அத்தியாயம்-12
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பாரதி ரஞ்சித்தை பார்க்க வரும் முன் அன்னை இல்லாதவனாக, தந்தை மட்டும் இருப்பவனாக, நல்ல வேலை வசதி என்று இருப்பவனாக இருக்க வேண்டும். அதனால் தான் ஒரு பெண்ணினை துன்புறுத்த அவனால் முடிந்தது என்று வந்தாள்.
ஆனால் இங்கே தன் வீடு போல அம்மா தங்கை என்றிருக்க, பெண்களோடு வாழ்ந்தவனுக்கு எப்படி தன்னை துன்புறுத்த முடிந்தது என்ற அதிர்ச்சி.
“நான் வருவேன்னு நினைக்கலையில்லை.? ஏதோ… கமுக்கமா நீ என்னை கெடுத்ததை மூடி மறச்சி வந்த வரனை கல்யாணம் பண்ணிட்டு அவனையும் ஏமாத்தி, என்னையும் ஏமாத்திக்கிட்டு, உனக்கான தண்டனை கொடுக்க முடியாத பைத்தியமா திரிவேன்னு நினைச்ச தானே?” என்றதும் ரஞ்சித் தாய், “ரஞ்சித்… யாருடா?” என்று கேட்க, அவரை கண்டு, “சொல்லு… அம்மா அம்மா.. நான் ஒரு பொண்ணை விரும்பினேன். அந்த பொண்ணு அவ அப்பா அம்மாவை பார்க்கற பையனை தான் கல்யாணம் பண்ணகப்பேன். என் பின்னால வராதனு நிதானமா சொன்னா, அதைமீறி குடிச்சிட்டு, அவளை தூக்கிட்டு வந்து மயக்கப்படுத்தி கெடுத்துட்டேன். அவ தான் இவன்னு சொல்லி அறிமுகப்படுத்து” என்று நக்கலாய் கூறினாள்.
ரஞ்சித் என்னடா சொல்லறா?” என்று அதிர, “உங்க பையன் என்னை துடிதுடிக்க பாலியல் ரீதியா வன்முறை செய்து கெடுத்திருக்கான். நீங்க ஒரு பொண்ணு தானே? உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா தானே. உங்க பையனுக்கு உங்களை எல்லாம் எப்படி அணுகனும்னு தெரிந்தவனுக்கு யாரோ ஒரு பொண்ணான என்னை மட்டும் ஏன் கெடுத்தான்.” என்று அழுதபடி நியாயம் கேட்டாள்.
இம்முறை கண்ணீரை துடைத்து, ரஞ்சிதின் அன்னை, தங்கையை கைப்பிடித்து அவன் முன் நிறுத்தினாள்.
“இது உன் கூட பிறந்த தங்கச்சி தானே? உன்னை பெத்த அம்மா தானே? இவளுக்கும் மார்பகம் இருக்கு. பெண்ணுறுப்பு இருக்கு, தொடையெல்லாம் இருக்கு தானே. இவங்களை பாலியல் வன்முறை செய்வியா? இல்லை யாராவது செய்தா சும்மா இருப்பியா?
நான் மட்டும் ஏன்டா? யாரோ ஒருத்தின்னா என்னவென்னா செய்வியா?
அதென்ன கெடுத்துட்டு குப்பைதொட்டில போட்டா வச்சியிருக்க? சிம்பாளிக்க உன் எச்சையாகிட்டேன்னா?” என்றதும் ரஞ்சித் தாயாருக்கோ, தேகம் ஆடியது. பானதி பேச பேச ரஞ்சித் அதிர்ந்து கூனிகுறுகி அல்லவா நிற்கின்றான். மறுத்து வாய் திறக்கவில்லை, யாரென்று கூட கேள்வி எழுப்பவில்லை.
“உன்னோட பல்தடம் என் உடம்புல எங்கலாம் இருந்தது தெரியுமா? உதட்டை கடிச்சி இழுத்து, மார்புல தொடையில, கழுத்துல அரை பிணமா ஹாஸ்பிடல்ல கிடந்தேன்.
எங்கப்பா கௌரவத்தை கட்டிக்கிட்டு மானம் போக கூடாதுன்னு மறைக்க பார்த்து, போலீஸ் கேஸே இல்லாம என்னை பூட்ட நினைச்சார்.
உன் மேல கேஸ் கொடுக்க கூட முடியலை. பைத்தியக்காரி மாதிரி இங்க பாரு… கத்தி விஷம், மயக்கமருந்து, இது உன் ஆணுறுப்பை அறுத்தெரிய வாங்கியது” என்று கைப்பையை அங்கிருந்த மேஜையில் கொட்டி காட்டவும் ரஞ்சித் பயத்தில் இரண்டடி பின்நகர்ந்தான்.
“என்னை கெடுத்த உன்னை, கொலை கூட பண்ண முடியாத பயத்துல இருக்கேன். ஒரு உயிரை கொல்லறது பாவம்னு. உனக்கு எப்படிடா என்னை கெடுத்து சின்னாபின்னாமா மாத்த தோனுச்சு? இதுல நீ என்னை விரும்பற? தூ…” என்று அவனை அறைந்து, முகத்தில் காறி உமிழ்ந்தாள்.
சிலபல மணி நேரம் அங்கே மௌனம உண்டானது. ரஞ்சித்தின் அன்னை தான் அழுதபடி வார்த்தை கூட உதிர்க்க தெம்பின்றி தரையில் சரிந்து திகைப்பில் அமர்ந்தார்.
“பாரதி… ச..சாரி..பாரதி. குடிச்சிட்டு புத்தி கெட்டு நடந்துக்கிட்டேன். நீ கிடைக்க மாட்டேன்னு நினைச்சி தப்பு பண்ணிட்டேன்” என்றான்.
"என்னது.... சாரியா? பாலியல் வன்கொடுமைடா.. அதுக்கு ஒரு சாரி போதுமா. மன்னிப்பு போதுமா?
மன்னிப்பு கேட்டா நான் பழைய நிலைக்கு வந்துடுவேன்னா?
காதலிச்சேன்னு சொல்லாத… என் உடும்பு அழகு அடைந்தா போதும்னு நினைச்ச. அடைந்ததும் குப்பையில போட்டாச்சு. காதலிச்சவன் குப்பையிலயா போடுவான்?
உன்னை பார்த்ததும் கொன்னுடலாம்னு வந்த திட்டம் பச்… முடியலை. என்னை கற்பை சூரையாடின உன்னை அழிக்க முடியலை. ஆனா நீ இனி நிம்மதியா இருக்க முடியாது. ஒரு பொண்ணை இப்படி பண்ணிட்டோம்னு நீ தினம் தினம் சாவ. உன் அம்மா தங்கைக்கு உன்னை பார்க்கறப்ப இனி ஒன்னும் தெரியாத பெத்த பையனா பார்க்க மாட்டாங்க. உன் தங்கை தோள் மேல கைபோட்டு பேசினியே. இனி சத்தியமா அவ உன்னை அண்ணனா பார்க்க மாட்டா. ஒரு கமுகனா தான் பார்ப்பாங்க.
என்னை எச்சிலை, கற்பிழந்தவ, வன்முறைக்கு ஆளானவ எப்படி வேண்டுமொன்றாலும் பார்க்கட்டும். ஆனா நான் பாரதி டா. என் மனசுல நீ தான் கேவலமானவன். நீ தான் அசிங்கம் பிடிச்சவன், நீ தான் குப்பை. கர்மானு ஒன்னு இருந்தா அது உன்னை தண்டிக்கும்.” என்று அழுதாள்.
தன்னால் தன்னை கெடுத்தவனை கொலை கூட செய்ய முடியாத வலியில், அனைவரையும் பார்த்து, அழுதபடி வெளியேறினாள்.
சரவணனோ ரஞ்சித்தை கண்டு “அந்த பொண்ணால உன்னை கொல்ல முடியாதுன்னு இல்லை. அந்த பொண்ணுக்கு மனிதாபிமானம் இருக்கு. நேத்து வரை கொல்ல நினைச்சவளுக்கு, நீயும் குடும்பம் அம்மா, தங்கைனு வாழ்வதை பார்த்து என்ன முடிவெடுக்கனு தெரியலை.
கொலையெல்லாம் முன்னபின்ன பண்ணினவ இல்லையே. உன்னை தண்டிக்காததால அவ தோற்றுட்டானு அர்த்தமில்லை.
என்னை பொறுத்தவரை அந்த பொண்ணு ஜெயிச்சிட்டா. அவ நிலையை கடந்து சமூகத்தோட வாழ போராடுறா பாரு. உன்னை கோர்ட் நீதிபதி உலகத்துக்கு முன்ன கெட்டவனா காட்டி போராடாம இருக்கலாம். ஆனா உனக்கு உலகமா இருந்தவங்க முன்னாடி தான் அவளுக்காக அவ நியாயம் பேசியிருக்கா. உங்க அம்மா வீட்டுக்குள்ள கூட செருப்பு போட்டு இருந்தவங்க, தரையில உட்கார்ந்து அழறாங்க, உன் தங்கை உன்னை பார்த்து அரண்டு மிரண்டு இருக்கா பாரு. ஆக… உனக்கான உலகத்துல உன் குணத்தை துகிலுரிச்சி காட்டிட்டா. உன் உயிரை பறிக்காம போனதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லு. நீ வன்முறை செய்து, அவ கூப்பிட்டு வராத கடவுள், உனக்காக இன்னமும் நல்லது பண்ணறார் பாரு.” என்று பேசினான். சரவணன் பேசவும் வாசலில் திரும்பாமல் நின்று பாரதியும் அனைத்தும் கேட்டாள்.
கூடுதலாக, “அம்மா… அவனுக்கு தங்கச்சி தானேனு அந்த பொண்ணை தனியா விட்டுட்டு போயிடாதிங்க சொந்த தங்கையையே கெடுத்து வைக்க போறான். அம்மாடி.. ரூமுக்கு எல்லாம் இனி பார்த்து ஜாக்கிரதையா போ. குடிச்சிட்டு தொட்டேன்னு சொல்லி கால்ல விழுவானுங்க” என்று கூறிவிட்டு வரவும், ரஞ்சித் தங்கை அண்ணனை கண்டு முகசுளித்தாள்.
அவளுக்கு விவரம் தெரியும் வயது என்பதால் இங்கு பேசப்பட்டதில் அண்ணன் பேசாவிட்டாலும் அனைத்தும் விளங்கிய நிலையில் வேடிக்கை பார்த்தாள்.
பாரதி சரவணன் இருவரும் கால் போன திசைக்கு நடந்தார்கள்.
ரஞ்சித் அன்னையை பார்த்து “அம்மா அம்மா” என்று காலை பிடிக்க, அவன் கையை தட்டிவிட்டு, மகளை அழைத்துக்கொண்டு தனியறைக்கு வந்து அழாதார்.
ரஞ்சித் முகத்தில் அடித்தபடி “அய்யோ… தப்பு பண்ணிட்டேனே. அம்மா.. என்னை பாரும்மா. என்கிட்ட பேசும்மா” என்று அழுதான். அனைத்தையும் வேடிக்கை பார்த்தவராக அவன் தந்தையும் படியில் அமர்ந்து கைப்பிடியை தாங்கியவராக இருந்தார்.
ரஞ்சித் செய்த தவறுக்கு மிக எளிய தண்டனையாக அழுது கரைந்தான். அவன் உலகமாக எண்ணிய தாய் தந்தை தங்கை முன் மட்டும் அவன் பெயர் நாறி போனது.
இங்கே சற்று தூரம் நடந்த பாரதியின் நடைபயணம் மெதுவானது. சரவணனோடு இணைந்து நடந்தாள். பஸ் ஸ்டாப்பின் இருக்கையில் அமர்ந்தாள். பள்ளி கல்லூரி அலுவலகம் என்று ஜனநடமாட்டம் குறைந்திருக்க, பேருந்து நிறுத்தத்தில் ஆட்களே இல்லை.
சரவணனும் இடைவெளியிட்டு அமர்ந்தான்.
“நான் முட்டாள் மாதிரி பேசிட்டு வந்துட்டேன். அவனை கொலை பண்ணிருக்கணும்.” என்று ஆரம்பித்தாள்.
சரவணனோ அவள் முகத்தை பார்த்து அமைதியாக இருந்தான்.
“நான் சாகடிக்காம வந்துட்டேன். இதுக்கு தான் இந்த பொண்ணு அட்ரஸை தேடுச்சானு பார்க்கறிங்களா?” என்று கேட்டாள்.
சரவணன் மறுக்கும் விதமாக, “இல்லைங்க… உங்களால் கொல்ல முடியாதுன்னு எனக்கு முன்னவே தெரியும். உங்க மனசு பூஞ்சை மாதிரிங்க. மறுபடியும் இவனிடம் மாட்டிக்கிட்டு கஷ்டப்படக்கூடாதுன்னு தான் கூட வந்தேன். ஆனா இப்படி பேசினப்ப, உங்க ஆதங்கம் குறைந்ததா? அவனுக்கு வீடு தேடி வந்து செருப்படியா அவங்க அம்மா முன்ன தந்திங்க.
பாதிக்கப்பட்டதுலயிருந்து மீளனும்னு நினைச்சதை வேண்டுமின்னா நான் பாராட்டுவேன். ஆனா உங்க அம்மா அப்பாவை விட்டுட்டு தனியா வந்து எங்க ஏரியாவுல வாழறதை நான் தப்புன்னு தான் சொல்வேன்." என்றான்.
“முடியலைங்க… எங்க வீட்ல அப்பா அம்மா கூட இருக்க முடியலை. அவங்க நினைச்சிருந்தா தன் பொண்ணுக்கு இவ்ளோ கஷ்டம் தந்தவனை பிடிச்சி ஜெயில்ல போட்டிருக்கலாம். ஆனா போலீஸ் கம்பிளைன் கொடுக்கலையே. மூடி மறைச்சிட்டாங்க.
அப்பவே கேஸ் பைல் பண்ணிருந்தா ஆதாரம் கிடைச்சிருக்கும். டி.என்.ஏ ரிப்போர்ட் உடம்புல ஏற்பட்ட காயங்கள், எல்லாம் கோர்ட்ல காட்டி தண்டனை வாங்கி தந்திருப்பேன்.” என்றாள்.
சரவணனோ ”எந்த அப்பா அம்மாவும் பொண்ணு கெட்டுட்டானு தெரிந்து கோர்ட் கேஸ்னு கூடுதலா அசிங்கப்படுத்த மாட்டாங்க. முடிந்தளவு மூடி மறைச்சு அந்த பொண்ணுக கு கல்யாணம் பண்ணி வைக்க தான் யோசிப்பாங்க. என்னை பொறுத்தவரை உங்க அம்மா அப்பா மேல எந்த தப்பும் இல்லை.” என்றான் சரவணன்.
“நீங்க என்ன படகச்சிருக்கிங்க?” என்றாள்.
சரவணனோ “இது எதுக்கு இப்ப?” என்று கேட்டாலும், “பிளஸ்டூ மட்டும் தாங்க. எங்கப்பா படிக்க வச்சார். காலேஜ் போக நான் தான் மறுத்துட்டேன். ஏன் கேட்கறிங்க” என்றான்.
“இல்லை… அங்க பேசிட்டு வந்திங்களே.. :அந்த பொண்ணால உன்னை கொல்ல முடியாதுன்னு இல்லை. அந்த பொண்ணுக்கு மனிதாபிமானம் இருக்கு. நேத்து வரை கொல்ல நினைச்சவளுக்கு, நீயும் குடும்பம் அம்மா, தங்கைனு வாழ்வதை பார்த்து என்ன முடிவெடுக்கனு தெரியலை.
கொலையெல்லாம் முன்னபின்ன பண்ணினவ இல்லையே. உன்னை தண்டிக்காததால அவ தோற்றுட்டானு அர்த்தமில்லை.
என்னை பொறுத்தவரை அந்த பொண்ணு ஜெயிச்சிட்டா. அவ நிலையை கடந்து சமூகத்தோட வாழ போராடுறா பாரு. உன்னை கோர்ட் நீதிபதி உலகத்துக்கு முன்ன கெட்டவனா காட்டி போராடாம இருக்கலாம். ஆனா உனக்கு உலகமா இருந்தவங்க முன்னாடி தான் அவளுக்காக அவ நியாயம் பேசியிருக்கா. உங்க அம்மா வீட்டுக்குள்ள கூட செருப்பு போட்டு இருந்தவங்க, தரையில உட்கார்ந்து அழறாங்க, உன் தங்கை உன்னை பார்த்து அரண்டு மிரண்டு இருக்கா பாரு. ஆக… உனக்கான உலகத்துல உன் குணத்தை துகிலுரிச்சி காட்டிட்டா. உன் உயிரை பறிக்காம போனதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லு. நீ வன்முறை செய்து, அவ கூப்பிட்டு வராத கடவுள், உனக்காக இன்னமும் நல்லது பண்ணறார் பாரு’ அது மனசுல ஓடிட்டே இருக்கவும் கேட்டேன்.
நாய் கடிக்குன்னு திரும்ப கடிக்க முடியலை சரவணா. என்னவோ... நான் வளர்ந்த முறையா இருக்கலாம். ஆத்திரம் வருது... அழுகை வருது. ரஞ்சித்துக்கு இன்னமும் கூட ஏதாவது தண்டிக்கணும்னு தோனுது. ஆனா... என்னால கொல்ல முடியலை. சட்டரீதியா தண்டனை வாங்கி தர நினைச்சேன். ஆதாரம் எதுவும் இல்லை. மறுபடியும் ஆதாரம் திரட்டவா முடியும்? நிறைய செய்தியை வாசிக்கறப்ப, வன்புணர்வு ஆளான பொண்ணு செத்துட்டதா படிச்சிருக்கேன். அந்த வன்புணர்வு செய்தவன் ஹாயா சுத்துவான், ஏன் மீடியா முன்ன பேட்டி கூட கொடுப்பான். ஆனா அந்த பொண்ணுங்கள்ல சிலர் தற்கொலை செய்துக்கிட்டதா வாசித்திருக்கேன். அப்ப எல்லாம் ஏன் அந்த இன்சிடெண்டை செய்தவனே வாழறான். கற்பிழந்தா பொண்ணுங்க வாழக்கூடாதா? அப்படின்னு தோனும். அதனால் வாழறதுக்கு மைண்ட் செட் பண்ணிட்டேன்.
ரஞ்சித்துக்கு சட்ட ரீதியா தண்டனை கொடுக்க முடியலை. அந்த வருத்தம் தான் இருக்கு. ஆனா பாருங்க… ஒரு வாரத்துக்கு முன்ன வந்த நியூஸ் பேப்பர்ல ஒரு குழந்தையை கெடுத்து, எரிச்சி சாகடிச்சவன், அவன் அம்மாவை கூட கொன்னுயிருக்கான். ஆனாலும் இந்த சட்டம் தண்டிக்கலை. அப்படி பார்த்தா ரஞ்சித் கேஸ் எல்லாம் சட்டத்துக்கு முன்ன போனாலும் அவன் இருக்கற வசதிக்கு தப்பிச்சிடுவான்.
ஆனா நான் இக்கட்டுல கூப்பிட்டு வராத கடவுளா இருந்தாலும், அதே கடவுளிடம் மாட்டுவான். தெய்வம் நின்னு கொல்லும். என்னடா இந்த மாதிரி அனுபவம் இருந்தும் கடவுள் மேல நம்பிக்கை வச்சி பேசறாளேனு பார்க்கறிங்களா? என்னை இந்த நிலையிலும் வழிநடத்த சில நட்பை தந்திருக்கார்.
நீங்க கலாக்கா இரண்டு பேரை தான் சொல்லறேன். அந்த நிலையில் ஹாஸ்பிடலில் சேர்த்து பிழைக்க வச்சது கடவுள் அனுகிரகம் தானே.
எனக்கு என் அப்பா மேல கோபம் இருந்து வீட்டை விட்டு வெளிவந்ததும், கடவுளா தானே உங்க இரண்டு பேரை அனுப்பினார்.
இந்த இடைப்பட்ட நாள்ல ஒன்னு மட்டும் புரியுது. நான் மனதால ரொம்ப ஸ்ட்ராங்கா மாறியிருக்கேன். இன்னிக்கு ரஞ்சித் அம்மா முன்ன அவனை திட்டிட்டு வந்ததில் லேசா நிம்மதி வந்திடுச்சு." என்றாள்.
அங்கிருந்த பேருந்து நிறுத்ததில், நிறைய பேருந்து நின்று கடந்து சென்றது.
இவர்கள் ஒன்றரை மணி நேரமாக பேசிமுடிக்க, ஆட்டோ வந்து “எங்கம்மா போகணும்?” என்று கேட்டது.
நேரத்தை பார்த்து அலுவலகம் செல்வோமா? என்று பார்வையிட, மணி இரண்டு காட்டவும், வயிற்றை தொட்டு, “பசிக்கு… ஏதாவது ஹோட்டல்ல சாப்பிட போகலாமா?” என்று கேட்டாள்.
சரவணன் காலையிலியே டீயை தவிர்த்து எதுவும் சாப்பிடாததால் சரியென்றான்.
இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள். பாரதி ஹோட்டல் பெயரை கூறி அங்கே செல்ல கூறினாள்.
பாரதி மனதில் வெறிநாய் கடித்து குதறியிருக்க, அதற்கு ஊசிப்போட்ட மனநிலையில் தான் அமர்ந்தது வந்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Well said bharathi. Ranjit deserve this punishment. Well narrated sis. While reading very hard to read and goosebumps came sis. Becz it happening in and around our world. Like bharathi every women should face this society to prove them. Excellent sis.
Super sis nice epi 👌😍 bharadhi soft character kandipa avalala kola panna mudiyadhu nu nenachen pa aana eppo ava pannadhu romba sari saravanan romba super ah pesinan semma eni endha kutra unarchiye avanuku periya dhandanai😐
I love the way how u connect recent topics. For law it doesn’t need truth it just need facts and proof .. but yes karma will do it course of action
Impressive ud