Skip to content
Home » அரளிப்பூ 17

அரளிப்பூ 17

இயலினியின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வின் மதிப்பு எண்ணோ ஆயிரத்து நூற்றியென்பது என்று இருக்க அந்த ஊர் மக்கள் எல்லாம் மயங்கி விழாத குறை தான்… சதாசிவத்திற்கு இம்முறை தன் மகள் இவ்வளவு மதிப்பெண் எடுத்ததில் பெருமையாக தான் இருந்தது… ஆனாலும் அவளின் முன் இறங்கி போக அவருக்கு மனம்மில்லை.

வீடு கட்டுவதற்காக பதினைந்து வயதிலே தனி ரேஷன் கார்டு இருந்தால் தான் அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைக்கும் என்று இயலினி ரேஷன் கார்டை பற்றியே அப்போது தான் கவனித்தாள்… அப்படி கவனித்ததில் தான் அவளுக்கே தெரிந்தது எப்போது இயலினி தனியாக தங்க ஆரம்பித்தாலோ அப்போதோ அவளின் சந்தையான சதாசிவம் அவராகவே அவரின் ரேஷன் கார்டில் இருந்து இயலினியின் பெயரை நீக்கி விட்டார் என்பதை.

அதை பார்த்த போது அவள் ஒரு பார்வை ஒரே ஒரு பார்வை சதாசிவத்தை பார்த்து விட்டு போனாள்… அந்த பார்வை இப்போதும் சதாசிவத்தின் விழிகளின் முன் வந்து போனது.

ஏனோ இயலினியின் அன்றைய பார்வை இதுக்கு மேல என் கிட்ட சொந்தம் உரிமை கிரிமைன்னு சொல்லி கிட்டு வந்துடாத என்பது போலவே தான் இருந்தது.

அவரும், “இத்துனோண்டு பெருமையும் பாராட்டையும் தந்துட்டு அதுக்கப்புறம் ஊர் முன்ன நிக்க வச்சி அசிங்க படுத்துவா… அன்னைக்கு பண்ணலையா? அதுக்கு நான் அவள தலைமுழுகுனது முழுகுனதாவே இருக்கலாம்…” என்றே அவர் எப்போது எல்லாம் இயலினியை பார்த்து நல்ல விதம்மாக யோசிக்க நினைத்தாலும் பஞ்சாயத்தில் தான் நின்றதே நினைவு வர அதை நினைத்து நினைத்தே அவளை அப்படியே விட்டு விடுவார்.

அதற்கு ஏற்ப இயலினியும் அடுத்த வம்பு சண்டையை இழுத்து வந்து வைத்து விட தான் நினைத்தது தான் சரி என்றே இயலினியை ஒதுக்கி வைத்தது வைத்ததே என்று இருந்து விட்டார் சதாசிவம்.

அன்று இயலினியின் மதிப்பெண்ணை கண்டதும் சதாசிவத்தின் முகத்தில் திடீரென வந்து சென்ற கர்வத்தை கண்டு கொண்ட சாந்தா எப்படியாவது தங்களின் மகளை தங்களுடன் சேர்த்து கொள்ள வேண்டும்… என் மகள் என் கூட இருக்கணும் பழைய மாதிரி என்றே நினைத்த சாந்தா, “சின்ன பிள்ளையில எப்படி அம்மா… அம்மா… சாந்துன்னு எல்லாம் செல்லம் கொஞ்சி கிட்டே என் முந்திய பிடிச்சிக்கிட்டு வருவாளோ அப்படி இனி வரணும்…” என்று மகளுக்காக ஏங்கிய அன்னை தன் கணவரின் மனதை மாற்ற சரியான சந்தர்ப்பத்தை பார்த்து கொண்டு இருந்தார்.

இயலினி நல்ல மதிப்பெண் பெற்றதால் அவளுக்கு பாராட்டு விழா நடத்த இருந்தார்கள் பள்ளியில்… அப்போதும் அனைவரின் முன்பும் இயலினியிடம் அப்பா அம்மாவை பத்தி கேட்பார்கள்… கண்டிப்பாக அவள் இறங்கி வர மாட்டேன் என்று எதிரா ஏதாவது பேசுவா… அப்படி பேசலன்னாலும் தலை குனிந்து எல்லார் முன்னாடியும் நிக்கணும் அவளுக்கு கஷ்டம் தான்… இவைகளை எல்லாம் வைத்து இன்னும் இன்னும் என்று தான் நம்ப புள்ளைய இவர் வெறுப்பார்… அதுக்கு முன்னாடி அவரிடம் எப்படியாவது பேசி அவரை சமாதானம் படுத்தனும் என்று முடிவெடுத்தார் இயலினியின் அம்மா சாந்தா.

ஆகையால் சிறிது தயங்கி தயங்கியே, “என்னங்க… நம்ம பொண்ணு மேல எந்த தப்பும் இருக்காதுன்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்குங்க… நம்ம கொஞ்சம் நம்ப மகள மன்னிச்சி நம்ம கூடவே சேத்துக்கலாங்க… இன்னைக்கு கூட அவ பள்ளிக்கூடத்துல…” என்று ஆரம்பிக்கும் போதே அவரின் முன் கையை நீட்டி தடுத்து, “எப்போ வேணாம்ன்னு ஒதுக்குனேன்னோ… அதுல இருந்த ஒதுக்குனது ஒதுக்குனது தான்…” என்றே கூறி சென்று விட்டார்.

என்ன தான் இயலினி நல்ல பேரை வாங்கினாலும் அவள் வாங்கிய கெட்ட பெயர் தான் அவளின் தந்தை சதாசிவத்தின் எண்ணத்தில் இன்று வரை முன்னதாக வந்தது… ஆகையால் இயலினியை ஏற்று கொள்ள அவரால் இயல வில்லை.

தன் மகள் தவறு செய்ய வில்லை என்பதையே அவர் மனம் இன்னமும் ஏற்றுக் கொள்ள வில்லை… இதில் எங்கு இருந்து அவளை ஏற்று கொள்வார்? தலை முழுகிய மகள் ஒதுக்கிய மகளாகவே மாறி போனாள் இன்று வரை.

அந்த பாராட்டு விழாவில் தான் இயலினி அவளின் படிப்புக்கு முற்று புள்ளி வைத்து விட்டு நிரந்தர விவசாயியாக மாறிப்போனாள்.

அப்போதில் இருந்தே காரப்பட்டியில் இருக்கும் அனைவருமே இயலினியின் மீது வெறுப்பும் கோவமும் கூடவே எப்போ என்ன செய்வாளோ என்றே பயம் கொள்ள தான் ஆரம்பித்தனர்… அதே நேரம் அவர்களுக்கு அவர்கள் செய்த தவறு எல்லாம் உரைக்க வில்லை… அவர்கள் உணரவும் இல்லை.

இவைகளை எல்லாம் நினைத்து கொண்டு படுத்து இருந்த செல்லத்தாயிக்கு இரவு தூங்கா இரவாகி போனது… அவரின் மனம் எல்லாம் தனது பேத்தியை எப்படியாவது ஓரு நல்லவன் கையில் ஒப்படைத்து விட்டு கண்ணை மூட வேண்டும் என்றே தான் யோசித்து கொண்டு இருந்தார்… இயலினியோ தலையணையில் முகம் புதைத்து கண்ணீர் விட்டால் தான்… ஆனால் சிறிது நேரத்திலே உறங்கி போனாள்… பாவம் சாந்தா தான் தரையில் அப்படியே அமர்ந்து விடிய விடிய கண்ணீர் விட்டு கொண்டு இருந்து விடிந்த பின்னரே அக்கம் பக்கம் நடம்மாட ஆரம்பிக்கும் நேரம் கிளம்பினார். 

காரப்பட்டியில் அரளிப்பூ இந்த நிலையில் இருக்க இளமாறனின் ஊரிலோ இளமாறன் எப்போதும் போல் தென்றலுடன் விளையாடி கொண்டு இருந்தான்… விடியும் முன்பே உறக்கத்தில் இருந்து எழுந்து அவனின் ஊரை சுற்றி வர ஆரம்பித்தான்… அதாவது ஜாக்கிங் போக ஆரம்பித்து விட்டான்.

விடிவதற்கு முன்பே ஊரை சுற்ற ஆரம்பித்து மூன்று முறை அந்த ஊரையே சுற்றியும் வந்து விடுவான் விடியும் போது எல்லாம் வீட்டிற்கு… சுற்றி வந்து வியர்வை வடிய வடிய வீட்டின் உள்ளே ஆறு மணிக்கு எல்லாம் நுழைய அவனின் அப்பா மகனை வாஞ்சையுடன் பார்த்தே அவனின் முன் பூந்துண்டினை நீட்டினார்.

அதை வாங்கி முகத்தை துடைத்து கொண்டே, “அப்பா நானே வந்து எடுத்துக்குவேன்… நீங்க ஏன் அப்பா இந்த வேலைய எல்லாம் செய்றீங்க?” என்று கூறிக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தவன் போட்டு இருந்த டி-ஷர்டை கழட்டி கொண்டே வீட்டின் பின் புறம் சென்று பக்கெட் ஒன்றில் போட்டு விட்டு உள்ளே வந்தான்.

சரியாக இளமாறன் வீட்டின் உள்ளே வர அவனின் தந்தை பசுபதி சுடச்சுட காபியை எடுத்து வந்து தன் மகனின் முன் நீட்டினார்.

“என்ன தான் செய்யாதீங்க செய்யாதீங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்க… என் பேச்சியே கேட்க கூடாதுன்னு செய்ற உங்கள எல்லாம் என்ன தான் ப்பா பண்ண?” என்று கேட்ட படியே அவர் கரத்தில் இருந்த காபியை வாங்கி கொண்டு பேன்னை போட்டு கொண்டு இருக்கையில் அமர்ந்தான்.

அவரும் மகனின் முன் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டே, “இந்த வேலைய எல்லாம் உனக்கு நான் பண்ண கூடாதுன்னா இந்த வேலைய எல்லாம் உனக்காக செய்ய ஒரு பொண்ண கூட்டி கிட்டு வந்தா மட்டும் தான் நான் நிறுத்துவேன்…” என்றார்.

அவர் கூறியதை சிறிது புருவத்தை சுருக்கியே பார்த்தவன், “என்ன கந்தசாமி மாமா வந்தாரா?” என்று கேட்க

பசுபதியும், “மாமா இல்ல… அக்கா வந்தா… எப்ப தான் சித்தப்பா என் தம்பி தலையில ஒருத்திய கட்டி வச்சி நீங்க ரிட்டையர்டு ஆகுவீங்கன்னு கேட்டா… எனக்கும் பாப்பா கேட்டதுக்கு அப்பறம் தான் ஆமாம்ல இத்தனை நாள் தான் வீட்டுல பெண்களே இல்ல… இப்போ உனக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ண நம்ப வீட்டுக்கு கூட்டி கிட்டு வந்தா என்னன்னு தோனுது… நீ என்ன தம்பி சொல்லுற? பொண்ணு பார்க்கவா?” என்று கேட்டார்.

அவர் இவ்வாறு கேட்டதும் இளமாறனின் விழிகளின் முன் தானாக அவனின் விஷகன்னி தான் வந்து போனாள்… அதில் தானாக அவனின் இதழில் புன்னகை வந்து அமர்ந்தது… அதை கண்ட பசுபதிக்கு மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நேரம் வந்து விட்டது என்று நினைத்தார்… கூடவே மகனின் புன்னகையில், “உன் மனசுல எந்த பொண்ணாவது இருக்கா தம்பி?” என்று கேட்டு மகனின் முகத்தை ஆராய்ந்தார்.

அவனும் தன் தந்தையின் முகத்தை பார்த்தே, “இன்னைய வரைக்கும் அப்படி யாரும் இல்ல அப்பா… அதனால நீங்க பாருங்க… ஆனால் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு…” என்றான்.

அவரும் அப்போ நம்ப தான் பொண்ணு பார்க்கனும்… என் மகனுக்கு பிடிச்ச மாதிரி பொண்ண பார்க்கணும் என்றே நினைத்து கொண்டு, “ம்… சொல்லு… உனக்கு எப்படி பொண்ணு வேணுமோ சொல்லு… அப்பா முடிஞ்ச அளவுக்கு தேடி கட்டி வைக்கிறேன்…” என்றார்.

இளமாறனும் மலர்ந்த முகம்மாகவே தன் தந்தையின் கரத்தை பிடித்து கொண்டு அவரின் அருகே அமர்ந்து, “அப்பா உங்களுக்கு நான்னா உயிர்… அதனால தான் நான் என்ன தான் எனக்காக எதையும் செய்யாதிங்கன்னு சொன்னாலும் செய்றீங்க… ஆனால் வர பொண்ணு கிட்ட இத எல்லாம் நானோ நீங்களோ எதிர் பார்க்குறது தப்பு ப்பா… எனக்கு வர பொண்ணு உங்கள மாதிரி என்னைய மாதிரி இந்த வீட்டுல சுதந்திரம்மா இருக்கணும்… அவளுக்கு பிடிச்சத எல்லாம் செய்யணும்… ஒரு அப்பாவா நீங்க அவளுக்கு தேவைய செய்யணும்… ஒரு காதலன்னா கணவன்னா நான் அவளுக்கு தேவையானத எல்லாம் எதையும் எதிர் பார்க்காய செய்யணும்…” என்றதும் பசுமதியின் முகத்தில் என் மகன் இவன் என்ற கர்வ புன்னகை அவரையும் மீறி வந்தது.

அவரின் மனதில் ஒரு தாய் தந்தையாய் தான் வளர்த்த வளர்ப்பு சரியாக இருக்கின்றது என்ற பெருமையுடன் தன் மகனின் கரத்தை தட்டி தந்தார் அப்படியே இருப்போம் என்று.

இளமாறனுக்கும் தெரியும் தன் தந்தைக்கு யாரையும் கஷ்ட படுத்துவது பிறர் இடம் இருந்து எதையும் எதிர் பார்ப்பது எல்லாம் பிடிக்காது என்று… இருந்தும் எங்கு தன்னை மட்டுமே உலகம்மாக வளர்த்து விட்ட தன் தாயுமான தந்தையவர் தனக்கு என்று வரும் பெண்ணிடம் ஏதாவது அதிகம் எதிர் பார்த்து விடுவாரோ என்று பயம் வந்தது.

அதனால் தான் முன்பே அவன் மனதில் இருப்பதையும் தன் எதிர் பார்ப்பையும் கூற ஆரம்பித்தவன் தன் கரத்தை தன் தந்தை தட்டி தந்ததும் இன்னும் உற்சாகமாக, “நம்ப இரண்டு பேரையும்மே விரும்பி உங்க கிட்ட உரிமையா அவளா ஒரு மகனா நான் நடந்துக்குற மாதிரி மகளா அவ நடந்துக்கணும்… அதே மாதிரி அவளா என் கிட்ட என்னைய காதலிச்சி நெருக்கணும் எனக்கானத செய்யணும்… அதனால நான் எனக்கு வர போற பொண்ணு இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்ன்னு எதையும் நினைக்கல… எதிர் பார்க்கவும் இல்லை… அதே மாதிரி நீங்களும் நினைக்காதிங்க… எதையும் எதிர் பார்க்காதிங்க… நம்ப இரண்டு பேரையும் கடைசி வரைக்கும் சகிச்சிக்கிட்டு நம்ப கூடவே என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் இருக்கின்ற மாதிரியான ஒரு பொண்ண நீங்களே பாருங்க… அந்த பொண்ண நான் கட்டிக்கிறேன்…” என்றான்.

பசுபதிக்கு தன் மகன் கூறியது எல்லாம் மனம் நெகிழ்வாக தான் இருந்தது… இருந்தாலும் நல்ல பெண்ணாக தன் மகனுக்கு பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டார்.

6 thoughts on “அரளிப்பூ 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *