Skip to content
Home » அரளிப்பூ 1

அரளிப்பூ 1

தன் பேத்தி இயலினி எது கூறினாலும் நெஞ்சி வலி வராத குறை தான் செல்லத்தாயிக்கு… இப்போதும் அவள் கூறியதை கேட்டதும் மயக்கம் வராத குறையாக பாட்டி செல்லத்தாயி, “அப்படி என்னத்த டி பொய் சொல்லி நம்பள நம்ப வைக்கிற மாதிரி செய்தியில போடுறானுங்க?” என்று கேட்க

இயலினியும் அசால்டாக தனது பாட்டி சமைத்து வைத்த உணவை தட்டில் போட்டு கொண்டே, “என்ன போடல? ஒரு புள்ளைய காணம்ன்னு சொல்லும் போதே அந்த புள்ளைய தேட ஆரம்பித்து இருந்தால் அந்த புள்ளைய கண்டு பிடித்து இருக்க வாய்ப்பு இருக்கு… அதை விட்டு விட்டு இருவத்தினாலு மணி நேரத்துக்கு அப்பறம் தான் புகார் தரவே செய்யணும்ன்னு சொல்லி தள்ளி வைக்கிற சட்டம் எதுக்கு? கடத்தி கிட்டு போனவன் பதுங்கி ஏதாவது அந்த புள்ளைய பண்ணவா? கேட்டா தெரிஞ்சவுங்க வீட்டுக்கு போயிருக்கும் அது இதுன்னு இவங்களே ஒரு சாக்கு போக்கு சொல்லுவாங்க… இதுக்கு பேசாம ஒரு கான்ஸ்டபிள் அந்த பொண்ணு குடும்பத்தோட சேர்ந்து அந்த பொண்ணு போன வந்த இடம் எல்லாம் விசாரித்தால் ஏதாவது அப்போதே அந்த புள்ளைய காப்பாத்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்மா? இல்லையா? கிடைக்கலன்னாலும் காவல் துறை மேல மரியாதையாவது இருக்கும்மா இல்லையா? சொன்னதும் வந்து தேடுனாங்கன்னு…” என்று பேசி கொண்டே உணவை உள்ளே தள்ளவும் இயலினி மறக்க வில்லை.

கூடவே பேச்சையும் விட வில்லை… “அதை விட்டுட்டு எல்லாம்மே முடிந்ததுக்கு அப்பறம் சிறப்பு படை அமைத்து குற்றவாளிய தேடுறாங்கலாம்… இதுலையே தெரியல மக்களுக்கு உதவ அவங்க இல்லை என்று… மாறாக அவங்க டிப்பார்ட்மெண்டுக்கும் அவங்கள சார்ந்த பல துறைக்கும் வேலை குடுக்குற வேலைய தான் அவங்க செய்றாங்க… என்ன கிழவி? யாருக்குன்னு நினைக்கிறியா… சொல்லுறேன்… அதையும் நானே சொல்லுறேன்… இவங்க கிட்ட புகார் தர போனா வாங்காம இழுத்து அடிக்கிறது… அப்படியே வாங்குனாலும் அசால்டா வேலைய பார்க்குறது… அப்படி செய்து ஒரு குற்றத்த நடக்க விட்டு… அதுக்கு அப்பறம் அதை குற்றம்ன்னு சொல்லி பதிவு பண்ணி… அந்த குற்றத்த இவன் தான் செய்தான்னு ஒருத்தன கைது பண்ணி எல்லாம் செய்து அவங்க டிப்பார்ட்மெண்டுக்கு அடுத்து வக்கீலுக்கு அடுத்து ஜட்ஜ்க்கு எல்லாம் வேலை தரணும்… அதனால தான் எல்லா தப்பும் நடந்த பிறகு சந்தேகத்தின் பேரில்… தன் பேச்சை கேட்காமல் என்னைய எதிர்த்தான்… விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தர வில்லை… தப்பிக்க பார்த்தான் என்று எல்லாம் பல காரணங்கள் கூறி கைது பண்ணி சிறையிலையே வைக்கிறது எல்லாம் பண்ணுறது… அதனால கூட காவல் துறை பல பேருக்கு வேலை தராங்க சிறைச்சாலையில… எவ்வளவு உயர்ந்த உள்ளம் இல்லல…” என்று எல்லாம் கூற கூற

செல்லத்தாயியோ தலை சுற்றி தொப்பென்று தரையில் அமர்ந்தே விட்டார்… “இவள் எங்க எங்க சுத்தி எப்படி எல்லாம் வில்லங்கத்த இழுக்குறா பாரு முருகய்யா? இவ பண்ணுறத எல்லாம் பார்த்தால் என்னைக்கு இவ கையிலும் என் கையிலும் விலங்க பூட்ட போறாளோ…” என்றே மிரண்டு தான் தன் பேத்தியை பார்த்தார்.

அவளோ அவர் அமர்ந்த வேகத்தை கண்டும் கூட எவ்வித பதட்டமும் இல்லாமல் தண்ணீரை அவரின் முன் நீட்ட அவர் அதை வாங்காமல், “அடியே இயலு… இதுக்கு மேல நீ இப்படி எல்லாம் பேசாத டி… எனக்கு இப்பையே நெஞ்சே வெடிச்சிடுற போகுது நீ பாட்டுக்கு எதையாவது ஏழரைய இழுத்து கிட்டு வந்துடுவியோன்னு…” என்றார்.

அவர் கூறியதை எல்லாம் எங்கு காதில் வாங்கினாள்… மாறாக, “கிழவி இதுக்கே உன் நெஞ்சி வெடிச்சிட்டா எப்படி? அது எல்லாம் உனக்கு வெடிக்காது… அத நான் பாத்துக்குறேன்…” என்றதும் பாட்டி, “என்னடி ஏதோ ஆட்டோட நெஞ்சிக்கறிய பார்த்துக்குற மாதிரி சொல்லுற?” என்றே கேட்க

இயலினியோ, “அட காமெடி பண்ணாத கிழவி… உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்னு சொல்ல வந்தேன்… இன்னம் நான் உன் கிட்ட பேச எவ்வளவோ இருக்கு…” என்றதும்

“என்னது இன்னம் இருக்கா… ஒரு டீவி பொட்டிய கேட்ட குத்தத்துக்கு வச்சி செய்யாதடி இயலு… கிழவி பாவம் டி…” என்றார்.

செல்லத்தாயி கூறியதை கேட்டதும் வாய் விட்டே சிரித்த இயலினி, “யாரு? நீ பாவம்… இத நான் நம்பணும்… ஏய் கிழவி… நான் நியூஸ் கேட்குறேன்னு நினைச்சி கிட்டு அதையே சாக்கா வச்சி நீ சீரியல் பார்க்க டீவிய கேட்ட நீ பாவம்மா? உண்மையான பாவம் யாரு தெரியும்மா? இளைஞர்கள் தான்… ஆனால் என்ன பண்ண? அவங்க முட்டாளா இருக்காங்க… அது அவங்களுக்கே தெரியல… அதான் எல்லாரும் ஏமாத்துறாங்க… இந்தா இந்த படிச்ச இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கிடைக்கும் எக்ஸாம் எழுதி பாஸ் ஆனான்னு சொல்லி ஒரு பிட்டு போடறானுங்களே.. அதுல ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு எக்ஸாமுக்கு எவ்வளவு பணம் கட்டுறாங்க தெரியுமா? இல்ல… தெரியாம தான் கேட்குறேன்… முப்பது இலட்ச பேர் எக்ஸாம் எழுத அப்ளே பண்ணி இருக்காங்கன்னா வேலை எத்தனை பேருக்கு இருக்கு? மூவாயிரம் இல்ல ஐந்தாயிரம்… சரி போனா போகுது அந்த எக்ஸாம் எழுதுனவங்கள்ல பத்தாயிரம் பேருக்கு வேலை போட்டு தருவாங்களா? அப்போ மத்தவுங்க கட்டுன பணம் எல்லாம் எங்க? எங்க போகுது? ம்கூம்… இவங்க எல்லாம் எக்ஸாம்க்குன்னு கட்டுற பணத்த எல்லாம் ஒன்னா ஆக்கி ஊருக்கு ஒருத்தருக்காவது… இல்லன்னா பத்து ஊருக்கு ஒருத்தருக்காவது சுய தொழில் ஏதாவது செய்ய உதவினால் கூட நாட்டுல உள்ள முக்கால் வாசி இளைஞர்கள் குடும்ப பெண்களுக்குன்னு நிறைய பேருக்கு வேலை கிடைத்து விடும்… ஆனால் அத செய்ய மாட்டாங்க… நல்லது எதையும் முன்ன வந்து செய்ய மாட்டாங்க…” என்றவள்

சாப்பாட்டுக்கு இரசம் ஊத்தி கொண்டு சிறிது பொரியலையும் வைத்து கொண்டே, “அப்பறம் எதை தான் செய்ய அவங்க முயற்சி செய்றாங்க? எல்லாம் நம்பள ஏமாத்துறதுக்கான வேலை… இத தான் டீவில போட்டு போட்டு நம்பள முட்டாள் மாதிரி அவங்க சொல்லுறது தான் நாட்டு நடப்புன்னு நம்ப வைக்கிறாங்க… இது எல்லாம் என்ன யாருக்கும் தெரியாதா என்ன? எல்லாம் தெரியும்… ஆனால் என்ன எல்லாரும் மறக்க கூடியவங்க… அதுவும் சீக்கிரம்மா மறக்க கூடியவங்க… அப்படி மறக்குறதால தான் மக்கள அரசியல்வாதிங்க வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் அரசு அரசாங்கம் சமூகம்ன்னு எல்லாரும் ஆட்டி வைக்கிற பூம்பு மாடு மாதிரி ஆட்டி வச்சி முட்டாளாவும் கேள்வி எதுவும் கேட்காத ஆளுங்களாகவும் வச்சி இருக்காங்க…” என்று கூற கூற

செல்லத்தாயி, “இவள் நம்ப கண்ண மூடி தூங்காத வரைக்கும் விட மாட்டா போலையே… இதுக்கு பேசாம நான் அப்படியே…” என்றே தரையில் படுத்து விட அவரின் செயலை நக்கலாக பார்த்து கொண்டே உண்ட இயலினி அந்த செல்லத்தாயின் பேத்தியாயிற்றே.

அவரின் தில்லாலங்கடி வேலை எல்லாம் தெரியாதவளா என்ன? எல்லாம் நன்கு தெரிந்தவள்… ஆகையால் உண்டு முடித்து விட்டு தண்ணீரை குடித்து கொண்டே தரையில் விழிகள் மூடி உறங்குவது போல் பாசாங்கு செய்த பாட்டியை வில்லங்கம்மாகவே பார்த்த இயலினி தன் கரத்தில் இருக்கும் சொம்பை பார்த்து, “இப்படி பங்கம்மா நடிக்கிற இந்த கிழவி மண்டைய அடிச்சி உடைத்தால் என்ன? வேணாம் செத்து போனாலும் போயிடும்… அதுக்கு…” என்றே நினைத்தவள்

சொம்பில் மீதி இருந்த தண்ணீரை பார்த்து விசம புன்னகையுடன் பாட்டியின் முகத்தை பார்க்க அவரோ பேச்சிக்கு கூட கண்ணை திறக்க வில்லையே… இயலினியும், “என் கிட்டையே வா… இந்தா…” என்றே தண்ணீரை அவரின் முகத்தில் ஊற்றி விட்டு, “ஏய் கிழவி… சும்மா நடிக்காம நேரத்துக்கு தின்னுட்டு போயி படு…” என்று கூறியே எழுந்தவள் தான் உண்ட தட்டை கழுவி கொண்டு வந்து சாப்பாட்டை போட்டு செல்லத்தாயின் முன் நீட்டினாள்.

அவரும் முகத்தை தன் புடவை முந்தியால் துடைத்து கொண்டே இயலினியை பார்த்து முகத்தை ஒரு வெட்டு வெட்டி விட்டே தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்.

அவர் சாப்பிட ஆரம்பித்த பிறகே வீட்டின் உள்ளே ஓரம்மாக நிமிர்த்தி வைக்க பட்டு இருந்த கயித்து கட்டிலை எடுத்து கொண்டு வெளியே வந்தவள் வீட்டு வாசலில் கட்டிலை போட்டு விட்டு போர்வை தலையணையை எடுத்து வந்து போர்வையை விரித்து போட்டு விட்டு தலையணையை வைத்து வானம் பார்த்து படுத்தாள்.

அழகான வானம்… கருநீலமான வானில் வெண்ணிற பருத்தியை தூவியது போல் நச்சத்திரங்கள் மின்னி கொண்டு இருக்க அதன் நடுவில் அழகாக பிறை நிலா இயலினியை பார்த்து நாணும் இருக்கேன் என்னையும் இரசியேன் என்று புன்னகைக்க அதனை பார்க்கவே இயலினிக்கு இரண்டு கண்கள் பத்த வில்லை… போர்வை ஒன்றை எடுத்து மார்பு வரைக்கும் போர்த்தி கொண்டு ஒரு கரத்தை தன் சிரத்தின் கீழ் வைத்து சில வினாடிகள் அதனை பார்த்த படியே இமைகள் மூட அடுத்த நிமிஷம்மே தூங்கி விட்டாள்.

செல்லத்தாயி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வந்து தன் பேத்தியை பார்க்க அவள் நன்கு உறங்கி இருந்தாள்… அவளை பார்க்க பார்க்க செல்லத்தாயிக்கு அளவே இல்லாத அளவுக்கு பாசம் தான் எப்போதும் பெருகும்… இப்போதும் பெருகி கொண்டு தான் இருக்கு… அவரின் உயிரே இயலினி தான்.

மெல்ல தன் பேத்தியின் கட்டில் அருகே பாய் விரித்து தலை மாட்டில் தண்ணீர் சொம்பை வைத்து மூடி விட்டு படுத்தார்.

செல்லத்தாயிக்கு இயலினியின் அறிவான பேச்சியில் பெருமையாக இருந்தது தான்… தன் வளர்ப்பு என்ற கர்வமும் மேலோங்கியது தான்… கூடவே அவளின் குணத்தால் ஏதேனும் பிரட்ச்சனை தன் பேத்திக்கு வந்து விடும்மோ என்ற பயமும் இல்லாமல் இல்லை… ஆனால் எல்லாத்தையும் விட அதிகம்மாக அவளின் வாழ்க்கையும் எதிர்காலத்தையும் நினைத்து அதிகம்மாக கவலையும் கொண்டார்.

ஆகையால் இமைகள் மூடி படுத்தவர், “ஏப்பா முருகய்யா… என் பேத்திக்கு எந்த ஆபத்தும் வராம நீ தான் ப்பா துணை நிக்கணும்… அவளுக்கு எல்லா வகையிலும் துணையா இருக்குற மாதிரி ஒரு பையன்ன அவ கிட்ட அனுப்பு… அப்படி உன்னால என் பேத்திக்கு ஏத்த மாதிரி பையன்ன அனுப்ப முடியலன்னா நீயே வேணாம் வந்து விடு…” என்றே வேண்டி கொண்டு உறங்கினார்.

பார்ப்போம் முருகய்யா மாப்பிள்ளைய அனுப்புறாரா இல்ல அவரே வருகின்றாரா என்று.

10 thoughts on “அரளிப்பூ 1”

  1. Avatar

    அந்த தேர்வு பணத்தில் சுயதொழில் சிந்தனை நிஜமாவே சூப்பர் ஐடியா!!!… சூப்பர் எபி!!… எழுத்து பிழை மட்டும் செக் செஞ்சு போடுங்க!!..

  2. CRVS2797

    இயலினி… பேருலயே பாசிடிவ் எனர்ஜி வைச்சிட்டிருக்கிறவ..
    அப்படி இருக்கும்பொழுது
    அந்த முருகனே வரமாட்டானா
    என்ன ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *