Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 54

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 54

அத்தியாயம் – 54

மேதாவிற்கு பதட்டத்தில் வலி அதிகமாக துவங்கியது
யாரிடம் உதவி கேட்பது என்றே புரியவில்லை அவளது உடை வேறு அன்றைய தினம் சந்தன நிற சுடிதார் அணிந்து இருந்ததால் இரத்தக்கறை அவளது உடையை நன்றாக பதம் பார்த்தது.
காலிலும் இரத்தம் வடிய துவங்கியது.
அங்கிருந்த இடிந்த கட்டிடத்தின் முன் இருந்த கல்லில் அமர்ந்தவளுக்கு என்ன செய்வது என்றே புரியாத சூழல்.
அங்கு மனிதர்கள் நடமாட்டம் வேறு இல்லை அதனால் மேலும் பதட்டமானாள்.
சிறுவயதில் அவளுக்கு நடந்தது போன்றே இன்றும் நடக்கிறது ஆனால் அன்று காப்பாற்ற வந்த ஆராஷி இன்று வரமாட்டானே வேறு யாரிடம் உதவி கேட்பது என்று எண்ணியபடியே அருந்ததிக்கு கால் செய்தபடி இருந்தாள்.
அருந்ததியை தவிர இங்கு யாரும் இல்லையே என்கிற எண்ணம் வேறு ஆராஷிக்கு ஃபோன் செய்து உதவி கேட்கலாமா என்று யோசிக்க அவளது நிலை அவனிடம் உதவி கேட்க முடியாது போனது.
மார்கெட் தாண்டி ஐந்து கிலோமீட்டர் மேல் அவனது வாகனம் சென்றுவிட்டு இருந்தது.

உடனடியாக தனது மொபைலில் தனது லைவ் லொகேஷனை அருந்ததிக்கு அனுப்பியவள் மெஸ்ஸேஜும் செய்தாள் வரும்போது பேட் உடன் வரும்படி.
இதையெல்லாம் அவள் செய்து முடிக்கும் முன் அவளையே பார்த்தபடி தூரமாய் நின்றிருந்த மூன்று இளைஞர்கள் அவளை நோக்கி வரத்துவங்கினர்.
அன்றைய தினம் போலவே இன்றும் அவளுக்கு அதேபோல் நடக்க போகிறது என்ற பயமும் அன்று ஓடினாள் ஆனால் இன்று ஓடக்கூட முடியாத அளவுக்கு வயிற்று வலியும் தனது உடையும் தன்னை பாடாய் படுத்துகிறதே என்று மேலும் பதட்டமானாள்.
அந்த பதட்டத்திலும் தனது மொபைலின் லாக் பட்டனை மூன்று முறை அழுத்தி sosஐ ஆக்டிவேட் செய்துவிட்டாள்.
அதனால் அவளது லொக்கேஷனை அருந்ததிக்கும் நிதினுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பியது அவளது மொபைல்.
அவளது அருகில் வந்த இளைஞர்கள் அவளது நிலையை பார்த்தனர் அவளது வண்டியின் நிலையை பார்த்தனர் அவளையே பார்த்தபடி அவர்களுக்குள் குசுகுசுவென பேச துவங்கினர். அவளுக்கு திக்கென்று ஆனது பின் ஒரு மாதிரியான அவள் அருகில் வந்து தெலுங்கில் பேச ஆரம்பித்தனர்.
(மொழிபெயர்ப்பு)
“என்னடா இது இந்த நேரத்தில இங்கே கால்கேர்ல்ஸ் தானே இருப்பாங்க இந்த பொண்ணு என்ன தொழிலுக்கு புதுசா? இதுவரை இங்கே நாம பார்த்தது இல்லையே?” என்று அந்த மூவரில் ஒருவன் பேச அவளுக்கு திக்கென்று ஆனது. தெலுங்கு ஓரளவுக்கு புரியும் ஆனால் பதில் பேச தெரியாது.
ஆனால் இவர்களை விலைமாது என நினைத்து பேசுவது அவளுக்கு உடலே கூசி போனது.

ஏற்கனவே சிறிய வயதில் இதே சம்பவம் நடந்ததன் தாக்கம் அவளை விட்டு நீங்காமல் இருந்ததால் அன்று போலவே இன்றும் செய்வதறியாது திகைத்தவளுக்கு அழுகை வந்து விட்டது.

“நா..நான் நீங்க நினைக்கிற மாதிரி ஆள் இல்ல” என்று திக்கி திணறி அவள் கூற அவளை பார்த்து சிரித்த மூவரும்
“ஓஓஓ தமில்நாடுவா? அதான் சிக்குனு இருக்குற பரவாயில்லை செம்ம ஃபிகர்தான்” என்று ஒருவன் ஓட்டை தமிழில் பேச அவளுக்கு இன்னும் அழுகை கூடியது போன ஆரா திரும்பி வந்தாலாவது நன்றாக இருக்கும் என்று எண்ணியவளின் மொபைல் வீடியோ காலில் அலற துவங்கியது.
கை கால் நடுங்க எடுத்து பார்த்தவள் நிதின் என்றதும் உடனே அட்டென் செய்து
“அ..அண்ணா..அண்ணா” என்று அழ தைரியமான தனது தங்கை அழுவதை பார்த்தவனுக்கு அதிர்ச்சி ஒருபுறம் என்றாலும் பயமும் சேர

“மோளே.. கரையண்டா… எங்கே இருக்க நீ சொல்லு உடனே கார்ட்ஸ் அனுப்புறேன்?” என்று அவன் கேட்க அதுவரை அமைதியாக இருந்தவர்கள்
அவளறியாத நேரம் அவளது மொபைலை பிடுங்கினர்.
அதிர்ச்சியில் எச்சில் கூட உள்ளே செல்லவில்லை அவளுக்கு எழுந்து ஓடக்கூட வழியில்லை. கூனிகூறுகி போனாள்.

“மோளே..மோளே” என்று நிதின் கத்த அந்த மொபைலை பிடுங்கியவன் நிதினை பார்த்து
“உங்க மோளே இங்கேயே தான் இருக்கும்” என்று பேசும்போதே அவளது மொபைலும் உயிரிழந்து போனது. அதை பார்த்து மேதாவிற்கு மேலும் நடுக்கம் என்றாள் அவர்கள் மூவரும் சிரித்தனர்.
மறுமுனையில் நிதின் “ஹேய் ஹேய் யாருடா நீங்க” என்று கத்தியது அவர்களுக்கு கேட்காமலே போனது உடனே கார்ட்ஸ்க்கு
ஃபோன் செய்த நிதின் பரபரப்பாக பேச அவர்கள் உடனே அங்கு செல்வதாக கூறினர்.

“எவ்ளோ தைரியம் இருந்தா நாங்க இருக்கும் போதே நீ ஹெல்ப்க்கு ஆள் கூப்பிடுவ இப்போ மொபைலே ஆஃப் ஆகிபோச்சு எந்த ஹீரோ வந்து உன்ன காப்பாத்துறான்னு நானும் பார்க்கிறேன்.
ஏதோ பார்க்க அழகா இருக்கியே கொஞ்சம் பதமா ஹாண்டில் பண்ணலாம்னு நினைச்சா நீ கேடி வேலை பார்க்கிற இன்னைக்கு உனக்கு தீபாவளிதான்” என்றபடி அவளது மொபைலை அவளது மடியில் வீசியவன்
“டேய் இவ ஓவரா பண்ணிட்டாடா நம்ம வண்டியை வரச்சொல்லுடா இவள நம்ம இடத்துக்கு தூக்கிட்டு போவோம் அங்க பாப்பாக்கு பாடம் சொல்லித்தரலாம்” என்று கூற அவளுக்கு மேலும் அழுகை வந்தது.

இவர்களுக்கு தன் நிலையை எப்படி புரிய வைப்பது சொன்னால் புரிந்து கொள்ளும் நிலையிலா அவர்கள் இருக்கிறார்கள் அதுவரை அமைதியாக இருந்தவர்களை தானே ஃபோன் பேசி கோபப்பட வைத்துவிட்டோமே இப்போது ஹெல்ப்க்கு கூட பேச முடியாதபடி மொபைல் ஆஃப் ஆகிபோச்சே என்று தன் நிலையை எண்ணி முகத்தை மூடியபடி அழ ஆரம்பித்து விட்டாள்.
அதை பார்த்த மூவரும்
“என்ன டிராமா போடுறியா? இதெல்லாம் நம்ப நாங்க தயாரா இல்ல வா எங்ககூட” என்றபடி அவளது உடையின் பின் பகுதியை பிடிக்க அவளோ பயத்தில் ஆவென கத்த ஓங்கி ஒரு உதை விழுந்தது அவனது நீட்டியிருந்த கையின் மேல் அதில் அவன் ஆவென அலறியபடி தூரப்போய் விழுந்தான். அதில் அவளது உடையை சேர்த்து இழுத்ததில் பின்புறம் கை அருகே துணி கிழிந்து போனது.
அவனது அலறலில் பயந்து நிமிர்ந்து பார்க்க அங்கு ஆராஷி நின்றிருந்தான்.

“இதோடா ஹீரோ ஹீரோயின காப்பாத்த வந்துட்டாரு” என்று வேறு ஒருவன் அவனை அடிக்க வர
“யூ ஸ்கவுன்டரல்ஸ்” என்றுவிட்டு அடுத்து அவனை அடிக்க வந்தவனை இன்னொரு மிதி விட்டான் ஆரா. அதற்குள் கார்ட்ஸ் அவர்கள் மூவரையும் அடித்து விரட்ட ஆரம்பித்து இருந்தனர்.

“மேதா எழுந்து வா” என்று அவளை அவனுடன் அழைக்க அவளோ ‘முடியாது’என்பதுபோல் தலையை ஆட்டியபடி அங்கேயே அமர்ந்து மேலும் அவமானத்தினால் அழ ஆரம்பித்து விட்டாள் மேதா.

“வாட்ஸ் வ்ராங் மேதா. கம் குயிக்” என்று அவன் கூற சுத்தி பார்த்தவளோ நாலு கார்ட்ஸ் டிரைவர் அந்த மூன்று இளைஞர்கள் என ஆண்களே நிற்க நிலைகுலைந்து போனாள் அவமானத்தால் அவளுக்கு அழுகைதான் அதிகம் வந்தது.
தனது நிலையை எண்ணி மேலும் குலுங்கி அழுதாள்.
கிழிந்த பகுதியை அவசரமாக மறைக்க முயன்றும் அவளது கைகளால் மறைக்க முடியவில்லை.
அடி வாங்கிய இளைஞர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
அவள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை என்றதும் அவன் யோசனையாய் அவளை பார்த்தான்.
அவள் சுற்றும் முற்றும் பார்த்து அழுவதையும் தன்னோடு வராமல் இருப்பதையும் பார்த்தவனுக்கு
மேலே கிழிந்த உடையின் வழியே அவளது பின்பக்கம் தோள் தெரிய இது காரணம் அல்ல என்பதை உணர்ந்தவன் உற்று பார்த்தான் அவளை அழுகையும் பயமும் வலியும் அவளை மிகவும் பாதித்து இருந்தது அவழது நிலையை எண்ணி அவள் மேலும் மேலும் அழ அப்போது தான் அவளது உடையை கவனிக்க ஆரம்பித்தான் ஆரா.
அவள் அன்று அணிந்து இருந்தது சந்தனம் நிறம் ஆனால் கலர் வேறு மாதிரி தெரிகிறதே என்று உற்று பார்க்க அந்த இருளிலும் அவளது இரண்டு காலிலும் இரத்தம் வழிவதை பார்த்தான்.
உடனே அவளது நிலை அவனுக்கு புரிய
கார்ட்ஸ்ஸை கார் அருகே போக சொன்னவன் திரும்பி நிற்க சொன்னான்.

அவர்களும் அதேபோல் செய்ய
அவளை பார்த்தவன் அவளது முன் சென்று நின்றான். அவளோ அவனை பார்க்காமல் முகத்தை மூடியபடி அழ.. தனது ஷர்ட்டை கழட்டி அவளை டக்கென்று எழுப்பி அவன்முன் நிற்க வைத்தான். அதிர்ந்து அவள் பின்வாங்க பார்க்க அவளை தன்னோடு இழுத்தவன் அவளை அணைத்தபடி

“நத்திங் ட்டூ வொர்ரி ஐயம் ஹியர்” என்றபடி அவனது உடையை அவளது இடுப்பை சுற்றி அணிவித்தான் அவள் அவனை அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க அவனும் அவளை தான் பார்த்தபடி அவளுக்கு உடையை அணிவித்தான். மிக நெருக்கமாக அவனது அருகில் அவனது உடை இல்லாத வெற்று மார்பு ஸ்பரிசம் அவளுக்கு அதிர்வையே தந்தது.
உடையை அவளை சுற்றி இடுப்பில் அணிவித்தவன் அவளது கையை பற்றி அவளை தனது பின்புறம் நிறுத்தி திரும்பி நின்று பேசினான்.

கார்ட்ஸிடம் அவளது பைக்கை எடுத்து வருமாறு சொல்லிவிட்டு டிரைவரை காரை அருகில் எடுத்து வர சொன்னான். அதுவரை அவளை யாரும் பார்க்காத வண்ணம் தனது பின்னாலேயே வைத்து இருந்தான் முதலில் கார்ட்ஸ்ஸை போக சொன்னான் அவனது கட்டளையை ஏற்றவர்கள் அவளது பைக்கை தள்ளிக்கொண்டு கிளம்பினர்.
கார் அருகில் வர பின்பக்க கதவை திறந்துவிட்டபடி அவளது கையை பிடித்தான் ஆனால் அவளோ தயங்கி பின்வாங்க பார்க்க திரும்பி அவளை முறைத்தான்.

தலையை குனிந்தவள் நிமிரவே இல்லை.
“க..கார் ஹாஸ் வொயிட் கலர் சீட் சர்” என்று கூற அப்போது தான் அவனும் காரின் சீட்டை கவனித்தான் க்ரீம் கலரில் இருந்தது சீட் கவர் அதில் கறை பட்டால் போகவே போகாது என்று எண்ணியவன் யோசிக்க அதற்குள் பயம் போனதால் உடல் அலுப்பில் மயங்கி சரிந்தாள் மேதா.

“ஹேய்ய்” என்றபடி அவளை தாங்கியவன் அவள் அப்படியே கீழே சரியப்போக அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான்.
“மேதா மேதா” என்று அவளது கன்னத்தில் தட்ட அவளுக்கு ஆழ்ந்த மயக்கம் என்பதை உறுதி செய்தவன் நிமிர டிரைவரை இறங்கவேண்டாம் என்றுவிட்டு பார்க்க தூரத்தில் யாரோ வருவது போல் தெரிய இவளை இப்படியே விட்டால் ஆபத்து என உணர்ந்தவன் அவளை அலேக்காக கையில் தூக்கினான் சீட்டில் முதலில் அமர்ந்தவன் குழந்தை போல அவளை தன் மடியில் அமர்த்தி தன் மார்போடு அணைத்து கொண்டு வண்டியை வேகமாக வீட்டுக்கு கிளப்ப சொன்னான்.
அவளது இரத்தம் அவனது உடையையும் பதம் பார்க்க துவங்கி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *