Skip to content
Home » அரளிப்பூ 7

அரளிப்பூ 7

இயலினி தனது வீட்டிற்கு வந்து சேரும் வரை தான் அந்த காவலனை பற்றி நினைத்து கொஞ்சம் பயந்து கொண்டு இருந்தாள்… ஆனால் அதன் பிறகு அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை… ஆமாம் அந்த கடை தெருவில் நிறைய திருட்டு போகுது… செயின்ன அறுத்து கிட்டு போறாங்க… பர்ஸ் திருடுறாங்க என்று எல்லாம் காவல் நிலையத்தில் புகார் அழித்து விட்டார்கள்.

அவர்களும் குற்றவாளியை தேடுவதாக சொல்லி இருந்தனர்… இதே பல மாதங்கள் ஓட அந்த தெருவில் கடை வைத்து இருக்கும் ஆட்களே அரசுக்கு குறைந்தது அந்த தெருவில் சிசிடிவி கேமராவாவது வையுங்கள் என்று மனுவும் எழுதி குடுத்து விட்டனர்… அவர்களும் அதை போட தான் நினைத்தனர்… ஆனால் என்ன? அதுக்குள்ள போடாதிங்க… தேர்தல் வர போகுது… இன்னம் சில நாட்கள்ல நான் அந்த ஏரியா பக்கம் எல்லாம் மீட்டிங் போட போவேன்.

அப்போ மக்கள் கேட்பாங்க… அப்போ நான் உடனே அத செய்றதா சொல்லி இன்னம் சில வாக்கு உறுதிகள் எல்லாம் தந்த பிறகு முதல் வேலையாக இதை செய்வதாக இந்த சிசிடிவி மேட்டர செய்து விடலாம் என்று கூறி விட வேலைபாடுகள் இழுத்தடித்து கொண்டு இருந்தது… அதனால் சிசிடிவி கேமெரா பயம் மில்லை.

சரி மற்ற கடைகளில் கூடவா வைக்க வில்லை என்று கேட்டால் வைத்து இருக்கின்றார்கள் தான்… ஆனால் என்ன? அந்த சிசிடிவி கேமராவும் பெயருக்கென்றே தான் வைத்து இருக்கிறார்கள்… அப்படியே சரியாக வேலை செய்யும் இடத்தில் திருடன் தான் திருட மாட்டேன்னே… அதனால் இயலினி அடித்த இடத்திலும் எந்த சிசிடிவி கேமெராவும் இல்லை என்பது வரை அறிந்தே இருந்த இயலினி அவனால் முடிந்ததை செய்யட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அதை அசால்டாக விட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

ஏற்கனவே வண்டியில் அனுப்பிய மூட்டைகள் எல்லாம் இறக்கி வைத்து விட்டு வண்டிக்காரங்க பாட்டி செல்லத்தாயிடம் பணம் வாங்கி கொண்டு சென்று விட்டனர்… ஆகையால் இயல் வந்து பைக்கை நிறுத்தியதும் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் வீட்டில் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

அவளின் பாட்டி செல்லத்தாயோ பேத்தி சொல்லி சென்றது போலவே அழகாக தன் பேத்தி வந்ததும் சமைக்க வேண்டும் என்று கறி குழம்பு மீன் வறுவல் செய்ய தேவையான அனைத்து பொருளையும் தனி தனியாக வறுத்து அவற்றை அம்மியில் வைத்து அறைத்து எடுத்து அழகாக உருட்டி உருட்டி வைத்து இருந்தார்.

வாங்கியதை இரு கரத்திலும் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வரும் போதே, “கிழவி… அங்கையே என்ன பண்ணுற? இங்க வந்து ஒரு கை போடு… அப்பறம் வண்டிக்கார அண்ணன் கிட்ட எவ்வளவு குடுத்த? நீ போன் பண்ணும் போது நான் போன்ன வேற கவனிக்கல… அதான் சொல்ல முடியல…” என்று காட்டு கத்து கத்தி கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

அவரும், “அடியே இயலு… நீ என் கிட்ட பேசுறியா இல்ல ஊருக்கே கேக்கணும்ன்னு பேசுறியா டி… குடு குடு… இந்த தண்ணீய குடி… பாரு எம்புட்டு வேர்த்து இருக்கு… என்று கூறியே இடது கரத்தால் தண்ணீரை நீட்டி கொண்டு வலது கரத்தில் எடுத்து வந்த துண்டால் தன் பேத்தியின் முகத்தை துடைத்து விட்டார்.

இயலினியும் அனைத்தையும் ஓரம் வைத்து விட்டு தண்ணீரை வாங்கி ஒரு சொம்பு முழுவதையும் உள்ளே இறக்கினாள்… இயல் இப்படி தான் வேளியே எங்காவது சென்றால் பச்ச தண்ணீர் கூட குடிக்க மாட்டாள்… ஏன் எனில் வயசு புள்ளை எவன் எப்படின்னு சொல்ல முடியாது என்றே ஜூஸ் கூட குடிக்க மாட்டாள்.

வெறும்மென பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து சமைத்து உண்ணுவாளே தவிர எதையும் கடையில் வாங்கி சாப்பிட மாட்டாள்… இவைகளுக்கு எல்லாம் கஞ்சத்தனம் பண்ண கூடியவள்… வெளியே இரனூறு ரூபாய்க்கு வாங்கி ஒருவேளை திம்பதுக்கு இரனூறு ரூபாய்க்கு பொருள் வாங்கி வந்து எது செய்தாலும் இரண்டு வேளை திங்கலாம்… தின்பண்டங்கள் கூட வீட்டிலே செய்து விட்டால் உடலுக்கு நல்லது… நான்கு ஐந்து நாட்கள் வைத்து சாப்பிடலாம்… காசும் மிச்சம் என்று நினைப்பவள் தான் நம்ப இயலு.

இவளின் இத்தகைய செயலால் பாவம் இயலினியின் பாட்டி செல்லத்தாயி தான் செஃப் தாமுக்கே டப் குடுக்கும் அளவிற்கு வித விதம்மாக சமைக்கும் அளவிற்கு அந்த தெருவிற்கே ஆளாக மாறி விட்டார்… ஆனால் என்ன அவர்கள் வாசம் மட்டும் தான் பிடிக்கலாம்… ஏன் எனில் தன் பேத்திக்கு மட்டும்மே சமைத்து போடுவதே தனது கடமை என்று இயலினிக்கு அன்னபூரணியாகவே மாறி விட்டார்… இப்போதும் பாருங்க பேத்தியின் முகத்தை துடைத்து விட்டவர் அவளின் கையிலே துண்டினை திணித்து விட்டு இயலினி வாங்கி வந்த கறி வகைகளை எடுத்து கொண்டு சென்று விட்டார்.

போனதும் வேக வேகம்மாக அதை அனைத்தையும் அலசி கழுவி அழகாக சமைக்கவும் ஆரம்பித்து விட்டார்.

அவரின் பின்னாடியே போயி, “என்ன கிழவி? அந்த அண்ணனுக்கு காசு குடுத்தியா இல்லையா?” என்று கேட்க

செல்லத்தாயும், “உன்னைய கேட்காம நான் எப்படி குடுப்பேன்? அதான் உனக்கு போன் பண்ணுனேன்… நீ எடுக்கலன்னு சொன்னதும் மூட்டைய எல்லாம் இறக்கி வச்சிட்டு அந்த தம்பி நான் சாய்ந்திரம் வந்து வாங்கிக்கிறேனு சொல்லிட்டு போயிடுச்சி…” என்றவரை என்ன சொல்லுவது என்றே தெரிய வில்லை.

அவர் எப்போதும் இப்படி தான் உழைக்கும் தன் பேத்திக்கு தெரிந்து தான் தான் பணம் சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும் செய்ய வேண்டும்… அவளை கேட்காமல் பணத்தில் கை வைக்க கூடாது என்று செயல்படுபவரை முறைக்க மட்டும்மே செய்து, “எதையோ பண்ணி தொலை… அந்த அண்ணனுக்கு ஆறு நூறு குடுக்கணும்… நான் இல்லன்னாலும் அடுத்த தெடவ அவர் வரப்ப குடுத்துடு…” என்று கூறிய படியே துண்டினை தனது கழுத்தை சுற்றி போட்டு கொண்டு

“சரி கிழவி… அங்க மீனாச்சி வேற கூவா கூவிக்கிட்டு இருக்கும் நான் இன்னம் வரலன்னு… நேரம் வேற ஆச்சி… நான் போயி அதுங்களுக்கு எல்லாத்துக்கும் தண்ணீ காட்டி தீனி போட்டுட்டு எல்லாத்தையும் பாத்துட்டு மதியமா வரேன்…” என்று கூறியே மதியம் பன்னிரெண்டு மணிக்கு மேல் தான் காட்டுக்கே சென்றாள்.

அந்த வெயிலிலும் தனது காட்டிற்கு சென்றதும் கையில் அருவாளை எடுத்து கொண்டு அவள் மாடுகளுக்கு தீனியை அறுத்தாள்… கூடவே, “என்ன பசிக்குதா? இரு இரு வெட்டி கிட்டு வறேன்… ஹாங் மீனு இன்னைக்கு என்ன ஆச்சி தெரியும்மா? ஒரு இன்ஸ்சு என் கிட்ட சேட்டை காட்டுனான்… ம்ம்… எப்படி உனக்கு சொல்லுறது… ஹாங்… இந்தா இந்த காளையன் எப்படி உன்னைய வம்பு பண்ணுறான்… அந்த மாதிரியே பண்ணுனான்… நானும் விடுவேன்னா? அவன் வால ஒட்ட நறுக்கிட்டேன்ல…. ஹ… ஹ… இனி எந்த பொண்ணு கிட்டையாவது சேட்டை பண்ண நினைத்தா கூட அவன் என்னைய நினைச்சே பத்தடி தள்ளி போவான்…” என்று பேசிய படியே திவனத்தை நறுக்கி அனைத்து மாடுகளுக்கும் போட்டு பசியாற்றினாள்.

அதன் பின் மாடுகள் இருந்த கொட்டகையில் இருந்த சாணிகளை எல்லால் சுத்தம் செய்து விட்டு அலுப்புக்கு ஒரு குளியலை கேணியில் போட்டு விட்டு இரண்டு இரண்டரைக்கு மேல் தான் வீடு வந்து சேர்ந்தாள்.

தெருமுனையை அடையும் போது எல்லாம் இயலினியின் மூக்கில் வாசனை பீறிட்டு கொண்டு வந்தது… அந்த வாசனையை இமைகளை மூடி இழுத்தே பிடித்து கொண்டு மிகவும் சிரம பட்டே வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய இயலினி எதிர் வீட்டில் இருந்த விசாலத்தை பார்த்தாள்.

அவர் இவள் பக்கம் கூட திரும்ப வில்லை… ஏன் பார்த்து கண்ண திறந்து கிட்டு வாடின்னு திட்ட கூட இவள் பக்கம் அவர் திரும்ப வில்லை… அதை கண்டு கொண்டாள்… அவரும் இயலினி வந்து விட்டாள் என்பதை அறிந்தும் அவர் திண்ணையில் அமர்ந்து கொண்டு, “இப்ப இவ என்னைய சாப்பிட கூப்பிடுவாளா? மாட்டாளா? ம்… பார்க்கலாம்…” என்பது போலவே தான் அவர் எங்கோ வேடிக்கை பார்ப்பது போலவே உட்கார்ந்து இருந்தார்.

அவர் எந்த நேரம் எப்படி எப்படி எல்லாம் நினைக்க கூடியவர் என்பதை அறியாதவளா நம்ப இயலு புள்ள… எல்லாம் நல்லா தெரிந்தே நீ விடா கண்டன்னா நான் கொடா கண்டன் என்றே நினைத்து கொண்டு அவள் பாட்டுக்கும் வீட்டின் உள்ளே நுழைந்து விட்டாள்… பின்ன என்ன? காலையில போகும் போதே சொல்லிட்டு தானே போனாள்.

அப்புறம் என்ன? சும்மா சும்மாவா வெத்தலை பாக்கு வைப்பாங்க என்று நினைத்தே முகத்தை ஒரு வெட்டு வெட்டி கொண்டு உள்ளே சென்றாள்… ஆனாலுல் உள்ளே சென்றதும் தன் பாட்டியிடம், “போ… போயி அந்த அத்தைய இழுத்து கிட்டு வா… இல்லாட்டின்னா இத வைத்தே வம்பு வளர்க்கும்… போ… போ…” என்றே தன் பாட்டியை ஏவினாள்.

அவரும், “இவளுங்க இரண்டு பேரும் எந்த ஜென்மத்துல சக்காளத்திங்களா இருந்து இருப்பாளுங்களோ தெரியல… எங்க இருந்தோ என் கிட்டன்னு வந்து என் உயிர வாங்குறாளுங்க…” என்று வாய் விட்டே திட்டி கொண்டு செல்லத்தாயி வெளியே சென்று மூக்கு சிந்த தயாரான விசாலத்தை முறைத்தே

“அடியே… கூறு கெட்டவளே… வெங்காயம் உரிக்க பூண்டு உரிக்க எல்லாம் வந்தவளுக்கு திங்க வர நேரம்மில்லையோ… ஒழுங்கா வந்து தொலை டி… புள்ள வேற பசியில வந்து இருக்கா… இதுல இந்த வெட்டி வீராப்புக்கு ஒரு குறைச்சலும் இல்ல… வா டி…” என்றே கடிந்து கொண்டு அழைத்தார்.

அவரும் தனது முந்தியை ஒரு உதறு உதறி கிட்டு, “வறேன்… வறேன்… வர தான் எழ போனேன்… அதுக்குள்ள இம்புட்டு வசவு பாடி புட்ட கிழவி… இரு உனக்கு இருக்கு ஒரு நாளு…” என்று செல்லத்தாயின் செவியில் விழும்படியே முணு முணுக்கும் வித்தையை கத்து அறிந்த விசாலம் நன்றாக முணு முணுத்து கொண்டே செல்லத்தாயை கடந்து உள்ளே சென்றார்.

சென்ற விசாலத்தின் மனதில் இயலினி தன்னை அழைத்ததில் ஒரு சின்ன சந்தோஷம் இருக்க தான் செய்தது.

6 thoughts on “அரளிப்பூ 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *