அத்தியாயம்-6
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தற்பொழுது இப்படி பேசலாமா என்று கேட்பது முட்டாள்தனம். ஆனால் அர்னவ் போன்ற பைலட்டிற்கு இதெல்லாம் அட்வெஞ்சர் த்ரில். இது போன்ற அனுபவத்தை அவன் வாழ்வில் சந்திப்பதில் புத்துணர்ச்சி அடைவதால் பாவனாவிடம் எதை பற்றியும் யோசிக்காமல், “ஹலோ.. இப்படி கண்ணை மூடிட்டு என்னை கட்டிப்பிடிச்சிக்கிட்டா ஓகேவா” என்று கேட்டதும் திடுக்கிட்டு இமை திறக்க, “கொஞ்சம் சுத்தி பாருங்க. செம த்ரில்லா இருக்கு.” என்று கூறியதும் மெதுவாக வலதுபக்கம் பார்வையிட, “ஆஹ்… பயமாயிருக்கு” என்று இமையை இறுக்க, “பச்.. என் அனுபவத்துல சொல்லறேன். நாம லேண்ட் ஆகறதுல எந்த ஆபத்தும் இல்லை. சோ தாராளமா கண்ணை திறந்து பாரு. இந்த மாதிரி அனுபவம் நீயா திரும்ப நினைச்சாலும் கிடைக்காது” என்றதும் பார்வையை நாலாப்புறம் கவனித்தாள்.
உண்மை தான் கீழே இறங்குவது ஒருவிதமான பயத்தை தந்தாலும், மேலீருந்து பூமியை காண்பதில் உலகம் அழகாக காட்சியளித்தது. அதுவும் பச்சை பசுமையான செடி கொடி மரங்கள், கூடுதலாக கடல் என்று பார்வையிட முதலில் பறந்து தலைசுற்றல் வாந்தி என்று தன்னை இம்சித்தாலும், இப்பொழுது ரசிக்கும்படி இருந்தது.
அர்னவ் திரும்ப அவனது க்ளின் சேஃவ் செய்த முகத்தில் தோன்றிய குட்டி குட்டி முடி, பாவனா முகத்தில் உரசியது.
அக்கூச்சத்தில் “ஸ்ஸ்” என்று முகத்தை திருப்ப, இருவரின் முகமும் நெருக்கமானது.
இந்த பூமியில் வெவ்வேறு விதமான நாட்டில் வித்தியாசமான காட்சியில், அழகழகான இடத்தில், பலதரப்பட்ட மனிதர்களை, அழகான பெண்களை அர்னவ் வாழ்வில் பார்த்ததுண்டு. ஆனால் இந்த நொடி அதெல்லாம் தோற்கடிக்கும் விதமாக பாவனா கண்கள்.
அந்த கருவிழியில் அவன் மூழ்கியது போல ஒர் உணர்வு.
அதற்குள் மரம் செடியென்ற இடத்தில் பேரசூட் தரையிறங்கவும், கிளைகள் ஆங்காங்கே அவர்களை உரசி உடலை சிராய்த்தது.
“அம்மா.” என்று அலற, மரத்தில் பேரசூட் சிக்கியது. முதலில் கடற்கரையொட்டிய மணற்பரப்பில் தரையிறங்க முடிவு செய்தவனே. ஆனால் பாவனா கண்களை கண்டு கோட்டை விட்டதால், இப்படி வகையாக சிக்கிக்கொண்டான்.
கீழே ஐம்பதடி இருக்குமென்று தோன்றியது. அர்னவோ பேரசூட்டை நீக்கி குதிக்க முடிவெடுத்தான். அவனுக்கு அதெல்லாம் சாதாரணம். பாவனா?
பாவனாவிடம், “நாம இதுக்கு மேல சிக்கிட்டாச்சு. இனி கீழே குதிக்க வேண்டியது தான். பயப்படாதா லேசா அடிபடலாம்.” என்று கூற, ‘ஆஹ்’ என்று முழிக்கும் முன் பேரசூட்டின் மாட்டியிருந்தவையை நீக்க, மீண்டும் சில கிளைகள் உரசிட, கீழே தொப்பென்று விழுந்தார்கள்.
“அம்மா.. என் இடுப்பு.” என்று பாவனா புலம்ப, மாடி படியில் பத்து படியை ஒன்றாக தாண்டி குதித்தவன் போல அர்னவ் பெண்ணவள் மீதே விழுந்திருந்தான்.
நல்லவேளை பாவனா முதுகில் ஒரு பையை மாட்டியிருக்க அவள் விழுந்த வேகத்தில் அந்த பை தான் அவள் மண்டையை காப்பாற்றியது. கீழே என்ன தான் செடி கொடி என்றாலும் இறுகிய ஈரமண் அவள் மண்டையை உடைத்திருக்கலாம்.
“கொஞ்சம் எழுந்திருங்களேன். அம்மா தாங்க முடியலை.” என்றதும் அர்னவ் மெதுவாக எழுந்தான்.
“ஆர்யூ ஓகே” என்றான். இந்த வினாவை பாவனா தான் அர்னவை பார்த்து கேட்டிருக்க வேண்டும். அவன் கையில் உரசிய தோட்டாவால் ரத்தம் வழிந்திருந்ததே. தற்போது பேரசூட்டையும் அவன் தானே தரையிறங்க இயக்கியது. அதில் வலது இடதென இயக்கும் போது கூடுதலாக ரத்தம் வந்திருந்தது. வலியும் கூடுதலானாது.
“தெரியலை.. ஆனா அந்த ஜீவனிடம் என் மானம் போகாம, அந்த மலையில் விமானத்தோட மோதி வெடிச்சி சாகாம, இந்த நிலை தௌசண்ட் டைம் பெட்டர். உங்களுக்கு ரொம்ப நன்றி. நீங்க தான் என்னை, என் மானத்தை உயிரை காப்பாத்தின கடவுள்.” என்று கூற, அவனோ பெரிதாக வார்த்தையில் உழலாமல் “அந்த பேகை கழட்டு” என்றான்.
அவளும் கழட்ட, அதில் ஒரு பக்கம் ஜிப் திறந்தவன் பஸ்ட்எயிட் பாக்ஸை எடுத்தான். பஞ்சால் இரத்தத்தை துடைத்தான்.
பேண்டெயிட் போட முயல தோல்வியை தழுவியவனை, பாவனாவே முன் வந்து, கட்டிவிட்டாள்.
“அந்த ஜீவன் இந்தளவு கெட்டவனா இருப்பார்னு நினைக்கலை. துப்பாக்கி எல்லாம் வச்சியிருக்கார். இப்ப உங்க கையை உரசிட்டு போனதால் எதாவது ஆபத்து வருமா?” என்று கேட்டாள்.
“தோட்டா உடம்புல இல்லை. அதனால் உடனே சாகலை. ஆனா அதிக ரத்த இழப்பு ஏற்படாம பார்த்துக்கணும். முடிந்தளவு உடனே மருத்துவ உதவி கிடைச்சா நல்லது. ஆல்ரெடி பிளட் லாஸ் தான். முடிந்தவரை இனி கவனிக்கணும்” என்றவன், இடத்தை ஆராய்ந்தான். பையில் திசை காட்டும் புதுவிதமான கருவியை தேடி பார்த்தான். ஏதோ அவன் இருக்குமிடம் அவன் அறிந்தது போல நிம்மதியானான்.
“நாம ஒரு ஐலேண்ட்ல தான் இருக்கோம். ஆனா கமர்ஷியலா மக்கள் நடமாடும் ஐலேண்ட் கிடையாது. அதனால ஜாக்கிரதையா வரணும்” என்று கூறிவிட்டு நடந்தான்.
பாவனாவும் அவனை பின் தொடர, காலார நடந்தார்கள்.
“இப்ப எங்க போறிங்க?” என்றாள்.
“தெரியலை” -அர்னவ்
“நாம இங்க இருப்பதை மத்தவங்களிடம் எப்படி சொல்லறது?” என்று அந்த காட்டில் திகிலுடன் கேட்டாள்.
“தெரியலை.” என்றான்.
“நம்மளை தேடி யாராவது வருவாங்களா?” என்று ஏதோ சத்தம் கேட்டு நாவறண்டு கேட்டாள்.
“தெரியலை” என்றவன் என்ன சத்தமென்று உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தான்.
“உங்க பிரெண்ட் அவரும் இங்க தான் லேண்ட் ஆகியிருப்பாரா?” என்று கேட்டாள்.
“தெரியலை. கொஞ்சம் சும்மாயிருக்கியா” என்று என்ன சத்தமென்று அறிய முடியாத கோபத்தில் கத்தினான்.
“எதுக்கு இப்படி கத்தறிங்க. விமானத்தை ஒழுங்கா ஓட்டியிருந்தா இந்த மோதலை தவிர்த்திருக்கலாம்.” என்று இவளுக்காக தான் கலவரமே நடந்ததை மறந்து வார்த்தையை விட்டாள். வார்த்தை விடுபட்ட பின்னே தவறு உணர, அதற்குள் அர்னவிற்கு கோபம் பொங்கியது.
“ஒழுங்கா ஓட்டியிருந்தாவா? வாட் யூ மீன்? இந்த பிரச்சனையோட ஆரம்பம் நீ. ஒரு பொண்ணா சரியான முடிவெடுத்திருக்க வேண்டியது நீ.
பணம் தர்றான்னு நல்லவன் கெட்டவன் கூட யோசிக்காம எவனோடவோ தனி பிளைட்ல வந்தது நீ. ஏதோ பத்திரத்துல டெர்ம்ஸ் ஆஃப் கண்டிஷனை கூட கவனிக்கலையா? படிச்சவ தானே நீ. என்ன தான் பணத்தேவை என்றாலும் கவனிச்சிருக்க வேண்டாம்.
இதுல.. என்னோட பைலட் வேலையில் சரியா ஓட்டலைன்னு சொல்லற. என் சர்வீஸ்ல இந்த மாதிரி யாரும் சொன்னதில்லை. ஆனா இந்த பிரச்சனையோட காரணம் உன்னால. நீ எப்படி என் வேலையை குறை சொல்வ? சே” என்று எரிச்சலாக முகம் காட்டி நடந்தான்.
அர்னவிற்கு பைலடாக இருப்பது சுவாசிப்பதற்கு சமம். வானத்தில் பறக்க விரும்பும் ராஜாளி அவன். அவன் வேலையில் இவள் குறை சொன்னால் அவனால் தாங்கயியலாமல் முகம் காட்டினான்.
“சாரி சாரி.” என்று அவனை தீண்ட, “ஏய் சீ தொடாத. உன்னை போய் காப்பாத்தினேன் பாரு. ஒரு பிரைவேட் பிளைட்ல சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகாத உனக்கு எண்பதாயிரம் பணம் தந்து இங்க ஒரு வாரம் தனியா கூட்டிட்டு வந்தான்னா எதுக்குன்னு தெரியாது. அவன் மேல தப்பில்லை. உன்னை தான் சொல்லணும்.” என்று கடித்து துப்பினான்.
பாவனா அப்படியே உறைந்தவளாக மாறினாள். அடியெடுத்து வைக்க, தயங்கி கலங்கிப் போனாள்.
அர்னவ் நாலடி எடுத்து வைத்தப்பின், பாவனா வராததை கவனித்து திரும்பினான்.
“வர்றியா இல்லையா. இப்பவே மணி மூன்றரை, லேட்டாச்சு காடு இருட்டிடும். இங்க மனுஷ நடமாட்டம் இல்லாத தீவா இருந்தா ஏதாவது மிருகம் இருக்கும். அதுக்குள்ள ஒருயிடம் பாதுகாப்பா பார்க்கணும்.” என்று உறுமினான்.
“நான் உங்க கூட வருவது உங்களுக்கு கஷ்டமாயிருக்கும். நீங்க என்னை காப்பாற்றியதே போதும். நான் இங்கயே இருக்கேன்.” என்று அவன் வீசிய வார்த்தையால் துவண்டவளாய் வரமறுத்தாள்.
“விளையாடறியா கஷ்டப்பட்டு அவனிடமிருந்து காப்பாத்தி, புல்லட் உரசி, விமான விபத்து நிகழ்ந்து ஒரு பேரசூட்ல இங்க வந்து குதிச்சது. இங்க தனியா விட்டுட்டு போறதுக்கா?உனக்கு இங்க தனியா வந்து என்ஜாய் பண்ணணும்னா லட்சக்கணக்குல செலவு செய்து வந்துக்கோ. இப்ப என்னோட வர்ற. உன்னை சென்னையில சேஃப்பா விட்டுட்டு நான் என் வேலையை பார்க்க போறேன்.” என்று கோபமாய் உரைத்ததும், பாவனா சுத்தி இடத்தை கண்டு பின் தொடரும் விதமாக மௌனமானாள்.
அர்னவ் கையை அடிக்கடி பார்வை பார்த்து, தலையை கோதினான்.
சந்தோஷ் எங்கே தரையிறங்கினானோ. அந்த ஜீவன்? அவனும் இந்நேரம் எங்கயாவது தரையிறங்கியிருப்பான். தன் பேண்ட் பேக்கெட்டில் போனை எடுத்து, சிக்னல் உள்ளதா என்று ஆராய்ந்தான்.
“உன் போன்ல சிக்னல் இருக்கா?” என்று கேட்க, தன் உடையை தொட்டு பார்த்தாள். ஜீன் ஸ்லீவ்லஸ் டாப் அணிந்ததால், தன் போனை ஜீனில் வைத்திருக்க எடுத்து பார்த்தாள். “எனக்கும் சிக்னல் இல்லை” என்று சுருதியின்றி உரைத்தாள்.
எப்படியும் தன் பணியிடத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசித்து நடக்க, பாவனா உயிரற்றவளாய் நடந்தாள்.
அர்னவ் கைகடிகாரத்தை பார்த்து பார்த்து அடிக்கடி நடந்தான்.
அவர்கள் நல்லநேரம் எவ்விதமான விலங்குகளும் அங்கே இல்லாதது போல தோன்ற கொஞ்சம் நிம்மதியான்.
ஓரிடம் வந்ததும் மணி ஐந்தாக அலையோசை சத்தம் வேறு கேட்டது, “நில்லு” என்றவன் சத்தம் வரும் இடத்தை ஆராய்ந்து, “இந்தப் பக்கம் போவோம்” என்று நடக்க, “இந்நேரம் யாரும் நம்மளை தேடி வரமாட்டாங்களா. இருட்டற மாதிரி இருக்கே” என்று கேட்க, “நம்ம லக் விமான விபத்துல வெடிக்கலை. பேரசூட் ஷார்ட்டேஜ் இருந்தும் உயிர் பிழைச்சிருக்கோம். சரிய இடத்துல லேண்ட் ஆகா ஏடாகூடமா மரத்துல கிளை மாட்டியும் ஒழுங்கா தரையிறங்கினோம். ஏதோ இந்த நேரம் கடற்கரை ஓட்டி உடனே வந்துட்டோம். அதுவரை சந்தோஷப்படு” என்று கூறியவன், இடுப்பில் கையை வைத்து கடற்கரைக்கு வந்து யாராவது தென்படுகின்றாரா என்று பார்த்தான்.
ஜீவனோ சந்தோஷோ யாராவது இருந்திருக்க வேண்டும். இங்கு அப்படி இருவரும் இல்லையென்றால் அவர்கள் வேறிடத்தில் தரையிறங்கியிருக்க வேண்டும். இப்பொழுது மூவரையும் தேடி யாராவது வந்தால் உண்டு. அல்லது கடற்படை அதிகாரிகள் ரோந்திற்கு வந்தால் உதவியாக இருக்கும்.
எது விரைவில் நடக்குமோ?
அதற்குள் இரவு தங்க தேவையானவள்றை சேகரிக்க வேண்டும் என்று முடிவுக்கட்டினான்.
அர்னவ் கொண்டு வந்த முதுகு பையில் சீக்ரேட் ஜிப்பை திறந்தான்.
அதில் மெலிதாக இருந்த கவரை எடுத்து உதறி பிரிக்க, பிரிக்க, ஒரு குட்டி டெண்ட் உருவாக்க இருந்தது.
ஒரு ஆள் படுத்துறங்கும் வகையில் வசதியாகவே இருந்தது.
அதை சரியான இடத்தில் வைத்துவிட்டு எதிரே கடற்கரையோட்டிய மரத்தின் அருகே பள்ளத்தை நோண்டினான்.
குழி தோண்ட தோண்ட கடற்நீர் வந்தது. அதில்குடிநீருக்காக சிலகற்களை போட்டு விட்டு ஏதேதோ செய்ய, “நான் ஏதாவது உதவணுமா?” என்று நடுங்கிக் கொண்டே கேட்டாள்.
“காய்ந்த கட்டை சறுகு எடுத்துட்டு வா” என்று உத்தரவிட்டான்.
பாவனா கேட்டது குற்றமா என்பது போல, வேலை ஏவிவிட்டானே என்று சென்றாள்.
சின்ன சின்ன குச்சியாக கொண்டு வந்து வைத்தவளை கண்டு, ”இதை விட சின்னது கிடைக்கலையா?” என்றான் நக்கலாக.
‘கையிலிருந்தவையை தொப்பென்று போட்டுவிட்டு கொஞ்சம் பெரிது பெரிதாக இருப்பதை பொறுக்க சென்றாள்.
அவள் பக்கம் ஒரு கண்ணை வைத்தபடி இதர வேலைகளை ஆரம்பித்தான்.
‘இவர் என்ன செய்யறார்.’ என்று குழம்பினாலும் அர்னவ் சொல்வதை கேட்க வேண்டுமென்ற எண்ணமிருந்தது. அவள் மானத்தை காப்பாற்றியவன் அல்லவா.?
அர்னவ் ஏதோதோ செய்ய பாவனா கட்டை கட்டையாக கொண்டு வந்து குவிக்க, “அம்மா அய்யோ” என்று அலற, அர்னவ் ஓடிவந்தான்.
கட்டையிலிருந்த பெரிய அட்டை ஒன்று அவள் வலது கையில் ஏறிக்கொண்டது. ஏதோ பாம்பு தான் ஏறியதாக அலறிவிட்டாள். கையை உதற அட்டைப்பூச்சியோ கீழே விழாமல் உடும்பாக ஒட்டிக்கொண்டது.
அர்னவோ கையிலிருந்த கத்தியை எடுத்து, அப்புறப்படுத்துவதில் மும்முரமானான். பாவனாவோ அட்டைப்பூச்சியின் நீளத்தை கண்டு, பாம்பு என்று பதறி, “நான் உயிரோட இருக்க மாட்டேன். என்னை பாம்பு கொத்திடுச்சு. எங்க வீட்ல எங்கம்மாவிடம் நான் செத்துட்டேன்னு சொல்லிடுங்க” என்று மயங்கி சரிந்தாள்.
“ஏய் லூசு இது அட்டை பூச்சி” என்று உரைக்கும் முன் மயங்கிவிட்டாள். சிலருக்கு அதிர்ச்சியில் ஏற்படும் மயக்கம். அப்படி தான் பாவனாவின் மயக்கம்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Very nice ud samma entrastinka erukku super super super super
ராஜாளியின் ராட்சசி…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 6)
அடிப்பாவி மக்கா ! நிசமாவே இவ லூசு தான் போல. அக்ரிமெண்ட்ல படிக்காமலே சைன் போடுறா, எண்பதாயிரம் சேலரிக்கு தான் எந்த விதத்துல வர்த்ன்னு கூட யோசிக்கலை,
இப்ப சாதாரண அட்டைப்பூச்சிக்கு அம்புட்டு பெரிய ரியாக்சனை காட்டுறா… ஓ எம் ஜீ ! அர்ணவ் உன் பாடு ரொம்பவே கஷ்டம் தான்டா..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Bhavana bayapada la na than aachiriyam yae indha oru nall la ava life la neraiya parthutu ah
Wow sema sema fantastic narration. Really i too felt that parachute feel and forest feel. Bavana so innocent. Intresting sis.
Bhavana taknnu varthaiya vituta unakaga than avan flight pakama sanda potu kapathinan atha matanthutiye ma
Interesting😍😍
அருமையான பதிவு
👌👌👌💕💕