அத்தியாயம்-8
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பாரதியின் அலுவலகத்தில் அவளது தாய் தந்தை மதியம் போல வந்திருந்தனர்.
“உன் பிரெண்ட் வீட்டுக்கு போனேன். நீ அங்க அவளோட தங்கலையாமே. எங்கடி இருக்க?” என்று மணிமேகலை கேட்டார்.
சௌந்திரஜனோ “ஹாஸ்டலில் தங்கியிருக்கியா?” என்று அதட்டினார்.
“இது என்னோட ஆபிஸ். இங்க வந்து உங்களோட வீரத்தை காட்டாதிங்க. என் கூட எப்ப துணையா வந்து நிற்கலையோ. இப்ப மட்டும் நான் எங்க தங்கியிருந்தா உங்களுக்கு என்ன?” என்று வெடித்தாள்.
“என்னடி… வேலைக்கு போற திமிரா.
அன்றைக்கு பிரஷாந்த் எதிர்பாராத விதமா வந்துட்டார். அதனால் கல்யாணம் தடையானது. அடுத்து நல்லவனா பார்த்து முடிக்கலாம்னா நீ பாட்டுக்கு வீம்பு பண்ணிட்டு வெளியே வந்துட்ட. சரி வீட்லயிருந்தா தான் எங்களோட இருந்து மனசுல இருக்கற ரணம் ஆறலைனு. உன் பிரெண்ட் வீட்ல இருந்தாலாவது நல்ல மனநிலையில் மாறுவனு பார்த்தா. உன் பிரெண்ட் எல்லோரிடமும் நாசூக்கா கேட்டாலும் அவ இங்க வரலையேனு சொல்லறாங்க.
அப்படியெங்க இருக்க?” என்று எதிரெதிரே கேட்டதும், “எனக்கு நீங்க உதவலை என்றதும் எனக்கு கஷ்டமாயிருக்கு. அதான் தனியா வீடு எடுத்து தங்கறேன். போலீஸ்ல போனேன். செத்து பிணமான விஷயத்துக்கு இப்ப ஏன் வந்தேன்னு அசிங்கமா திட்டி அனுப்பிட்டார் அந்த போலீஸ்.
சந்தோஷமா…. உங்க விருப்பம் போல என்னால போலீஸுக்கு போக முடியலை.” என்றவள் கண்ணில் கண்ணீர் இன்றும் எட்டி பார்த்தது.
சௌந்திரஜனுக்கு அந்நேரம் நிம்மதி படர்ந்தது.
“சரி என்னமோ வீட்டுக்கு வா.” என்று மணிமேகலை கூப்பிட, மறுப்பாய் தலையசைத்து, “எனக்கு எந்தளவு என்னை வன்புணர்வு செய்த ரஞ்சித் மேல கோபம் இருக்கோ, அதுல கால் வாசி உங்க மேலயும் கோபமிருக்கு.
ரஞ்சித்துக்கு ஏதாவது தண்டனை கிடைச்சா தான் வீட்டுக்கு வருவேன்” என்று கூறினாள்.
“அவன் தான் எங்கயும் இல்லைன்னு போலீஸ் சொன்னாரே. இதுல.. இப்ப அவனுக்கு எப்படி தண்டனை கிடைக்கும்? சும்மா.. ஏதாவது உளறாம வீட்டுக்கு வா. உனக்கு துபாய் மாப்பிள்ளையை பார்த்துயிருக்கு” என்றார்.
“பச்... எனக்கு எவனும் வேண்டாம். நீங்க கிளம்புங்க.” என்று எழுந்தாள்.
பாரதிக்கு ரஞ்சித் மட்டும் பார்வையில் பட்டால், கொல்லும் அளவிற்கு வெறியிருக்க, தாய் தந்தையுடனான நெருக்கம் தள்ளி வைப்பதே நல்லதென்றா முடிவெடுத்தாள்.
அவளுக்கு போலீஸ், புகார், வழக்கு, நீதிபதி, தண்டனை என்றதை தாண்டி, அவளாக தண்டனை தர முடிவெடுத்தாள்.
அலுவலகத்தின் பணிக்கு செல்லும் மகளின் நிலையை கண்டு சௌந்திராஜன் “அவ மனசளவில் தேறியிருக்கா மேகலை.. என்ன நம்மளிடம் வர யோசிக்கறா. எப்படியும் அவ எங்கயிருக்கானு பார்த்து மெதுவா பேசி பழகி அவ கோபத்தை தணிப்போம். இப்ப வீட்டுக்கு போவோம்.
நல்ல வேலையில் இருக்கா, நல்ல சம்பளம் இருக்கு, நல்ல இடமா தான் தேர்ந்தெடுத்து இருப்பா.” என்று சமாதானம் செய்து நடையிட்டனர்.
பாரதிக்கு தனியாக அவள் கேபீன் வந்து, இந்த ரஞ்சித்தை கண்டுபிடிச்சா கொன்னுடலாம். எங்க போய் தொலைந்திருப்பான்?’ என்று கொலைவெறியில் கிடந்தாள்.
இரவு வீட்டிற்கு வந்தப்பொழுது, தோசை மாவை கையோடு வாங்கி வந்ததால், வைத்துவிட்டு முகம் கைகால் அலம்ப சென்றாள்.
பக்கத்து வீட்டில் சரவணனின் தாயார் குரல் கேட்டது. “உங்கண்ணாவுக்கு எதுக்கு இந்த வேலை. ஏற்கனவே பார்க்கற வேலையையே வேண்டாம். வேற வேலைக்கு கூட போக சொல்லிட்டேன்.
என்னம்மோ அவன் முன்னேற்றத்தை நான் தான் கெடுத்தேன்னு அந்த வேலையை கட்டியே திரியறான்.
உங்கப்பா செத்துப்போனப்ப கோபத்துல சொன்னேன். அந்த மனுஷன் குப்பை வண்டி ஓட்டி, சாக்கடையை அள்ளி படிக்க வைக்க நினைச்சார். கூமுட்டையா படிக்காம தறுதலையா சுத்துறதா திட்டினேன். அதுக்கு பழிவாங்கறியாடா?” என்று அழுவது பாரதி வீட்டில் நன்றாக கேட்டது.
பாரதிக்கு ‘அவர் நல்லவரா தானே இருக்கார். எதுக்கு இப்படி கத்தறாங்க.’ என்று அவளாக தோசை சுட்டு இட்லி பொடி வைத்து விழுங்கினாள்.
அனிதாவோ “அம்மா… நான் படிக்கவா வேண்டாமா? மார்க் எடுனு அழுவற. இப்படி மாறி மாறி கத்தினா புக்கை மூடி வச்சிடுவேன்.
என் கூட படித்கற பிள்ளைங்க எல்லாம் படிக்க அவங்க அவங்க அப்பா அம்மா நோட்ஸ் எல்லாம் வாங்கி தர்றாங்க. நான் கடன் வாங்கிட்டு வந்து படிக்கறேன். இன்னிக்குள்ள இந்த பாடத்தை படிச்சிட்டு தர்றதா சொல்லியிருக்கேன். இப்ப சொல்லுங்க? படிக்கவா வேண்டாமா?” என்றதும் தான், “இவயொருத்தி… படிக்கறதா சொல்லி சொல்லியே இவனை ஒரு குறை சொல்ல விடமாட்டேங்கறா.” என்று முனங்கி செல்லவும், சரவணன், கட்டிலை எடுத்து விரித்தபடி சாப்பிடாமல் படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் அனிதா பள்ளிக்கூடம் கிளம்பும் முன் வாசலை கூட்ட, பாரதியும் வாசல் கூட்டினாள்.
அனிதா பாரதி இருவரும் ஒரு நேரத்தில் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர, பக்கத்து வீட்டு பெண் என்ற காரணத்திற்காக சிநேகமாய் சிரித்தாள் பாரதி.
அனிதாவோ பதிலுக்கு புன்னகைத்து திரும்ப, “உங்க வீட்ல ரொம்ப சத்தமா இருக்கு. உங்கண்ணா பொறுப்பா வேலைக்கு போறாரே. பின்ன ஏன் ஆன்ட்டி திட்டறாங்க” என்று வினாக் கேட்டதும் அனிதா பாரதியை பார்த்து முகம் வாடினாள்.
”அச்சோ… ஊர் கதை கேட்க ஆவலா வந்தேன்னு நினைக்காத. உங்கண்ணா எனக்கு உதவியிருக்கார். அந்த நன்றியை மறக்க மாட்டேன். அவர் திட்டு வாங்கவும் தெரிந்துக்க கேட்டேன். அவ்ளோ தான்” என்று கூறவும், “எங்கப்பா தான் குப்பை வண்டி ஓட்டிட்டு இருந்தார். சாக்கடையில் அடைப்பு எடுத்தா பணம் தர்றதா சொல்லவும் அடிக்கடி அடைப்பை எடுப்பார்.
கடைசியா குடிச்சிட்டு போனவர் செத்துட்டார்.
அம்மாவுக்கு கஷ்டமாபோச்சு.
அதுவரை அண்ணா ஊர்சுத்துமே தவிர பொறுப்பாலாம் இருக்காது.
அப்பா செத்ததும் குற்றவுணர்வுல, அப்பா வேலைக்கே வந்துடுச்சு. அப்ப கூட சாக்கடை வேலைக்கு போனு அம்மா சொல்லலை.
ஆனா நேத்து அண்ண அதுக்கு போயிருக்கும் போல. அது தெரிந்து அம்மா ஒரே திட்டு.
இத்தனை நாள் பேசாம முகத்தை தூக்கி வச்சிட்டு அம்மா இருந்துச்சு. நேத்து அதுவே திட்டவும் அண்ணாவுக்கு சந்தோஷமா இருக்க கேட்டுட்டு படுத்துச்சு. அம்மா அக்கறையா தானே சொல்லுதுன்னு. எனக்கு தான் எரிச்சலா இருக்கவும் வாயை மூட சொன்னேன்.
எங்க வூட்ல நான் படிக்கணும்னு சொன்னா மட்டும் கப்சிப்னு மாறிடுவாங்க. வூட்ல என் மேல அம்புட்டு எதிர்பார்ப்பு.
காலேஜ் எல்லாம் படிக்கறேனோ இல்லையோ நல்ல மார்க் எடுத்துடுனு சொல்லியிருக்காங்க.
அப்பா அம்மா அண்ணானு அவங்க கஷ்டத்தை நேர்ல பார்த்து வளர்றேன். படிக்காம இருக்க முடியுமா? எங்க அண்ணா.. எனக்கு பரீட்சை எழுத பார்க்கர் பேனா எல்லாம் வாங்கி தந்துச்சு. இதோட விலை 180 ரூவா” என்று எடுத்து காட்டினாள்.
பாரதி அந்த பேனாவை வாங்கி பார்த்து திருப்பி தந்துவாறு, ‘இது உங்க அண்ணா வாங்கியதா?” என்று கேட்க, ”ஆமா.” என்று கூறவும் பாரதியோ “சரி எனக்கு பஸ் வருது. எதையும் யோசிக்காம நல்லா படி. டாட்டா” என்று ஏறினாள்.
அனிதாவோ ‘இந்த அக்கா ஏன் அண்ணாவை பத்தி கேட்குது.’ என்று எண்ணினாலும் அவளது பஸ் வருகைக்கு காத்திருந்தாள்.
பாரதியோ பஸ்ஸில் ஏறியதும், ‘அந்த பார்க்கர் பேனா என்னுடையதாச்சே. இந்த பொண்ணு கைக்கு எப்படி போயிருக்கும். அவர் தான் கொடுத்திருந்தாரா? அவருக்கு எப்படி கிடைச்சது’ என்று யோசிக்க தான் குப்பையில் விழுந்த போது தனது கைப்பையும் விழுந்திட அதிலிருந்து கிடைத்திருக்குமோ?’ என்று எண்ணியவள் சரவணனை சந்தித்தப்பின் கேட்டுக் கொள்ள முடிவெடுத்தாள்.
அலுவலகம் வந்தப்பொழுது, வேலையில் கவனம் சென்றப்பின், கேன்டீனில் சாப்பிட ஆரம்பித்தாள்.
சிலர் ‘ஏன் அப்பா அம்மா சாப்பாடு கொடுத்தனுப்பலை?’ என்று கேட்டனர். அப்படியிப்படி அம்மா அவரது இல்லாத பாட்டியை பார்க்க சென்றதாக பொய் சொல்லி ஒப்பேத்தினாள்.
இனி வீட்டில் மதியம் போல சாப்பாடு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
மாலை வரவும் வீட்டுக்கு திரும்பினாள், சரவணனின் துப்புரவு தொழிலாளர்களுக்கான துணி எதிலோ பட்டு கிழிந்திருக்க, அதை ஊசி வைத்து வாசலில் அமர்ந்தபடி தைத்திருந்தான்.
பாரதியோ, “சரவணன் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்” என்றதும், தயக்கமாய் எழுந்தான்.
“என்னதுங்க” என்று நின்றதும், “காலையில் உங்க தங்கையை பஸ் ஸ்டாப்ல பார்த்தேன். சும்மா பேசினேன். அப்ப நல்லா படிக்கணும்னு நீங்க பார்க்கர் பேனா வாங்கி தந்ததா காட்டினா” என்றதும் அவசரமாய் வீட்டு கதவை அடைத்தான்.
பாரதிக்கு ஒன்றும் புரியாமல் விழிக்க, “சாரிங்க… அந்த பேனா உங்கள்து. அன்னிக்கு குப்பைத்தொட்டில மினுக்குமினுக்குனு இருந்தது. என்னதுடா தங்கமா இருக்குமோனு தான் குப்பையில வந்து எடுத்து பார்த்தேன். பேனா… அதுவும் என் தங்கச்சி கேட்ட பேனா. பொசுக்குன்னு எடுத்து சட்டை பேண்ட்ல் வச்சிட்டேன். அப்பறமா தான் அந்த குப்பைத்தொட்டில நீங்க சுயநினைவில்லாம கிடந்ததை கவனிச்சேன்.
உங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். ஆனா அந்த பேனாவை கொடுக்க மறந்துட்டேன். அதோட அந்த பேனா நான் காசு கொடுத்து வாங்கியதா அதான்ட சொல்லிட்டேன்.
பிறகு உங்களை அள்ளி எடுத்த குப்பைத்தொட்டியை தினிக்கும் பார்க்கறப்ப, அடிக்கடி உங்களை சந்திச்ச காட்சில்லாம் வரும். அப்ப தான் அன்னிக்கு நீங்க கையில சுத்திட்டு இருந்த பையும் அதுல வெளிய தெரியற மாதிரி பேனா இருந்ததே நினைவு வந்துச்சு. அச்சோ இந்த மேடத்தோட பேனாவை எடுத்து தங்கச்சியாண்ட கொடுத்துட்டேனேனு கஷ்டமா போச்சு.
இப்ப அந்த போனாவை அத்தான்ட இருந்து வாங்கினா அதுக்கு நான் அந்த பேனாவை வாங்கலைன்னு தெரிந்திடும். அதோட என்னால ஒத்த பேனாவை கூட வாங்க முடியலையேனு அசிங்கமா பூடும்.
உங்களாண்டவேண்டுமின்னா அந்த பேனாவோட பணத்தை தந்துடறேன். அதான்ட சொல்லாதிங்க” என்று கெஞ்சினான்.
பாரதி அவன் பேசியதை கேட்டாள். தங்கைக்கும் அன்னைக்கும் தெரியக்கூடாதென பயந்து பயந்து பேசியவனை கண்டு, திட்டவா தோன்றும். அதோடு அவளை கண்டெடுத்து மருத்துவமனலயில் சேர்த்துள்ளானே.
“பச் சரவணா நான் போனாவை பத்தி கேட்கலை. அதை உங்க தங்கச்சியே வச்சிக்கட்டும். என் பேனா தவிர்த்து கார்ட் போன் ஏதாவது பார்த்திங்களா?” என்று விசாரித்தாள்.
உதட்டை பிதுக்கி “இல்லிங்களே” என்றான்.
பாரதிக்கு லேசான வருத்தம் வந்தாலும், “சரி பரவாயில்லை… உயிரை காப்பாத்தி தந்ததுக்கு பெரிய மனசுங்க. அனிதாவை எல்லாம் நல்லா படிக்க வையுங்க. பன்னிரெண்டாவது படிச்சிட்டு சும்மா இல்லாம காலேஜில சேருங்க” என்று கூற, “சரிங்க” என்று தலையிட்டினான்.
அதே நேரம், “ஏன்டா… தினைக்கும் வீட்டுக்கு வெளியே இல்லை, பின் கேட்டுல படுத்துக்கற? யாரை காவல்காக்குற?” என்று சரவணனின் தாய் இலைமறையாக திட்ட, பாரதி குடிசைக்குள் பின்னடைந்து நடந்தாள். அவளது போன் கிடைத்திருக்கலாம். அதில்… ரஞ்சித்தின் இவளிடம் தவறாக நடந்ததில் சில விஷயம் ரெக்கார்ட் செய்யப்பட்டிருந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Follow me இந்த பேஜ் கீழே இருக்கு. கதை படிக்க நினைக்கறவங்க அதில் இணைந்து கூட ஆடியோ நாவல் கிண்டலில் கதை, பதிவு செய்யப்படும் இடத்தில் இணைந்து கொள்ளலாம்.
வரும் தீபாவளி முதல் *உயிரில் உறைந்தவள் நீயடி* கதை தகனபதிவு வரும்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍
Super intresting
Super interesting ippadiye bharathi thaniyave irunthuduvala next step evlo naal ippadi iruka vitruvanga ivala
Interesting