Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 20

மனம் உன்னாலே பூப்பூக்குதே 20

பூ 20

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய ஆருத்ரா அமைதியாக தன் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள். வெளியே சென்றிருந்த ஆதிநாதன் வீடு திரும்பும் போது பை நிறைய பழங்களை வாங்கி வந்திருந்தார்.

வந்தவுடன் மருமகளின் கையில் பையை கொடுத்துவிட்டு “பழம் நிறைய இருக்கு மா. நேரத்துக்கு சாப்பிடணுமா உடம்பு கவனமா பாத்துக்கோ” என்று வாஞ்சையாகக் கூறினார்.

எப்பொழுது வெளியே சென்று விட்டு வீடு திரும்பினாலும் வாங்கி வந்தவைகளை தன்னிடம் கொடுக்கும் கணவர் இம்முறை நேரடியாக மருமகளிடம் கொடுத்தது சுபாவுக்குப் பிடிக்கவில்லை.

ஏற்கனவே காலையில் அவர் சமைக்கும் போது உதவிக்கு வராதவள், தனக்கான உணவை மட்டும் செய்து உண்டு விட்டுச் சென்றவள், இப்பொழுது கணவர் அவளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மொத்த பையையும் அவள் கையில் கொடுத்தால் இனி தன்னை எப்படி மதிப்பாள் என்று மனதிற்குள் பொருமியவர் கணவனை முறைத்து விட்டு எழுந்து அவர் படுக்கை அறைக்கு சென்று விட்டார்.

மனைவி செல்லும் வேகத்திலேயே அவளது கோபம் புரிந்திருந்தாலும் வீட்டிற்கு வாரிசை சுமந்து கொண்டிருக்கும் மருமகளுக்கு தான் செய்ய வேண்டிய கடமையாக எண்ணி பார்த்து பார்த்து பழங்களை வாங்கிக் கொண்டு வந்த ஆதிநாதன். அதை அவளிடம் கொடுப்பதுதான் சரி என்று தன் முடிவில் திடமாக இருந்தார்.

மனைவியின் கோபம் அவரை ஒன்றும் செய்து விடப் போவதில்லை என்று அந்த நிமிடம் அதனை அலட்சியப்படுத்திவிட்டு மருமகளுடன் அமர்ந்து உரையாடினார்.

“நேத்து டாக்டர்கிட்ட போனேன்னு சொன்னியே மா என்ன சொன்னாங்க?” என்று அக்கறையுடன் விசாரிக்க,

“அதிகம் ஸ்ட்ரஸ் ஆக கூடாது,அலையக்கூடாது, நல்லா தூங்கி, சத்தா சாப்பிடணும். இவ்ளோதான் ப்பா சொன்னாங்க” என்ற அவள் முகம் வாடி இருந்தது

“ஏன்மா முகம் எல்லாம் வாடி இருக்கு?” என்று ஆரஞ்சு பழத்தை முறித்துக் கொண்டே மருமகளை பார்த்தார்

“இன்னைக்கு கொஞ்சம் ஆபீஸ்ல வேலை அதிகம்பா” என்று விட்டு சிறிய தயக்கத்திற்கு பின்,

“உங்கள்ட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…” என்று இழுத்தாள்.

“சொல்லுமா என்ன விஷயம்?” என்று ஒரு ஆரஞ்சு சுளையை அவளிடம் கொடுத்துவிட்டு அவளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்

“எனக்கு பெருசா எந்த செலவும் இதுவரை இருந்ததில்லைப்பா. அதனால வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சம்பளத்துல பாதிய இன்வெஸ்ட்மென்ட் மாதிரி ஷேர்ஸ்ல போட்டுட்டு இருந்தேன். கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் பணத்தை எடுத்து நகையும் வாங்கி வச்சுட்டேன். இன்னிக்கி எனக்கு ஒரு இன்சென்டிவ் வந்திருக்கு. ஏகணவே உள்ள கேஷ் இப்ப வந்தது எல்லாம் சேர்த்தா ஒரு பெரிய அமௌண்டா பேங்க்ல இருக்குப்பா. போன தடவ ஐ.டி பைல் பண்ணும் போதே ஏதாவது இன்வெஸ்ட் பண்ணுங்கன்னு சொல்லி இருந்தாங்க. அதான் இந்த தடவை லேண்டோ இல்ல வீடோ வாங்கலாமா யோசனையா இருந்தது. ஆபீஸ்க்கு பக்கத்துலயே புதுசா ஒரு பெரிய பில்டர் அப்பார்ட்மெண்ட் பிளான் பண்ணி இருக்கிறதா அட்வர்டைஸ்மென்ட் பார்த்தேன். ஒரு பிளாட் புக் பண்ணட்டுமா அப்பா?” என்று கேட்டாள்.

“இன்வெஸ்ட்மென்ட் நல்லதுதாமா இந்த வயசுலயே இவ்ளோ தெளிவா இதெல்லாம் நீ செஞ்சின்டு வந்திருக்க. ஐ ரியலி அப்ரிசியேட் யூ.” என்று பாராட்டியவர்,

“அப்பார்ட்மெண்ட்ல பணத்தை இன்வெஸ்ட்மெண்ட் பண்ணனுமான்னு எனக்கு ரொம்ப நாளாவே ஒரு குழப்பம். ஏன்னா தரையும் சொந்தமில்லை கூரையும் சொந்தமில்லை. இதுல இப்ப உள்ள கட்டுமானத்துல தரம் இருக்குற மாதிரியும் எனக்கு தெரியல. பீமெல்லாம் அவ்வளவு சின்னதா இருக்கு. நீ சொல்ற யோசனை நல்லா இருந்தாலும் ஈஎம்ஐ கட்டி முடிக்கறதுக்குள்ள வீடு டேமேஜ் ஆயிடுச்சுன்னா வேல்யூ இருக்காதேம்மா?” என்று தாடையை தேய்த்தார்.

“நீங்க சொல்றதும் நியாயம்தான் பா. அப்போ வேற என்ன செய்யறதுன்னு யோசிக்கிறேன். உங்களுக்கு ஐடியா இருந்தாலும் சொல்லுங்கோ” என்று அவள் சிந்திக்க அவரோ

“இந்த வீடு கட்டுனது ஆல்ட்ரேஷன் பண்ணினது எல்லாமே என்னோட பிரண்டு தான். இன்னிக்கி அவன் பெரிய அளவில் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி நடத்தறான். உன் ஆபீஸ் ஏரியாவை சொல்லி அங்க அவங்க பினிஷ்டு ப்ராஜெக்ட் ஏதாவது இருக்கான்னு கேட்கறேன். இல்லனாலும் இடமா வாங்கி அவங்கிட்ட வீடு கட்டித் தர சொல்லி கேட்கலாம். தனி வீடாவும் இருக்கும் நிலமும் சொந்தமா நமக்கு இருக்கும் இல்லையா?” என்று யோசனையோடு கூறினார்.

“அந்த அளவுக்கு என்கிட்ட டவுன் பேமெண்ட் கட்ட பணம் இருக்காதே பா. பிளாட்னா 60, 70 லட்சம் வரும். கையில உள்ளத டவுன் பேமெண்ட் கட்டிட்டு மிச்சத்தை ஈ. எம்.ஐ போடலாம்னு இருந்தேன். இடம் வாங்கணும்னா இடமே அவ்வளவு வருமே!” என்று அவள் யோசனையாக இருக்க,

“அவ்வளவு எல்லாம் வராதுமா. அந்த பக்கம் ஏரியால லேண்ட் விலை அவ்வளவு அதிகம் இல்லை, பார்த்துக்கலாம். அப்படி தேவைப்பட்டால் நான் தரேன். நீ அப்பறமா எனக்கு திருப்பி கொடு.” என்று சிரித்தார். அவருடன் சேர்ந்து சிரித்தாள் ஆருத்ரா.

“நான் எதிர்பார்க்கவே இல்ல பா நான் சொன்னா கோபப்படுவீங்கன்னு நினைச்சேன்.” என்று தயக்கத்துடன் கூற

“நீ ஒன்னும் வீடு வாங்கி தனி குடுத்தனம் போறேன்னு கேட்கலையே! இன்வெஸ்ட்மென்ட் பண்றதுக்கு ஒரு இடம் வாங்குவதற்கு தானே கேக்கற? இதுல தப்பு ஒன்னும் இல்ல! அப்படியே நீ தனியா போகணும்னு ஆசைப்பட்டாலும் அதை நான் தப்பு சொல்ல முடியாது. எல்லாருக்கும் அவா அவா கணவன் மனைவியோட தனியா கொஞ்சம் நேரம் செலவழிக்கனும்னு ஆசை இருக்க தான் செய்யும். உனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும் சொல்லு.” என்று நிதானமாக வினவினார்.

“சேச்சே எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லப்பா. நான் சில விஷயங்களை இன்னும் சொல்லல. சொல்றதுக்கான சூழல் அமையல. அந்த பொண்ணு பானு அன்னைக்கு எங்க ஆபீஸ்க்கு வந்து கிட்டத்தட்ட என்னை மிரட்டினா. உங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு வர்றதும் அடிமாடா போறதும் ஒன்னு தான்னு பயம் கூட காட்டினா. உங்க பையன் அம்மா பையன் அவங்கள புடிச்சுகிட்டு நாளைக்கு என்ன நட்டாத்துல விட்டுடுவார். இப்பவே ஒதுங்கலனா வாழ்க்கை முழுக்க நான் அழணும்னு அவ சொன்னா கடைசியா அவர் அவளுக்கு தான்னும் நானா விலகிடனும்னு மிரட்டனா. அதுக்கு அப்புறம் தான் நான் தெளிவா இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்னு முடிவு எடுத்தேன.

அம்மா அப்பா  பையன்னு சின்ன குடும்பமா இருந்தாலும் ஒண்ணா சந்தோஷமா வாழ முடியும்னு ஆசையா கல்யாணம் பண்ணின்டு வந்தேன். நான் ஏம்பா தனியா போகணும்னு நினைக்க போறேன்?” என்று கேட்ட வழியின் கண்ணோரத்தில் நீர் தேங்கி நின்றது.

“சரி விடுமா இந்தா இந்த பழத்தை சாப்பிடு. சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடு. இன்னும் ஒரு ரெண்டு மாசம் கவனமா இரு.” என்று கூறியவர்

“அடுத்த செக்கப்புக்கு கோகுல கூட்டின்டு போ இல்லன்னா சொல்லு நான் உனக்கு துணைக்கு வரேன்.” என்று சொன்னவர் எழுந்து தன் அறைக்குச் சென்று விட்டார்.

கேத்தரின் வீடு வாங்கும் யோசனை கூறியதிலிருந்து இதை வீட்டில் சொன்னால் எந்த மாதிரியான எதிர்வினை இருக்கும் என்று அவள் மனதில் ஒரு கணக்கு ஓடிக்கொண்டே இருந்தது ஆனால் அதற்கு எதிர் மாறாக ஆதிநாதன் அவரே விசாரித்து சொல்வதாகவும் பண உதவி தேவைப்பட்டாலும் செய்வதாகவும் சொல்லவும் ஆருத்ராவின் மனம் மிகுந்த ஆறுதல் அடைந்தது.

அவர் உரித்து கொடுத்த ஆரஞ்சு சுளைகளை சாப்பிட்டு விட்டு மீதி இருந்த பழங்களை டைனிங் டேபிளில் இருந்த ட்ரேயில் அடுக்கி வைத்தவள் களைப்பாய் உணர்ந்ததால் தான் அறைக்குச் சென்று ஓய்வெடுக்க ஆரம்பித்தாள்.

அலுவலகத்தில் ஏதோ முக்கிய வேலையாக இருந்த கோகுல் அன்று சற்று தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தான். வந்தவுடன் மனைவியின் உடல்நிலை பற்றி விசாரித்தவன் இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கையறைக்கு வந்து சேர்ந்தான்

முதல் நாள் இரவில் ஏற்பட்ட கசப்பை இன்று சரி செய்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். இன்று மனைவி என்ன பேசினாலும் தான் பொறுத்து அமைதியாக இருக்க வேண்டும் அவளைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அவனுக்குள் ஆயிரம் யோசனைகள் உருவாகிக்கொண்டிருந்தது.

அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆருத்ரா இரவு மாத்திரையை உட்கொண்டு தலையணையில் தலை சாய்த்து விட்டாள். மெல்ல அவள் அருகில் வந்தவன் அவளுடைய காதோரத்தில் இருந்த தலைமுடியை ஒதுக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

மென்மையாக புன்னகை ஒன்றை உதிர்த்தவள் அவன் புறமாக திரும்பி அவன் முகம் பார்த்து “என்ன சமாதானப் படலமா?” இன்று கலாட்டா செய்தாள்.

“சாரி ருத்தும்மா ஏதோ குழப்பத்துல அப்படி நடந்துக்கிட்டேன்.” என்று மன்னிப்பு வேண்ட,

“நான்தான் அதெல்லாம் பரவாயில்லைன்னு சொன்னேனே. தூக்கத்துல சொன்னதா நினைச்சிட்டீங்களோ?” என்று சிரித்தாள்.

அவன் ‘ஆம்’ என்று தலையசைக்க “முதல்ல நீங்களா ஒரு முடிவு செஞ்சு அதுதான் உண்மைன்னு நம்பறத நிறுத்துங்க. எதுனாலும் வாய் திறந்து கேளுங்க. நான் பதில் சொல்லுவேன்” என்று கூறிவிட்டு எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தாள்.

“இன்னைக்கு சாயங்காலம் அப்பா எனக்கு பழமெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தாரு. ஆரஞ்சு பழம் உரிச்சு கொடுத்தார் தெரியுமா!குழந்தைக்கு குடுக்குற மாதிரி தோல் எல்லாம் எடுத்து சுளையோட மேல்தோலும் எடுத்து அந்த பல்ப் மட்டும் கொடுத்தாரு. பேசிக்கிட்டே சாப்டாலும் கூட நான் ஒவ்வொரு துளியையும் ரசித்து சாப்பிட்டேன்.” என்று கூறிய அவள் விழிகளில் அத்தனை மகிழ்ச்சி.

“பரவாயில்லையே அப்பா கூட பேசிட்டு இருந்தியா? அப்படி என்ன சுவாரசியமா பேசிட்டு இருந்தீங்க?” என்று கேட்டபடி அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.

அவள் அவளுடைய ஷேர்ஸ்,இன்வெஸ்ட்மென்ட், இன்சென்டிவ் எல்லா கதையும் சொல்லி கடைசியில் வீடு வாங்க விரும்பியதையும் சொல்லி அதற்கு ஆதி கூறிய பதிலையும் சொல்லி மகிழ்ச்சியோடு அவன் தலை முடிக்குள் விரலை விட்டு கோதினாள்.

சட்டென்று எழுந்த அமர்ந்தவன் “இவ்வளவு பெரிய விஷயம் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாம நேரா அப்பா கிட்ட போய் இதை பத்தி பேசி இருக்க?” என்று பிடித்தமின்மையை அப்பட்டமாக குரலில் காட்டினான் .

“பேசணும்னு இத பத்தி பேசல. எதார்த்தமா பேசும்போது இந்த டாபிக் வந்துச்சு. பேசினேன். இதுல என்ன இருக்கு?” என்று சாதாரணமாக வினவிய மனைவியை முறைத்தவன்,

“நேத்துதான் அவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி சண்டை வந்து அதை சொல்ற அட்மாஸ்பியர் என்னால் கெட்டுப் போச்சு. இப்போ வீடு இன்வெஸ்ட்மென்ட் வரும்போது என்கிட்ட சொல்லணும் அப்புறம் ரெண்டு பேரும் போய் அப்பா கிட்ட சொல்லலாம், அந்த மாதிரி உனக்கு தோணவே இல்லையா?” என்று வருத்தத்துடன் வினவினான்.

அவன் கேள்வி அவளுக்கு புரிந்தாலும் அவள் வேண்டுமென்று செய்யவில்லை என்பதால் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

“ஏற்கனவே பெரிய பிரச்சனை நடந்திருக்கு. ஆத்துல ஏற்கனவே அம்மா நான் ஏதோ உனக்கு மட்டுமே சப்போர்ட் பண்ற மாதிரி பேசின்டு இருக்கா. இப்போ நீ வீடு வாங்கறத பத்தி பேசினா நானும் நீயும் தனியா போக பிளான் பண்றோன்னு அதுக்கும் நம்ம ரெண்டு பேர் தலையையும் தான் உருட்டுவா” என்று கவலையுடன் கூறினான்.

“அப்படியெல்லாம் அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் தெளிவா எனக்கு தனியா போக எந்த ஆசையும் இல்லைன்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன்.” என்று கூறிவிட்டு அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல திரும்பி படுத்து கொண்டாள்.

அவள் என்னதான் சுமுகமாக இருக்க தன் கோபங்களை விட்டுக் கொடுத்தாலும், அவளின் சாதாரண செயல்களை கூட பூத கண்ணாடி வைத்து பார்ப்பதும் அதற்கு அவர்களாக அர்த்தம் கற்பித்துக் கொள்வதுமாக அன்னையும் மகனும் அடிக்கடி அவள் மனதை நோகடித்துக் கொண்டே இருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. இதற்குமேல் பேசினால் எங்கே நேற்று போல சண்டை வந்துவிடுமோ என்ற பயத்தில் அமைதியாக கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.

ஆனால் கோகுலுக்கு படுக்க வேண்டும் என்றோ உறங்க வேண்டும் என்றோ தோன்றாமல் போக அறையை விட்டு வெளியே வந்து தோட்டத்தில் உலவ ஆரம்பித்தான். அவன் நடந்து கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த ஆதிநாதன் எழுந்து மகனிடம் செல்ல, இவர்கள் இருவரையும் ஜன்னல் வழியாகவே வேடிக்கை பார்க்கத் துவங்கினார் சுபாஷினி.

தந்தையும் மகனும் சற்று நேரம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கவனித்தவர் அவரும் எழுந்து அங்கே சென்றபோது

“நீங்க சொல்றது எனக்கு புரியறது பா ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா அது கண்டிப்பா நல்ல முடிவு கொடுக்காது.” என்று கூறியவன்

“இந்த வீடு வாங்கற ஐடியாவை டிராப் பண்றது தான் நம்ம எல்லாருக்கும் நல்லது.” என்று கூற அந்த கடைசி வரியை மட்டும் தெளிவாக கேட்டுக்கொண்டே வந்த சுபா கோபத்தில் கொந்தளிக்க ஆரம்பித்தார்.

“ஓஹோ மகாராணி நம்ம கூட எல்லாம் இருக்க மாட்டாங்களோ? தனியா வீடு வாங்கி போகணுமா? என்ன நேத்து ஏதோ இவங்க பேசும்போது நடுவில் போயிட்டேன், தப்புதான். மன்னிப்பு கேட்கணுமா?அதை கூட கேட்டுர்றேன். அதுக்காக என் புள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போவாளா? அவ தான் அப்படி பேசுறான்னா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அது எப்படி சமாளிக்கலாம் இங்க கூட்டம் போட்டுட்டு இருக்கேளா?, ஏன்டா உன்னால உன் பொண்டாட்டி கிட்ட அப்படியெல்லாம் போக முடியாது நான் எங்க அம்மா அப்பா கூட தான் இருப்பேன்னு சொல்றதுக்கு வாய் வரலையா?” என்று சரமாரியாக கத்த துவங்கினார்.

வெளியே மாமியாரின் கூச்சல் ஏசி போடாத அறையில் ஆருத்ராவுக்கு தெளிவாக கேட்டது என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்ற குழப்பத்துடன் எழுந்து வெளியே வந்தவள் அலங்காரமாக நிற்கும் மாமியாரை கண்டு கைகளை கட்டிக் கொண்டபடி எதிரே வந்து நின்றாள்

‘வாடியம்மா நேத்து உங்க ரூம் கதவ தட்டி உங்களுக்குள் என்ன சண்டை என்று நான் கேட்டு இருக்க கூடாது தான். தப்பு தான். என்ன பண்ணனும்? மன்னிப்பு கேட்கவா? மன்னிச்சிடு. சரியா? இதோட எல்லாத்தையும் விட்டுட்டு வயித்துல இருக்க குழந்தையை பாத்திரமா பெற்று கொடுக்கிற வழிய பாரு. சும்மா தனியா போறேன் வீடு வாங்குறேன்னு வேண்டாத வேலை எதுவும் செய்யாத.” என்று கோபத்துடன் பேசினார்.

“எனக்கு அப்படி எந்த எண்ணமும் இப்ப வர இல்ல. நான் வீடு வாங்கணும்னு நினைச்சது கூட இன்வெஸ்ட்மெண்ட் தான். இது சொன்னாலும் எப்படியும் நீங்க நம்ப போறது இல்ல. நீங்க என்ன நினைக்கணுமோ நெனச்சுக்கோங்க. உங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் விளக்கம் கொடுத்து விளக்கம் கொடுத்து தான் வாழனும்னு நினைச்சா,எனக்கு மலைப்பா இருக்கு. என்னால அப்படி இருக்க முடியாது. உங்க மனசுல தோன்ற காரணத்த நீங்க எடுத்துக்கோங்க. எனக்கு எது சரியோ நான் அதை செய்யறேன். அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டுக்குள் சென்று விட்டாள் ஆருத்ரா .

“பாருங்கோ பாருங்கோ எப்படி மரியாதை இல்லாம பேசிட்டு போறான்னு. எல்லாம் உங்களால தான்.” என்று கணவரை முறைத்தவர்,

“நல்லா அவ பின்னாடியே போடா..” என்று அவள் பின்னால் நடக்கத் துவங்கிய மகனை பார்த்தும் திட்டினார்.

15 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 20”

  1. Kalidevi

    Intha amma ethaium mulusa kekama arakoraiya ketutu pesite irukanga pa apadi ena tha kovama aaru mela . But aaru nalla pathil kodutha mamiyar ku summa summa explain kitta iruka mudiyathe ellathaiumella neramum

  2. Avatar

    இந்தம்மாவே அரைகுறை, இதுல எல்லா விஷயத்தையும் அரைகுறையா கேட்டுட்டு குதிக்குது

  3. Avatar

    Soppa yen indha amma ku mamanar um marumagal um.pesum pothu ellam kathu keka thu pola appa paiyan um pesurathu ah arai korai ah ketutu ipadi sandai pidikiraga
    Gokul yosikira vitham.thapu nu sollamudiyathu aaru yosikira mathiri yae ivan um yosipan nu solla mudiyathu yae

  4. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 20)

    நினைச்சேன்… சாண் ஏறினா முழம் சறுக்கிறதுங்கற மாதிரி, ஆரு கீழே இறங்கி வர, வர மாமியாரும், ஆத்துக்காரனும்
    நல்லா வைச்சு செய்யுறாங்க.
    கல்யாணத்துக்கு முன்னாடி பொண்டாட்டி சம்பாத்தியத்துல
    ஒரு பைசா வேணாம்ன்னு பெருசா பீத்திக்க வேண்டியது..
    ஆனா, பல்கா ஒரு அமவுண்ட் வரச்ச ஆசை யாரையும் விடறது இல்லைப்போல. பொண்டாட்டி மேல ரொம்ப அன்பு இருக்கிற மாதிரித்தான் சில நேரம் பேசுறான். ஆனா, பல நேரம் முகத்தை காட்டிடறான் இதான் இவன் நேச்சரோ….?
    இதோ, இப்ப அடுத்த பிரச்சினையை கொண்டு வந்துட்டான் பார்த்திங்களா..?
    அவளும் எத்தனை பிரச்சினைகளைத்தான்
    பிரச்சினையே இல்லாத மாதிரி
    காட்டுவா பாவம் ஆரு…!

    இந்த கோகுல்கிருஷ்ணனை
    பாம்புன்னு நினைச்சு ஒதுங்கவும் முடியலை, பழுதுன்னு நினைச்சு தாண்டவும் முடியலை. நல்லவன் மாதிரியே இருக்கிற
    நொள்ளையப்பனோன்னு தோணுது. சந்தர்ப்பம் கிடைக்கிறச்ச எல்லாம் எதையாவது ஒரு குசும்பை பண்ணிடறான். தெரிஞ்சு செய்யறானா…? தெரியாம செய்யுறானான்னே தெரியலை. ஹாலோ மிஸ்டர் கோகுல் நீங்க நல்லவாளா…இல்ல கெட்டவாளா…? அறிவாளியா..
    இல்ல அசமஞ்சுவா…?
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  5. Avatar

    இந்தம்மா பேசாம பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்காமலே இருந்திருக்கலாம் கல்யாணம் பண்ண பிற்பாடு எல்லாத்துக்கும் அவங்கள கேட்டுட்டு தான் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறது ரொம்பவே அபத்தமா இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *