அத்தியாயம்-21
Thank you for reading this post, don't forget to subscribe!அங்கிருந்த காபி ஷாப்பில் பெரும்பாலான காதலர்கள் அருகருகே தான் உரசி அமர்ந்திருந்தனர். அதனாலோ என்னவோ சஹானா ஆதேஷ் இருவரையும், யாரும் திரும்பி பார்த்திடவில்லை.
சஹானாவிற்கே சற்று அசௌகரியம் தோன்றிட, “இங்க பாருங்க ஆதேஷ் இந்த இடுப்பை பிடிக்கற வேலை வேண்டாம் விடுங்க” என்று கூறவும், “ஃபைன் விடறேன். பட் ஒன் கண்டிஷன். உன்னோட பேசணும். எந்திரிச்சு ஓடக்கூடாது.” என்று பதில் கேள்வியை முன்வைத்தான்.
அவளோ அவன் பிடியை தளரவிட்டால் போதுமென்று தோன்ற, “இது என் போன் இதை வச்சிக்கோங்க. நான் உங்களிடம் பேசிட்டு வாங்கிக்கறேன்” என்று திட்டம் தரவும் சரியென்று போனை வாங்கி இடையை விடுவித்தான்.
வேகமாய் ஆதேஷிற்கு எதிரே அமர்ந்தாள். அதன் பின்னே ஆதேஷ் சஹானா முகத்தை தெளிவாக கண்டான். சஹானா முகமெல்லாம் முத்து முத்தாய் வேர்த்திருக்க, தண்ணீர் குவளையை எடுத்து, சில்லென்ற நீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றி, அவள் முன் நீட்டினான்.
அவனை திட்டியபடி வாங்கி பருக, பாதி உடையில் சிந்தியது. அதற்கு வேறு கள்வனாய் சிரித்து டிஸு பேப்பரை கொடுத்தான்.
“என் நேரம்” என்றவள் வாங்கி உதடு தாடை கழுத்தை துடைத்தாள்.
ஆதேஷ் அவளாக கேட்கட்டும் என்று “டூ ஹாட் வெல்வேட் காபி” என்று ஆர்டர் தந்துவிட்டு சஹானாவை கண்டு மற்ற இடத்தை ஆராய்ந்தான்.
ஹாட் வெல்வெட் காபி வந்ததும் பெருமூச்சை வெளியிட்டு “முதல்ல நீங்க அம்ரிஷ் மிருதுளாவை லைக் பண்ணறார்னு சொன்னிங்க. அதுக்கு பயந்து தான் உடனடியா நாங்க கொடைக்கானல்ல இருந்து இடத்தை காலிபண்ணியது.
உங்களுக்கு பிராப்ளம் வந்திடக்கூடாதுனு நாங்க பார்த்து டிசைட் பண்ணி இடத்துலயிருந்து கிளம்பினா, இதென்னங்க தமிழ் மென்பனியிடம் கதைக்கு கமெண்ட்ஸ் பண்ணி பேசறார்.
இங்க பாருங்க தினசரி கதைக்கு வரலை. முந்தைய இரண்டு கதைக்கும் கமெண்ட்ஸ் பண்ணி அதுல லூப் மெஸேஜா பேசிட்டு இருக்கார். பகிரங்கமா பேசறதை இந்தளவு என்றால், இன்பாக்ஸில் எந்தளவு க்ளோஸோ?
எனக்கு ஒன்னு புரியலை. அதெப்படி மிருதுளாவை அம்ரிஷும், தமிழ் மென்பனி, கால் உடைந்து போன சாக்ஷி கரெக்ட் வேதாந்த் வர்றார். ஆளாளுக்கு ஒருத்தியை நீங்களா சூஸ் பண்ணியிருக்கிங்க. நீங்க ஏதோ திட்டம் போட்டு பழகறிங்க?” என்று ஆதேஷ் முன்பு பெண்களை குற்றம் சாட்டிய அதே பாயிண்டை பேசவும் ‘வாட் எ கோஇன்சிடெண்ட். என்னை மாதிரியே யோசிக்கறா’ என சிரித்தான்.
“ஹல்லோ இங்க நான் பேசிட்டு இருக்கேன். சிரிக்கறிங்க. என்னை பார்த்தா பைத்தியக்காரியா தோனுதா?” என்று சூடாக வார்த்தை வரவும், “ஹாட் வெல்வட் காபி பெயர்ல ஹாட் இருக்கறதால ஹாட்டா பேசணுமா? சஹானா நானும் தான் உன்னோட கடலை வறுக்கறேன். அதையும் ஆட் பண்ணிக்கோ. அண்ட் ஒன் மோர் மைண்ட்ல வச்சிக்கோ. நான் தான் எங்க செட்ல உன்னை முதல்ல விரும்பறதை வெளிப்படையா ஒத்துக்கொண்டவன்.
மத்தவங்க எந்த கட்டத்துல டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணறாங்கனு எனக்கு தெரியலை.
அப்பா அம்மா இல்லாம டென்த்லயிருந்து ஹாஸ்டல்ல வளர்ந்ததால, எனக்கு இந்த நாகரிகம் டிசன்ஸி எதுவும் யாரும் சொல்லிதரலை. ஏதோ மனசுக்கு பிடிச்சி வாழணும்னு மட்டும் தான் முடிவெடுத்தவன் நான்.
அதனால முட்டிக்கொண்டு ஆரம்பிச்ச நம்ம பிரெண்ட்ஷிப்பை, லவ்ல தொடர ஆரம்பிச்சு, கல்யாணத்துல முடிக்க குறிவச்சிருக்கேன். என் எய்ம் சரியா இருந்தா நீயும் என்னை விரும்பி அக்சட் பண்ணுவ.
இன்னிக்கு நீ என்னிடம் சண்டைப்போட இங்க வரச்சொல்லியிருக்கலாம். பட் நான் கிளம்பும் போது நீயா விரும்பறதை சொல்ல கூப்பிட்டியோனு பலவித கனவோட ஆசையோட கிளம்பினேன். என் கனவு ஆசை எதுவும் நிராசையா போகவேண்டாம். அதனால தான் நீ சொல்ல எதிர்பார்த்ததை நானே சொல்லிட்டேன். உன் பதிலை மட்டும் பொறுமையா சொல்லு.
அப்பறம் தமிழ் மட்டும் மென்பனிக்கு ரூட் விடலை. அவளும் தான் ரிப்ளை பண்ணறாங்க. ஒருவேளை அவளுக்கு தமிழ் மேல காதலிக்கற ஆசையிருந்தா தடுத்திடாத. நம்ம காதல் எந்த நிலைனு எனக்கு தெரியாது. என் பிரெண்ட் லவ் மட்டுமாவது ஜெயிக்கணும்.
நானாவது டென்த்லயிருந்து ஹாஸ்டல். அவன் பிப்த்லயிருந்தே ஹாஸ்டல் லைப்ல தான் வாழறான். மென்பனி அவன் லைப்ல வந்தா நல்லாயிருக்கும்.” என்று எழுந்தான்.
சஹானாவோ திகைத்து விழிக்கவில்லை. எல்லாமே அவள் எதிர்பார்த்தது தான். என்ன பதில் தான் இன்னமும் காலதாமதம் செய்ய மனம் முடிவெடுத்தது. இத்தனை அவசரம் எதற்கென்று நிறுத்தியிருந்தாள்.
ஆதேஷ் அவளை தாண்டி நடக்க சொடக்கிட்டாள்.
ஆதேஷ் புருவம் சுருக்கி சஹானாவை காண, “ஹல்லோ 420?” என்று கூற, “வாட்?” என்று முழித்தான்.
“ஹாட் வெல்வெட் காபி ப்ரைஸ் 210rs மேன். என்னை கேட்காமலே இரண்டு ஆர்டர் தந்துட்டு குடிச்சிட்டு அப்படியே ஓடுற. 420rs பில் பே பண்ணிட்டு போ” என்று கூறவும், ஆதேஷோ வாலெட் எடுத்து 250rs வைத்தவன் “என்னோடது 210rs பேலன்ஸ் 40rs டிப்ஸ். நீ தானே இங்க பேச கூப்பிட்ட நீ குடிச்சதுக்கு நீயே பே பண்ணு” என்றவன் அவள் போனையும் அவள் கையில் திணித்தவன் அவ்விடம் விட்டு சென்றான்.
“யூ.. யூ.. லவ் சொல்லிட்டு போறவன் காதலிக்கற பொண்ணுக்காக 210rs கூட கொடுக்க மாட்டானாமா இவன். இடியட் ஸ்டுபிட்” என்று அர்ச்சித்து 200rs எடுத்து வைத்து எழுந்தாள்.
மனம் போன போக்கில் மென்பனி தமிழ் உரையாடலை எல்லாம் மீண்டும் மீண்டும் பார்த்து மென்பனியை காண சென்றாள். அப்படியொன்றும் காதல் வசனத்தில் மென்பனி தமிழ் பேசிக்கவில்லை. ஆனால் நெருக்கமானவர்கள் பேசிக்கொள்ளும் முறையாக தோற்றுவித்தது. ஏற்கனவே மென்பனியோடு சாக்ஷியை காண வேண்டுமென்று பேசி வைத்திருக்க, வேறெந்த முடிவும் எடுக்காமல் தோழியை காண மட்டும் சிந்தையில் பதித்து ஸ்கூட்டியை கிளப்பினாள்.
அவள் ஸ்கூட்டி சென்றதும் ஆதேஷ் கார் கிளம்பியது.
மென்பனியிடம் லாண்ட் மார்க் கூறி சஹானா காத்திருக்க, இருவரும் சந்தித்து சாக்ஷி வீட்டிற்கு பயணமானார்கள்.
“சாக்ஷியை பார்க்க அம்ரிஷ் வந்தாராம்” என்று மென்பனி தான் ஆரம்பித்தாள்.
“மிருதுளாவை பார்க்க வந்திருப்பார். சாக்ஷியை பார்க்க வேதாந்த் வந்திருப்பார்.” என்று பட்டென ஆதேஷிடம் பேசிய தோரணையிலேயே பதிலை தந்தாள் சஹானா.
“ம். அம்ரிஷ் மிருதுளா பத்தி என்ன திங்க் பண்ணிருக்க?” என்று மென்பனி கேட்டாள்.
“அம்ரிஷ் ஆக்டர். மேரீடாகி டிவோர்ஸ் வாங்கியிருக்கார். அவர் எந்த தாட்ஸ்ல பழகறார்னு தெரியலை. ராஜபாண்டியன் மாதிரி யோசித்தா இம்மிடியட்லி அவர் வந்து போறதை ஸ்டாப் பண்ணணும். அதை தாண்டி மனதார காதலிப்பதா சொன்னா… அதை மிருதுளா தானே முடிவெடுக்கணும்.
நாம பிரெண்ட் அவ்ளோ தான். ஒருத்தியோட பெர்சனல்ல சாதகம் பாதகம் சொல்லலாம். மத்தபடி டிஸிஷன் இது தான் எடுக்கணும்னு சொல்லமுடியாதே.” என்று சஹானா கூறினாள்.
“அப்சலூட்லி சஹானா இதே தான் நீ சொல்வனு நினைச்சேன். இதே பதில் இதுக்கும் தானா?” என்று புகைப்படத்தை காட்டினாள். வண்டியை ஓட்டியபடி இடது பக்கம் காண போனில் ஆதேஷ் காபி ஷாப்பில் இவளோடு கொஞ்ச நேரம் முன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தான்.
சஹானா குனிந்திருந்த நேரம் செல்ஃபீ எடுத்திருப்பான் போல. இவள் முகம் தான் என்று அறியயியலாது.
மென்பனி தற்போதும் அதே உடையோடு சஹானா வரவும் நேரத்தை கணக்கிட்டு “சோ இப்ப ஆதேஷை பார்த்துட்டு வர்ற? அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள்.
வண்டியை ஓரமாய் நிறுத்தி ஹெல்மெட்டை கழட்டியவள் தன் ஹாண்ட்பேக்கிலிருந்து போனை எடுத்து மென்பனியின் பழைய கதையில் தமிழ் கமெண்ட்ஸ் செய்தவையை சுட்டிக்காட்டி, “இதுக்கு என்ன அர்த்தமோ அதே தான் இதுக்கும்” என்றுரைத்தாள்.
“நான் தமிழை விரும்பலைனு சொன்னா?” என்று மென்பனி கேட்க, சஹானாவோ வேகமாய் “நானும் ஆதேஷை விரும்பலை” என்றாள்.
“நான் தமிழை விரும்பறேன்னு உண்மையை ஒப்புக்கொண்டா?” என்று மென்பனி கேட்க, “நானும் ஆதேஷை விரும்பறதை மறுக்க மாட்டேன்” என்றாள் சஹானா.
சாக்ஷி, மிருதுளா, மென்பனி, சஹானா இந்த நால்வரிலும் இரு அணிகள் உண்டு.
சாக்ஷி, மிருதுளா ஒரு அணி. மென்பனி, சஹானா ஒரு அணி.
மிருதுளா எப்படி உரிமையாக சாக்ஷி வீட்டில் வரமுடிவெடுத்தாளோ அதுபோல மென்பனி, சஹானா இருவரும் ஒன்றுக்குள் ஒன்று. இருவரின் ரகசியமும் ஒருவருக்கு ஒருவர் கூறாததே இருவருக்குள் ஒரு மாயத்திரையை உண்டாக்கியது. இன்று அது உடைந்தது.
இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தனர்.
“எருமை”
“பன்னி”
“டாக்”
“பப்பல்லோ” என்று மாறி மாறி திட்டிக்கொண்டார்கள்.
“என்னிடம் தானே முதல்ல சொல்லிருக்கணும்.” என்று சஹானா கேட்க, “நான் இன்னமும் தமிழிடம் நான் அவரை விரும்பறதை சொல்லலைடி” என்றாள் மென்பனி.
சஹானாவோ “நானும் ஆதேஷிடம் இதுவரை விரும்பறதை சொல்லலை. எனக்குமே என்ன மாதிரி உணர்வுனு முதல்ல தெளிந்து, அவர் விரும்பினா உன்னிடம் சொல்லலாம்னு முடிவெடுத்தேன். மத்தபடி மறைக்க ஆசையில்லை மென்பனி.” என்றதும் மென்பனியோ புரிவதாக தோளைதட்டி கொடுத்தாள்.
“ஓகே ஆதேஷ் என்ன சொன்னார்? காபி வித் கியூட் காட்ஸில்லா போட்டிருக்கார்” என்று மென்பனி உரைத்தப் பின்னரே, “என்னது காட்ஸில்லாவா?” என்று போனை பிடுங்கி பார்த்தாள்.
முகம் மறைத்து அவளை காட்டி கொடுக்காமல் சர்வ ஜாக்கிரதையாக போட்டிருந்தான் கேப்ஷன் தான் ‘கியூட் காட்ஸில்லா’ என்றிருந்தது.
“பார்றேன் இவன் லவ் சொன்னதும் ஓகே சொல்லனுமா? மறுத்ததுக்கு காட்ஸில்லாவாமே.” என்று பொங்கியவளை அமைதிப்படுத்தி “கியூட் என்ற வார்த்தையும் போட்டிருக்கார் சஹானா.” என்று குளிர்வித்தாள்.
அதன் பின் சாக்ஷியை காண இரு தோழிகளும் இருசக்கர வாகனத்தில் வந்தார்கள்.
தமிழையும் ஆதேஷையும் மாறி மாறி பேசி விரைவாகவே சாக்ஷி வீட்டில் வந்து சேர்ந்தனர்.
சாக்ஷியோ “இப்ப யாரை கேட்டு எனக்கு பொண்ணு பார்க்கறிங்க. இந்த உடைஞ்ச காலோட நான் சேலைக்கட்டி இரண்டு நாள்ல நிற்கணுமா? ஒரு சின்ன வளையல் கம்மல் வாங்கினா கூட என்னிடம் எந்த கலர்? ஜிமிக்கியா? பேன்ஸியா? ஸ்டோன் ஒர்க்கா என்று நிறைய அபிமானம் கேட்பிங்க. மாப்பிள்ளை மட்டும் எப்படி சடனா என்னை கேட்காம முடிவெடுத்திங்க?” என்று கடுகடுத்தாள்.
குருபிரசாத் பொறுமையாக மகளின் வயதையும் தங்கள் கடமையும் முன்னிருத்தி பேசினார்.
பத்மாவிற்கு அந்தளவு பொறுமை துளியும் இல்லை. “ஏன் யாரையாவது விரும்பறியா?” என்று பொரிந்து தள்ளினார்.
சாக்ஷியோ “ஏன் யாரையாவது விரும்பினா தான் கல்யாணத்தை அவாய்ட் பண்ணுவாங்களா?” என்று உட்கார்ந்த இடத்திலிருந்து கத்தினாள். சாக்ஷியின் குரல் வீட்டுக்குள் நுழையும் சஹானா, மென்பனி இருவருக்கும் நன்றாகவே கேட்டது.
ஏதோ பிரச்சனையா என்று அவளருகே வந்து உடல்நலத்தை கேட்க, பத்மாவோ “இதோ வந்துட்டாங்க. இனி நம்ம பேச்சை துளிக்கூட கேட்கமாட்டா. அவ பிரெண்ட்ஸுங்க சொல்லறது தான் வேதம்.” என்று புலம்பினார்.
மென்பனியும், சஹானாவும் “வ்ராங் டைம்ல எண்ட்ரி போட்டுட்டோமோ?” என்று அவர்களுக்குள் கேட்டு கொண்டனர்.
இதில் மிருதுளா வேறு கண்ணீரை உகுத்தி தோழிகள் வரவும் அவசரமாய் துடைத்து நடந்தாள்.
“என்னாச்சு ஆன்ட்டி? எங்க தலை உருளுது? நாங்க என்ன செய்தோம். என்னைக்காவது உங்க பேச்சை மீறி ஏதாவது செய்தோமா?” என்று மென்பனி சாந்தமாய் கேட்டாள்.
“நீங்க தானே? மிருதுளாவை அழைச்சிட்டு எங்கயாவது கொஞ்ச நாள் போகலாமானு, முன்ன இங்க மாநாடு போட்டு பேசினப்ப, அதெல்லாம் செய்யாதிங்க படிச்சி படிச்சி சொன்னா. என் பேச்சை கேட்காம நீ தானே கார் கொண்டு வந்த, அம்மாடி நீ தானே கொடைக்கானல்ல எங்க ஆன்ட்டி வீடு இருக்குனு இடம் எல்லாம் சொல்லி கூட்டிட்டு போனிங்க. நீங்க பேசாதிங்கடி. எனக்கு இதயவலியே வந்துடும். உங்க பிரெண்டை நான் பார்த்த பையனை கட்டிக்க சொல்லுங்க.” என்று எழுந்து செல்ல மிருதுளா அறைக்குள் அடியெடுத்து வைத்தாள்.
“பேசாம மறுபடியும் ஒரு டூர் போட்டுடலாமா? இந்த பேரண்ட்ஸ் ஏன்பா இப்படியிருக்காங்க?” என்று சாக்ஷி கூறினாள். அடுப்பங்கரைக்கு நடையிட்ட பத்மாவோ வேகமாய் சாக்ஷி பக்கம் வர, மென்பனியோ “வீட்ல கல்யாணம் பண்ண சொன்னா பண்ணிக்கலாமே. ஏன் மறுக்கற?” என்று கேட்டாள். சஹானாவிடம் வேதாந்த்தை மனசுல வச்சி பேசுவதால் ஏதேனும் தோழி உரைக்கட்டுமென சீண்டினார்கள்.
பத்மாவோ “கேளுங்கமா என்ன தான் மனசுல வச்சியிருக்கா?” என்று கூறவும் தோழிகள் சாக்ஷியை முற்றுகையிட்டனர்.
அவளோ வேதாந்த் பேச்சை தவிர்த்து “கல்யாணம் வேண்டாம்.” என்பதை மட்டும் திரும்ப திரும்ப கூறினாள்.
-தொடரும்.
Ada unmaia sollunga pa….
Interesting😍