அன்புக்கரசன், ஐந்தேமுக்கால் அடி உயரம், மாநிறம், செதுக்கிய சிலை போல் இன்றைய நாகரிகத்தில் மீசை, அளவான தாடியோடு இருப்பவன். பிறந்தது வைகை கரையோரம் இரும்பாடி, வளர்ந்தது மாமன் மக்களோடு சோழவந்தான் கிராமத்தில் என்ற போதும், அவர்களிலிருந்து தனித்து ஆங்கில வழி கல்வி பயின்றவன்.
அழகர் தம் மகன்கள் தாமு, நாகு இருவரையும் தமிழ் வழிக் கல்வியில் அரசாங்கப்பள்ளி அதன் பின் அருகிருக்கும் குருகுல பள்ளியில் பன்னிரண்டு வரை படிக்க வைக்க அதுவே பெரிய விசயம் என்பது போல் விவசாயம், தரகு வேலையில் இறங்கி விட்டனர்.
அன்புவை மட்டும் வேனில் அனுப்பி பதினைந்து கிலோமீட்டர் தள்ளி உள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்க வைத்தார். அவன் உடுத்தும் உடையிலிருந்து கொண்டு போகும் பேக் , அணியும் ஷூ வரை எல்லாம் உயர் தரமாகவே இருக்கும். அதனாலேயே மேல்தட்டு மாணவர்களுடன் சாவகாசம் வந்தது. நன்றாகப் படிக்கவும் செய்தான், யாரும் ஒரு குறை சொல்ல முடியாதவனாக எல்லோருக்கும் பிரியமானவனாக இருந்தான். பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு என்றால், அன்புவின் கார்டியனாக அழகர் தான் செல்வார். ஆசிரியர்கள் அவனைப் புகழ்வதைக் கேட்டுப் பூரித்துப் போவார்.
அன்புவை ஆங்கில பள்ளியில் படிக்க வைத்ததனால், அவனுக்கு மூன்று வயது இளையவளான எழிலுக்கும் அந்த வசதி கிடைத்தது. ஐந்து வரை அருகில் உள்ள பள்ளியில் படித்தவள் ஆறாம் வகுப்பு முதல் அவன் படித்த பள்ளியில் படிக்கச் சென்றாள் . மாமன் மகள் என்றால் கிண்டல் செய்வார்கள் எனத் தங்கை என்றே சொல்லி வைத்திருந்தான். தப்பித் தவறி அவள் பள்ளியில் அத்தான் என முறை சொல்லி விட்டால், கண்ணால் எரிப்பான் . அதற்குப் பயந்தே அவனைத் தெரிந்ததாகக் கூட காட்டிக் கொள்ள மாட்டாள்.
பன்னிரண்டு வரை அங்குப் படித்தவன், சிவில் இன்ஜினியரிங் படிப்பைச் சென்னையிலும், எம் பி ஏ வை பெங்களூருவில் முடித்தான். அங்கு படிக்கும் போதே, ஜுனியரான ப்ரீத்தி பழக்கமானாள். ஐந்தரையடி உயரம், ஓங்கு தாங்காகப் பால் நிறம், நேர் நாசி, அடர்ந்த புருவம், எனப் பெண்மை மிளிர இருப்பவள் சிரிக்கும் பொழுதுக் குண்டு கன்னத்தில் குழி விழும், கண்கள் அடுத்தவரையும் கூட சேர்ந்து சிரிக்க அழைக்கும். உருவத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாமல், வெகுளியாக எளிதில் அனைவருடனும் பழகி விடுவாள். அவளின் சிரிப்பே அன்புவை முதலில் ஈர்த்தது.
அந்த அகெடமியில் படிப்பிக்கும் முறை வித்தியாசமாக இருந்தது. சில பாடப்பிரிவுகளை அவரவர் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இரண்டு வருடத்தில் முடிக்க வேண்டும். இந்த தலைப்பில் இத்தனை மணிக்கு, இந்த அரங்கில் இந்த ஆசிரியர் பாடம் எடுப்பார் என்ற அட்டவணை மட்டுமே கொடுக்கப்படும், மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் பாடத் திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.
பொறியியல் மாணவனான அன்புவுக்கு, காமர்ஸ் புதிதாக இருக்க, அதிலேயே இளங்கலை பட்டம் பெற்ற ஜுனியர் மாணவியான ப்ரீத்தி பாடங்களை எளிதாக விளக்க, அவளுக்குத் தெரியாத பாடங்களை அவன் கற்றுத் தந்தான். அதில் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது.
அன்பு எம் பி ஏ முடித்து கேம்பஸில் தேர்வாகி வேலைக்கு சேர்ந்து விட்டான். இருவருக்குள் நட்பு மட்டுமே தொடர்ந்தது. படிப்பு முடித்த பின் ப்ரீத்தி, அன்புவிடம் காதலைச் சொல்ல, பதிலேதும் சொல்லாமல் கடந்து விட்டான். அன்று அவள் அழுத அழுகை கொஞ்சம் நஞ்சமில்லை. அதை அறிந்தவன், அவளை அழைத்துச் சென்று பேசினான்.
“ ப்ரீத்தி, ட்ரை டு அன்டர்ஸ்டான்ட். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் உனக்கு யெஸ் சொல்ல முடியாத இடத்தில் இருக்கேன்” என அப்பாவை இழந்து மாமாவின் தயவில் படித்து வளர்ந்ததையும், அம்மாவின் ஆசை எனக் காரணங்களை அடுக்கியவன்,
“எழில் என் கூடவே வளர்ந்தவ. அவளை மனைவியா பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனால் மாமா கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா, என்னால மறுக்கவும் முடியாது” என்றான்.
“ கடமைக்காக ஒரு வாழ்க்கையில் சிக்கப் போறியா” ப்ரீத்தி கேட்க
“ தெரியலை. என் விதி எப்படியோ, அப்படி.” என்றான்.
“ எனக்கு அப்படி எந்த கடமையும் இல்லை. என்னை கம்பெல் பண்ணவும் மம்மி, பாப்பா இல்லை. பாயீ மட்டும் தான். ஐ கேன் மேனேஜ். நான் உனக்காக காத்திருக்கேன்” என்றாள்.
“ என்னை விட பெட்டர் பார்ட்னர் வந்தா ஏத்துக்கோ. எனக்காக உன் லைஃபை வீண் பண்ண வேண்டாம்” எனவும்,
“ தட் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னெஸ். உன் வேலை பார்த்துப் போடா” எனக் கோபமாக மொழிந்து விட்டுச் சென்றாள். இப்படியே ஆறுமாதம் ஓடியது.
அன்புவுக்கு, அம்மாவை விட மாமா எதுவும் சொல்வாரோ என்று பயம். எழிலின் மனதில் தன்னை பற்றிய கற்பனை ஏதேனும் இருக்குமோ என்றும் அஞ்சினான். ஏனெனில் இந்திராணி அவன் போகும் போதெல்லாம் எழிலை மணந்து மாமனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சொல்லுவார். அதிலேயே அவள் மீது நாட்டம் இல்லாமல் போனது. .
ஆனால் அவளது ஜாதகத்தைப் பார்த்து, அன்புவுக்கும் எழிலுக்கும் பொருத்தம் இல்லை என்று , வெளியே மாப்பிள்ளை தேட ஆரம்பித்தது முதலே, அவளிடம் இயல்பாகப் பழக ஆரம்பித்தான். எழில் ஆங்கிலத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று ஆசிரியை ஆனதில் வியப்பு தான்.
“ஏன் படிப்பு உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா, நீங்க படிச்ச ஸ்கூலில் தான் நாங்களும் படிச்சோம்.” அவள் வம்பிழுக்க,
“ஹேய் அப்படிச் சொல்லலை. கலையரசி அத்தாச்சியெல்லாம் பத்தாவதோட நிற்கலையா, அவுங்க தங்கச்சி தானே நீ ன்னு யோசிச்சேன்” என்றான்
அவன் ஊருக்கு வந்திருந்த போது, ஒருமுறை அலைபேசியை சார்ஜில் போட்டு விட்டு வெளியே சென்றிருக்க, விடாமல் அடித்தது. ஏதேனும் அவசரமோ என்று தான், அழைப்பை ஏற்றுச் செவி கொடுத்தாள்.
“ அரே ஏஏ, தேரி ஒட்டி போல்தி ஹூம். கித்னே பார் போன் டாலும் . ஊருக்கு போனா, என்னை மறந்துடுவியா என்ன. மம்மிஜி கிட்ட என்னைப் பத்தி சொன்னியா, எப்போ நம்ம ஷாதி வச்சுக்கலாம் ” கேப் விடாமல் அவள் வார்த்தையாட, எழில் அதிர்ந்து போனாள் .
“ஹலோ, அத்தான் மொபைலை சார்ஜ்ஜிலே போட்டுட்டு வெளியே போயிருக்கார். “ என ஆரம்பித்தவள் சட்டென நினைவு வந்தவளாக, “ சாரி, ஐ வில் அஸ்க் ஹிம் டு கால் யு பேக் “ என ஆங்கிலத்துக்கு மாற,
“ஹலோ எழில், தூ எழிலரசி ஹை னா. மென்னு ப்ரீத்தி கௌர். எனக்குத் தமிழ் புரியும். உங்ககிட்ட பேசத் தான் கால் பண்ணேன். தேரி மொபைல் நம்பர் பதாவு ,ஐ வில் கால் யு. இந்த ஏஏ கேட்டா குடுக்க மாட்டேங்கிறான்” எனவும்
“நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா” எனச் சந்தேகமாகக் கேட்டாள்.
“ஓ மேரி மா, முஜே மாலும். நீ ஏஏ க்கு மாமா பொண்ணு. அவனுக்கு முறை பொண்ணு. ஆனா குண்டலி சேரலைன்னு சொல்லிட்டாங்களாம். ஏஏ சொன்னான்.” என இங்கு நடக்கும் எல்லாவற்றையும் சொன்னவள்,
“எழில் என் கூடவே வளர்ந்த பொண்ணு. அவளை லைஃப் பார்ட்னரா என்னால நினைச்சே பார்க்க முடியாது. ஆனால் மாமா எழிலை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டா, என்னால தட்டவும் முடியாது. அதனால் தான் நீ கேட்டப்ப நான் பதிலே சொல்லை. நான் இப்போ பிரீ. எழிலுக்கு வேற பக்கம் மாப்பிள்ளை பார்க்குறாங்கன்னு ஏஏ சொன்னான். என் பியாரையும் அக்சப்ட் பண்ணிகிட்டான். ஜெம் ஆப் எ மேன். “எனச் சேர்த்துச் சொல்ல
“ ஆமாம் கிரேட் தான்” எனப் பிறர் அறியாமல் கண்ணீரைச் சுண்டிவிட்டாள்.
“உன் மொபைல் நம்பர் சொல்லு.” எனக் கேட்டு வாங்கிக் கொண்டவள், “எனக்கு மம்மிஜி, அது தான் உன் அத்தை பத்தி சொல்லு. அவங்களுக்கு எப்படி ஐஸ் வைக்கிறது” எனக் கேட்க, எழில் சிரித்து விட்டாள் .
“ஐஸ் எல்லாம் அவுங்களுக்கு தாங்காது. நீங்க நேரா வாங்க. சரினு சொல்லிடுவாங்க” என்றாள்.
“கஹாங் யார், இந்த ஏஏ , டர்போக், பயந்தக்கோழி கூட்டிட்டே வரமாட்டேன்கிறான்” எனவும் விழுந்து விழுந்து சிரிக்க,
“ஹேய், என் போன்ல யாரீக்கிட்ட பேசுற” அன்பு பதட்டமாக வர, “உங்க பயந்த கோழி வந்துடுச்சு பேசுங்க” என்றவள், அவனிடம்
“ உங்க ஓட்டி ” எனக் கேலியாகச் சிரித்தபடி நீட்டினாள்.
“ அச்சோ, ப்ரீத்தியா. உளறிட்டாளா. இவளை” என எழிலிடமிருந்து போனை வாங்கியவன், “ ஏய் ஓட்டவாயி. நான் தான் மாமாகிட்ட சொல்லி, பர்மிஷன் வாங்கிட்டு வறேன்னு சொன்னேன்ல” அவன் கடிய,
“ எனக்கு உன்னைப் பத்தி தெரியும். நீ சொல்ல மாட்டே. நீ எப்போ சொல்லி, மம்மிஜி ஓகே சொல்லி, என்னை ஷாதி பண்ணி, சோட்டு ஏஏ வர்றதுக்குள்ள, மேரி பால் ஸஃபேத் ஹோ ஜாயேகி(முடி வெள்ளை ஆகிடும்) ” என்றாள்.
அவள், பால் என முடியைச் சொல்ல, இவன் விசமமாக வேறு ஒன்றைக் கேட்க, எழில் அவன் பேச்சு கேட்காத தொலைவுக்கு ஓடியிருந்தாள்.
ப்ரீத்தி விசயம் அறியாத இந்திராணி மகனிடம் , “ சொந்தத்துக்குள்ள ஜாதகம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. நான் எழிலைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு மாமாகிட்ட சொல்லு.” எனச் சொல்லிக் கொடுக்க, “அம்மா” என அவன் அதிர்ந்தான்.
“ என்ன அம்மா, நொம்மான்னு. அவள் தாயில்லா பொண்ணுடா. தகப்பன் இல்லாத உன்னை என் அண்ணன் வளர்த்து ஆளாக்கின மாதிரி, நான் தான் அவளுக்கு பார்க்கனும்” என்றார்.
“ நீ பாரும்மா, யார் வேண்டாம்னு சொன்னா. மாமாவே எங்களுக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லும் போது, நான் கேட்கக் கூடாது. கேட்டா தப்பாவும் போயிடும்” அவன் வாதாட
“ நொண்டி கழுதைக்குச் சறுக்கினது சாக்கு. அவர் ஒரு தரம் சொன்னா அப்படியே விட்டுடுறதா.” அம்மாவுக்கும், மகனுக்கும் வாக்குவாதம் வலுக்க,
“ அத்தை, எனக்கு அத்தானை கட்டிக்க இஷ்டமில்லை. அவர் வேற ஒரு பொண்ணை விரும்புறாரு. தயவு செய்து அந்த பொண்ணையே அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுங்க” என்றாள்.
இதைக் கேட்டு வீடே ஸ்தம்பித்தது. ப்ரீத்தியின் போட்டோ முதற் கொண்டு எல்லாருக்கும் காட்டி, அன்புவுக்கு வக்கீலாக மாறி, தன் அப்பாவை அவன் காதலுக்குப் பச்சைக் கொடி காட்ட வைத்தாள்
இந்திராணிக்கு அதிர்ச்சி. “கண்ணே கண்ணு, ஒன்னே ஒன்னுன்னு கருவேப்பிலை கொத்தாட்டம் ஒரு பிள்ளையை பெத்து ஹிந்திகாரிக்கு தூக்கிக் கொடுக்கவா” என அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.
அழகர், “ எழிலுக்கும், மாப்பிள்ளைக்கும் ஜாதகம் பொருந்தலை. எழிலை கட்டுறதா இருந்தா அன்புவை வற்புறுத்தலாம். அதுவே இல்லைனு ஆன பிறகு, அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கட்டும்” என முடிவு சொல்ல,
“ அப்ப நானு” என அழுத இந்திராணி, “நான் உன்னை கூட்டிட்டு போயி வச்சு பார்க்கிறேன் அம்மா. ப்ரீத்தியும் உன்னை நல்லா பார்த்துக்குவா” என்றான்.
மகனின் சமாதானத்தைக் காதில் வாங்காமல், அண்ணனிடம் கடைசிக் காலம் வரை அவர் கூடவே இருக்க வேண்டும் என்ற வாக்கு கேட்டார்.
“இதை நீ கேட்கவும் வேணுமாம்மா.நான் இருக்க இடத்தில் தான் நீ இருப்ப” எனத் தங்கையைச் சமாதானப்படுத்தி, அன்புவுக்கும் ஆசுவாசம் சொல்லி அனுப்பி வைத்தார்.
அன்று முதல், இந்திராணி மகனிடம் பேசுவது இல்லை. ஆனால் எழில் கல்யாணம் முடியாமல், அன்பு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்ற வாக்குறுதியை மட்டும் மறைமுகமாகப் பெற்றுக் கொண்டார்.
இதோ இரண்டு வருடமாகப் போராடி, எழிலுக்கு ஒரு வரன் அமைந்துள்ளது.
இந்த கல்யாணத்துக்கு , எழில் வற்புறுத்தலின் பேரில் ப்ரீத்தியை அழைத்து வருகிறான்.
மும்பையிலிருந்து ப்ளையிட்டு மதுரையில் லேண்ட் ஆனதிலிருந்து , “ மம்மிஜி என்னை அவங்க பஹூவா ஏத்துக்குவாங்களா.” என்ற கேள்வியையே கேட்டுக் கொண்டு இருக்கிறாள் பிரீத்தம் கௌர்.
“ டோன்ட் ஒர்ரி ப்ரியூ, அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உனக்கும் அவுங்களை ரொம்ப பிடிக்கும். நீங்க இரண்டு பேரும் ஒன்னு சேர்ந்துகிட்டு, என்னை த்ராட்டுல விடாமல் இருந்தா சரி தான் “ என்றான் அன்பு.
கடவுள் அமைத்து வைத்த மேடை..
யாருக்காகக் காத்திருக்கிறது… பார்ப்போம்.
Superrrr🥳🥳🥳🥳
thankyou very much
Sow super. Intresting sis.
thanks a lot.
NIJAMA YARUKAGA NU PAKANUM ENA NADAKUM KALYANATHULA