Skip to content
Home » அரிதாரம் – 13

அரிதாரம் – 13

கேரவேனில் வைத்து ஆராதனாவிடம் அடி வாங்கிய ராஜேஷ்  இறுகிய முகத்துடன் வெளியே வந்தான். 

அவனைப் பார்த்த ரகு, “என்ன அசிஸ்டன்ட் டைரக்டர் சார்? எங்க மேடம் கேரவேனில் இருந்து வர்றீங்க. கன்னம் கன்னிபோய் இருக்கு” என்று நக்கலாக கேட்டான். 

அவனை முறைத்த ராஜேஷ் “உன் வேலையை பார்த்துக்கிட்டு போடா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். 

அன்றைய படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகு, ரகுவும் அவன் வழக்கமாக செல்லும் கிளப்புக்கு வர, அங்கு ஏற்கனவே ராஜேஷ் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். 

ரகுவும் அவன் அருகில் சென்று அமர்ந்து தனக்குத் தேவையானதை சொல்லிவிட்டு, “என்ன சார்? இன்னைக்கு ரொம்ப உள்ள போயிருக்கு போல இருக்கு” என்று அவரிடம் பேச ஆரம்பித்தான். 

அவனை முறைத்துப் பார்த்த ராஜேஷ் “அவளுக்கு இருக்குடா. அவளை நான் நாசம் பண்ணாம விட மாட்டேன். என்னையே செருப்பை கழட்டி அடிக்கிறாளா?” என்ற கோபமாக சொல்லி அருகில் இருந்த மதுபானத்தை எடுத்து வேகமாக வாயில் சரித்துக் கொண்டான். 

அவன் பேசுவதிலேயே ரகு புரிந்து கொண்டான், இன்றும் இவன் அடி வாங்கி இருக்கிறான் என்று. நக்கலாக சிரித்த ரகு “எப்பொழுதும் கையால அடி வாங்குவீங்க. இந்த முறை செருப்பா? பேஸ் பேஸ் சூப்பர்” என்று மேலும் அவனை வெறுப்பேற்றினான். 

“டேய்” என்று அவனது சட்டை காலரை பிடிக்க, 

“விடுங்க சார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் என்று இப்படி டென்ஷன் ஆகி குடிச்சுகிட்டு உடம்பை கெடுக்குறீங்களே” என்று சொல்லி தனக்கு வந்த மதுபானத்தை எடுத்து குடித்தான். 

“என்னடா இவ்வளவு அசால்ட்டா சொல்லிட்ட. எவ்வளவு தடவை அவள் கிட்ட நானே கெஞ்சிகிட்டு இருக்கேன் தெரியுமா?” என்றான் ராஜேஷ் வாய் குளறியபடி. 

“உங்கள யாரு இப்படி அவசரப்படச் சொன்னது? நானும் அதுக்கு தான் பொறுமையா காத்துகிட்டு இருக்கேன்” என்றான் விஷமமாக சிரித்தபடி. 

ரகுவின் பேச்சைக் கேட்டதும் அடித்த போதை சட்டென்று இறங்க, “என்னடா சொல்ற? நீயும் பிளான் பண்றியா?” என்று பல்லை இளித்துக் கொண்டு கேட்டான் ராஜேஷ். 

“ஆமா, நான் பிளான் பண்ணிட்டு தான் இருக்கேன்” சரியா நேரம் பார்த்துகிட்டு இருக்கேன்” என்றான். 

“ஏய் என்னையும் கூட்டு சேர்த்துக்கோடா” என்று அசடு வழிந்தான். 

“அதற்கு பணம் ரொம்ப செலவாகும் பரவாயில்லையா?” என்றான் ரகு.

“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். அட்வான்ஸ் ஒரு லட்சம் வைத்துக் கொள்” என்று அவனுக்கு உடனே ஃபோனில் அனுப்பி வைத்தான். 

அதில் கரும்பு தின்ன கூலி வேற கிடைக்கிறது என்று மிகவும் மகிழ்ந்தான் ரகு. 

அதன் பிறகு படப்பிடிப்பிற்கு தொல்லை இல்லாமல் ஆராதனா சென்று வந்தாள். ஆனால் இப்பொழுது ராஜேஷ் தொல்லை செய்வது ரகுவைத்தான். பணம் வாங்கிக் கொண்டு சும்மா இருப்பதாக அவனிடம் சண்டை போட்டு, சீக்கிரம் காரியத்தை முடி என்று அவசரப்படுத்தினான். 

அந்த வாரம் அப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிய, அதில் வேலை பார்த்த அனைவருக்கும் விருந்து கொடுத்தார் டைரக்டர். அதில் கலந்து கொண்டு தாமதமாக வீட்டிற்கு வந்தால் ஆராதனா. அவர்கள் வீட்டு வேலைக்காரியிடம் தாம் லேட்டாக வருவதாக சொல்லி இருந்ததால், பால் மட்டும் காய்த்து வைத்து விட்டு சென்றிருந்தாள். வந்ததும் களைப்பாக இருக்க, நன்றாக அலுப்பு தீர குளித்துவிட்டு, பிளாக்கில் ஊற்றி வைத்திருந்த பாலை ஹாலில் அமர்ந்தே குடித்தாள். 

அவ்வளவுதான் அவளுக்குத் தெரியும்.  அப்படியே உறக்க வர, அவளால் எழுந்து படுக்க படுக்கை அறைக்க கூட செல்ல முடியாதபடிக்கு அப்படியே சோபாவில் விழுந்துவிட்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் தன்னிடம் இருந்த சாவியை வைத்து திறந்து கொண்டு ராஜேஷையும் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் ரகு. 

வேலைக்காரி சென்ற பிறகு அவள் வைத்திருந்த பாலில் தூக்க மாத்திரைகளை போட்டுவிட்டு ஆராதனா குடிக்கும் வரைக்கும் காத்திருந்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட, இரு காமகர்களும் வீட்டிற்குள் வந்து மயங்கி கிடக்கும் ஆராதனை பார்த்து சிரித்தனர். ராஜேஷ் அவளை தூக்கிக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்று விட, ஹாலில் உட்கார்ந்து மதுபானம் குடித்தான் ரகு. 

ஆராதனாவே உள்ளே தூக்கிக் கொண்ட சென்ற ராஜேஷ் என்ற மிருகம் அவளை மயக்கத்திலேயே வேட்டையாடியது.

ரகுவை அழைத்த ராஜேஷ் அவளுக்கு மயக்கம் தெளிவது போல் இருப்பதாக தெரிவித்தான். தன்னிடமிருந்த மயக்கம் மருந்தை அவள் முகத்தில் காண்பித்து அவனும் அவளை நாசம் செய்தான்.

இருவரும் தங்கள் காம வெறியை தீர்த்துக் கொண்ட பிறகு யாருக்கும் தெரியாமல் எப்படி வந்தார்களோ அப்படியே வெளியே சென்று விட்டார்கள். 

தனக்கு என்ன நடந்தது, யாரால் நடந்தது என்று தெரியாமலே மயங்கிய நிலையில் கிடந்தாள் ஆராதனா. 

சூரிய ஒளி ஜன்னல் வழியாக அவள் முகத்தில் பட்டு சுட ஆரம்பிக்க, மயக்கத்தில் இருந்து மெதுவாக கண் விழித்தாள் ஆராதனா. அவளால் கட்டிலில் இருந்து அசைய கூட முடியவில்லை. மெதுவாக உடலில் உணர்வு வர, தனக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை ஓரளவுக்கு அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. இத்தனை நாள் தன்னை பாதுகாத்துக் கொண்டவள் எப்படி இப்படி இழந்தால் என்று நினைக்கையிலே அவளுக்கு அழுகை வர வாய்விட்டு கத்தி கதறி அழுதாள். 

ஒரு வழியாக சமாளித்து எழுந்தாள். தன் நிலையை நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வந்தது. எப்படி இது சாத்தியம் என்று மீண்டும் மீண்டும் யோசித்து சோர்வானாள். இதை இப்படியே விடக்கூடாது எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற முடிவோடு சூடான தண்ணீரில் தன் அலுப்பு தீர குளித்து அமைதியாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.

நேற்று பார்ட்டில் வழக்கம் போல எல்லோருடன் உட்கார்ந்து தான் சாப்பிட்டாள். அதன் பிறகு இங்கு வீட்டிற்கு தான் வந்தாள். நேராக வந்ததும் குளித்து முடித்துவிட்டு பிளாஸ்க்கில் இருந்துதான் பாலை ஊற்றி குடித்தாள். அதன் பிறகு அவளுக்கு ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. 

அப்படி என்றால் பாலில் தான் ஏதோ கலந்திருக்கிறது என்று, உடனே பிளாஸ்க்கை எடுத்து பார்த்தாள். அதில் மீதி கொஞ்சம் பால் இருக்க, இதை உடனே சோதனை செய்ய வேண்டும் என்று எடுத்துக்கொண்டு, தனக்குத் தெரிந்த பரிசோதனை இடத்திற்கு சென்று கொடுத்து, பாலில் ஏதாவது மருந்து கலந்து இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க கேட்டாள்.

பின்னர் நேராக தனது அப்பார்ட்மெண்ட் வந்து நேற்றைய சிசிடிவி பதிவை பார்க்க வேண்டும் என்று செக்யூரிட்டி இடம் கேட்டாள். நேற்றைய இரவு எட்டு மணியில் இருந்து உள்ள பதிவை பார்க்க ஆரம்பித்தாள். முதலில் வேலைக்காரி கதவை பூட்டிவிட்டு செல்வது பதிவாகி இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் ரகு சாதாரணமாக வந்து தன்னிடம் உள்ள சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றான். ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் வெளியே வந்து சென்று விட்டான். ஒன்பதரை மணி அளவில் ஆராதனா வீட்டிற்குள் சென்றாள். ஒரு மணி நேரம் கழித்து ரகுவுடன் ராஜேஷ் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தான். அதை கண்டதும் ஆராதனாவின் உள்ளம் கொதித்தது. இந்த இரு நாய்களும் சேர்ந்து தான் என் வாழ்க்கையை நாசம் செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள். அதை பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரம் வந்தது. அவளின் முகத்தில் இருந்த கோபத்தைக் கண்டு “என்ன மேடம் ஏதாவது பிரச்சனையா?” என்றான் ஆப்பரேட்டர்.

உடனே தன்னை சமாளித்த ஆராதனா “அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு சின்ன விஷயம் தான் வீட்டில் ஒரு பொருள் காணாமல் போய்விட்டது. அதுதான் வேறு யாராவது வீட்டிற்கு வந்தார்களா என்று பார்ப்பதற்காக கேட்டேன்” என்று சமாளித்து “சரி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வந்து விட்டாள். 

பாலில் தூக்க மாத்திரை கலந்து இருப்பதாக லேபில் இருந்து ஃபோன் செய்து கூறினார்கள். 

ஆக, ரகு தான் திட்டம் போட்டு எல்லாம் செய்திருக்கிறான் என்று தெரிய, அவனை கொலை செய்யும் அளவுக்கு  கோபம் வந்தது ஆராதனாவிற்கு.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

3 thoughts on “அரிதாரம் – 13”

  1. Avatar

    அச்சோ அந்த ரகுவை சும்மா விடாத நிகேதன்… அவனுக்கான முடிவு ஆராதனா கையால கிடைக்கனும்

  2. Kalidevi

    oru ponnu nalla irunthuda kudathu ivangalaluku athuvum cinema la nadikura ponnungana oru black dot vachiye papanga pola intha aalungalala tha nalla iruka ponnunga life alinji pothu. avanga yaru kandu pidichita aaradhana aana yen ethum pana nee lock agi iruka therilaye ena pani vachi irukanga una nu next epi la therium

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *