ஏனோ இயலினியை அசிங்க படுத்தி விட்டு அவளின் மனது காயம்படும் படியாகவே சதாசிவம் இவ்வளவு தூரம் பேசி விட்டு சென்ற பிறகு தான் இயலினிக்கு இன்னும் அதிகமாக பசிப்பது போல் இருந்தது… ஆகையால் அவரிடம் எதிர்த்து பேசி விட்டு வீட்டின் உள்ளே சென்றவள் பாதி சாப்பாடு வரை சாப்பிட்டு விட்டு எழுந்த அந்த இலையிலேயே மீண்டும் அமர்ந்தாள்.
அவளின் பின்னாடியே வந்த செல்லத்தாயி தன் பேத்திய கவலையுடனே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்க, “இப்ப என்ன நான் செத்தா போயிட்டேன்? எதுக்கு இப்படி அழுத முகரையா என் முன்னாடி நிக்கிற? இத என்ன நானா போட்டுக்கணுமா?” என்று இயலினி கறி குழம்பை தட்டி கேட்ட வேகத்தில், “ஏன் டி இப்படி எல்லாம் பேசுற?” என்று கூறிய அவரும் அமர்ந்து கொண்டு கலங்கிய கண்களுடன் பேத்திக்கு கறியை எடுத்து எடுத்து இலையில் வைத்தார்.
அவர் கண்ணீரை எல்லாம் பார்க்க வில்லை… அவள் அதற்கு மேல் எதையும் பார்க்க விரும்பவும் மில்லை… வேக வேகமாக சாப்பிட்டாள்… அவளுக்கு இன்னும் இன்னும் பசி எடுப்பது போலவே இருக்க முழு மூச்சியாக சாப்பிடுவதிலே கவனம் கொண்டவள் போல் உண்டாள்… அவளுக்கு கோவம் வந்து விட்டலே இப்படி தான்… எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்கவே அடங்காது.
எலும்பை எடுத்து ராஜ்கிரண் பாணியில் கடவாய் பல்லில் வைத்து கடித்து எடுத்து கையில் பிடித்து கொண்டே நிமிர்ந்தவள் கண்ணில் செல்லத்தாயின் கண்ணீர் தெரிய, “ஏய்… கிழவி… இப்படி என் முன்னாடி கண்ணுல இருந்து தண்ணீயா விட்டு கிட்டே இருக்கியே… இதுக்கு நீ பேசாம அந்த ஆள நாலு சாத்தாவது சாத்த வேண்டியது தானே…” என்று கேட்டு மீண்டும் கையில் இருந்த எலும்பை கடித்தாள்.
என்ன தான் தன் பேத்திக்கு ஆதரவாக பேசி கொண்டு பேத்திக்காக நின்றாலும் அவரும் அந்த காலத்து பாட்டி தானே… அவரால் எப்படி தன் மருமகனையே தாக்க இயலும்? அடிக்க இயலும்? அந்த அளவிற்கு அவர் இன்னும் வளர வில்லையே… முந்தியால் தன் கண்ணீரை துடைத்து கொண்டே, “இயலு… உன் அப்பன்ன விடு ஆத்தா… அவன் எப்பவுமே இப்படி தானே… எதையாவது புரிஞ்சு கிட்டு எதையாவது பேசிரவன் தானே… விடு ஆத்தா…” என்றார்.
அதைக் கேட்டாலும் அவர் எப்பவுமே அப்படி தான் என்று அவளால் விட்டு விட இயல வில்லை… என்ன எப்பொழுதுமே அப்படி தான்? கொஞ்சம் கூட அறிவு இல்ல… கொஞ்சம் கூட மூளை இல்ல… என்னைக்குமே அவருடைய இரத்தத்த நம்பவே மாட்டாரா? என்றே அவளின் மனம் கொதித்தது.
காரி துப்பாத குறையாகவே இதற்கு முன் வாயில் வைத்த எலும்பை சுக்கு நூறாக உடைத்து தள்ளி அந்த எலும்பின் உள்ளே இருந்ததை உரிந்து எடுத்து விட்டு எலும்பை தூக்கி போட்டு விட்டே, “நான் ஒன்னும் அந்த ஆளோட மானத்தையும் கௌரவத்தையும் கெடுக்கல… அந்த ஆளு தான் என் மானத்தையும் என் கௌரவத்தையும் கெடுக்கிறாப்ல… ஆமாம்… அந்த ஆளுக்கு கொஞ்சம் கூட வெக்கம்மே இல்லையா? அதான் அந்த ஆளு யாரோ நான் யாரோன்னு பஞ்சாயத்துலையே வச்சி அத்து விட்டாச்சில… அப்புறம் என்ன ****க்கு மறுபடி மறுபடி என்னைய தேடி வராப்பல? இனி அந்த ஆளோட கௌரவம் எல்லாம் அவர் ஒன்ன பெத்து வச்சி இருக்கிறாரே அவருடைய பையன் அவனோடையே நிறுத்திக்கட்டும்… இதுக்கு மேல எதையாவது சொல்லி கிட்டு என் வீட்டு வாசல்ல வந்து நின்னா… அதுக்கு அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது…” என்றே கூறி கொண்டு அவளாகவே குண்டானில் இருந்து கறியை எடுத்து போட்டு கொண்டாள்.
அவளின் அருகே உட்கார்ந்து இருந்த விசாலமும், “அடியே… அவர் எதையோ கண்ணுல பார்த்துட்டதால தானே டி இப்படி கேட்டாரு… இல்லாட்டின்னா…” என்று வாயை திறக்கும் போதே
“இல்லாட்டின்னா… இல்லாட்டின்னா என்ன? அப்படியே என்னைய மெச்சி கிளிச்சடுவாரோ… சும்மா ஒண்ணுத்துக்கும் உதவாத மானத்தையும் கௌரவத்தையும் புடிச்சி கிட்டு தொங்குற அந்த ஆளுக்காக எல்லாம் என் கிட்ட வந்து பேசாத… பேசினா அப்புறம் நான் அத்தை சொத்தைன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்…” என்று இயலினி சாப்பாட்டை உள்ளே தள்ளி கொண்டே பேசினாள்.
விசாலமும், “ம்ச்சே… கூறு கெட்டவ மாதிரி எதையாவது பேசாத…” என்றவரை வெறித்தே பார்த்து
“உன்னைய மாதிரி உன் நொண்ணன் செஞ்ச எல்லாத்தையும் மறந்துட்டு அந்த ஆளுக்காக வெக்கங்கெட்டு போயி பேசுறவ நான் இல்ல… நீ பேசுறன்னா எங்கையாவது போயி எவ கிட்டையாவது பேசு… என் கிட்ட வந்து பேசாத… நான் உன்னைய மாதிரி ரோஷம் கெட்டவ இல்ல…” என்றே இயலினி கூறி இலையில் உள்ள அனைத்தையும் தனது வலது கரத்தால் வலித்து எடுத்து உண்டு முடித்து விட்டே இலையை எடுத்து கொண்டு எழ சென்றாள்.
உடனே விசாலாம் அவளின் கரத்தை பிடித்து, “ஏய்… ஏய்… எழும் போதே இலைய எடுக்க கூடாது டி… வச்சிட்டு போ… நான் சாப்பிட்டு எடுத்துக்குறேன்…” என்று கூற இயலினியும் இலையை வைத்து விட்டே வீட்டின் பின் பக்கம் கை கழுவ சென்றாள்.
செல்லும் பேத்தியையே விழிகளில் நீருடன் பார்த்து கொண்டு இருந்த செல்லத்தாயின் கரத்தை பிடித்த விசாலம், “விடு அத்தை… அவர பத்தி தான் தெரியும்ல…” என்று கூற
“அடி போடி… என் பேத்தி எம்புட்டு உடைஞ்சி போயிட்டான்னு எனக்கு தான் டி தெரியும்… ஆவுன்னா என் பேத்திய அடிக்க அடிக்க கை ஓங்குறாரே… அவர் பண்ணுன பாவத்துக்கு பண்ணுற தப்புக்கு எல்லாம் யாரு அவர அடிக்கிறது?” என்றே செல்லத்தாயி கேட்க
“விடு அத்தை… அவ வர மாதிரி இருக்கு… நீயும் நாலு வாயி சாப்பிடு… அப்போ தான் உன் பேத்தி அமைதியாகுவா… இல்லாட்டி அவ இதுக்கும் சேர்த்து வச்சி குதிப்பா…” என்றே விசாலம் கூற அவரும் இலையை போட்டு தனது இலைக்கு எடுத்து வைத்தார்.
உண்மையில் செல்லத்தாயி சாப்பிட உட்கார்ந்து இருக்க மாட்டார்… அதற்காக அவரை திட்டி தீர்க்க வேண்டும் என்றே தான் அவளும் கை கழுவிய வேகத்தில் வந்தாள்… ஆனால் அதற்குள்ளவே அவர் சாப்பிட அமர்ந்ததை கண்டதும் தப்பிச்சிட்ட என்றே முணு முணுத்து கொண்டு அருகிலே பாய் ஒன்றை விரித்து போட்டு தலையணையை போட்டு படுத்து விட்டாள்.
விழிகளை மூடியதும் கரத்தை வைத்து முகத்தை மறைத்து கொண்டாள்… அவளால் நடந்த எதையும் மறக்க இயல வில்லை… அவர் பெத்த பெண் தானே நான்… என்னை ஏன் இப்படி பாடாக படுத்துகிறார்? என் மீது கொஞ்சம் கூட கழிவு இரக்கம் கூட இருக்காதா? நான் என்ன இப்படி எல்லாம் தப்பு செய்ய கூடவளா? என்றே நொந்து கொண்டவளுக்கு கண்ணீர் கூட வர மறுத்தது.
ஆனால் வேதனையாக அவளுக்கு இருந்தது… நெஞ்சம் எல்லாம் ஏதோ மிளகாய் தூள் தூவியது போலவே எரிந்தது… அப்படியே படுத்து இருந்தவளை இரு பெண்மணிகளும் வலிகள் நிறைந்து தான் பார்த்தனர்.
செல்லத்தாயிக்கு ஒரு வாய் சோறு கூட இறங்க வில்லை… அவர் அப்படியே இயலினியை பார்த்து பார்த்தே கண்ணீர் விடுவதை பார்த்த விசாலம் செல்லத்தாயை பார்த்து கண்ணசைத்து விட்டே, “ஆமாம் இயலு… நான் ஒன்னு கேக்கவா?” என்று இழுத்தே பேச்சை ஆரம்பித்தார்.
இமைகள் மூடி இருந்த இயலும் அப்படியே இருந்து கொண்டு, “உன் நொண்ணன பத்தின பேச்சா இல்லன்னா எதுவா இருந்தாலும் கேளு…” என்றாள்.
விசாலமும் கறியை வாயில் போட்டு அதக்கி கொண்டே, “இவ ஒருத்தி… எப்ப பார்த்தாலும் அதையே பேசுவேன்னா? நான் கேட்க வந்ததே வேற…” என்று கூற
இயலினியும், “ம்… அப்ப கேளு…” என்றாள்.
விசாலமும் சிறிது எச்சரிக்கையாகவே இயலினியை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டு, “ஆமாம்… நீ சொன்னியே உண்மையா?” என்றார்.
புரியாமல் இயலினி, “எத சொல்லுற?” என்று கேட்க செல்லத்தாயும் அதே கேள்வியுடன் தான் விசாலத்தை பார்த்தார்.
அவரோ ஆர்வம்மாக, “அதான் புள்ள… நீ ஒருத்தன கட்டிக்க போறதா சொன்னியே… என் அண்ணன் கூட நீ ஒருத்தன் கைய பிடிச்சி கிட்டு சுத்துனனு சொன்னதுக்கு அந்த பையன்ன தான் நீ கட்டிக்க போறதா சொன்னியே… அது உண்மையா?” என்று கேட்டதும் செல்லத்தாயி தன் கண்ணீரை வேக வேகம்மாக முந்தியால் துடைத்து கொண்டு இயலினியின் முகத்தை பார்த்தார்.
விசாலம் இவ்வாறு கேட்ட பின்பே தான் இயலினிக்கு இப்படி ஒன்றை அவள் கூறியதே அவளுக்கு நினைவு வந்தது… கூடவே, “போலீஸ் பொறுக்கி… கொஞ்சம் கூட ஒழுக்கம்மே இல்லாதவன்… அத்தனை பேர் முன்னாடி கைய பிடிச்சி இழுத்துக்கிட்டு நிக்கிறான் நாயி…” என்று மனதிலே அவனை திட்டியவளுக்கு, “அப்போ தனியா யாரும் பாக்காதப்ப உன் கைய பிடிச்சி இழுத்தா ஓக்கே வா…” என்ற அவனின் குரலில் திடுக்கிட்டு படுக்கையை விட்டே எழுந்து விட்டாள்.
எழுந்து சுத்தி முத்தி பார்த்த பிறகே, “ச்சே… அவன் எப்படி இங்க வந்து இப்படி பேசுவான்? சொல்ல முடியாது பொறுக்கி பேசினாலும் பேசுவான் தான்…” என்றே மீண்டும் படுக்கையில் விழுந்து இமைகளை மூடிய விழிகள் முன் அவனே நிற்பது போல் இருக்க, “ம்ச்சே…” சிறு சலிப்புடனே இமைகளை திறந்து கொண்டு திரும்பி படுத்தாள்.
அவள் திரும்பி படுத்த பிறகே தன்னையே வெறித்து பார்த்து கொண்டு இருந்த இருவரை கண்டு, “என்ன?” என்று கேட்க விசாலமும், “ம்ம்… அந்த பையன் யாருன்னு கேட்டேன்…” என்றார்.
ஏன்டா இவங்கள பார்த்து திரும்பினோம் என்றே மீண்டும் விட்டத்தை பார்த்த படி படுத்து கொண்டு, “யாருக்கு தெரியும்… என் செயின்ன அடிச்சவன்ன நான் அடிச்சேன்… அதுக்கு என்னைய கேள்வி கேட்டும் அந்த திருடன் மேல கம்ப்ளைண்ட் தர சொல்லியும் அவன் வந்து கேட்டான்…” என்றதும்மே
செல்லத்தாயி பதட்டம்மாக, “வேணாம் புள்ள இயலு… போலீஸ் ஸ்டேசன் எல்லாம் நமக்கு வேணாம் புள்ள…” என்றார்.
அவ்வாறு செல்லத்தாயி கூறியதும் இயலினியும், “அத தான் நான் அவன் கிட்ட சொல்லி வாக்குவாதம் ஆச்சி… அப்போ தான் என் கைய அவன் பிடிச்சி கிட்டு போலீஸ் ஸ்டேசன் வா… அது இதுன்னு சொல்லி கிட்டு இருந்தான்…” என்று நடந்ததை அப்படியே கூறினாள்.
அதை கேட்டதும் செல்லத்தாயிக்கு தான் அடுத்து போலீஸ் பிரட்ச்சனை வர போகுதோ என்று பயம் வந்தது… ஆனால் விசாலம்மோ நன்றாக சோத்து உருண்டையை உருட்டிய படி, “பேசாம அந்த போலீஸ்காரனே வம்பா செஞ்சி கிட்டு இருக்குறவளுக்கு வூட்டுக்காரன்னா ஆகிட்டா இவ இழுக்குற பிரட்ச்சனைய எல்லாம் அவன் சரி பண்ணுவான்…” என்றே கூறி உருட்டிய உருண்டையை வாயில் போட்டு கொண்டார்.
Ena tha appa vena sonalum oru appa ponna ippadi santhega patu pesa kudathu thana
இப்படியும் சிலர் இருக்க தான் செய்றாங்க சிஸ்
இந்த விசாலம் அத்தை, தன் சொத்தை வாயை வைச்சிட்டு சும்மாவே இருக்க மாட்டாங்களோ…???
இருந்துட்டா அது விசால அத்தை இல்லையே சிஸ்
Good epi
Spr going