இளமாறனுக்கு இரவு தூங்காத இரவாக மாறிவிட இயலினியோ நன்றாக உறங்கி எழுந்தாள்… அவள் எழுந்ததுமே செல்லத்தாயி தெளிவாக கூறிவிட்டார்.
“இன்றைய வேலையெல்லாம் நீ தனியாக பார்க்க வேணாம்… நான் ஆள் ஒருத்தவங்கள வர சொல்லி இருக்கேன்… அவங்களோட சேர்ந்து பார்த்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்து தயாராகுற வேலைய பாரு… காலையில பத்து மணிக்கு எல்லாம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து உன்னைய பார்க்க வந்துடுவாங்க…” என்று கூறிவிட இயலினியும் அதேபோலவே வேலையை முடித்துவிட்டு வந்து தயாரானாள்.
செல்லத்தாயும் விசாலமும் பம்பரமாக அந்த வீட்டையே சுழன்று வந்தனர்… வீடு முழுக்க சுத்தம் செய்து மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் அவர்கள் சாப்பிட வேண்டும் என்று ஜூஸ்கள் மிச்சர் இனிப்புகள் என்று வாங்கி வந்தது பத்தாது என்று பச்சியும் டீயும் மதிய சமையல் செய்யவும் தயாராகி விட்டனர்.
சொன்னது படியே பத்து மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டினரும் இயலினியின் வீட்டில் அமர்ந்திருக்க எப்போதும் போலவே பெண் வீட்டினர் அவர்களை வரவேற்று முடித்து அவர்களுக்கு விசாலத்தின் மருமகள் தண்ணீர் தந்தாள்.
கிராமத்தில் எல்லாம் மாமியார் மருமகள் சண்டையெல்லாம் வீட்டில் தான் சொந்தத்தில் உறவில் எல்லாம் வராது… இதுப்போன்ற சுபகாரியங்கள் மற்ற காரியங்களில் எல்லாம் வந்துவிடுவார்கள்… அப்படி தான் விசாலத்தின் மருமகளின் வருகை.
விசாலமும் செல்லத்தாயும் மாப்பிள்ளையை பார்த்ததும் பூரித்து போனர்… அடுத்து காபியை போட்டு ஒரு தட்டில் வைத்து இயலினியின் கரத்தில் தந்து, “ஊதா சட்டை தான் மாப்பிள்ளை… நல்லா பார்த்துக்கோடி… அப்புறம் அத்தை அது சொத்தை இது சொத்தன்னு எல்லாம் சொல்ல கூடாது…” என்றே விசாலம் இயலினியை இடித்து கூற செல்லத்தாயோ, “அடியே… இன்னைக்கு கூட என் பேத்தியை விட மாட்டியாடி…” என்று விசாலத்தை கடிந்து கொண்டு
தனது பேத்தியின் முகத்தை தொட்டுத்தடவி நெட்டி முறித்து திருஷ்டி கழித்து மாப்பிள்ளை வீட்டினரின் முன் அனுப்பினார்.
தாவணி பாவடையிலே இருக்கும் இயலினி இன்று வானிற பட்டுப்புடவையில் கழுத்தில் கல்பதித்த நெக்லஸ் ஒன்றை அணிந்து செவியில் கல்பதித்த தொங்கல் கரத்தில் தங்க வளையல் என்று மின்னிய அழகோவியத்தை பார்க்க ஆயிரம் கண்கள் கூட பத்தாது.
தண்ணீரை தந்த பிறகு தரப்பட்ட பச்சியை வாயில் வைக்க போனவன் பார்வை பெண்ணின் மீது விழுந்ததும் முகமெல்லாம் வியர்த்து கரத்தில் இருந்த பச்சி அப்படியே தட்டில் விழ அதிர்ந்து எழுந்தவன், “டேய் மாப்பு… உன் அப்பன்னே உனக்கு வச்சிட்டான் டா ஆப்பு…” என்ற குரலில் அனைவரும் எழுந்தவனை பார்க்க சோகம்மே உருவாக அமர்ந்திருந்தவனோ அந்த குரலில் நிமிர்ந்து தன்முன் நின்ற பெண்ணை பார்த்து தவுசண்ட் வாட்ஸ் பல்ப் எரியாத குறையாக பிரகாசமானது.
அப்போதே மாப்பிள்ளையை கண்ட இயலினியின் விழிகளும் ஒருநொடி அவளையே அறியாமல் மின்னி மறைய அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த மாப்பிள்ளை அவனுக்கோ பெண்ணின் சம்மதம் கிடைத்து விட்டது என்றே தோன்றியது.
பாவம் இயலினியை பார்த்த அதிர்ச்சியில் எழுந்து நின்ற கந்தசாமி தான் தொடையை தேய்த்துக் கொண்டே தனது மனைவியை முறைத்த படியே அமர்ந்து, “ஏன்டி அண்ணனும் தம்பியும் மாத்தி மாத்தி அங்கேயே கிள்ளுறிங்க? கிள்ளுறதையும் கிள்ளிப்புட்டு அப்பறம் அங்கையே பார்த்து சந்தேகமும் படுறீங்க நான் என்னமோ வேற எவக்கிட்டையோ கொஞ்சல் வாங்கிக்கிட்டு வர மாதிரி…” என்று முணுமுணுக்க அவரின் மனைவியும், “இந்த வாய் தான்யா உன்னைய எல்லா இடத்திலும் அடி வாங்க வைக்குது… ஆமாம் இப்ப இந்த பொண்ண பார்த்துட்டு நீ எதுக்கு அதிர்ச்சியா எழுந்த? என்ன சேட்டை பண்ணி வச்சிங்க?” என்றே கேள்வி எழுப்பினாள்.
உடனே கந்தசாமியும், “ம்… உன் தம்பி மனசுல இந்த பொண்ணு தான் நேத்து நைட்டு திருட்டுத்தனம்மா வந்து குடியேறி இருக்குறா…” என்று மனைவியிடம் கூறியதும்மே குழம்பி நின்றவர்களின் குழப்பத்தை தெளிவுப்படுத்துவது போலவே கந்தசாமியின் மனைவியே வாங்கி வந்த மல்லிகை சரத்தை தன் கரத்தில் எடுத்துக்கொண்டு எழுந்து, “எங்க எல்லாருக்கும் கல்யாணத்துல முழு சம்மதம்… பொண்ணுக்கு…” என்று கேட்கும்போதே இயலினி செல்லாத்தாயின் முகத்தை பார்க்க அதில் என்ன கண்டுக்கொண்டாரோ ஒருவித பெருமிதத்துடன் அவரும், “எங்களுக்கும் சம்மதம் தான்ம்மா…” என்றார்.
உடனே இயலினியின் கூந்தலில் பூச்சூடி, “வர வெள்ளிக்கிழமை காலையில கோவில்ல கல்யாணத்த வச்சிக்கலாம்… என் தம்பிக்கு கல்யாணத்த சிம்பிளா வைக்க தான் விருப்பம்… உங்களுக்கு எப்படி?” என்றே கந்தசாமியின் மனைவி கார்த்திகா கேட்க செல்லத்தாயும் தன் சம்மதத்தை கூற அடுத்த அடுத்த வேலைகள் எல்லாம் செய்ய அனைவரும் தயாரானர்.
ஆனால் பாவம் பொண்ணு மாப்பிள்ளையை தான் யாரும் பேசவே விடவில்லை… தட்டினை மாற்றி கொண்டு மாப்பிள்ளை வீட்டினர் அனைவரையும் அன்றே சாப்பிட வைத்து நிச்சியமும் செய்துக்கொண்டனர்.
கணவனின் கூற்றால் கார்த்திகா, “அவங்கள பேச வைக்கலாமா?” என்று செல்லத்தாயி பாட்டியிடம் கேட்க அந்தக் கிழவியோ உசாராகவே, “இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிப்பேசி அதுக்கப்புறம் சண்டைதான் போடுங்க… அதுக்கு நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் பேச விட்டோம்னா இன்னும் நெருக்கம் கூடும்… பாரு பாரு அவங்க இரண்டு பேரும் பார்வையாலேயே பேசிக்கிறாங்க…” என்று கூற பொண்ணு மாப்பிள்ளையை பார்த்த கார்த்திகாவிற்கோ, “ஆஹா… இவங்க என் மாமியார் டைப்பாட்டுக்கே… எஸ் ஆயிடு கார்த்தி…” என்றே நகர்ந்து விட்டாள்.
அதன்பின் இளமாறன் கிளம்பும்போது இயலினியை பார்த்து தலையை மட்டும் செல்வதாக அசைக்க அவளின் தலையும் தானாகவே அசைந்தது… அதுவே இளமாறனுக்கு, “அனைவருக்கும் விஷமாக தாக்க கூடிய இந்த விஷக்கன்னி… தனக்கு மட்டும் போதையூட்டும் மது போலாகி போனாளே…” என்றே அவன் மனம் பெண்ணவளின் சிறு தலையசைப்பில் கிறைங்கியே கல்யாண கனவுடன் புறப்பட்டான்.
திருமணம் வரையிலும் இயலினி எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போலவே வேலை பார்ப்பதையே கவனமாகக் கொண்டு விட்டாள் தனது பாட்டியிடம் திருமண செலவுக்கு தேவையான பணத்தை தந்துவிட்டு… உண்மையில் பெத்தவர்களை அழைக்க வேண்டும் என்று இயலினியும் நினைக்க வில்லை… செல்லத்தாயும் அதை விரும்பவில்லை.
நமக்குத்தான் அரளிப்பூ முடிவை நோக்கி போகிறது… ஆனால் இயலினியின் வாழ்க்கை முடிவை நோக்கி போகவில்லையே… அது இப்போது தானே ஆரம்பிக்கவே செல்கின்றது… ஆகையால் அவர்களின் பெற்றோர்களை அவள் மன்னித்து ஏற்றுக்கொள்ள கூற நம்மால் எல்லாம் இயலாது… அவர்கள் தந்த காயம் வேண்டுமானால் காலம் கடந்ததால் ஆறி இருக்கலாம்… ஆனால் அது ஏற்படுத்திய வடுவும் அவள் பட்ட வலியும் மறையாது அல்லவா.
ஆகையால் திருமணத்திற்கு செல்லத்தாயி விசாலம் அவரின் மகன் மருமகள் டீக்கடை நடேசன் இன்னும் சிலர் இயலினியின் சார்பாக வந்திருந்தனர்… அதேப்போல் இளமாறன் தரப்பில் இருந்து பசுபதி கார்த்திகா கந்தசாமி மற்றும் சிலர் என்று முருகன் கோவிலுக்கு வந்திருக்க அவர்கள் முன்னிலையில் இளமாறன் கம்பீர ஆண்மகன்னாக பட்டு வேஷ்டி சட்டையில் அமர்ந்து தன்னருகே பச்சை நிற பட்டுப் புடவையில் அமர்ந்திருந்த இயலினியின் கழுத்தில் மூன்று முடிச்சியை போட்டு அவளை அணைத்தது போலவே அவளின் நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து
“எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த விஷக்கன்னி தான் எனக்கு வேணும்ன்னு கடவுள் கிட்ட அப்ளிகேஷன் போட்டு இருக்கேன் பொண்டாட்டி… நீயும் சம்மதம்ன்னு கடவுள் கிட்ட சொல்லிடு… இல்லன்னா இதுக்கப்பறம் வர ஜென்மம் எல்லாம் இந்த விஷக்கன்னிய தூக்கிக்கிட்டு போயி தான் கட்டுவேன் பார்த்துக்கோ…” என்றவனின்
கிசுகிசுப்பான குரலில் உடல் சிலிர்த்து அவனை விட்டு விலகி அவனின் முகத்தை இயலினி பார்க்க அவனோ அழகாக தனது அரளிப்பூவை பார்த்து கண்ணடித்தே அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவனின் செயலில் இதுவரைக்கும் நாணம்மே கொள்ளாத இயலினி முகம் சிவந்து தலைக்குனிந்து தன்னவனின் முதல் முத்த ஸ்பரிசத்தை இமைகள் மூடி ஏற்க அழகாக இந்த காட்சி அப்படியே கந்தசாமியின் கரத்தில் இருந்த கேமராவில் பதிவானது.
அடுத்தடுத்த சடங்குகள் எல்லாம் கார்த்திகா மற்றும் விசாலத்தின் மருமகள் இருவரும் சேர்ந்து முதலில் பெண்வீட்டில் பாலும்பழமும் சாப்பிட வைத்தனர்… அதன்பின் அவர்களை சாப்பிட வைத்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்று அங்கும் இருவருக்கும் பாலும்பழமும் தந்து அவர்களை ஓய்வெடுக்க தனித்தனியாக அனுப்பினர்.
புதுவீடு புதுஇடம் ஒருவித தயக்கம்மாக இயலினிக்கு இருந்தது… ஆகையால் அவள் உறங்காமல் நடந்தபடியாக இருக்க அந்த வழியாக சென்ற பசுபதி தன் மருமகளின் பதட்டத்தையும் பயத்தையும் கண்டுக்கொண்டே, “உள்ள வரலாமா?” என்று கேட்டு வந்தார்.
வந்தவர் நின்றே இருந்த பெண்ணின் சிரத்தில் கை வைத்து, “இந்த வீட்டோட மகாராணி நீ… இங்க நீ எந்த தயக்கமும் கொள்ளக்கூடாது… உனக்கு எது தேவையோ அத நீ என்மகன் கிட்டையும் என்கிட்டையும் கேட்கலாம்… அதேமாதிரியே எங்களுக்கு எது தேவையோ உன்கிட்ட தான் கேட்போம்… நீ இந்த வீட்டுக்கு புதுசா வந்திருக்குறதா நினைக்காத… உன் வருகைக்காகவே இந்த வீடும் நாங்களும் இத்தனை வருடம் காத்திருந்ததா நினை…” என்றவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க செல்ல உடனே இயலினியை குனிய விடாமல் தடுத்தவர்
“என் மருமகளோட இடம் என் இதயத்துல மகளா இருக்கு… எப்பையும் என் ஆசிர்வாதம் உனக்கு உண்டு…” என்று கூற இயலினிக்கு விழிகள் கலங்க கூடவே இதமும் விரிந்தது.
வாசலில் நின்று இவர்களின் உறையாடலை கவனித்துக்கொண்டு இருந்த செல்லத்தாயிக்கும் விசாலத்திற்கும் நிறைவாக இருந்தது.
இளமாறனின் காத்திருப்பு ஒருவழியாக முடிந்து இரவும் வர அவனின் விஷக்கன்னியும் கரத்தில் பால் சொம்புடன் அறையின் உள்ளே மெல்லிய அரக்கு நிற காட்டன் புடவையில் வெரும் மஞ்சள் கயிறுடன் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாள் போட்டுவிட்டு வந்து அவனின் முன்நின்று பால்சொம்பினை அவனின் முன் நீட்டினாள்.
நகைகள் எல்லாம் போட்டு வந்திருப்பதை விட தான் கட்டிய ஒற்றை கயிற்றுடன் வந்து தன்முன் நிற்கும் இயலினியை பார்க்க பார்க்க அத்தனை அழகாக இருந்தது… பாலினை வாங்கி பருகிக்கொண்டே அவளை பார்த்தவனுக்கு எதில் தொடங்கி எதில் முடிப்பது என்றே தெரியவில்லை.
பெண்ணவளுக்கும் அதேநிலை தான்.
இருவருக்குமே சலனம் இருந்தது… ஈர்ப்பும் அவர்களை மீறியே பிறந்துவிட்டது தான்… ஆனால் அதை எப்படி என்றே இருக்க இளமாறனே முதலாக பெண்ணவளின் கரத்தில் தான்குடித்த மீதி பாலினை தர அவளும் வாங்கி குடித்தாள்.
தன்முன் நின்று அவனின் விஷக்கன்னி பால் குடிக்கும் போதே பெண்ணவளின் இடையை கட்டிக்கொள்ள தானாக அவளின் கரம் நடுங்க சொம்பினை பத்திரம்மாக அருகே இருந்த டேபிளின் மீது வைத்தாள்.
மெல்ல தன்னவளின் வயிற்றில் கன்னம் உரசியே, “ஓய் பொண்டாட்டி… பேசிப்பேசி புரிஞ்சிக்கிட்டு ஆரம்பிக்கலாமா? இல்ல ஆரம்பிச்சிட்டு பேசலாமா? என்னால என் உணர்வு எதையும் கன்ட்ரோல் பண்ண முடியல… இனி என் வாழ்க்கையில நீ எடுக்குற முடிவுதான்… அதனால நீயே உன்முடிவ சொல்லு… அப்படியே செய்யலாம்…” என்றவனின் வார்த்தையில் கொஞ்சம் இயலினி சொக்கி தான் போனாள்.
எத்தனை பேர் தான் பெண்களின் விருப்பத்தை கேட்கிறார்கள்? ஆனால் தனது கொண்டவன் தன்னிடம் கேட்டு விட்டானே.
மெல்ல அவனின் சிகையை தீண்ட சென்றவள் மெல்ல மிகவும் மெல்ல, “லைட்ட ஆப் பண்ணிட்டு…” என்று கூறிய மறுநிமிடம் விளக்கணைத்து அவனின் விஷக்கன்னியை அணைத்து அவளையே தன்னை ஆளவிட்டான் இளமாறன்.
அழகாக மலராக பிறந்து அரளிப்பூவாக உருமாறி தன்னவனின் கரத்தில் அவனை ஆளும் விஷக்கனியாகவும் மாறிப்போனாள் இயலினி.
அதன் பின் கணவனின் வீட்டில் இயலினி இருந்தாலும் காலையில் சமைக்கும் தனது மாமனாருக்கு சமயலில் உதவிசெய்து சமையலை கத்துக்கொண்டு இருவருக்கும் உணவை கட்டித் தந்து அவர்கள் கிளம்பும்போது இவளும் கிளம்பி காரப்பட்டி வந்து தனது பாட்டியுடன் மதிய உணவை உண்டு காட்டில் விவசாயம் செய்து என்று அவளின் வாழ்க்கையை அவள் அழகாகவும் சிறப்பாகவும் மாற்றிக்கொண்டாள்.
இயலினி இளமாறனின் வாழ்வு முடியவில்லை… இதுவே தொடக்கம்.
நாயகன் நாயகியவர்கள் சேர்ந்ததும் கதையை முடித்துவிட்டதாக நினைக்க வேண்டாம்… அரளிப்பூ கதைக்கு இதுவரைக்கும் தான் சரியாக இருக்கும்… இதற்குமேல் செல்ல வேண்டுமென்றால் கதையின் பெயரை ரோஜா மல்லி என்று ஆரம்பித்தால் தான் தொடர இயலும்… ஜஸ்ட் கிட்டிங்… விரைவில் சந்திப்போம்.
இதுநாள் வரைக்கும் இயலினியின் வாழ்வில் பயணித்து அவளுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Nice ending . Sonna mari ippadi mudicha tha nalla irukum ipo tha crt aralipoo ipo malli poo va mariduchi. Congratulations
தொடர்ந்து என் கதைக்கு ஆதரவு தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் சிஸ்
சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்…!
தொடர்ந்து என் கதைக்கு ஆதரவு தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் சிஸ்
Good content story with superb ending
👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😘😘😘😘