��அகலாதே ஆருயிரே��
��16��
எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று ஒருமுறை சரி பார்த்து விட்டு, பள்ளிக்கு செல்ல
கிளம்பிகொண்டு இருந்தாள் ரிதுபர்ணா. புத்தகப்பையை சைக்கிளில் வைத்து விட்டு,
அன்னையிடம் மதிய உணவை வாங்கியவள், தந்தையைப் பார்த்து,” போய்ட்டு வரேன்ப்பா”,
என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
அவள் சென்றதும், மனைவி அருகில் வந்த நாராயணன், “எனக்கு அந்த பொண்ணை நினைதால்
பாவமா இருக்கு சசி”,என்று சொல்ல,
அவரோ கணவரை புரியாத பார்வை பார்த்து, “எந்த பொண்ணுங்க?”,என்று கேட்க,
“அதான் வாண்டட்டா நம்ம பொண்ணை ஒரு பொண்ணு வம்பு பண்ணி வச்சிருகாளே”, அவளை
சொன்னேன் சசி.
“ரொம்ப உங்க பொண்ணை உயர்வா நினைக்காதிங்க,அது அவளுக்கே ஆபத்தா முடியலாம்.”,
சசியின் குரலில் மகளை பற்றிய கவலை தான் அதிகம் இருந்தது.
“நீ சொல்றது சரி தான் சசி, ஆனா என் பொண்ணு அப்படிபட்டவ இல்லையே. அவள் இடம்
பொருள் பார்த்து நடக்க தெரிஞ்ச ஆள்ம்மா.”
“புரியுது நரேன், ஆனாலும் எதுக்கு தேவையில்லாத பிரச்சனை?”
“இது அவளா தேடிப்போன பிரச்சனை இல்லயே?”
“சரி அப்படியே இருந்தாலும் அந்த பொண்ணு மறுபடி பிரச்சனை பண்ணும் அப்படின்னு ஏன்
நினைக்கிறீங்க நரேன்?”
“மனித மனம் விகாரமானது சசி. எப்போ அவளா வந்து பிரச்சனை பண்ணி அடி வாங்கிட்டு
போனாளோ அப்போவே அவ மனதில் வன்மம் வந்திருக்கும். அதுதான் நியதி.”
“நீங்க சொல்றதுல பாதி புரியல நரேன் ஆனால் என் பொண்ணுக்கு பிரச்சனை வரக்கூடாதுன்னு
ஒரு தாயா என் மனம் விரும்புது.”,என்று கலங்கிப்போய் சொன்னார் சசி.
“எனகும் புரியுது சசி, ஆனா எப்போவும் என்ன நடந்தாலும் என் பொண்ணுக்கு நான் துணையா
நான் நிற்பேன்மா.”
“சரிங்க”,, என்று எஞ்சிய சமையலறை வேலைகளைப் பார்க்க அவர் உள்ளே செல்ல,நாராயணன்.
தன் மதிய உணவுடன் அலுவலகம் புறப்பட்டார்.
ஹர்ஷாவின் தாத்தா பாட்டி, கோமதிநாயகமும், சாந்த லட்சுமியும் வந்துவிட, சோமு மிகுந்த
மகிழ்ச்சி கொண்டார்.
பல ஆண்டுகளாக அழைத்தும் வராத தன் தாய்தந்தை, இன்று தாங்களே வந்தது அவருக்கு மனம்
கொள்ளா மகிழ்ச்சி அளிக்க,
அவர்களுக்கு பிடித்த காய்கறிகள், கீரைகள், மீன் என்று வாங்கி வர, லதா அவரை வித்தியாசமான
பார்வையோடு கடந்தார்.
பேரனிடன் அன்போடு பேசி மகிழ்ந்த முதியவர்கள், உணவுக்கு தயாராக, அங்கே லதா வெறும்
ரசமும்,உருளை வறுவலும் செய்து வைத்திருந்தாள்.
சோமு சிரமப்பட்டு கோபத்தை அடக்கியவர், “என்னம்மா அவ்ளோ வாங்கிப் போட்டேன்,
இதைத்தான் உன்னால சமைக்க முடிஞ்சுதா?”, என்று கேட்க,
“இதுவே பெருசு”, என்று சொல்லிவிட்டு, அந்த மாதம் சீட்டுப்பணம் செலுத்த புத்தகம்
எடுத்துக்கொண்டு, வெளியேறினாள்.
சாந்தலட்சுமி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், சாப்பிடத் துவங்க, வெளியில் நண்பர்களோடு
பேசிவிட்டு வந்த ஹர்ஷா உணவைப் பார்த்து,
“வர வர இந்த அம்மா ஒழுங்காவே சமைக்க மாட்டேன்கிறாங்க. எனக்கு சாப்பாடு வேண்டாம்.
காலைல மீனைப் பார்த்து சந்தோசமா சாப்பிட வந்தேன். ச்ச.. “
என்று அறைக்குள் நுழைய, சாந்தலட்சுமி எழுந்து கை அலம்பிக்கொண்டு, சமயலறைக்குள்
நுழைந்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில் மீன் குழம்பு வாசம் தூக்க, அறையை விட்டு விழுந்தடித்து
வெளியில் வந்த ஹர்ஷா,
“அப்பா நம்ம வீட்டு மீனைக்கொண்டு யாரோ பக்கத்து வீட்ல குழம்பு வச்சிருக்காங்க போல பா.
ஆனா இந்த பக்க வீட்டு ராதிகா ஆன்ட்டி என்ன செஞ்சாலும் அவங்க சொன்னா தான்
உண்டு,வாசனையே வராது. அந்த பக்க கோகிலா ஆன்ட்டி இதெல்லாம் சமைக்கவே மாட்டாங்க..
“,என்று மனம் போன போக்கில் அவன் பேசியபடி அப்போ யாரு என்று வாயை திறக்க, உள்ளே
மீன் குழம்பு சாதம் நுழைய, கண்கள் அகலத் திறந்து தனக்கு ஊட்டும் பாட்டியைக் கண்டான்.
சாந்தா கொஞ்சமும் நிறுத்தாமல் அவனுக்கு ஊட்டிவிட, முழுவதும் சாப்பிட்டு முடித்தவன்,
பாட்டியை அள்ளி தூக்கி சுற்றி இறக்கினான்.
“அடேய்.அது என் அம்மா டா. “, என்ற சோமுவின் குரலை அவன் கண்டுகொள்ளவே இல்லை.
பாட்டி, “சாப்பாடா இது? அமிர்தம் பாட்டி. எப்படி செஞ்சிங்க? அம்மாவும் தான் செய்வாங்க ஒரு
மீன் குழம்பு,புளிக்குழம்பு போல தான் இருக்கும்.”
“அம்மாவை அப்படி சொல்லக்கூடாது ராஜா. அவளும் எவ்ளோ செய்யறா இந்த குடும்பத்துக்காக,
சமையல் கொஞ்சம் முன்னபின்ன இருந்தா என்ன இப்போ? ஆனா அம்மா சரியா இல்லன்னா
இப்போ, இவ்ளோ பெரிய பள்ளிக்கூடத்துல உன்னால படிக்க முடியுமா? இல்ல இந்த
சென்னையில வீடு தான் வாங்க முடியுமா சொல்லு. “,
“அதுக்குன்னு வீட்ல நல்லா சமைக்க வேணாமா பாட்டி.”
“செய்யணும் தான். அந்த காலத்து பொம்பளைங்களுக்கு சமைக்கிறதும், கோலம் போடறதும்
பலகாரம் செய்யறதும் தான் வேலை. ஆனா இன்னிக்கு காலம் அப்படி இல்லையே ராஜா.
அவளும் அப்பாவுக்கு இணையா யோசிச்சு, சேர்த்து வச்சு, கவனமா குடும்பத்தை முன்னுக்கு
கொண்டு வரும் போது, வீட்டு ஆம்பிளைங்க நீங்க சாப்பாடே குறின்னு பேசக்கூடாதுல்ல.”
“சரி, இனிமே ஒன்னும் சொல்லல..”, அரைமனதாய் சொன்னவனை உச்சி முகர்ந்து கன்னத்தில்
முத்தமிட்டார் சாந்தா.
பேரனை அருகில் அழைத்த கோமதிநாயகம், “நல்லா படிக்கிறியா?” என்றார்.
“எங்க டா இன்னும் இந்த கேள்வியை காணோமேன்னு பார்த்தேன்”, என்று அலுத்துக்கொண்டு
சொன்னான் ஹர்ஷா.
“படிப்பொண்ணும் பெரிய விஷயம் இல்லை பா. ஆனா எல்லாத்துலயும் கவனம் வேணும்.”,
என்றார்.
“படிப்பு பெரிய விஷயம் இல்லாதப்போ எதுக்கு தாத்தா கவனம் “,என்று நக்கலாக ஹர்ஷா கேட்க,
“இந்த கால படிப்பை வச்சு என்ன செய்யறது, பொட்டலம் போட கூட உதவாது.”, என்று சொல்லி
சிரித்தார்.
“என்ன தாத்தா, விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்துல இப்படி சொல்லிட்டீங்களே..”, என்று
ஹர்ஷா ஆச்சர்யமாக கேட்க,
“சரி சொல்லு ஐநூத்தி நாலை பன்னன்டால வகுத்தா பதில் என்ன?”,என்று கேட்க,
ஹர்ஷா திரு திருவென்று விழித்தான்.
“சொல்லுய்யா விஞ்ஞானி..”, என்று அவர் மீசையை முறுக்கி சிரிக்க,
அவன் மொபைலில் கால்குலேட்டரை தேட,
“இம்புட்டுண்டு கணக்கு இதுக்கே அந்த போனுல தேடுற, இது தான் உங்க விஞ்ஞான வளர்ச்சி,
மூளை மழுங்கி போய் எதையாவது பற்றிக்கொண்டு நடக்க வைக்கிறது தான் இப்போதைய
படிப்பு, ஒன்னு நோட்டுல போடுவிங்க, இல்ல கால்குலேட்டர் தேடுவிங்க. மணக்கணக்குன்னு
ஒண்ணு இருக்கு தெரியமா?”, என்றார்.
அவன் உதட்டை பிதுக்க,
“அதுக்கு பதில் நாப்பதி ரெண்டு. கணக்கை மனசுல போட தெரியணும். அதுக்கு மூளை வேகமா
வேலை செய்யணும்,அதுக்கு கவனம் வேணும். ஒண்ணை சொல்லும்போதே, அது எப்படின்னு
மூளை யோசிக்க தொடங்கணும்,.”, என்று அவர் சொல்ல,
“அப்போ நாங்க படிக்கிறதே வேஸ்ட்டா தாத்தா?” என்று கேட்க,
“எப்படி படிக்கிறீங்களோ அது தான் வேஸ்ட்.”, என்று சொல்லி அவர் சத்தமாக சிரிக்க,
ஒரு கிராமத்து மனிதரின் அறிவுக்கூர்மையை முதல் முதலில் வியந்தான் ஹர்ஷா.
ஆருஷி அன்று சோர்வாக இருந்தாள். மாதாந்திர பிரச்சனை அவளை படுத்தி எடுக்க, ரிதுவிடன்
சொல்லிவிட்டு ரெஸ்ட்ரூம் சென்று வர, வழியில் வாலிபால் கோர்ட் பார்த்தபடி நடந்து வந்தாள்.
அப்போது, “இங்கே வா”, என்று குரல் வர,திரும்பியவள் அதிர்ந்தாள். அங்கே அந்த பள்ளியின்
பி.டி மாஸ்டர் சுகந்தன் நின்று கொண்டு இருக்க, ஆருஷி மனதில், ‘திருப்பதிக்கு போனாலும்
தரித்திரம் விடாது போலயே.. பள்ளிக்கூடம் மாறி வந்தாலும் இந்த ஆள் தொல்லை போகாது
போல.. ‘, என்று நொந்தபடி, “எஸ் சார்”, என்றாள்.
சுகந்தன், “நீ வாலிபால் நல்லா விளையாடுவ தானே? நாளைல இருந்து பிராக்டிஸ் பண்ணு”,
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
“இதென்ன டா உலக அதிசயம்? இந்த ஆள் நாலே வார்த்தை மட்டும் பேசிட்டு போறாரே”, என்று
ஆச்சர்யப்பட்டவளாக, வகுப்பறைக்கு சென்றாள்.
அபி அவன் அப்பாவோடு பேசுவதை சுத்தமாக நிறுத்திக்கொண்டான். இரவில் மொட்டை
மாடியில் தங்கினான்.
சங்கரி எவ்வளவோ சொல்லியும் அவன் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
தன் அம்மாவை கண் முன்னால் அடித்தவரை மன்னிக்க அவன் மனம் ஒவ்வாமல், அவரிடமிருந்து
ஒதுங்கிக்கொண்டான்.
ரேகா,ஸ்வாதி அவன் கண்களில் படாதவாறு, அவனே ஒதுங்கிப்போனான். அவன் அப்பா கடன்
கேட்டு அலைவதாக தாய் சொல்ல, தானாக தலையில் அள்ளிப்போட்டுக் கொள்பவரை என்ன
சொல்வது என்று நினைத்து, வெகுவாக மாறிப்போனான்.
கல்வியே கண் என்று மாறினான். அரைப்பரிட்சையில் அதிக மதிப்பெண் எடுக்க, அவன்
ஹர்ஷாவுடன் செலவு செய்யும் நேரமும் குறைந்தது.
கோபக்காரன் மெல்ல மெல்ல இரும்பு போல மாறத் துவங்கினான். புத்தகமும், வேலையும் அவன்
இரு கண்களாக, சங்கரி மிகவும் வருந்தினார்.
“டேய் அபி என்ன டா?”
“என்னமா?”
“ரொம்ப மாறிப் போய்ட்ட டா.”
“நானா மாறலம்மா. மாற வேண்டிய கட்டாயம்.”
“அதுக்காக? இப்படியா டா??”
“அம்மா சொன்னா உனக்கு புரியாது விடு. என்னை கோபப்படாதேன்னு சொல்லுவ”
“இப்போவும் அதே தான் அபி சொல்றேன். “
“இது கோபம் இல்லம்மா ஒரு வகையான இயலாமை. அவர் கஷ்டப்படுறது பொறுக்காம தானே
வேலைக்கு போனேன். அவ அந்த பேச்சு பேசும்போது, எனக்காக ஒரு வார்த்தை பேசாதவர், நீ
அவளை சொன்னதும் உன்னை அடிச்சிட்டாரே. அப்போ நான் சும்மாவா?? அவருக்கு பிள்ளை
இல்லையா? அவர் பொண்ணுகளுக்கே செய்யட்டும். எனக்கென்ன? நான் இனிமே எதுலயும்
தலையிட மாட்டேன்.என்கிட்ட எதுவும் சொல்லாதே. புரியுதா?”
“அப்போ என்னையும் பேசாதன்னு சொல்ல வரியா அபி.”
“அம்மா அவர்களைப்பற்றி பேசாதேன்னு சொல்றதுக்கும் என்னோட பேசாதன்னு சொல்றதுக்கும்
வித்தியாசம் இருக்கு. உனக்கு தெரியாதா?”
“சரி விடு. நான் முறுக்கு செஞ்சு பாக்கெட் போட்டு விற்கலாமான்னு யோசிக்கிறேன்.”
“என்ன திடீர் யோசனை.”
“அன்னைக்கு உன் பிரென்ட் வந்தான் ஹரி. அவன் என் முறுக்கை கடைல வாங்கினதான்னு
கேட்டான்.”
“அவனுக்கென்ன நல்லா சாப்பிடுவான்.”,என்று அபி சிரிக்க,
“அதான் முறுக்கு பாக்கெட் போட்டு கடைக்கு கொடுக்கலாமேன்னு ஒரு யோசனை.”
“நல்ல யோசனை தான் . ஆனா அதுல ஆயிரம் ஓட்டை.”, என்று அபி சொல்ல சொல்ல சங்கரி
மலைத்துப்போனார்.
“இவ்ளோ விஷயம் இருக்கா அபி இதுல.. ரேகா நான் யோசிக்கும்போது என்னன்னு கேட்டா
நான் சொன்னேன். நல்லா வரும்மா செய்ன்னு சொன்னா டா.”
“நீ போடப்போற முறுக்கையும் அமுக்க அவள் பிளான் போட்டிருக்கா. அது தெரியாம
அப்பாவித்தனமா இருக்கியே மா.”,என்று அபி கடிந்து கொள்ள,
அபி சொன்ன விஷயங்களை மனதில் அசைபோட்டபடி எழுந்து போனார் சங்கரி.
��அகலாதே ஆருயிரே��
��17��
அபி சங்கரியின் யோசனையில் ஆயிரம் ஓட்டை என்று சொல்லி அவன் அடுக்கியதை
யோசித்தபடி கீழே வந்தாள்.
‘அவன் சொல்வதும் சரி தானோ?’
அபி,” அம்மா நீ பொடி அரைச்சு பாக்கெட் போட்டது போல முறுக்கு பண்ண முடியாதும்மா அதுல
நெறய பிரக்டிகல் டிபிகலட்டிஸ் இருக்கு”.
“புரியல அபி.”
“செயல்முறை தடைகள் நிறைய இருக்கும்மா.”
“அப்படி என்ன அபி இருந்திடும்.”
“நீ உன் கணவருக்கு உதவ எவ்ளோ ப்ரயத்தனப்படுறன்னு புரியுது மா. ஆனா, முறுக்குன்னா
பாக்கெட்க்கு அஞ்சோ, பத்தோ வைக்கணும். ஒரே ஒரு கடைக்கு நீ குடுக்க நினைச்சாலும்,
குறைஞ்சது 10 இல்ல 20 பாக்கெட் போடணும். அப்போ 100 இல்ல 200 முறுக்கு வேணும்.”
“ஆமா.. “,என்று சங்கரி யோசனைக்கு போக,
“அவ்ளோ முறுக்குக்கு நீ மாவு மிஷின்ல குடுத்து அரைச்சு சலிக்கணும். அப்பறம் அதுல நீ
சேர்க்கற எல்லாத்தயும் சேர்த்து பிசையணும். கொஞ்சமா செய்ய பிசையுற அளவு வேற, இப்போ
அளவு வேற. துணைக்கு ஆள் வேணும். ஒருவேளை நீயே கொஞ்சம் கஷ்டப்பட்டு
செஞ்சுட்டாலும், 200 முறுக்கு நீ ஒரு ஆளா பிழிய முடியுமா? உன் பொண்ணுங்க உதவி
செய்வாங்களா? இல்ல இப்போ உன்னால ஆள் போட்டு வேலை பார்க்க முடியுமா? யோசி.
அம்பது பாக்கெட் சாம்பார் பொடியை கட்டை பைல கொண்டு போய் குடுப்ப, முறுக்கையும்
உன்னால அப்படி கொடுக்க முடியுமா? அம்மா நீ செய்ய நெனச்சது தப்பில்லை. ஆழம்
தெரியாமல் உள்ளே இறங்கி அவஸ்தைப்படாதே. நல்லா யோசி. இதுல நான் சொன்ன
விஷயங்களை எப்படி சரி பண்ணி இதை உன்னால நடத்த முடியும்ன்னு தோணுதோ சொல்லு.
நானும் உதவி செய்யறேன். சரியா?”, என்று கன்னம் கிள்ளிய மகனின் அறிவுக்கூர்மையை கண்டு
சங்கரியால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
‘இவனிடம் சொன்னது போல் தானே ரேகாவிடம் சொன்னோம் அவள் இவனை விட வயதிலும்
பக்குவத்திலும் பெரியவள் தானே. நான் சொன்னாலும் அவள் நடைமுறை சிக்கல்களை எனக்கு
சொல்லி இருக்கலாமே. நல்லா வரும். செய்ம்மா. சாம்பிள் போட்டா குடு. நான் டேஸ்ட் பார்த்து
சொல்றேன்னு சொன்னாளே.’, என்று மகளை நொந்தவராக உள்ளே போக,
“என்ன உன் மகன் வீட்டுக்குள்ள வரமாட்டானா? அப்படி என்ன வீராப்பு.”
“உங்க மகன் தானே. உங்களுக்கு இருக்குற வீராப்புல கொஞ்சம் அவனுக்கும் இருக்காதா?”
“என்னை ஏன் இப்போ வம்புக்கு இழுக்குற?”
“உங்க அம்மா அப்பா பண்ணினது பிடிக்காம இன்னிக்கு வரைக்கும் பேசாம இருக்கறவர் தானே
நீங்க?? உங்க மகன் எப்படி இருப்பான்?”
“என்ன தான் சொல்றான்?”
“நான் ஒரு யோசனையில் இருந்தேன்”, என்று நடந்தவைகளை சொல்ல, உண்மையில் தன்
மகனை நினைத்து ராகவேந்தர் பெருமை கொண்டார். அதை அவர் முகம் தெளிவாய் காட்ட,
சங்கரி,
“இவ்ளோ சந்தோசப்படுற மனுஷன் அதை அவன் கிட்ட சொன்னா என்ன? இன்னிக்கு
என்னோட பேசினா மாதிரி எப்பயும் என்னோடயும் அவனோடையும் பேசினா என்ன?”, என்று
ஆதங்கம் கொள்ள,
“என்ன அம்மா இந்நேரத்துல அப்பாவை தூங்க விடாம என்ன பஞ்சப்பாட்டு பாடிட்டு இருக்க?”,
என்று ரேகா வர, சங்கரி மனதில்,
‘ஏதோ ரெண்டு வார்த்தை நல்லா பேசினார் அது பொறுக்கலை. எனக்கு மாமியார் இல்லாத
குறையை இல்லையே. இவதான் முழுசா நிக்கிறாளே. இத்தனை வயசுக்கு அப்பறமும் என்
புருஷன்னு நின்னு பேச கூட எனக்கு விதி இல்லையே..’, என்று மனம் நொந்தவராக உள்ளே
போக,
அவளின் முகபாவனையை முதன் முதலில் கண்ட ராகவேந்தருக்கு, தான் தன் மனைவிக்கும்
மகனுக்கும் நியாயம் செய்ய வில்லையோ என்று கணம் கொண்டது. காலம் கடந்த ஞானோதயம்
யாருக்கும் உதவாதே..
“ஹர்ஷா அந்த கடை வரைக்கும் போய்ட்டு வா டா. நான் ஏற்கனவே லிஸ்ட் குடுத்துட்டேன்.
அவன் சாமான் எடுத்து வச்சிருப்பான். சரியான்னு பார்த்து வாங்கிட்டு வந்துடு.”, மகனிடம் லதா
கெஞ்சிக்கொண்டு இருக்க,
அவனோ மொபைலில் ஏதோ ஒரு கேமில் படு பிசியாக இருந்தான்.
“உனக்கு வேற வேலையே இல்லையா ம்மா. கொஞ்ச நேரம் உக்கார விடுறியா?? ரெண்டு நாளா
அபிகிட்ட நின்னு பேச கூட முடியல, இந்த கேம் முடிஞ்சதும் அவனை போய் பார்த்துட்டு
வரணும்ன்னு இருந்தேன். இப்படி பண்ற??”
“வரும்போது வாங்கிட்டு வந்துடேன் கண்ணா.”, என்ற பாட்டியின் வார்த்தையை கேட்டவன்,
“உனக்கு ஓக்கேவா மா இல்ல, இப்போவே வேணும்ன்னா நீயே போய் வாங்கிக்கோ.”
லதா ஹர்ஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்னவோ செய்”, என்று சொல்லி தங்கள்
அறைக்குள் நுழைந்தவள்,அங்கே சோமு ஏதோ வேலை பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டவள்
கோபம் தலைக்கு மேல் ஏற,
“உங்க அம்மா அப்பா எப்போ ஊருக்கு போவாங்க?”,என்று தலையணை ஒன்றை
விட்டெறிந்தபடி கேட்க,
“அவங்க உன்னை என்ன செஞ்சாங்க லதா? வந்து ரெண்டு நாள் கூட ஆகலயே. அதுக்குள்ள ஏன்
இப்படி பேசுற?”
“என்ன மாயம் பண்ணினாங்க? நான் என்ன சொன்னாலும் கேக்குற என் பையன் இப்போ நான்
சொன்னா கேக்க மாட்டேன்கிறேன். அவங்க சொன்னதும் சரின்னு சொல்றான். இதெல்லாம்
நல்லா இல்ல. முதல்ல அவங்களை ஊருக்கு போக சொல்லுங்க.”
“இங்க பாரு லதா, அவங்க என்ன காரணத்துக்காக வந்தாங்கன்னு தெரியாது. ரொம்ப வருஷம்
கழிச்சு வந்தவங்களை ரெண்டே நாள்ள போன்னு சொல்றது நல்லாவா இருக்கும். நீயே யோசி.
ஹர்ஷா நிலையான மனசில்லாத சின்ன பையன். அவன் ஏதோ பண்ணுனான்னு நீ என் அம்மா
அப்பாவை போக சொல்றது நல்லாவே இல்ல லதா.”
“சும்மா எல்லாத்துக்கும் நியாயம் பேசிக்கிட்டு. உங்களோட இதே ரோதனை. பாக்கறேன் நானும்
எத்தனை நாள் அவங்க இப்படி இருந்திடறாங்கன்னு.”, என்று முகத்தை சுளித்தபடி செல்ல,
‘என்ன செய்து இவளுக்கு புரியவைப்பது’, என்று தெரியாமல் சோமு சோர்ந்து போனார்.
ஆருஷிக்கு மீண்டும் சுகந்தனை பார்க்கவே யோசனையாக இருந்தது. அவரின் பார்வை இன்று
மாறி இருக்கிறது தான்
ஆனால் இது எவ்வளவு உண்மை என்று தெரியாமல் சென்று மாட்டிக்கொள்ள வேண்டுமா என்று
அவளுக்கு உள்ளே உறுத்தலாக இருந்தது.
ஆனால் ரிது வேறு சொன்னாள்,” நீ போய் பாரு ஆரூ, மனுஷங்க எல்லா நேரமும் ஒரே மாதிரி
இருக்க மாட்டாங்க. ஒரு வேளை அந்த ஸ்கூலில் இருந்து வெளியேற்றியது அவரை பாதித்து
அவர் மாறி இருக்கலாம்.”
“என்னால நம்ப முடியல ரிது, நீயும் கூட வாயேன்.”
“ஆரூ, எல்லா நேரமும் வர வர என்னை நீ எதிர்பார்க்கற. இது நலத்துக்கு இல்ல டா. நீ எப்படி
விளையாட்டுல நான் இல்லனாலும் விளையாடுறியோ, வாழ்க்கைலயின் அப்படி இருக்கணும்
ஆரூ.”, அவள் தலையை ரிது வருட,
“நீ சரி இல்ல ரிது மனசுல என்னமோ நெனச்சுட்டு பேசுற போல இருக்கு.”
“இல்ல ஆரூ. “, என்று அவள் சமாளிக்க,
“ஒழுங்கா சொல்லு டி.”
“இல்ல ஆரூ. காலேஜ் சேரும்போது யார் எப்படி போவோம்னு தெரியாது டா. நீ கொஞ்சம் தனியா
இருந்து பழகு மா.”,என்று பொறுமையாக சொல்ல,
“அப்ப என்னை விட்டுட்டி வேற ஏதோ, எங்கயோ போக பிளான் போட்டுட்டு தானே பேசிட்டு
இருக்க ரிது. போடி.”,என்று கண்கலங்கிய வண்ணம் ஓடியவள், எதிரில் வந்தவனை கவனிக்காமல்
ஓட,
அவன் தோளில் இடித்து அவள் தடுமாறினாலும், நிற்காமல் கிரவுண்ட்டை நோக்கி ஓட,
அவனோ, “ஏய்”,என்று கத்திவிட்டு, இடித்தவள் யார் என்று தெரிந்ததும் சிறு புன்னகையை சிந்தி
விட்டு முன்னோக்கி நடந்தான்.
“நைனா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே”, என்று யோசனையாக நின்ற ரிஷியை பார்த்த
நாராயணனுக்கு சிரிப்பு வந்தாலும், அதை மறைத்து ,”சொல்லு டா பெரிய மனுஷா”,என்று
அவனை பார்க்க,
“வேலையை முடிச்சிட்டு வா நைனா, நெஜம்மாவே ரொம்ப முக்கியமான விஷயம்”, என்று அவன்
குரலில் தீவிரம் தெரிய,
தான் கொண்டு வந்த அலுவலக கோப்புகளை ஒதுக்கியவர், “சொல்லு ரிஷி”,என்று ஆழ்ந்த
குரலில் கேட்க,
“நான் ரிது அக்கா ரூமுக்கு போனேன்.அங்க ஒரே பேப்பரா இருந்தது. அதுல நெறய இடத்துல கட்
பண்ணி இருந்தது.”
“அதுக்கு என்ன ரிஷி அவ ஏதாவது ப்ரொஜெக்ட் பண்ணிட்டு இருப்பா. அதுக்காக பேப்பர் கட்டிங்
எடுத்திருப்பா. இதில் ஒண்ணுமே இல்லயே டா.”
“ஐயோ நைனா.. இங்க பாரு. அவ கட் பண்ணின எல்லாத்தயும் ஒரு நோட்ல ஒட்டி வச்சிருக்கா.”
அதை வாங்கி பார்த்த நாராயணனுக்கு சற்று அதிர்ச்சி தான். எல்லாமே பெண்கள் பாலியல்
துன்புறுத்தல், குடும்ப வன்கொடுமைகள், கள்ளக்காதல் என்று பெண்கள் மேல் சுமத்தப்பட்ட
குற்றங்கள் பற்றிய பேப்பர் கட்டிங் தான் .
“என்ன ரிஷி இது??”
“எனக்கும் புரியலயே நைனா. அக்கா திடீர்னு ஏன் இப்படி எல்லாத்தயும் எடுத்து வச்சிருக்க்கா.
இதுல என்ன ப்ராஜக்ட் பண்ண முடியும் சொல்லுங்க நைனா.”
“சரி அவ டியூஷன் முடிஞ்சு வரட்டும் கேட்போம்.”, என்ற நாராயணன் குரலில் என்ன பாவம்
இருந்தது என்று ரிஷியால் கணிக்க முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக தன் தமக்கையை தந்தை
சரியாக புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை மட்டுமே அவனிடம் நிறைந்து இருந்தது.
��அகலாதே ஆருயிரே��
��18��
நாராயணன் மனதில் மகளின மீது இன்னும் கூடுதல் கவனம் வைக்க வேண்டும் என்ற எண்ணம்
வர,
டியூஷன் முடிந்து களைத்து வந்தாள் ரிது. அவர் எப்போதும் அவளுடன் வரும் ஆருஷியை
பின்னால் தேட, அவளோ வரவில்லை.
“ஆரூ எங்க ரிது??”
“அவ வரலப்பா.”
“ஏன்டா?” , எப்போதும் ஒன்றாக திரியும் பறவைகள் போல இருக்கும் இவர்களில், திடீரென்று
ஒருவர் இல்லை என்பது போல அவர் மனதில் தோன்ற சட்டென்று கேட்டுவிட்டார்.
“அப்பா”, என்றுஇன்னிக்கு என்று நடந்தவைகளை அவள் சொல்ல,
“என்ன ரிது நீ, கொஞ்சம் யோசிச்சு பேச வேண்டாமா? உனக்காக தேவையில்லாம அந்த
பள்ளிக்கூடத்துல இருந்து வந்த பொண்ணு அவ. அவகிட்ட இப்படி சொன்னா வருத்தப்பட
மாட்டாளா?”
“அப்பா எனக்கும் புரியுதுப்பா. ஆனா பிரச்சனை வேறப்பா.”, என்று சலிப்பாக சொன்னாள்.
“என்ன டா?”, என்று அவளிடம் பேச்சுக்கொடுத்தபடி அவளுக்கு காபி எடுத்து வந்தார்
நாராயணன்.
“அம்மா எங்க?”, என்ற அவளின் கேள்விக்கு, “தெரில நான் வரப்போ இல்ல. ரிஷி ஏதோ அவசர
வேலையா போறேன்னு அம்மா சொன்னாங்கனு சொன்னான். நீ விஷயத்துக்கு வா.”
“இல்லப்பா அந்த நந்தினி இருக்க இல்ல”, என்று இழுக்க,
“அது யார் நந்தினி?”
“அதான் ப்பா வம்பு பண்ணிச்சே.”
“ஓ.. சரி சொல்லு..”
“அவளுக்கு எங்க நட்பு மேல பொறாமை, நேத்து சும்மா இல்லாம ஆரூ நோட்டில் என் பெயரை
எழுதி வச்சிருக்கா. அவ பார்க்கல நான் அதெல்லாம் அழிச்சிட்டேன்.”
“அப்படியே பார்த்தாலும் உன் ஹண்ட்ரைட்டிங் ஆருக்கு தெரியாதா ரிது?”
“தெரியும் பா. ஆனா என்னால ஆருக்கு பிராப்ளம் வரக்கூடாது . அதுக்கு இந்த நந்தினியை நான்
கான்ட்ரோல் பண்ற வரை ஆரூ கொஞ்சம் விலகி இருந்தா அவளுக்கு பிரச்சனை வராது. அது
மட்டும் இல்ல. அந்த பழைய பி.டி அங்க வேலை பார்க்கிறார் இப்போ. இவளை விளையாட வர
சொல்லி இருக்கார். இவ என்னடான்னா பார்க்க போகவே தயங்கறா.”
“தயக்கமா இருந்தா துணைக்கு போயேன் டா.”
“அப்பா. உங்களுக்கும் புரியலையா? நான் நிரந்தரமானவள் இல்லப்பா. அவ எல்லாத்துக்கும் என்
பின்னாடியோ, இல்ல என் கூடவோ அலைய கூடாது. அவ வாழ்க்கையை அவ வாழனும். என்ன
பிரச்சனை வந்தாலும் அவ தனியா நிக்கணும். ஒருவேளை ஒரே காலேஜ்ல சேர்ந்தா கூட,
கல்யாணம் பண்ணி ஒரே வீட்டுக்கா போக முடியும். யோசிங்கப்பா. நான் அவளோட நன்மைக்கு
தான் அப்பா சொல்றேன். இன்னிக்கு அந்த நந்தினி என்னை நேரா வம்பு பண்ணினா
அடிப்பேன்னு ஆருவோட நோட்ஸ் எடுத்துட்டா, நான் அவளோட ஒவ்வொரு நடவடிக்கையையும்
பார்த்துட்டே இருக்கேன். அவ என்னை விட, நான் நேசிக்கிற என் ஆரூவை மாட்ட வைக்க
பார்க்கிறா பா.”, என்று ஆதங்கம் பொங்க சொன்னாள்.
“சரி அவளுக்கும் சேர்த்து நீ கவனி ரிது”, என்று சொன்ன தந்தையை பெருமூச்சோடு பார்த்தவள்,
“இதான் உங்க எல்லார்கிட்ட இருக்கற பிரச்சனையே. அவ கவனமே இல்லாம இருக்கா, அவளை
கவனமா இருன்னு சொல்லணும். நான் தான் ஏற்கனவே கவனமா இருக்கேனே. இந்த நந்தினி
விஷயம் அவளுக்கும் தெரியும் தானே பா. ஆனா கொஞ்சமும் கவனமே இல்லாம சுத்துறா. ஏன்
ரிது பார்த்துப்பான்னு நம்பிக்கை. எங்கயாவது அவளுக்கு என்னை மீறி பிரச்சனை வந்திடுமோ
நான் பயப்படறேன் அப்பா. ஏதோ நோட் புக் எடுக்கறா, கிறுக்கறா சரியா போச்சு, பெருசா
ஏதாவது செஞ்சுட்டா நான் என்னப்பா பண்ண முடியும்?? நான் என்ன லேடி ஜேம்ஸ்
பாண்டா??”,அவள் குரலில் சற்று வலியும் இருக்க, தோழி மீதான அவள் அக்கறையை
புரிந்துகொண்டார் நாராயணன்.
சட்டென்று ஆருஷிக்கு போன் செய்து வரச்சொன்னார்.
அவளோ முகம் வாடிப்போய் அவர் எதிரில் அடுத்த அரை மணியில் அமர்ந்தாள்.
“என்ன ஆரூ? யார் மேல வருத்தம்?”
“இவ மேல தான்.”, என்று ரிதுவை குழந்தை என் பென்சிலை இவ எடுத்துட்டா என்று மிஸிடம்
முறையிடுவது போல நாராயணனிடம் சொன்ன ஆருவை ஆதுரத்துடன் பார்த்தார் அவர்.
ரிது சொன்ன அனைத்தையும் அவளுக்கு புரியும் விதமாக சொல்ல, முகம் தெளிந்த அவள், “ஏன்
ரிது போயும் போயும் அந்த நண்டுக்கு பயந்தா இப்படி செஞ்ச?”,என்று சிரிக்க,
ரிது அவளை முறைத்துக்கொண்டு நின்றாள்.
“சரி சரி இனிமே கவனமா இருக்கேன்.”,என்று விளையாட்டு போக்கில் சொன்னவளுக்கு ரிதுவின்
பயம் புரியவில்லை அதே போல அவள் கவனமாக இருக்கவும் இல்லை. அதன் பயனை அடுத்த
நாளே பள்ளியில் அனுபவித்தாள் ஆருஷி. ஆனால் அவளை காக்க ரிது கூட அன்று அங்கு
இல்லை.
“என்ன மச்சி பார்த்து பேச கூட உனக்கு நேரமில்லை. அவ்ளோ பிஸியாடா நீ?”, என்று அபியின்
தோளில் கைபோட்டு கேட்டான் ஹர்ஷா.
“இல்ல ஹர்ஷா. கொஞ்சம் படிக்கிறேன். எக்ஸாம் வரப்போகுது இல்லையா?”
“எது மாடல் எக்ஸாம் தானே?”
“டேய் இன்னும் ரெண்டு மாசத்துல நமக்கு பப்ளிக் எக்ஸாம் வந்திடும் டா”, என்று அபினவ்
பல்லை கடிக்க,
“அதான் ரெண்டு மாசம் இருக்கே டா”, என்று ராகமாக சொன்னவனை, கையை கிள்ளி வைத்து,
“பிசாசே, கண்ணை மூடி திறக்கற நேரத்துல நாள் ஓடிடும். எக்ஸாம் ஒழுங்கா பண்ணலன்னா
அப்பறம் ஐயோனாலும் வராது அம்மானாலும் வராது .”
“நீ ஆனாலும் இவ்ளோ படிப்ஸா இருக்க கூடாது டா.”
“ஹர்ஷா நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் என் வீட்டு நிலைமையை. முதல்ல என்ஜினீயரிங்
சேர ஆசைப்பட்டேன்.ஆனா இப்போ வேற ஐடியால இருக்கேன். அதுக்கு நல்ல மார்க் வேணும்.
அப்போ தான் அப்பா கையை எதிர்பார்க்காம நல்ல காலெஜ்ல சீட் வாங்க முடியும்.”
“ஏன் டா மேனேஜ்மெண்ட் கோட்டால வாங்க முடியாதா?”, என்று அசால்ட்டாக கேட்க, அவனை
கசந்த பார்வை பார்த்த அபினவ்,
“உங்க அப்பாவும் பாவம் ஹர்ஷா. நீயும் நல்ல மார்க் வாங்கி அவரோட சுமையை குறைக்க பாரு.
இன்னும் சுமையை ஏற்றாதே. நாலு வருஷ படிப்புக்கு மானேஜ்மெண்ட் கோட்டால குறைந்தது
எட்டுல இருந்து பத்து லட்சம் ஆகும் ஹர்ஷா. இதை நாம நாலு வருஷத்துல திருப்பி சம்பாதிச்சு தர
முடியுமா? மேல படிக்க நினைச்சா? யோசி டா. நமக்கு வேற என்ன வேலை இப்போ படிப்பை
தவிர. இப்போ கஷ்டப்பட்டு படிச்சிட்டா வாழ்க்கை பூரா சந்தோசமா இருக்கலாம் டா. இப்போ
நம்ம கவனம் இல்லாம இருந்துட்டா, வாழ்க்கை முழுக்க கஷ்டப்படணும்.”
அபினவ் என்ன சொன்னாலும் கேட்கும் ஹர்ஷாவுக்கு, இந்த படிப்பு, பணம், கஷ்டம் என்றாலே
கொஞ்சம் அலர்ஜி தான்.
“டேய் வேற பேசு டா. பேசுறதே கொஞ்ச நேரம், ஏன்டா இப்படி மொக்க போடற.. ப்ளீஸ் அபி..”,
என்று கெஞ்ச,
“உனக்கு நான் சொல்ற வார்த்தை இப்போ புரியாது ஹர்ஷா ஆனா புரியும் போதும் நிறைய
இழந்திருப்ப, வலிக்கும். அது நடந்துடாம பார்த்துக்கோ. எனக்கு வேலைக்கு நேரமாச்சு. நான்
கிளம்புறேன்.”
அபினவ் எழுந்து சென்றுவிட, ஹர்ஷா தனிமையில் அவன் சொன்னவைகளை யோசிக்க
ஆரம்பித்தான். அவன் மொபைல் அதெப்படி நீ யோசிப்பாய், என்று அலறி தன் இருப்பைக்
காட்ட, எடுத்து காதில் ஒற்றியவனுக்கு அவன் நண்பன் அவசரமாக ஆன்லைன் கேமில் ஒரு ஆள்
குறைவதாக கூப்பிட, உடனே விளையாட்டின் உள்ளே குதித்தவன் மூளையில் அபியின்
வார்த்தைகள் கரைந்து காணாமல் போனது.
சிலருக்கு அப்படித்தான் சொல்லும்போதே அதை யோசித்து திருத்திக்கொள்ள சந்தர்ப்பம்
கிடைத்தும் பயன்படுத்தாமல் வீண் செய்வார்கள். ஹர்ஷாவின் இன்றைய மெத்தனம் ஒரு நாள்
அவன் மனவலிக்கு முழு காரணியாக வரும்போது அவன் அபினவ்வின் வார்த்தைகளை மீண்டும்
நினைவு கூர்வான். அதுவரை பொறுப்பின்மை தொடரும்.
சசி களைத்த முகமாக வீட்டிற்குள் நுழைய, ரிஷி ஓடி வந்தான். “என்னம்மா ஏன் இவ்ளோ சோர்வா
வர்ற?”
“பக்கத்து வீட்டு கந்தன் அண்ணாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க டா. பார்க்க போனேன்.”
“பார்க்க தானே போன? அதுக்கு நீ ஏன் படுக்கையில இருந்த நோயாளி மாதிரி வர்ற??”,
எரிச்சலாக கேட்டான்.
“டேய் முதல்ல அம்மாக்கு தண்ணி குடுக்காம என்ன பேச்சு?”, என்று அவன் தலையில் தட்டியபடி
சசிக்கு தண்ணீர் கொடுத்தாள் ரிது,
வாங்கிய சசி, “டியூஷன் முடிஞ்சு எப்போ வந்த ரிது? சாப்பிடியா??”
“ஆச்சு மா. நீ என்னன்னு சொல்லு. “,என்று அவள் முன்னால் அமர,
“அந்த அண்ணனை பார்த்துட்டு திரும்பும்போது ஒருத்தர் தன் மனைவிக்கு ஆபரேஷன், ரத்தம்
தேவைப்படுதுன்னு எல்லாரயும் கேட்டுட்டு இருந்தார். அவர் சொன்ன குரூப் ரத்தம் எனக்கு
இருக்குன்னு நான் போய் ரத்த தானம் பண்ணிட்டு வந்தேன்.”
“அம்மா உனக்கு அடுத்தவர்களுக்கு செய்யற நல்ல குணம் இருக்கலாம். தப்பில்லை. ஆனா
உன்னை பற்றி யோசிச்சியா? உனக்கு இன்னும் சின்ன வயசு இல்ல. நீ அனிமிக்கா இருக்கன்னு
டாக்டர் சொல்லி இருக்கார். நீ போய் ரத்தம் கொடுக்கலாமா.”
“இல்ல அங்கேயே டெஸ்ட் பண்ணின பின்னாடி தான் கொடுத்தேன் ரிது. பாவம் சின்ன வயசு
தான். அக்சிடேன்ட் போல.”
“சரி நீ ஓய்வு எடும்மா. நான் சாப்பாடு பார்த்துக்கறேன். இனிமே தனியா போய் எந்த வீர சகசமும்
பண்ணாதே. ஒரு போன் பண்ணி இருந்தால், அப்பா அங்க வந்து உன்னை கூட்டிட்டு
வந்திருப்பாரே.”
“பாவம் டி, அவரே வேலை பார்த்து அலுப்பில் இருப்பார்.”, என்று அவருக்கு பரிந்து வர,சிரித்த
ரிது தாயை படுக்க சொல்லி கிட்சனில் நுழைய,
சற்று நேரத்தில் வந்த நாராயணன், அவள் முன்னால் அந்த பேப்பர் கட்டிங் இருந்த நோட்டை
வைக்க, அவளோ திரு திருவென்று விழித்தபடி,
“அப்ப்பா.”, என்று இழுத்தாள்.
ரிது எதுக்கு அந்த பேப்பர் கட்டிங் எல்லாம் எடுத்து வச்சிருக்கான்னு தெரியலையே…???
Ithu sambanthama thaan padika poralo🤔🤔🤔waiting😍😍
Super