Skip to content
Home » அரளிப்பூ 2

அரளிப்பூ 2

அதிகாலை ஆதவன் எப்போதும் போல் தனது கடமையை செய்வதற்காக பூமியை நோக்கி வருகை தர ஆரம்பித்த நேரத்தில் எல்லாம் இயலினி தனது உறக்கத்தை கலைத்து எழுந்து இருந்தாள்.

ஆமாம் இயலினி எப்பொழுதும் அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து விட கூடியவள்… அதற்காக எல்லாம் எழுந்ததும் வீட்டை எல்லாம் சுத்தம் செய்து விட்டு வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு என்று எல்லாம் செய்ய கூடியவள் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்… இவள் இந்த இரக பெண் இல்லை… வேறு இரகம்.

எதிர் வீட்டில் இருக்கும் பெண்மணி வாசலில் தண்ணீர் பக்கெட்டுடன் அமர்ந்து கொண்டு, “ம்க்கூம்… எந்த நேரத்துல பொண்ண பெத்து வளர்த்து வச்சாலோ… வந்த அன்னையில இருந்து வாசல் தெளித்து கூட கோலம் போட மாட்டேங்குறா சரியான நேரத்துல… இப்படி இருந்தா வீடு விலங்கிடும்… ம்க்கூம்…” என்று காலை விடிவதற்குள்ளவே சுப்ரபாதம் அந்த வீட்டு மாமியார் பாட ஆரம்பித்து விடுவார்.

ஏனோ அந்த சத்தம் கேட்க கேட்க தான் இன்னும் இதமாக இருக்குமோ என்னமோ தெரிய வில்லை அந்த வீட்டு மருமகளுக்கு… அவள் இன்னும் ஒரு குட்டி தூக்கத்தை போட்டு விட்டு ஆறு மணிக்கே வந்து வீட்டு வாசலை பெருக்கி கோலம் போடுவாள்.

ஆனால் பாவம் அந்த சுப்ரபாதம் மருமகள் செவியில் விழுகிறதோ இல்லையோ நம்ப நாயகி இயலினியின் செவியில் விழுந்து அவள் ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து விட்டு அந்த மாமியாரை அவரின் மருமகள் திட்டுவதற்கு பதிலாக இவள், “ஏன் டி அத்தை… உன் மகள கட்டி குடுத்தியே அவ எத்தனை மணிக்கு எழுறான்னு விசாரிச்சியா இல்லையா? உன் மகளா இருந்து ஒன்பதுக்கு எழுந்தா கூட தப்பு இல்ல… வந்தவளா இருந்தா எதிர்த்த வீட்டு புள்ளையா இருந்தால் போதும்மே… நல்லா உன் நொல்ல கண்ணுக்குள்ள விளக்கெண்ணைய ஊத்தி வச்சிக்கிட்டு பேசுவ… கூறு கெட்டவ… இவ தான் உன் ஊட்டுக்கு வந்தவ… என்னைக்கா இருந்தாலும் வந்தவ தான் உன் கடைசி காலத்துல கஞ்சி ஊத்தணும் இது எல்லாம் நினைப்பே இருக்காதா?” என்றே காலையிலே இயலினி திட்டி தீர்த்து கொண்டே படுக்கையை சுருட்டி கொண்டு உள்ளே செல்லுவாள்.

சில நேரத்தில் எல்லாம், “நான் மட்டும் உன் மருமகளா வந்தேன் நீ பேசுற பேச்சிக்கு எல்லாம் உன் முதுகு எலும்ப பொல பொலன்னு உதிர்த்து மாலையா கோர்த்து போட்டுக்குவேன்… அப்படியே இடுப்பையும் உடைச்சி போட தான் ஆசை… ஆனால் என்ன பண்ண? அப்படி மட்டும் உடைச்சு போட்டுட்டா உன்னைய அப்படியே வீட்டு திண்ணையிலையே குந்த வச்சி கிட்டு உன் இந்த கீச்சி கீச்சி குரல இருவத்தினாலு மணி நேரமும் கேட்டு தொலைக்கணும்… அந்த ஒரே காரணத்தால வேணும்ன்னா உன்னைய விட்டு வைப்பேன்…” என்ற சின்ன தம்பி சுகன்யா அளவுக்கு பேசி மனோகரம்மா டையலாக்கை கூட அந்த அத்தையை பேச விட மாட்டாள்… அதையும் சேர்த்தே இவள் பேசி கொள்வாள்.

இவளின் திட்டு முணு முணுப்பாக வந்தாலும் நன்றாக விழுந்த பிறகே அந்த அத்தை விசாலமும், “பேச்ச பாரு… போற இடத்துல நல்லா வாங்குவ டி கழுதை… அப்ப தெரியும்…” என்று கூறி முகத்தை ஒரு வெட்டு வெட்டியே அவரும் அங்கு இருந்து கிளம்பி விடுவார்.

இப்படி தான் தினமும் காலை பொழுதே இயலினிக்கு விடியும்… அப்படியே நம்பளும் வில்லங்கம்மாகவும் வம்பாவும்மே திரியிற நம்ப ஆளு ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து அப்படி என்ன தான் பண்ணுறான்னு பார்த்து விட்டு வந்து விடுவோம்.

நம்ப இயலினி வாய் எவ்வளவுக்கு எவ்வளவு ஆடுகிறாளோ அதை விட அதிகமாக உழைப்பாளியும் கூட.

காலையில் ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்ததும் எக்ஸ்எல் ஒன்றில் ஏறி கொண்டு ஏரிக்கரை ரோட்டில் செல்வாள்… ரோட்டில் ஐந்து நிமிடம் சென்றால் அங்கு வலது பக்கம் ஒரு களம் இருக்கும்… அந்தக் காலத்தில் தனது எக்ஸ்எல்லை நிறுத்தி விட்டு… அங்கு இருக்கும் வரப்பில் நடந்து ஐந்து நிமிடம் உள்ளே சென்றால் அங்கு கொட்டாய் இருக்கு… அதனை சுற்றி பூசண மரம் நான்கு இருக்கு… அங்கு வந்ததும் மோட்டார் போட்டு தண்ணீரை ஒரு தொட்டியில் நிரப்பி கொண்டே கொட்டாயில் கட்ட பட்டு இவள் வந்ததும், “ம்மா… ம்மா…” என்றே கத்தி கொண்டு இருக்கும் மாடுகளை பிடித்து கொண்டு வெளியே வந்து மரத்தில் கட்டி போட்டு அதற்கு தண்ணீர் காட்டி பால் கரப்பாள்.

பாலினை கேனில் பத்திர படுத்தி விட்டு… சாணி எல்லாம் அள்ளி ஒரு இடத்தில் குமுட்டாக கொட்டி வைத்து கொட்டாயை சுத்தம் செய்து விட்டு ஒரு குளியலை போட்டு விடுவாள்… எப்போதும் பச்சைத்தண்ணீரில் தான் குளிப்பாள்… சுடு தண்ணீர் எல்லாம் அவள் பயன்படுத்துவதே கிடையாது… குளித்து முடித்து இரண்டு கரங்களிலும் ஒவ்வொரு பால் கேனினை இருமுறை எடுத்து வந்து வைத்து அதனை பைக்கின் பின் பெரிதாக கட்டி வைத்து இருக்கும் பாக்ஸில் வைத்து கட்டி கொண்டு கிளம்புவாள்.

அடாவடியான விவசாயி… அவள் இந்த வேலையை தேர்வு செய்த போது அவள் பண்ணிய பிரட்ச்சனை எல்லாம் மிகவும் பெரியது… அது கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்… இப்போது அவளின் வேலைகளில் ஒன்று காலையில் ஏழு மணிக்கு மாலை ஐந்தரைக்கு எல்லாம் நாப்பது நாப்பது லிட்டர் இரு நேரமும் பால் ஊற்றி விடும் வேலை செய்கின்றாள்.

குளித்து முடித்து பிரஷ்சாக காலை பால் ஊற்றி விட்டு வரும் இயலினி தன் பாட்டி செல்லத்தின் கையால் காய்ச்சிய ஒரு சொம்பு பாலினை வஞ்சனை இன்றி குடித்து விட்டு, “செல்லம்… நல்லா கார சாரம்மா கறி சமைக்க தேவையான சாமான் எல்லாம் அரச்சி வையி… நான் டவுனுக்கு போயி மாட்டுக்கு தீவனமும் கவுச்சையும் வாங்கி கிட்டு வறேன்… மூட்டு வலி தையலமும் வாங்கி கிட்டு வறேன்… உனக்கு வேற ஏதாவது வேணுமா?” என்று கேட்க

பாலினை தந்து விட்டு சென்ற செல்லத்தாயும் உள்ளே சமையல் கட்டில் இருந்து கொண்டே, “அடியே… இயலு… எத்தனை தெடவை சொல்லி இருக்கேன்… எங்கையாவது நின்னுக்கிட்டு கூப்பாடு போடாம என் பக்கத்துல வந்து பேசுனு… அத விட்டுட்டு அங்கையே நின்னு கிட்டு எதுக்கு டி கத்துற? முதல் இங்க என் கிட்ட வா… என் காது வேற சரியா கேக்கல…” என்றே அழைக்க

“எல்லாம் நல்லா கேட்டாலும் கிழவி கேட்கலன்னே சொல்லும்… இப்ப உள்ள கூப்பிட்டதுக்கும் ஏதாவது ஒரு காரணம் வச்சிருக்கும்… அதை சொல்றதுக்கு தான் இப்படி தனியா கூப்பிடுது… ம்ச்சே… கிளம்பும் போது தான் இப்படி கிட்ட வா… கிட்ட வான்னே கூப்பிடும்…” என்று முணு முணுத்து கொண்டே வந்தாள்.

வந்தவளை அருகே இழுத்து ஆள் இல்லாத வீட்டில் யாரேனும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து விட்டே, “அடியே இயலு… செலவு எல்லாம் நிறைய பண்ணாத டி… பணத்த எல்லாம் சேர்த்து வச்சு நகை நட்டு வாங்கி வையிடி… உன் கல்யாணத்துக்கு ஆகும்…” என்றவரை ஏற இறங்க பார்த்து விட்டே தன் கரத்தை பிடித்து இருந்த அவரின் கரத்தை எடுத்து விட்டு விலகியவள் செம்பு குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு குடித்து முடித்து விட்டு வாயை துடைத்த படியே

“இப்ப நான் இருக்கிற நிலைமைக்கு அது ஒன்னு தான் கொறச்சலா இருக்கு… போவியா நீ…” என்று கூறியே சுருக்கு பை போன்ற பர்ஸ் ஒன்றை எடுத்து தன் பாவடையில் சொருகி கொண்டு தாவணியின் முந்தியை எடுத்து அதை மறைப்பது போலவே இடுப்பில் சொருகி கொண்டு கட்டை பையை எடுத்து கொண்டு வெளியேறினாள்.

வெளியே வந்து பைக்கில் ஏறியதும் எதிர் வீட்டு விசால அத்தையும் அவரின் வீட்டு வாசலில் வந்து நின்றே இயலினியை பார்ப்பதும் முகத்தை திருப்புவதும்மாக இருக்க இயலும் ஒரு நமட்டு சிரிப்புடன்னே பைக்கில் ஏறி திருப்பி கொண்டு வந்து அவரின் முன் வண்டியை நிறுத்த அவரும் முகத்தை ஒரு வெட்டு வெட்டியே தனது ஜாக்கெட்டின் உள் இருந்து ஒரு குட்டி பர்ஸ்சை எடுத்து அதில் இருந்து ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி, “வரப்ப அந்த வருக்கி கொஞ்சம் வாங்கிட்டு வா… நீ வாங்கிட்டு வர வருக்கி கொஞ்சம் நல்லா இருக்கு… அதான் இந்த வெக்கங்கெட்டவ எவ்வளவு நீ திட்டுனாலும் சண்டை போட்டாலும் வந்து நிக்கிதேன்… மிச்ச காச நீ வாங்கி கிட்டு வரதுக்கு வச்சிக்க…” என்றே மிடுக்காக கூற

“ம்… எதே… நான் வாங்கி கிட்டு வர வருக்கிக்கு இந்த ஐம்பது ரூபா போதும் இதுல நீ எனக்கு மிச்சம் வேற தரியா… ம்… நீ எல்லாம் நல்லா வருவ… சரி… சரி… வாங்கி கிட்டு வந்து தொலையிறேன்… மதியம் உன் ஊட்டுல சாப்பிட்டுடாத… கிழவி ஏதோ ஆக்குதாம்… உன்னைய சாப்பிட வர சொல்லி என்னைய சொல்லிட்டு போவ சொன்னுது… சரி வாரேன் நேரம் ஆயிடுச்சு…” என்று கூறியே சென்று விட்டாள்.

இது தான் இயலினி… வாய்க்கு வந்ததை எல்லாம் திருமணமாகி வந்த புதியிலேயே மருமகளிடம் விசாலம் பேசி வாங்கி கட்டி கொண்டு ஒட்டு திண்ணையில் உட்கார வைத்து விட்டாள் மருமகள்… அப்போதும் வாய் ஓயாமல் திண்ணையில் அமர்ந்து கொண்டு மருமகளை கரித்து கொட்டி கொண்டு இருப்பது அவரின் வழக்கமாகி போயி விட்டது… என்ன ஆரம்பத்தில் கத்தி கத்தி மருமகளிடம் சண்டை போட்டவர் எங்கு திண்ணையும் பறி போயி விடும்மோ என்ற பயத்தில் இப்போது கீச் குரலில் சண்டை போடுவதாக போட்டு மனசை தேத்தி கொண்டு உள்ளார் அன்றாட கூலி வேலை சென்று சம்பாதித்து வயிற்றைக் கழுவும் விசாலம்.

இயலினிக்கும் அவரின் நிலமை புரிந்து ஒரு முறை தனிமையில், “ஏன் அத்தை அங்க இருந்து கஷ்ட படுற? என் கூட வந்து தங்கிக்க வேண்டியது தான்னே… நாணும் கிழவியும் தான்னே இருக்கோம்…” என்று அழைக்க

அவரும், “ஒட்டு திண்ணையா இருந்தாலும் என் மொவன் வீட்டுல இருக்குறது தான் எனக்கு மரியாதை போடி போக்கத்தவள…” என்றே கூறி விட அன்று ஆரம்பம்மானது இருவரின் முக திருப்பலும் சண்டையும்.

அந்த விசாலம் வேறு யாரும் மில்லை… இயலினியின் அப்பாவின் தங்கை… சொந்த அத்தை.

12 thoughts on “அரளிப்பூ 2”

  1. Avatar

    விவசாயி!!!… சூப்பர் சூப்பர்!!!… அத்தை, மருமகள் காம்போ சூப்பர்!!…

  2. CRVS 2797

    அச்சோ…! இதானா விஷயம்…!
    நல்ல அத்தை, நல்ல மருமகள்…!
    ஆனா, இயலினியை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *