ஹரிணியின் பெற்றவர்கள் அபிராமி என்ன சொல்ல வருகிறார் என்பதற்காக அபிராமி முகத்தையே பார்த்தார்கள் .”அபிராமி ஒரு சில நொடி ஹரிணியின் பெற்றோர்களை பார்த்துவிட்டு நான் ஹரிணியை எங்கள் வீட்டு மருமகளாக அழைத்து செல்கிறேன்” என்றார்..
ஆனால் இல்லாத ஒருவனின் மனைவியாக அல்ல என்றார் பிறகு எப்படி என்று விட்டு அமைதியாக பார்த்தார்கள்.” என் வீட்டின் மூத்த மருமகளாக எனது மூத்த மகனின் மனைவியாக என்றார் “.என்ன உங்கள் பெரிய மகனுக்கு ஹரிணியை பெண் கேட்டு வந்திருக்கிறீர்களா? என்று கௌதமி, தணிகாசலம் இருவரும் அதிர்ச்சியாகி கேட்டார்கள் ..
அப்போது, “இவ்வளவு நேரம் வீட்டிற்குள் அவளது அறைக்குள் அமைதியாக மகியின் பெற்றவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த ஹரிணி கதவை திறந்து கொண்டு வேகமாக கத்தி கொண்டே வெளியில் வந்தாள் “..
“யாரைக் கேட்டு என்ன முடிவு செய்தீர்கள் நான் எப்படி இருக்க வேண்டும். இந்த குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டுமா அழிக்க வேண்டுமா வேரு ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டுமா இல்லை என்ன ஏது எல்லாம் முடிவு செய்ய வேண்டியது நான்” ..
“நீங்களோ என்னை பெற்றோர்களோ அல்ல சரியா” ஆனால், என்னை பெற்றவர்களாக ஒரு தாய் தந்தையாக இவர்கள் யோசிப்பதை தவறு இல்லை என்றுதான் நான் அமைதியாக இருந்தேன்”. அதற்காக நீங்களாக எதையாவது முடிவு செய்து கொள்வீர்களா? ..
“யாரை கேட்டு முடிவு செய்தீர்கள் உங்கள் பெரிய மகனுக்கு என்னை பெண் கேட்டு வந்து இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள் நான் உங்களிடம் வந்து எனக்கு வாழ்க்கை பிச்சை போடுங்கள் என் குழந்தை என்னால் வளர்க்க முடியாது பிச்சை போடுங்கள் என்று கேட்டேனா” என்று கத்தினாள் ..
அமைதியாக தான் பார்த்தார் ராசு அபிராமி தான் ஹரிணியின் கையை பிடித்தார். ஹரிணி வேகமாக அபிராமி கையை உதிரி விட்டு வேண்டாம் உங்கள் அனுதாபமும் ,அக்கறையும் எனக்கு வேண்டாம் .
“என் வயிற்றில் வளரும் என்னுடைய மகியின் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் .அதற்கு நீங்களோ என்னை பெற்றவர்களோ ஒன்றும் என்னையையும் என் குழந்தையை பாரமாக என்ன வேண்டாம் என் வாழ்க்கையை எனக்கு பார்த்துக்கொள்ள தெரியும்.”..
” எனக்கு என்னுடைய அப்பா அம்மா கொடுத்த படிப்பு இருக்கிறது. ஒத்துக்கொள்கிறேன் அவர்கள் கொடுத்து படிப்பு தான் அதை வைத்து நான் என் வயிற்றில் இருக்கும் குழந்தையை பார்த்துக் கொள்வேன் தனி ஆளாக என்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”..
ஆனால் ,இவ்வரெல்லாம் கேட்டுக் கொண்டு வந்து என்னை மொத்தமாக கொல்லாதீர்கள் என்று கத்தினாள். அங்கையே மடிந்து உட்கார்ந்து கொண்டு “ஒருவனை மனதிலும் அவனின் குழந்தையையும் வயிற்றிலும் சுமந்து கொண்டு வேறு ஒருவனுக்கு அதுவும் அவனுடைய அண்ணனுக்கு கழுத்தை நீட்டுவதா ?என்று உள்ளுக்குள் அவளுக்கு நடுக்கம் கூட ஏற்பட்டது என்று சொல்லலாம்”..
அவளது அடி வயிறு கலங்க செய்தது. தான் காதலித்தவனை எண்ணி அழ செய்தாள் இரண்டு தாய் உள்ளத்திற்குமே அவளை அப்படி பார்க்க மனமில்லை வலிக்க செய்தது .உள்ளுக்குள் ஒரு பெண்ணாக அவளது மனநிலை உணர்ந்த இரவருமே அவளின் இரு பக்க தோளிலும் கை வைத்தார்கள் .
“நிமிர்ந்து இருவரையும் பார்த்துவிட்டு போதும் என் வாழ்க்கை பற்றிய கவலை உங்கள் இருவருக்கும் தேவையில்லை. தங்கள் மகனின் செயலால் தங்கள் மகனின் வாரிசு என் வயிற்றில் வளர்கிறது என்று நீங்களும் உங்கள் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று எண்ணி நீங்களும் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை”..
” நான் யாருக்கும் பாரமாக இருக்க மாட்டேன் என்று கத்தினாள் அப்பொழுது கௌதமி தான் தனது மகளை ஓங்கி அறைந்திருந்தார். நாங்கள் சொன்னமா டி நீ எங்களுக்கு பாரம் என்று என்றார். என் வயிற்றில் வளரும் குழந்தை பாரம் என்று சொன்னீர்களே “என்றாள்..
“கொஞ்சம் தாயாக எனது மனநிலையும் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது நீ காதலித்தவன் இருந்திருந்தால் உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவன் ஒற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவனிடம் பேசி உன்னை திருமணம் செய்து வைத்திருப்போம் “..
ஆனால் ,”இல்லாத ஒருவனுக்காக அவனுடைய குழந்தையை சுமந்து கொண்டிருப்பது ஒரு தாயாக எங்கள் இருவருக்கும் பெற்றோர்களாக வலிக்கிறது .உன்னுடைய எதிர்காலத்தை எண்ணி பயம் ஏற்படுகிறது “
“ஒரு பெற்றவர்களாக எங்களுடைய மனநிலையில் யோசிக்கிறோம் நாங்கள் உன்னுடைய மனநிலை யோசிக்காமல் இல்லை நீ விரும்பியவன் இருந்திருந்தால் நாங்கள் இவ்வாறு எல்லாம் யோசிக்க மாட்டோம் என்று உனக்கே தெரியும் “.
“நீ விரும்பியவனை நாங்கள் சரி என்று தானே சொன்னோம் உனக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று தானே சொன்னேன் .மகி தானே எங்களிடம் வந்து பேசி விட்டு சென்றான் .என் அண்ணனுக்கு திருமணமாகும் வரை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றான்”..
ஆனால், “இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய் ?என்றார். அதற்காக அவனுடைய அண்ணனுக்கு என்னை திருமணம் செய்து வைப்பீர்களா ?”ஒன்றை புரிந்து கொள்.
அவர்கள் தான் வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் நாங்கள் எந்த முடிவும் சொல்லவில்லை என்றார் கௌதமி .அம்மா எனக்கு புரியவில்லை என்ன நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை .அவர்கள் பேசுவது கேட்பது வந்து சரியா ?நீங்களும் இறுதியில் வந்து அவருக்கு என்னை திருமணம் செய்து வைக்கலாம் என்று தானே முடிவு செய்வீர்கள் என்று கத்தினாள்..
” எப்படி ஹரிணி நாங்கள் அப்படி ஒரு முடிவு எடுப்போம் என்று நினைக்கிறாய் இப்பொழுது அவர்கள் வீட்டு வாரிசு என்று வந்து நிற்கிறார்கள் என்று இருந்தால் கூட என்றார். அப்போது ,அபிராமி தான் போதும் கெளதமி வார்த்தைக்கு வார்த்தை எங்கள் வீட்டு வாரிசு வாரிசு என்று சொல்லாதீர்கள் இப்பொழுது இந்த குழந்தை உங்களுக்கும் வாரிசு தான்.”அதை மறந்து விடாதீர்கள்.”
” நான் அந்த வாரிசுக்காக மட்டும் வந்து கத்திக் கொண்டு இல்லை .உங்கள் பெண்ணின் வாழ்க்கையை மனதில் வைத்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஹரிணி எங்கள் வீட்டுக்கு மருமகளால் வந்தால் அவளுக்கும் சரி அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சரி நல்ல எதிர்காலம் அமையும் என்று மட்டும் தான் நினைக்கிறோம் “என்றார்..
இப்போது ஹரிணி தனது தாயை பார்த்தீர்களா ?என்பது போல் பார்த்தாள். கௌதமி தான் பேசினார் அபிராமி நீங்க சொல்வது எந்த அளவிற்கு சாத்தியமாகும் நீங்கள் முதலில் உங்கள் பெரிய மகனிடம் பேசி விட்டீர்களா ?என்று கேட்டார் .
ஹரிணி அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.அவளால் நிற்க கூட முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .கை கால்கள் நடுங்கியது .அபிராமி பேசிய பேச்சால் அவனிடம் பேசி விட்டேன் ஆனால் அவன் ஒத்துக்கொள்ளவில்லை என்றார் அபிராமி அமைதியாக ராசு பார்த்தார்..
“கௌதமி சிரித்துக்கொண்டே எப்படி ஒத்துக் கொள்வார் தம்பி விரும்பிய பெண் என்று மட்டும் சொல்லி இருந்தால் கூட ஒத்துக்கொள்ள மாட்டார் அப்படி இருக்கும்போது தம்பியின் கருவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் என் பெண்ணை எப்படி ஒத்துக் கொள்வார் “..
“அவன் திருமணம் செய்து கொள்வான் அதற்கு நான் ஒரு உறுதி தருகிறேன். நான் இப்பொழுது பேச வந்தது உங்களிடமும் ,உங்கள் பெண்ணிடமும் என்றார்.எனக்கு புரியவில்லை அபிராமி உங்கள் மகன் ஒத்துக்கொள்ளாமல் உங்கள் மகன் எப்படி திருமணம் செய்து கொள்வார் என்று எங்களிடம் பேச வந்திருக்கிறீர்கள்? என்றார்” .
நான் தான் சொல்கிறேனே எங்கள் மகன் ஒத்துக் கொள்வான் “எப்படி சம்மதம் சொல்வார். நீங்கள் நாங்கள் சம்மதம் சொல்வோம் என்று எப்படி நம்பி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார் .உங்கள் மகளின் எதிர்காலத்தை எண்ணி சம்மதம் சொல்வீர்கள் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்காக சம்மதம் சொல்வீர்கள் என்று எண்ணி வந்திருக்கிறேன் “..
“உங்களுக்கு இந்த கருவை அழிப்பது நோக்கம் அல்ல என்று ஒரு தாயாக நான் உணர்கிறேன் .உங்கள் மகளின் எதிர்காலத்தை எண்ணி மட்டுமே இந்த குழந்தையை அழிப்பதை பற்றி யோசிக்கிறீர்கள். ஆனால் ,நான் இந்த குழந்தையும் அழிக்காமல் உங்களின் மகளின் எதிர்காலத்தையும் நல்வாழ்க்கையாக மாற்றுவதை பற்றி பேசுகிறேன் “..
“என் பெரிய மகனை திருமணம் செய்து கொண்டால் உங்கள் மகளின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் .இரு வீட்டு வாரிசையும் அழிக்க வேண்டியதில்லை என்றார் .உங்கள் மகன் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் ,எப்படி என் மகளை உங்கள் வீட்டு மருமளாக நன்றாக வாழ்வாள் என்று நினைகிறீர்க்கள் “.
நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என் மகன் ஒத்துக் கொள்வான். உங்கள் மகள் கழுத்தில் தாலி கட்டுவான் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?என்பதை சொல்லுங்கள் என்றார்.நான் ஒன்று கேட்பேன் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் வந்து உங்கள் மூத்த மகனுக்கு ஹரிணியை பெண் கேட்பதால் சொல்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் உங்கள் மகன் ஒத்துக் கொள்ளட்டும் .என் மகள் உங்கள் வீட்டு மருமகளாகவே வரட்டும். என்றுடன் ஹரிணி நிமிர்ந்து தனது தாயை முறைத்தாள் கெளதமி தனது மகளை பெரிதாக எண்ணாமல் அபிராமி இடம் பேசி செய்தார். .
“நாளை திருமணமாகி இருவரும் நீங்கள் எண்ணுவது போல் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் சாதாரணமாகவோ இல்லை ,ஏதாவது பிரச்சனையோ, சண்டையிலோ உங்கள் மகன் ஒரு வார்த்தை என் தம்பியை காதலித்தவள் தானே அவனின் கருவை சுமந்தவள் தானே என்று சொன்னால் “என்றார்..
இப்பொழுது “அபிராமி ராசுவை பார்த்தார். இதே கேள்வியை தானே தன் கணவர் கேட்டார் என்பது போல. ராசு அமைதியாக தனது மனைவியை தான் பார்த்தார் என் மகன் அவ்வாறு கேட்க மாட்டான் அதற்கு நான் வாக்கு தருகிறேன் இல்லை அப்படி அவன் நீங்கள் சொல்வது போல் குடும்பமாக வாழ்ந்த பிறகு ஏதோ ஒரு பிரச்சனையிலோ ,சண்டையிலோ ஏதோ ஒரு விதத்தில் கேட்டால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று அவனுக்கு தெரியும் “..
அதனால் உங்கள் மகள் மட்டும் பாதிக்கப்பட மாட்டாள் ,என் மகனும் தான் பாதிக்கப்படுவான் அப்படி கேட்டால் அவனை அவனே கொன்று கொள்வதற்கு சமம் . யாருமே வார்த்தையை கொட்டி விட்டு அல்ல முடியாது தான். ஆனால் ,அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி அவன் யோசிப்பான்..
” அவன் அப்படியே விட்டு விட மாட்டான் என்றார் இவ்வளவு தூரம் அபிராமி பேசுவதை எண்ணி ஹரிணியின் பெற்றவர்கள் யோசிக்க செய்தார்கள் .சரி எங்களுக்கு விருப்பம் நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கிறோம் .என் மகளின் எதிர்காலத்திற்காகவும் அவள் குழந்தைக்காகவும் என்றார் கெளதமி.”
அம்மா என்று ஹரிணி கத்தினாள். ஹரிணியின் பெற்றவர்கள் ஒத்துக்கொண்டாலும் ஹரிணி திருமணத்திற்கு ஒத்து கொள்வாளா ?அப்படி ஒத்துக்கொண்டு சித்துவின் வீட்டிற்கு சித்திவின் மனைவியாக சென்றால் அங்கு அவளுக்கு அவளது வாழ்க்கை எவ்வாறு செல்லும் என்பதை நாம் வரும் பதிவுகளை பார்க்கலாம்..
அன்புடன்
தனிமையின் காதலி
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Kastam tha harini ku avana ethukurathu but kolanthaikum un life Kum oru nala future irukanumnu tha intha idea solranga illana una asingama pesum intha ulagam so first kolanthaikaga yosi then life la next step po mudinja po
Superrrrr ❤️
எப்படி முடியும்
இவங்களா முடிவு பண்ணறாங்க தம்பி காதலித்து கர்ப்பமாக இருக்கா அண்ணன் கூட கல்யாணம் அவளுக்கு வலிக்கும் இவங்க புரிச்சிக்க மாட்டேகிறாங்க
💕💕💕💕
Nice
Superb epi
இனி ஹரிணி எப்படி ஒத்துக்கொள்வாளா?
தம்பியை காதலிச்சுட்டு வயிற்றில்குழந்தையோட அண்ணனை கட்டிக்க சொல்றது எவ்வளவு பெரிய வேதனை ஹரிணிக்கு ஏதாவது சண்டையில் பேசிட்டா தாங்க முடியாது. ரைட்டிங் சூப்பர் பா