரத்திற்கு வருவதில்லை”
” எதை செய்ய வேண்டும் என்று சொல்கிறோமோ அதை விட்டுவிட்டு செய்யக்கூடாத விஷயங்கள் அனைத்தையும் செய்து கொண்டு இருப்பாள்” என்று போகும் வருவை பார்த்து முனக செய்தான்…

“நேரத்திற்கு எழுந்து தன்னுடைய வீட்டு வேலைகளையும் செய்து விட்டு அலுவலகத்திலும் வேலை செய்யும் தேவா” …

“எங்கு செல்ல வேண்டும் என்றாலும் செல்ல வேண்டிய நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு எழுந்து தன்னுடைய வேலைகள் அனைத்தையும் தனது தாய் தந்தையின் தலையில் கட்டி விட்டு அவர்கள் கையால் உணவு சாப்பிடும் வரு”வும் வாழ்க்கையில் இணைவார்களா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

5 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 3”

  1. Kalidevi

    Varu deva vum jodi ah. Nice pair tha ellarum crt ah iruka matanga oruthar apadi oruthar opposite ah irunthatha jolly ah irukum life

  2. CRVS 2796

    எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்குமாமே… அதுபோலவோ என்னவோ…!!

  3. CRVS2797

    எதிரெதிர் துருவங்கள் தான் ஈர்க்குமாமே… அதுபோலவோ என்னவோ…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *