Skip to content
Home » அரளிப்பூ 3

அரளிப்பூ 3

செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்குமே கணக்கு எழுதி வைக்கக் கூடியவள்… உணவை சிறிதும் வீணாக்கவே கூடாது என்று நினைக்கக் கூடியவள்… எவரேனும் கடன் கேட்டால் முக்கியம்மாக உறவுகள் கேட்டால் கொடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கக் கூடியவள்… கடைகளுக்கு எல்லாம் பொருட்கள் எல்லாம் வாங்க சென்றால் பேரம் பேசியே எதுவாக இருந்தாலும் வாங்க கூடியவள்… அதே நேரம் அவள் சூப்பர் மார்க்கெட் என்று பெரிய பெரிய மார்க்கெட் எல்லாம் சென்று வாங்க மாட்டாள்.

மூட்டை மூட்டையாக பொருட்களை போட்டு விற்பார்கள் அல்லவா அது போன்ற கடை வீதிகளுக்கு மட்டும் தான் சென்று தனக்குத் தேவையான எதுவாக இருந்தாலும் வாங்க கூடியவள்… அதையும் ஒரு கிலோ இரண்டு கிலோ இல்ல… எது வாங்கினாலும் பத்து கிலோ இருவது கிலோ என்று அதிகமாகவே வாங்கி கிட்டு வந்து வீட்டில் அடுக்கி வைத்து விடுபவள்.

தன் வீட்டுக் கிழவிக்கு எது வேண்டும் என்று நினைக்கிறாரோ அது வீட்டில் தீர்ந்து போச்சு… இல்லையே என்று அவர் நினைத்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடியவள்… அதே போல் ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிப்பால்? என்று கேட்டால் அது அவளுக்கே தெரியாது… ஏனெனில் காலையில் பால் கறந்ததும் ஒரு குளியலை போட்டு விடுவாள்.

அதன் பிறகு காலை வேலையை காட்டில் செய்தால் அதன் பிறகு ஒரு குளியல் போட்டு விடுவாள்… வீட்டிற்கு வரும் போது ஒரு குளியலை போட்டு விட்டே வருவாள்… அதன் பின் மாலை பால் கறக்கும் போது கறந்து முடித்ததும் ஒரு குளியலை போட்டு விடுவாள்… இவ்வாறு எப்பொழுதும் அவள் சுத்தமாக தன்னை வைத்துக் கொள்வாள்.

அதே போலவே ஒரு முறை கூட சோர்ந்து போயி அவள் அமரவே மாட்டாள்… என்னால் முடிய வில்லை என்று படுத்துக் கொள்ளவும் மாட்டாள்… அந்த அளவிற்கு சுறுசுறுப்பு கொண்டவளாகவே எப்போதும் இருப்பாள்… தனி ஒருவளாகவே அனைத்தையும் செய்வாள்.

செல்லத்தாயி பாட்டி, “இன்னைக்கு வேலை அதிகம் இருக்குன்னு சொன்னியே நானும் வரேன்டி…” என்று கிளம்பி வந்தாலுமே, “ஏற்கனவே உனக்கு கை முட்டி கால் முட்டி வலிக்குதுன்னு கிட்டு இருக்க… இதுல நீ எதுக்கு வந்து கிட்டு… அப்புறம் கையை கால ஒடச்சி கிட்டு நீ ஒரு மூலையில கிடந்தினா எனக்கு யார் ஆக்கி போடுவா? ஒழுங்கா எனக்கு வாய்க்கு வக்கனையா வேளை வேளைக்கு ஆக்கி போடுற வேலைய மட்டும் நீ பாரு… அது போதும்…” என்று திமிராகக் கூறியே அந்த பாட்டியவும் அடக்கி வைத்து விடுவாள்.

அவள் காட்டும் பாசம் கூட யாருக்கும் தெரியாது… செல்லத்தாயிக்கும் எதிர் வீட்டு விசாலத்திற்கு மட்டும் புரியும்… மத்தவர்கள் எல்லார் பார்வையிலும் ‘திமிரெடுத்த கழுதை’ ‘வில்லங்கம் புடிச்சவ’ ‘வாயத் தொறந்தா எதையாவது வசவு பாடி புடுவா’ இப்படி தான் அவளின் பெயர் இருக்கும்.

“அதற்கு எல்லாம் அஞ்சுபவள் நான் இல்லை… நீ சொன்னா அது உண்மையா? எனக்கு தெரியும் நான் எப்படின்னு யாருன்னு… எனக்கு தெரியும் நான் எந்த வகையில உண்மை அப்படின்னு அவ பாட்டுக்கு அவ பாதையில போயி கிட்டே இருப்பாள்…” 

இது தான் நம் இயலினி… கதையின் நாயகி… வட்டமான முகம் சந்தன நிறத்துடன் தான் பிறந்தவள்… ஆனால் காட்டிலும் வெயிலிலும் வேலை செய்வதால் சிறிது மாநிறத்துக்கும் குறைவாக மாறி போன தேவதை போல் வியர்வையில் மின்னுபவள்… அதை போல் மூக்கு முழியுமாக நன்கு அழகாக தாவணி பாவடையில் இருப்பவள்… காட்டு வேலைகள் செய்வதால் உடல் நன்கு வலுப்பெற்று இருந்தாலும் அவளின் அங்கங்கள் யாவும் பெண்ணிற்கே உரிய நளினமும் அவளிடம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால் என்ன? அவளின் பேச்சியும் தோரணையும் ஆண்களையே மிரட்டி விடுவது போல் இருந்து விடும் அவ்வப்போது… ஒருவேளை தனி ஒரு பெண் தன்னிடம் எந்த ஒரு ஆணும் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காக அவளே அவளுக்கு போட்டுக் கொண்ட வேலியோ என்னமோ தெரியவில்லை… ஆனால் அவள் அப்படித்தான் இருந்து கொண்டு இருக்கிறாள் காரபட்டி கிராமத்தில்.

தனது எக்ஸ்எல் பைக்கிலேயே கடை தெருவுக்குள்ளே நுழைந்தாள்… மாட்டிற்கு தேவையான பருத்திக்கொட்டை புண்ணாக்கு எல்லாம் வாங்கினாள்… அதன் பின் பருத்திக்கு மருந்து அடிக்க களைக்கொல்லி மருந்து வாங்கினாள்… நம்ம ஆள் காய்கறி எல்லாம் வாங்க மாட்டாள்… அரிசியும் வாங்க மாட்டாள்… பருப்புகளை கூட வாங்க வேண்டும் எனில் பாதாம் பிஸ்த்தா கொண்டைக்கடலை கடலை பருப்பு மிளகு சீரகம் மசாலா பொருட்கள் பூண்டு இஞ்சி போன்று அவள் நிலத்தில் விளைய வைக்க முடியாதவைகள் சிலவற்றை மட்டும் வாங்கி கொள்வாள்.

மற்றவைகள் எல்லாம் தானே தனது நிலத்தில் பயிரிட்டு கொள்வாள்… போன வருடம் தான் இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல்லினை விளைச்சல் செய்தாள்… அதனை அறுவடை செய்த பிறகு அதில் உளுத்தம் பருப்பினையும் இடையில் உள்ள பாதையிலும் சுற்றிலும் துவரை ஆமணக்கு செடிகளை விளைச்சல் செய்தாள்… அவைகளை எல்லாம் விற்க மாட்டாள்… அரிசி எண்ணெய் பருப்பாக மாற்றி இருவருக்கு தேவையான பாதியை வீட்டிற்கு என்று வைத்து கொண்டு மீதியை செல்லத்தாயி வீட்டிலையே எடை போட்டு ஊரில் உள்ளவர்களுக்கு வித்து விடுவார்.

அப்படி செலவு ஏதேனும் அதிகம்மாக உள்ளது கையில் கையிருப்பு இயலினி இடம் இல்லை என்றால் மட்டும் செல்லத்தாயி வீட்டிற்கு வைத்து இருப்பதையும் எடுத்து வித்து விட்டால் மட்டும் கடையில் வாங்கும் படி நிலை வந்து விடும்… மத்தப்படி தன் விளைச்சலில் உருவானதையே பயன்படுத்துவதில் இயலினிக்கு ஒரு தனி சந்தோஷம்… கூடதலாக நான் உருவாக்குனத நான் திங்கிறேன் டா என்றே கெத்து காட்டும் குணமும் கொஞ்சம் அதிகம் கொண்டவள் தான்.

இன்றும் அனைத்தையூம் மூட்டை மூட்டையாக வாங்கி வைத்து விட்டு வழக்கமாக வர வைக்கும் குட்டியானை வண்டியை வர வைத்து அனைத்தையும் ஏத்தி வீட்டில் இறக்கி விடும்படி கூறி அனுப்பி விட்டு பச்சி மாவு கோதுமை மாவு அரிசி மாவு என்று சமைக்க தேவையான மாவுகளை வாங்கி எடுத்து கொண்டு வந்தவள் கறி கடை முன் நின்று, “அண்ணா… எப்பையும் போல போடுங்க அண்ணா…” என்றாள்.

அவரும், “வா ம்மா இயலு… என்ன கடை பக்கம் ஒரு வாரம்மா வரல? உடம்பு எல்லாம் சவுக்கியம் தானே… அம்மாயி நல்லா இருக்குல…” என்று விசாரித்து கொண்டே உயிருடன் இருக்கும் ஒரு நாட்டு கோழியை உரிக்கவும் மீன் ஒரு கிலோவை நறுக்கவும் கடை பையனிடம் கூறினார்.

இயலினியும், “எல்லாரும் சவுக்கியம் தான் அண்ணா… என்ன நாணும் வர தான் பார்த்தேன்… அம்மாயி (கிழவி) தான் ஏதோ எனக்கு நல்ல வாழ்க்கை அமையணும்ன்னு விரதம் அது இதுன்னு சொல்லி கவுச்சைக்கு லீவு விட வச்சிடுச்சி… அதான் பருப்புலையே ஓட்டியாச்சி…” என்று கூறிய படியே அருகே இருந்த ஒரு வண்டியில் சாய்ந்து நின்றாள்.

“ம்… அம்மாயி செய்றதுக்கும் அப்பைக்கு அப்ப தலையாட்டு ம்மா… நீயும் கல்யாணம் புள்ள குட்டின்னு ஆகணும்ல… அதுக்கு தான்னே சொல்லுது… எத்தனை நாள் தான்… ஏட்டிக்கு போட்டியான வாழ்க்கையே வாழுவ? கொஞ்சம் நம்பள கொஞ்சுற ஆளு பக்கத்துல இருந்தாலும் நல்லா தானே இருக்கும்… அனுபவத்துல சொல்லுறேன் தாயி தப்பா எடுத்துக்காத…” என்றார் நாப்பது வயது உடைய நடேசன்.

அவர் கூறியதை சிறு புன்னகை உடன்னே கேட்ட இயலு, “இதுல தப்பா நினைக்க என்ன அண்ணா இருக்கு? எல்லாரும் ஒரு பொண்ண பார்த்தா சொல்லுறது தான்னே… என் வயசுல உள்ள பையன்ன பார்த்தால் வேலைக்கு போயி வீடு கட்டி சொத்து எல்லாம் வாங்கி செட்டில் ஆனதுக்கு அப்பறம் தான் கல்யாணம்ன்னு சொல்லுற உலகம் தான்னே பதினெட்டு இருவது வயசு பொண்ணுக்கு ஆனாலே வீட்ட விட்டு துறத்த பார்க்குது…” என்றாள்.

அவள் கூறியதை கேட்ட நடேசனும், “ம்… அதுவும் சரி தான்… ஆமாம்… போன தெடவ பார்க்கும் போது கீழ தெரு காரன் கிட்ட இடம் வாங்குறத பத்தி பேசுனியே… என்ன ஆச்சி?” என்று அவர் கல்யாண பேச்சியை விட்டு வேறு பேச்சிக்கு மாறினார்.

இப்படி தான் எதிரே உள்ள பழக்க பட்டவராக இருந்தாலும் தனக்கு பிடிக்காத பேச்சியை ஆரம்பித்தால் சிரித்த முகம்மாகவே ஏதாவது கூறி அவர்களாகவே மாத்திக்க வைத்து விடுவாள்… அவரும் பேச்சியை மாத்தியதும், “அத போன வாரம் தான் அண்ணா வாங்கி எழுதுனேன்… அதுக்குள்ள இடையில புகுந்து எத்தனை பேர் வாங்க போட்டிக்கு வந்தானுங்க தெரியும்மா அண்ணா? ஏன் என் தெரு ஆள் கூட வந்தாரே…” என்றாள்.

இவ்வாறு இயல் கூறியதிலே யாரை கூறுகின்றாள் என்று புரிந்து கொண்ட நடேசன், “என்ன தான் அவர் உன் கிட்ட போட்டி போட்டாலும் உன் கிட்ட யாராலையும் ஜெயிக்க முடியாது இயலு… நீயே சுயம்மா உழைத்து முன்னேறுவதை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு ம்மா…” என்று அவர் பேச பேச

பட்டென, “அண்ணா… ஒரு மனுஷன் நாசம்மா போக காரணம்மே முகஸ்துதியில மயங்குறது தான் அண்ணா… வேணாம் ண்ணா… அந்த இடத்துக்கு இப்பையே நான் போக விரும்பல அண்ணா…” என்றே கூறி விட அவர் வாய் விட்டே சிரித்து விட்டார்.

அவரும் காரபட்டியை சேர்ந்தவர் தான்… அவர் தனது தொழிலுக்காக கடந்த ஐந்து வருடம்மாக டவுன் வந்து தங்கி விட்டார் மனைவி பிள்ளைகளுடன்…  அவருக்கு இயலினி பிறந்ததில் இருந்தே தெரியும் அவளை பற்றி… கூடவே இவளுடன் அவ்வப்போது பேசும் போது அவளின் குணத்தை பத்தியும் நன்கு தெரிந்தே வைத்து இருந்ததால் அவள் இவ்வாறு பேசியதை பெரியதாக நினைக்க வில்லை.

அவரும் மலர்ந்த முகம்மாகவே, “நான் என்ன தான் முகஸ்துதி பாடினாலும் என் காரபட்டி இயலு புள்ள மயங்காதுன்னு எனக்கு தெரியாதா என்ன? ஆமாம்… நாணும் கேட்கணும்ன்னு நினைத்தேன்… அது என்ன உன் பைக்ல மருந்து டப்பா இருக்கு? நீ தான் இந்த மாதிரி மருந்துகள எல்லாம் பயன்படுத்த கூடாதுன்னு சொல்லுவ… அப்பறம் எதுக்கு மருந்து? எவனுக்காவது ஊத்தி விட போறியா என்ன?” என்றே கேட்டார்.

கதை முழுக்க முழுக்க பெருசாகவும் இல்லாமல் சிறுசாகவும் இல்லாமல் இயலினியின் வாழ்க்கையை சுற்றியே அழகாக இருக்கும் நண்பர்களே… தொடர்ந்து படித்து கருத்துகளை தரும் அனைவருக்கும் நன்றிகள் 😍

8 thoughts on “அரளிப்பூ 3”

  1. CRVS 2797

    அய்யய்யோ..! யாரை..? எலியையா…? இல்லை மனுசனையா…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *