Skip to content
Home » அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13

13

“நான் உன்னை முதல் முறை பார்த்த போது ஏன் அவ்வளவு அலங்கோலமாக இருந்தாய்?.

அதுவும் திவான் உன்னை தயார் செய்து விட்டு வந்து என்னை கூட்டி போவதாக சொல்லியும்

அந்த லட்சணத்தில் இருந்தாய்.” அவன் குரலில் விஷயத்தை அறிந்து கொள்ளும் நோக்கம்

தென்பட்டது. இவன் நம்மை எதற்காகவும் குற்றப்படுத்த மாட்டன் என்பதும் எத்தகைய சூழலிலும்

கீழ்த்தரமாகவும் நினைக்க மாட்டன் என்பதும் புரிந்தவளாக அவளும் அவனிடம்

எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றியே பதில் சொன்னாள்.

“அதுவும் ஒரு நாட்டின் இளவரசி தன்னை பெண் பார்க்க வரும் ஒருவன் முன் இப்படியும் வந்து

நிற்க கூடுமோ? என்று குழப்பமாக இருந்தது”

“உங்களுக்கு மட்டும் இல்லை. யார் வந்த போதும் நான் அப்படி தான் நிறுத்தி வைக்க பட்டேன்.”

“இதற்கு முன்பும் அப்படி தானா?”

“ஆம்”

“எத்தனை பேர் வந்திருப்பார்கள்?”

“நிறைய”

“என் அண்ணன் கூட உன்னை பெண் பார்க்க வந்தான். ஆனால் அவனும் உன்னை

பிடிக்கவில்லை என்று சொன்னான்”

“வந்தவர்கள் அத்தனை பேரும் அப்படி தான் சொன்னதாக கேள்வி”

“எப்படி பிடிக்கும்?. அலங்கோலமான நிலையில் வெளிச்சம் இல்லாத இடத்தில், பார்க்கும்

யாருக்குமே பிடிக்காது தான்.”

“என்ன செய்ய… ? அந்த மாடிபடியின் கீழ் தான் நிறுத்தி வைப்பார்கள். அந்த இடம் இருட்டாக

தான் இருக்கும்.”

“முதலில் எனக்கும் இருட்டுக்குள் உன்னை வரிவடிமாக தான் புலப்பட்டது. சரி கிட்டே போய்

பார்க்கலாம் என்று நெருங்கி வந்தால் நீ பின்னாலே போனாய். என்னை கண்டு பயந்து தடுக்கி

விழப்போனாய்.”

“உங்களுக்கு பயந்ததினால் இல்லை. அது என்னவோ, யார் வந்த போதும் அந்த இடத்தில் தடுக்கி

விழத்தான் போவேன்.”

“ஒருவேளை வெளிச்சம் இருந்திருந்தால் தடுக்கி இருந்திருக்காதோ என்னவோ?. அதனால் தான்

அங்கே விளக்கு பொறுத்த சொல்லி ஆணையிட்டேன்”

“வந்த அனைவரும் என்னை பிடித்து நிறுத்த தான் விரைந்து வருவார்கள்.”

“மன்னிக்கணும். உன்னை பிடித்து கொள்ளனும் என்று எனக்கு தோணலை”

“என்னுடைய நல்லவேளை, உங்களுக்கு என்னை பிடிக்க தோணாதது”

“ஏன்?”

“என்னை பிடிக்க வந்தவர்களை எல்லாம் என்ன செய்தேன் தெரியுமா?” செய்ததை சொன்னாள்.

அவளிடம் அடிபட்டவர்களின் நிலைமையை சொன்னாள்.

கேட்டவன் அடக்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தான்.“ஏன் அப்படி செய்தாய்?”

“அது…… அது ஒரு பெரிய கதை”

அவள் குரலின் தொனியிலுருந்து அவள் சொல்ல போவது அவ்வளவு விரும்பகூடியதாகவோ

அல்லது கேட்க கூடியதாகவோ இருக்க போவதில்லை. அது அவளுடைய வலியை சொல்ல

கூடியதாக மட்டுமல்லாமல் தனக்கு வலியையும் வேதனையையும் ஒரு சேர ஏற்படுத்த கூடியதாக

இருக்கும் என எதிர்பார்த்தான்.“சொல்லு ரோகிணி”

அவளுடைய பார்வை தூரத்தில் இருந்தது. சிந்தனை பின்னோக்கி இருந்தது. அந்த

சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது போல, ஏதோ தூரத்தில் தெரியும்

காட்சியை, நடந்தது நடந்தது போல குரலில் ஒரு உணர்ச்சியும் இல்லாமல் சொல்ல

தொடங்கினாள். இவனிடம் எதையும் சொல்லலாம் என்ற நம்பிக்கையில்.

“அப்பா அம்மா இறந்ததும் கொஞ்ச நாள் எல்லாம் என்னிஷ்டபடி தான் இருந்தது. அவர்களை

இழந்த துக்கத்தில் சிறு பெண்ணான எனக்கு எதற்க்கெடுத்தாலும் அழுகையும் அடமும் தான்.

முதலில் முத்தம்மாவையும் இந்த கருணாகரனையும் நிறுத்தி விட்டார் திவான். பிறகு சுந்தரியை

என்னை கவனிக்கும் வேலையில் வைத்தார். முதலில் சுந்தரி என்னை இளவரசி என்று மிகவும்

மரியாதையாக தான் நடத்தினாள். பிறகு திவானிடம் வளைந்து நெளிந்து அவள் நடந்து

கொள்வதும். காலபோக்கில் அவர்கள் என் கண் எதிரேயே அசிங்கமாக நடந்து

கொள்வதும்,,,,,ச்சே…..ஒரே அருவெறுப்பு”

அன்றைய நினைப்பில் தோள்களை குளுக்கியவளை மெல்ல தட்டினான். அது அவளை

ஆசுவாசப்படுத்த மேற்கொண்டு தொடர்ந்தாள். “கல்வி கற்பிக்க வரும் ஆசிரியர்கள் திடீரென்று

நின்று விட்டார்கள்.என் பெற்றோரின் அறையின் பக்கத்தில் இருந்த என் அறையை இங்கே

மாற்றி விட்டார்கள்’”

முதன்முதலில் இந்த அறைக்குள் வந்த போது இது இருந்த நிலை இன்னும் மறக்கவில்லையே

அவனுக்கு. எனவே ம்ம்ம் என்று முனகினான். அதில் இருந்த கோபம் ஏனோ ரோகினிக்கு மிகவும்

பிடித்திருந்தது. அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவது என்று தீர்மாநித்தவள்

மேற்கொண்டு சொன்னாள். ”என் தந்தையின் அறையின் நீண்ட தாழ்வாரத்தின் கோடியில் ஒரு

உப்பரிகை உண்டு. என் தந்தை இருந்த போது அங்கே நின்று கொண்டு மக்களை சந்திப்பார்.

அவர் காலத்திற்கு பின்பு கூட நானும் அது போன்று அங்கே நின்று கொண்டு வெளியே

வேடிக்கை பார்ப்பேன்.பொது மக்களும் அங்கே நின்று என்னை பார்த்து அவர்கள் குறைகளை சொல்லுவார்கள். என்னால் ஏதும் செய்திட இயலாது என்பது அவர்களுக்குத் தெரியாது அல்லவா!

ஆனால் அதுவும் கொஞ்ச நாட்கள் தான். பிறகு அதன் கிராதி கம்பி உடைந்து விட்டது. அதனால்

அங்கு எனக்கு கீழே விழுந்து விட வாய்ப்பு உள்ளது என்று இந்த அறையை

கொடுத்தார்கள்.இங்கிருந்து நந்தவனம் மட்டும் தான் தெரியும்”

“இங்கேயிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணமே வரவில்லையா?”

“எனக்கா?ஹும். எத்தனை முயற்சிகள்” என்றவள் “ஒருநாள், அரண்மனைக்கு வெளியே போய்

பார்க்கும் ஆவலில் யாருக்கும் தெரியாமல் போய் விட்டேன்..எப்படியோ தேடி கண்டு பிடித்து

இழுத்து வந்து நன்றாக அடித்தாள் சுந்தரி. சுந்தரியை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருநாள்

திருவிழா வந்தது. அரண்மனைக்கு முன்பு நின்று நாட்டியக்காரகள்

தப்பாட்டம்,ஒயிலாட்டம்,மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என்று ஆடி கொண்டிருந்தார்கள்.

ஊரே திமிலோகபட்டு கொண்டிருந்தது.

அன்றும் யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து விடிய விடிய கூத்து பார்த்து விட்டு

நாட்டியக்காரகள் பின்னோடு போய் விட்டேன்.. எல்லோரும் கோட்டைக்கு வெளியே சாவடியில் இரவு தங்கினோம். எனக்கு நடந்து பழக்கம் இல்லாததால் படுத்தவுடன் அசதியில் தூங்கி விட்டேன். கண்விழித்து பார்த்த போது நான் மட்டும் தான் படுத்திருந்தேன்.

போகும் வழி தெரியாமல் கால் போன போக்கில் போனேன். கிராமமோ மக்களோ

தென்படவேயில்லை. மலை அடிவாரத்தை வந்து சேர்ந்தேன். அப்படியே காட்டுக்குள்

போய்விட்டேன். பயமாக இருந்தாலும் மிகவும் சுதந்திரமாக இருந்தது”

அவள் பட்ட கஷ்டங்களைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவள் சுதந்திரமாக இருந்தேன் என்ற

போது கண்கள் கலங்கத் தான் செய்தது. “எப்படி திவான் உன்னை தப்பி போக விட்டார்?” என்று

கேட்டான்.

“எங்கே?” என்று கேட்டு புன்னகைத்தவள் “இரண்டோ, மூன்றோ நாட்களுக்கு பிறகு திவான்

என்னை தேடி காட்டுக்கு வந்தவர் என்னை கண்டு பிடித்து அரண்மனைக்கு இழுத்து வந்து அந்த

பாதாள சிறையில் போட்டார். காட்டுக்கா ஓடி போனாய், இங்கேயே கிட. இனிமேல் இது தான்

உனக்கு காடு என்று அந்த காட்டிற்குள் போட்டார் என்றாள்.

“இதையே காரணம் காட்டி திவான் என்னுடைய கல்விக்கு ஒரு முற்று புள்ளி வைத்து விட்டார்.

மொத்தத்தில் வெளி உலகமே தெரியாமல் போயிற்று. எனக்கு பழக்கமான முத்தம்மா கருணாகரன்

இவர்களிடமிருந்து பிரிக்க பட்டேன். என் மேல் பிரியமாயிருந்த சுந்தரம் பெரியப்பா

குடும்பத்தினர் துரைசாமி அவர்கள் முன் நான் முரடாகவும் அடங்காதவளாகவும் சித்தரிக்க

பட்டேன், எனக்கு ஏதேனும் நேர்ந்தால் நாடு கும்பினியார் வசமாகி விடும் ஆகையினால் என்

பாதுகாப்பை முன்னிட்டு என்னை வெளியே எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை என்று நாட்டு

மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தம் ஒரு சிறு பெண்ணிற்கு உரிய எதுவும் எனக்கு

மறுக்கப்பட்டது.என் அரண்மனையில் நானே அடிமையாகிப் போனேன். அரண்மனையில்

அடிமைராணி. என் கண்ணெதிரில் சுந்தரி தான் தின்று கொழுத்து பெருத்து போனாள். பதினாறு வயது வரை சாதரணமாக தான் போய் கொண்டிருந்தது வாழ்க்கை. பிறகு தான் கொடுமையின்

உச்சங்களை அனுபவித்தேன்” என்று நிறுத்தினாள். மிக அதிக நேரம் பேசியதாலா அன்றி பழைய

நினைவுகளின் தாக்கத்தினாலா என்று இனம் காண முடியாத ஒரு பெருமூச்சொன்று

வெளிப்பட்டது.

பின் அவனைப் பார்த்து மெல்லிய புன்னைகையுடன் தொடர்ந்தாள். “முதன்முதலில் என்னை

பெண்பார்க்க ஒரு இளவரசன் வருகிறான் தயாராக இரு என்று சொல்லவே சுந்தரி என்னை தயார்

செய்தாள். அன்று அவளுக்கு என்னவோ என் மேல் கருணை பீறிட்டு கொண்டிருந்தது. கடந்த

வருடங்களில் நான் கண்டிராத ஆடை ஆபரணங்களை அணிவித்து பூச்சூடி பொட்டிட்டு அழகு

படுத்தி அழைத்து சென்றாள். அலங்காரம் செய்து கொண்டே கற்புள்ள பெண்கள் பற்றி எல்லாம்

சொல்லி என்னையும் ஒரு கற்புள்ள பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூட ஆசிர்வாதம்

செய்தாள். எனக்கு கூட அவளுடைய அக்கறையையும் அன்பையும் நினைத்து

இப்படிப்பட்டவளை நாம் தப்பிதமாக கற்பிதம் செய்து கொண்டு விட்டோமே என்று மனதிற்குள்

என்னை நானே குட்டி கொண்டேன். நம்முடைய உப்பு சப்பில்லாத இந்த வாழ்க்கைக்கு ஒரு முற்று

புள்ளி இன்றோடு முடிய போகிறது. நம்மை திருமணம் செய்பவன் இந்த அலங்கோல

வாழ்கையிலிருந்து நம்மை காப்பாற்றி கரை சேர்ப்பான் என்று என்னை பெண் பார்க்க வர

போகிறவனுக்காக மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்” என்றவள்

விடுகதை சொல்லும் சுவாரஸ்யத்துடன் “அந்த மாலை வேளையும் வந்தது. முழு அலங்காரத்துடன்

பெரும் எதிர்பார்ப்புடன் மாடிபடியின் கீழ் தான் அன்றும் நின்றிருந்தேன”.என்று சொல்லி

நிறுத்தினாள்.

அந்த கூடமும் அங்கே அவள் நின்ற இடமும் தெரிந்தவன் புரிந்து கொண்டேன் என்று பார்த்தான்.

புரிந்து கொண்டாயா என்று அவனை பார்வையால் கேட்கவும் அவன் ஆம் என்று தலையாட்டவும்

மேற்கொண்டு சொன்னாள். அது அத்தணை உவப்பற்றது என்று புரிந்தது அவனுக்கும்.

“கூடத்தின் உள்ளே நுழைந்த அவனை நான் இங்கிருந்தே பார்த்து விட்டேன். அப்பப்பா ! நல்ல

உயரம். உயரத்திற்கு ஏற்ற பருமன். ஒவ்வொரு கையும் காலும் ஒரு தூண் போன்று இருந்தது.

நல்ல வீரன் போலும் என்று நினைத்து கொண்டேன். தேக்கு மர கடைசலாக நல்ல வாளிப்பாக

இருந்தான். அதற்கு மேல் அவனை கவனிக்க அங்கே வெளிச்சம் போதவில்லை. எனக்கு அவன்

எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இந்த நரக வாழ்க்கையிலிருந்து என்னை காப்பாற்றி கொண்டு

செல்லட்டும் என்று வேட்டீஸ்வரனை வேண்டி கொண்டு நின்றேன்.அவனுக்கும் அந்த

வெளிச்சத்தில் என்னை சரியாக தெரியவில்லை போலும். மிகவும் அருகில் நெருங்கி வந்தான்.

நான் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

அவன் அருகில் வந்து என்னை இரு கைகளாலும் அணைத்து பிடித்தான். முதலில் எனக்கு ஒன்றும்

புரியவில்லை. என்னை அவன் நெஞ்சோடு இறுக அணைத்து ..ம்ம்ம்ம் ! சே..விடு விடு என்று

தள்ளி விட்டேன்” என்று அன்றைய நினைவில் எதிர்ல் இருப்பவனை தள்ளி விடுவதைப் போல

பாவித்துக் கொண்டாள். இரு கைகளாலும் குறுக்கும் மறுக்கும் தடுத்தாள். அன்றைய அவளுடைய

வேதனையை அவனால் புரிந்து கொள்ள முடியவே அவளை நெருங்கி தோள்களை பிடித்துக்

கொண்டான். “ரோஹிணி” என்று குரல் கரகரக்க வெம்பவும் செய்தான். “வேண்டாம். வேண்டாம்.

சொல்லாதே. விடு” என்று அவளை தேற்ற முயன்றான்.

“பரவாயில்லை”

“கஷ்டமாக இருக்கும் ரோஹிணி. வேண்டாம். பரவாயில்லை. விடு”

சற்று நேர அமைதிக்குப் பின் “உங்களிடம் சொல்லலாம் என்று தோன்றுகிறது” என்றவாறே

மீண்டும் தொடர்ந்தாள். “என்னை அவன் விடாமல் மேலும் மேலும் என்னிடம் பலாத்காரமாகவே

நடந்து கொண்டான். அவனுடைய சேட்டைகள் எல்லை மீறி போய் கொண்டிருந்தது. எனக்கு

என்ன செய்வது என்றே புரியவில்லை. சுந்தரி சொல்லிய கற்புக்கரசிகளின் கதைகள் எனக்கு

நினைவுக்கு வந்து எங்கே நான் கற்பை இழந்து விடுவேனோ என்று மேலும் கலங்கடித்து

கொண்டிருந்தது. சோர்ந்து விடாதே, போராடு, விடுபடு என்று எனக்கு நானே உறுதிபடுத்திக்

கொண்டு போராடினேன். நான் எவ்வளவுக்கு எவ்வளவு போராடினேனோ அத்தனைக்கு

அத்தனை அவன் பிடி இறுகியது.

அப்போதுதான் திவானின் குரல் என் காதில் துல்லியமாக அதே நேரத்தில் அவசரமாக கேட்டது.

“ரோகிணி, அவனை உன் வலது காலை மடக்கி முன் தொடையால் அவன் கால்களுக்கு இடையில்

ஒரு உதை உதைத்து விடு.” சற்றும் யோசிக்கவேயில்லை.அப்படியே செய்தேன். சுருண்டு

விழுந்தான் அவன்.

நான் என் அறைக்கு சென்று விட்டேன். பின்னால் வந்த திவானும் சுந்தரியும் என்னை மிகவும்

கொண்டாடினார்கள். என்னை கற்புள்ளவள் என்றும் என் கற்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல்

என்னை என்னாலேயே காத்து கொள்ள முடிந்தது என்றும் இனி வரும் காலங்களில் எனக்கு

அதிலும் முக்கியமாக என் கற்புக்கு ஆபத்து நேர்ந்தால் புலியை போல பாய்ந்து தாக்கி தற்காத்து

கொள்ள முடியும் என்று திரும்ப திரும்ப அவர்கள் இருவரும் பேசியதில் எனக்குள் நானே

அப்படியே நம்ப தொடங்கி விட்டேன்.”

“சரி, அதற்கு பிறகு எத்தனை தடவை இது போல் ஆயிற்று?”என்று கேட்டான் விவரம் அறியும்

குரலில்.

“இது போல ஒரு தடவை இருதடவை என்று இல்லை பத்து தடவை நடந்திருக்கும்”

“ஒருவர் கூடவா உன்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை?

“இல்லை ஒருவர் கூட என்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை.”

“ஓஹோ”

“இவர்கள் எல்லோரும் வந்து சென்ற பின்பு திவானும் சுந்தரியும் நான் என் கற்புக்காக

போராடுவதை ஒரு வீர தீர செயலாக சொல்லி பாராட்டுவார்கள்.” சொல்லி கொண்டே வந்தவள்

நிறுத்தி விட்டு எதோ யோசனையாக நின்று கொண்டிருந்தாள்.

“ம்…….! அப்புறம்……”

“ஒருவர் வந்தார், வேட்டையன்புதூர் இளவரசர் என்று சொன்னார் திவான். அது என் அம்மாவின்

நாடு. அம்மாவின் ஆவி என்னோடு இருக்காதா? சரி வரட்டும். இவராவது சரியாக நடந்து

கொள்ள மாட்டாரா? என்று ஏக்கத்துடன் இருந்தேன். ஆனால்………!”

“சொல்லு, என்ன ஆனால்,”

“அன்று சுந்தரி என்னை அலங்காரம் செய்ய அனுமதிக்கவேயில்லை. போதாகுறைக்கு

அலங்கோலம் செய்து வைத்தாள். ஏன் இப்படி என்னை சித்ரவதை செய்கிறாய் என்று அழுதேன்.

“இவனுக்கு உன்னை பிடிக்க கூடாது”- என்றாள் சுந்தரி.

அவன் நல்லவனாக தான் தென்பட்டான். சராசரி உயரம், மென்மையான நடை.பரவாயில்லாமல்

தான் இருந்தான். ஆனால் அன்று மிகவும் இருட்டாக இருந்தது அந்த இடம். ஆதலால் அவனுக்கு

நான் சரியாக தெரிந்திருக்க மாட்டேன், அலங்கோலமாக இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்,

என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டான்.”

“அடடா”

“ஆனால் அவன் போன பின்பு மூன்று நாட்களுக்கு என்னை இந்த பாதாள சிறையில் சோறு

தண்ணி இல்லாமல் அடைத்து வைத்திருந்தார்கள். நான் மயங்கி விழவும் தான் என்னை மேலே

கொண்டு வந்து என் அறையில் வைத்தார்கள்.”

“உன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்திருப்பானோ?”

“இருக்கலாம். இறுதியாக போன மாதம் ஒருவன் வந்தான் வீரையன் கோட்டை இளவரசன் என்று.

அவன் சுந்தரம் பெரியப்பாவுடன் அநேகம் போர்களுக்கு சென்றவன் என்றும் கைப்பற்றிய

நாடுகளில் பெண்களை நாசபடுத்தி விடுவான் என்றும் அவனிடம் பெண்கள் மிகவும்

ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் திவான் சொன்னார். அவன் கண்களுக்கு முன்பாக

மிகவும் அலங்காரமாக நின்றால் தூக்கி கொண்டேனும் சென்று விடுவான் என்றும் வழக்கத்தை

விட அதிகம் அழுக்காக இருக்க வேண்டும் என்றும் திரும்ப திரும்ப சொன்னார் திவான்”

“அது என் அண்ணன் ரோகிணி, அவன் மன்னர் சுந்தரருடன் அநேகம் போர்கலங்கள் சென்றவன்

என்பது உண்மை தான். அவன் மிக பெரிய வீரன் தான். ஆனால் பெண்கள் விஷயத்தில் மட்டும் நீ

கேள்வி பட்டது முற்றிலும் தவறு.”

“அப்படி என்றால் ஏன் அவரும் நான் தடுக்கி விழ போனபோது என்னை பற்றி கொள்ள வந்தார்?”

குழப்பத்துடன் தான் கேட்டாள் அவளும்.

“எனக்கு ஒன்று புரியவில்லை ரோகிணி” சொல்லி கொண்டே வந்தவள் அவன் பேசவும் தன்

பேச்சை நிறுத்தி கொண்டு அவன் பேசுவதை கேட்டாள்.

“உன்னை திருமணம் செய்ய வேண்டி படை பரிவாரங்களோடு மிகவும் ஆர்ப்பாட்டத்தோடு

வந்தவன். திருமணத்தின் மூலமாக நீயும் இந்த நாடும் அவனுக்கு கிடைக்கும் என்ற நிச்சயம் இருக்கும் போது அவன் ஏன் உன்னை பலாத்காரம் செய்ய வேண்டும்”

முதன் முதலாக யோசித்தவள் கேட்டாள், “ஆம், அது தானே?”

“ஒரு தடவை தடுக்கி விழுந்தாய் சரி. ஒவ்வொரு தடவையும் ஏன் தடுக்கணும்?’

“வெளிச்சம் இல்லாததால் விழுந்தேன் என்று நினைக்கிறேன்?”

“வெளிச்சம் இல்லாமல் உன்னால் நடக்கத்தான் முடியாது. நிற்க கூடவா முடியாது”

“ம்.!”

“ஒரு தடவை வெளிச்சம் இல்லை தற்செயல் என்றால் சரி. பிறகேனும் அதை ஏன் சரி செய்ய

வில்லை?”

“”ம்..!”

“அது தற்செயல் இல்லை. அந்த இடத்தில் சாளரம் மூடி இருந்தது. அதை நான் திறக்க

சொன்னேனே.”

“ம்…!”

“அப்படியானால் ..!”

தீவிரமாக யோசித்தவன் எல்லாவற்ரையும் கூட்டி கழித்து பார்த்தான். அது தான் புரியவில்லை

விஜயனுக்கும். திவான் தான் இவளுக்கு இத்தனை கொடுமைகளையும் செய்தார், செய்து

கொண்டும் இருக்கிறார் என்பது புரிகிறது. ஆனால் ஏன்? என்ன காரணம்? ஏழு வருட

திட்டமிடுதல் எதற்காக? யாருக்காக? தீவிரமாக உரக்க யோசித்தான் விஜயன். அது தானே

என்றாள் ரோஹிணி.

தொடரும்.

ஷியாமளா கோபு

2 thoughts on “அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *