Skip to content
Home » அரளிப்பூ 19

அரளிப்பூ 19

“ஏற்கனவே கீழ் ஜாதி பையனோட பழக்கப்பட்டு பேர கெட்டு போச்சி… இப்ப ஊர்ல உள்ள எல்லார் கிட்டையும் வம்பு வளர்த்து வாயாடின்னு வேற பேர் வாங்கி கிட்டு இருக்கா… இப்பையே எவன் தலையிலாவது கட்டுனா தான் உண்டு… அதுவும் அவன் கொஞ்சம் வக்கத்து போயி இருந்தா இல்லன்னா ஏதாவது அவனுக்கு குறை இருந்தா தான் இவள மாதிரியான பொண்ண எல்லாம் கட்டுவான்…”

“பாரு… ஆம்பள கணக்கா வேலை செய்றா… உண்மையிலையே இவளுக்கு மட்டும் பார்க்குற மாதிரி அளவா உடம்புல இல்லன்னா மட்டும் இவ எல்லாம் பொண்ணு தானானே சந்தேகம் வந்துடும்… பாரு ஆம்பள புள்ளைய எல்லாம் அடிக்கிறா… பெரியவங்கள எல்லாம் மரியாதையே இல்லாம பேசுறா… தலைவர்களையே உள்ள தூக்கி வச்சி இருக்கா… வயசும் தலைக்கு மேல ஏறி போயிகிட்டே இருக்குது… அத்தோட இவள எல்லாம் மருமகளா வீட்டுல வச்சிக்கிட்டு எந்த மாமியா குப்ப கொட்டுவா? போன ரெண்டாவது நாளே மாமியாக்காரி இவ புடதியிலையே தட்டி கழுத்த புடிச்சி வீட்ட விட்டு வெளிய தள்ளிட மாட்டா?”

“இதுல இவ ஜாதகம்மே சரியில்லையாம்… எங்க போனாலும் அந்த குடும்ப மானத்தை வாங்கி விட்டு விடுவாளாம்… அந்த அளவுக்கு இராசி கெட்டவலாம் இவ… அதனால தான் பெத்த அப்பனே இந்த புள்ளைய வீட்டை விட்டு ஒதுக்கி வச்சி இருக்காருன்னு வேற ஒரு இரகசிய பேச்சி ஓடுது…”

இவ்வாறு எல்லாம் கடந்த ஏழு வருடம்மாக இயலினியை பத்திய பேச்சிகள் தான் ஊர் முழுக்க ஓடுகிறது… என்ன? இது போன்ற பேச்சிகள் எதுவும் இயலினியின் முன் வராது… ஆனால் அவள் காதுகளில் விழும் தான்… ஆனால் அவள் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை… அதே நேரம் செல்லத்தாயால் இதை எல்லாம் தாங்கவே முடியாது… உடனே வரிஞ்சிக்கட்டி கொண்டு சொன்னவர்களிடம் சண்டைக்கு சென்று விடுவார்.

இப்படி எல்லாம் போயி கொண்டே இப்போது இயலினிக்கு இருவத்தி மூன்று வயது முடிய போகுது… இப்போதே பேத்திக்கு கல்யாணம் பண்ணி வச்சி விடுவோம்… தான் நல்லா இருக்கும் பொழுதே தன் பேத்திக்கு நல்ல வாழ்வு அமைத்துக் கொடுத்து அவள் வாழ்வு சீரும் சிறப்புமாக செல்வதை கண் குளிர கண்டு விட்டால் தான் தனது ஆத்மா சாந்தியடையும் என்று தான் இயலினியை நீ கல்யாணத்துக்கு சம்மதிக்க வில்லை என்றால் நான் செத்து போயிடுவேன் என்று மிரட்டினார்.

செல்லத்தாயி இவ்வாறு கூறியதும் இயலினிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது… முன்பு எல்லாம் இது போல் அவரின் காரியத்தை சாதிக்க கூறி இருந்தால் உடனே, “வேணும்ன்னா நானே மருந்து வாங்கி தரவா? இல்ல உன்னைய தொங்க விட்டு விடுவா?” என்று கூறி அவரின் வாயை அடைத்து விடுவாள்.

ஆனால் இப்போது சில மாதங்களாகவே அவருக்கு அவ்வப்போது மூச்சி திணறல் வருகிறது… கூடவே வயிறு வலி கை கால் வலி என்று எல்லாம் உடம்பு சரியில்லாமல் படுத்து கொள்கிறார்… அவரை மருத்துவமனையும் அழைத்து சென்று பரிசோதித்து விட்டாள்.

அவர்கள் என்ன கூறுகிறார்கள்? அவருக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறது அல்லவா… ஆகையால் அவருக்கு இது போன்ற வலிகள் எல்லாம் வருவது இயல்பு தான்… கை கால் முட்டிகளில் உள்ள எலும்பு சவ்வு எல்லாமே தேய்மானம் ஆகி விட்டது… அதனால் இனி இது போல் ஒவ்வொன்றாக அவர் உடம்புக்கு ஆகும் தான் என்றே கூறி விட்டனர்.

இதற்கே இயலினிக்கு மனம் பாரம்மாகி போனது… எங்கு இந்த கிழவியும் தன்னைய தனியாக விட்டுட்டு போயிடும்மோ என்று… ஆனால் அவரோ அதே உயிரை வைத்தே தான் இல்லா விட்டாலும் தன் பேத்திக்கு துணையை அமைத்து தந்தே தீருவேன் என்று மிரட்டி விட்டார் பேத்தியை.

அவளும், “சரி… சரி… ஏதோ பண்ணு… இதுக்கு மேல என்னைய விட்டு போயிடுவேன்… இந்த உலகத்தை விட்டுட்டு போயிடுவேன்… அது இதுன்னு சொல்லி எல்லாம் என் கிட்ட உன் காரியத்த சாதிக்க பாக்காத… அப்படி மட்டும் ஏதாவது பண்ணுன அப்புறம் உண்மையாலுமே நானே என் கையால உன்னைய அனுப்பி வச்சிருவேன்… சீக்கிரம் வந்து உட்காரு… நான் படுக்கணும்…” என்று கூற

அவ்வளவு தான் செல்லத்தாயின் முகம் முழுவதும் புன்னகையாக மாறி பற்களை இருபுற காது வரைக்கும் இளித்து காட்டி கொண்டே, “அப்படி சொல்லுடி என் ராசாத்தி…” என்றே வந்து அமர்ந்தவர் தன் பேத்தியின் தலையை தன் மடியில் வைத்து கூந்தலை கோதி தந்தார்.

இயலினியும், “ஆனாலும் கிழவி உனக்கு சரியான கொழுப்பு தான்… என்னையே எப்படி எல்லாம் சொல்லி மிரட்டுற… சரி… சரி… எவன பார்த்தாலும் எனக்கும் கொஞ்சம் புடிக்கிற மாதிரி பாரு… இல்லாட்டி முத ராத்திரி நைட்டே ரூம்ம விட்டு ஓடி வந்துருவேன்…” என்றவள் கன்னத்தை கிள்ளி வைத்தே வாய் விட்டு சிரித்தார்.

இயலினி அறிய வில்லை… அவர் மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்று பார்த்து பேசி கல்யாண தேதியையே குறித்து விட்டு தான் வந்து பேத்தியின் சம்மத்தை வாங்கி உள்ளார் என்று.

இங்கு இயலினிக்கு திருமண தேதி குறிக்க பட்டு விட இளமாறன் தனது காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்தான்… அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாம் இளமாறனை பார்த்ததும் சல்யூட் அடித்து வணங்கினர்.

இளமாறனும் தலையசைத்து கொண்டே உள்ளே செல்ல அப்போது ஒருவர் வந்து, “சார்… உங்கள நம்ப ஏரியா எம்எல்ஏ வர சொன்னாரு…” என்றார்.

இளமாறனின் பின்னாடியே வந்த கந்தசாமி சிறிது சலிப்பாகவே, “சார்… நம்ம யாருக்கு வேலை பார்க்க ஸ்டேசன் வரோம்ன்னே நமக்கு தெரியல சார்…” என்றார்.

இளமாறனும் கந்தசாமியை பார்வையாலையே அடக்கி விட்டு, “சரி… நான் போயி பார்க்கிறேன்… நீங்க உங்க வேலைய பாருங்க…” என்று கூறியவன் அவனின் அறையின் உள்ளே சென்று சில பல வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஒரு திருட்டு கேஸ் ஒரு ஆக்சிடென்ட் கேஸ் எல்லாத்தையும் விசாரித்து கேஸ் பைல் பண்ணி விட்டு சிலரை சென்று விசாரிக்கும் படி கான்ஸ்டபிள் ஒருவருக்கு வேலை தந்து விட்டு இன்னும் சிலருக்கு சில வேலைகள் தந்து மதிய உணவு சாப்பிட்டு முடித்து விட்டே காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்து அவனின் பைக்கில் ஏறினான்.

அவனின் பின்னாடியே வந்த கந்தசாமியும், “ம்… இன்னைக்கு அவர பார்க்க எவ்வளவு நேரம் காக்க வைக்க போறாரோ?” என்று புலம்பிக் கொண்டே இளமாறனின் பின்னாடி ஏறினார்.

இளமாறனும் பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டே, “விடு மாமா… அதான் மதிய சாப்பாடு சாப்பிட்டோம் இல்ல… நேராக அங்க போவோம்… போன உடனே அவர பார்க்க முடிஞ்சா பாப்போம்… இல்லாட்டினா அப்படியே உக்காந்து கிட்டே தூங்குவோம்… நம்ப ஆயுதத்த எடுத்து கிட்டல…” என்றதும்

“அவரு வர சொன்னாருன்னு சொன்னதுமே நான் எடுத்து வச்சுக்கிட்டேன் மாப்பிள்ளை… பாரு…” என்று கூறியே கந்தசாமி கூலிங் கிளாஸ் எடுத்து வந்ததை விழிகளில் மாட்டிக் கொள்ள இளமாறனும் மாட்டி கொண்டே பைக்கினை எம்எல்ஏ அலுவலகத்தை நோக்கி செலுத்தினான்.

அங்கு சென்றதும் பைக்கை நிறுத்தி விட்டு, “யோவ் மாமா… போன தெடவ நம்ப நாலு மணி நேரம் வெயிட் பண்ண வச்சாரு… இந்த தெடவ குறைஞ்சது மூனு மணி நேரம்மாவது வெயிட் பண்ண வச்சாலும் சந்தேக பட இல்ல… அதனால போன எல்லாம் சைலண்ட்ல போட்டுக்கோ… கூடவே போன தெடவ மாதிரி குறட்டை எல்லாம் விட்டுறாத… அப்பறம்…” என்று ஏதோ கூற இளமாறன் ஆரம்பித்தான்.

உடனே கந்தசாமி தனது தொடையை தேய்த்து கொண்டே, “டேய் மாப்ள… வேணாம் டா… நீ உன் மாமன்ன எங்க வேணும்ன்னாலும் கிள்ளுடா… ஆனால் அங்க மட்டும் கிள்ளிடாதடா… உன் அக்கா வேற இங்க எப்படி காயம் வந்ததுன்னு கேட்டே என்னை சந்தேகமா பாக்குற டா…” என்றவரை பார்த்து விஷமம்மாகவே சிரித்து, “அப்ப நீ தான் மாமா குறைட்டை விடாம தூங்கணும்…” என்று கூறியே அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர்.

நுழையும் போதே கந்தசாமி, “மாப்ள… எதுக்குடா இந்த அரசியல்வாதிகள் எல்லாம் போலீஸ்காரன பாக்கணும்னு சொல்லி நினைச்ச நேரத்துல எல்லாம் வர சொல்லுறாங்க? நமக்கு எல்லாம் அரசாங்கம் தானே சம்பளம் கொடுத்து மக்களுக்கு நம்பள வேலை செய்ய சொல்லுது… அப்பறம் ஏன் டா இவனுங்க கண்டதையும் நம்பள செய்ய சொல்லி நம்ப தலையில உட்கார்ந்து இருக்குறானுங்க? அதான் இவனுங்களுக்கு வேலை செய்யனும்ன்னு தனியாவே போலீஸ்ச உக்கார வச்சி இருக்காங்களே… அது பத்தாதா டா… இப்படி மக்களுக்குன்னு இருக்கிறவங்களையும் வர சொல்லுறானுங்க…” என்று புலம்பி கொண்டே தான் கந்தசாமி வர இளமாறனுக்கும் அதே மனநிலை தான்.

இருவரும் வந்ததும் தாங்கள் வந்து இருப்பதை கூறி விட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.

கந்தசாமியும், “சரி மாப்ள… எப்படியோ உட்கார்ந்து செட்டில் ஆகிட்டோம்… ஒரு தூக்கத்த போடுவோம்…” என்றே இமைகளை மூடி கொள்ள இளமாறனும் எப்படியும் நம்பள அவர வர சொல்லி பார்க்க இன்னம் ஒரு மூனு மணி நேரம்மாவது ஆகும் என்றே நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

ஆனால் இம்முறை அவர்களை பொய்யாக்குவது போலவே இளமாறன் வந்து விட்டதாக தகவல் போனதும் அவரின் தனியறையில் இருந்த எம்எல்ஏவும் அந்த அறைக்கே இளமாறனை வர சொன்னார்.

“தலைவர் வர சொன்னார்… வாங்க சார்…” என்று ஒருவர் வந்து கூறியதும் இருவருக்கும்மே அதிர்ச்சி தான்… “ஆஹா தூக்கம் போச்சே… இவனுங்க என்ன டா பண்ணுறாங்க? நம்ப ஒன்னு நினைச்சா இவங்க ஒன்னு நினைக்கிறாங்க… ஆக மொத்தம் நம்ப நம்ப வேலையே பார்க்க கூடாது போல…” என்றே இருவரும் எழுந்து அழைத்தவர் பின்னாடியே சென்று கொண்டு இருக்கும் போதே

கந்தசாமி, “என்னடா மாப்பிள்ளை நடக்குது? ஏதாவது பிராடுத்தனம் கினம் பண்ணி மாட்டிக்கிட்டாரா? அத மறைக்கிறதுக்கு தான் நம்மள வர சொல்லுறாரா டா…” என்று இளமாறனின் காதினை கடித்தார்.

அந்த எண்ணம் இளமாறனின் மனதிலும் இருந்தது தான்… ஆனால் அதை வெளியே காட்டி கொள்ளாமல் தன் மாமனை முறைத்தே, “யோவ்… ஒழுங்கா வாய மூடிக்கிட்டு வாயா… நீ பேசுனது மட்டும் எவன் காதுலையாவது விழுந்தது அவ்வளவு தான்… நம்ம வேலைய புடுங்கிட்டு ஜட்டியோட எங்கேயாவது உட்கார வைத்து கொன்னு புதைச்சிடுவாங்க… கம்முனு இரு…” என்று அவரின் காதில் மட்டும் விழும்படி கூறிய படியே சென்று எம்எல்ஏவின் முன் நின்றனர்.

6 thoughts on “அரளிப்பூ 19”

  1. CRVS2797

    அட.. அப்ப இயலினிக்கு பார்த்த மாப்பிள்ளை யாருன்னு சொல்லப் போறிங்களா இல்லையா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *