Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 38

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 38

மகிழ் மகாவை கூப்பிட்டவுடன் மகா வேகமாக ஏதோ ஒரு யோசனையில் என்ன மகிழ் என்று கேட்டால் அப்படி  கேட்டவுடன் தான் அவள் ஒன்றை உணர்ந்தால் தன் வீட்டில்  உள்ள அனைவரின் முன்பும் தனது மாமாவை பெயர் சொல்லி அழைத்து விட்டோம் என்று பிறகு அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்தவுடன் தனது இருக்கண்களையும் மூடி பிறகு ஒற்றை கண்ணை மட்டும் லேசாகத் திறந்து நாக்கை கடித்துக் கொண்டே மகிழை பார்த்தால்

மகிழ் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு மகாவை பார்த்து சிரித்துக் கொண்டே அவனது அறைக்குச் சென்று விட்டான் இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்று மகிழ் கூப்பிடாமலே இதோ வரேன் மாமா என்று சொல்லிக் கொண்டே அவளது அறைக்கு  சென்றால் அவள் அறைக்குள் வந்தவுடன் மகிழ் அவளை பின்பக்கம் இருந்து இருக்கி கட்டி அணைத்தான்

மகாவும் அதை ஏற்றுக்கொள்ள தான் செய்தால் இப்பொழுது அவளுக்கு அது தேவையானதாக இருந்தது என்று கூட சொல்லலாம் ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு மகிழ் அவளது காது மடலை கடித்து. விட்டு அவளிடமிருந்து விலகினான் மகா கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது அந்த கண்ணீர் எதனால் என்பது மகிழும் உணர்வான் அதனால் அவளது தாடையில் கை வைத்து மயிலு என்றான்

மகா வேகமாக மகிழை கட்டி அணைத்தால் எதையாவது நினைச்சுட்டு இருக்காத ஒழுங்கா கிளம்பி வேலைக்கு போற வேலையை பாரு ஏன் என்றும் சொன்னான் வேறு எதுவும் சொல்லவில்லை மகா சரி என்று தலை ஆட்டினாள் பிறகு அவளுக்கு நினைவு வந்து  எதற்கு மாமா என்ன முன்பு கூப்பிட்டாய் என்று கேட்டால் மகிழுக்கு சிரிப்புதான் வந்தது

மகிழ் சிரித்தவுடன் மகா தான் அவனது முதுகிலே இரண்டு போட்டு டேய் எதுக்கு கூப்பிட்ட என்று தானே கேட்டேன் அதுக்கு எதுக்கு சிரிக்கிற என்று கேட்டால் மேடம் என்னை வெளியே என்ன சொல்லி கூப்பிட்டீர்கள் என்று ஒரு மாதிரி குரலில் அது என்னவென்று பிரிக்க முடியாத குரலில் தான் கேட்டான் கோபம் வருத்தம் வலி சந்தோஷமா இப்படி எதுவுமே தெரியாத வகையில் தான் கேட்டான் 

மகா வேற எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் பிறகு மகிழ் தான் நேரமாகுவதால் அது உனக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கிறேன் அதை கரெக்ட்டா என்று செக் பண்ணி விட்டு பாண்டிக்கு அனுப்பி விடு அவன் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அனுப்பிவிடுவான் எனக்கு நேரமில்லை நான் இன்று ஆபீஸ் செல்ல வேண்டும் முக்கியமான வேலை இருக்கிறது என்றான்

மகாவும் சரி என்றால் பிறகு மகிழ் அவனது அறையில் இருந்து வெளியில் வந்து விட்டான் வேலை இருப்பதால் பெரியவர்கள் அனைவரும் அவரவர் ஒரு வேலைகளை பார்க்கச் சென்று விட்டார்கள் சிறியவர்கள் அனைவரும் வரவேற்பு அறையில் தான் காத்துக் கொண்டிருந்தார்கள் மகா ஒரு நிமிடம் நின்று விட்டு இதை எப்பொழுதாக இருந்தாலும் சமாளித்து தான் ஆக வேண்டும் என்று எண்ணி விட்டு வெளியில் வந்தால்

அவள் வெளியே வந்தவுடன் வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரும் அது எப்படி வேகமாக என்ன மகிழ் என்று கேட்கிற அப்போ ரொம்ப நாட்களாக நீ மகிழ் என்று தான் அழைத்துக் கொண்டிருக்கிறாயா என்று கேட்டார்கள் மகா அனைவரையும் பார்த்து அமைதியாக இருந்தால் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி தான் உங்களுக்கெல்லாம் என்ன வந்துச்சு அவள் அவ புருஷனை பெயர் சொல்லி கூப்பிடறா இல்லை எப்படியோ கூப்பிடுற

உங்களை எல்லாம் யாரு கேட்டா நீங்க எல்லாம்  யாரையும் பெயர் சொல்லி கூப்பிடாம தான் இருக்கீங்களா அதுவும் இந்த  நிலா குட்டியை சொல்லவே வேண்டாம் இந்த எழிலையும் முகிலையும் பேர் சொல்லித்தான் கூப்பிடுறா அதுக்குலாம் என்ன பண்றது என்று மகாவுக்கு சப்போர்ட் செய்தார்

பிறகு வீட்டில் உள்ள சிறியவர்கள் அனைவரையும் எல்லாம் அவர்கள் அறைக்கு செல்லுங்கள் என்று விட்டு  மகா என்று அவளை அழைத்தார் பாட்டி என்று வந்தால் மகா இனி நீ அவனை எப்படி வேணாலும் கூப்பிடு யாரும் எதுவும் சொல்ல மாட்டோம் அதற்காக அனைவரின் முன்பும் இப்படி கூப்பிடக்கூடாது

ஒரு சில நேரங்களில் அவனைப் பார்க்க ஊரில் உள்ளவர்களோ இல்லை அவன் வேலை விஷயமாக பேசுவதற்கு வெளி ஆட்கள் வரலாம் அவர்கள் முன்பு  நீ அவனை பெயர் சொல்லி கூப்பிட்டு விட்டால் கஷ்டமாகிவிடும் அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ளவர்கள் முன்பும் கூப்பிட்டால் கூட ஒரு சில நேரங்களில் எங்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும் அதனால் பார்த்து பேசு என்றார்

மகா சரி பாட்டி தெரியாமல் ஏதோ ஒரு யோசனை இல்லை என்று விட்டு அமைதியாகி விட்டாள் பாண்டியம்மா சிரித்தார் பிறகு சரி  நீ போயிட்டு உங்களுடைய வேலையை பார் என்று அனுப்பி வைத்தார் சரி என்று விட்டு மகாவும் சமையல் அறைக்கு சென்றாள் அப்போது எழில் அங்கேயே நின்று கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு எழில் நோட்ஸ் என்னுடைய அறையில் இருக்கிறது போய் எடுத்துக்கொள் என்றால்

சரி என்று விட்டு எழிலும்  நோட்ஸ் எடுத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்று விட்டான் ஒரு முறை அதை பார்த்துவிட்டு அவன் வேலைக்கு கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டது என்பதால் வெளிய வந்து வேலைக்கு கிளம்பினான் அனைவரும் அவர்களது வேலையை பார்க்கச் சென்று விட்டார்கள் இனி வேலைக்கு செல்லவில்லை என்பதால் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தால்

இனி உனக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமா என்றால் மகா இனி சிரித்துக் கொண்டே எனக்கு இப்பொழுது எதுவும் வேண்டாம் என்னை பார்த்துக்கொள்ள வீட்டில் இத்தனை பேர் இருக்கிறார்கள் நீ கிளம்பு காலேஜுக்கு போக வேண்டும் அல்லவா என்றால் அப்பொழுது இனி தான் நீ திங்கள் கிழமையில் இருந்து தானே நிலா காலேஜ் போற என்றால் மகா இனியை பார்த்து முறைத்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அவளது அறைக்குச் சென்று விட்டால்

மகா ஏதாவது சொல்வாளா என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் அவளை ஒரு எதிர்பார்ப்போடு பார்த்தார்கள் அவள் எதுவும் பேசாமல் சென்றவுடன் அமைதியாக அவர்களது வேலையை பார்த்தார்கள் அனைவரும்  கிளம்பி விட்டு சாப்பிடுவதற்கு அவர்கள் அறையில் இருந்து வெளியில் வந்தார்கள் சிறியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் சிறியவர்கள் சாப்பிட பிறகுதான் பெரியவர்கள் சாப்பிடுவார்கள்

காலை 8 மணி அளவில் சிறியவர்கள் சாப்பிட்டால் தான் அவர்களது வேலையை பார்க்கவும் நிலா கல்லூரிக்கும் செல்ல கரெக்டா இருக்கும் என்பதால் அவரவர் அவரது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தவுடன் நிலா என்று மகிழ் கூப்பிட்டான் என்ன மாமா என்று கேட்டால்

இல்லடா நேற்று வந்தவர்கள் உன் திருமணத்தை பற்றி பேசினார்களே என்றான் நிலா எழில் பார்த்தால்  அதுக்கு என்ன மாமா என்றாள் இல்லடா நீ அதைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டான் எழில் அமைதியாக தான் இருந்தான் மாமா நீங்க யாருமே என்னை இப்போது கல்யாணம் பண்ணி தர மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும் ஆனா நீங்க வேற என்ன கேட்க வரீங்க என்று கேட்டால்

மகிழ் எழிலை பார்த்துவிட்டு இல்லடா நிலா குட்டி மதன் வந்து நீங்க கல்யாணம் பண்ண வைக்கும் போது என்று கேட்கும் பொழுது எழில் வந்து அப்படி ஒரு நிலைமை வராது என்று சொன்னான் இல்ல என்றான் அதனால என்ன மாமா என்று கேட்டால் இல்லடா நிலா குட்டி நீ யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்டான் நிலா சிரித்துக் கொண்டே என்னை பார்த்தால் அப்படி தான் தெரியுதா மாமா

நான் யாராச்சும் விரும்புற மாதிரி இதுவரை எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்ல என்றால் சரிடா  இனிமேல் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் என்றான் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் இருக்க மாட்டேன் என்னை பற்றி உங்களுக்கு தெரியாதா என்றால் உனக்கு விருப்பம் இருக்கும் பொழுது நீ சொல்லுவ சரி அதனால உன் படிப்பு  கேட்டு போயிடுமா என்றான்

எனக்கு  புரியல மாமா என்றால் இல்லடா இப்பவே நீ யாரையாச்சும் விரும்ப ஆரம்பித்தால் என்று  எழிலை பார்த்துக் கொண்டே கேட்டான் நிலா தான் மகிழின் பார்வை எழிலை பார்ப்பதை  பார்த்து சிரித்துக் கொண்டே மாமா இப்போதைக்கு என் மனசுல யாரும் இல்ல அதுக்காக லாஸ்ட் வரைக்கும் யாருமே என் மனசுல வர மாட்டாங்கன்னு நான் சொல்லவும் முடியாது ஆனால் என்னால் ஒரு விஷயம் சொல்ல முடியும்

இப்ப நான் விரும்ப வேண்டும் என்று நான் யோசிக்க மாட்டேன் எனக்கு கனவு லட்சியம் என்று ஒன்னு இருக்கு அத முடிச்சிட்டு தான் நான் கல்யாணமே பண்ணிக்கலாம் என்று நான் இருக்கேன் அப்படி இருக்கும்போது அதுக்குள்ள என் மனசுல ஒருத்தங்க வந்துருவாங்க அப்படின்னு சொல்ல முடியாத ஒன்னு அதுக்காக என் படிப்பு ஸ்பாயில் ஆயிடுமா அப்படின்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல

எனக்கு கவனம் சிதறுது அப்படின்ற பட்சத்துல நான் என் படிப்பை உதர வேண்டுமா இல்ல எனக்குன்னு ஒரு விருப்பத்தை உதற வேண்டுமா என்று கேட்டால் எனக்கு என் படிப்பு என் கனவு தான் முக்கியம் அதை தாண்டி தான் எனக்கு வேற எதுவுமே என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் எழிலையும் பார்த்துவிட்டு சென்றாள் அவள் எண்ணியது என்ன என்றால் மகிழ் மாமா எழில் மாமாவிடம் கேட்டிருப்பார் அப்போது எழில் மாமா நிலா கனவு படிப்பிற்காக மட்டும்தான் இப்பொழுது நான் அவளுக்கு அப்படி ஒரு சூழ்நிலை வராது என்று சொன்னேன் என்று சொல்லிருப்பார்

எழில் சொல்லியது போல் நான் இப்பொழுது யாரையும் விரும்ப மாட்டேன் அப்படி எனக்கு விருப்பம் ஒன்று வந்தால் என்னுடைய படிப்புக்கு முன் வேறு எதுவும் எனக்கு பெரிதாக தெரியாது என்பதை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்  என்பதற்காகத்தான் சொன்னால் அதனால்தான் இறுதியாக எழிலையும் பார்த்துவிட்டு வந்தால் திரும்ப என்ன யோசித்தாலோ மாமா என்று அழைத்துக் கொண்டு வந்து நின்றால்

அப்பொழுது என்ன நிலா என்ன  குட்டி சாத்தான் என்று எழில் மகிழ் இருவரும் ஒரே போல் கேட்டார்கள் மகாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது ஏன் வேகமாக கூட சிரிக்க செய்தால் நிலாவிற்கு கூட ஒரு நிமிடம் சிரிப்பு வந்துவிட்டது ஆனால் அவள் அமைதியாக இருந்தால் அவள் யாரை மாமா என்று கூப்பிட்டால்  என்று கூட தெரியாமல் இருவருமே வேகமாக சொல்லு என்று கேட்டார்கள் அதனால் தான் மகாவிற்கு சிரிப்பு வந்தது

பிறகு மகிழ் தான் சொல்லு நிலா என்றான் நிலா எழிலை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு இல்ல மாமா எதுக்காக இப்ப இந்த கேள்வி என்றால் இல்லடா இவன் பேசியதால் நீ உன் மனசுல ஏதாச்சும் நினைத்து இருந்தால் அதனால்  தான் என்றான் நான் யாரையும் தப்பா நினைக்கல எனக்கு உங்கள் இருவர் மீதும் நம்பிக்கை இருக்கு என்று விட்டு வேறு எதுவும் சொல்லாமல் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்

ஏனென்றால் அவள் இப்பொழுது மாமா என்று கூப்பிட்டது எழிலை தான் அவள் கல்லூரி விஷயமாக ஏதோ ஒன்றை கேட்பதற்காக எழிலை அழைத்தால் ஆனால் மகிழ்  தன்னை தான் அவள் அழைத்திருக்கிறாள் என்று எண்ணி கேட்டவுடன் அமைதியாக மகிழ் இடம் ஏதோ கேட்டுவிட்டு சென்றால்  எழிலுக்கும் அவள் தன்னை தான் இப்போது மாமா என்று கூப்பிட்டால் என்று தெரியும்

ஆனால் இப்பொழுது மகிழுக்கு அவள் மகிழை அழைக்கவில்லை என்று தெரிந்தால் மகிழ் மனது காயப்படுமோ என்று எண்ணினான்..

ஒரு வேலை நிலா எழிலை தான் அழைத்தால் என்று  மகிழுக்கு தெரிய வந்தால் மகிழின் மனது காயப்படுமா மகிழ் வருந்துவானா…

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

❣️தனிமையின் காதலி ❣️

சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்களின் கருத்துக்களே என்னை அடுத்த பாகம் எழுத தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன்

மிக்க நன்றி🙏

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 38”

  1. இந்த கதையிலே நிறைய அக்கப்போரு இருக்கும் போலவே… பேரை வைச்சு கூப்பிட்டாலும் குத்தம் சொல்றாங்க, மாமா…ன்னு கூப்பிட்டாலும்
    யாரைன்னு கேள்வி கேட்குறாங்க…. அய்யய்யோ… ரொம்பத் தான்லௌள்ளுப்பா..!
    😜😜😜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *