தங்களுக்கு முன் என்ன இருக்கின்றது என்று எக்கி பார்த்த கந்தசாமி பைக்கை தள்ளி கொண்டு செல்லும் பெண்ணை பார்த்து அதிர்ந்தார்.
“என்ன மாப்ள பிரச்சனையே பிரச்சினைய பண்ணிக்கிட்டு போகுது போல?” என்ற கந்தசாமியின் குரலிலே பெண்ணவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்ற அவன் பைக்கை விட்டு இறங்க போனான்.
உடனே, “டேய்… டேய்… மாப்பு… என்ன பண்ற? வேணாம்… வேணாம்… அவ உனக்கு பிரச்சனை… வா வந்த வழியே ஓடிடலாம்…” என்று இளமாறனின் கரத்தை பிடித்தார் கந்தசாமி.
ஆனால் ஏனோ அப்படியே செல்ல மனமில்லாதவன்னாக இறமாறன், “யோவ் மாமா… பிரச்சனைய பார்த்தா ஓடுற வயசாய்யா நமக்கு…” என்று கேட்க
கந்தசாமியும், “பின்ன வேற என்ன பண்ணனும்?” என்றார்.
இறமாறனும் பைக்கில் இருந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து சிகையை கோதி மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே, “ம்… அங்க போயி… பிரச்சனையே உருவம்மா இருக்குற அந்த விஷக்கன்னி கிட்ட…” என்றதும்
சிறிது கலவரம்மாகவே, “அந்த கன்னி கிட்ட…” என்று கந்தசாமி என்ன சொல்ல என்ன செய்ய போகிறான்னோ என்றே கேட்க
“ம்… வேற என்ன? காவல் துறை உங்க நண்பன் என்று சொல்லணும்…” என்ற இளமாறனுக்குமே இது ஒரு புது வகையான உணர்வாக தான் இருந்தது.
சிகையை கோதி கொண்டே இளமாறன் போக வேகவேகம்மாக பைக்கில் அமர்ந்து தள்ளி கொண்டே இளமாறனின் அருகில் வந்துக்கொண்டு, “மாப்ள… எனக்கு பயம்மா இருக்கு மாப்ள… வாடா… வாடா… அப்படியே ஓடிடலாம்…” என்று இளமாறனின் கரத்தை பிடித்து இழுத்தார்.
ஆனால் ஏனோ இளமாறனுக்கு தன்முன் பைக்கை தள்ளி கொண்டு செல்லும் இயலினியிடம் ஏதேனும் பேச வேண்டும் என்று தோன்றியது… கூடவே அவளுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு உதவவும் தோன்றியது… ஆகையால் கந்தசாமியின் கரத்தை எடுத்து விட்டு செல்ல
“டேய்… டேய்… வேணாம்டா… அவளே எப்ப பாத்தாலும் பிரச்சனைய அக்கத்துல போட்டு கிட்டு சுத்துறா… அவ பின்னாடி போக வேண்டாம் டா…” என்று கந்தசாமி எச்சரித்தார்.
ஆனால் இளமாறன் கந்தசாமியின் பேச்சை எல்லாம் கண்டு கொள்ளாமல் இயலினியிடம் சென்றான்.
ஏற்கனவே ரொம்ப நேரமாக தன்னை யாரோ பின் தொடர்வது போலவே இருந்து கொண்டே இயலினிக்கு இருந்ததால் தன் முதுகுக்கு பின் ஆள் வந்த ஒரு நொடியில் தனது பைக்கின் முன் வைத்திருந்த ஒரு மரக்கட்டையை எடுத்து இளமாறனை தாக்க ஆரம்பித்து விட்டாள்.
அடிவாங்கிய முதல் அடியிலையே, “ஏய்… ஏய்… நான் போலீஸ் டி…” என்று கூறியே அவளின் கரத்தை பிடித்து கட்டையை பறித்துக் கொண்டான்… அதன் பின்பே இளமாறனின் முகத்தை பார்த்தவள் எரிச்சலுடனே அந்த இடத்தை விட்டு வேகமாக செல்ல, “ஹேய்… என்னாச்சி எதுக்கு இப்படி அடிச்ச? நான் உன்கிட்ட பேச தான் வந்தேன்…” என்றான்.
சினம்மாகவே திரும்பி, “ஏய் யாரு நீ? எதுக்கு என்கிட்ட நீ பேசணும்? ச்சி… ஒரு பொண்ண பார்த்துட கூடாது நாக்க தொங்க போட்டு கிட்டு வந்துடுறது…” என்று அவள் கூறியதும் தானாக இளமாறனின் முகம் இறுகியது… அவள் கரத்தில் இருந்து பிடுங்கிய கட்டையை அவளின் பக்கவாட்டில் எறிந்த வேகத்தில் அவனின் கோவம் இயலினிக்கு புரிந்தது.
இந்த வார்த்தைகளை கேட்டதும் கந்தசாமியும் வேகம்மாக பைக்கை கொண்டு வந்து அவனின் முன் நிறுத்த ஒரு வார்த்தை கூட பேசாமல் பைக்கில் ஏறிக்கொள்ள பைக் அவ்விடத்தை விட்டு சீறி பாய்ந்தது.
அதேநேரம் அந்த வழியாக வந்த ஒரு வாகனம் இயலினியின் கரத்தை பிடித்து உள்ளே இழுத்து போட்டு கதவை அடைத்து கொண்டு வந்த வழியே திரும்பியது.
ஏனோ சிறிது தூரம் வரைக்கும் அமைதியாக வந்த இளமாறனுக்கு ஏதோ எங்கோ தவறு நடப்பது போலவே தான் தோன்றியது… பின்னாடி வந்தது யார் என்னன்னு கூடவா பாக்காம அடிப்பாங்க? என்றே தோன்ற அடுத்த நிமிடம், “மாமா மாமா பைக்கை திருப்பு…” என்றான்.
அதைக் கேட்டதும் ஏதோ கந்தசாமி கூற வர, “எதுவும் பேசாத… சீக்கிரம்… சீக்கிரம்… வண்டிய திருப்பு…” என்று அவசரப்படுத்தினான்.
இளமாறனின் பதட்டம்மான குரலில் கந்தசாமியும் வாகனத்தை வேகமாக திருப்பி வர அங்கு இயலினி தள்ளிக்கொண்டு வந்த வண்டி தரையில் கிடந்தது… அதைக் கண்ட இளமாறனின் இதயம் அவனையும் மீறி வேகம்மாக துடிக்க ஆரம்பித்தது.
உடனே கந்தசாமி, “டேய் மாப்பு… அந்த புள்ள எங்க காணோம்? ஒருவேளை எங்கேயாவது விழுந்து கிழுந்து போயிடுச்சா?” என்றே பைக்கில் இருந்து இறங்கி சுத்தி முத்தியும் பார்த்தார்.
உடனே, “நீ பின்னாடி ஏறு…” என்று கூறி வேகமாக இளமாறன் அவனே பைக்கை எடுக்க கந்தசாமியும் பின் ஏறினார்.
பைக்கை முறுக்கிக்கொண்டே, “மாமா… ஸ்டேஷனுக்கு போன் பண்ணி சீக்கிரம் நம்ப வந்த வழியாவே ஆளுங்கள வர சொல்லு… ஏதாவது சந்தேகப்படுற மாதிரி சுமோவ பார்த்தா செக் பண்ண சொல்லு…” என்றவன், “ச்சே… நான் எப்படி இத கவனிக்காம போனேன்?” என்றே நினைத்தவனின் முகம் எல்லாம் வியர்த்துவிட்டது.
கூடவே விழிகள் கூட கலங்குவது போல் ஆகிவிட்டது… ஏனெனில் இவர்கள் பக்கத்து ஊரில் இருந்து காரப்பட்டி ரோட்டின் உள்ளே நுழையும் போதே ஒரு வாகனத்தில் அமர்ந்து கொண்டு சிலர் சரக்கடித்து கொண்டு இருந்தனர்… இதில் இயலினியை பார்க்கும் முன்பு ஒருவன் மறைந்து அமர்ந்து இருந்ததையும் இளமாறன் கண்டே தான் இருந்தான்.
அப்போது தான் இயலினியை பார்த்ததும் அவைகளை எல்லாம் விட்டுவிட்டு இயலினியிடம் வந்தது… அடுத்து இயலினி அடித்தது என்று எல்லாம் நினைத்தவனுக்கு, “காரணமே இல்லாம திடீர்னு அடிச்சா ஏன்னு யோசித்து விசாரித்து இருக்கணும்… அதை விட்டுட்டு… நானும் இப்படி ஒரு வயசு புள்ளைய விட்டுட்டேனே…” என்றே அவனின் மீதே பழியை போட்டு கொண்டவன் பைக் மின்னல் வேகத்தில் தான் பறந்தது.
இரு பக்கமும் மரங்களாக சூழ்ந்து இருப்பது போல் இருக்கும் ஒரு பாதையில் வாகனம் நிற்பதை கண்டுக்கொண்ட இளமாறன் சீறும் வேங்கையாக தான் அவ்விடம் வந்து சேர்ந்தான்… பைக்கை விட்டு இறங்கிய வேகத்தில் இதற்காகவே பைக்கின் முன் வைத்து இருந்த இரும்பு கம்பியை உருவி கந்தசாமியின் கரத்தில் தந்துவிட்டு சென்றவன் காரின் பின் சீட்டில் இயலினியின் இருகரத்தையும் பிடித்துக்கொண்டு அவளிடம் அத்துமீற போனவன் பின்னந்தலையை அப்படியே பிடித்து காரின் கதவிலே அவனின் மண்டையை மூர்க்கத்தனம்மாக இடித்தான்.
முதல் இடியில் சுதாரித்துக் கொண்டு தாக்க முயற்சித்தவன் இரண்டாவது இடியில் எல்லாம் மண்டையில் இருந்து இரத்தம் வர மூன்றாவது இடியில் எல்லாம் மயங்கியே போனான்.
இளமாறனை பார்த்ததும் இயலினி வேகம்மாக எக்கி கார் கதவை திறந்து கொண்டு அவளின் முன்னிருந்த தடிமாடின் மீதே முட்டிப்போட்டு கொண்டு வெளியே வர அவளை அப்படியே ஒரே கையால் இடையை பற்றி தூக்கி வெளியே வர உதவினான்.
அவள் வெளியே வந்ததும் அவளை அணைத்தது போல் பிடித்து கொண்டு, “உனக்கு ஒன்னும் இல்லல…” என்று கேட்க அவள் சிறிது நெளிந்தே அவனை விட்டு விலகி, “இல்லை…” என்றாள்.
அவள் ஒன்னும் ஆகவில்லை என்று கூறி இருந்தாலும் இளமாறனும் அவளை தலையில் இருந்து கால் வரை ஒரு முறை பார்த்து ஒன்னும் ஆக வில்லை என்பதை உறுதி செய்த பின்பே நிம்மதியாகி திரும்ப அப்போதே காரில் இருந்து இறங்கி தங்களின் முன்வந்து நின்ற மூன்று பேரையும் பார்த்தான்.
அவர்கள் மூன்று பேருமே கண்ணீருடன் முகமெல்லாம் இரத்தம்மாக நிற்பது போல தான் இருந்தது இளமாறனுக்கு… அவனும், “என்னடா இது? நம்ம இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல… அதுக்குள்ள இப்படி இருக்கிறானுங்க… மூஞ்செல்லாம் வேற சிவப்பா இருக்கு…” என்றே புரியாமல் அவர்களை பார்த்து விட்டு அவனின் அருகே நின்ற இயலினியை பார்த்தான்.
அவளும் பொறுமையாக கிசுகிசுப்பாகவே, “என்னனே தெரியல… காலையில இருந்து ஒரு மாதிரியாவே இருந்ததா… அதனால நான் எப்பையும் விட கொஞ்சம் சேர்த்து என் தாவணியில மிளகாய் தூள் மிளகு தூள் எல்லாம் கட்டி வச்சிக்கிட்டேன்… பாரு… அதான் இப்போ என்னைய இவ்வளவே நேரம் காப்பாத்துச்சி…” என்று அவள் கூறியதை கேட்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
பின்ன அந்த மூன்று பேர் மீதும் கொட்டி இருந்த மிளகாய் தூளை பார்த்தால் கொஞ்சம் என்று சொல்ல யாராலும் முடியாது… அவ்வளவு இருந்தது… மிளகாய் மிளகு தூள எல்லாம் கொட்டி அவனுங்கள கதற விட்டுட்டு அவள் கூறியது சிறுபிள்ளை பிள்ளை போல் தான் அவனுக்கு இருந்தது.
அடிப்பாவி அது கொஞ்சம்மா? என்றே நினைத்தாலும் அவளின் மீது இளமாறனுக்கு இனம்மாறியாத பாசம் துளிர்க்க தான் செய்தது… அவளின் முகத்தையே பார்த்து கொண்டு இளமாறன் இருக்க அவனின் முன் சொடக்கு போட்டே, “ம்ச்சே… ஹீரோ மாதிரி காப்பாத்த வந்தியே… இப்ப நீயே போயி அவனுங்கள அடிச்சி என்னைய காப்பாத்துவியா? இல்ல இதையும் நானே செய்யணுமா?” என்று கேட்டவளை, “விஷம்… விஷம்…” என்று முணு முணுத்தே, “மாமா…” என்று குரல் தர கந்தசாமி தூக்கி போட்ட கம்பியை கேட்ச் பிடித்து மூவரையும் அடி பிச்சி எடுத்துட்டான்.
அதன் பின் அவர்களை கைது செய்து கொண்டு காவல்நிலையத்தில் இருந்து வந்தவர்கள் செல்ல இயலினி மறுபக்கம் செல்ல, “மாமா… நான் வந்து விசாரிக்காத வரைக்கும் அவனுங்கள வெளிய விடாதிங்க…” என்று கூறிக்கொண்டே இயலினியின் பின் ஓடினான்.
இளமாறன் தன் பின்னால் தான் வருகிறான் என்று அறிந்தும் அவள் அதை கண்டுக்கொள்ளாதவளாக செல்ல, “ஹேய்… விஷக்கன்னி… அவனுங்க பேர்ல கேஸ் குடுக்காம போற? வா… வந்து கேஸ் குடுத்துட்டு போ…” என்றான்.
அவளோ நடந்த படியே, “இல்ல வேணாம்…” என்று கூற
“என்ன இதுக்கும் குடுக்க மாட்டாளா?” என்றே அதிர்ச்சியாகவே, “ஏய்… பிரச்சனையோட சீரியஸ்னெஸ் புரியாம நடக்காத… இப்ப நீ இவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்கலைன்னா இவனுங்க மறுபடியும் வந்து உன்னைய ஏதாவது பண்ண வருவாங்க?” என்றான்.
எவ்வித உணர்வும் இன்றியே, “எதையோ பண்ணிட்டு போறானுங்க… தப்பிக்க முடிஞ்சா தப்பிக்கிறேன்… முடியலன்னா அப்படியே செத்து போயிடுறேன்…” என்றவளின் வார்த்தையில் இளமாறனின் விழிகளில் இருந்து தானாக ஒருதுளி கண்ணீர் கன்னம் தொட்டது.
எத்தகைய வலிகள் நிறைந்த வார்த்தைகள்… உண்மையில் இவள் விஷம் தான் என்றே நினைத்தவன் சிறிது உடைந்த குரலிலே, “ஹேய்… அவனுங்க உன்கிட்ட என்ன பண்ண ட்ரை பண்ணுனாங்கன்னு உனக்கு தெரியும் தானே… தெரிந்தே ஏன்? கண்டிப்பா நான் அவங்களுக்கு தண்டனை வாங்கி தரேன் என்னைய நம்பு…” என்றான்.
விரக்தியாகவே, “இதுக்கு மேல இந்த ஜென்மத்துல நான் நம்புனு எனக்குன்னு யாரும் இல்ல… ஏற்கனவே நான் ஊர் உலகத்துக்கு ஆகாதவ… இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இந்த கேஸ் விஷயமா போயிட்டு வந்தேன்னு வை அந்த நாலு பேருக்கிட்டையும் நான் கெட்டு போயிட்டேனே என்னைய ஊர்ல முத்திரை குத்திடுவாங்க…” என்றவளின் வார்த்தையில் இளமாறனின் இதயத்தில் மீண்டும் குத்தியது போல் வலித்தது.
என்ன தான் போலீஸ்காரன்னாக இருந்தாலும் இந்த விஷயத்தில் சமூகம் இப்படி தான் நடந்துக்கொள்கின்றது என்பதை அறிந்தும் அறியாதது போல தான் இருக்க முடியுதே தவிர பெண்ணின் கற்பு என்பது அவளின் உடலிலோ உடல் அங்கத்திலோ இல்லை… அவளின் குணத்தில் தான் உள்ளது என்று கூறி மக்களையோ சமூகத்தையோ சுற்றத்தையோ திருத்த யாராலும் முடியாது.
அப்படியே காவல் நிலையம் ஒரு பெண் வந்து சென்றாலே அது அந்த பெண்ணிற்கான அசிங்கமில்லை… அதை வைத்து அசிங்கப்படுத்த கூடாது… அவளின் தைரியத்திற்கும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்த்து நிற்கும் வீரத்திற்கும் கிடைக்கும் மரியாதையாக தான் காவலர்கள் அவர்களுக்கு உதவணும்.
பெண்ணின் நிலையறிந்து அவர்களுக்கு மக்கள் ஊக்கம் தர வேண்டும்… அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று இந்த உலகிற்கு யாராலும் சொல்லித்தர இயலவில்லை என்றே நொந்து கொண்ட இளமாறனுக்கு பெண்ணவளின் வலி அவனையும் அவனை மீறி வலிக்க செய்தது.
அந்த நொடி செல்லும் இயலினியை கண்டவன் மனது, “நான் ஏன் இந்த அரளிப்பூவின் விஷத்தை பருகி அவளை மலர செய்ய கூடாது?” என்றே நினைத்தது… உடனே அவளின் பின் ஓடினான்.
Una ithula veliya kodu vara porathh ilamaran tha iyal Yen unaku ippadi aanathuma avanuku thonuchi ipo vanthu una kapathi irukan paru nee evlo thairiyamana ponnu ippadi pesuvanganu baya padura thairiyama complaint panu action edupan ilamaran
நன்றிகள் சிஸ்
இந்த உலகமே அப்படித்தான். எதுக்கெடுத்தாலும் பெண்ணையே குறை சொல்லும்.
உண்மை தான் சிஸ்
Good epi
Kasappana unmai ithu thAan