Skip to content
Home » மோதலில் ஒரு காதல்-1

மோதலில் ஒரு காதல்-1

அத்தியாயம்-1

‌* இது ஒரு நகைச்சுவை கலந்த காதல்   

அதிகாலை பொழுது சூரியன்  வெளியே அக்னியாக எரிந்தது. அறையில் படுத்த படுக்கையில் துயில் கொண்டு இருந்தால் நம் கதையின் நாயகியான மகிழினிகிருஷ்ணன் . அவளது அப்பாவின் குரலில் விழிப்பு கண்டவள்  ‘அம்மா’ என கத்தியும் அவர் வரும்வரை கண்ணை விழிக்கவில்லை. அவ்வளவு பாசமாம் என்றால் அதெல்லாம் சும்மா. அவங்க அம்மாவிற்கு அதிர்ஷ்ட முகம் .

எழுந்த உடன் சேட்டை செய்ய ஆரம்பித்தவள் கல்லூரி செல்ல தயாரானாள், அவளது அம்மா அவளை கிளப்ப பாடாய் பட்டார். அவளது அப்பா அவளுக்காக சாப்பாட்டை டிஃபன்பாக்ஷில் போட்டு தயாராக வைத்திருந்தார்.       

    கிருஷ்ணன்_தேவசேனா இருவருக்கும் மூன்று குழந்தைகள்.                              

            மகிழினி,   மாதவன்,  மதுரவாணி ‌.  

  மகிழினி MBBS படிப்பை தொடரும் கல்லூரி அழகி. அவளை சொல்ல வேண்டுமென்றால் எப்போதும் புன்னகையுடன் இருப்பவள். கொஞ்சம் கூட கடுமையான வார்த்தையை தாங்கமாட்டாள். இவளது பெற்றோருக்கும் அது நன்கு தெரியும். ஆதலால் அவளை செல்லமாக வளர்ப்பார்கள்.   

     அடுத்து மாதவன், மகிழினியின் தம்பி. எப்போதும் கோபம் தான் அவனது கவசம். அப்பாவிடம் மட்டுமே அடங்கி செல்வான். அவன் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவன். அவன் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே மற்றும் போட்டி என்று வந்தால் அவனே வெற்றியை தட்டி செல்வான்.     

    அடுத்து நம்ம கடைக்குட்டி மதுரவாணி அவள் 10த் படிக்கும் பேரழகி , அவள் ஃபேஷன் டிஸைனர் ஆக வேண்டும் என்றதால் அவ்வளவு கடினப்பட்டு படிக்க மாட்டாள். ஆனால் பேஷன் டிசனைராக தேவைக்கு மட்டும் படுசுட்டியாக மெனக்கெடுப்பாள்

. அக்கா என்றால் கொள்ளை பாசம், அம்மா அக்கா இருவரும் அவளுக்கு இரு கண்கள். அக்கா தங்கை இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்க மாட்டார்கள்._

____________&_______________&_____________       

         மறுபுறம் எழுந்து தனது உடலை கச்சிதமாய் வைத்திருக்க, உடற்பயிற்சியை முடித்திருந்தார் நம் கதையின் நாயகன் வம்சிகிருஷ்ணன்.       இவனது கோபம் என்றும் எதிரில் இருப்பவரின் மனதை நாராய் கிழித்து எரியும் அளவு வீரியம் மிக்க குணம் கொண்டவன்.

வம்சி கிருஷ்ணா MBBS படிப்பை தொடரும் மாணவன் . மறந்தும் கூட சிரிக்க மாட்டான். படிப்பில் கெட்டிக்காரன், ஆதலாலோ அவனுக்காக அவர்களது பெற்றோரான ராஜமாணிக்கம்-சித்ரா அவனது விருப்பமான பாட்டியின் பெயரில் (மஞ்சளா) ஒரு மருத்துவமனை  அவனுக்கு தெரியாமலே கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.      

    அவனுக்கு ஒரே அக்காவான நித்யா, தனது கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டை மிக சிறப்பாக படித்தார். அவளது தோழி சூர்யா தேவி. இருவரும் நகம் சதை போன்றோர்.  அக்காவின் பாசம் எப்படி என்றால் தனது தம்பியை குற்றம் சொல்பவரின் மூக்கை உடைக்கும் அளவு இருக்கும். ( இந்த  characterரை கவனமாகதான் கையாளனும் போல )                             

      மோதலில் ஒரு காதல்          

         மகிழினி தனது தோழியான பிரியாவுடன் கல்லூரிக்கு புறப்பட்டாள்.

பிரியா கருமை நிற பேரழகி, இவர்கள் ஈருடல் ஓருயிர் போல. பிரியாவின் தந்தையான மதிமாறன் அமெரிக்காவில் தனது  காதல் மனைவியுடன்(சரண்யா) அவர்களது மருத்துவமனையை நன்றாக நடத்தி வருகின்றனர். இவர்களது காதல் பரிசாக பிறந்த பிரியாவை அவர்களது தொழிலின் ரீதியில் கவனிக்க இயலாததால் அவளது தோழி மகிழினி குடும்பத்தில் பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு அவளுடனே விட்டு சென்றனர்.            

  கல்லூரிக்கு தயாரான தோழியை அழைத்து சென்றால் மகிழினி. பாதை முழுவதும் காலேஜ் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடனே சென்ற மகிழினி அவளையும் மறந்து காலேஜ்ஜை தாண்டி சென்று கொண்டிருந்தாள்.   

    இதை அறிந்த பிரியா அடியே குள்ளச்சி காலேஜ் அங்குட்டு இருக்கு நீ எங்குட்டு போயிட்டு இருக்க என்று அதட்ட அதில் நடப்புக்கு வந்த மகிழினி தனது முத்து பற்களை பளிச்சென காட்டினாள்”.       

  அதில் பயந்த பிரியா “அடியே ஹிட்லரம்மா அந்த பாதாள குழியை கொஞ்சம் மூடு  பாக்க சகிக்கல” என்று காலை வாரினாள்.        அப்போது சடன் பிரேக் போட்டு ஸ்கூட்டியை திருப்பியவள் அங்கு வந்த காரை கவனிக்காமல் இடித்து , இடித்த வேகத்தில் இருவரும் தார்ரோட்டில் புரண்டு கொண்டிருந்தார்கள் . விழுந்த வேகத்தில் அவளது டிபன்பாக்ஸ் ஓப்பன் ஆகி அனைத்து உணவும் கொட்டி கிடப்பதை விழி விரிய கண்டாள்.    

      பின் தன் தோழியை பார்க்க அவளோ தன் தலையில் கொட்டி, கிடந்த தக்காளி சட்னியை சுவைத்து கொண்டு இருந்தாள், அதை பார்த்த மகிழ் அடச்சியென மறுபுறம் பார்க்க அங்கே ஒரு ஆண்மகன் கோபத் தீயுடன் நின்றவன்.    

   பெண்ணவள் எழுந்து  “அட அறிவு கெட்டவனே நீ என்ன முட்டாப்பையனா எங்கள தள்ளி விட்டுவிட்டு, இங்க  வந்து ஸ்டைலா  போஸ் குடுத்து நின்னுட்டு இருக்க” என்று மகிழ் கத்த,   எழுந்த பிரியாவோ சாப்பாடும் போச்சு என்று வாயை பிதிக்கிக்கொண்டு சொன்னாள்.      

  அதில் கடுப்பான ஆண்மகன் “வாட்த் தி ஹெல் ஆர் யூ ப்ளடி ஸ்டுப்பிட் , டு யூ ஹெவ் எனிசென்ஸ்”. என்று அவனது ஆங்கில புலமையில்  அவர்களை கிழித்து எரிந்தான்.     

     அவன் பின்னால் இருந்து வந்து அவனை சமாளித்தவன் திரும்பி பார்க்க தக்காளி சட்னியால் குளித்தவளை கண்ணெடுக்காமல் பார்த்தவனின் உதடு “தக்காளி சட்னி” என முணுமுணுத்த கௌரிசங்கர் தனது தோழனான வம்சி கிருஷ்ணாவை சரிசெய்தான்.   

       கத்திய கத்தலில் தொண்டை அடைக்க ஓடி சென்று அவனது விருப்பமான பாதாம்பாலை கொண்டு வந்து கொடுக்க அதை பாதி குடித்தவன் மீதியை கௌரியிடம் கொடுத்தான். கௌரி மீதி பாதியை குடித்து கொண்டு இருப்பதை பார்த்த பிரியா பாதாம்பால் என முணுமுணுத்தாள்.   

         மகிழோ, வம்சி கத்திய கத்தலில் கண்ணீர் என்னும் வெள்ளப்பெருக்கை எடுத்து விட்டதால், பிரியாவின் சேட்டையை கவனிக்கவில்லை.      தன்னை சரிசெய்தவள் தனது ஸ்கூட்டியை பார்த்தவள் கண்ணாடி உடைந்திருப்பதை கண்டு செங்கனலாய் முறைத்தாள் அந்த ஆண்மகனை.        

        அவளது வீற்றை பார்த்து என்ன ‘டகரடப்பா ‘இவ்வளவு திமிரா உனக்கு” என்று கேட்க, “ஆமா மாங்காமடயா கண்ணு தெரியாதா?” என்று அவள் கத்த பிரியாவும் கௌரிசங்கரும் சுயநிலை அடைந்து தனது நண்பர்களை சமன் செய்ய, மகிழினியோ கோபமாக “வாடி கருவாச்சி போலாம்” என்று கௌரிசங்கரின் முன் மானத்தை கப்பல் ஏற்றினாள். கௌரியோ சிரிக்க , பிரியா தன் தலையில் அடித்து கொண்டாள்.      

       கோபத்தீயாய் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, அது ஸ்டார்ட் ஆகமலிருக்க அதில் மேலும் கடுப்பான மகிழ் அவனை முறைக்க, வம்சியோ “அந்த டகரடப்பா எப்படி ஸ்டார்ட் ஆகும்” என்று வம்பிழுக்க அவளோ அவனை ஏளனப்பார்வை  பார்த்து “உன் பஞ்சு மிட்டாய் கார்க்கு என் ஸ்கூட்டியே பரவாயில்லை” என்று கூறிக்கொண்டே ஸ்கிளெச்சை அழுத்த அது ஸ்டார்ட் ஆகிவிட்டது.       

      அதை எதிர்பாராத மகிழ், திரும்ப அவனது காரின்மீது மோத அவனது கார் கண்ணாடி சுக்கு நூறாய் உடைந்து பிரியாவின் காலையும் மகிழின் சாலையும் ஒருசேர கிழித்தது. ஆத்திரமுற்ற மகிழ் “டே மாங்காமடையா அந்த பஞ்சு மிட்டாய் காரை எடு” என்று அதட்டினாள்.                 அவர்களை கண்டு வம்சி “செத்த பாம்பை அடிப்பது வீரனுக்கு அழகில்லை” என்று தன்னை வீரனாக நினைத்து காரை எடுக்க நினைக்கையில், மகிழ் வேகமாக ஓடிச்சென்று காரினை மங்குமங்கு என கொட்டிவிட்டு “அவளே அய்யோ அம்மா வலிக்கிறதே” என கற்றியவளை கண்டு தனது காரை பாடாய் படுத்துவதை பார்த்து வேகமாக அவள் அருகில் சென்று அவனும் அவளது மண்டையில் மங்குமங்கு என்று கொட்டினான் நம் நாயகன் வம்சி.         

      அவள் அதற்கும் கத்த , பிரியா மகிழிடம் சென்று “வா நாம் காலேஜ் போனும். உன்னமாதிரி விளையாட எனக்கு டைம் இல்ல” என்று மகிழினியின் காவை வாரினாள்பிரியா.அதன்பின் கிளம்ப தயாரான மகிழிடம் நான் உதவவா என கேட்ட சங்கரிடம் வண்டியை பார்த்து “என் வண்டி கண்டிசன் மிக சீரியசாக உள்ளது அண்ணா” என்றவளை ‘பேவென’ பார்த்து டாக்டர் ஆகவே பேசியவளின் அண்ணா என்ற அழைப்பில் மெய் மறந்தான்.        

         அவளிடம் இருந்து வண்டியை பிடிங்கி “நான் டிரீட்மென்ட் பண்ற பால்டப்பா” என கூறினான். அவனது அழைப்பு புன்னகைத்தர சரி சீக்கிரம் டிஸ்சார்ஜ் பண்ணிடனும் என்று ஒப்புக் கொண்டு வண்டியை சங்கரிடம் கொடுத்தாள் மகிழ்.

   பின் நடக்க இருக்கும் விபரீத விளைவுகளை அறிந்திறுந்தால் ஒப்பு கொண்டிருக்க மாட்டாளோ? என்னமோ?     

                                         சண்டை மீளும் ❤️ 

கௌசல்யா வேல்முருகன் 💫–

7 thoughts on “மோதலில் ஒரு காதல்-1”

  1. Story nalla iruku starting ae strechtcher yethura alavukku sandai nadandhadhu super enna sapadu waste ah pochu adhan enakum kavalaiya iruku…. super super sis…. good going… waiting for next ud

  2. CRVS2797

    அய்யய்யோ..! இது என்ன சின்ன புள்ளைத்தனமா இருக்கே…
    இவங்களை பார்த்தா மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி தெரியலையே… மென்டல் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி இல்லை
    தெரியுறாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *