Skip to content
Home » அகலாதே ஆருயிரே-14-15

அகலாதே ஆருயிரே-14-15

��அகலாதே ஆருயிரே��
��14��

வேறு பள்ளி, வேறு சூழ்நிலை, ஆனால் தோழிகள் இருவரும் எந்த கவலையும் இன்றி பறவையாக
உள்ளே நுழைய,

அவர்கள் டியூஷன் சென்டரில் படிக்கும் சில பத்தாம் வகுப்பு பெண்கள் சிலர், பனிரெண்டாம்
வகுப்பு அக்காகள் சிலர் இருக்க, அவர்கள் வகுப்பு பிள்ளைகள் தவிர அவர்கள் அதிகம்
அறியவில்லை.

இருவரும் தாளாளர் முதல் வகுப்பு ஆசிரியை  வரை தங்களை அறிமுகம் செய்யும் விதிமுறைகளை
கடைபிடித்து, புத்தகம் நோட்டுகள் வாங்கிக்கொண்டு பதினொன்றாம் வகுப்பு ஆ பிரிவு எங்கே
என்று கண்ணில் தேடலுடன் இருவரும் நடந்து வர, பனிரெண்டாம் வகுப்பின் வாயிலில் ஒரு
மாணவனை கையை தூக்கி முட்டி போட வைத்திருந்தார் ஒரு ஆசிரியர், அவன் அந்த
தண்டனைக்கெல்லாம் அசறுவேணா என்று ஏதோ பாடலுக்கு நடனமாடுபவன் போல கையை
ஆட்டி, உள்ளே வகுப்பினரையும் கவனம் கலைத்தப்படி விளையாடிக்கொண்டு இருந்தான்.

“சேட்டையை பார்த்தியா ரிது? வாங்கி இருக்குறது பனிஷ்மெண்ட் இதுல ஐயாவுக்கு ஆட்டம்..”,
என்று ஆருஷி கிண்டல் அடிக்க,

ரிதுவோ, “விடு ஆரூ, படிக்கிற பையன் இப்படி பண்ண மாட்டான். ஐயோ யாரும் பார்த்தால்
நமக்கு அசிங்கம்னு நினைப்பான். இது தண்ணி தெளிச்ச கேசா இருக்கும்.”, என்று
சொல்லிக்கொண்டு, அவனை கடக்க,

“ஓய், யாரை பார்த்து தண்ணி தெளிச்ச கேஸ்னு சொல்ற?”, என்று எகிறியவன்,

ஆருஷியின் ஆராய்ச்சி பார்வையில் அமைதியாகி, “நீ.. உன்னை . எங்கயோ பார்த்திருக்கேன்.”,
என்று சொல்ல,

ரிது, ஆருவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு முன்னால் நடந்தாள். அவனைப்போலவே
யோசனையில் ஆரூ  இருக்க, அவர்கள் வகுப்பும் வந்தது.

அறிமுகம் செய்து கொண்டு அமரப்போகும் வேளையில் அங்கிருந்த ஆசிரியர், பள்ளி
மாற்றத்திற்கான காரணம் கேட்க,

“ப்ரின்சிபால் தப்பு செஞ்சவங்களை விட்டுட்டு எங்களை மன்னிப்பு கேட்க சொன்னார்.
முடியாதுன்னு சொன்னோம், அப்போ டி.சி தரவான்னு கேட்டாரு. குடுங்கன்னு வாங்கிட்டு
வந்துட்டோம்.”, என்று கூலாக ஆருஷி சொல்ல,

“இதெல்லாம் ஒரு காரணமா? “,
என்றார் எரிச்சலாக,

“ஏன், உங்களுக்கு எதுவும் பிரச்சனையா? எங்க சுயமரியாதை ரொம்ப முக்கியம் சார். “, என்று
மீண்டும் ஆருஷி சொல்ல, அவளை ஏதோ ரவுடிப்பெண் என்றே நினைத்தார் அவர்.

ரிது நிதானமாக, “செய்யாத தப்புக்கு தண்டனை கொடுத்ததே தப்பு சார். முடியாதுன்னு சொன்னா,
டி.சி. வாங்கிக்கோன்னு  திமிரா சொல்றது ரொம்ப தப்பு. எங்க படிப்பு அவங்களுக்கு விளையாட்டு
பொருளா? அப்படி அங்கே படிக்க அவசியம் இல்லை சார். “, என்று சொல்ல,  அவளை ஏதோ
சொற்பொழிவாளர் போல ஒரு பார்வை பார்த்து விட்டு, “போய் உட்காருங்கம்மா. எங்க இருந்து
தான் இந்த ஸ்கூலுக்குன்னு கிளம்பி வருவங்களோ? “, என்று தலையில் அடித்தப்படி பாடத்தை
தொடர்ந்தார்.

அது மத்திய தர பள்ளி தான். அதனால் பிள்ளைகள் சேட்டை சற்று அதிகமாகவே இருக்கும்.
உணவு இடைவேளையில் இருவரும் கிளம்ப, வகுப்பில் ஒருத்தி,” ஓய்.. நில்லுங்க. என்ன ரெண்டு
பேரும் பெரிய ஜோடிப் புறாவா? தனியா போக மாட்டீங்களோ? “, என்று ஆருஷியின் குட்டை
சடையை பிடித்து இழுக்க, ‘ஆ’ என்று அவள் கத்தி முடிக்கும் முன்னால், இழுத்தவள் ரிதுவின்
கையால் அறைப்பட்டு இருந்தாள்.

“இங்க பாரு. முன்னாடி இருந்து படிக்கிறதால நீ ஒன்னும் பெரிய கொம்பும் இல்ல, இன்னிக்கு
வந்து சேர்ந்ததால நாங்க வாலும் இல்ல. நீ எங்க பக்கம் வராத வரை நானும் உன்னை
கண்டுக்கவே மாட்டேன். வம்பு பண்ணின அவ்ளோ தான் சொல்லிட்டேன். “, என்று
எச்சரித்துவிட்டு, ஆருவின் கையை பிடித்துக்கொண்டு நடந்தாள்.

அங்கே அறை வாங்கியவள் வெறிகொண்டு நிற்க, அவளை சூழ்ந்த மூவர், “என்ன நந்தினி
ட்வெல்த் அக்காவே உன்னை பார்த்தா பேச பயப்படும். இவ சட்டுனு அடிச்சிட்டா.. விடக்கூடாது
டி. வா ப்ரின்ஸி கிட்ட சொல்லலாம்.”, என்று ஏத்தி விட,அவளோ,

“இது தனி கணக்கு, வாத்தியார் கிட்ட மாட்டி விட்டு வேடிக்க பார்க்கணும். ஆனா சொன்னது நாம
தான்னு தெரியக்கூடாது. ஏற்கனவே நம்ம மேல நிறைய கம்பலைன்ட்ஸ். கவனம் வேணும் சுதா.”,
என்று மூவரில் ஒருத்தியிடம் அழுத்தி சொன்ன நந்தினி, மனதில் ரிதுவை எப்படி மாட்டி விடுவது
என்று திட்டம் வகுக்க துவங்கினாள்.

“என்ன ரிது அடிச்சிட்ட, அவ ப்ரின்ஸி கிட்ட சொல்லிட போறா”, என்று ஆரூ சொல்ல,

“அவ சொல்ல மாட்டா ஆரூ. இதெல்லாம் மறைஞ்சு நின்னு தாக்குற கொரில்லா வகை
பிள்ளைகள். முதல் நாளே வம்பு பண்றாங்கன்னா இந்த ஸ்கூல் ரவுடியா அவ போர்ம் ஆகி

இருப்பா. நீ சொன்னது நான் சொன்னதெல்லாம் கேட்டதும் நம்மை சீண்டிப்பார்க்க ஆசை
வந்திருக்கும். அதான் ஆரம்பத்துலயே ஒன்னு வச்சேன். ஒன்னு அவ அப்படியே ஓடிப்போகணும்,
இல்ல பின்னால நின்னு அடிக்கணும்.”

“இதுக்கு நீ அவளை அடிச்சிருக்க வேண்டாம்ல.”, என்று மறுபடி பிரச்சனையா என்ற
மனநிலையில் அவள் கேட்க,

“இன்னிக்கு நீ பொறுத்து போனா, இன்னும் ஒன்றரை வருஷம் அவ குட்ட குட்ட குனிஞ்சு
போகணும். பரவால்லையா? “, என்றாள்.

“ஏன் டி ஒரு அடியோட விட்ட?”, என்று கேட்டு ஆரூ சிரிக்க,

“உன்னை வேணா ரெண்டு போடவா?”, என்று கையை ரிது ஓங்க, ஓடியே விட்டாள் ஆருஷி.

அபி வேலை முடிந்து வீடு திரும்ப வீடே அலங்கோலமாக இருந்தது. அவன் புரியாது தாயை
நோக்க, அவரோ மூத்த மகளை கண்ணில் காட்டினார். தாயின் அருகில் போனவன்,

“என்னம்மா பிரச்சனை? என்னவா இருந்தாலும் இப்படியா வீட்டை தலைகீழ புரட்டி போடறது?”

“எல்லாம் உங்க அப்பாவால தான்.”, என்று மெல்ல சொன்னார்.

“என்ன மா சொல்றிங்க? அவர் ஒன்னுமே சொல்ல மாட்டாரே இவங்களை. “, என்று சந்தேகமாக
சொல்ல,

“சின்னவளை பார்த்த வீட்ல, மாப்பிள்ளைக்கு ஏதோ வேலை விஷயமா கைல ஒரு லட்சம்
ரொக்கம் கேட்டங்களாம். அப்பா நல்ல வேலை இருந்தா நல்லதுன்னு சரின்னு சொல்லிட்டு
வந்துட்டாராம். அதுக்கு எனக்கும் வேணும்ன்னு இவ சாயங்காலத்துல இருந்து ஒரே அராஜகம்
பண்ணிட்டு இருக்கா.”

“அப்பா ஏன் மா இப்படி இருக்கார். இப்போ திடீர்ன்னு அவ்ளோ பணத்துக்கு எங்க போறது.”

“அது பரவாயில்லை டா. முன்ன பின்ன கல்யாண செலவுல கொறச்சுக்கோங்கன்னு மாப்ள வீட்ல
சொல்லிருக்காங்க. அதனால ஓரளவு சமாளிக்கலாம். ஆனா இவ பண்ற அலம்பல் தான் தாங்க
முடியல. “, என்று சங்கரி அங்கலாய,

“என்ன கேட்டாலும் சரின்னு சொல்லிட்டு இன்னிக்கு இல்லைன்னா அவ ஆடுற.. என்ன
செய்யறது?”, என்று, கொண்டு வந்த உணவை தாயிடம் நீட்ட, அதை பார்த்த ராகவேந்தருக்கு
குற்றவுணர்வு தோன்றியது.

‘சின்ன பையன். வேலைக்கு போகிறானே’ என்று.

அதை கண்ட ரேகா, “அப்பா அவனுக்கு ஸ்கூல் பீஸ் எவ்வளவு? எங்க ரெண்டு பேருக்கும் எவ்ளோ
கட்டினிங்க? இவனுக்கு தானே நிறையா செய்யறீங்க?”, என்று அவர் மீது பாய,

அவ்வளவு நேரம் அவளின் அத்தனை இம்சைகளையும் பொறுத்து நின்ற சங்கரி, தன் மகனை
அவள் சொல்லும் ஒரு சொல் தாங்க முடியாமல், “ஏய்.. அவனுக்கு யார் டி பீஸ் கட்றாங்க??”,
என்று கோபமாக கேட்க,

“அப்பறம் அவ்ளோ பெரிய ஸ்கூல், ஊர்லயே அது தான் பெஸ்ட் ஸ்கூல். அதிலே உன் பையன்
ஓசில படிக்கிறானா? “, என்று கிண்டல் செய்ய,

“அவன் பத்தாவதுல எடுத்த மார்க் பார்த்து பிரீ சீட் கொடுத்து, எல்லாமே பிரீயா கொடுத்து படிக்க
வைக்கிது ஒரு அறக்கட்டளை. அதன் நிறுவனர் தான் இவங்க ஸ்கூல் தாளாளர். இவனுக்கு
இரண்டு வருஷமா நாங்க ஒத்தை பைசா செலவு செய்யல. ஆனா இவன், வீட்டு நிலைமை
தெரிஞ்சு, குடும்ப கஷ்டம் உணர்ந்து வேலைக்கு போறான். என் பையனை ஒரு வார்த்தை
சொன்னா அவ்ளோ தன் சொல்லிட்டேன். கல்யாணத்துக்கு தான் நாள் இருக்குல்ல.. நீ உன்
மாமியார் வீட்டுக்கு நடையை கட்டு. வீட்டை என்ன பாடு படுத்துற.. நீ எல்லாம் என்ன
பொண்ணு. “, என்று இத்தனை நாள் கோபத்தை காட்ட, நொடிப்பொழுதில் யாரும் எதிர்பாரா
வண்ணம் ராகவேந்தர் சங்கரியை அறைந்திருந்தார்.

அபி ஆடிபோய்விட்டான். அவனால் தன் கண் முன்னே தாய் அடி வாங்கியதை தாங்க
முடியவில்லை.ராகவேந்தர் மீண்டும் கை ஓங்க, பாய்ந்து பிடித்தவன்,

“அப்பா. போதும். உங்க மகள்களுக்காக எங்களை நீங்க ரொம்பவே சோதிச்சுட்டிங்க. இப்போ
அடிக்கிற அளவுக்கு இங்க ஒன்னுமே நடக்கல.”

“என் பொண்ணை வீட்டை விட்டு போக சொல்றா இவ.”, என்று கத்திக்கொண்டு மீண்டும்
முன்னே வர, அபியின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.

“போதும் நிறுத்துங்க. நீங்க வாங்கின கடனை அடைக்க அம்மா வேணும், உங்களுக்கு சமைச்சு
போட அம்மா வேணும், உங்க பொண்ணுங்களுக்கு சீர் செய்ய என் அம்மா வேணும், முடியாத
சூழ்நிலைல கடன் வாங்கிக் கொடுக்க கூட என் அம்மா வேணும். ஆனா உங்க பொண்ணு
அராஜகம் பண்ணினா கேள்வி கேட்க எங்கம்மா வரக்கூடாது. அப்ப மட்டும் அவங்க யாரோ.
அப்படி தானே..”

என்று குரல் எடுத்து பேச, ராகவேந்தர் தன் இயலாமையை நொந்து கொண்டு, மகனை
எதிர்க்கவும் முடியாமல் அதே நேரம் விடவும் முடியாமல் திணறினார்.

ஆனால் சங்கரி அபியை அடக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டாள்.

ரேகா அப்பாவிடம் வந்து, “பார்த்தீங்களா அப்பா, அம்மா எப்படி தம்பியை தூண்டி விடுறாங்க.
உங்களுக்கு அப்பறம் எங்களுக்கு செய்ய இருக்கற ஒரே ஆள் அவன் தான். அவனை அம்மா
எப்படி கலச்சு விடுறாங்க பாருங்க அப்பா.”, என்று சொல்லல,

‘இப்பக்கூட அவளோட சுயநலம் தானா?’, என்று மனம் கசந்து போனான் அபி.

��அகலாதே ஆருயிரே��
��15��

“அம்மா, இவ ஏம்மா இப்படி இருக்கா? கொஞ்சம் கூட அடுத்தவங்களை பத்தி நினைக்கவே
மாட்டாளா? என்ன பிறவி மா இவ?”

“சுயநலவாதி அபி. “,என்று கசந்த குரலில் சங்கரி சொல்ல,

“அம்மா..”, என்று அவரை நோக்கினான் அபி.

“ஆமா அபி, சிலர் அப்படி தான். தன்னை தாண்டி யோசிக்கவே மாட்டாங்க. எது நடந்தாலும்
தனக்கென்ன ஆதாயம், தனக்கென்ன நஷ்டம்.. இவ்வளவு தான் யோசிப்பாங்க.  ஐயோ நம்மளால
ஒரு கஷ்டம் அவங்களுக்கு வந்திடுமோ அப்படின்னு யோசிக்கற புத்தியே இருக்காது. ரொம்பவே
தன்னை தாங்கி நிற்பாங்க. இவ அந்த ரகம். அப்பாவோட கஷ்டமோ, என்னோட உழைப்போ
இவ கண்ணுல படாது. ஆனா அது மூலமா வர்ற ஆதாயம் மட்டும் வேணும். “

“ஏம்மா இப்படி?”

“டேய்.. அப்படித்தான். அதுக்கு காரணம் எல்லாம் தேடாதே. இது குணம். அதை மாற்றவே
முடியாது. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு கேள்விப்பட்டது இல்லையா? இவளும் கடைசி
வரைக்கும் மாற மாட்டா. “

“அம்மா..”, என்று அவன் இழுக்க,

“அபி.. இதை அப்படியே விடு. பார்த்துக்கலாம். அவளுக்கு தன்னை தாண்டி யாருக்கும் அதிகம்
கிடைக்க கூடாதுன்னு ஒரு எண்ணம்.”

“அம்மா.. எல்லாம் சொன்ன நீ, இதை சொல்லல..”

“என்ன அபி?, என்று அவர் யோசிக்க,

“எண்ணம் போல வாழ்வு மா. அவ எண்ணதுக்கு தக்க வாழ்க்கை அவளுக்கு கிடைக்கும்.”, என்று
கோபம் பொங்க சொல்ல,

“ஆயிரம் இருந்தாலும் உன்னோட பிறந்தவ அபி. நல்லா இருக்கட்டும்.”

“இருக்கட்டும்மா யார் வேண்டாம்ன்னு சொன்னது? ஆனா இப்படி குடும்ப நிம்மதியை
கெடுக்கறாளே.. அதைப் பார்க்கவே மாட்டியா?”

“தெரியுது அபி. அதுக்காக தானே நானும் அமைதியா போறேன். உன்னை சொன்னதும் எனக்கு
தாங்கலை.”

“ஆமா அதான் அப்பா கிட்ட அடி வாங்கினியா??”, என்று அபி வருத்தப்பட,

“அதே போல அவளைச் சொன்னதும் அவருக்கு தாங்கலை டா அபி.”,என்று கணவருக்கு பரிந்து
கொண்டு வந்தார்.

“நீ இப்படியே எல்லாரையும் தாங்கு. அப்பறம் நான் எப்படி எல்லாரையும் சரி பண்ணுவேன்.
இன்னும் ரெண்டு வருஷம் தான் பொறுமையா இருப்பேன். ரொம்ப போச்சுன்னா நான்
உன்னையும் கூட்டிட்டு தனியா போயிடுவேன். இப்பவே எல்லாத்துக்கும் தயாரா இரு.”

“அபி. கொஞ்சம் பொறுமை டா. எனக்கு திருக்குறள் தான் தம்பி தெரியும். அதை வச்சுத்தான் நான்
ஏதோ நல்லதை நினைச்சு வாழ்க்கை வாழறேன். உனக்கும் சொல்றேன். கேளு.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.

இதை என்னைக்கும் மறக்கதே.”

“மா. விளக்கம் சொல்லும்மா. நான் கோவத்துல இருக்கேன். யோசிக்க முடியல.”

“நீ நிறை உடையவனாக இருக்கணும் அது உன்னை விட்டு நீங்காமல் இருக்கணும்னு நினைச்சா,
பொறுமையைப் போற்றி ஒழுகணும். நீ பொறுமையா தான் இருக்கணும். கோபம் காமிச்சு லாபம்
இல்ல அபி. உன் கோபத்தை குறை. பொறுமையா இரு.  “

“அம்மா அவ கொஞ்சம் கொஞ்சமா நம்ம கிட்ட இருக்கற எல்லாத்தையும் சொரண்டி எடுத்துட்டு
போக பாக்கறா மா. மாமா உண்மையிலேயே நல்லவர் மா. இவளால எனக்கு அவர் கிட்ட மனசு
விட்டு பேச கூட முடியல.”

“எல்லாம் சரியாகும் அபி.”

“இப்போ தான் எதுவும் மாறாதுன்னு சொன்ன??”

“மாறாதுன்னு தான் சொன்னேன். சரியாகாதுன்னு சொல்லலையே. பொறு. நீயே புரிஞ்சுப்ப..
காலம் இருக்கு அபி.”

“அம்மா நான் நாளைக்கு படிச்சுக்கறேன். இப்போ மொட்டை மாடில படுத்துக்கறேன் மா.”

“சரி அபி. “, என்று அவனை அனுப்பிவிட்டு பெருமூச்சு விட்டார் சங்கரி.

‘இவனுக்கு இவ்வளவு நல்லது சொல்றோம் ,இதுல கால்வாசி கூட அவளுக்கு சொன்னது இல்ல.
அதான் அவ அப்படி இருக்கா. இவரோட கடந்தகால காயத்துக்கு, என் பொண்ணுங்க ரெண்டு
பேர் குணத்தை கெடுத்துட்டார். அப்பா முருகா நீ தான் இந்த குடும்பத்தை காப்பாத்தணும்.’,என்று
மனதில் வேண்டியபடி மகள் கலைத்துப் போட்ட வீட்டை அந்த இரவு நேரத்தில் தூக்கம் கெட்டு
சுத்தம் செய்து கொண்டிருந்தார் சங்கரி.


“என்ன டா முதல் நாள் எப்படி போச்சு.”, என்ற நாராயணன் கேள்விக்கு,

“சூப்பர் பா. ஆனா முதல் நாளே சண்டை வழிச்சிட்டு வந்துட்டேன்.”,என்று ரிதுபர்ணா சிரிக்க,

விபரம் கேட்டார் நாராயணன்.

சற்று நேர யோசனைக்கு பின், “இனிமே நீ கவனமா இருக்கணும். உன் பையை எப்பவும்
உன்னோடவே வை. உன் நோட் சப்மிசன் எல்லாமே உன் கையால செய். எல்லாரும் வைக்கும்
போது, வேறு நோட் வச்சிட்டு, தனியா டீச்சர்ட போய் கையெழுத்து  வாங்கு.”

“என்னப்பா, என்னேனமோ சொல்றிங்க?”

“இல்ல டா. இந்த கால பிள்ளைங்க, படம் பார்த்து ரொம்ப கெட்டுக் கிடக்கு. ஏதாவது திருசமன்
செஞ்சு உன்னை மாட்டி விட பார்க்கும். நேரா மோதினா நீ அடிப்ப, அதனால, கீழ குழி பறிக்க
பார்க்கும். எப்பயும் கவனமா இருக்கணும். ஒரு வேளை உன்னை மீறி எது நடந்தாலும்
பயப்படாதே, கவலையும் படாதே நான் இருக்கேன் சரியா?”,என்று நாராயணன் கேட்க,

“நைனா அவ பதினொனாப்பு தான் படிக்கிறா. ஏதோ ஐ.பி.எஸ் ட்ரைனிங் அனுப்ப போறது
போல, என்ன பேச்சு..”, என்று அவன் கிண்டல் செய்ய,

அவன் செய்த கிண்டலின் விளைவு பிற்காலத்தில் தெரியும். ஆனால் இந்த நொடி மூவரும்
சிரித்தபடி,

“என்ன டா தடியா செய்யச்சொல்ற? இந்த காலத்து பிள்ளைங்க பண்ற வேலை அப்படி இருக்கு.”,
என்று சொல்ல, வீட்டில் சிரிப்பலை பரவியது.

சசி, அவர்கள் சிரிப்பு சத்தம் கேட்டு, மாடியில் இருந்து வந்தவர்,” என்னங்கடா  என்னை விட்டுட்டு
ஜாலியா இருக்கீங்க?”

“அதுவா நைனா  அக்காவை டிடெக்ட்டிவ் ஆக்க பாக்கறாரு..”

“ஆமா பெரிய ஜேம்ஸ் பாண்ட் உங்கப்பா,அவருக்கு வாரிசா உங்க அக்காவை மாத்துறாரா..”

“ஏன் மா நம்ம ஊர்ல வேற டிடெக்ட்டிவ் யாருமே இல்லையா? உலகத்துல ஜேம்ஸ் பாண்ட்
மட்டும் தான் அப்படியா?”, என்று சந்தேகம் கேட்ட மகனின் வாயில் ஒரு போண்டாவை திணித்து,

“நீ நிறையா பேசுற டா. பேசாம வக்கீலுக்கு படி.”, என்று சசி கிண்டல் செய்ய,

“பேசாம வக்கீலுக்கு படிச்சு வேஸ்ட் மா. பேசினா தானே கேஸ் ஜெயிக்க முடியும்??”,அம்மாவை
மகன் மடக்க,

அவர் முழிக்க, நாராயணன் சிரிக்க, ரிது அவனை அணைத்துக்கொண்டாள்.


“என்ன புது ஸ்கூல்ல ஒழுங்கா இருக்கியா?”, என்ற வேணியின் கேள்வியில் கடுப்பான ஆருஷி,

“எப்போ நான் ஒழுங்கில்லாம இருந்தேன் ? அதை நீ வந்து பார்த்த?”

“இல்ல டி. இங்கேயும் எந்த வம்பும் இழுத்துட்டு வரக்கூடத்துல்ல..”

“இழுத்துட்டு வந்தா என்னமா செய்வ?”

“எனக்கு தான் டென்ஷன்.”, என்று வேணி கத்த,

“ஸ்கூல் மாற்ற விஷயத்துல நீ என்ன பண்ணுன? ஏதாவது ஸ்கூல் விசாரிச்சியா? இல்ல எனக்காக
யார் கிட்டாயாச்சும் சீட் கேட்டியா? என்ன டென்ஷன் உனக்கு. ஜாலியா அந்த மின்னல் நடிகை
கூட பார்ட்டிக்கு தானே போன?”

“என்ன  டி வாய் நீளுது?”

“அம்மா எனக்கு ஒன்னும் தெரியாதா? இல்ல என்ன சொன்னாலும் நம்ப நான் என்ன
பைத்தியமா?”

“போதும் உன் ரூம் க்கு போ. “,என்று கோபம் காட்ட,

“பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லு. சும்மா கத்தாத. “,என்று சொல்லிவிட்டு அறைக்குள்
நுழைய,

“எல்லாம் இவளை ப்ரயின் வாஷ் பண்ற அந்த ரிது குடும்பத்தை சொல்லணும்.”, என்று இவள்
கத்த,

“யாரையும் ஒன்னும் சொல்ல வேண்டாம். உனக்கு கால் வந்திருக்கு. பேசிட்டு ஏ.வி. எம்
ஸ்டூடியோக்கு கிளம்பு.”, என்று சொல்லிவிட்டு, கேசவன் தன் வேலையை தொடர, வேணி போன்
பேசியபடி கிளம்பினார்.


சோமு மகிழ்ச்சியாக கிளப்பி வீட்டுக்கு வந்தார். ஹாலில் இருந்த மகனிடன், மனம் கொள்ளா
பூரிப்புடன்,

ஹர்ஷா நாளைக்கு தாத்தா பாட்டி ஊர்ல இருந்து வராங்க டா. என்று சொல்ல,அவனோ
மொபைலில் கேமில் பிசியாக, “ஓஹோ..”, என்றான்.

‘சரி சின்ன பையன்’, என்று அதை புறம் தள்ளியவர்,

“லதா.. லதா..”, என்று அழைக்க,

“என்ன.. என்னத்துக்கு என்னை இப்போ ஏலம் விடறீங்க??”, என்று சலிப்புடன் வந்தவளிடம்.
“நாளைக்கு அம்மா அப்பா ஊர்ல இருந்து வராங்க மா.”, என்று சொல்ல,

“இப்போ எதுக்கு வராங்க? என்னவாம்? மறுபடி பணம் வேணுமா என்ன? அதான் வீடு ரிப்பேர்
பண்ணி கொடுத்துச்சே..”

“ஏய்.. நான் அவங்க ஒரே பையன் டி. என்னை பார்க்க என் அப்பா அம்மா வராங்க. இதுல எதுக்கு
காரணம்?”, என்று கேட்க,

அவளோ, “அதெல்லாம் காரணம் இல்லாம ஊரை விட்டு நகர மாட்டாங்க.”, என்று சொல்ல,

“அப்போ நாளைக்கு நீ என்னை பாக்க வரும் போது என் வைப் கிட்ட நான் என்ன சொல்லணும்
அம்மா? “,என்று மொபைலில் இருந்து கண் எடுக்காமல் ஹர்ஷா கேட்க,

சட்டென்று சிரித்து விட்டார் சோமு.

3 thoughts on “அகலாதே ஆருயிரே-14-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *