Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 18

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 18

  • மகா தனது தாடையில் அடித்துக் கொண்டு நான் மகிழ் மாமாவுக்கு இப்படி ஒரு துரோகம் செய்திருக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே தனது தாடையில் அடித்துக் கொண்டால் மகி மாமா என்னை மன்னிக்க மாட்டார் தண்டிக்கவும் மாட்டார் நானே என்னை தண்டித்துக் கொண்டால் தான் உண்டு என்று சொல்லிக்கொண்டே அவளது தாடையில் அடித்துக் கொண்டு இருந்தால்
  • மகா அவளது தாடையில் அடித்துக் கொண்டு இருப்பதை தடுத்தது ஒரு கரம் உதிரனும் மகாவும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பார்த்தார்கள் அவர்கள் இருவரும் பார்த்தவுடன் நீ என்ன அப்படி மகிழுக்கு துரோகம் செய்தாய் என்று கேட்டது வேறு யாருமில்லை அது எழில் தான் எழிலை அங்கு பார்த்தவுடன் உதிரனும் மகாவும் அதிர்ச்சியாகி நின்றார்கள்
  • பிறகு உதிரன் தான் ஒரு நிமிடம் தெளிவு பெற்றுவிட்டு மச்சான் மகிழுக்கு விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டா இல்ல அதனால்தான் அழுதுட்டு இருக்கா என்று சொன்னான் தனது உதிரன் மாமா சொன்னதை எழில் நம்பவில்லை அதனால் மகாவை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான் மகா தனது தலையை கீழே குனிந்த கொண்டாள்
  • எழில் மகாவை பார்த்தவுடன் மகா தனது தலையை கீழே குனிந்து கொண்டவுடன் எழில் உதிரன் மாமா பொய் சொல்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு மகாவாக சொல்லும்  வரை இதைப் பற்றி பேசக்கூடாது என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் சரி மாமா நீங்க ரெண்டு பேரும் வெளியே வாங்க என்று மட்டும் சொல்லிவிட்டு மகாவை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தான்
  • மகாவும் தனது நண்பன் எழிலையே தான் பார்த்துக் கொண்டிருந்தால் எழில் எதும் பேசவில்லை அவன் வெளியே சென்று வீட்டில் உள்ள அனைவரையும் வெளியே வர சொல்லி இருந்தான் வீட்டில் உள்ள அனைவரும் வெளியே வந்திருந்தார்கள் என்ன என்று கேட்டார்கள்
  • அது மாலை பொழுது எழில் தான் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு நாம்  எப்போதுமே நாம் திருமணம் முடிந்த மறுநாள் தானே குலதெய்வ கோவிலுக்கு போவோம்  என்று கேட்டுவிட்டு வீட்டில் உள்ள அனைவரையும்  பார்த்தான் அனைவருமே ஆமாம் தான் அதற்கு என்ன இப்பொழுது என்று கேட்டார்கள்
  • அவன் தனது தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு அவர்கள் அருகில் சென்று தாத்தா நான் ஒன்று சொல்கிறேன் என்னை  தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள் நாம் நாளையே குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்றான் வீட்டில் உள்ள அனைவரும் ஏன் என்பது போல் தான் பார்த்தார்கள்
  • அவனும் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு மகாவை பார்த்துக் கொண்டே இப்பொழுது எந்த சூழ்நிலையில் இந்த திருமணம் நடைபெற்றது என்று உங்களுக்கே தெரியும் அதனால் அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் கால நேரங்கள் கொடுங்கள் அவர்கள் இருவரும் தங்களுக்குள் இதில் இருந்து வெளிவர வேண்டும் அதன் பிறகு அவர்கள் இருவரும் சந்தோஷமாக குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்
  • மனதில் வருத்தத்தை வைத்துக்கொண்டு பிடிக்காத கல்யாணத்தை செய்து கொண்டோமோ என்று எண்ணத்துடன் கோவிலுக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று தனது தாத்தா பாட்டி இருவரையும்  பார்த்துவிட்டு நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள் என்று தங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து கேட்டான்
  • பாண்டியம்மா பாட்டிற்கு அவ்வளவு மனது சந்தோஷமாக இருந்தது சிறுவயதாக இருந்தாலும் எழில் சொல்வது சரிதான் என்று எண்ணிவிட்டு நீ சொல்வது போல நாம் இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்தே கோயிலுக்கு செல்லலாம் என்றார் வீட்டில் உள்ள அனைவரும் பாண்டியம்மா சொல்லிவிட்டார் என்றவுடன் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்
  • எழில் சரி பாட்டி  என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் வேகமாக மொட்டை மாடிக்கு சென்று விட்டான் வீட்டில் உள்ள அனைவரும் சரி என்று விட்டு அடுத்த வேலைகளை பார்க்கச் சென்று விட்டார்கள் இரவு அவர்களுக்கு எந்த சடங்கும் செய்ய வேண்டாம் என்று பாண்டியம்மா பாட்டியே சொல்லிவிட்டார் அதனால் அவர்கள் இருவருக்கும் எந்த சடங்கும் செய்யவில்லை
  • அப்போது மகா அவளது அறைக்கு செல்லும் வேளையில் மகா என்று பாண்டியம்மா கூப்பிட்டார் அனைவருமே நின்றார்கள் என்ன பாட்டி என்று கேட்டால் நான் உங்கள் இருவருக்கும் எந்த சடங்கும் செய்ய வேண்டாம் என்றுதான் சொன்னேன் ஆனால் உனக்கு மகிழனுடைய அறையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அதற்கு சம்மதமா என்று கேட்டார்
  • மகா எதுவும் பேசாமல் வீட்டில் உள்ளவர்களுக்காக தான் பாட்டி திருமணம் செய்து கொண்டான் என்று சொன்னால் பாண்டியம்மா பாட்டி  அதுதான் நானும் சொல்கிறேன் எங்களுக்காக தான் திருமணம் செய்து கொண்டாய் சரிதான் ஆனால் இப்பொழுது இன்று இரவு இனிவரும் காலங்களும் நீ எங்கு தங்குவாய் என்றார் வீட்டில் உள்ள அனைவருமே பாண்டியம்மாவை அதிர்ச்சியாக பார்த்தார்கள்
  • மகா வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே எனக்கு எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியும் பாட்டி அனைத்து நல்லது கெட்டதும் சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருக்கிறீர்கள் நான் உங்கள் வளர்ப்பு பாட்டி எனக்கு எப்பொழுது எங்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று விட்டு தனது வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு இறுதியாக மகிழனையும் பார்த்துவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்
  • பிறகு வீட்டில் அனைவரும் வேலை இருப்பதால் அவர்களது வேலையை பார்க்கச் சென்று விட்டார்கள் நிலா இனி உடனே இருந்தால் உதிரன் மகிழும் வெளியில் இருக்கும் வேலைகளை தனது அப்பா சித்தப்பா மாமாவுடன் செய்து கொண்டு இருந்தார்கள் அனைவரும் அவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றவுடன் மகா எழிலை தேடி மொட்டை மாடிக்குச் சென்றாள்
  • மகா மொட்டை மாடிக்கு சென்றவுடன் எழிலை தேடினாள் அவன் அங்கு நின்று வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு எழில் என்று சொல்லி அவனது தொழில் மீது கை வைத்தால் அவள் வைத்து நொடி எழில் வேகமாக மகாவை அறைந்து இருந்தான் அப்பொழுது மகிழும் அங்கு வந்திருந்தான் எழில் என்று வேகமாக கத்தினான்
  • எழில் தனது அண்ணனை திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு நான் உன்னிடம் பேச விரும்பவில்லை நான் எனது தோழியை அடித்தேன் உனது மனைவியை இல்லை என்று வேகமாக கத்தினான்  அவன் அவ்வாறு கத்தியுடன் மகா தான் வேந்தா என்று எழில் கையை பிடித்தால் மகாவின் கையை உதறிவிட்டு போடி உன்னை நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கல என்றான்
  • நான் உதிரன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்ததை எழில் கேட்டிருப்பான் என்று மகா உணர்ந்தால் எதுவும் பேசாமல் தனது தலையை கீழே குனிந்து கொண்டால் அவளது தாடையை நிமிர்த்தி என்ன பார்த்து பேசுடி எப்பவுமே  வீட்டில் உள்ளவர்களுக்காக என்று எண்ணி அப்படி ஒரு துரோகத்தை நீ ஏண்டி செய்தாய் என்று கேட்டான்
  • மகிழ் தான் எழில் என்ன பேசுற என்று  எழிலின் இன்னொரு கையை பிடித்தான். தனது அண்ணன் கையை உதிர விட்டு அவனை பத்திரம் என்று  ஒற்றை கையை தூக்கி காண்பித்தான் நான் உன்னிடம் பேசவில்லை என்று சொல்லி இருந்தேன் நான் எனது தோழியிடம் பேசுகிறேன் அதற்கு உன்னுடைய அனுமதியோ இல்லை இந்த வீட்டில் உள்ளவர்கள் அனுமதியே  தேவையில்லை என்று நினைக்கிறேன் என்றான்
  • மகிழுக்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தது ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது நான் இவளை விட்டுக் கொடுத்தால் கூட இவன் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவளை விட்டுக் கொடுக்க மாட்டான் என்று அவனை எண்ணி அமைதியாக நின்றான் மகா எதுவும் பேசாமல் அழுதுக் கொண்டே எழிலின் தோளில் சாய்ந்தால் எழிலும்  எதுவும் பேசாமல் அவளை தோளில் சாய்த்து கொண்டு அவளது தலையை கோதிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்
  • பிறகு மகாவே நிமிர்ந்து எழிலை பார்த்துவிட்டு என்னால் இப்பொழுது உன்னிடம் எதுவும் சொல்ல முடியாது என்றால் எழில் அவளைப் பார்த்து அழுது கொண்டே சிரித்தான். நீ எதுவும் சொல்ல வேண்டாம் சொல்லக்கூடிய நேரத்தில் சொல்லாமல் இனிமேல் நீ சொன்னால் என்ன சொல்லவில்லை என்றால் என்ன அதான் அனைத்தும் முடிந்து விட்டதே என்று அழுது கொண்டே சிரித்தான்
  • மகாவிற்கு கஷ்டமாக இருந்தது என் மகிழுக்கு கூட கஷ்டமாக இருந்தது தனது தம்பிக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதோ அதனால் தான் இவ்வாறு பேசுகிறானோ என்று எண்ணினான் எழிலுக்கு எப்படி தெரிந்தது இவள் சொல்லி இருக்க மாட்டாளே உதிரனும் சொல்லி இருக்க மாட்டானே வேற எப்படி தெரிஞ்சது என்று எண்ணினான் அப்போது உதிரனும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தான்
  • பிறகு மகன் அறைக்கு சென்றான் மகள் அங்கு இல்லை என்றவுடன் வீட்டில் உள்ளவர்களிடம் மகள் எங்கே என்று கேட்டான் அவர்கள் அவன் மேலே இருக்கிறான் மொட்டை மாடியில்  என்றவுடன் மேலே வந்தான் அப்பொழுது அங்கு மகா எழில் இருவரும் இருப்பதை பார்த்துவிட்டு அமைதியாக வந்தான் எழில் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து எழில் என்று அவனது தோலில் கை வைத்தான்
  • தனது மாமாவின் கையை வேகமாக உதிறி விட்டு நீ கூட என்னை ஏமாத்திட்ட இல்ல மாமா என்றான் உதிரன் வேகமாக எழிலை கட்டியணைத்துக் கொண்டு அழுதான் நான் சொல்வதை கொஞ்சம் கேளுடா மச்சான் என்றான் அப்போது எழில் தான் வேண்டாம்  மாமா எந்த விளக்கமும் யாரிடமும் கேட்க நான் விரும்பவில்லை இந்த நிமிடம் வரை நான் இவகளுக்கு உண்மையாக தான் இருந்திருக்கிறேன் ஆனால் இவள் எனக்கு உண்மையாக இல்லை
  • அப்போ என்னுடைய நட்பிற்கு என்ன அர்த்தம் என்றான் மகிழன் சிரித்தான் இவனுக்கு உண்மையாக இருக்கவில்லையா இவள்   எனக்கே உண்மையாக இல்லை என்று மனதிற்குள் நினைத்தான் எழில்  வேகமாக தனது அண்ணனை நிமிர்ந்து பார்த்துவிட்டு முறைத்தான் மகிழன் தனது தம்பி தன்னை பார்த்து முறைத்தவுடன்  தான் மனதில் நினைத்ததை அவனும் உணர்ந்து இருக்கிறான் என்று நினைத்தான்
  • எழில் தனது மாமாவை பார்த்து சிரித்துக் கொண்டே மாமா இங்கே ஒருத்தவங்க நினைச்சுட்டு இருக்காங்க என்னோட தோழி மட்டும் தான் தப்பு செஞ்சாங்கனு அப்ப அவங்க உண்மையாக இருந்திருந்தால் அவங்க வாயால் அனைத்து உண்மைகளையும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி இருந்திருக்கலாமே மகா மட்டும் தான் சொல்லணும் என்று அவசியமில்லை
  • மகாவால் சொல்ல முடியவில்லை என்ற போது அவங்களுக்கு வேணும்னு நினைச்சு இருந்த  அவங்களும் சொல்லி இருக்கலாம் மாமா அவங்க மேலையும் தப்பு இருக்கு ஆனா அவங்க மேல தப்பே இல்லன்ற மாதிரி காமிச்சிருக்கிறாங்க மகா மட்டும்தான் இந்த குடும்பத்துக்காக யோசிச்சானா அவங்க யாருக்காக யோசிச்சாங்க எனக்கு ஒன்னும் புரியல மாமா இவங்க செஞ்சா தப்பு இல்ல அதுவே என் மகா செஞ்ச தப்பா என்று விட்டு மகாவை பார்த்தான்
  • அவள் தனது தலையைக் கீழே குனிந்து கொண்டு அழுதால் இவ்வளவு நேரம் எழில் தனது மாமாவை தான் ஜாடை மாடையாக அவ்வாறு பேசுகிறான் என்றவுடன் எழில் என்று அவனை அடிக்க கை ஓங்கினால் மகா மயிலு என்று உதிரனும் மகிழனும் கத்தினார்கள் மக அடிக்க வந்த கையை தனது தாடையிலே போட்டு அடித்துக் கொண்டே அழுதாள்
  • எழில் அவள் தாடையில் இருந்து கையை எடுத்துவிட்டு உன்னால் இந்த குடும்பத்திற்காக மட்டும்தான் யோசிக்க முடியும் உன்னை நீயே தான் அறிந்து கொள்ள செய்வாய் உன்னால் வேறு என்ன செய்ய முடியும் உன் மேல மட்டும் தான் தப்பு என்று சொல்லிட்டு இருக்காங்க அவங்க மேலயும் தப்பு இருக்கிறது என்று என்னைக்கு உணருவாங்களோ ..
  • அவங்க மேலயும் தப்பு இருக்குன்னு என்னைக்கி அவங்க உணர்றாங்களோ அதுவரைக்கும் உன் வாழ்க்கை நல்லா இருக்காது என்று விட்டு மகாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே தர தர வென இழுத்துக்கொண்டு கீழே சென்று விட்டான் உதிரனும் மகிழனும் எழில் எழில் என்று கத்தினார்கள் ஆனால் இருவர் சொல்வதையும் கூப்பிடுவதையும் காதில் வாங்கியும் வாங்காதது போல தனது தோழியான மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்
  • எழிலுக்கு உண்மையாகவே அனைத்து உண்மைகளும் தெரிந்து விட்டதா ..
  • எழில் இப்பொழுது என்ன முடிவு எடுப்பான் தனது தோழிக்காக தனது அண்ணனையே எதிர்த்து நிற்கிறான் …
  • எழிலும் மகிழனும் பிரிந்து விடுவார்களா…
  • மகிழ் தன்மேலும் தவறு இருக்கிறதா என்று எண்ணி வருந்தம்  கொள்வானா…
  • என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
  • அன்புடன்
  • ❣️தனிமையின் காதலி❣️

பிரதிலிபில் என்னை ஃபாலோ செய்து என்னுடைய மற்ற படைப்புகளையும் படித்துக் கொள்ளுங்கள் kani suresh “தனிமையின் காதலி”

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 18”

  1. CRVS 2797

    இப்படி கதையையும் சொல்லி, கேள்விகளையும் கேட்டா நாங்க என்ன பண்றது. எங்களுக்கும் அதே கேள்விகள் தான் இருக்குது.

  2. Kalidevi

    Ezhil kekurathu crt thane magizh a senjathu thappu na nee sollama irunthathu thappu tha avan friend ku crt ah support panran anna nu pakama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *