Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 12

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 12

  • மகா மகிழன் இருவரும் ஒரே போல் எனக்கு இந்த  திருமணத்தில் விருப்பமில்லை என்றவுடன் காவேரி இருவரையும் பாவமாக பார்த்தார் பிறகு காவேரி தனது மகள் கயல்விழியை முறைத்து பார்த்துவிட்டு எல்லாம் உன்னால் வந்தது டி நீ முதலில் திருமணத்திற்கு விருப்பமில்லை என்று சொல்லி இருந்தால்
  • நான் ஆரம்பத்திலேயே மகாவை தான் மகிழனுக்கு பேசியிருப்பேன் அப்படி செய்திருந்தால் இந்த குடும்பமும் நன்றாக இருந்திருக்கும் உன்னை விட ஏன் என்னை விட இந்த வீட்டில் உள்ள அனைவரையும் மகாவை தவிற  வேறு யாராலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது அதுவும் எனது மருமகனை அவளைத் தவிர யாராலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது
  • இது எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் உன்னை வைத்துக்கொண்டு அவளுக்கு திருமணம் செய்ய முடியாது என்ற காரணத்தினால் உனக்கு போய் அவனை பேசினேன் பாரு என்னுடைய தவறுதான் என்றார் இப்பொழுது காவேரி  கயலை திட்டுகிறார் என்றவுடன் அத்தை ஒரு நிமிடம் அமைதியாக இருங்கள் என்று விட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் அத்தையை அழைத்துக் கொண்டு செல்ல சொல்லி சொன்னான்
  • பிறகு கயலையும் கயல் அருகில் இருக்கும் கயலின் கணவனையும் அவர்கள் வீட்டு வாசலை தாண்டி கொஞ்சம் தூரம் அழைத்துச் சென்று பேசினான் என்னடா மா கயல் இப்படி செய்து வைத்திருக்கிறாய் நீ ஏற்கனவே எங்களிடம் நீ இப்படி ஒருவரை விரும்புகிறேன் என்று சொல்லி இருந்திருக்கலாமே நாங்கள் உனக்கு திருமணம் செய்து வைத்திருப்போமே என்றான்
  • நீ சொல்வது என்னவோ உண்மைதான் மாமா நான் ஏற்கனவே என்னுடைய காதலை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும் தான் என்னுடைய தவறுதான் என்றால் இந்த கல்யாண பேச்சு  எடுக்கும் பொழுது நீ எனக்கு எந்த திருமணத்தில் விருப்பமில்லை நான் வேறு ஒருவரை விரும்புகிறேன் என்று சொல்லி இருக்கலாமே என்றான்
  • ஆமாம் மாமா நீ சொல்வது உண்மைதான் நானும் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லலாம் என்று நினைத்தேன் உன்னிடம் கேட்கும்பொழுது நீ எனக்கு விருப்பமில்லை என்று சொல்வாய் என்று நினைத்தேன் ஏனென்றால் நானோ இல்லை நீயோ இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று எண்ணியது இல்லையே அதனால் நீ என்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்வாய் என்று நினைத்தேன்
  • ஆனால் நீ வீட்டில் உள்ள அனைவரிடமும்  உங்களது விருப்பம் என்று உடன் எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது சரி டா நீ அதன் பிறகு என்னிடமாவது தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கலாமே என்றான் நீ சொல்வது எல்லாம் உண்மைதான் மாமா நான் உன்னிடம் தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்தை சொல்லலாம் என்று தான் இருந்தேன் சொல்லவும் வந்தேன்
  • இல்லையே நீ எப்பொழுது என்னிடம் வந்து சொன்னாய் என்றான் நான் சொல்ல வந்தேன் என்று சொன்னேன் உன்னிடம் சொன்னேன் என்று சொல்லவில்லை மாமா அன்று நான் உடனே வர முடியவில்லை நீ வீட்டில் உள்ள அனைவரிடமும் உன்னுடைய சம்மதத்தை சொல்லிவிட்டு உன்னுடைய அறைக்கு போன பிறகுதான் இனி மாசமாக இருக்கிறாள் என்பது வீட்டில் அனைவருக்கும் தெரிந்தது
  • அதன் பிறகு நாங்கள் அனைவரும் அவளை பார்த்துக் கொண்டிருந்தோம் அதன்பிறகு நான் உன்னிடம் சொல்லலாம் என்று வரும் பொழுது நீ உதிரன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன் என்றவுடன் நிமிர்ந்து பார்த்தான் மகிழன் கயல் கண்ணை திறந்து முடிவு ஆமாம் அப்போதுதான் நான் ஒரு உண்மையை தெரிந்து கொண்டேன்
  • அதன் பிறகு என்னுடைய காதலை உன்னிடம் எப்படி சொல்வது என்று தான் சொல்லவில்லை என்றால் கயல் என்றான் ஆமாம் மாமா நீ மகாவை விரும்புவதாக அண்ணன் உன்னிடம் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டு விட்டேன் அப்படி இருக்கும்போது நீ  ஏன் உன்னுடைய காதலை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லவில்லை என்று எண்ணினேன் அப்பொழுது முழுமையாக நீங்கள் இருவரும் பேசுவதை கேட்டேன்
  • மகா எனக்காகவும் இந்த குடும்பத்திற்காகவும் அம்மாவிற்காகவும் உங்களது காதலையே தியாகம் செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தேன் உன்னுடைய காதலை அவள் இந்த குடும்பத்திற்காக விட்டுத் தரலாமா என்று எண்ணினேன் எனக்கு அவள் மேல் கோபமாக வந்தது சரிடா நீ அவளிடம் ஆவது உன்னுடைய காதலை சொல்லி இருக்கலாமே ஆமாம் சொல்ல வேண்டும் தான்
  • நான் அவளை நாலு வார்த்தை கேட்கலாம் என்று அவளது அறைக்குச் சென்றேன் என்ன என்று  கேட்டான் ஆமாம் மாமா  உன்னை இந்த குடும்பத்திற்காக அவள் எப்படி விட்டுக் கொடுக்கலாம் என்று அவளை நாலு வார்த்தை கேட்கலாம் என்று சென்றேன் அப்போது அவள் அவளது அறையில் படுத்துக்கொண்டு உன் போட்டோவை வைத்துக்கொண்டு அழுது கொண்டு இருந்தால்
  • புலம்பி கொண்டு இருந்தால் என்னால் அவரிடம் எதுவும் கேட்க முடியவில்லை என்றவுடன் மகிழ் வேறு எதுவும் பேசாமல் கயலையே பார்த்துக் கொண்டிருந்தா ஆமா நான்  அவளது அறைக்கு செல்லும்போது உன்னுடைய போட்டோவை வைத்துக்கொண்டு என்னை மன்னித்து விடு மாமா எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் இந்த குடும்பம் என்னால் பிரிந்தது என்று இருக்கக் கூடாது
  • என்னால் மட்டும் அல்ல வேறு யாராலும் இந்த குடும்பம் பிரியக்கூடாது என்று எண்ணுகிறேன் அப்படி இருக்கும்போது நானே இந்த குடும்பம் பிரிய காரணமாக இருக்கக் கூடாது பெரியம்மா கயலை உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணிய பிறகு நான் என்னுடைய காதலை சொன்னால் தவறாக போய்விடும் அப்படி நான் சொல்லி வீட்டில் உள்ளவர்கள் ஒத்துக் கொண்டாலும் ஏன் பெரிம்மாவே ஒத்துக் கொண்டாலும் பின்னாலில் பெரிம்மாவிற்கு சிறிதாக மன கஷ்டம் ஏற்பட்டு அவரது மனதில் வருத்தம் வந்தாலும் அது நம் குடும்பத்தை அழித்துவிடும்
  • வீட்டில் உள்ள அனைவரும் நீ கயலை திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்று உடன் சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் உன்னை விரும்புகிறேன் நீ என்னை விரும்புகிறாய் என்று சொன்னால் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் அது மட்டுமில்லாமல் எப்பொழுது வேண்டுமானாலும்  பெரியம்மாவுக்கும்  மாமாவுக்கும் சண்டை ஏற்படலாம்
  • அப்படி ஒரு சண்டை ஏற்படும் நான் விரும்பவில்லை அதுவும் என்னால் தான் இந்த குடும்பத்துக்காக உன்னையும் உன் காதலையும் தூக்கி போடுகிறேன் நான் சுயநலக்காரி தான் ஆனால் நீ என்னை புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன் புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நீ இருப்பாய் என்று நான் எண்ணவில்லை நினைக்கவில்லை ஆனால் எனக்கு வேறு எதுவும் செய்ய தோன்றவும் இல்லை உன்னைப் பிரிந்தால் இந்த குடும்பம் ஒத்துமையாக இருக்கும் என்றால் அதை நான் இந்த குடும்பத்திற்காக செய்வேன் என்று பேசிக் கொண்டே அழுது கொண்டிருந்தாள்
  • அவளும் உன் மேல் உயிராக தான் இருக்கிறாள் ஆனால் இந்த குடும்பத்திற்காக அவள் உன்னையையும் உன் காதலையும் தூக்கி போடுவது எனக்கு விருப்பமில்லைதான் ஆனால் அவளே இப்படி அழுது கொண்டிருக்கும் வேளையில் அவளிடம் எப்படி நான் போய் கேள்வி கேட்பது என்று அமைதியாக வந்து விட்டேன் அவனும் சரிடா அப்பொழுது நீ வீட்டில் உள்ளவர்களிடமோ இல்ல உதிரனிடமோ சொல்லி இருக்கலாமே
  • சரிதான் நீ சொல்வது போல் செய்திருக்கலாம் தான் மாமா நான் வீட்டில் எல்லோரிடமும் சொல்லி இருந்தால் அப்போது வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் சொல்லியிருந்தால் என்னை நான் விரும்பியவருக்கு திருமணம் செய்து வைத்திருப்பார்கள் தான் ஆனால் உனக்கும் மாகாவுக்கும் திருமணம் நடைபெறுமா என்றால் என்ன கயல் விளையாடுகிறாயா என்னை வேண்டாம் என்று சொன்னவளை நான் எப்படி திருமணம் செய்து கொள்வேன் நீ என்ன நினைக்கிறாய் என்று கோவமாக கேட்டான்
  • அவள் சிரித்துக் கொண்டே நீ சரியாக சொன்னாய் மாமா அதையேதான் நானும் யோசித்தேன் மகா உன்னை இந்த குடும்பத்திற்காக வேண்டாம் என்ற பொழுது நானே இந்த திருமணம் எனக்கு வேண்டாம் நான் வேறு ஒருவரை விரும்புகிறேன் என்று சொன்னால் நீ மகாவை திருமணம் செய்து கொள்வாயா என்றவுடன் மகிழ் கயல் என்றான்
  • கயல் சிரித்துக் கொண்டே எனக்கு நீயும் மகாவும் ஒன்றாக சேர வேண்டும் அதற்கு என்ன வழி என்று தான் யோசித்தேன் அதற்காக நீ இப்படி வீட்டில் உள்ள அனைவரையும் எதிர்த்துக் கொண்டு இப்படி இத்தனை சொந்த பந்தங்கள் இருந்தும் அனாதையாக திருமணம் செய்ய வேண்டுமா என்றான் அப்பொழுது மகிழும் கயலின் அருகில்  இருப்பவனை பார்த்தான்
  • என்ன பாஸ் இவள் தான் இப்படி அனாதை போல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டால் நீங்களும் ஒத்துக் கொள்வீர்களா என்றான் இல்ல பாஸ் நான் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றான் மகிழ் கயலை பார்த்தான்
  • ஆமா மாமா இவன் இப்படி நான் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் அதுவும் உன்னை இந்த இடத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டு இவனை திருமணம் செய்து கொள்வது இவருக்கு பிடிக்கவில்லை என்றால் பின்ன எப்படி என்றான் நான் இவருடைய அப்பா அம்மாவிடம் பேசினேன் என்றால் என்ன என்றான் நாங்கள் இருவரும் காதலிப்பது அவருடைய பெற்றோர்களுக்கு தெரியும்
  • அவர்கள் எப்பொழுதே ஒத்துக் கொண்டார்கள் உன்னுடைய திருமணம் முடிந்த பிறகு நான் வீட்டில் வந்து பேசலாம் என்று இருந்தேன் அப்பொழுதுதான் அம்மா உனக்கும் எனக்கும் திருமணம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்தார் அதன் பிறகு தான் நான் உன்னிடம் பேசலாம் என்று  வந்த பொழுதுதான் நீ மகாவை விரும்புவதே எனக்கு தெரிந்தது ஆனால் எனக்கு இந்த திருமணத்தை நிறுத்த விருப்பமில்லை
  • நான் திருமணத்தை நிறுத்தினாலும் நீ மகாவை திருமணம் செய்து கொள்ள மாட்டாய் என்பதால் தான் நான் ஒரு முடிவெடுத்தேன் அதை இவரிடமும் சொன்னேன் இவர் ஒத்துக் கொள்ளவில்லை அதன் பிறகு இவருடைய பெற்றோர்களிடம் பேசினேன் அவர்கள் தான் எனக்காக இவரிடமும் பேசி திருமணத்தை நடத்தி வைத்தார்கள் என்றால் அப்படி என்ன செய்தாய் என்றான்
  • கயல் தனது மாமனையே பார்த்துவிட்டு என்னை மன்னித்து விடு மாமா நான் அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லி இருந்தால் எனக்கு விருப்பமான இவரை வீட்டில் உள்ளவர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைத்திருப்பார்கள் ஆனால் நீ மகாவை திருமணம் செய்து கொண்டிருக்க மாட்டாய் வீட்டில் உள்ளவர்களும் மகாவிற்கு வயதாகிறது என்று மகாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்திருப்பார்கள்
  • ஏன் அவளுமே கூட திருமணம் செய்து கொள்வாள் ஏனென்றால் அன்று அவள் அப்படித்தான் பேசினாள் என்ன பேசினால் என்பது போல மகிழ் பார்த்தான் அன்று நான் அவளது அறைக்குச் சென்றபோது  மாமா நீ கயலை திருமணம் செய்து கொண்ட பிறகு நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் நான் இந்த வீட்டில் இருந்தால் அது உன்னுடைய வாழ்க்கைக்கும் நல்லதில்லை கயல் உடைய வாழ்க்கைக்கும் நல்லது இல்லை
  • நீ என்னை மறக்கவில்லை என்றாலும் குடும்பத்திற்காக கயலை திருமணம் செய்து கொள்வாய் ஆனால் நான் இதே வீட்டில் இருந்தால் நீ கயலுடன் சேர்ந்து வாழ மாட்டாய் நான் வீட்டில் உள்ளவர்களுக்காகவும் உன்னுடைய நல்லதற்காகவும் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை உனக்கு திருமணம் ஆன உடன் திருமணம் செய்து கொண்டு சென்று விடுவேன் என்று பேசினால் அந்த நிமிடம் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது என்றால்
  • மகிழ் உயிர் போகும் வலியை உணர்ந்தான் அவள் தன்னை மனதில் வைத்துக் கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாளா என்று மனதிற்குள் எண்ணினான் அதேதான் கயல் வெளியே கேட்டாள் எப்படி மாமா மகா உன்னை மனதில் வைத்துக் கொண்டு வேறொருவரை மணந்து கொள்வாள் நீ வாழ வேண்டும் என்பதற்காகவோ இல்லை இந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒருவரை அவள் திருமணம் செய்து கொண்டால் கூட அவள் நன்றாக இருப்பாளா என்றால்
  • மகிழ் எதுவும் பேசாமல் கயலையே பார்த்துக் கொண்டிருந்தான் அதனால் தான் மாமா நான் திருமணம் வரை கொண்டு வந்து விட்டு வீட்டை விட்டு வெளிய வந்து இவரை திருமணம் செய்து கொண்டேன் அதன் பிறகு இப்பொழுது அம்மா எடுத்த முடிவை தான் அம்மா எடுப்பார் என்று நான் எண்ணினேன் ஏனென்றால் அம்மாவை பற்றி எனக்கு தெரியும் அம்மாவிற்கு என்னைவிட ஏன் இந்த வீட்டில் உள்ள அனைவரையும் விட உன்னை ரொம்ப பிடிக்கும்
  • இப்பொழுது கூட அம்மா என்னை உனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தது நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீ நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணினார்கள் உனக்கு முதலில் திருமணம் செய்ய வேண்டும் என்று தான் வீட்டில் பேசினார்கள் வீட்டில் உள்ளவர்கள் எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னதால் தான் என்னை உன்னுடன் இணைத்து திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணினார்
  • அதுவே நான் திருமணம் வரை கொண்டு வந்து வேண்டாம் என்று சொன்னால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னை எதிர்த்து உனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே உனக்கென்று ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் உனக்கென்று அம்மா வேறு ஒரு பெண் பார்க்க மாட்டார் என்று எனக்கு தெரியும் மகாவை தான் உனக்கு கட்டி வைப்பார் என்று எண்ணினேன்
  • அதேபோல இப்பொழுது அம்மாவும் சொல்லி இருக்கிறார்கள் அதனால் தான் நான் பந்த கால் நடும் வரை அமைதியாக இருந்துவிட்டு இன்று ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டேன் என்றால் கயல் அவ்வாறு சொன்னவுடன் மகிழ் கயலை அடிக்க கை ஓங்கி விட்டான் மகா வேகமாக ஓடிவந்து மகிழனின் கையைப் பிடித்தால் மகிழன் மகா தான்  தன் கையைப் பிடித்து இருக்கிறாள் என்றவுடன் தனது கையை கீழே ஊதறினான் .
  • மகிழ் கையை கீழே உதறிவிட்டு மகாவை முறைத்தான்.
  • கயலும் காவேரியும் ஆசைப்பட்டது போல் மகிழன் மகா கழுத்தில் தாலி கட்டுவானா…
  • மகா இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்வாளா…
  • இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொள்வார்களா…
  • என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
  • அன்புடன்
  • ❣️தனிமையின் காதலி❣️
  • கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

6 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 12”

  1. அருமையான கதை …. கரு சூப்பர். .. கூட்டு குடும்பம். . உறவுகளின் பாசம் சூப்பர்

  2. CRVS 2797

    அட..இது தலையை சுத்தி மூக்கை தொட்ட கதையா இல்லை இருக்குது.

    1. Family bonding. மிக்க நன்றி .
      கூட்டுக் குடும்பம் இல்லையா உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *