Skip to content
Home » மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

மகிழன் அறைக்கதவை லேசாக திறந்து கொண்டு அவனது அறை கதவையும் லேசாக மூடிவிட்டு அவனது  அருகில் வந்து உட்கார்ந்து உடன் மகிழ் அவனது தலையை எடுத்து மகாவின் மடியில் வைத்தான் ஆமாம் இந்த நேரத்தில் மகிழின் அறைக்கு வந்தது மகா தான் மாமா எதையும் நினைத்துக் கொண்டு இருக்காதே அமைதியாக படுத்து தூங்கு கிட்டத்தட்ட ஒரு வாரங்களுக்கு மேலாக உனக்கு தூக்கம் இல்லை என்றால் அவன் எதுவும் பேசாமல் தனது கண்ணை திறந்து மகாவை பார்த்தான் மகா கண்மூடி திறந்தவுடன் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக கண் மூடினான் மகா மகிழின் தலையை கோதிக்கொண்டே அமைதியாக இருந்தால் அவளின் தலை கோதலிலே மகிழ் தூங்கி இருந்தான் அவனது சீரான மூச்சு காற்றை வைத்து அவன் உறங்கி விட்டான் என்பதை உணர்ந்து மகா மகிழனின் தலையை மெதுவாக எடுத்து அவனது கட்டிலில் வைத்துவிட்டு தலையணை சரியாக வைத்து விட்டாள்.

ஏசியை மிதமான குளிரில் வைத்துவிட்டு அவன் மேல் ஒரு போர்வையும் எடுத்து போர்த்தி விட்டு  அமைதியாக அனைத்து விளக்குகளையும் நிறுத்திவிட்டு அமைதியாக கதவை திறந்து கொண்டு முடி விட்டு அவளது அரை நோக்கி சென்றாள் அவள் அவளது அரைநோக்கி செல்வதையே ஒரு உருவம் பார்த்தது அது வேறு யாருமில்லை அந்த வீட்டின் மூத்தவர் பாட்டி பாண்டியம்மாள் தான் பார்த்தார்இந்த நேரத்தில் மகாவிற்கு மகிழ் உடைய அறையில் என்ன வேலை என்று எண்ணினார் பிறகு எப்பொழுதும் போல இருந்திருக்கும் அவன் ஏதாவது பேசுவதற்காக அழைத்து இருப்பான் என்று எண்ணினார்.

இது இந்த வீட்டில் எப்பொழுதும் நடக்கும் என்று தான் அனைவரும் தெரியும் எப்பொழுது வேண்டுமானாலும் சிறியவர்கள் ஒன்றாக ஒரே அறையில் பேசிக் கொண்டிருந்துவிட்டு பிறகு ஒன்றாக தூங்கினாலும் தூங்குவார்கள் இல்லை அவரவர் அறைக்கு சென்று தூங்கினாலும் தூங்குவார்கள் என்பதால் வேறு எதுவும் எண்ணாமல் அவரது அறைக்குச் சென்று விட்டார் அவர் தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்லவில்லை என்பதால் தண்ணீர் எடுத்து செல்லலாம் என்று வந்திருக்கும் நிலையில் தான் மகிழ் உடைய அறையில் இருந்து மகா செல்வதை பார்த்தார்.

காலையில் அனைவரும் எழுந்து ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தார்கள் அனைவரும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றார்கள் அங்கு சென்று உதிரன் இதழ் பேரில் அர்ச்சனை செய்துவிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்திருந்தார்கள்சாமியை நல்ல முறையில் தரிசனம் செய்துவிட்டு அன்னதானத்தையும் நல்ல முறையில் முடித்துவிட்டு மொத்த குடும்பத்தினரும் வீட்டிற்கு வந்தார்கள் இப்படியே மூன்று நாட்கள் ஓடியது அனைவரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருந்தார்கள் பிறகு அவர்களது வாழ்க்கை எப்பொழுதும் போல் பார்க்க   அவர்கள் ஓட ஆரம்பித்து விட்டார்கள்.

மகாலட்சுமி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறாள்அகமகிழன் வீட்டில் இருக்கும் அவர்களின் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு அவன் படித்த படிப்புக்கான அவனது சொந்த முயற்சியில் சிறிதாக ஒரு கம்பெனியும் வைத்துக் கொண்டிருக்கிறான் அது மட்டும் இல்லாமல் இப்பொழுது ஒரு வருடங்களாக அவனின் சொந்த ஊரின் ஊர் தலைவராக பணியாற்றுகிறான் ஒரு வருடங்களுக்கு முன்பாக ஊரில் உள்ள பொதுமக்கள் பெரிய வீட்டின் முன்பு வந்து நின்றார்கள் ஐயா இந்த வருடம் உங்கள் வீட்டில் தான் யாராவது எலக்ஷனுக்கு நிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் என்று கூறிக்கொண்டு கருப்பையா தாத்தாவிடம் வந்து நின்றார்கள் என்னப்பா இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஆமாம் ஐயா இதுவரை இருந்தவர்கள் அனைவரும் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் யோசிக்கிறார்களே தவிர எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை நீங்கள் ரத்தினவேல் ஐயாவை நிக்க வைத்தால் அவர் ஊருக்காக அனைத்தையும் எடுத்து கட்டி செய்வார் என்றார்கள் அப்பொழுது ரத்தினவேல் என்னால் அந்த அளவிற்கு ஓடும் அளவிற்கு உடம்பில் தெம்பில்லையே எனது வீட்டு வேலைகளையே எனது மகன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

காட்டு வேலைகளை அவன் என்னுடன் இருந்து பாதி சுமைகளை பார்த்துக் கொள்கிறான் அப்படி இருக்கும் நிலையில் என்னால் எல்லாம் ஊர் பொதுவில் இருக்கும் தலைவராக நின்று அனைத்தையும் எடுத்துக் கட்டி செய்ய இயலாது அந்த அளவிற்கு என் உடம்பில் தெம்பு இல்லை என்றார் அப்பொழுது கருப்பையா தாத்தா தனது இரு பேரன்களை பார்த்தார் உதிரனையும் அகமகிழனையும் பார்த்தார் அப்பொழுது உதிரன் தான் வேகமாக தாத்தா என்ன எல்லாம் பார்க்காதீர்கள் என்னால் எல்லாம் தேர்தலில் நின்று  ஜெயித்து ஊர் மக்களுக்காக அனைத்தையும் எடுத்து கட்டி செய்ய இயலாது என்னால் ஒரே நேரத்தில் இரு வேலைகள் எல்லாம் பார்க்க இயலாது அந்த அளவிற்கு எல்லாம் எனக்கு அறிவு இல்லை ஒரே நேரத்தில் இரண்டு வேலை பார்க்கும் அளவிற்கு எனக்கு இல்லை நான் இப்பொழுதுதான் நான் விருப்பப்பட்ட தொழிலில் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன் அப்படி இருக்கும் பட்சத்தில் நான் எலக்ஷனில் நின்று ஜெயித்தால் என்னால் ஊர் மக்களுக்கு தேவையான அனைத்தையும் முழு ஈடுபாடோடு செய்ய இயலாது அதையும் முழுவதாக செய்ய முடியாமல்  நான் இஷ்டப்பட்ட வேலையிலும் முழுமையாக செய்யாமல் தடுமாறி நிற்பேன் என்னால் செய்ய முடியாது என்னை மன்னித்து விடுங்கள் என்று ஊர் மக்களையும் பார்த்து சொல்லிவிட்டு தனது தாத்தாவையும் பார்த்தான்.

அப்பொழுது கருப்பையா தாத்தா தனது மகன் வயிற்று பேரன் அக மகிழனை பார்த்தார் அவன் சிரித்துக் கொண்டே வேறு எதுவும் பேசாமல் மண்டை ஆட்டி கண்மூடி கண் திறந்தான் பிறகு ஊர் மக்களும் அவன் மண்டையாட்டியுடன் சிரித்தார்கள் பிறகு கருப்பையைத் தான் எனது பேரன் அக மகிழன் பஞ்சாயத்து எலக்ஷனில்  நிப்பான் நீங்கள் அனைவரும் செல்லுங்கள் போட்டி எப்பொழுதும் போட்டி போல இருக்கட்டும் ஊர் மக்களாக ஓட்டு போட்டு யார் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவர்களே ஜெயிக்க வைக்கட்டும் மற்றபடி நீங்களாக இவனுக்கு என்று தனிப்பட்ட முறையில் சென்று ஓட்டு எல்லாம்  கேட்க வேண்டாம் என்று கூறினார் அதே போல் தான் ஊர் மக்களும் செய்தார்கள் ஊர் மக்களின் ஓட்டு எண்ணிக்கை தான் அக மகிழனை ஜெயிக்க வைத்தார்கள்இப்பொழுது ஜெயித்து ஒரு வருட காலங்களாக பஞ்சாயத்து தலைவராக இருக்கிறான். உதிரன் அவன் விருப்பப்பட்ட வேளையில் முன்னேறி இப்போது சிறிதாக ஒரு கம்பெனிக்கு ஓனராக இருக்கிறான் இதழினியும் அவனுடனே அவனுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறாள் முதலில் அவள் வேறு ஒரு கம்பெனியில் தான் வேலை செய்து கொண்டிருந்தாள் பிறகு வீட்டில் உள்ளவர்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு இவளுக்கு இவன் தான் என்று முடிவு செய்த பிறகு தனது வருங்கால கணவனுக்காக வீட்டில் உள்ள அனைவரும் உதிரனுடைய அவனுடைய கம்பெனியில் வேலை செய் என்றவுடன்  இப்பொழுது மூன்று வருடங்களாக இனி உதிரனின் கம்பெனியில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாள் கார்முகிலன் படித்தது அக்ரிகல்ச்சர் ஆகையால் அவன் சிறிதாக ஒரு கடை வைத்து பயிர்களுக்கு என்னென்ன மருந்துகள் உபயோகிக்க வேண்டும் என்னென்ன நல்லது என்பதை ஆராய்ச்சி செய்து  சிறியதாக அவனது முயற்சியில் சிறிதாக ஒரு கடை ஆரம்பித்து அதை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறான்.

கயல்விழி ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறாள் அவளது படிப்பிற்கு ஏற்ப ஒரு வேளையில் இருக்கிறாள்எழில் வேந்தன் தான் அந்த வீட்டில் அரசு வேலையில் முதன் முதலாக உட்கார்ந்தவன் என்று கூட சொல்லலாம் படித்துக் கொண்டே இருக்கும் பொழுது அவன் அரசு கல்லூரியில் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்ததால் அவன் கல்லூரி சென்ற நாள் முதல் இருந்தே அரசாங்கத்தில் வைக்கப்படும் ஒவ்வொரு தேர்வுகளிலும் அட்டென்ட் செய்து அவன் படிப்பிற்கு ஏற்ப எழுதிக் கொண்டிருந்தான் அதனின் விளைவு இப்பொழுது அவன் அரசு கல்லூரியில் ஒரு வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறான் இப்பொழுது ஒரு வருடங்களாக தான் அரசு உத்தியோகத்தில் இருக்கிறான் இதற்கு முன்பு ஒரு வருடங்கள் இப்போது மகாலட்சுமி வேலை செய்து கொண்டிருக்கும் தனியார் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தான் மகாலஷ்மி உடன் மகாலட்சுமியும் எழிலும் நெருங்கிய நண்பர்கள் அவர்கள் இருவருக்குள்ளும் மாமன் மகன் அத்தை மகள் என்ற உறவு இருந்தாலும் அதையும் தாண்டி இருவருக்கும் நட்பு நிலைத்து இருக்கிறது இருவரும் நெருங்கிய நண்பர்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று இந்த வீட்டின் கடைக்குட்டி இந்த மொத்த வீட்டின் செல்லம் நிலா இப்பொழுது கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் எழில் வேந்தன் வேலை செய்யும் அரசு கல்லூரியில் தான் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் அது மட்டும் அல்லாமல் அவன் எடுக்கும் வகுப்பில் ஒரு மாணவியாக தான் இருக்கிறாள் எழில் வேந்தன் அகல் நிலா இருவருக்கும் எப்பொழுதும் முட்டிக்கொண்டே இருக்கும் எழிலும்  நிலா கல்லூரியில் என்னென்ன சேட்டை செய்கிராலோ அனைத்தையும் வீட்டில் வந்து ஒப்பித்து விடுவான் அதனால் நிலவிற்கு எழிலை கண்டால் எப்போது பார்த்தாலும் கோபம் இருக்கும் முட்டிக் கொண்டே இருக்கும் மற்றபடி அவர்களுக்குள் எந்த சண்டைகளும் இல்லை அவன் சொல்லும் நேரங்களில் மட்டும் இருவரும் முட்டிக்கொள்வார்கள்.

மற்றபடி அனைவரும் ஒன்றாக இருக்கும் நிலையில் இருவரும் அனைவரும் போலவே இருப்பார்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் இருவரும் வீட்டில் நிர்வகித்துக் கொண்டு இருக்கிறார்கள் கருப்பையா தாத்தா தனது மகன் மருமகன்கள் கொண்டுவரும் கணக்கு வழக்குகளை பார்ப்பார் பாண்டியம்மாள் பாட்டி தனது வீட்டில் இருக்கும் நிலவரங்களை பார்த்துக் கொண்டிருப்பார் சுந்தரி காவேரி கோதை மூவரும் வீட்டில் சமைத்துவிட்டு காட்டிற்கு சென்று ஏதாவது வேலை இருந்தால் பார்த்துக் கொண்டு வீட்டிற்கு வருவார்கள் மணி படித்திருக்கிறார் ஆகையால் அவர் படிப்பிற்கு ஏற்ப ஒரு இடத்தில் வேலையில் இருக்கிறார் வேலு வீட்டில் இருக்கும் நிலம் புலன்கள் மற்றும் தென்னந்தோப்பு மாந்தோப்பு என்று இருக்கிறது அதையும் பார்த்துக்கொண்டு சிறிதாக ஒரு பழக்கடையும் வைத்திருக்கிறார் அதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கந்தன் தனது மாமனார் வீட்டில் இருக்கும் அனைத்து நிலன்களையும் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு என்று ஒரு தோப்பு இருக்கிறது அதை முழுவதாக கந்தன் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர்களுக்கென இருக்கும் தோப்பு அனைத்தையும் கந்தன் பார்த்துக் கொள்கிறார் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு வேலை இருப்பதால் அதற்கு ஏற்ப அவர்களது வேலையில் ஈடுபட சென்று விட்டார்கள் இளவட்டங்கள் எல்லாம் வேலைக்கு சென்று விட்டார்கள் கருப்பையா தாத்தா உதிரனிடம் இன்னும் ஒரு வாரம் கழித்து செல்லலாம் என்றார் ஒரு வாரமா ஏற்கனவே நாங்கள் 20 நாட்களுக்கு மேலே வீட்டில் தானே இருந்தோம் என்றார்கள் இல்லடா கல்யாணமான புதியது அல்லவா நீங்கள் இருவரும் தனியாக எங்காது போய் வருவீர்கள் என்றார்கள் அப்பொழுது உதிரன் சிரித்துக் கொண்டே தத்தா அலுவலகத்தில் இனி என்னுடன் தான் இருக்கிற போகிறாள் என்றான் கருப்பையா சிரித்துக்கொண்டே அவள் உன்னுடன் வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் உன்னுடைய மனைவியாக இருக்க மாட்டளே எங்களுக்கான நேரம் எப்போது எங்களுக்கு ஒதுக்கி கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது நாங்கள் தனியாக இருந்து கொள்கிறோம் இப்பொழுது நாங்கள் அதிக நாட்கள் விடுமுறையில் இருந்த ஆயிற்று இதற்கு மேலும் வீட்டில் இருந்தால் எங்கள் கம்பெனியை யார் பார்த்துக் கொள்வது அவளும் இங்குதான் இருக்கிறாள்  நானும் இங்கே இருக்கிறேன் என்றான் இருவரும் ஒன்றாக தான் இருக்கிறோம் எங்களுக்கு நேரம் கிடைக்க போது நாங்கள் சந்தோஷமாக இருந்து கொள்வோம் எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றான்.

அப்பொழுது மகிழனும் அவர்கள் இருவரும் போய்விட்டு வரட்டும் என்ற உடன் வீட்டில் உள்ளவர்களும் சரி என்று விட்டார்கள் பிறகு உதிரன் தனது காதல் மனைவியை தன்னுடைய மனைவியாக அவனது பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு சந்தோஷமாக அவனது கம்பெனிக்கு பறந்தான் வீட்டில் உள்ள இளவட்டங்கள் அனைவரும் சென்ற பிறகு ஆண்களும் அவரவர் வேலையை பார்க்கச் சென்றார்கள் அப்பொழுது வீட்டில் சுந்தரி கோதை காவேரி கருப்பையா தாத்தா பாண்டியம்மாள் ஐவர் மட்டும்தான் இருந்தார்கள் அப்பொழுது பாண்டியம்மா தனது கணவரிடம் வந்து நாம் இருவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம் என்று கூப்பிட்டார்.

கருப்பையா தாத்தாவும் சரி என்று கூறியவுடன் இருவரும் நடந்தே கோவிலுக்கு சென்றார்கள் வீட்டில் உள்ள மற்ற மூன்று பெண்களும் இவர்கள் இருவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்த அனைத்தையும் ஓடியாடி நம்மளை உட்கார வைத்துவிட்டு அகமகிழன் தான் செய்தான் என்று பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது கோதை தான் மகிழனுக்கும் வயதாகி கொண்டே செல்கிறது உதிரனுக்கு தான் திருமணம் ஆகிவிட்டது இப்பொழுது நாம் மகிழுக்கு பெண்பார்க்கலாம் அல்லவா என்று கேட்டார் அப்பொழுது சுந்தரி தான் கயல் இருக்கும் பொழுது இவனுக்கு எப்படி திருமணம் செய்வது என்று கேட்டார் அப்பொழுது கோதை தான் என்ன அண்ணி இப்படி பேசுறீங்க அவனுக்கும் வயதாகிறது அல்லவா அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லவா நமக்காக ஓடி ஆடி செய்பவனுக்கு நாம் திருமணம் செய்து வைக்க வேண்டாமா என்று சொன்னார் அப்பொழுது காவேரியின் மனதில் ஒன்று ஓடியது.

அவர் மனதில் நினைத்துக் கொண்டு இருக்கும் விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொன்னால் வீட்டில் உள்ள  அனைவரும் ஒத்துக் கொள்வார்களா …அவர் சொல்லப்போகும் விஷயத்தால் வீட்டில் பூகம்பம் வெடிக்குமா? இப்பொழுது இருக்கும் சந்தோஷம் நிலைக்குமா …

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️ கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 thoughts on “மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *