அரளிப்பூ 9
“என்ன அரசாங்கத்து மேலையே கேஸ் போட்டு இருக்காளா? சரியான வில்லங்கம் பிடிச்சவ போலையே… வாய திறந்தாலே இப்படி கவ்வுறானுங்களே… எதுக்கு நமக்கு வம்பு? அப்படியே ஓடிடு…” என்றே அந்த பெண் ஓடியே போயி விட்டாள்.
ஆனால் இயலினிக்கு தான் தலைக்கு ஏறிய கோவம் சிறிதும் குறையாமல் அப்படியே இருந்தது… ஆகையால் போனவளையே வெறிக்க பார்த்து கொண்டு இருக்க விசாலம் அவள் பார்வையை பிடித்து வீட்டை நோக்கி திருப்பி, “எவளோ ஏதோ சொல்லுறதுக்கு எல்லாம் ஏன் டி உன்னைய நீயே கஷ்ட படுத்திக்கிற… உள்ள போடி…” என்றே தள்ளினார்.
சரியாக அப்போதே அவளின் ஒரு கரத்தை வலுவாக பிடித்து இழுத்து அவளின் கன்னத்தில் பலார் என்று ஒரு அறை விழுந்தது… அந்த ஒரு அறையிலையே ஐந்து விரல்களும் இயலினியின் கன்னத்தில் பதிந்தது.
அறைந்த வேகத்தில் நிமிர்ந்தவளின் பார்வை அறைந்தவரின் மீது அனலை கக்கி கொண்டு இருக்க விசாலம் தான், “அண்ணா…” என்றே கத்தினார்.
உடனே செல்லத்தாயி தன் பேத்தியை தன் பின் இழுத்து நிறுத்தி அறைந்த தன் மருமகன் இடம், “எங்க வீட்டு பிரட்ச்சனைய நாங்க பார்த்துக்குறோம்…. அதுல எதுக்கு நீங்க தலையிடுறீங்க? அதான் அவளுக்கும் உங்களுக்கும் எதுவும் இல்லன்னு ஆச்சில… அப்பறம் எதுக்கு அவள அடிக்க எல்லாம் செய்றீங்க?” என்று கேட்டவருக்கு அழுகையாக வந்தது.
அறைந்தவரோ செல்லாத்தாயின் பின் இருந்த இயலினியை விழிகள் சிவக்க முறைத்தே, “ஏய்… கடைத்தெருவுல என்ன பிரட்ச்சனை பண்ணிட்டு வந்த?” என்றே கேட்டார்.
இந்த பிரட்ச்சனை என்ன என்று தெரிய வில்லை என்றாலும் செல்லத்தாயி, “என் பேத்தி எந்த பிரட்ச்சனையும் பண்ணி இருக்க மாட்டா… அவ கிட்ட தான் யாராவது ஏதாவது பண்ணி இருப்பாங்க… அதுக்கு அவள் பதில் தான் சொல்லி இருப்பா… அவ்வளவு தான்… அவள் எந்த பிரட்ச்சனையும் பண்ண மாட்டா…” என்றார் தன் பேத்தியை விட்டு குடுக்காம.
ஆனால் நின்றவரோ செல்லத்தாயி சொல்லுவதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளவே இல்ல… அதே போல் இயலினியை முறைப்பதையும் நிறுத்த வில்லை… பற்களை கடித்து, “என் பேர கெடுக்கவே சனியன் பிறந்து தொலைச்சி இருக்க… ஒரு நாள் உன்னைய வச்சி பிரட்ச்சனை இல்லாம நிம்மதியா இருக்க முடியுதா எனக்கு… ஆமாம்… அங்க எவனோட கைய பிடிச்சி கிட்டு திரிஞ்ச…” என்ற விஷ வார்த்தைகள் தான் அவரின் வாயில் இருந்து வந்தது.
அவளின் பார்வையில் இருந்தும் கோபம் சிறிதும் குறை வில்லை… ஆனால் இதழிலோ ஒரு புன்னகை அவளுக்கு இருந்தது… அந்த புன்னகையுடனே, “என்ன சொன்னீங்க எவன் கைய புடிச்சி கிட்டு இருந்தேன்னா? நான் யார் கையை புடிப்பேன்… எல்லாம் நான் கட்டிக்க போறவன் கைய தான்… ஏன் அதுலையும் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுச்சா என்ன?” என்றே கேட்டாள்.
அவளின் இந்த பேச்சியில் மேலும் அவருக்கு சினமே வர செல்லத்தாயின் பின்னிருந்த இயலினியின் கரத்தை பிடித்து இழுத்து தன் முன் நிறுத்தி விட்டார் மீண்டும் ஒரு அறை… அறை விழுந்த கன்னத்தில் தன் இடது கரத்தை வைத்து தேய்த்த படியே, “கிழவி… இன்னைக்கு கடைத்தெருவுல நடந்த கதை உனக்கு தெரியுமா? இன்னைக்கு காலையில கடத்தெருவுல ஒரு திருடன் என் கழுத்தை அறுத்து என் செயின அறுத்தான்…” என்றதுமே பதறி போயி செல்லத்தாய் தன் பேத்தியின் கழுத்தை பார்த்தார்… காயம் இருந்தது.
“அய்யோ…” என்று துடித்து போயி அந்த காயத்தில் கை வைக்க செல்ல அந்த கையைப் பிடித்துக் கொண்டு தன்னை அறைந்த தன்னைப் பெற்றவரை பார்த்தாள்… அவருக்கோ அவள் கூறிய பின்பும் அவளின் காயத்தை பார்க்க கூட தோன்ற வில்லை.
மாறாக, “ஏதாவது கதை கட்டாத… அத்தனை பேருக்கு நடுவுல ஒருத்தன் கைய புடிச்சி கிட்டு பேசி கிட்டு நின்ன… அத நானே என் கண்ணால பார்த்தேன்… சரி அப்படி திருடு போச்சின்னா… உன் கழுத்துல எப்படி செயின் இருக்கு?” என்றே அரைகுறையாக கண்டதை வைத்து இயலினியை குற்றம் பேச வந்து விட்டார்.
இயலினி அதற்கும் அசராமல் தன் காயத்தை கண்டு கலங்கிய தன் பாட்டியிடம், “அச்சோ கிழவி… நீ பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல… எல்லாம் சின்ன காயம் தான்… என் கழுத்துல செயின் அடிச்சுட்டு தப்பிச்சு ஓடுறவன உன் இயலு புள்ள சும்மா விட்டுடும்மா என்ன? அம்புட்டும் என் சுய உழைப்புல… நான் என்ன? உன் மருமகன் கிட்ட இருந்து இல்லன்னா உன் சம்பந்தி கிட்ட இருந்து எல்லாமா சொத்த வாங்கி சேர்த்தா வச்சி இருக்கேன்… போனா போகுதுன்னு விட…” என்று கூறும் போதே
விசாலாம், “அடியே கழுதை வாய மூடுடி… தேவையில்லாதத பேசி உடம்ப புண்ணாக்கிக்காத… அண்ணா… நம்ம புள்ளைய பத்தி நமக்கு தெரியாதா அண்ணா… அப்படி எல்லாம் இந்த கூறு கெட்டவ பண்ண மாட்டா அண்ணா… நீ ஏதோ தப்பா நினைக்கிற அண்ணா…” என்றே இயலினியையும் அவளின் அப்பாவான தனது அண்ணன் சதாசிவத்தையும் அமைதியாக்க பார்த்தார்.
ஆனால் சதாசிவமோ தனது தங்கையையும், “அங்க என்ன நடந்ததுன்னு தெரியாம நீ பேசாத… நான் என் கண்ணால பார்த்தேன்… அங்க அவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல இவ ஒரு பையன் கைய புடிச்சி பேசி கிட்டு இருந்தா… எனக்கு எவ்வளவு அசிங்கமா இருந்தது தெரியுமா? என் மானமே போச்சி…” என்றார்.
பார்த்ததாக அண்ணன் கூறியதும் விசாலத்தால் அதற்கு பதில் எதுவும் கூற இயல வில்லை… அவர் இயலினியை அப்படியா என்பது போலவே பார்க்க இது தான் அண்ணன் தங்கை புத்தியே என்று இயலினி வேதனையுடன் தனது பாட்டியை பார்க்க அவர் ஒன்னும் மில்லை சின்ன காயம் தான் என்று கூறிய பின்பும் தன் பேத்தியின் காயத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தார் விழிகளில் நீருடன்.
இயலினியை பொறுத்த வரை இந்த உலகத்திலேயே உண்மையான அன்பும் பாசத்துடனும் இருக்கும் அவளுக்காக இருக்கும் ஒரே ஜீவன் அவளின் பாட்டி மட்டும் தான்… தனது பாட்டியின் தொளில் கரத்தை போட்டு அணைத்து பிடித்த படியே, “எவனோ ஒருத்தன் கைய புடிக்கல அப்பா… உங்க மானத்த ஏற்கனவே வாங்குன உங்க இந்த பொண்ணே தான் இன்னைக்கும் உங்க மானத்த வாங்கியே தீருவேன்னு ஒரு போலீஸ்காரன் கைய புடிச்சி கொஞ்சிக்கிட்டு இருந்தேன்… அதையும் சேர்த்து தெளிவா நீங்க பார்க்கலையா? வேணும்ன்னா அவர வீட்டுக்கே வர வைக்க வா?” என்று கேட்டதில் அனைவரும் கொஞ்சம் ஆடி தன் போனார்கள்.
இயலினி வீம்பு பிடித்தவள்… அவளை அவமான படுத்தும் அவளின் தந்தையை அவமான படுத்த சொன்னது போல் செய்யவும் தயங்க மாட்டாள்… அதை பெத்தவர் உணராமலா இருப்பார்… அப்படியே வாயை மூடி கொண்டார்.
ஆனால் அவர் மூடி கொண்டால் தாணும் வாயை மூடணும்மா என்ன? என்றே நின்ற இயலினி, “யாருக்கு தெரியும்… இப்போ நீங்க எப்படி என்னைய பெருமை படுத்தினீங்களோ அதே மாதிரியே இன்னைக்கு நைட் வரும் நியூஸ்ல கூட உங்க மகள் போட்டோ பேர் எல்லாம் போட்டு ஒரு போலீஸ்காரனின் கையை பிடித்து கொஞ்சிய மங்கைன்னு வந்தாலும் வரும் உங்கள பெருமைப்படுத்த…” என்றதும்மே அவரின் முகம் மேலும் இறுகியது.
அதைக் கண்டதும் அவரை கஷ்ட படுத்தி விட்ட மகிழ்வில் மேலும் பாவமான முகத்தை வைத்தது போலவே நடித்து, “அச்சச்சோ… எப்படி உங்க மகள்ன்னு என்னைய சொல்லுவாங்க… நான் தான் ஆதார் கார்டில் இருந்து ரேஷன் கார்டில் இருந்து எல்லாத்துலயுமே என்னைய பெத்த என் அப்பாவான உங்க பேரையே போடாம இருக்கேன்னே… அப்பறம் எப்படி உங்க பேர என் பேரோட சேர்த்து சொல்லி உங்கள பெருமை படுத்துவாங்க… ம்ச்சே… மாட்டாங்க… மாட்டாங்க… எவ்வளவு பெரிய பாவம் பண்ணிட்டேன் பாருங்க ப்பா…” என்றே பேச பேச அவரோ அவளின் கழுத்தை பிடித்து நெறித்து விட்டால் என்ன? என்றே முறைத்து கொண்டு இருந்தார்.
ஆனால் அவரின் கோவத்தை காட்ட முடியாமல் அவர் நிற்கும் இத்தகைய நிலையை வெகுவாக விரும்பும் அவரின் மகள் இயலினி உதட்டை பிதுக்கி, “அப்பா… நீங்க எதுக்கும் கவலை படாதிங்க ப்பா… உங்க கௌரவம் உங்க பெருமை உங்க மானம் எல்லாம்மே என் பேரோட சேர்ந்து தான் இருக்குன்னு எனக்கு இப்போ தான் ப்பா புரியுது… இப்ப நெனச்சா நான் தேவையில்லாம உங்க பேர விட்டு என் பேர பிரிச்சி மிக பெரிய தப்பு பண்ணிட்டேன் தோணுது அப்பா… பாருங்களேன்… இந்த ஊர்ல மட்டும் தான் உங்க பேர என்னால பெருமை படுத்த முடிந்தது… இதே உங்க பேர என் பேருடைய வச்சிருந்தா… நான் பாட்டுக்கும் முதல்ல இந்த தெரு அடுத்து ஊரு அடுத்து மாவட்டம் அடுத்து நாடு அப்புறம் இன்டர்நேஷனல் லெவல்ல கூட உங்க பேர நான் பெருமை படுத்தி இருப்பேன் ப்பா… நான் வேணும்ன்னா மறுபடி உங்க பேர என் பேரோட சேர்த்துகவா?” என்றே விஷம் தடவி பேசிய தான் வெறுத்து ஒதுக்கிய மகளின் முன் துண்டை உதறி தன் தோளில் போட்டு கொண்டு
“ச்சி… பொம்பள புள்ளையா நீ எல்லாம்… உன்னைய பெத்ததுக்கு நொடிக்கு நொடி நான் சாகுறேன்… உன்னைய ஏன் டா பெத்தேன்னு நொடிக்கு நொடி நான் நினைச்சி கிட்டு இருக்கேன்…” என்றே கத்தி விட்டு இயலினி வீட்டின் அருகில் இருந்த அவரின் வீட்டின் உள்ளே நுழைந்து கொண்டார்.
“போ… போ… காத்து வரட்டும்…” என்பது போலவே இயலினியும் இடுப்பில் தாவணியை தூக்கி சொருகி கொண்டு, “வா கிழவி… இப்ப தான் ரொம்ப பசிக்குது… அது வந்தா வருது… இல்லாட்டி மருமக கிட்ட இல்ல உன் மகள் கிட்ட மொத்து வாங்கி கிட்டு திங்குது…” என்று கூறியே உள்ளே சென்று விட்டாள்.
செல்லத்தாயி தன் பேத்தியின் பின்னாடியே செல்ல விசாலமும் அவர்களின் பின்னாடியே வீட்டின் உள்ளே நுழைந்தார்.
வீட்டின் உள்ளே சினம்மாக வந்த சதாசிவத்தின் முன் அவரின் மனைவி தண்ணீயை நீட்ட அவரோ அதை தட்டி விட்டு சோபாவில் அமர்ந்தார்.
அவரின் கோவத்த கண்ட அவரின் மனைவி, “உங்களுக்கு இது தேவையா? அவள தான் நீ யாரோ நம்ப யாரோன்னு சொல்லி அத்து விட்டு முடிச்சாச்சி… அதுக்கு அப்புறமும் எதுக்கு நீங்க அவ கிட்ட போயி எதையாவது கேள்வி கேக்குறீங்க?” என்றே சிடு சிடுத்தார்.
“ஏய்… நீ வாய மூடுடி… உனக்கு ஒன்னும் தெரியாது…” என்று கத்த அவரின் மனைவியும், “எனக்கு தெரிஞ்சி என்ன? தெரியாட்டி என்ன? இன்னும் நீங்க ஒரு தடவை இந்த மாதிரி எல்லாம் ஏதாவது அவ கிட்ட போயி வில்லங்கம்மா தப்பா பேசுனீங்கன்னா… அவ சொன்ன மாதிரி உண்மையாலுமே உங்க பேரையும் என் பேரையும் அவளோட எதுலையாவது சேர்த்து விட்டு அப்பறம் பார்வதி சதாசிவம் தம்பதியர் அவர்களின் சிமந்த புத்திரி இயலினி சதாசிவம் இத செஞ்சா அத செஞ்சான்னு அவ எங்க எங்க போயி வழக்கு வளர்க்குறாளோ அங்க எல்லாம் நம்ம மானம் போகும்… பார்த்து அவ கிட்ட போகாம இருங்க… இல்லாட்டி அவளுக்கு போயி துணையா நில்லுங்க… அத விட்டுட்டு இந்த மாதிரி கண்டத போயி அவ கிட்ட கேட்டு கேட்டு ஏதோ வெறும் கூடா நடந்து கிட்டு இருக்குறவளையும் உங்க கோவத்தால பாடையில் படுக்க வச்சிடாதீங்க…” என்று விட்டு வீட்டின் பின்னாடி சென்று விட்டார்.
Appa na ena ethu nu visarikajum atha vitu eduthathum ippadi adikiratha adichathum illama thappa pesuraru vena poitingala apram ethuku akkarai iruka mari vanthu kekanum
thank you sis
ஆத்திரம் கண்ணை மறைக்கிறபோது, அறிவுக்கு கொஞ்சமாச்சும் இடத்தை கொடுக்கணும்…. ஆனா, அது இந்த சதாசிவம் கொஞ்சம் கூட தெரியுறதில்லை…. என்னத்தை சொல்ல…???
😏😏😏
உண்மை தான் சகி
Nice epi👍
👌👌👌👌