Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 11

மனம் உன்னாலே பூப்பூக்குதே 11

பூ 11

ஆற்றங்கரை மணலில் மோதிச்செல்லும் நீரின் சலசலப்பு அவ்விருவரின் இனிய பொழுதை இடைஞ்சல் செய்யாமல் சென்றாலும், பாக்கெட்டில் விடாமல் அடித்த போனின் சத்தம் அப்படி இல்லையே!

அழைப்பொலி உணர்ந்த ஆருத்ரா அவனிடமிருந்த தன் இதழ்களை விடுவிக்க முயல,

தேனுண்ணும் வண்டு  காற்றிலாடும் மலரோடு சேர்ந்து ஆடுவது போல அவள் பின்னால் செல்லச் செல்ல அவனும் அவளோடு முன்னே வந்தானே அன்றி அவள் இதழை விடுவிக்கவில்லை.

அவன் செயலில் வெட்கம் பிடுங்கித் தின்றது பெண்ணவளுக்கு. வேகமாக மார்பில் கை வைத்து அவனை தள்ளியவள்,

“செல்போன்.. கால் வருது..” என்று அவன் கன்னம் பற்றி கவனத்தை அங்கே திருப்பினாள்.

“ம்ச்” என்று சலித்துக் கொண்டவன், தொடு திரையில் தெரிந்த தந்தை எண்ணைக் கண்டதும்,

“திருச்சிக்கு போறோம்ன்னு கிளம்பிட்டு உன் பாட்டி வீடு போய் சேரலைன்னா கால் பண்ண மாட்டாங்களா? நீ என்னை இங்க கடத்திட்டு வந்தது அவங்களுக்கு தெரியுமா?” என்று மங்கையவள் மேல் இருந்த மயக்கம் தீராமல் தன்னை விலக்கிய கடுப்பில் அவளை செல்லமாகச் சாடினான்.

அவளோ கலகலவென சிரித்து, “கிளம்பிட்டா போச்சு. பஸ் லேட்டுன்னு சொல்லி சமாளிங்க பாஸ்.”என்று கேலியாக உரைத்து அவன் மடியிலிருந்து எழுந்து கொள்ள முயன்றாள்.

அவள் கரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டவன், கைபேசியை எடுத்து தந்தையுடன் பேசத் துவங்கினான்.

“டேய் எங்க டா இருக்கேள்? இன்னும் ஆத்துக்கு வந்து சேரலன்னுட்டு சம்மந்தி போன் பண்ணி கேக்கறா டா” என்று ஆதிநாதன் பதற,

“நாங்க வேற விஷயமா ஒரு இடத்துக்கு வந்திருக்கோம். பாட்டி ஆத்துக்கு போறச்சே நானே கால் பண்ணி சொல்றேன்னு அவா கிட்ட சொல்லுங்கோ.” என்று வேகமாக கூறிய மகனிடம் பாய்ந்தார் ஆதி.

மாமனார் குரல் ஏறுவதை கவனித்த ஆருத்ரா மெல்ல அவனிடமிருந்து நழுவி வீட்டினுள் சென்று விட்டாள்.

அவள் போகிறாளே என்று தாபமாய் அவளைப் பார்த்தபடி இதற்கு ஒரு முடிவு கட்டிவிடும் எண்ணத்துடன் தந்தையிடம் பேச முடிவெடுத்தான்.

“வேற என்ன விஷயம்? மறுக்கழிச்சு போறச்சே தனியா அனுப்பாதேள். ஆகாதுன்னு உங்கம்மா சொன்னா டா. நான் தான் அவ மேல இருந்த கோவத்துல கண்டுக்காம உன்னை அனுப்பி வச்சேன். என்ன டா ஆச்சு? எங்க இருக்கேள்?” என்றதும்,

“திருச்சி வந்தாச்சு. அம்மா தான் அஷ்டமி நவமின்னு சொன்னால்ல. அதான் ரெண்டு நாள் கழிச்சு பாட்டி ஆத்துக்கு போயிக்கிறோம்.” என்று அசராமல் அடித்தான்.

“டேய் என்னடா பேசற நீ!”என்று கோபத்தில் அவர் கொந்தளிக்க,

மனம் திறந்து முதல் முறையாக தந்தையிடம் பேசினான் கோகுல்.

“ப்ளீஸ் பா. அவளோட அம்மா அப்பா வாழ்ந்த ஆத்துக்கு என்னை அழைச்சிண்டு வந்து காட்டினா. இங்க ரொம்ப நன்னா இருக்கு பா. நோக்கே தெரியும் நான் விரும்பி இந்த கல்யாணம் பண்ணிக்கல. எனக்கு அவள்ட்ட கொஞ்சம் பேசணும் பா. அங்க ஆத்துல அது கன்வீனியன்டா இல்ல. ரெண்டு பேருக்கும் ஆபிஸ், அவ வந்தா அம்மா கூட சமையல்கட்டுக்கு போயிட்றா. பேசிக்க நேரமும் இல்ல, சங்கடமாவும் இருக்கு.” என்று இழுத்தான்.

“சரிடா அதை என்கிட்ட சொல்லி இருந்தா ஹனிமூன் மாதிரி எங்கானம் அனுப்பி இருப்பேனே!”என்றார் படபடப்பாக.

“இல்லப்பா நோக்கு புரியல. கல்யாணம் பண்ணிட்டா எல்லாம் படுக்கையிலே ஆரம்பிச்சிடுமா? இல்ல அதான் வாழ்க்கையா? எங்களுக்கு பேசிக்கணும் பா. புரிஞ்சுக்கணும். நான் ஒன்னும் தப்பா சொல்லலையே! அவளை தெரியாதுப்பா எனக்கு. அப்பறம் எப்படி எங்களுக்குள்ள?  இதுக்கு மேல நான் எப்படி சொல்லப்பா?” என்று தயங்கினான்.

“புரியறது டா. நான் உங்க ஆபிஸ் லீவ் பத்தி யோசிச்சு தான் டா ஹனிமூன் பத்தி பேசல. உடனே கல்யாணம்ன்னா அதானான்னு ஆரம்பிக்காத. அதுவும் தான். தெரிஞ்சுக்கவும் செய்யணும் தான். நான் ஒத்துக்கறேன். இங்க உனக்கு அசவுகர்யமா இருந்ததுன்னு நேக்கு தோனாம போயிடுத்து டா. சரி நான் அம்மாவையும் அவளோட பாட்டியை சமாளிக்கறேன். நீங்க இந்த ரெண்டு நாள்ல ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க்கு வாங்கோ. ” என்றவர் பின் ஒரு வெடிச் சிரிப்பை வெளியிட்டு,

“ஆனாலும் நீ இப்படி சொல்லாம போயிருக்கப்பிடாது டா கோகுல், உங்கம்மா முன்ன அப்படித்தான் திட்டுவேன் கண்டுக்காத என்ன?” என்று அழைப்பைத் துண்டித்தார்.

தந்தை தன்னைப் புரிந்து கொண்டதை எண்ணி மகிழ்ந்தவன் தன் கைச்சிறையில் இருந்த பூஞ்சிட்டு பறந்து சென்றதில் சிணுங்கியவனாக எழுந்து உள்ளே சென்றான்.

பின் வாசலில் இருந்து முன் வாசல் வரை பளிச்சென்று தெரிந்தது. அங்கே அவர்கள் கொண்டு வந்த  பயணப் பைகள் அதே இடத்தில் தயாராக இருக்க, இரண்டாம் கட்டில்  இருந்த பெரிய ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தாள் ஆருத்ரா.

ஆசையாய் அவளைக் கண்டு அங்கே சென்றவன் ஊஞ்சலில் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்து அவள் முகம் நோக்க, அவளோ கண்ணீர் விழிகளுடன் அவனைக் கண்டு சிரித்தாள்.

“என்னாச்சு.. ஏன் அழற? உனக்கு.. நான்.. பிடிக்கலையா?” என்று வாக்கியங்களை அரைகுறையாக வைத்து கேள்வி கேட்க,

அவளோ விழி நீரைத் துடைத்தபடி, “இல்ல கிருஷ். இல்லவே இல்ல. இது ஒரு மாதிரி வேற கண்ணீர்..” என்று இழுத்து “சந்தோஷக் கண்ணீர்.” என்றாள்.

அவன் அவள் மோவாய் பற்றி என்னவென்று புருவம் தூக்கி வினவ,

“அப்பா அம்மா கூட சந்தோஷமா ஓடி ஆடின்டு இருப்பேன். அப்பறம் பாட்டி என்னை இங்க அழைச்சிண்டு வந்ததே இல்ல. இதை விற்க கூட பேசினா. ஆனா வழி வழியா வந்த சொத்து என் கையெழுத்து இல்லாம விற்க முடியாது. நான் ஒத்துக்க மாட்டேன்னு தெரிஞ்சு ஆள் வச்சு அப்பப்ப வீட்டை பராமரிப்பு பண்ணிண்டு இருந்தா. காலேஜ் படிக்கும் போதே பாட்டிக்கு தெரியாத இங்க வந்துடுவேன். இந்த ஊஞ்சல்ல படுத்துக்கறச்ச அம்மா மடில படுத்துண்டது போல இருக்கும்.

இந்த சின்ன ஊஞ்சல் மழை நேரத்துல நான் ஆட ஆசைப்பட்டு கேட்டேன்னு அப்பா ஆள் வச்சு செஞ்சது. பாரு கிருஷ் இன்னிக்கு வரை ஒரு துரு கூட இல்லாம இருக்கு. அதுல ஆடினா அப்பா ஆட்டி விட்டு ஆடுறாப்பல இருக்கும். லீவ் கிடைச்சு திருச்சி வந்தாலும் இங்க ஒரு நாள் இருந்துட்டு தான் பாட்டியாத்துக்கு போவேன்.

அங்க அவா இருந்தாலும் தனியா இருக்கறாப்ல இருக்கும். இங்க யாருமே இல்லைனாலும் அம்மா அப்பா கூடவே இருக்கறாப்ல இதமா இருக்கும்.”என்று கண்ணில் நீர் மல்கப் பேசினாள்.

அவளை அழைத்து தன் மடியில் சாய்த்துக் கொள்ள, அவளோ வாகாக திரும்பி அமர்ந்து அவன் மார்பில் பின் தலையால் அழுத்தம் கொடுத்தாள்.

“உங்களை கல்யாணம் பண்ணின்டாட்டும் உங்களோட இங்க வந்து இதெல்லாம் காட்டி ஒரு மூச்சு அம்மா அப்பாவை நினைச்சு அழுதுட்டு அதோட எப்பவும் ஹேப்பியா வாழணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.

எங்க கூப்பிட்டா வராம போயிடுவீங்களோன்னு பயந்துண்டு தான் சொல்லாம அழைச்சின்டு வந்தேன்.

வந்தாச்சு பார்த்தாச்சு, உங்க கிட்ட சொல்லியாச்சு. நாம பாட்டியாத்துக்கு போலாம். மாமா போன்ல கோவமா பேசினார். என்னால நீங்க திட்டு வாங்க வேண்டாம்.” என்று எழுந்து கொள்ள முனைந்தாள்.

“ம்ம்..” என்று அவளை தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு,

“இப்போதைக்கு போக வேண்டாம்.” என்றான் மொட்டையாக.

“மாமா திட்டினாரே!” என்று அவர் பதற,

“அதெல்லாம் சமாளிச்சாச்சு. அஷ்டமி நவமி முடிஞ்சு தசமிக்கு பாட்டியாத்துக்கு போயிக்கலாம். ரெண்டு நாள் இங்க தான்.” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,

அவன் புறம் திரும்பியவள் கழுத்தோடு அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு,

“ரொம்ப தேங்க்ஸ் கிருஷ்.” என்று சிரிக்க, அவள் இருந்த நிலையில் அவன் தான் நிலை கொள்ள இயலாமல் தவித்தான்.

“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?” என்று இழுக்க,

“கேளுங்க கிருஷ்” என்று ஆர்வமாக அவன் முகம் நோக்கினாள்.

“அவசியம் ஃபர்ஸ்ட் நைட் தான் நடக்கணுமா? ஃபர்ஸ்ட் பகல் எல்லாம் தப்பா?”  என்று சீரியசாக வினவ,

“யூ.. டர்ட்டி பாய்.  இப்ப தான் முகம் பார்த்து பேசி கிஸ் வரைக்கும் வந்திருக்கீங்க. பத்து நாளுக்கு மேல என்னை சுத்த விட்டுட்டு, பத்து நிமிஷத்துல நீங்க கேட்டதும் கிடைச்சிடுமா?” என்று கேலியாக கேட்டபடி அவனிடமிருந்து விலகி ஓட முயன்றாள்.

“ஹே.. ப்ளீஸ். ப்ளீஸ் அட்லீஸ்ட் அப்ப போல ஒரு முத்தா..” என்று அவன் உதடைக் குவித்தவண்ணம் துரத்த,

“ஐய்ய பச்சக் குழந்தை இவரு. முத்த்தா.. வேணுமாம். ரெண்டு குத்தா வேணா முகத்தில் தரேன்” என்று டி.ஆரின் சிஷ்யையாய் மாறி அவனுக்கு கவுண்டர் கொடுத்தபடி  தூணுக்கு தூண் சிக்காமல் தப்பி  ஓடினாள்.

துரத்தி சோர்ந்தவன் போல தொட்டித் திண்ணையில் அமர, அவனை உரசிக் கொண்டு அமர்ந்தாள் ஆருத்ரா.

“எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சு தான் கல்யாணம் பண்ணினேன். ஆனா உங்களுக்கு அப்படி இல்ல. நேத்து நீங்க பேச வந்ததை நான் தடுக்க ஒரு காரணம் இருந்தது.” என்று இழுத்தாள்.

“என்ன?” என்று அவன் குழப்பத்துடன் வினவ,

“பேசினா எங்க இந்த கல்யாணம் பிடிக்கல, பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டா என்ன பண்றது? இல்ல உங்களுக்கு என் மேல ஒரு இஷ்டம் வராம போயிடுத்துன்னா என்ன பண்றதுன்னு பயந்தேன்.” என்று தலையைக் குனிந்து கொண்டாள்.

“அட அசடு. நான் உன்னை பிரியறத பத்தி யோசுச்சதே இல்ல. என் குழப்பம் எல்லாம் ஐ.டி.ல  வேலை பார்க்கற பொண்ணு எப்படி ஆடிட்டர் ஆபிஸ்ல வேலை செய்யற என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துண்டான்னு தான். ஒரே புரோபஷனை தான் எல்லாரும் இப்ப விரும்பறா. நீ என்னை பார்க்காமலே வேற ஓகே சொன்னதா அம்மா சொல்லவும், ‘யாரையோ கல்யாணம் பண்ணிக்கணும் அது இவனா இருந்துட்டு போட்டும்’ன்னு நினைச்சியோன்னு உள்ள ஒரே குடைச்சல்.” என்று நெஞ்சை நீவினான்.

அவளோ அவனை வம்பிழுக்கும் முடிவுடன் “பார்க்க மாப்பிள்ளை பப்பாளிப் பழம் போல இருப்பார்ன்னு தெரிஞ்ச பின்னாடி யாரானம் வேண்டாம்னு சொல்லுவாளா?” என்று மீண்டும் ஓட்டம் எடுத்தாள்.

“எது.. பப்பாளிப்பழமா? ஓய் .. கொழுப்பு தானே..” என்று அவன் துரத்த, இம்முறை அவள் தஞ்சம் அடைந்தது படுக்கை அறையில்.

அவள் அங்கிருந்த பீரோவிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு நிற்க, பின்னால் வந்தவன் விளையாட்டை கைவிட்டு அது என்னவென்று வினவினான்.

“அப்பா எப்பவும் பணம் போட்டு வைக்கிற பெட்டி இது.  என் அப்பா உங்களுக்கு எந்த சீரும் செய்யலன்னு இருக்கப் பிடாது. வாங்கிக்கோங்க.” என்று அவன் கையில் வைக்க, அதைப் பெற்றவன் அவளை தன் அருகில் வைத்து,

“இனி உனக்கு நான் இருக்கேன்.” என்று கூற,

“இப்பவும் மொட்டை மொட்டையா தான் பேசறீங்க. நான் உங்களை ஆசையா கிருஷ்ன்னு கூப்பிட்டேன். நீங்க சொல்லியா நான் கூப்பிட்டேன்? என் மேல இன்னும் உங்களுக்கு ஒன்னும் தோணல.  ஒன்னு என் மேல இப்ப வந்திருக்கிற ஆசை இல்லன்னா இது பரிதாபம்.” என்று நகர முயன்றாள்.

“ச்சு. இல்ல.. எல்லாரும் உன்னை ஆருன்னு தான் கூப்பிட்றா. நான் தனியா ஏதானம் கூப்பிடலாம்ன்னு யோசுச்சின்டு இருந்தேன்.” என்று இழுக்க,

“அப்ப யோசிச்சு வைங்கோ. நான் பக்காத்தாத்து அம்புஜம் பாட்டியை பார்த்துட்டு உங்க குட்டி தொப்பைக்கு ஆகாரம் ஏற்பாடு பண்ணிட்டு வரேன்” என்று கண்ணிமைக்கும் நேரத்தில் சிட்டாக பறந்து விட்டாள்.

ஒரு மணி நேரம் அவ்வீட்டில் இருந்த பொருட்கள், புகைப்படங்களை பார்க்க ஆறு வருடத்தில் தன் குழந்தையை மாமியாரும் மாமனாரும் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் என்று நன்றாக விளங்கியது.

இயலாதவர்களை காணும்போது அவ்வப்போது தோன்றும் நினைவு போல இன்றும் கடவுள் கொஞ்சம் ஓரவஞ்சனை பிடித்தவர் தானோ! இருப்பவர்க்கே கொடுத்து இல்லாதவர்களை இல்லாமல் போகச் செய்வதும், இப்படி கொடுத்துப் பறிப்பதுமாக சாமனியனை சோதித்துப் பார்த்து மகிழ்கிறாரோ? என்ற கேள்வி எழுந்தது.

ஆனாலும் அதே கடவுள் தான் தன் கையில் அவளைக் கொடுத்திருக்கிறான் என்ற எண்ணமும் வராமல் இல்லை.

இவள் அவன் வாழ்வில் வராமல் அவன் நினைத்தது மட்டும் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று எண்ணக் கூட இப்பொழுது அவனுக்கு விருப்பமில்லை.

இந்த சில நாட்களில் அவன் உள்ளமெங்கும் வியாபித்து விட்டாள் ஆருத்ரா.

அவனின் ருத்தும்மா. ஆம்.. அவனுக்கே அவனுக்கான அழைப்பு அவன் கண்டு கொண்டு விட்டான்.

ஒரு நொடி மனதினுள் எழுந்த மகிழ்ச்சியின் காரணம் அவனுக்கு புரியவில்லை. அவளுக்கு செல்லப் பெயர் வைத்ததற்கு தனக்குள் இத்தனை மகிழ்ச்சி ஊற்றெடுக்க முடியுமா?

ஆக, வாழ்வென்பது இது போன்ற சிறு சிறு விஷயங்களில் தான் சந்தோஷத்தை ஒளித்து வைத்திருக்கிறது. அதை சரியாக கண்டு கொண்டு அதனை அடையத் தெரியாமல் தான் பலரும் அந்த மகிழ்ச்சியை தொலைத்து விடுகிறார்கள் என்று உணர்ந்து தன்னையே ஞானி போல எண்ணிக் கொண்டான்.

இவனை நெடு நேரம் காக்க வைக்காமல் பூவரச இலையால் ஆன பெரிய தொன்னையில் சக்கரைக் பொங்கலும், மற்றொரு தொன்னையில் தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு வந்தாள் ஆருத்ரா.

அங்கிருந்த உணவு மேசையில் அதனை வைத்துவிட்டு,

“குளிக்கலையா கிருஷ்?” என்று முகத்தை சுருக்கி அவள் வயிற்றைத் தடவ,

“டூ மினிட்ஸ் மேகி மாதிரி தயாராகி வரேன் பாரு என் ருத்தும்மா” என்று அவள் கன்னம் கிள்ளி தன் பையிலிருந்து துணிகளை எடுத்துக்கொண்டு அறையில் இருந்த குளியலறைக்குச் சென்றான்.

அவன் அழைப்பில் உணர்வுகள் தாக்க நின்றிருந்தவள் விழிகள் பனித்தது.

அன்னை ஆசையாக ஆருத்ரா என்று பெயர் வைத்தாலும் தந்தை அவளை அழைப்பது ‘ருத்ரா’ என்று தான். பல நாள் ‘ருத் குட்டி’ என்று சுருக்கியும் அழைத்ததுண்டு. இன்றைய அவனின் விளிப்பு அவளுக்கு தந்தையை அதிகம் நினைவு படுத்த,

தந்தை புகைப்படத்தின் அருகே சென்று,

“உன்னப் போலவே இருக்கார் பா. இப்ப நான் என்ன செய்யட்டும்? உண்மையை அவர்கிட்ட சொல்லிடட்டுமா? இல்ல அவரா தெரிஞ்சுண்டா போரும்ன்னு விட்டுடவா?” என்று அதனை தடவியவள்,

“உண்மையை சொன்னா அவர் என்னை விட்டு போமாட்டார்னாலும் இதே போல பிரியமா இருக்க வாய்ப்பிருக்கான்னு தெரியல பா. அவர் பிரியம் கிடைக்கிற வரையிலும் நான் அனுபவிச்சுக்கறேன் பா. வர்றது வரட்டும்” என்று கூறியவள், கண்ணீரை அழுத்தமாக துடைத்துக் கொண்டாள்.

அங்கிருந்த பழைய கால வாக்கும் ட்யூப் (vaccum tube) ரேடியோவை ஆன் செய்து பிரசார் பாரதி ரேடியோ ஸ்டேஷன், மலேஷியா ரேடியோ ஸ்டேஷன் என்று ஒலிக்க விட்டவள் கடைசியாக சிலோன் ஸ்டேஷனில் நிறுத்த தொன்னூறுகளின்  பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

தலைக் குளித்து இடையில் டவலுடன் வந்தவன் அவள் அங்கிருப்பதை அப்போது தான் கவனித்தான்.

அருகே சென்று அவன் தலையை சிலுப்ப, அவன் அடர்ந்த கேசத்திருந்து நீர்த்துளிகள் அவள் மீது பட்டுத் தெறித்தது.

நாணத்துடன் அவன் நகர, அவன் தொடர, மெல்ல மெல்ல அவர்கள் இருவரும் அனைத்தையும் மறந்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி சுவரோடு சுவராக நின்றனர்

அவன் அவள் அதரங்களை ஆசையுடன் நோக்க, அவளோ அவன் விழிகளில் தாபத்தைத் தாண்டிய அன்பைத் தேடினாள்.

அவள் கன்னத்தில் வழிந்த நீரை அவன் துடைக்க, அவள் கண்களை இறுக்கமாக மூடி அவன் ஸ்பரிசத்தில் கரைந்தாள்.

அவன் அவளது இடையை பற்றி தன்னோடு சேர்த்தணைக்க, டாப்ஸ் விலகி அவளது மெல்லிடை அவன் விரல்களுக்கு விருந்தானது.

அவன் வீணையாக அவள் இடையில் இசையமைக்க முயல, அவனது ஒவ்வொரு  தீண்டலிலும் உருகிக் கரைந்தாள்.

சரியாக அந்த நேரம் ரேடியோவில் அடுத்த பாடல் ஒலிக்கத் துவங்கியது.

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?’

அவள் நாணம் கொண்டு வில்க, அவன் அவளைத் தொடர்ந்தான்.

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

அவள் மடங்கி கட்டிலின் நுனியில் அமர, அவள் முகம் நோக்கியவன் அதில் தெரிந்த சம்மத்ததில் பூரித்தான்.

பனிதனில் குளித்த பால்மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே’

அவன் அவளிடம் வசமிழக்க, அவனிடம் தன் இதழ்களை கொடுத்துவிட்டு தன்னிலை மறந்தாள் ஆருத்ரா.

16 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 11”

  1. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 11)

    பரவாயில்லை…கிருஷ் நல்லாவே அப்பாவை சமாளிச்சிட்டான். அம்மா தான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபீஸைர் போல. அதுசரி, கிருஷ் கிட்ட தான் சிதம்பர ரகசியம் இருக்குன்னு நினைச்சா, ஆருத்ரா கிட்டேயும் இருக்கும் போலவே…? அப்படி என்ன ரகசியம்..? அதை கேட்டப்பிறகும்
    கிருஷ் இப்படி நெருக்கமா இருப்பானாங்கிறதே சந்தேகம் என்கிற அளவுக்கு அது என்ன வியஷயம்ன்னு தெரியலையே..???
    😇😇😇
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Wow cute understanding ithu mari yarune theriyama mrg pani ipo pathu palagi pesi purinjikirathu pasam kamikurathu la varam athuvum oru ponnuku appa mari pasam kamikira husband kedaika koduthu tha vaikanum

  3. Avatar

    Lovely dear 🥰🥰🥰🥰
    Appdiye poittrunthaa nallaarunthrukkum…aanaa appa kitta sollanumaa nu yennavo kekkuraa…yennavaa erukkum 🤔🤔🤔🤔

  4. Avatar

    Wow wow rombha azhagana moments avanga rendu perukum avan oda chella per aval oda niyabagam nu andha veetula innum neraiya special moments serndhuduchi
    Apadi aaru enna maraikira krish aval ah piriya poren nu solliduvan nenachi bayandhatha vera sollura

  5. Priyarajan

    It’s lovely 💕💕💕💕 apti ena secret ah irukkum🤔🤔🤔waiting for nxt epi😍😍😍👌👌👌👌👌

  6. Avatar

    ஏதோ ஃப்ளாஷ் பாக் இருக்கும் போல உள்ளது
    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  7. Avatar

    அப்படி என்ன விஷயத்தை ஆருத்ரா கோகுல் கிட்ட இருந்து மறைக்கிறா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *