Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11

அத்தியாயம்-11

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    ஒரு வாரத்திற்கு மேலாக அலைந்து திரிந்து, யார் யாருக்கோ அவசரமாய் பணம் தந்து, அந்த கருப்புநிற காருக்கு சொந்தமான அட்ரஸை பெற்றுவிட்டாள் பாரதி.

  மணி இதற்கே எட்டானது. சரவணன் அவன் வீட்டு வாசலில், லுங்கியை மடித்து கொண்டு, ‘பக்கத்து வீடு பூட்டியிருக்க, இன்னும் இந்த பொண்ணு வீட்டுக்கு வரலையா?
 
   ஒருவிதத்தில்‌ இந்த பொண்ணு நேர நேரத்துக்கு வீட்டுக்கு வந்து பழகியிருந்தா அதுக்கான கசப்பான சம்பவம் நடந்திருக்காது.
 
  இதுல ஆனந்தராஜ் வூட்டுக்கும் தனியா தான் போகுது. இப்பவும் ஆளை காணோம்.
  வரவர பொண்ணுங்க என்ன நடந்தாலும் கண்டுக்கமா, ஓவரா தான் ஊர்சுத்துதுங்களோ?’ என்று எண்ணாமல் இல்லை.
   தங்கையிடம், “அனிதா என்ன பக்கத்து வூடு பூட்டி இருக்கு?” என்று கேட்க, அவளோ ‘எனக்கு தெரியாது’ என்று விட்டேர்த்தியாக பதில் தந்தாள்.

விமலாவோ சிறுகசிறுக சீட்டு பணம் போட்டு வைக்க அதை தீபாவளிக்கு எடுக்க போயிருந்தார். அதனால் அவரும் வீட்டில் இல்லை.

    பாரதி ஆட்டோவிலிருந்து பணத்தை தந்து இறங்க, ஆட்டோகாரனோ அவளையும் இடத்தையும் பார்வையிட்டு பணத்தை வாங்கி புறப்பட்டான்.‌

   “சரவணன் அந்த பிளாக் காரோட அட்ரஸ் கிடைச்சிடுச்சு. காரோட ஓனர் பெயர் ரஞ்சித்னு இருக்கு. நாளைக்கு போய் அந்த வீடு தான் இருக்கானா என்று விசாரிக்க போகலாமா? கூட வருவிங்க தானே” என்று கேட்க, தூரத்தில் தன் தாய் விமலா வருவதை கண்டு, “அ.. அனிதா அம்மா வருது பாரு. நீ வீட்டை இன்னும் பெருக்கலையா? திட்டப்போகுது” என்று நழுவ, பின்னால் திரும்பாமலேயே சரவணனை தாண்டி அவளது வீட்டுக்கு நடந்தாள்.

  விமலா பார்வை கிட்டதட்ட பாரதியின் அன்னை மணிமேகலை போல சில நேரம் எண்ணவோட்டத்தை கூறிட, சரவணனுடன் பேசுவதில் அவருக்கு பிடிக்கவில்லை என்று புரிய வீட்டுக்குள் வந்து சிரித்தாள்.

    பொரிஅவலை பாலில் போட்டு சர்க்கரை, தூவி சாப்பிட்டாள். பழைய நம்பரே வாங்கியதில், மணிமேகலை இப்பொழுது எல்லாம் மதியம் போல பேசுகின்றார். சாதாரணமாக தான் பேச ஆரம்பித்து பிறகு கடைசியில் சாப்பிட்டியா? எங்க தங்கியிருக்கா? காலையில நீயா சமைச்சியா? என்னயெல்லாம் சமைப்ப? அப்பா அம்மா மேல கோபம் போகலையா? தனியா எப்படிடி இருக்க? எங்க நினைவே வரலையா? இங்க இருப்பவங்க எல்லாம் ஆள்ஆளுக்கு அவங்க வீட்டுக்குள்ள கதவை அடைச்சிட்டு இருப்பதால், நீ வர்றியா போறியா இருக்கியானு கூட தெரியாதவங்களா இருக்காங்க பாரதி. நாமளா சொல்லாத வரை, நம்மளா போலீஸ் கோர்ட் போகாத வரை நம்ம விஷயம் வெளிய தெரியாது பாரதி. நீயா தான் தள்ளி தூரமா போயிட்ட.” என்று முடிவில் மாறிடுவார்.

  இதில் அப்பா உன்னை எல்லாத்தையும் மறந்து எப்படியாவது வீட்டுக்கு வரச்சொல்லுனு கூப்பிடறார் தெரியுமா.” என்று வேறு கூறியதை எல்லாம் நினைத்து பார்த்தாள்.

  பாரதியுமே தனக்கு நடந்தவையை மறக்க முயன்று தான் தனித்து வந்ததே. சிலருக்கு மனம் பாரமாக இருந்தால் யாரிடமாவது கூடயிருந்தால் தேவலாமென தோன்றும். அதே சில விஷயத்திற்கு சிலரை தள்ளி நின்றாலோ மனம் தேவலாமென தோன்றும். நம் பாரதி இரண்டாம் ரகத்தில் இருக்கின்றாள்.

   ‘இந்த சரவணனிடம் போன் நம்பர் வாங்காம போயிட்டோம். அப்படி வாங்கியிருந்தா அட்லீஸ்ட் போன்லயாவது பேசியிருக்கலாம். இந்த விஷயத்தை அவரிடம் வாட்சப்லயே டிஸ்கஸ் பண்ணிருப்பேன்’ என்று நினைத்தவள் இரவெல்லாம் உறக்கம் தொலைத்தாள்.
  நாளை அந்த வீட்டில் ரஞ்சித் இருந்தால் என்ன செய்வது? அப்படி இல்லாமல் போனால் சோர்ந்திடுவோமா? இரண்டு விதமாக சிந்தித்து தாமதமாய் உறங்கினாள்.

   அதிகாலை எழுந்தபோது, அவசரவசரமாய் தயாரானாள். ‘சரவணன் இருப்பாரா? தன்னோடு வருவாரா?’ என்று வெளியே செல்வது போல அடிக்கடி எட்டி பார்த்து அங்கே பெட்டிகடையில் ஏதாவது பொருள் மாற்றி பொருள் வாங்கி அவன் வீட்டையும் கவனித்தாள்.

  அவன் வேலைக்கு சென்றிருப்பான் போல ஆள் இல்லை என்று தெளிவாக புரிய, வேகமாய் அலுவலகம் கிளம்புழது போல தயாரானாள்.

  கத்தி ஒன்றை வாங்கி வந்து கைப்பையில் மறைத்து வைத்து கொண்டாள். பெப்பர் ஸ்பிரே, மயக்கமடைய செய்யும் மருந்து என்று தனிதனியாக வாங்கி வைத்தவளுக்கு கைகள் நடுங்கியது.

  மனதில் ரஞ்சித்தை கண்டால் குத்தி கொலை செய்யும் எண்ணம் கூடுதலாக இருந்தது. ஆனால் அதை நடைமுறை செய்வதாக பொருட்களை காணும் போது உதறல் உண்டானது.
  இயல்பிலேயே பாரதி மென்மையானவள். சொல்லப்போனால் அதிர்ந்து கூட பேசமாட்டாள்.

  அழுகை முட்டிக்கொண்டு வந்தது, அழகாக நிம்மதியாக வாழ்ந்தவளை ஏன் இந்த நிலைக்கு தள்ளியது விதி?

   இந்நேரம் இயல்பாக இருந்தால் பிரஷாந்துடன் திருமண நிச்சயம் முடிந்திருக்கும்.
  அவரோடு நிறைய பேசி பழகியிருப்போமோ. தன் மனதை திறக்காமலேயே தன் எண்ணத்தை புரிந்தவராக மாறியிருப்பார்.
  ஆனால் பிரஷாந்த் விட்டு சொன்றுவிட்டாரே! தன்னோடு தன் நலனை அறிந்து தன் மனநிலையை அறிந்து தற்போது கூடயிருப்பது சரவணன் தான்.

  ஆம் அவர் எங்கே? பெண் பார்க்க வந்தவர்களே விட்டு சென்றுயிருக்க, பக்கத்து வீட்டில் இருப்பவர் இரண்டு மூன்று முறை எதர்ச்சயமாக உதவியவர் மீண்டும் உதவ வருவாரா?
  அதனால் தானாக செல்ல வேண்டும் என்று கதவை பூட்டினாள். பக்கத்தில் அனிதா பள்ளிக்கூடம் சென்றியிருக்க, விமலாவும் காலையில் துப்பரவு பிரிவில் அவருக்கு என்று கொடுத்த  பிரிவில் பெருக்கி முடித்து தலைவிரித்து பேனை இழுக்க, அந்த தோரணையே திகிலை தந்தது.

  மெதுவாக வீட்டை பூட்டியபடி நடந்த பாரதியை, “இந்தாம்மா.. உன்னான்ட ஒன்னு கேட்கவா?” என்று நிறுத்தினார்.

  பாரதி திகிலுடன் “கேளுங்க ஆன்ட்டி” என்றவள் கைக்கடிகாரத்தை பார்த்து நிமிர்ந்தாள்.

  “பார்க்க நல்லவூட்டு பிள்ளையா தெரியற, நல்ல வேலை சம்பளம் வாங்கறியாம் இந்த அனிதா புள்ள சொல்லுச்சு. நீ எதுக்கு இங்க வந்து வாடகைக்கு இருக்க?” என்று கேட்டார்.

“லைப்ல கொஞ்சம் சேஞ்ச் வேண்டும்னு இருக்கேன் ஆன்ட்டி. வேறொன்னும் இல்லை” என்றவள் குரலே எதையோ அழுத்தமாய் மறைப்பதை சொல்லாமல் சொல்ல,  “அ..அனிதா ஸ்கூலுக்கா போயாச்சா? நேத்தெல்லாம் ஒரு மாதிரி அப்சட்டா இருந்தா. முகம் எல்லாம் வெளிறியிருந்தது. உடம்பு கிடம்பு சரியில்லையா ஆன்ட்டி?” என்று கேட்டதும், “அப்படில்லாம் இல்லையே. அது ஜாலியா தான் ஸ்கூலுக்கு போச்சு” என்றதும் “சரிங்க ஆன்ட்டி நான் வர்றேன்” என்று சென்றாள்.

“என்ன சேஞ்ச வேண்டுமாம்?’ என்று விமலா எண்ணாமல் இல்லை. 

   இரண்டு தெரு நடந்து வந்திருக்க, “ஏங்க… என்னங்க? பச்… பாரதி” என்றதும் ஆணி அடித்தபடி பாரதி கால்கள் நின்றது.

நிதானமாக திரும்பி பார்க்க மூச்சு வாங்க சரவணன் ஓடிவந்தான்.
 
    “வர்றேன்னு சொன்னேனுங்க. இப்படி மானத்துக்கு பங்கம் வர்ற இடமா தனியா தேடி போறிங்க?” என்றதும், பாரதியோ “இல்லை… நீஙக வர நேரமாகவும், வீட்ல இருக்க பொறுக்கலை. அதோட உங்க வீட்லயும் உங்களை ஆளை காணோம் என்றதும் தான் வந்தேன்.” என்றாள்.

  இருவரும் நடந்தவர்கள் மெயின் ரோட்டுக்கு வரவும், “ஆட்டோ புக் பண்ணிருக்கேன்.” என்று கூறினாள்.

  சரியென்று தலையாட்டி கடமைக்கு நின்றான். ‘எங்க போனாலும் ஆட்டோ… ம்ம்ம் ஐடி வேலை ஐடி வேலை தான். என்ன தான் மனழுத்தம் மனசோர்வு, கண்வலி, முதுகுவலி, குழந்தை பிறக்காத காரணம்னு இஷ்டத்துக்கு காரணத்தை அடிச்சி துவைத்தாலும் பணம் வருதுயா. அந்த பணத்தை தானே மனுஷன் ராப்பகலா தேடிட்டு இருக்கான்’ என்றவன் எண்ணவோட்டத்தை கலைத்து ஆட்டோவில் ஏறக்கூறினாள்.

  இதுவரை சரவணனை பார்த்து பேசியிருக்கின்றாள். ஏன் அவன் தன்னை காப்பாற்றியதில் கூட கடவுளுக்கு நிகராக எண்ணியிருக்க, அருகே அமர்வதில் தயங்கினாள்.

   சரவணனுக்கு அந்த தயக்கம்  புரியாது போனாலும் ஆட்டோவில் ஓட்டில் தான் அமர்ந்திருந்தான். பாரதி மறுபக்கம் ஓரமாய் வீற்றிருக்க, அடிக்கடி தான் செல்ல வேண்டிய இடத்தை அடைவதற்கு எவ்வளவு நேரமாகும் என்று பார்த்தாள்.

   ‘ரஞ்சித்தை கண்டதும் என்ன செய்ய போகின்றாய்? அவனை குத்தி கிழிப்பாயா? கைகாலை கட்டி போட்டு ஆண் குறியை அறுபபாயா? கால்களை முடமாக்கி கையை வெட்டி காக்கைக்கு போடலாமா? பல்வேறு சிந்தனை எட்டி பார்க்க, முகமெல்லாம் வேர்த்தது.

சரவணனோ ஆட்டோ கண்ணாடி வழியாக பாரதியை எதார்த்தமாக பார்த்தான். அவளது வேர்வை, பதட்டம கண்டு, ‘எதுக்கு இப்படி பயந்து யோசிககணும். பேசாம பெத்தவங்க சொல்ல கேட்டு இருக்கலாம்ல? என்ன தான் நினைக்குதோ? என்ன பண்ண போகுதோ? அதென்னவோ இந்த பிள்ளையை தனியா விடவும் மனசில்லை’ என்று நினைக்க, “நீங்க சொன்ன இடத்துக்கு வந்தடுச்சுங்க.”என்று ஆட்டோ நிறுத்த, சரவணன் அழைக்கும் நேரம் வண்டி நின்றதை உணர்ந்த பாரதி இறங்கினாள்.

   பணத்த தந்துவிட்டு கேட்டை திறக்க, அதே கருப்பு நிற கார். காரின் எண்ணை கண்டாள்.

   தன்னிடம் உள்ள நம்பரா அத்துடன் ஒப்புமை பண்ணிவிட்டு, காத்திருக்க, கையிலிருந்த விலாசத்துடன் வீட்டை கண்டாள். 

ஓரளவு வசதி என்பது பார்த்ததும் புரிந்தது. அந்த வசதி இருக்க போய் தான் ஆடினானா? என்று கூட தோன்ற, மணியோசை அழுத்தினாள். 

    வீட்டில் வேலைக்கார பெண்மணி கதவை திறந்து யார் வேணும்?” என்று கேட்க, “ரஞ்சித் இருக்கானா?” என்றதும் வேலைக்கார பெண்ணோ அங்கிருந்த ஒரு மத்திய பெண்மணியை பார்த்தாள். 

“தம்பியை தேடி பொண்ணு வந்து இருக்கும்மா” என்றதும், உள்ள வர சொல்” என்றவர். “ரஞ்சித்” என்று குரலும் கொடுத்தார். 

“இதோ வர்றேன் மா.” என்றவன் குரலில் பாரதி இதயம் தாறுமாறாக பயத்தில் துடிக்க, வேலைக்கார பெண்ணோ, “நீங்க?” என்று சரவணனை கேட்க, என்னோட வந்தவர்” என்று மட்டும் கூறினாள். 

ரஞ்சித்தோ, “பாருங்க அம்மா தீபாவளிக்கு ஆன்-லைன்ல டிரஸ் எடுக்கறேன்னு என் பணத்தை எல்லாம் அபேஸ் பண்றா” என்று தங்கையை புகார் வாசித்தபடி வந்தவன், பாரதியை கண்டதும் சிலையானன். 

“யார் ரஞ்சித் இவங்க? உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க. ஃபிரண்ட்ஸா தெரிந்தவங்களா?” என்று ரஞ்சித் தாய் கேட்க, அவனோ தவறு செய்தவன் வாய் திறவாமல் பேயறைந்தது போல இருந்தான். 

ரஞ்சித்திற்கு பாரதியை மிகவும் பிடிக்கும். அவளை தனது ஐடி தொழிலில் போட்டி கம்பெனியில் வேலை செய்பவள் என்ற அளவிற்கு தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு அவளை பிடித்துவிட, எல்லா ஆண் மகனை போல துரத்தி துரத்தி காதலிப்பதை உரைத்தான். 

ஓரிரு முறை மதுவோடு வந்து நின்றும் காதலை உரைத்திருகின்றான். ரஞ்சித்தை பொதுவாகவே அவளுக்கு பிடிக்கவில்லை அதோடு, தாய் தந்தை பார்க்கும் பையனை மணக்க போவதாக தெளிவாக கூறினாள். 

தான் நல்ல வேலை சம்பளம், அழகு என்று இருந்தும் ஒரு பெண் தன்னை மறுப்பாதா? என்று அவளை காதலிக்க வைக்கும் முடிவோடு பின்தொடர்ந்தான். அப்பொழுது தான் பாரதிக்கு காலையில் பெண் பார்க்க வந்து சென்றது தெரிய வந்தது. அந்த விரக்தியில் மது என்ற அரக்கனை உள்ளே செலுத்த, அதே நேரம் பாரதி பிரஷாந்தை  சந்திக்க சென்றாள். அவளை பின்தொடர்ந்து சென்றவன், பிரஷாந்ததுடன் பாரதி சிரித்து பேசியதை தாங்க இயலாமல் அவள் வரும் வழியில் தூக்கி சென்று கெடுத்தான். 

போதையிலும் கோபத்திலும் தான் அவளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, ‘இனி எச்சி டி. எவனை வேண்டுமென்றாலும் மணந்துக்கொள்’ என்ற ரீதியில் மதுவோடு சென்றான். 

ஆனால் அதிகாலை கண் விழித்த நேரம் அவன் செய்த விபரீதம் உணர, கோபத்திலும் மதுவிலும் செய்த விஷயம் புத்திக்கு உரைத்தது. எப்படியும் பாரதிக்கு தன் வீடு தெரியாது. அந்த தைரியமும், அப்படியே ஓடி ஒளிந்துக் கொண்டான். பாரதி பற்றி எந்த விவரமும் வராமல் போகவும், போலீஸ் கேஸ் எதுவும் தன்னை தேடி வரவில்லை, அத்துடன் பாரதி வேலைக்கு செல்வதை நேரில் மறைந்து இருந்து பார்த்ததும், திடமாக நடமாடினான். இன்று இப்படி பாரதி நேரில் தன் வீட்டில் வந்து நிற்பாள் என்று அறியாது திகைத்தான். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ். 

2 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11”

  1. Dharshinipriya

    Super sis nice epi 👍👌😍 bharadhi eppdi vandhu nippa nu nenachi kooda parthiruka maatan la unmaiya avanga amma appa nallbadiya valarthirundha eppdi pannuvaana parpom avanga enna dhan pandranga nu🙄🥺

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!