- “தீரன் அரசி இருவரும் தங்களது வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டார்கள் மறுநாள் மூவரும் கோவிலுக்கு சென்று சாமியே தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள்” …
- இப்படி அவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது ஒரு இரண்டு மாதம் சென்று இருக்கும் இரண்டு மாதத்திற்கு பிறகு “அரசி உண்மையாகவே கருவுற்று இருந்தார்”
- “அரசி, தீரனை விட தேவா தான் அதிக சந்தோஷம் அடைந்தவன் தனக்கு ஒரு தம்பி பாப்பா வரப்போகிறது என்று அவ்வளவு ஆனந்தம்”
- தீரன் அரசியை நன்றாக பார்த்துக் கொண்டார் தாங்கு தாங்கு என்று தாங்கினார் அவருக்கு ஒரு சில நேரங்களில் பார்வதியின் பிரசவ காலம் வந்து செல்ல தான் செய்தது …
- அதை நேரடியாக அரசியிடமும் சொல்ல செய்தார் “அரசி சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவார் உங்களுக்கு அப்படி ஒன்று தோன்றவில்லை என்றால் தான் அதிசயம் என்று மனதில் நினைத்துக் கொள்வார்”
- அதற்காக பார்வதியையோ தீரனையோ அவர் தவறாக எண்ணவில்லை “தேவா தினமும் தனது அரசி அம்மாவிடம் நான்தான் தம்பி பாப்பாவை வளர்ப்பேன்” அவனை முழுவதும் நான் தான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்வான் அரசியல் சிரிப்பார் ..
- இப்படியே நன்றாக சென்று கொண்டிருந்த “அவர்களது வாழ்வில் அன்று ஒரு நாள் வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அரசியின் வாழ்வில் பேரிடியாக வந்து இறங்கியது”
- அன்றைய பொழுது அரசி அப்போது நான்கு மாத கருவை சுமந்து கொண்டிருந்தார் தேவாவின் பள்ளியில் இருந்து அரசிக்கு போன் செய்திருந்தார்கள் அரசி என்ன என்று கேட்டதற்கு நீங்கள் பள்ளி வந்து செல்லுங்கள் என்று மட்டும் சொல்லி விட்டு வைத்து விட்டார்கள் ..
- “தன் பெறாத மகன் தேவாவிற்கு ஏதாவது அடிபட்டு விட்டதோ என்று எண்ணி ஒரு ஆட்டோ பிடித்து ஓடி சென்றார்” அவருக்கு தீரனுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட அப்போது இல்லை ..
- பள்ளிக்குச் சென்ற பிறகு பிரின்ஸ்பல் அறையில் தேவா நின்று கொண்டிருப்பதும் தேவாவின் அருகில் இன்னொரு பையனும் அவனது பெற்றவர்கள் நின்று கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு பிறகு தான் அவருக்கு மூச்சு வந்தது …
- ஏதோ பிரச்சனை போல தனது மகன் நன்றாக தான் இருக்கிறான் என்று எண்ணை விட்டு தனது மகனை அருகில் வைத்து அவனது தலையை கோதிக் கொண்டே அவனது ஆசிரியரிடம் பேச செய்தார் …
- உங்கள் மகன் தவறு செய்திருக்கிறான் மேடம் இருவரும் என்ன பேசிக் கொண்டார்களோ “அதற்காக உங்கள் மகன் இவனை போட்டு எப்படி அடித்திருக்கிறான் என்று பாருங்கள் தலையில் காயமாய் இருக்கிறது” …
- “அதுவே கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் கண்ணை பாதித்திருக்கும் அல்லவா அவனது பெற்றவர்கள் வந்து கேட்கிறார்கள்” இப்பொழுது நாங்கள் என்ன பதில் சொல்வது என்றார் ..
- “அரசி தேவாவை பார்த்தார் தேவா தலையை கீழே குளிர்ந்தவுடன் தனது மகன் மேல் தான் தவறு இருக்கிறது என்று அந்தப் பையனின் பெற்றவர்களிடம் அந்த பையனிடமும் மன்னிப்பு வேண்டினார்”
- தேவாவையும் மன்னிப்பு கேட்க செய்தார் இது போல் தனது மகன் இன்னொரு முறை செய்ய மாட்டான் என்றும் சொல்லியிருந்தார் பிறகு கையோடு தேவாவை வீட்டிற்கு அழைத்து சென்றார் …
- மாலை 5 மணி போல இருக்கும் வீட்டிற்கு வந்ததிலிருந்து தேவாவிடம் அரசு ஒரு வார்த்தை கூட பேசவில்லை..
- ” நான் செய்த தவறை அவனாக உணர வேண்டும் என்று எண்ணி அமைதி காத்தார்” அப்போது தன்னுடைய அம்மா தன்னிடம் ரொம்ப நேரமாக பேசாமல் இருப்பது அவனுக்கு வருத்தம் அளித்தது…
- அம்மா பேசுமா என்று கெஞ்சி கொண்டு இருந்தான் எப்பொழுதும் “இரவு 7 மணிக்கு வரும் தீரன் அன்று அரசியை மந்திலி செக் அப் அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சீக்கிரமாகவே வந்திருந்தார் “…
- “அவர் வரும் வேளையில் அவர் கண்ட காட்சி தான் தேவாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது” இப்படி “நன்றாக இருக்கும் அரசியின் மனதையும் மாற்ற செய்தது”
- அரசி வீட்டிற்கு வந்தவுடன் தேவாவிடம் பேசாம இருந்ததால் அவன் கெஞ்சிக் கொண்டிருந்ததால் தனது மகன் தன்னிடம் கெஞ்சுவதை தாங்க முடியாது தாய்…
- அவனிடம் அப்படி என்ன பள்ளியில் நடந்தது என்று கேட்டார் தேவா பள்ளியில் நடந்ததை சொல்ல செய்தான் அம்மா அவன் ஒரு பையனை அடித்து விட்டான் …
- அவனிடம் தப்பு தப்பாக பேசுகிறான் அப்படி என்னடா செய்தான் என்று கேட்டதற்கு அவன் கிழிந்த சட்டையை போட்டுக் கொண்டு வந்தானாம் அதனால் இவனுக்கு என்ன வந்தது …
- “அவன் அவர்கள் வீட்டில் இருக்கும் வசதியை வைத்து போட்டுக் கொண்டு வருகிறான் என்று அவன் வயதுக்கே எட்டாது அனுபவத்தில் பேச செய்தாலும் அனைத்தும் அரசியின் வளர்ப்பு” என்று தான் சொல்ல வேண்டும்..
- தனது நண்பர்களுடன் என்று இல்லை கூட படிக்கும் பிள்ளைகளோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்தும் சொல்லிக் கொடுத்துதான் நல்ல பிள்ளையாக வளர்த்திருந்தார் அரசி…
- “அரசி தேவாவை அடிக்கவும் செய்தார் நீ சொல்வதெல்லாம் சரி தான்டா “இருந்தாலும் “நீ அந்த பையனை அடித்தது தவறு தானே அதுவும் நெற்றியில் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் அவனது கண்ணில் அடிபட்டு இருக்கும் அல்லவா”…
- அது எவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணி இருக்கும் என்றார் தனது மகனுக்கு அவன் செய்த தவறை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக அம்மா நான் அவனை லேசாக தான் அடித்தேன் ஆனால் தெரியாமல் அவனுக்கு அதிக காயம் ஆகிவிட்டது என்றான்..
- “நீ தெரியாமல் செய்தாலும் தவறு தானே என்று தேவாவை ஒரு அறை விட்டார் இதுபோல் இனிமேல் செய்யவும் கூடாது எதுவாக இருந்தாலும் பேசி தான் தீர்க்க வேண்டும்”
- ” முதலிலே கை ஓங்கக்கூடாது என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்”…
- “இவ்வளவு நேரம் அவர் பேசியதையும் கேட்காத தீரன் சரியாக அரசி தேவாவை அடிக்கும் நேரத்தில் வந்தவர் கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் அரசியை ஓங்கி ஒரு அரை விட்டார்”..
- தேவா அம்மா என்று அழுதான் அரசி தேவரை அடித்ததற்கான காரணத்தை கூற வந்தார் இல்லை ங்க அவன் பள்ளியில் என்று நடந்ததை சொல்ல வந்தார் “என்ன இருந்தாலும் நீ அவனுடைய அம்மா இல்லை என்பதை நிரூபித்து விட்டாயே” என்றவுடன் அம்மா என்று அரசியை தாங்கிப் பிடித்துக் கொண்டு தேவா வந்தான் …
- “அரசி தீரனின் அந்த ஒரே வார்த்தையில் நொறுங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்” தேவா அம்மா என்று அழுது கொண்டே அவரது காலை கட்டி அணைக்க போனான்…
- “அவளிடம் செல்லாதே டா இனி அவள் உன் அம்மா இல்லை அவள் உன்னுடைய சித்தி சித்தி என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு வார்த்தை சொன்னார் “
- அரிசிக்கு கண்ணிலிருந்து தண்ணீர் வந்தது அவர் தீரனையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் “என்னை இப்படி பார்த்துவிட்டால் நீ சித்தி இல்லை என்று ஆகிவிடுமா சொன்னாலும் சொல்லட்டுமா அது தான டி உண்மை”..
- “நீ என்ன அவனைப் பெற்ற அம்மாவா அங்கு போட்டோவில் இருக்கிறாள் பார் பார்வதி அதுதான் உன்னுடைய அம்மா என்று தேவாவிடம் கை காமித்தவர்” …
- “அப்பா அம்மா மீது தவறும் எதும் இல்லை நான் தான் தவறு செய்தேன் என்று சொன்னான் தேவா வாய மூடு டா இனி மேல் இவளை அம்மா என்று சொல்லாதே”…
- “நீ அவள் மீது கண்மூடித்தனமாக பாசம் வைத்து தான் அவள் செய்த தவறை கூட உன் மீது போட்டுக் கொள்கிறாய் “என்று சொல்லிவிட்டு அரிசியை முறைத்துப் பார்த்தார் …
- “இதுவே நீ பெற்ற பிள்ளையாக இருந்திருந்தால் இவ்வாறு செய்திருப்பாயா? அவனை இப்படி அடிக்கிறாய்” நான் உன்னை நம்பி மோசம் போய் விட்டேன் ..
- “இப்பொழுது நீ நினைத்தது நடந்து விட்டது என்றவுடன் உனது சுய புத்தியை காண்பிக்கிறாயா” என்றார்
- ” அரசி நிமிர்ந்து தீரனை பார்த்தார் என்ன என்று பார்க்கிறாயா? உன் வயிற்றில் என்னுடைய உதிரம் இருக்கிறது என்றவுடன் உன்னுடைய சுய புத்தியை காண்பித்து விட்டாய் தானே”
- “இவ்வளவு நாட்களாக இவனை உன் மகன் போல் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்பொழுது எப்படி நடந்து கொள்கிறாய் என்று உடன் அரிசிக்கு செத்துவிடலாம் போல கூட இருந்தது”..
- “என்ன நான் இவரது பிள்ளையை என் வயிற்றில் சுமக்க வேண்டும் என்பதற்காக தேவாவை தன் மகன் போல் இவ்வளவு நாட்களாக பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேனா என்று எண்ணி கலங்கினார்” ..
- பார்வதியை நிமிர்ந்து பார்த்தார் பார்வதி ஃபோட்டோவில் சிரித்த முகமாக இருப்பதை பார்த்துவிட்டு நல்லா சிரி டி நன்றாக சிரி.
- “இந்த மனிதன் என்னென்ன பேச்சு எல்லாம் பேசுகிறார் இதற்காகத்தான் இத்தனை வருடம் நான் இருந்தேனா எல்லாம் எனக்கு தேவைதான் என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்”…
- உன்னுடைய நடிப்பு எல்லாம் இனி என்னிடம் செல்லுபடி ஆகாது அது தான் நீ நினைத்தது நடந்து விட்டது அல்லவா என் மகனை விட்டு விடு அதான் உனக்கென்று ஒரு பிள்ளை வந்துவிட்டது தானே..
- “இனி என் மகன் பக்கம் உன் மூச்சுக்காற்று கூட படக்கூடாது அவனை எப்படி வளர்க்க வேண்டுமோ நான் வளர்த்துக் கொள்வேன்” என்று சொல்லிவிட்டு தேவாவை அழைத்துக் கொண்டு அங்கிருக்கும் அறைக்குள் சென்று விட்டார்…
- அரசிக்கு வாழ்வே சூனியம் ஆகியது போல் இருந்தது “இத்தனை நாட்களாக அவனை என்னுடைய மகனாக எண்ணி இருந்தார் இன்று நான் அவனை அடித்தவுடன் அவருடைய மகனாக ஆகிவிட்டேனா “அதுவும் என்னை என்னென்ன பேச்செல்லாம் பேசுகிறார் ..
- இவ்வளவுதான் “அவர் என் மேல் வைத்த நம்பிக்கையும் காதலும் அப்போது இவர் என்னை உண்மையாக விரும்பவில்லையா என்று எண்ணி கலங்கி நின்றார்” …
- அன்று இரவு யாரும் எதுவும் சாப்பிடவில்லை தீரன் தேவாவை அரசியிடம் விடவே இல்லை இப்படியே ஒரு வாரம் சென்றது ஒரு வாரம் கழித்து தீரனுக்கு தேவாவின் பள்ளியில் இருந்து போன் வந்தது என்ன என்று கேட்டார் …
- இல்லை சார் நான் தேவாவின் பள்ளியில் இருந்து பேசுகிறேன் தேவாவின் அம்மாவிற்கு தான் அழைத்தோம் அவரது போன் சுவிட்ச் ஆப் என்று வருகிறது அதனால் தான் உங்களுக்கு அழுத்தோம் என்றார்கள்..
- தீரன் எண்ணாயிற்று என் மகனுக்கு என்ன என்றார் கொஞ்சம் பள்ளி வரை வந்து சொல்லுங்கள் என்றவுடன் சரி என்று சொல்லிட்டு தீரன் பள்ளிக்கு வேகமாகச் சென்றார் ..
- தன் மேல் இருக்கும் கோபத்தில் பிள்ளை பள்ளியில் இருந்து போன் பண்ணா கூட எடுக்க மாட்டோளோ என்று எண்ணிக் கொண்டே சென்றார்..
- ஆனால் “இவர் தான் இந்த ஒரு வாரமாக தேவாவை அரசியிடம் விடவில்லை என்பதையும் அந்த நேரத்தில் மறந்து விட்டார் போல” வேகமாக சென்றவுடன் தேவா அமைதியாக நின்று கொண்டிருந்தான் …
- “ஆசிரியர்கள் தீரனை வரவேற்று உட்கார வைத்துவிட்டு என்ன சார் ஆச்சு என்று கேட்டார் அதை நீங்கள் தான் சார் சொல்ல வேண்டும் என்றார் தேவாவின் பள்ளி ஆசிரியர்”..
- எனக்கு புரியவில்லை என்றார் தீரன் “தேவா ஒரு வார காலமாக சரியில்லை எப்போது பார்த்தாலும் அழுது கொண்டே இருக்கிறான் ஏதாவது கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதில்லை வீட்டில் படிக்கிறனா இல்லையா”…
- அதுமட்டுமில்லாமல் “தேவா தினமும் அழுது கொண்டே ஏதோ தொலைத்தது போல் இருக்கிறான் இந்த வயதில் பிள்ளைகள் எப்படி இருப்பது சரி இல்லை “
- “அவனுடைய அம்மா இங்கே அவர் இருந்தார் என்றால் அவனை நன்றாக பார்த்துக் கொள்வார்களே” …
- “நான் அன்று பள்ளிக்கு வந்து சென்றபோது கூட அவர் தன் மகனுக்கு சப்போர்ட் செய்து விட்டு தானே எங்களிடம் மன்னிப்பு கேட்டாலும் தேவாவை விட்டுக் கொடுக்கவில்லையே” என்றார்கள் ..
- எப்பொழுது வந்தாள் என்று தெரியாமல் அமைதியாக இருந்தார் தீரன் உங்களிடம் சொல்லவில்லையா உங்களது மனைவியை ஒரு வாரத்திற்கு முன்பு தேவா ஒரு பையனை அடித்துவிட்தான் என்று வர சொல்லியிருந்தோம்..
- “நீங்கள் எங்கு தேவாவை திட்டுவீர்கள் என்று எண்ணி உங்களிடம் சொல்லாமல் மறைத்து இருப்பார்கள்” தேவாவின் அம்மா என்று அன்று நடந்த அனைத்தையும் சொன்னவுடன் தீரனுக்கு குற்ற உணர்ச்சி ஆகி போனது…
- அன்று “தேவாவால் ஒரு பையனுக்கு அடிபட்டிருந்தால் தான் அரசி அடித்திருக்கிறாள்”
- “நாம் தான் அதை தவறாக புரிந்து கொண்டு தப்பு தப்பாக பேசி விட்டோமோ என்று மனம் வருந்திக்கொண்டு தேவாவை அழைத்துக் கொண்டு பள்ளியிலிருந்து வெளியில் வந்தார்”…
- அந்த நேரம் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெண்மணி போன் செய்தார் இவர் இதற்கு ஃபோன் செய்கிறார் என்று எண்ணிக் கொண்டே சொல்லுங்கம்மா என்றார் ..
- தீரா எங்கப்பா இருக்க உன்னுடைய மனைவி அரசியை மருத்துவமனையில் சேர்த்து இருகிறோம் சீக்கிரம் வா என்றவுடன் என்னம்மா ஆச்சு என்றார்…
- தெரியவில்லைப்பா “நான் ரொம்ப நேரமாக கதவை தட்டினேன் ஒரு வாரமாக என்னிடம் பேசவும் இல்லையே இவளுக்கு என்ன ஆச்சு மாசமாக இருக்கும் பெண்ணே என்று எண்ணிக் கொண்டு கதவை தட்டினேன்”…
- 2 மணி நேரமாக கதவு தட்டியும் கதவு திறக்கவில்லை என்றவுடன் பயத்தில் அருகில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து விட்டு உள்ளே சென்றேன்…
- அப்பொழுதுதான் “உன்னுடைய மனைவி மயங்கி கீழே விழுந்தது இருப்பதை பார்த்தேன்” நான் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறேன் என்று மருத்துவமனை பெயரை சொல்லிவிட்டு சீக்கிரம் வாருங்கள் என்று விட்டு வைத்தார் …
- “தீரனுக்கு இன்னும் குற்ற உணர்ச்சி அதிகமாகியது தான் பேசிய வார்த்தை அரசியை எந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது” என்று எண்ணிக் கொண்டு தேவாவையும் அழைத்துக் கொண்டு அழும் தனது மகனின் கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் அவரும் அழுது கொண்டே ஏற்கனவே ஒருவளை இழந்து விட்டேன்…
- இவளையும் அழைத்துக் கொண்டு சென்று விடாதே இறைவா என்று இறைவனின் மீது பாரத்தை போட்டுக்கொண்டு தேவாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினார்…
- அன்று “தீரன் செய்து செயலால் பார்வதி அரசியிடம் துரோகியாக நின்றார் இன்று அதே தீரன் செய்த விளைவு தேவாவிற்கு அம்மாவாக இருந்த அரசி சித்தியாகி மாறினார் “..
- “என்னதான் தீரன் நற்குணங்கள் உடையவராக இருந்தாலும் அவரது தவறான ஒரு சில செயல்கள் இரு பெண்களின் வாழ்க்கையோடு அவர் பெற்ற மகன் தேவாவின் வாழ்க்கையும் சேர்த்து புரட்டி போட்டது” …
- மருத்துவமனையில் சேர்த்திருக்கும் அரசிக்கு என்ன ஆகும் அரசியின் நிலை என்ன என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..
- அன்புடன்
- ❣️ தனிமையின் காத
என்னுடைய மற்ற படைப்புகளும் உள்ளது பிரதிலிபியில் உள்ளது அங்கு சென்று என்னுடைய மற்ற படைப்புகளையும் படித்துவிட்டு தங்களது விமர்சனங்களை தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி
Thappu tha theeran panathu ena nu visarikanum enatha kovam vanthalum apram ketu irukalam athum masama iruka arasi atha manasula vachi irukanum
இந்த தீரன் ஏன் தான் இப்படி தப்பு தப்பாவே செய்யறாரோ..???
தீரன்னால பாவம் தேவா …. அரசி மாத்தி தேவாக்கு அம்மாவா மாத்திடுங்க
Nice epi