Skip to content
Home » அரளிப்பூ 22

அரளிப்பூ 22

இயலினியை கடத்தியவர்கள் மீது புகர் தர இளமாறன் கூற அவள் முடியாது என்று திட்டம்மாக மறுத்து விட்டாள்… அதற்கு அவள் அசால்ட்டாக கூறிய காரணத்தை கேட்ட இளமாறனுக்கு அவளின் வலி அவனின் வலி போலவே அவனுக்கு வலிக்க ஒருநொடி நான் ஏன் இவள சந்தோஷமாக வைத்து கொள்ள கூடாது? என்று தான் அவனுக்கு தோன்றியது.

தோன்றிய உடனே அவளின் பின் ஓடினான் வந்த வேலையும் மறந்து பிடித்து வைத்தவர்களை போயி ஒருக்கை பார்க்க வேண்டும் என்பதையும் மறந்து.

இயலினி தனது பைக் இருக்கும் இடத்தை நோக்கி வேக நடையிட்டு போயி கொண்டிருந்தாள்… அவளின் பின்னாடியே ஓடிவந்த படி, “ஹேய்… விஷக்கன்னி… நில்லு… ஏய் விஷம்…” என்று அவளை அழைத்த படியே அவன் வர

அவன் விஷம் விஷக்கன்னி என்று தன்னை தான் அழைக்கிறான் என்று நன்கு தெரிந்தே இருந்த இயலினி திரும்பிப் பார்க்காமல் நடந்தபடியே, “செய்ற வேலைக்கும் இப்ப நீங்க பார்க்கிற வேலைக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கா? நான் தான் கேஸ் எல்லாம் ஒன்னும் தரல என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டேன்ல… அப்புறம் எதுக்கு இப்படி என் பின்னாடியே வந்துட்டு இருக்கீங்க? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றாள்.

“சரி… சரி விஷம்… கோவப்படாத… நான் கிளம்பிடுறேன்… ஆனால் அதுக்கு முன்னாடி நான் சொல்லுறத கொஞ்சம் கேளேன்…” என்று இளமாறன் கூறிய படியே அவளின் கரத்தை பிடித்து நிறுத்தி கொண்டே மூச்சி வாங்கினான்.

தனது கரத்தை பிடித்த உடனே அன்று போல் உடனே உதற வில்லை… ஒருநொடி நின்று திரும்பி அவனின் முகத்தை பார்த்தாள்… ஓடி வந்ததால் ஏனோ மூச்சி அதிகம் வாங்க விழிகளை சுருக்கி கொண்டு வாயால் மூச்சி வாங்கிய படியே சிறு புன்னகையுடன் முகம் எல்லாம் வியர்த்து தன்னையே பார்த்த ஆடவனை கண்டவள் மனம் ஒருநொடி அவளையே அறியாமல் அவனிடம் சாய்ந்தது தான்.

ஆனால் அது ஒருநொடி தான்… பட்டென அவனின் கரத்தை உதறிவிட்டு விறுவிறுவென நடந்து படியே, “இன்னொரு தடவை விஷம் அது இதுன்னு சொல்லிகிட்டு என் பின்னாடியே வந்து இப்படி கையெல்லாம் புடிச்ச மொவனே உண்மையிலையே விஷத்த வாங்கி உன் வாயில ஊத்தி விட்டுடுவேன்…” என்றாள்.

அவள் கூறிய விதத்தில் இளமாறனுக்கு சிரிப்பே வந்தது… அவனும் தனது பேண்ட் பாக்கெட்டில் கரங்களை நுழைத்து கொண்டு ஒரு பெருமூச்சியுடனே, “ம்… நீ வேணும்ன்னா அதையே மூணு வேலையும் ஊத்துறதா இருந்தால் சொல்லு… அத குடிக்க நான் ரெடி…” என்றான்.

அவளோ, “ங்கே… இவன் என்ன மெண்டலா? மெண்டல்… மெண்டல்…” என்று கூற

இளமாறனும், “ம்… உன் மேல…” என்றதுமே

இயலினி பற்களை கடித்து கொண்டு திரும்பி அவனை முறைத்தே, “டேய்… இப்போ என்ன நீ என் கிட்ட வில்லங்கம் பண்ணனும்னே வந்து இருக்கியா?” என்றாள்.

அவனும் தோளினை குலுக்கி கொண்டு, “பின்ன வேற எதுக்கு?” என்று கேட்டே கண்ணடித்தான்.

அவனின் இத்தகைய செயலில் ஒருநொடி அவளின் அடிவயிற்றில் ஏதோ உருளுவது போலவே இருக்க இதற்கு மேல் இவனிடம் பேசினால் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்தாலும், “யோவ் ஒழுங்கா இங்க வந்த வேலை என்னவோ அதை பார்த்துட்டு போயா…” என்று கூறியே விட்டால் போதும் என்பது போல் அவ்விடத்தை விட்டு ஓடினாள்.

பாவடையை தூக்கி கொண்டு ஜல் ஜல்லென்ற கொலுசின் ஓசையுடன் ஓடும் இயலினி அப்படியே அவனின் மனதில் பதிய, “ஹேய்… விஷக்கன்னி… இந்த ஊர்ல இயலினினு யாரோ ஒரு பொண்ணு இருக்காமே… அந்த புள்ளைய பத்தி சொல்லிட்டு போ…” என்று குரல் தர அவளோ, “இந்த கிராதகன் என் பேர் வரைக்கும் தெரிஞ்சி வச்சிக்கிட்டே தான் என்னைய சீண்ட வந்திருக்கான் போல…” என்றே ஓடினாள்.

அதன் பின் இயலினி ஊருக்குள்ளே சென்று அரைமணிநேரம் கடந்த பின்பே இளமாறனும் ஊரின் உள்ளே வந்து இவன் யாரை பார்க்க வந்தானோ அவரை பத்தி விசாரித்து வந்தவனின் பாதம் சரியாக இயலினியின் வீட்டின் முன்வந்து தான் நின்றது.

பைக்கை கண்டதுமே எம்எல்ஏ யாருக்காக தன்னை அனுப்பினார் என்று புரிந்து கொண்டவன் புஜங்கள் முறுக்கேறியது… உடனே காவல்நிலையம் நோக்கி புறப்பட்டான்.

அதுவேற ஒன்னும் இல்லங்க… நம்ப இயலினி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால அப்பையும் ஒரு பாராட்டு விழாவும் இவளின் படிப்பின் செலவினை எடுத்து கொள்வதற்காக பாராட்டு விழா நடந்தது அல்லவா அதற்கும் இளமாறனை அனுப்பி வைத்த எம்எல்ஏ தான் வந்திருந்தார்… பாவம் அவரின் விதியும் அவரின் கட்சியும் இவளிடம் முன் ஜென்மத்தில் ஏதோ கடன் பட்டிருக்கும் போல.

இம்முறையும், “என்னைய படிக்க வைக்கிறதுக்கு இத்தனை வருஷத்துக்கு எவ்வளவு செலவாகுமோ அந்த பணத்தை அப்படியே என்கையில கொடுத்துடுங்க… நான் விவசாயம் செஞ்சி பொழைச்சுக்கிறேன்…” என்று கூறினாள்.

அவரோ, “அப்படியெல்லாம் கொடுக்க முடியாதும்மா… அதுமா… இதுமா… நீ ஒழுங்கா படிம்மா… உனக்கான எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்…” என்று எவ்வளவோ கூறியும்

இவள் பிடிவாதம்மாக மேடையில் எம்எல்ஏவிடம், “டாக்டர் அப்பா அம்மாவோட பிள்ளைங்க தான் டாக்டரானதும் சீக்கிரம் நல்லபேர் வாங்கி பாப்புலர் ஆகும்… அதேமாதிரி இன்ஜினியர் அப்பா அம்மாவுக்கு பொறந்த புள்ள என்ஜினியரிங் படித்த உடனே அந்த புள்ளையும் சீக்கிரம் கவர்மெண்ட் வேலை அந்த வேலை இந்த வேலை உயர்ந்த இடத்துக்கு வேகவேகம்மா போவும்… ஏன் அரசியல்வாதிங்க உங்க புள்ளைங்க கூட உங்க பேர வச்சி தானே சீக்கிரம் அரசியல்வாதியாகி உங்க இடத்துல வந்து உட்காருறாங்க… ஆனால் இந்த விவசாயிங்க புள்ளைங்க மட்டும் தான் படிச்சி முன்னேறவும் காலதாமதமாகுது… விவசாயம் செய்யவும் முடியாம கிடக்குதுங்க… அதனால நான் விவசாயம் தான் செய்ய போறேன்… அதுக்கு நீங்க எனக்கு பணம் தந்து விவசாயிக்கு உதவி பேர் வாங்குவீங்களா? இல்ல ஒரு விவசாயிய அழிக்க போறீங்களா?” என்றே கேட்க எம்எல்ஏ அப்படியே ஆடிதான் போனார்.

ஆனால் அவள் கேட்டப்படியே மருத்துவ படிப்பிற்கு ஐந்து வருடம் ஆகும் பணத்தை அப்படியே தந்து விட்டவர் அதன்பின் இயலினியால் உதயம்மான திட்டங்களை அந்த மாவட்டத்திற்கு செய்ய ஆரம்பித்தார்.

முதலாவது திட்டமாக, “அந்த மாவட்டத்தில் அனாதையாக இருந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் எல்லாம் படித்து முடித்ததும் அவர்களுக்கு என்று ஒரு வீடு கட்டி வேலை தர வேண்டும்…” என்று போட்டார்.

அடுத்து, “பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் முதல் பத்து இடங்களை பிடிப்பவர்களுக்கும் கடைசியாக தேர்வில் தோல்வி உற்றவர்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைக்கொண்டு வந்தால் அவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும்…” என்று அவர் திட்டம் போட்டார்… கட்சியில் உள்ளவர்கள் இதைப்பற்றி எம்எல்ஏவிடம் கேட்டதற்கு அவர் தெளிவாக கூறிவிட்டார்.

“எவ்வளவோ செய்கிறோம்… எவ்வளவோ கொள்ளை அடிக்கிறோம்… எவ்வளவோ தவறும் செய்கிறோம்… அப்படியிருக்க இந்த மாதிரி கொஞ்சமாவது என் தொகுதி மக்களுக்கு செஞ்சி பாவத்த குறைத்த மாதிரியும் இருக்கும்… கூடவே காலத்துக்கும் என் தொகுதி மக்கள் எனக்கு மட்டும் தான் ஓட்டும் போடுவாங்க… இதுல என்ன பிரச்சனை?” என்றே கேட்டுவிட்டார்.

முதல் முறை அவர் வெற்றி பெற்றார் இரண்டாம் முறை இயலினியின் பத்தாம் வகுப்பின் பாராட்டுவதாக உதவி மக்களுக்கு புதியதொரு திட்டம் போட்டு பேர் வாங்கியதால் தொடர்ந்து இரண்டாவதாக வெற்றி பெற்றார்… அடுத்து பன்னிரெண்டாம் வகுப்பில் உதவி செய்து அந்த பணத்தின் மூலம் இயலினி சொந்த நிலத்தையும் வாங்கி வளர எம்எல்ஏவும் மூன்று வருடம்மாக அடுத்த திட்டத்தை போட்டு அமல்படுத்தியதால் மூன்றாம் முறையாக தேர்தலிலும் வெற்றியை பெற்றார்.

இன்னும் இரண்டு வருடத்தில் அடுத்த தேர்தல் வருகின்றது… அதற்குள்ளே எம்எல்ஏவின் பெயரை கெடுக்க வேண்டும்… அதுவும் அவனை தூக்கியே விட்ட அந்த இயலினியை வைத்தே கெடுக்க போவதாக எதிரிகள் திட்டம் தீட்டியிருக்கும் விஷயம் இந்த எம்எல்ஏவின் காதில் வந்திருக்க அதற்கு தான் இளமாறனை வர வைத்து, “இயலினுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது… அவளை பாதுகாத்து வை… கூடவே அவளால் எனது பெயரும் கேட்டுவிடக் கூடாது… என் அரசியல் வாழ்க்கையே உன் கையில் தான் இருக்கு…” என்று இயலினியின் பெயரை மட்டும் கூறி அனுப்பியிருந்தார்.

யாரை பாதுகாக்க வந்தானோ அவளே தன் மனதில் அமர்ந்து விட்டாள்… கூடவே அவளை தாக்கவும் வந்தவர்கள் கிடைத்து விட காவல் நிலையம் வந்து அவர்கள் நால்வரையும் உயிர் போகும் அளவிற்கு அடித்து துவம்சம் செய்து விட்டான்… கூடவே அவர்கள் நால்வருமே ஆட்சி செய்யும் எம்எல்ஏவின் தொண்டர்கள் தான்… பணத்தை கொடுத்து அவர்களின் மனதை கலைத்து இவ்வாறு செய்ய வைத்து தனது தலைவர் தான் செய்ய வைத்தார் என்று பெயரை கெடுக்க போட்ட திட்டம் என்று தெரிந்து கொண்டு அதை எம்எல்ஏவிடம் அப்படியே இளமாறனும் கூறினான்… இனி அவர் பார்த்துக்கொள்வார் என்று.

இனி இயலினியை எப்படியாவது நான் தான் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியும் எடுத்துக்கொண்டு அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுத்தான்.

உண்மையில் இளமாறன் இயலினியை திருமணம் செய்து கொள்ள நினைத்தது அவளின் மீது அனுதாபப்பட்டோ அல்லது அவளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினாலோ மட்டுமல்ல… ஏற்கனவே அவள் ஒரு அரளிப்பூவான விஷக்கன்னிகை என்றே அறிந்தவனுக்கு இன்று அந்த அரளிப்பூவின் விஷத்திற்கான காரணத்தை புரிந்ததும் அவளை உடனே திருமணம் செய்ய முடிவெடுத்து விட்டான்.

முன்பே அவளின் வீரமும் தைரியமும் அவளின் மலர்ந்த முகமும் அவனின் மனதில் பதிந்தது தானே… அதன் கூடவே இவற்றை எல்லாம் அறிந்ததும் அவனுக்கு எங்கு அவளை இழந்து விடுவோமோ என்ற அச்சம் பிறந்து விட்டது… அதன் விளைவே காதல் என்று எல்லாம் அவள் பின் சுத்த ஆசையிருந்தும் திருமணத்திற்கு அவசரம்மாகி விட்டான்.

இதை பற்றி தனது தந்தையிடம் இன்று பேச வேண்டும் என்று இரவு வீட்டிற்குள்ளே நுழைய அவனின் தந்தையோ உனக்கு பெண் பார்த்து விட்டேன்… திருமண தேதியையும் குறித்து விட்டேன் என்று கூறி அவனின் வாயில் இனிப்பை வைத்து விட அவனின் இதயம் உடைவது போலாகி விட்டது.

ஏனோ அதே போலவே தான் இயலினி பாட்டியும் தேதி குறித்தாகி விட்டது… நாளை மாப்பிள்ளை உன்னைய பார்க்க வருகிறார் என்று கூறிவிட அவளின் மனமும் ஒருநொடி அவளையே அறியாமல் அவளை விஷக்கன்னி என்று அழைத்தவனை நினைத்தது.

அதன்பின் எங்கு உறங்க? நாயகி நாயகன் இருவருக்கும் உறக்கம் என்பது விழிகளை துடைத்ததாக தான் இருந்தது… ஆனால் இயலினி சிறிது நேரத்திலே அவளின் வேலையின் அசதியில் உறங்கியிருந்தாள்… இளமாறன் தன் தந்தையிடம் எப்படி பேசுவது என்று தன் அன்னை நட்சத்திரத்திடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

6 thoughts on “அரளிப்பூ 22”

  1. CRVS2797

    அநேகமா அது இயலினியா தான் இருக்கணும்ன்னு தோணுது..
    கரெக்ட்டா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *