உதிரன் அவனது வாயால் கயல் அனாதை போல் திருமணம் செய்து கொண்டதற்கு இந்த மகாவும் மகிழும் தான் காரணம் அது மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் விரும்பியதால் தான் அவர்கள் விருப்பத்தை வீட்டில் சொல்லாமல் தான் இவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் கயல் வீட்டை விட்டு சென்றாள் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் உதிரனை பார்த்தார்கள் ….
காவேரி வேகமாக நிமிர்ந்து மகா மகிழ் இருவரையும் பார்த்தார் அவர்கள் இருவரும் தலைக்குனிந்து கொண்டு இருந்த உடன் உதிரன் சொல்வது உண்மை என்பதை அவர் தெரிந்து கொண்டார் வீட்டில் உள்ள அனைவரையும் ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் தனது தாய் பாண்டியம்மாவை பார்த்துவிட்டு இனியை பார்த்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வாருங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு வேகமாக வீட்டை நோக்கி சென்றார்….
வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் அவர் ஏதாவது திட்டுவார் என்று எண்ணினார்கள் ஆனால் அவர் எதுவுமே சொல்லாமல் இப்படி அமைதியாக போவது வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது வீட்டிற்கு செல்லும் காவேரி கயலை பார்த்து முறைத்துக் கொண்டு சென்றார் …
அவர் சென்றவுடன் கயல் தான் என்ன அண்ணா பண்ணி வைத்திருக்கிறாய் என்று கேட்டால் உதிரன் வேகமாக மகிழ் காலில் போய் விழுந்தான் டேய் என்னடா மாப்பிள்ளை பண்ற என்று கேட்டான் என்னை மன்னித்து விடு மகிழ் நான் இப்படி என் வாயாலையே உளறுவேன் என்று எண்ணவில்லை என்றான்….
டேய் எப்பொழுதாக இருந்தாலும் தெரிய வேண்டிய விஷயம் தான் இப்பொழுது தெரிந்து விட்டது உன் வாயால் தெரிந்திருக்கிறது அவ்வளவுதான் வேறொன்றுமில்லை எழுந்திரு இதை எப்படியாவது சமாளித்தாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான் …
அப்பொழுது நர்ஸ் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தார் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது யாரிடம் கொடுப்பது என்று கேட்டார் அப்பொழுது மகா நிமிர்த்து பார்த்துவிட்டு எங்கள் வீட்டிற்கு பெரியவர் எங்கள் பாட்டியிடம் கொடுங்கள் என்றாள் ..
நர்ஸ் குழந்தையை பாண்டியம்மா பாட்டி இடம் கொண்டு சென்றார் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி அந்த பிரச்சனைகளில் இருந்து தெளிந்து குழந்தையை முதலில் அவளுடைய அண்ணனும் அண்ணியும் வாங்க வேண்டும் என்று தான் இனி எண்ணி இருந்தால் …
ஆகையால் குழந்தையை அவர்கள் கையில் கொடுங்கள் என்றவுடன் குழந்தையை நர்ஸ் மகிழ் மகா கையில் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தவுடன் மகிழ் மகா இருவரும் சேர்ந்து குழந்தையை வாங்கினார்கள் அந்த குழந்தைகளை பார்த்தவுடன் மகிழ் குழந்தையை வைத்துக் கொண்டே சேரில் அமர்ந்து விட்டான்….
மகா குழந்தை பார்த்துக் கொண்டே தனது மகிழ் மாமா தோளில் சாய்ந்து கொண்டு அழுதால் மகிழ் ஒரு கையில் குழந்தையும் மறுக்கையை மகாவின் தலையிலும் வைத்து மகாவின் தலையை கோதிக் கொண்டே அனைத்தும் சரியாகிவிடும் இனி வரும் அனைத்தையும் நாம் ஒன்றாக சேர்ந்து சமாளித்தாக வேண்டும் ….
நம் மேல் இருக்கும் தப்பை அடுத்தவர்கள் மேல் போடுவதும் தவறு தானே என்றான் அப்பொழுது கயல் ஓடிவந்து அழுதால் நீ என்ன கயல் செய்தாய் நாங்கள் இருவரும் தான் தவறு செய்து விட்டோம் இதில் உன்னை பலியாடாக மாற்றி விட்டோம் என்று அழுதான் ..
மாமா ப்ளீஸ் அழுவாதீங்க நீங்கள் ஒன்றும் பண்ணவில்லை நீங்கள் இருவருமே இந்த வீட்டிற்க்காக என்று தானே விட்டு கொடுத்தீர்கள் என்றாள் நாங்கள் இருவரும் இந்த வீட்டிற்காக என்று நினைத்த ஒரு காரியம் இப்போது தப்பாகி விட்டது என்று கூறி அழுதான் மகா மௌனமாக இருந்தால் …
வீட்டில் அனைவருக்கும் இதை எப்படி கடந்து வருவது என்று தெரியவில்லை பிறகு சுந்தரி தனது மகன் மருமகள் இருவரிடமும் வந்து நின்றார் மகிழ் எழுந்து நின்றான் சுந்தரி மகா மகிழ் இருவரை பார்த்தார் வேறு எதுவும் பேசவில்லை முறைந்து விட்டு அமைதியாக ஒரு பக்கம் போய் நின்று விட்டார் பிறகு நர்ஸ் வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார் …
பிறகு இன்னும் அரை மணி நேரத்தில் இனியை நார்மல் வார்ட்டுக்கு மாற்றி விடுவோம் என்றும் சொல்லிவிட்டு சென்றார் இனியை நார்மல் வார்ட்டுக்கு மாற்றிய பிறகு முதலில் கோதை தான் உள்ளே சென்றார் அதன் பிறகு ஒவ்வொருவராக சென்றார்கள் இனி மகா மகிழ் இருவரையும் எதிர்பார்த்தால்…
அவர்கள் இருவரும் வரவில்லை என்றவுடன் தனது கோதை அத்தையிடம் அண்ணனும் மகாவும் எங்கே உதிரன் மாமாவையும் காணவில்லை என்று கேட்டால் அனைவரும் குழந்தையை பார்த்து விட்டீர்களா அவர்கள் இருவரும் தானே குழந்தையை வாங்கினார்கள் என்று கேட்டாள் கயலும் வந்து நின்றால்…
கயல் என்று விட்டு இப்பொழுது எப்படி இருக்கிறாய் எனக்கு என்ன நான் நன்றாக தான் இருக்கிறேன் உனக்கு வலி எப்படி இருக்கிறது வலி லைட்டாக இருக்க தான் செய்கிறது அது இருக்கட்டும் நீ வந்திருக்கிறாய் அப்போது அத்தை எங்கே என்று கேட்டால் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்கள்….
நீ வந்ததாலா என்று கேட்டால் கயல் அமைதியாக இருந்தால் அப்பொழுது நிலா தான் அனைத்து உண்மைகளையும் சொன்னாள் இனி குழந்தை பெற்ற உடம்பு என்று கூட எண்ணாமல் உதிரா என்று வேகமாக கத்தினாள் வெளியே இருந்து வேகமாக ஓடி வந்தான் …
அவன் ஓடிவரும் வேலையில் மகா மகிழ் இருவரும் உள்ளே ஓடி வந்தார்கள் உதிரனை அடிப்பதற்காக இனி தனது கையை ஓங்கினாள் மகா தான் இனி என்ன செய்கிறாய் என்று கேட்டுக்கொண்டே அவளது கையை தாங்கி பிடித்து கீழே இறங்கச் செய்தால் …
அப்பொழுது இனி மகாவை ஒரே தல்லாக தள்ளிவிட்டு எனது மாமா அடிக்க எனக்கு எல்லா உரிமையும் நீ போடி என்று மகாவை முறைத்து விட்டு உதிரனின் சட்டை பிடித்துக் கொண்டு கத்தினால் இப்பொழுது அவ்வளவு தைரியமாக சொல்லத் தெரிந்த உனக்கு இவர்கள் காதலிக்கிறார்கள் என்று இவர்கள் காதலிக்கும் வேலையிலோ இல்ல இவர்களின் திருமண ஏற்பாடு செய்யும் வேலையிலோ சொல்லி இருக்க வேண்டியது தானே…..
அப்பொழுது இல்லாத தைரியம் உனக்கு இப்பொழுது எதற்கு வந்தது என்று கத்தினால் உதிரன் அமைதியாக தலை குனிந்து கொண்டு இருந்தான் அப்பொழுது மகிழ் தான் இனி என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் மகிழை பார்த்து நீ அமைதியாக இரு நீ மட்டும் என்னை நீயும் ஒரு கோழை தான்….
உன்னுடைய காதலை விட்டில் உள்ளவர்களிடம் சொல்ல முடியாத நீயும் ஒரு கோழை தான் என்று கத்தினால் என்னுடைய காதலை அப்பா அம்மாவிடம் உன்னால் சொல்ல முடியும் ஆனால் உன் காதலை சொல்ல முடியாதா என் முன்னால் நிற்காதே என்று கத்திவிட்டு மகாவிடம் சென்று பலமுறை அறைந்தால் ….
இந்த வீட்டிற்காக இந்த வீட்டிற்காக எனது அண்ணனுக்காக என்று எண்ணியே உன் வாழ்க்கை போய்விட்டது டி என்று கத்தினாள் அப்பொழுது மகிழ் அமைதியாக தான் இருந்தான் அப்போது வேணி தான் வேண்டாம் அண்ணி இப்படி கத்தி கொண்டிருக்கிறீர்கள் பச்ச உடம்பு அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் …
இப்பொழுதும் தான் குழந்தை பிறந்திருக்கிறது நீங்கள் மாட்டும் கத்துகிறீர்கள் தையல் பிரிந்து விடும் என்று சொன்னால் எல்லாம் இந்த குழந்தையால் தான் என்று இனி சொன்னாள் மகா வேகமாக பச்சை உடம்பு காரி என்று கூட பார்க்காமல் இனிய அறைந்திருந்தால்….
என்னடி இந்த குழந்தையால் நாங்கள் செய்த தவறுக்கு இந்த குழந்தை என்ன செய்யும் இன்னொரு முறை இந்த குழந்தையால் என்று சொன்னாய் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று கத்தினால் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி தான் மகாவை அழைத்துக் கொண்டு நடந்தார் …
சுந்தரியும் கோதையும் இனியை சமாதானம் செய்தார்கள் இனி தனது தாயே பார்த்துக்கொண்டு இருந்தால் அவர் இனியவை பார்த்துவிட்டு என்னடி என்று கேட்டார் ஒன்றுமில்லை என்று விட்டு அமைதியாகி விட்டாள் பிறகு கொஞ்சம் தெளிந்து விட்டு குழந்தையை அனைவரும் பார்த்து விட்டீர்களா குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டாள்…
அப்பொழுது பாண்டியம்மா பாட்டி தான் குழந்தையை நாங்கள் யாரும் இன்னும் பார்க்கவில்லை மகிழும் மகாவும் தான் பார்த்தார்கள் அதன் பிறகு குழந்தையை நர்ஸ் வந்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார் என்றவுடன் குழந்தையை தொட்டில் இருந்து எடுத்துத் தருமாறு சொன்னால் …
பிறகு பாண்டியம்மா பாட்டி தான் எடுத்துக் கொடுத்தார் பிறகு ஒவ்வொருவராக இனி மடியில் இருந்தே குழந்தையை பார்த்தார்கள் உதிரன் அமைதியாக நின்று கொண்டிருந்தான் இன்னும் அவன் குழந்தையை பார்க்கவில்லை பிறகு அனைவரும் உதிரனும் இனியும் தனிமையில் பேசிக்கொள்ளட்டும் குழந்தையை பார்க்க வேண்டும் என்று உதிரனுக்கும் ஆசை இருக்கும் என்று எண்ணி அமைதியாக வெளியே சென்றார்கள் ….
உதிரன் அப்பொழுதும் அமைதியாக அந்த அறையில் நின்று கொண்டே இருந்தான் அப்பொழுது மாமா என்று இனிதான் கூப்பிட்டால் உதிரன் வேகமாக நிமிர்ந்து இனியை பார்த்தான் இனி குட்டி என்று கத்திக் கொண்டே வந்து அவளை கட்டி அணைத்தான் தம்பி இருக்கான் மாமா என்று அவள் லேசாக முனகினால் ….
சாரிடி நான் வேண்டுமென்று எதுவும் செய்யவில்லையே என்னையும் மீறி ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டேன் என்று சொன்னான் அழுது கொண்டே எனக்கு தெரியும் மாமா நீ எந்த இடத்திலும் அண்ணனையும் மகாவையும் விட்டுத் தர மாட்டாய் என்று இருந்தாலும் என்று விட்டு அமைதியாகிவிட்டால் …
அதன் பிறகு இருவரும் அதைப் பற்றி பேசவில்லை குழந்தையை சிறிது நேரம் கொஞ்சினார்கள் இனி சோர்வாக இருப்பதை பார்த்தவுடன் உதிரன் தான் படு ரொம்ப நேரமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் நான் வேறு உன்னை அதிகம் வருந்த விட்டு விட்டேன் என்றான் …
ஒன்றுமில்லை மாமா என்றால் சரி விட்டு அவளை படுக்க வைத்தான் அவள் படுத்தவுடன் குழந்தையையும் தூங்கி விட்டது என்பதால் தொட்டிலில் போட்டுவிட்டு வெளியில் வந்தான் அப்பொழுதுதான் சுந்தரி தான் குழந்தை தூங்கி விட்டதடா என்று கேட்டார் குழந்தை தூங்க வைத்து விட்டேன் இனியும் தூங்கவைத்துவிட்டு தான் வந்திருக்கிறேன் என்று விட்டு வீட்டில் உள்ள பெரியவர் அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டான் ….
என்ன மன்னித்து விடுங்கள் என்பது போல் அனைவரும் உதிரனை முறைத்து விட்டு இது என்னடா பழக்கம் நீ என்ன தவறு செய்தாய் இதில் நான் யார் மீதும் தவறு சொல்வதாக இல்லை அவரவர் சூழ்நிலை இப்படி வந்து நிற்கிறது நாம் நமக்கு வரும் இன்பத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் ஆக வேண்டும்…
இது இப்பொழுது நமக்கு கெட்ட நேரம் என்பதால் எதையும் சமாளித்தாக வேண்டும் என்று கூறினார்கள் இப்படியே மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு இனி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றார்கள் சுகப்பிரசவம் என்பதால் மூன்றாவது நாள் இனியை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் …
மகிழ் மகா இருவரும் இந்த மூன்று நாட்களில் வீட்டிற்கு செல்லவில்லை மற்ற அனைவரும் சென்று வந்தார்கள் ஆனால் யாரும் காவிரியிடம் பேசவில்லை அவரும் யாரிடமும் பேசவில்லை மூன்றாவது நாள் மாலை 3 மணி போல் அனைவரும் வீட்டிற்கு குழந்தை மற்றும் இனியை அழைத்துக் கொண்டு சென்றார்கள் …
அவர்கள் வீட்டிற்குச் சென்றால் காவேரி என்ன சொல்வார் இப்பொழுது மருத்துவமனையில் அமைதியாகச் சென்றது போல் செல்வாரா இல்லை அவர் ஏதாவது பிரச்சனை செய்வாரா ….
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
இனி எதையும் மாத்த முடியாது தானே. இதுவும் கடந்து போகும்ன்னு நினைச்சிட்டு போக வேண்டியது தான்.