Skip to content
Home » வேண்டும் நீ எந்தன் நிழலாய்-87-88

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-87-88

அத்தியாயம் – 87

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

“கிளம்பலாம் சர் நீங்க ஒத்துக்கிட்ட ஷூட்டோட ரிகர்சல் இருக்கு” என்று ஹர்ஷத் கூற சரியென அவர்கள் அங்கிருந்து கிளம்பும் சமயம் அவனது கார் எதிர் திசையில் இருக்க அதனால் கார்ட்ஸ் முதலில் செல்ல பின்னால் ஆராஷியும் ஹர்ஷத்தும் வர மொபைலையே பார்த்தபடி நடந்த ஆரா மேல் மோதுவது போல வந்த லாரியை கவனித்த ஹர்ஷத் “சர்” என்று அலறியபடி அவனை இழுத்தான் ஹர்ஷத் அதில் ஆராஷி மொபைல் கீழே விழுந்தது விரல்நுனியளவில் தப்பிய ஆராஷிக்கு அவனது உயிர் பிழைத்ததை விட மொபைல் கீழே விழந்ததில் இதயமே வலித்தது.
அடுத்த நொடி அவனை சுற்றி நின்றனர் கார்ட்ஸ்.
அதில் அவளது புகைப்படங்களை இறக்கி வைத்திருந்ததால் அவனுக்கு மனமே வலித்தது.
குனிந்து அவன் மொபைலை எடுக்கப்போக பதறிய ஹர்ஷத் அவனது கையை பிடித்து இழுத்தான்
“சர் வில் மூவ் சர் ஹியர் நாட் சேஃப்” என்றான்
“ஒன் மினிட் ஹர்ஷா” என்றபடி அவனது கையை உதறியவன் கீழே குனிந்து மொபைலை எடுத்தான் அடுத்தநொடி அவனை அழைத்துச்சென்றான் ஹர்ஷத்.
அவனை காருக்குள் அமரவைத்து விட்டு கார்ட்ஸ்க்கு ஏதோ சொன்னவன் ஆராஷியின் அருகில் அமர்ந்தான் அவனுக்கு அரணாய்.
அவனுக்கு மறுபுறம் இன்னொரு கார்ட் அமர
உடனே அங்கிருந்து புறப்பட சொன்னவன் போகும் வழியிலேயே நிதினுக்கும் அவர்களது நண்பன் போலீஸுக்கும் தகவல் சொல்ல உடனடியாக அவர்கள் வாகனத்துக்கு முன்னே ஒரு போலீஸ வாகனம் வந்து இணைந்தது பாதுகாப்புக்காக.
அதுவரை அவனுக்கு உயிரே இல்லை ‘இவனுக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தால் இவள் என்னை கொன்னு இருப்பாளே’ என்றென்னியவன் அப்போது தான் ஆராவை கவனித்தான்.
தனது மொபைலையே பார்த்தபடி அதை ஆன் செய்ய முயற்சி செய்தபடி இருந்தான் ஆராஷி.
“சர் சர் ஆர் யூ ஓகே சர்” என்று கூறியபடி
அவனது மொபைலை வாங்க முற்பட சிறு குழந்தை பொம்மையை பறிக்கும்போது அதை இழுத்து தனக்குள் வைத்து பாதுகாத்து கொள்ளும் அதுபோல மொபைலை இழுத்து தனக்குள் வைத்துக்கொண்டான்.
அவனை அதிர்ச்சியாய் பார்த்த ஹர்ஷத்
“சர் அதிர்ச்சில ஏதாவது ஆகிடுச்சா இல்ல அடி ஏதாவது பட்டுடுச்சா? டிரைவர் அண்ணா ஹாஸ்பிடலுக்கு போங்க” என்று அவனே கேள்வி கேட்டு அவனே பேசினான்.
எதற்கும் பதில் பேசாமலே மொபைலை உயிர்பிப்பதிலேயே இருந்தான் ஆராஷி.
‘இவன் என்ன லூசா?’ என்பது போல யோசனையோடு அவனை பார்த்தவன் உடனே மேதாவிற்கு மெஸேஜ் அனுப்பினான்
அவனது நிலையை.
அவளிடமிருந்து உடனே வாய்ஸ் மெஸேஜ் வந்தது காதில் புளூடூத் அணிந்து இருந்ததால் அதன்மூலம் கேட்டவன் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் மேதாவிற்கும் தகவல் கூறினான்.
டாக்டர் ஒன்றுமில்லை சிறிய ஸ்டெரஸ்தான் என்று சொல்லி அவன் உறங்குவதற்கு ஊசியை போட வர ஊசியை பார்த்ததும் அவனுக்கு ஒரு சில நினைவுகள் வர கத்திவிட்டான் ஆரா.
சத்தம் கேட்டு அங்கு ஓடிய ஹர்ஷத்துக்கு ஆராஷியை பார்த்து பயமே வந்துவிட்டது.
அதன்பின் டாக்டர் நர்ஸ் என்று சூழ அவனும் அருகிலேயே இருக்க அவனுக்கு மருந்தை செலுத்தினர்.
டாக்டர் “ஏதோ ஒரு விஷயத்தால பாதிக்கப்பட்டு இருக்காரு அது என்னானு அவரு எழுந்ததும் விசாரிச்சு அவருக்கு கவுன்சிலிங் கொடுங்க சரியாகிடுவார் இன்னைக்கு ஃபுல் ரெஸ்ட்ல இருக்கட்டும் நாளைக்கு அவர் வேலையை பார்க்கலாம்” என்று கூறிவிட்டு போக உறங்கும் அவன் அருகில் அமர்ந்தவனுக்கு குழப்பமே.
ஆனால் மேதாவிற்கு பதட்டமே இல்லாமல் உடனே அவனை மருத்துவமனை அழைத்து வர சொன்னாளே அப்படியானால் அவளுக்கு இவனது உடல்நலம் பற்றி தெரியும் என உணர்ந்தவன் ஆராஷி உறங்குவதை உறுதி செய்தவன் உடனே அவளுக்குஃபோன் செய்தான்.
எடுத்தவள் ஆராஷியின் உடல்நலம் பற்றி விசாரித்து கூடவே ஆக்சிடெண்ட் பற்றியும் விசாரிக்க அவளுக்கு பதிலை அளித்தவன்.
ஆராஷிக்கு உடம்புக்கு என்ன என்று வினவ
சற்று யோசித்த மேதா அவனுக்கு தெரிந்தால்தான் அவனை பார்த்துக்கொள்ள முடியும் என்று எண்ணி அவனுக்கு நடந்ததை பற்றி கூறினாள் அதிர்ந்த ஹர்ஷத்
“அந்த லேடியை இதுக்கே அரெஸ்ட் பண்ணலாமே இன்னும் எவ்ளோதான் கஷ்டத்தை தாங்க போறாரு அந்த லேடியால?” என்று அவன் கேட்க.
சரியான ஆதாரம் திரட்டி கொண்டு இருப்பதாகவும் அதுவரை அவருக்கு எதுவும் ஆகாமல் பார்த்து கொள்ள மட்டுமே இதை அவனிடம் சொன்னதாக சொன்னவள் இதைபற்றி யாருக்கும் மூச்சுகூட விடக்கூடாது என்றுவிட்டாள்.

போலீஸிடம் நடந்த விவரங்களை கூறிவிட்டு அவனுக்கு பாதுகாப்புக்கு இன்னும்சில ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு
அவனது பெட்டின் அருகில் அமர்ந்தவன் இருவரையும் பற்றிதான் யோசித்தான்.

‘எந்த தப்புமே செய்யாம இந்த ரெண்டு பேரும் அவங்க லைஃப்ல எவ்ளோ கஷ்டப்படுறாங்க இவங்களுக்கு எப்போதான் நல்லகாலம் வருமோ இவங்க லவ்வுக்கு இவங்கள தவிர மத்த எல்லாரும் எதிரியா இருக்காங்க’ என்று எண்ணியவன் அமைதியாக இருந்தான்.
அப்போது அங்கு வந்த ரியோட்டோ தேஜு நிதின் எல்லோரையும் அமைதியாக இருக்க சொன்னவன் நடந்ததை கூற அனைவருக்கும் அதிர்ச்சி
அதனால் ஒட்டுமொத்த குடும்பத்துக்கே பாதுகாப்பு ஏற்பாடு செய்ய சொன்னான் நிதின்.
தான் இருந்து அவனை பார்த்துக்கொள்வதாக சொன்னான் ரியோட்டோ ஆனால் மறுத்துவிட்டான் ஹர்ஷத்
“நானே பார்த்துக்கிறேன் சர் நீங்க கிளம்புங்க சர் உங்களுக்கும் சேஃப் இல்ல அவங்க ஸ்டெப்மதர்னால அதனால் நீங்க வீட்டுக்கு போங்க சர்” என்று கூற அவனது பேச்சு ஏதோ ஒன்றை உணர்த்த நிதினும் அதையே சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு ஹர்ஷத்தை பார்த்தான்.
“மேதா மேம்தான் என்னையே கூட இருந்து பார்த்துக்க சொல்லி ஆர்டர் அனுப்பி இருக்காங்க சர்” என்றான் அவன் அதே நேரம் நிதினின் மொபைலுக்கும் தகவல் வர ‘வேற ஏதோ இருக்கு கேட்டா ரெண்டு பேரும் வாயே துறக்க மாட்டாங்க’ என எண்ணியவன் சரியென சிறிது நேரம் இருந்துவிட்டு ஹர்ஷத்துக்கு உதவியாக ஒருவரை விட்டு சென்றான்.
உணவு எதையும் வெளியே வாங்க வேண்டாம் எனவும் தானே அனுப்புவதாக சொன்னவன் சென்றுவிட்டான்.
நன்றாக உறங்கிய ஆரா நான்கு மணி நேரம் கழித்து கண்விழித்து பார்க்க அவனது அருகில் அமர்ந்தபடி உறங்கி கொண்டு இருந்தான் ஹர்ஷத்.
லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தான் போல முடிந்ததும் அப்படியே உறங்கிவிட்டிருந்தான்.
எழுந்த ஆரா உறங்கும் ஹர்ஷத்தை பார்த்தவனுக்கு அப்போது தான் தாம் எங்கு இருக்கிறோம் என்பதே புரிந்தது.
கொஞ்சநாளாக தான் மருந்து சரியாக எடுக்காத தனது மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்து கொண்டவனுக்கு பசி எடுத்ததால் சுற்றும் முற்றும் பார்த்தான்.
அங்கு டேபிளில் அவன் கைக்கு எட்டும் அருகிலேயே அவனுக்கான மருந்தும் அவனுக்காக உணவும் ஆறிவிட கூடாது என ஹாட்பாக்ஸில் இருந்தது.
உணவை பார்த்தவன் ஹர்ஷத்தை பார்க்க அவனோ தூக்கத்திலேயே உளறிக்கொண்டு இருந்தான் அவன் உளறுவது என்ன என்று கேட்க குனிந்த ஆராஷிக்கு அதிர்ச்சியே.

“சரி பேபிமா உன் புருஷன் எழுந்ததும்

நீ சொன்னமாதிரி செஞ்ச சாப்பாடே கொடுக்கிறேன்டி எல்லாம் செய்யுறேன்

யாருக்கும் எதுவும் தெரியாது
இல்ல இல்ல சொல்ல மாட்டேன் மூச்சுகூட விடமாட்டேன்

கொடுமை பன்ற பேபி நீ என்னை.
ஐ நீட் ரெஸ்ட்டு ப்ளீஸ் கொஞ்சம் தூங்கிக்கிறேன்” இப்படி விட்டு விட்டு பேசிக்கொண்டு இருந்தான் வாயில் வழியும் ஜொல்லை வேறு ஒரு கையால் துடைத்தபடி.

‘புருஷன் மீன்ஸ்? என்ன யாருக்கும் தெரியாது? எதை யாருக்கும் சொல்லக்கூடாது?’ என்று யோசித்தவனுக்கு பசியில் வேறு யோசிக்கமுடியாமல் தலை வலித்தது.
அதனால் அவன் எழுந்து அமர்ந்து அந்த உணவை எடுக்க போக பாக்ஸ் சத்தம் கேட்டு அலறி அடித்து எழுந்தான்
“இல்ல இல்ல நான் தூங்கலடி” என்று கத்தியபடியே.

அவன் கத்தியதில் அதிர்ந்த ஆராஷி அவனை பார்க்க சற்று நேரம் எதுவும் புரியாமல் முழித்தவன் அப்போது தான் இருக்கும் இடம் உணர்ந்து ஆராஷூயை பார்த்தான்.
“சர் சர் உங்களுக்கு எதும் இல்லல?” என்று பதட்டமாய் அவனை ஆராய்ந்தான் ஹர்ஷத்.

“ஹர்ஷத் காம் டவுன் எனக்கு ஒன்னும் இல்ல நல்லாதான் இருக்கேன் பசிக்குதுனு சாப்பிட எழுந்தேன் உங்களுக்கு என்ன ஆச்சு?” என்று அவன் கேட்க
‘அதான் ஒருத்தி என்னை பாடா படுத்துறாளே’ என்று மனதில் எண்ணியவன்.

“இ..இல்ல சர் கொஞ்சம் ரெஸ்ட்லெஸ் அவ்ளோதான் உங்களுக்கு உடம்பு இப்ப பரவாயில்லையா சர்?” என்றவன் அவன் உண்ணுவதற்கு எடுத்து கொடுத்தபடி கேட்டான்.

“ஐயம் ஆல்ரைட் ஹர்ஷத் மொபைல் உடைஞ்சதுல கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன்” என்றான் ஆரா
அவனை புரியாமல் பார்த்தான்
‘ஏன்டா ஒரு மொபைல் உடைஞ்சதுக்கா இப்படி பண்ண?’ என்று யோசித்தவனுக்கு மேதா சொன்னது நினைவு வர உடனே சரியானவன்

“அது சரி செய்ய சொல்லிட்டேன் சர் இன்னைக்கே சரியாகி வந்துடும் சர்” என்று அவன் சொல்ல உண்ணுவதை நிறுத்திவிட்டு அவனை ஆச்சர்யமாய் பார்ப்பது ஆராஷியின் முறையானது.
“அதுல மேடம் பிக் இருந்ததுனு விழுந்து உடைஞ்சப்ப புலம்புனீங்களே புது மொபைல் ஆல்ரெடி வரவெச்சுட்டேன் ஆனா நீங்க இந்த மொபைலுக்குதான் ஃபீல் பண்ணீங்க அதனாலதான் அதையே சரிசெய்ய சொல்லிட்டேன்சர்” என்று அவனை புரிந்ததாய் அவன் கூற அவனை பார்த்த ஆராஷி
“தேங்க்யூ சோ மச் ஹர்ஷத்.
உங்களுக்கு தோணலாம் ஒரு ஃபேமஸ் ஆக்டர், சிங்கர் இப்போ பிஸினஸ் மேன் என்னால வேற மொபைல் வாங்க முடியாதானு?
வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு அது வெறும் யூஸ் அண்ட் த்ரோ டிவைஸ் ஜப்பான்ல இருக்குற ஹை லெவல் டெக்னாலஜியோட கம்ப்பேர் பண்ணும்போது நான் வெச்சு இருக்குற மொபைல் வெறும் ஆன்டிராய்டுக்கு தான் சமம்
ஆனா எனக்கு அது என் முதல் சம்பாத்தியம் என் மேதா எனக்கு கொடுத்த சம்பளத்துல நான் வாங்கின முதல் ஃபோன் அதுல லாக் ஸ்கிரீன்ல அம்மாவோட ஃபோட்டோ இருக்கும் ஹோம் ஸ்கிரீன்ல மேதா கூட நான் முதல்ல நெருங்கி நடிச்ச ஆட் பிக் இருக்கும்.
அது ரெண்டும் எனக்கு அவ்ளோ ஸ்பெஷல் ஹர்ஷத் வேற எவ்ளோ வந்தாலும் எனக்கு அந்த ஒரு மொபைலுக்கு ஈக்குவள் ஆகாது ஹர்ஷத் பழசை எப்பவும் நான் மறக்கலை ஹர்ஷத்” என்று கடைசி வரியை மட்டும் அவன் அழுத்தமாய் சொல்ல அவனை ஆச்சர்யமாய் பார்த்தான் ஹர்ஷத்.

“உங்களுக்கு என் ஃபீல் புரிய சான்ஸ் இல்லனு நினைக்கிறேன்.
ஒரு செலிபிரிட்டியா இருக்குற கஷ்டம் என்னானு எனக்கு நல்லாவே தெரியும் ஹர்ஷத்.
சரத்ஶ்ரீ சர் எண்டர்டெயின்மெண்ட் தவிர வேற எந்த எண்டர்டெயின்மெண்ட் கூட நான் ப்ராஜெக்ட் பண்ணாலும் நான் எவ்ளோ பிரச்சினை ஃபேஸ் பண்ணுவேன் தெரியுமா?
எனக்கு மனசு கஷ்டமா இருந்தா கொஞ்சநேரம் கஷ்டப்படக்கூட பர்மிஷன் இல்ல.
இது எனக்கு மட்டும் இல்ல எல்லா ஐடல் அண்ட் செலிபிரிட்டிக்கும் இருக்குற எழுதப்படாத சட்டம்.
அவங்க சொல்றமாதிரி தான் பேசணும் எப்பவுமே மைக்க உடம்புல சுத்திக்கிட்டே இருக்கனும் நமக்குனு பர்சனல் ப்ரைவசினு எதுவுமே இருக்காது.
அவங்க ஒரு ப்ரோகிராம் புக் பண்ணிட்டா யாருக்கு என்ன ஆனாலும் நமக்கே உடம்பு சரியில்லனா கூட அதை காட்டிக்காம சிரிச்ச முகத்தோட ப்ரோகிராம் செஞ்சு முடிக்கனும்.
யார்கூடவாச்சும் தப்பா ஷிப் பண்ணி பேசினா அதை ரசிகர்கள் விரும்பினா அதையே செய்ய சொல்லி வற்புறுத்துவாங்க.

இதுல ஒரு சில ரசிகர்கள்னு பேர்ல சில பேர் இருக்காங்க அவங்கதான் இன்டைரக்ட்டா எண்டர்டெயின்மெண்ட்டோட ஷேர்ல இன்வெஸ்ட் பண்றவங்க சப்போஸ் அவங்க எங்களை அப்படி பார்க்கனும் இவங்கள அவங்ககூட ஷிப் பண்ணனும்னு மெயில் போட்டா அதை செஞ்சே ஆகணும்னு சொல்லுவாங்க.
படிச்சத சாப்பிட முடியாது சாப்பிட கூடாது.
பிடிச்சத பேச கூடாது பிடிச்சவங்கள பார்க்க கூடாது நம்ம என்ன நிலமையில இருக்கோம்னு வெளியே மீடியாக்கு தெரியவேகூடாது நம்மளோட சந்தோஷமான நியூஸ் கியூரியாசிட்டிய இன்க்ரீஸ் பன்ற நியூஸ் தான் அவங்களுக்கு
தெரியனும்.
அத்தியாயம் – 88

நிறைய நடிகர்கள் நடிகைகள் ஏன் இளம் வயசுலேயே சூசைட் பண்ணிக்கிறாங்கனு தெரியுமா? அவங்கள எக்ஸ்டிரீம்மா இதெல்லாம் செய்ய சொல்லி அவங்க கம்பெனி கொடுக்கிற ப்ரஷர்னால தான் ஏன் நான்கூட தற்கொலை முயற்சி செஞ்சேன்அதுக்கு இதுவும் ஒரு காரணம்.
அவ்வளவு டிப்ரஷன் ஆனால் நான் உயிர் பிழைக்க காரணம் என் அஷ்ஷு.
என் அம்மாக்கு அடுத்து எனக்காக அழுதது அவதான் அழுகை அவ என் நினைவில்லாதப்போகூட பேசின பேச்சு இதெல்லாம் தான் எனக்கு வாழணும்னு புரியவைச்சது.
அம்மாதான் இல்ல அவளாவது எனக்கு இருக்கனும்னு தான் வெறியா டான்ஸ் பாட்டுனு எல்லாம் கத்துக்கிட்டு முதல்ல பாப் பாட்டு பாடினேன் ஆனா அவ்ளோ ரீச் ஆக முடியல அப்புறம் நடிக்க ஆரம்பிச்சேன் அதுல ஃபேமஸ் ஆன அப்புறம் என் பாட்டும் ரீச் ஆச்சு.
அதுக்கு எனக்கு நடிகன்னு ஒரு ஃபேம் தேவைப்பட்டது.
ஆனா ரொம்ப நாள் நான் ஏன் இப்படி நடிகனா ஆனேன்னு வருத்தப்படாத நாளே இல்ல.
என்னோட சின்ன சின்ன வேலைகள் கண்காணிக்கப்படுது என்னோட ஒவ்வொரு வார்த்தையும் யோசித்து யோசித்து பேசவேண்டி இருக்கும் ஏன்னா அதுவும் கான்ட்ரோவர்சி ஆகிடாம பேசணும்
எனக்கு ஏதும் பிரச்சினை இருந்தா அதை வெளியே தெரியாம பார்த்துக்கனும்.
ஏன் என் முகத்தை மாஸ்க் போட்டு மறைக்காம என்னால நார்மலா வெளியே போகவே முடியாது.
இருந்தாலும் ஒரு விதத்தில நான் நடிகனானதுக்கு சந்தோஷம்படுறேன்.

ஏன்னா அதனாலதானே எனக்கு மேதா கிடைச்சா. நான் நடிகனாகனும்னு தானே எனக்கு ஸ்பான்சரா மாறினா இல்லனா அவளை எனக்கு தெரியாமலே போய் இருக்கும்ல? அதுவரைக்கும் நான் நடிகன் ஆனதுல பெருமை படுறேன்.
ஏனா நான் ஃபேமஸ்ஸே ஆகாத சமயம் எனக்கு கிடைச்ச முதல் சம்பளத்துல எனக்கே எனக்காகனு வாங்கின ஃபோன் அது.
என்னோட பர்சனல் ஃபோன்.
இதை யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன்.
ஷூட்க்கு எடுத்து போனா கூட வண்டியிலேயே என்னோட திங்கஸ்ல பத்திரப்படுத்தி வெச்சுட்டு தான் போவேன்
அப்படி என்ன ஸ்பெஷல் அதுல இருக்குனு கேட்கறீங்களா?
நான் மேதாதான் மீராவ இருந்தவனு கண்டுபிடிக்குற வரை அந்த மொபைல்ல இருந்த ஒரே ஒரு ஃபோட்டோ எங்க அம்மாவோடது.
ரெண்டாவதா அதுல இடம்பிடிச்ச ஆள் மேதா.
இந்த மொபைலை ரொம்ப வருஷமா யாருக்கும் தெரியாமலே வெச்சு இருந்தேன் தெரியுமா?

எனக்கு அவகிட்ட நான் உணர்ந்த நெருக்கம்தான் அவமேல கோவத்தை காட்ட காரணமா ஆகிடுச்சு.
நான் தேடின பொண்ணு அவளா இருக்குமோனு ஒரு எண்ணம் அவகிட்ட நான் தேடின பொண்ணா பார்த்தேன்.
அவளோட கேரிங் அவளோட புரிதல்னு எங்கே என் மனசு நான் தேடுற மீராகிட்ட இருந்து இந்த மேதாகிட்ட சாய்ஞ்சுடுமோனு தான் அவமேல முதல்ல கோவத்தை காட்ட ஆரம்பிச்சேன் ஆனா என் லேங்குவேஜ் பேரியர்னால அவள் பேசினதை தப்பா புரிஞ்சுக்கிட்டு அவமேல என்ன என்னமோ பழியை போட்டு பேசி” என்று நிறுத்தி பெருமூச்சு விட்டவன்
“பேசக்கூடாததெல்லாம் பேசி அவளோட மனசை உடைச்சு காணாம போக வெச்சுட்டேன்.
என்கிட்ட திரும்பி வராமலே என்னை தண்டிச்சிடுவாளோனு பயமா இருக்கு ஹர்ஷத்
அவகிட்ட இருந்து எனக்கு மன்னிப்பு கிடைக்காமலே போய்டுமோனு பயமா இருக்கு.
என்னை எதுவுமே இல்லாதப்போ இருந்த என்னை ஏத்துக்கிட்ட மீராவா அவ எனக்கு வேணும்.
எனக்காக என்னை பார்த்துக்கிற மேதாவா அவ வேணும்.
நான் வெளிச்சத்துல நடந்தாலும் இருட்டுல நடந்தாலும் என்னை கண்காணிச்சுட்டே என்கூடவே இருக்கிற என்னோட நிழலா அவ வேணும் என்னை ரொம்ப வெறுத்துடுவாளோ?” என்று அவன் புலம்ப
ஹர்ஷத்துக்கே கஷ்டமாகி போனது.

“சர் ஆனா அவங்களுக்கு இதை தவிர்த்து வேற ஏதாவது பிரச்சனையா இருந்து உங்களைவிட்டு மறைஞ்சு வாழுறாங்களோ?” என்று அவன் உலறிவிட
அவனை புரியாமல் பார்த்த ஆராஷி
“அவளுக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது?” என்று கேட்க
சுதாரித்தவன்
“சப்போஸ் இருந்து இருந்தானு சொன்னேன் சர் கடவுள் புண்ணியத்தில அவங்களுக்கு அப்படி எதுவும் இருந்திடகூடாது” என்று சமாளித்தவனை பார்த்த ஆரா.

‘இதுல என்னமோ இருக்கு. இந்த சைட்ல இருந்து நான் யோசிக்கவே இல்லையே அப்படி என்ன பிரச்சனையா இருக்கும் அஷ்ஷுக்கு? இதை முதல்ல கண்டுபிடிக்கனும்’ என்று யோசித்தவனுக்கு வேலை நியாபகம் வர
“ஆமா நீங்க சொல்ற மாதிரி எதுவும் இருக்கக்கூடாது.
அண்ட் ப்ளீஸ் எனக்கு டிப்ரஷன்னு வெளியே தெரியாம பார்த்துக்கோங்க தெரிஞ்சா அதை வெச்சு ஒரு வதந்தி பரப்புவாங்க இப்போ போலாமா?” என்று கேட்க.
மருத்துவரிடம் விசாரித்துவிட்டு வருவதாக சொன்னவன் சென்று மருத்துவரை சந்திக்க அவர் சரியாக ஓய்வு எடுத்தால் நல்லது என்று கூறி அவனை டிஸ்சார்ஜ் செய்துவிட வெளியே வந்த ஆரா பார்த்தது அவனுக்கு பாதுகாப்பு அதிகம் ஆகி இருப்பதைதான்.

‘என்ன மேதா இதெல்லாம்?’ என்று மனதுக்குள் எண்ணியவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.
அதே சமயம் தன்னை கொல்லவேண்டும் என்று தவிக்கும் தன் சித்தியின் மேல் வருத்தமும் கோவமும் வந்தது.
‘இன்னும் இன்னும் எனக்கு எவ்ளோ தீங்குதான் செய்ய போறீங்க?’ என்று மனதோடு அவரிடம் பேசியவன் கிளம்பினான் முகத்தில் எதையும் காட்டாமல்.
ப்ராக்டிஸ் ரூமுக்கு வந்தவனை காரிலேயே இருக்க சொன்ன ஹர்ஷத் முதலில் சென்று செக்யூரிட்டி செக் செய்தான் அதன்பின்னரே அவனை உள்ளே வர சொன்னான் மனதுக்குள் சிரித்துக்கொண்ட ஆரா.

‘உன்னை நேர்ல பார்க்கிற வரை நான் கண்டிப்பா எனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன் என் நிழலாய் நீ இருக்குற வரை அவங்க என்னை ஒன்னும் பண்ண மாட்டாங்க அஷ்ஷு நீ டென்ஷன் எடுத்துக்காதே சீக்கிரமே என்கிட்ட வந்துடுமா’ என்று மனதோடு எண்ணியவன் உள்ளே சென்றான்.
ஆனால் அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதையோ அவனுக்கு நடந்த பிரச்சினையையோ எதுவுமே வெளியே வராத அளவுக்கு எல்லாவற்றையும் சமாளித்து இருந்தான் ஹர்ஷத்.
ஆனால் ‘அவனுக்கு இருக்கும் டிப்ரஷன் பற்றி யாரும் எதுவுமே பேசவில்லை கேட்கவும் இல்லையே ஏன்? என யோசித்தான் ஆராஷி. இதுவும் அஷ்ஷுவோட வேலையோ அப்போ அவளுக்கு என்னோட டிப்ரஷன் பத்தி தெரியுமா?’ என்று யோசித்தவனுக்கு மண்டையே வலித்தது. இதைப்பற்றி அப்புறம் பேசலாம் என்று எண்ணியவன் ப்ராக்டிஸ்க்கு சென்றான்.

மலையளவு சோகம் துக்கம் பிரச்சினை எது இருந்தாலும் ஒரு நடிகனுக்கு அதையெல்லாம் மனதுக்குள்ளேயே போட்டு அடக்கி வெளியே சிரித்த முகமாய் வலம்வர வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தின்படி உள்ளே நுழையும்வரை முகத்தை சீரியசாக வைத்து இருந்தவன் உள்ளே நுழைந்ததும் தன் முகத்தை சிரித்த முகமாக மாற்றிக்கொண்டான்.
உள்ளே சென்றவனை வரவேற்ற ஹர்ஷத் அவனுக்கு உடல்நிலை இப்போது பரவாயில்லையா என விசாரித்தான்.
அங்கே அருந்ததியும் தேஜுவும் ரியோட்டோவும் இருந்தனர் அவர்களும் அவனது உடல்நலம் குறித்து விசாரிக்க அனைவருக்கும் தான் சுகமாக இருப்பதாக புன்னகையோடு சொன்னவனை பார்த்த தேஜு அருந்ததியிடம்
“ஏன்டி இப்படி சிரிச்சே கவுத்துடுறாரே இந்த சிரிப்புலதான் உன் ப்ரண்டும் கவுந்துட்டாளோ?” என்று காதில் கிசுகிசுக்க அருந்ததியும்
“இருக்கும்கா அண்ணன் உங்கள லுக்கு விட்டு கவுத்தமாதிரி தம்பி சிரிச்சு கவுத்துட்டாரு போல” என்று அவளை வார
“அடிங்க யாரை பார்த்து லுக்கு விட்டு கவுத்தாருனு சொல்ற?” என்று அவளை அடிக்க
“ஆஆ அக்கா உண்மையதானே சொன்னேன் அதுக்கு ஏன் அடிக்கறீங்க?” என்று அவள் முதுகை தேய்த்தபடி கேட்க
அவளது அருகில் வந்த ரியோட்டோ
“என்னாச்சு ஏஞ்சல்? எதுக்கு பேபி அவளை அடிச்ச?” என்று அவன் கேட்க
“அதுவா மாம்ஸ் நான் அக்கா உங்ககிட்ட எப்படி கவுந்தாங்கனு சொன்னேன்னா அதான் உண்மையை சொல்லிட்டேன்னு அடிச்சுட்டாங்க” என்று அவள் சொல்ல
“கவுந்தாங்களா? அப்படினா?” என்று அவன் புரியாமல் கேட்க

“ஷ்ஷ்ப்ப்பா இந்த மாம்ஸ்ஸ வெச்சுட்டு என்னால முடியலையே” என்று தலையில் அடித்துக்கொண்டவள்
“இனி என்ன செய்ய விதி இதுதான் ஒன்னும் பிரச்சனை இல்லை இனி நான் உங்களுக்கு டீச்சரா மாற வேண்டிய நேரம் அதனால நீங்க என்ன பண்றீங்கனா நாளைல இருந்து என்கிட்ட சென்னை லேங்குவேஜ் கத்துக்க கிளாஸ்க்கு வர்றீங்க வரும்போது மறக்காம பீஸ் கொண்டு வரணும் சரியா?” என்றாள் அதிகாரமாக
“ஏன்டி” என்று தேஜு அவளை திட்ட ஆரம்பிக்க
“இந்தாம்மா தூர நில்லுங்க உங்களுக்கும் எனக்கும் பேச்சே இல்ல நான் இப்போ ஒரு டீச்சரா பேசிட்டு இருக்கேன் என் ஸ்டூண்ட்க்கிட்ட” என்று அவள் கூற
“இவள” என்று அவளை அடிக்க ஆயத்தமான தேஜுவை தடுத்த ரியோட்டோ
“இரு இரு தேஜு அவ குலந்தை எதுக்கு அவகிட்ட கோவப்படுற எனக்கு சொல்லி கொடுக்கத்தானே அவ பேசினா விடு” என்றவன்
“நான் வர்றேன் ஏஞ்சல் கிளாஸ்க்கு நீ சொல்லு என்ன பீஸ் வேணும்” என்று அவளிடம் கேட்க
“ரியோ அவ உன்ன ஏமாத்துறா ஏதோ ஆட்டைய போடத்தான் இந்த கிளாஸ் ப்ளான்?” என்றாள் தேஜு இதை பார்த்த ஆராஷிக்கு சிரிப்புத்தான் வந்தது ஹர்ஷத்க்கும் சிரிப்பு வந்தது ஆனால் அமைதியாக நின்றான்.
“அது ஒன்னும் இல்ல மாம்ஸ் நான் உங்க சொத்தை அழிச்சிடுவேன்னு பொறாமை அவங்களுக்கு நீங்க என்ன பன்றீங்க ஒரு நோட் பென் எடுத்துக்கறீங்க நான் சொல்றதுலாம் நோட் பண்ணிக்கறீங்க டெய்லி ஒரு பீட்சா இல்லனா பர்கர் கூட சைட் டிஷ்லாம் நான் டெய்லி அப்டேட் பண்றேன் ஒவ்வொரு நாள் ஒன்னொன்னு வாங்கிதரணும் அதான் பீஸ் ஓகே” என்று அவள் சொல்ல சீரியசாக கேட்டுக்கொண்டு இருந்த ஆராஷிக்கும் ரியோட்டோவிற்கும் சிரிப்பு வர
தேஜுவோ “நான் சொன்னேன்ல தீனிபண்டாரம்” என்று அவளை திட்ட
“இந்தா உங்ககிட்டயா கேட்டேன் நான் என் ஸ்டூடண்ட்கிட்ட பீஸ் கேட்டேன் உங்களுக்கு என்ன வந்துச்சாம்?” என்று அவளை பார்த்து அருந்ததி பேச சிரிப்பதை நிறுத்திய ரியோட்டோ

“அதானே என் ஏஞ்சல் என்ன காசு பணமா கேட்டா ஃபுட் ஐட்டம்தானே நான் வாங்கி தர்றேன் செல்லம் யூ டோண்ட் வொர்ரி” என்றான்
“காசு பணம் கேட்டா கூட உங்களால கொடுக்க முடியும் ஆனா இவ சாப்பிட கேட்டா வாங்கி கொடுத்தே நீங்க ஆண்டி ஆகிடுவீங்க” என்று தேஜு சொல்ல
“ஆண்டி மீன்ஸ்?” என்றான் ரியோட்டோ மீண்டும்
“அதுவா மாம்ஸ் பெக்கர் நீங்க எனக்கு சாப்பிட வாங்கி கொடுத்தே பெக்கர் ஆகிடுவீங்களாம்” என்றாள் அருந்ததி.
“ச்சே ச்சே என் ஏஞ்சல்க்கு வாங்கி கொடுத்து நான் அப்படிலாம் ஆகமாட்டேன் உனக்கு எவ்ளோ வேணுமோ சாப்பிடு செல்லம் மாமா வாங்கி தர்றேன்” என்று கூற தலையில் அடித்துக்கொண்டாள் தேஜு.
“இதுதான் என் மாம்ஸ்” என்று ஹைஃபை அடித்தாள் அருந்ததி.
இதை பார்த்து சிரித்த ஆராஷி
“கிளாஸ்க்கு நானும் வரலாமா மிஸ் அருந்ததி? நானும் நிறைய பீஸ் தருவேன்” என்று சிரித்தபடி கேட்க
அவனை ஆச்சர்யமாய் பார்த்த அருந்ததி
“நீங்க மிஸஸ் தேஜுகிட்ட கிளாஸ் சேருங்க என்னால டைம் மேனேஜ் பண்ண முடியாது ரெண்டு பேர்னா அதே சமயம் அந்த ஜாப்பனீஸ் வேற என் வாய்ல வராது உங்களுக்கு புரியலனா நான் எப்படி எக்ஸ்ப்ளைன் பண்ணுவேன்” என்று அவள் கூற சிரித்தபடியே
“ஓகே ஓகே” என்றபடி அனைவரிடமும் விடைபெற்று சென்றான் ஆராஷி.
“மேதா மட்டும் இல்ல நீயும் பெரிய ஏஞ்சல்தான் என் ஏஞ்சல் ஆராவை சிரிக்க வெச்சுட்ட தேங்கஸ்டா” என்று அவளது கையை பற்றியபடி அவன் நன்றி சொல்ல அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
“அவன் உண்மையா சிரிச்சு ரொம்ப வருஷம் ஆகுதுடா இப்போ அவனையே மறந்து சிரிச்சுட்டு போறான் இதுக்காகவே உனக்கு என்ன கேட்டாலும் வாங்கி தரலாம்” என்றான் ரியோட்டோ.
“சரி சரி செண்டிமெண்ட்டா பேசி என்னையும் ஃபீல் பண்ண வெச்சு பசிக்க வெச்சுட்டீங்க போங்க போய் ரெண்டு பெரிய பீட்சா ஆர்டர் போடுங்க” என்றாள் அருந்ததி. அதை கேட்டு சிரித்த ரியோட்டோ
“ஷ்யூர் ஏஞ்சல்” என்று கூற
“தோ ஆரம்பிச்சுட்டா” என்று தேஜு கூறியபடி சிரிக்க
“உங்களுக்கு ஒரு பீஸ் கூட கிடையாது போங்க” என்றுவிட்டு அவள் ரியோட்டோவோடும் குழந்தையோடும் ஒட்டிக்கொள்ள சிரித்தபடி அவர்களை பின்தொடரந்தாள் தேஜு.
ப்ராக்டிஸ்ஸில் டான்ஸ் மாஸ்டர் சொல்லியபடி ஆடிய ஆராஷி சோர்ந்து போய் வந்து அமர அவன் அருகில் வந்த ஹர்ஷத் அவனுக்கு ப்ளாஸ்க்கில் இருந்து லெமன் டீயை ஊற்றி கொடுத்தான்.
அதை வாங்கியவன்
“க்ரீன் டீ இல்லையா ஹர்ஷத்?” என்று கேட்க
“அது வந்து…. சார் நீங்க ரொம்ப டையர்டா இருப்பீங்கனு டாக்டர் தான் லெமன் டீ கொடுக்க சொன்னாங்க நீங்க ரெப்பிரஷ்ஷா பீல் பண்ண அண்ட் உங்க த்ரோட் இன்ஃபெக்ஷன் ஆகாம இருக்க” என்று அவன் சமாளித்தபடி நீட்ட லேசான புன்னகையோடு அதை வாங்கிய ஆராஷி
“டாக்டர்க்கு என்மேல எவ்ளோ அக்கறை பாரேன்” என்று சொல்லியபடி அதை குடித்தான்.
மிகவும் ருசியாக புத்துணர்ச்சி யாக இருந்தது அந்த டீ ஆனாலும் என் அஷ்ஷு கைபக்குவம் இதுல இல்ல என்று எண்ணியவன் அதை பருகிவிட்டு அடுத்த அடுத்த வேலைகளில் இறங்கினான் இன்னும் இரண்டு வாரத்தில் அவன் ஜப்பான் கிளம்ப வேண்டும் அங்கு ஒத்துக்கொண்ட வேலைகளை முடித்து அவனது பெரிய கான்செர்ட்டான அவனது அவார்ட் வாங்கிய ஃபங்ஷன் வேறு இருப்பதால் இங்கு வேலைகளை அவசர அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயம்.

2 thoughts on “வேண்டும் நீ எந்தன் நிழலாய்-87-88”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *