Skip to content
Home » அரளிப்பூ 11

அரளிப்பூ 11

அந்த போலீஸ்காரனே இயலினிக்கு வூட்டக்காரனா ஆகிட்டா என்று விசாலம் கூறியதும்மே இயலினிக்கு அவரை எட்டி உதைத்தால் என்ன? என்றே தோன்ற அதை செயல்படுத்தவே இமைகளை திறந்தாள்… ஆனால் என்ன? இவள் இது போல் ஏதேனும் செய்தாலும் செய்வாள் என்று முன்பே அறிந்தவராக அவளை விட்டு தள்ளியே அமர்ந்து இருந்தார் விசாலாம்.

முகம் இறுகி இமைகள் திறந்த இயலினியை பார்த்த விசாலமும், “என் கிட்டையேவா? பார்த்தியா நான் தப்பிச்சிட்டேன்…” என்பது போல் பல்லை காட்ட அவளும், “ஓகோ… அப்போ முன்னெச்சரிக்கையா தள்ளி உட்கார்ந்து கொண்டே தான் நீ இந்த வேலையை பார்த்து இருக்கிற… ம்ம்… இரு டி ஐத்தை உனக்கு இருக்கு…” என்றே அருகில் இருந்து சொம்பை எடுத்து அவரை நோக்கி எறிய அவரோ ஒரு நொடியில் குனிந்து தன் தலையை காப்பாத்தி கொண்டவர்

“அடியே வீணா போனவளே… கறிய போடுறேன்னு கூப்புட்டு வச்சி என்னைய போட்டு தள்ள பார்க்குறியா டி… உன்னைய எல்லாம்… இன்னைக்கு உன்னைய அடக்குன மாதிரி போலீஸ்காரனா வந்தா தான் டி உன்னைய எல்லாம் அடக்க முடியும்… இல்லாட்டி இப்படி தான் யார் தலைய உடைக்கலாம்ன்னு கங்கணம் கட்டி கிட்டு கிடப்ப… ஏய்… கிழவி இவளுக்கு செல்லம் குடுத்து குடுத்து நீ தான் இவள நல்லா கெடுத்தே வச்சி இருக்க…” என்று தப்பிச்சோம் ன்டா என்றே பதட்டத்தில் இயலினியுடன் சேர்த்து செல்லத்தாயையும் திட்டி கொண்டே தட்டில் இன்னம் இரண்டு கரண்டி கறியை எடுத்து போட்டு கொண்டு வீட்டு வாசல் வரைக்கும் ஓடாத குறையாக போனவர்

ஏதோ யோசனையுடன் திரும்பி, “ஏன் டி கூறு கெட்டவளே? அந்த போலீஸ்காரன் பார்க்க எப்படி டி இருப்பான்? நல்லா அழவா இருப்பான்னா?” என்று வாயில் இருந்து இன்னம் சனிபகவான் இறங்காத குறையாக கேட்டு வைத்தார்.

அவளும் லேசு பட்டவள் இல்லை என்பது போலவே, “ம்ம்ம்… உன் மொவன்ன விட நல்லா அழவா தான் இருந்தான்…” என்றவளை ஏகத்திற்கும் முறைத்தே, “எடுபட்ட சிறுக்கி… என் மொவன விட சீமையிலையே இல்லாத அழகனையா டி பார்த்து புட்ட… ஏய் கிழவி இதுக்கு மேல நான் இந்த ஊட்டு பக்கமே வர மாட்டேன்… இதுக்கு மேலையாவது உன் பேத்திய வாயை அடக்கி வைக்க சொல்லு… இன்னொரு தடவை என் மொவன இந்த மாதிரி ஏதாவது என் கிட்ட இழுத்து வச்சி பேசட்டும் அப்ப இருக்கு… அவளுக்கு…”  என்று ஆவேசம்மாக கூறியே அவர் வீட்டு திண்ணைக்கு சென்று விட்டார் தட்டுடன்னே.

அவர் அவ்வாறு கூறி சென்றதை எல்லாம் செல்லத்தாயி கண்டு கொள்ளவில்லை… ஆனால் இயலினிக்கு உள்ளுக்குள்ளே ஒரு வித சிரிப்பு தான்… இது போல் எத்தனையோ முறை விசாலம் கூறி விட்டு சென்றிருக்கிறார் தான்… கூடவே இரண்டு நாளில் மீண்டும் இங்கு வந்து இது போல் ஏதேனும் பேசி வாங்கி கட்டிக்க கூடியவர் தான்… ஆகையால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இயலினி நமட்டு சிரிப்புடன் மீண்டும் இமைகளை மூடினாள்.

செல்லத்தாயி தான் தன் பேத்தியின் முக மாறுதலை கண்டதும் சிறிது ஆர்வமாக, “இயலு கண்ணு… அந்தப் பையன் உன் ஐத்தை மவனோட நல்லா இருப்பானா?” என்று கேட்க

இயலினியோ எதுவும் பேசாமல், “ம்ச்சே…” என்றே திரும்பி படுத்து கொண்டாள்… தன் பேத்தியின் முகத்தை பார்த்த செல்லத்தாயிக்கு தான் ஏதோ ஒரு விதமான எண்ணம் தோன்றியது… ஒருவேளை அந்த பையன நம்ப பொண்ணும் பார்த்து இருப்பாலோ? என்று.

உடனே, “இல்ல இல்ல இப்படி எல்லாம் நம்ம யோசிக்க கூடாது… என் பேத்தி அப்படி எல்லாம் பசங்கள கவனிக்க மாட்டா… எதுவா இருந்தாலும் நான் தான் ஒருத்தன பிடிச்சி அவன் கையில இவள ஒப்படைக்கணும்… இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் இவ சரிப்பட்டு வரவலா இருந்தா… இந்நேரம் வயித்துல ஒன்னும் கையில ஒன்னுமா தூக்கி கிட்டு திரிய மாட்டா…” என்றே மனதில் நினைத்து கொண்டு தனக்கு தெரிந்த வயதானவர்கள் இடம் எல்லாம் தனக்கு ஒரு பேத்தி இருப்பதை ஏற்கனவே கூறி வைத்து கொண்டு இருந்ததை இன்னமே தீவிரம்மாக கூறி மாப்பிள்ளை தேட வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

செல்லத்தாயி இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்க இமைகள் மூடியிருந்த இயலினிக்கு இவர்கள் அந்த போலீஸ்காரனை பற்றியே பேச பேச அவளின் தந்தை பேசிய வார்த்தைகளை எல்லாம் மறந்து அவனைப் பத்தின உருவம் விழிகள் முன் வந்தது.

“ம்… மாநிறம்மா இருந்தாலும் ஆறடி ஆண்மகன் தான்… முறுக்கிய மீசை பறந்து விரிந்த மார்பு பார்க்க நல்லா தான் இருக்கிறான்…” என்று நினைக்கும் போதே தன் மனதின் குரங்கை தட்டி வைத்து, “ஆமான் டி… நீ இருக்கிற இருப்புக்கு உனக்கு இது ஒன்னு தான் கேடு?” என்றே தன் மனகுரங்கை கட்டி வைத்து விட்டு உறங்கி போனாள்.

இவள் இங்க எப்போதும் போல் மதியம் உண்டு முடித்து விட்டு உறங்கி அடுத்த தனது வேலைகளை எல்லாம் செய்து முடித்து இரவும் மதியம் வைத்ததில் மீதி இருக்கும் கறி குழம்பை இரவே பத்து இட்லிக்கு வைத்து உண்டு முடித்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க பாவம் இவளை கண்டு சென்ற இளமாறன் தான் வயதின் வீரியத்தில் பாவம் உறக்கம் இன்றி தவித்துக் கொண்டிருந்தான்.

இளமாறன் ஏழ்மையும் அல்ல… அதேபோல் பணக்காரனும் அல்ல… மீடியமான வாழ்க்கையை சேர்ந்தவன்… வீட்டின் ஒரே மகனான அவனுக்கு என்று இருக்கும் சொத்து என்றால் அவனின் தந்தை மட்டும் தான்… ரிட்டையர்டு கான்ஸ்டபிள் ஆன அவனின் தந்தை காதலித்து கரம் பிடித்த காரணத்தால் உறவுகள் அனைத்தையும் விட்டுவிட்டு தனித்து வாழ்ந்தவர்.

மகன் பிறக்கும் போதே காதல் மனைவி இறந்துவிட உறவுகள் ஒவ்வொருவராக மீண்டும் இணைந்து கொண்டு அவருக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை அமைத்து தர நினைத்தாலும் தன்மகன் ஒன்றே தனக்கு போதும் என்று தன் மகனுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியவர்.

அவனுக்காக அவர் சேர்த்த சொத்துகளில் முக்கியம்மானவை எந்த பாவமும் செய்யாமல் நேர்மையாக இருந்து அதையே தன் மகனும் போதித்தது… அடுத்து தன் மகனை அரசு பள்ளியில் அரசு கல்லூரியில் நன்முறையில் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து அவனை தன்னை விட உயர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தது… அதன் இடையே சிறுக சிறுக தனது சம்பள பணத்தை எல்லாம் குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்து கட்டி வைத்த ஒரு மாடி வீடு… அவருக்காக ஒரு காயிலாங்கடைக்கு போக இருப்பது போன்ற ஒரு பைக்க தன் மகனுக்காக பார்த்து பார்த்து வாங்கிய யமஹா பைக்.

அவ்வளவு தான் இளமாறனின் மொத்த சொத்தும்.

மாறன் எப்போதும் மாடியில் தான் படுப்பான்… மாடி வீடு என்றால் கீழே இரண்டு அறை சமையல் அறை அவ்வளவே… மாடியில் எறியதும் ஒரு அறை… அந்த அறையை கடந்து சென்றால் அந்த மாடி முழுக்க வானம் பார்த்த மாடியாக தான் இருக்கும்.

மாறன் எப்போதும் கட்டிலை போட்டு கொண்டு வானில் உள்ள நட்சத்திரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் படுப்பான்.

ஏனெனில் சிறு வயதில் அவனின் தந்தை, “அம்மா அங்க தான் நட்சத்திரமா போயி இருக்காங்க…” என்று அவனை அவர் மார்பில் போட்டு கொண்டு கூறிய கதைகளை கேட்டு உறங்கியவன்… ஆகையால் அவன் எப்போதும் தன் அம்மாவோடு தினமும் மனதால் பேசி கொண்டே அவனையும் மீறி அசந்த பிறகு தான் உறங்குவான்.

இன்றும் வானம் பார்த்து படுத்து இருந்த மாறனின் மனம், “அம்மா… நான் பேசுறத கேட்குற தானே… இல்ல அதுக்குள்ள தூங்கிட்டியா… ச்சே… ச்சே… என் கிட்ட பேசாம நீ என்னைக்கு தூங்கி இருக்க… நீ தூங்கல தானே…” என்று கேட்டு சிறிது நேரம் அமைதிக்கு பின் அவனின் அம்மா பதில் தந்தாரோ என்னம்மோ அவனாகவே, “ம்… அதான் எனக்கே தெரியுமே என் அம்மா என் கிட்ட பேசாம தூங்க மாட்டாங்கன்னு… என் செல்லம்மா… நான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டியா?” என்று கேட்டான்.

சிறிது நேரம் கடக்க நினைவு வந்தவன்னாக, “ம்மா… உனக்கு ஒன்னு தெரியும்மா? இன்னைக்கு உன் மகன் அடிவாங்கி கிட்டு வந்து உன் முன்னாடி இருக்கான் ம்மா… அந்த அடி எனக்கு எப்படி வலிச்சது தெரியும்மா? இருந்தாலும் நான் அசராம அப்படியே நின்னேன் ம்மா… கண்டிப்பா அது மட்டும் ஒரு பையன்னா இருந்தால் அவன அடிச்சி முட்டிக்கு முட்டிய பேத்து எடுத்து இருப்பேன்… ஆனால் என்ன பண்ண? பொண்ணா போயிட்டா… அதனால தான் நான் அவள எதுவும் பண்ணல…” என்றவனின் பார்வையில் அதுவரை தெரிந்த நட்சத்திரம் சிறிது மின்னியது.

அதை கண்டதும், “ம்… பார்த்தியா… கேட்டதும் உனக்கே எவ்வளவு கோவம் வருதுன்னு… இருந்தாலும் அவ மேல கோவ படாதிங்க ம்மா… ஏன்னா அவள் கொஞ்சம்… இல்ல… இல்ல… நல்லாவே வீரம்மான பொண்ணு தான் ம்மா… ஹாங்… அவ எப்படி இருப்பா தெரியும்மா? ஹாங்… ஹாங்… ஆஆங்… அதோ உன் பக்கத்துல இருக்குல நிலா… அந்த மாதிரியே பார்க்க இருப்பா ம்மா… அம்மா… அம்மா… அப்படியே அவ முகத்த பார்த்து மட்டும் ஏமாந்துடாத ம்மா… அவள் சரியாந்தர விஷகன்னி…” என்று அவளை பற்றிய புகாராக இளமாறன் கூறி கொண்டு இருந்தான்.

சரியாக அந்த நேரம் வானில் உள்ள நட்சத்திரங்கள் அவளை பார்க்க தலையணையில் முகம் புதைத்து உறங்கி கொண்டு இருந்த இயலினிக்கு அவனின் எண்ணங்கள் அங்கு கேட்டதோ அல்லது அவனின் அம்மாவான நட்சத்திரம் இங்கு தன் மகன் குற்றம் சாட்டி கொண்டு இருந்த பெண்ணை பார்த்தாரோ என்னம்மோ உறக்கத்திலே அவளுக்கு இருமல் வர அருகே இருந்த பாட்டி செல்லத்தாயி பேத்திக்கு தண்ணீர் தந்து உறங்க வைத்தாள்.

அந்த நேரம் திருட்டுத்தனமாக ஒரு உருவம் இயலினி இருக்கும் கட்டிலின் அருகே வந்தது… போர்வையை தலையோடு போர்த்தி இருந்த உருவம் தன்னை யாராவது பார்க்கின்றனரா? என்று சுற்றி முற்றி பார்த்து விட்டு இயலினியின் நோக்கி குனிந்தது.

5 thoughts on “அரளிப்பூ 11”

  1. Avatar

    அய்யய்யோ..! யாருன்னு தெரியலையே. ஒருவேளை அவங்கப்பனோ..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *