அத்தியாயம்-23
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சரவணன் கையிலிருந்த பணம் கற்பூரமாய் கரைவதற்குள் வீடு தேடும் முனைப்பில், அடுத்த நாளே தேடினான். அனிதா பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு 1BHK என்று இருந்ததை பார்த்தான். முன்பு 1HK மட்டுமே.
ஹாலும் கிச்சனும் மட்டும் இருக்க, விமலா டிவி பார்க்க அனிதா அதே ஹாலில் ஓரமாய் படிப்பாள். கிச்சன் கூட ஒரு ஆள் புழங்கும் அளவிற்கு இருக்கும். பாத்ரூம் கூட வெளியே வந்து செல்ல வேண்டும். அந்த ஆனந்தராஜுக்கு அதான் வசதியாக பின் வாசல் பக்கம் வந்து வேவு பார்த்தான்.
இன்று ஒர் அறை ஹால் கிச்சன் ரூமிலேயே அட்டாச் பாத்ரூம் என்று பார்த்தான். என்ன புது வீடு எல்லாம் இல்லை. பழைய வீடு. அதனால் வாடகை மூவாயிரத்தி ஐநூறு என்றனர்.
வாடகை முன்பு இரண்டாயிரம். இங்கே கூடுதலாக ஆயிரத்தி ஐநூறு கொடுத்து, மொத்தமாய் மூவாயிரத்தி ஐநூறு என்றாலும் எப்படி வாடகை தரப்போகின்றேன் என்ற மலைப்புடன் மூன்று மாத வாடகையின் முன் பணமாக பத்தாயிரம் வேறு கொடுத்து குடிப்புகுந்தனர்.
அனிதா மூலமாக விமலா பாரதியை வீட்டுக்கு அழைத்தாள்.
“இல்லை ஆன்ட்டி.. வேலை அதிகம். அதோட அம்மா கொஞ்சம் லேட்டான கூட பயப்படறாங்க. கொஞ்ச நாள் போகட்டும்” என்று கூறிவிட்டாள்.
சரவணன் இருக்கும் போது விமலா அதை வேறு கூறி வருத்தப்பட்டார்.
அவனோ “பணம் கொடுத்து உதவியிருக்கு. ரொம்ப எதிர்பார்க்காதம்மா” என்று முடித்து விட்டு வேலைக்கு சென்று விட்டான்.
பாரதி தந்த பணம் இன்னமும் உள்ளதே. தந்தை பிளஸ் டூ முடிந்ததும் கல்லூரிக்கு செல்ல கூறினார். சரவணனோ டிப்ளமோ கோர்ஸ் சோர்ந்துவிட்டான்.
அவனது வேலையே தந்தைக்கு பிறகு மகனுக்கு என்று பாவம் பார்த்து கொடுக்கப்பட்டது. அதற்கே சிலபல பணத்தை தந்தையின் இழப்பீடு தொகையிலிருந்து லஞ்சமாய் கொடுக்கப்பட்டு வேலை கிடைக்கப்பெற்றது. தற்போது ஆறு மாதத்திற்கும் மேலாக சொல்லப் போனால் ஒரு வருடம் இருக்கலாம், குப்பை அள்ளும் துப்புரவு பணியை பார்த்துவிட்டான்.
அதுக்கூட பகுதி நேர துப்புரவு பணியாளர் வேலையாக தான் பார்த்தான். அதற்கான ஊதியம் மாதம் 4000 வாங்கியிருந்தான். அவன் தந்தை இருந்த போது அவர் ஊதியம் வேறு தான். அவர் துப்புரவு தொழிலாளரில் அரசாங்கத்தின் தொடர்புடையதில் இருந்தார். தனியார் நடத்தும் துப்புரவு தொழிலாளி என்றால் இந்நேரம் சரவணனுக்கு சலுகைகள் கூட குறைந்திருக்கும்.
இவன் பகுதி நேரம் என்பதால்… இந்த குறைந்த பணம். ஆனாலும் போதாதென்று தனிப்பட்டு ஏதாவது பிளம்பர் வேலை, க்ளீனிங் வேலை, பாத்ரூம் அடைப்பு என்று சின்ன சின்ன வேலையை பார்த்து தினகூலியாக முந்நூறு நானுறு சம்பாதிப்பான்.
அப்படி பார்த்தாலும் மொத்தம் 5000 தான் சரவணன் கையில் வாங்குவான். என்ன முன்பு இதுவே போதுமென்ற மிதப்பு அசட்டுத்தனம், விளையாட்டு புத்தி இதெல்லாம் இருந்தது. அனிதாவுக்கு அவள் கேட்ட பார்க்கர் பேனா கூட உன்னால வாங்கி தர முடியாது என்ற அன்னையின் வசவால் தான் கொஞ்சம் விளையாட்டு தனத்தை மூட்டை கட்டினான்.
அதிலும் பாரதியை கண்டப்பின், அவன் வாழ்க்கை எதை நோக்கி நகர்கின்றதென்று அவனே அறியவில்லை.
இதோ அவள் தந்த பணத்தோ வைத்து இங்கே பேரம் பேச வந்து நின்றுவிட்டான். முன்னரே ஒரு பெரிய கை கூறியது தான். பணத்தை வை, குப்பை அள்ளுற பணியை விட்டு அடுத்த போஸ்டிங்கு உன்னை மாத்தறேன். ஆனா 40 ஆயிரம் வேண்டும். ஏற்பாடு பண்ணிட்டு சொல்லு” என்று கூறியிருந்தார்.
சரவணனிடம் முன்பு ஏது அவ்வளவு பணம். வருவது எல்லாம் வாயுக்கும் வயிற்றுக்கும் சரியாக இருக்கும். ஏதோ விமலாவும் துப்புரவு வேலை சிலதை தவிர்த்துவிட்டு, வீட்டு வேலைக்கு சென்றிடுவார்.
அதனால் வீட்டின் நிதிநிலை ஏதோ சமபங்காய் ஓடியது.
இன்றும் அப்படி தான் அப்பார்ட்மெண்ட் வாசலை பெருக்கி கோலமிட்டு, அங்கே மூன்று வீட்டில் பாத்திரம் கழுவி, துணி துவைத்து வீட்டை சுத்தம் செய்து வருவார். மாத சம்பளம் ஐயாயிரம் விதமாக பதினைந்தாயிரம் வரை சம்பாதிக்கும் பெண் என்றாலும், மூன்று பேரின் வயிற்றை நிறைத்து இருக்க இடம், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது, வாடகை என்று அதற்கே பணம் மழையில் கசியும் உப்பாய் கரைந்து போகும்.
இன்று பாரதி தந்த பணத்தில் 40 ஆயிரம் நீட்டி, “சார் ஏமாத்திட மாட்டிங்களே? உங்களை நம்பி தான் தர்றேன்.” என்று கண்ணில் பணத்தை ஒற்றி தந்தான்.
“தம்பி உனக்கு முன்ன எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனா சில்லரையை எவன் சிதற விடறானோ அவனுக்கு தான் எந்த டிபார்ட்மெண்டும் வளையும். இந்தா கேட்ட பணத்தை தந்துட்ட. நம்ம கணேஷன் பையன் தானே. அதெல்லாம் ஏமாத்தாம வேலையை வாங்கி தர்றேன். உங்கப்பா எல்லாம் எத்தனை வருஷம் இதுல இருந்தார். ஆனா நீ இப்ப வந்திருக்க, ஒரு மூனு மாசமாவது ஆகும் மினிமம் ஆகும். மேக்ஸிமம் எவ்வளவு மாசமோ சும்மா… காசு கொடுத்துட்டனு ஏதாவது கேட்காத” என்று கூறிவிட்டார்.
ஆக்க பொறுத்தவனுக்கு ஆறவும் பொறுக்க வேண்டும். வேறு வழியில்லை. இந்த பணத்தை தரகூட முடியாது என்ற கனவில் இருந்தவன். இன்று முயன்று விட்டான்.
தந்தை இறந்ததால் சிலரிடம் கடன் முப்பதாயிரத்துக்கு வேறு வேறு ஆளிடம் 3000 5000 என்ற ரீதியில் 1000 6000 என்றெல்லாம் சில்லரையாக வாங்கியிருக்க, அதையும் அடைத்திடும் முடிவில் தந்தான். அதுவே முப்பதாயிரத்தை தொட்டது. கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக சரவணன் பாரதி பணத்தை தண்ணீராக செலவழித்தான்.
விமலா வேறு அந்த புள்ள கொடுத்த பணத்தை இன்னாடா செய்யத?” என்று தினம் தினம் கேட்க முப்பதாயிரத்துக்கு இருந்த கடனை அடைச்சிட்டு, வீட்டுக்கு முன்பணம் தந்தது, அதோட வேலைக்கு நாற்பதாயிரம் தந்துட்டேன். இந்தா… பத்தாயிரம் இது உன்கிட்ட இருக்கட்டும். இது என்கிட்ட இருக்கட்டும் என்று பத்தாயிரம் மட்டும் அக்கவுண்டில் போட்டுக் கொண்டான்.
“ஏன்டா.. அடுத்து வீட்டு வாடகைக்கே உன் சம்பளம் போகுமே. என் சம்பளம் வீட்டை பார்த்துக்க சரியா இருக்கும். அந்த புள்ளைக்கு திரும்ப எப்படி பணத்தை தருவ?” என்றார்.
“நான் பணத்தை தரலைன்னாலும் பாரதி கேட்காது” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினான்.
விமலாவோ பையன் மீதி உள்ள காதலில் அவள் கேட்க மாட்டாளென்று நினைத்து கொண்டார்.
சரவணனுக்கோ ‘பாரதியை ஹாஸ்பிடல்ல சேர்த்து இங்க தனியா தங்கி கூட உதவியதை எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் தந்துட்டு போயிட்டா. நிச்சயம் திருப்பி தந்தா கூட வாங்கமாட்டா. எல்லாம் விளையாட்டுக்கு தான் நான் பெரிய ஆளா வந்து தருவேன்னு சொன்னது’ என்று தான் நினைத்தான்.
அதை தவிர அவனால் வேறு நினைக்க முடியவில்லை. அன்னை விமலா என்னவென்றால் பாரதி காதலிக்கின்றதாக நினைக்கின்றனர். அவன் இருந்த ஏரியாவில் கூட பாரதியும் சரவணனும் காதலர்கள். அவளுக்கு ஒன்று என்றால் அவன் வட்டிகடை ஆனந்தராஜிடமே, சிங்க முகத்தை காட்டியதாக பேசிக்கொண்டார்கள்.
யார் எப்படி பேசினால் என்ன? அவன் மனம் என்ன பேசுகின்றது என்று இமை மூடி யோசித்தான்.
லேசான நப்பாசை துளிர்விட்டதாக, உண்மையை பறைச்சாற்றியது.
பாரதியை அவன் விரும்புவதாக… அதெப்படி என்று ஆடிப்போனான்.
நிச்சயம் பாரதிக்கும் தனக்கும் ஏணி வைத்தால் கூட சமமாகாது. ஆனால் ஏன் இந்த விபரீத ஆசை முளைத்தது என்று அவனுக்கே தெரியவில்லை. இந்த எண்ணம் ஏன் உதித்தது என்று யோசித்தான்.
தன்னை அவள் குப்பை அள்ளும் தெழிலாளி என்றாலும் சரிக்கு சமமாக அவள் சாப்பிடும் ஹோட்டலுக்கு அழைத்து சென்றதா?
தன் தங்கையின் முகம் பார்த்து மனம் சரியில்லை என்று கூறி தனக்கு சுட்டிக்காட்டியதா?
என்ன தான் கற்பிழந்தவளாக குப்பை தொட்டியில் தனக்கு அவள் அறிமுகமானாலும், அவன் பார்வைக்கு குப்பையில் கிடைத்த கோமேதகம் போல *குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?* என்பதாக தான் பாரதி இருந்தாள். இதெல்லாம் காதல் என்ற வட்டத்தில் சரவணன் முன்பு எடுத்துக் கொள்ளவில்லை.
பாரதி பணத்தை தரும் போது தான் அவனுக்கு கோபம் உண்டானது. உரிமையானவளிடம் வரும் கோபம். தனக்கானவள் என்று எண்ணுபவளிடம் வரும் கோபம். அதுயேன் பாரதி மீது தனக்கு தோன்றுகின்றது என்று அன்று தான் அதிர்ந்துவிட்டான்.
அடுத்த நிமிடம் பாரதியை மனம் விரும்புவதை உணர்ந்தான்.
ஏன் காதலிக்க கூடாதா.? யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டுமென்றாலும் காதலிக்கலாம். ஆனால் ஏற்றுக்க வேண்டியே ஆகவேண்டும் என்று கருத்தை திணிப்பது தான் அபத்தம்.
சரவணனுக்கு எப்படியும் அந்த திணிப்பை பாரதிக்கு வழங்கமாட்டான்.
பாரதி… இப்படியொருத்தியை விரும்புவோம் என்று சரவணன் கனவிலும் நினைத்ததில்லை.
ஆனால் நேசிக்க துவங்கிவிட்டான். அதற்காக பாரதியிடம் காதலை யாசிக்கவும் கூடாதென்ற வைராக்கிம் இருந்தது. ஏனெனில் பாரதிக்கும் அவனுக்கும் எந்த நிலையில் கசப்பான சம்பவத்தின் அடிப்படையில் தான் அறிமுகம். அதை தாண்டி ஏதாவது குப்பை அள்ளும் சமயம் தன்னை கண்டிருந்தாள் அவளை காதலித்திருப்போமா? ஏதோ அவளை அழகான பெண் கடந்து போகின்றாள்று ஆசையாக வயதுக்கு ஏற்ப ரசித்திருப்பான் அந்நிகழ்வு மட்டுமே சாத்தியமாகியிருக்கும்.
முதலில் இவன் ஆசையை தெரிவித்தால் பாரதி ஏற்பாளா? உதவி செய்ததற்கு என்னையே கேட்கின்றாயா? நீயும் ஆம்பள புத்திய காட்டற சரவணா? இதை நான் எதிர்பார்க்கலை. இதை அவள் உதட்டிலிருந்து எதிர்பார்க்கலாம்.
அதை தவிர….
இவனை ஏற்கும் முடிவையெல்லாம் அவள் ஏற்பதற்கு அவளுக்கென்ன பைத்தியமா?
மகனும் பாரதியும் ஏதோ பிரச்சனையால் கோபத்தில் இருப்பதாக நினைத்து, “ஏன்டி அனிதா உங்க அண்ணா ஏன்டி இப்படி இருக்கு.
அவனவன் அம்சமா ஒரு பொண்ணை பார்த்தா, அப்பா அம்மா பேச்சை கூட கேட்காம இழுத்துக்குனு போய் கண்ணாலம் கட்டிக்கறானுங்க.
இவன் ஏன்டி மகாலட்சுமி மாதிரி பொண்ணு கிடச்சியும் அதுகிட்ட உற்றுனு மூஞ்சை காட்டறான். அந்த பொண்ணு இருக்கற வசதிக்கு, வேலைக்கு, உன் அண்ணன் எல்லாம் அதிகம் தெரியுமா?” என்று மகளிடம் கேட்க, சரவணன் அந்நேரம் அங்கு தான் வெளியே இருந்தான். அது தெரியாமல் அவன் சென்றுவிட்டதாக எண்ணி விமலா கிச்சனிலிருந்து இவ்வாறு பேசினார்.
“ம்மா.. அனிதாகிட்ட இன்னா பேசற? பிளஸ் டூ படிக்கிது அது. அதுகிட்ட போய் காதலிக்கறதை பத்தி பேசற. வூட்டை வுட்டு இழுத்துக்கிட்டு வந்து பெத்தவங்களை மதிக்காம கல்யாணம் பண்ணா என்னனு சொல்லற.
அனிதா வயசு பொண்ணு… இதெல்லாம் கேட்டு எப்படி வளரும். அம்மா-ன்னா ஒழுக்கமா வளர்க்கணும். நீயே அத்தாண்ட இப்படி பேசினா பிறவு எவனாவது வந்தா அது காதல்னு ஓடிப்போகட்டுமா?” என்று கேள்வி எழுப்பினான்.
இங்க தான் இருக்கானா?’ என்று வார்த்தை விட்ட பிறகு விமலா திருதிருவென விழித்தார்.
“அதில்லைடா” என்று ஏதோகூற வர, “முதல்ல அனிதாவுக்கு என்னை மாதிரி ஒருத்தனை நீ கட்டி வைப்பியா?
பாரதி அம்மா அப்பா நிலைமையில இருந்து யோசி. குப்பை அள்ளுறவன், பாரதி ஐடில வேலை பார்க்குது. மாசம் நாப்பதாயிரத்துக்கு மேல வாங்குது. நான் படிக்காதவன், என் டிரஸை பார்த்தியா பரதேசி மாதிரி அழுக்கா. அதுல கூட சில டிரஸ் யாராவது கொடுத்த டிரஸ். நாமளா காசு தந்து எத்தனை டிரஸ் வாங்கியிருப்போம் சொல்லேன் பார்க்கலாம்.
உன் மரமண்டையில எப்படி எங்களை ஜோடி போட்டு பார்த்த? பாரதி எனக்கு உதவி தான் செய்யுது புரிதா” என்று திட்டினான்.
“இல்லைடா… ஒரு லட்சம் தந்துச்சே. அதெப்படி நல்லா பழகினவங்களே பத்து பைசா கேட்காம தரமாட்டாங்க. அது உனக்கு கேட்காமலே லட்ச ரூபாவை தந்துச்சே” என்றார்.
“அதெல்லாம் அப்படி தான் தரும். நானும் அதுவும் காதலிக்கலை. சும்மா ஏதாவது நீயா லூசாட்டும் பேசாத. முக்கியமா அனிதாகிட்ட பேசாத. அது படிக்கற புள்ள. என்னை மாதிரி உன்னை மாதிரி இல்லை. அது நல்லா படிச்சு நல்லா வரணும். அது மனசுல கண்டதையும் விதைக்காத. தேவையில்லாததை பேசாத.” என்றவன் அனிதாவிடம், “அனிதா… நல்லா படிக்கணும். காலேஜி போனோம். நீ இன்னா படிக்கறியோ அத்த படிச்சு பாரதி மாதிரி வேலைக்கு போகணும் அதுவரை எந்த கன்றாவி பேச்சையும் தலைக்கு ஏத்திக்க கூடாது. சரிய்யா” என்றான்
அதட்டலாய்.
அனிதாவோ வாய் பசை போட்டு ஒட்டியது போல, வாசலை ஏறிட்டாள். அங்கே பாரதியும் மணிமேகலையும் பழங்களை வைத்து, வீட்டினுள் நுழைய அடியெடுத்து சிலையாக நின்றியிருந்தனர்.
விமலா சரவணன் பேசியதை கேட்டதற்கான அறிகுறியாய், மணிமேகலை முகம் மகளை பார்க்க அவளுமே அன்னையை கண்டு திகைத்திருந்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 23)
நேசிக்கத் துவங்கி விட்டான்,
அதற்காக பாரதியிடம் காதலை யாசிக்க கூடாது என்கிற வைராக்கியம் சிறந்தது தான். “உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்….
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்…”
சரவணாவோட வைராக்கியம் பிடிச்சிருக்கு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Saravana super. U told the truth. But bharathi will accept u? Sema twist. Intresting sis.
Interesting
Practical ah pesitta nee. Paapom yenna aaguthunu
super saravana virumbura aana atha ava kitta solli ketu vanga kudathunu ninaikira kadhala good thought neenga pesinatha bharathi avanga amma vum ketutanga aduthu ena nadakum ethuku thedirnu bharathi inga vantha therilaye
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அருமை
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍