அத்தியாயம்-12
வாசலில் நுழைந்தவன், “ஏங்க என்னங்க?” என்று கூப்பிட, “அய்யோ… இவர் எதுக்கு இங்க வந்திருக்கார்” என்று பதட்டமாய் மாட்டு காம்பில் கைவைத்து பால் கறந்தவள் அவசரமாய் எழுந்து “என்ன சார் என்ன வேணும்” என்று நிற்க, “உங்க வீட்ல, உங்கப்பாவிடம் பேசணும்ங்க.” என்றான்.
தமிழரசிக்கு தூக்கிவாறி போட்டது இவர் எங்கே இங்க?’ என்று முழிக்க, “நான் உங்கப்பாவிடம் கொஞ்சம் பேசணும்ங்க. நான் வாங்கி குடியிருக்கற வீட்ல, இதுக்கு முன்ன யார் இருந்தானு கேட்கணும்.
அக்கம் பக்கத்துல கேட்டேன். எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி தெரியலைனு சொல்லறாங்க. இங்க ஐந்து வருஷம் முன்ன தான் இடம் ரீச் ஆனதாகவும். அதுக்கு முன்ன இந்த இடம் எப்படிப்பட்டதுனு தெரியாதுனு சொன்னாங்க. அதோட உங்க வீடு தான் காலம் காலமா இங்க இருக்காம்.” என்று விவரிக்க முனைந்தான்.
“சார்… எனக்கு விவரம் தெரிந்து, உங்க வீடு இதுக்கு முன்ன பாழடைந்து கிடந்தது. நானே போறவர்றப்ப இந்த வீடு பெரிசா இருக்கு பராமரிச்சு பெயிண்ட் அடிச்சா அழகாயிருக்கும்னு நினைச்சிருக்கேன். அதுக்கு முன்ன யார் இருந்தா என்று தெரியாது.” என்று கூறியவள் தந்தைக்கு ஏதேனும் தெரியுமோ என்னவோ என்று ஒருபக்கம் எண்ணினாள்.
ஆனால் தந்தையிடம் இவனை பேச விட்டால், அவர் பெயர் செந்தில் என்று அறிந்திடுவாரா, என்று அஞ்சினாள்.
“உங்களுக்கு தெரிந்தது குறைவா இருக்கலாம்ங்க. உங்க அப்பாவுக்கு தெரியலாம் இல்லையா. அவரிடம் பேசிக்கறேன்” என்று உள்ளே செல்ல அனுமதி வேண்டினான்.
மலரோ வழியை விடாமல், “சார்… தப்பா எடுத்துக்காதிங்க. அப்பாவுக்கு பக்கவாதம் வந்ததுடுச்சு. ஒரு பக்கம் கைகால் செயலிழந்துடுச்சு. பேச்சும் சரியா வராது. அவரிடம் விசாரிக்கறது சுத்த வேஸ்ட். நீங்க வேறயாரிடமாவது விசாரிங்க” என்று செந்திலை காணவிடாமல் துரத்த முயன்றாள்.
“அட்லீஸ்ட் ஒரெட்டு பார்க்கறேன்” என்று முன்னே வர எட்டுயெடுத்தான்.
“சார்… சொன்னா புரியாது. இந்த வீட்ல நான் அப்பா மட்டும் தான். அப்பா படுத்தபடுக்கையா இருக்கார். இந்த நேரம் நீங்க என் வீட்டுக்குள் வர்றது நல்லதுக்கு இல்லை. அவரால பேச முடியாது. எனக்கு ஏழு வருஷத்துக்கு முன்ன இந்த வீட்ல யார் இருந்தானு தெரியாது. நீங்க இப்ப ஏதாவது கேட்க வந்து வீட்டுக்குள்ள வந்தா இத்தனை நாள் நான் எடீத்து வச்ச பெயர் கெட்டுடும்.” என்று பொரிந்தாள்.
தமிழரசனோ “தப்பா எடுத்துக்காதிங்க. இதுல என் வாழ்க்கை பிரச்சனை அடங்கியிருக்கு” என்றான்.
“நானும் அதே தான் சொல்லறேன். இதுல என் வாழ்க்கையோட பிரச்சனைகள் அடங்கியிருக்கு. நான் வயசுக்கு வந்த பொண்ணு. இது சென்னை பட்டணம் இல்லை. காதும் காதும் வச்சி ஊர் ஆயிரம் பேசும். என்னால அதெல்லாம் கேட்டு சகிச்சுக்க முடியாது ஏதாவது பேசினா உங்களுக்கு ஒன்னுமில்லை சார். ஆனா நான் அப்படி எடுத்துக்க முடியாது இல்லையா? என்ன தான் அப்பா கூடயிருந்தாலும் நான் ஒரு தனி மனுஷி. கிட்டதட்ட அனாதை மாதிரி. அனாதைகளை யார் சார் நகை பணம் வசதி சொந்தம் பந்தம் இல்லாதவளை கல்யாணம் செய்வாங்க. அப்படியிருக்க அவப்பெயரும் சோர்ந்துக்கிட்டா… முடிஞ்சளவு நான் யாரையும் நெருங்கவிடாம இருக்கேன்” என்று கூற, தமிழரசன் மெதுவாக தலை கவிழ்ந்து நடந்தான்.
இரண்டெட்டு நடந்தவன் அங்கே நித்யகல்யாணி மலர்கள் மலர்ந்திருக்க, தமிழ் நினைவு தாக்கியது.
வழியிலேயே நடந்தபடி தமிழ்மலருக்கு அழைத்தான்.
அவன் பாதி வழியில் சோகமாய் நடந்து செல்வதையே பார்த்தபடி, “இப்ப என்ன?” என்றாள் தொலைப்பேசியில்…
“தமிழ்… போறயிடமெல்லாம் கதவு அடைபடுது தமிழ். பாதையெல்லாம் முள்ளா இருக்கு.” என்றான். சிம்பாளிக்காக சொல்ல முயன்றான்.
“ஏன் செருப்பு இல்லை… முள்ளு இல்லாத பாதையில் நடந்துப் போங்க” என்றாள் சிடுசிடுப்புடன்.
“நக்கலு… உனக்கென்னம்மா… நீயா பேய் கூட இருக்க. நான் தான் இருக்கேன்.” என்று பேச்சு சோகத்திலிருந்து இயல்பானதே.
“பச்.. இப்ப எதுக்கு கால் பண்ணினிங்க?” என்றாள்.
“தமிழ்… இந்த ஏரியா கடந்த ஐந்து வருடமா தான் இங்கிருக்கற ஆட்களே வந்திருக்காங்க.
முன்ன இங்க என்னயிருந்ததுனு தெரியலை. யாரிடமாவது கேட்கலாம்னா எல்லாம் மூனு வருஷத்துக்கு முன்ன வந்தேன். இரண்டு வருஷத்துக்கு முன்ன வந்தேன்னு சொல்லறாங்க. அதுக்கு முன்ன யார் இருந்தா என்ன விவரமும் யாருக்கும் தெரியலை. டீக்கடைக்காரர் தான் பால்கார பொண்ணோட அப்பா இருக்கார் அவரிடம் கேட்க சொன்னாங்க. ஆனா அவர் படுத்தபடுக்கையா இருக்காராம். அந்த பொண்ணு வீட்டுக்குள்ளயே விடலை.” என்றான்.
“அரசன்… நீங்க கேட்டாலும் அவங்க அப்பா பதில் சொல்லிடுவாரா என்ன? அவரால பேச முடியாதே. வேற யாரிடமாவது கேளுங்க.
இல்லையா.. வீட்டை விற்றுட்டு பேசாம பழைய படி உங்களுக்கு ஏற்ற வேலையை தேடி பொழப்பை பாருங்க.” என்றாள்.
“ஏன் எனக்கு என்ன? நான் நட்டு வச்ச செடி கொடி எல்லாம் வளருது. பூ பூத்து மொட்டு விட்டு காய் காய்க்க தயாரா இருக்கு. எனக்கு இந்த முழு நேரமும் நான் நிம்மதியா இருப்பது உனக்கு பிடிக்கலையா.
உனக்கு தெரியுமா? நான் டீம் லீடர் பொசிஸன்ல இருந்தப்ப நான் செய்த பிராஜெக்ட் மொத்தமா கேசவன் டெலீட் பண்ணிட்டான்.
அதை மீண்டும் சரிப்பண்ணி முழுசா முடிக்க நான் என்ன கஷ்டப்பட்டேன்னு?
அந்த நேரம் என் கண்ணு முழுக்க லேப்டாப் வேலை மட்டும் தான். நைட்டு தூக்கமில்லை, சரியான சாப்பாடு இல்லை, டீ குடிக்கணும் போல இருக்கும், தொண்டையில் தண்ணி தாகமெடுக்கும். ஏன் பாத்ரூம் வரும் அதுக்கு கூட எந்திரிச்சு போகாம முதல்ல வேலையை முடிக்கணும்னு இருந்த நேரமெல்லாம் கடந்திருக்கேன்.
புராஜெக்ட் முடிச்சிட்டு அந்த இயந்திர வாழ்க்கையே வேண்டாம்னு கையிலருக்கற பணத்தை சேமித்த பணத்தை வச்சி வீடு வாங்கி தோட்டம் போட்டு மனசு ரிலாக்ஸா இப்ப தான் வாழறேன்.
இப்ப என்னை சுத்தி பல மனிதர்களோட ஆவிகள் அலையற மாதிரி இருக்கு. என்னை துன்புறுத்தாத என் கல்யாண வாழ்க்கைக்கு அக்கறை செலுத்தற மனுஷங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அலையறாங்க? இதை தெரிந்துக்க தான் பேயுக்காக நாயா சுத்தறேன் போதுமா. இந்த நிலைமையில் நீ வேற வீட்டை வித்து திரும்ப ஐடி ஜாபுக்கே போக சொல்லற.” என்று கோபித்துக்கொண்டான்.
“ஹலோ… நான் நல்லதுக்கு தான் சொன்னேன். உனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா. பேயுனு தெரிதுல” என்றான்.
“நாளைக்கு நாம செத்தாலும் பேய் தான் மலர்.” என்றான்.
“ஸப்ப்பபா.. இப்ப எதுக்கு கால் பண்ணின.” என்று மலர் கத்த துவங்கினாள்.
“ம்ம்ம் ஒரு ஆறுதலுக்கு உனக்கு போன் போட்டேன். ஆனா நீ இருக்கியே… போ டி” என்றான்.
“என்ன டி போடறிங்க?” என்ற குரலில் துள்ளலிருந்தது. கோபம் முற்றிலும் வடிந்திருந்ததை தமிழ் அறிவான்.
“ஆமா இனி அப்படி தான். பிடிக்கலைன்னா கட் பண்ணு.” என்றான்.
பேசிவிட்டு அடிக்கடி கத்தரித்து விட்டாளா என்று பார்வையிட்டான்.
“உங்களுக்கு வேலை இல்லாம இருக்கலாம். எனக்கு வேலையிருக்கு அதனால சொல்ல வந்ததை சொல்லறேன்.
நீங்க அந்த குட்டி பையனை பிடிச்சி வச்சது போல யாராவது பெரியவங்களை பிடிச்சி அவங்களிடம் கேளுங்க. ஒருவேளை பதில் சொல்வாங்க. அதைவிட்டு… என்னிடம் பாயறிங்க.” என்றதும் தமிழரசன், “யு ஆர் ரைட் தமிழ். நாளைக்கு பெரியவங்க யாரையாவது பிடிச்சி வச்சிடறேன்.” என்று மலர்வாய் பதில் தந்தான்.
‘பேயை பிடிக்கற முதல் ஆளு நீ தான்டா’ என்று எண்ண நகைப்பு உருவானது.
தமிழ்மலரோ, “அரசன்… எது எப்படின்னு தெரியலை. ஆனா இப்படி சந்தோஷமா இருங்க. தமிழ் எதுக்கும் கலங்க கூடாது. தமிழ் வெற்றியோட அடையாளம். தமிழை அழிக்க எந்த முயற்சி எடுத்தாலும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைச்சா உலகம் அழியறதுக்கு சமம். புரியுதா? நீ களங்கவே கூடாது. என் எதிர்ல சிரிச்ச மாதிரி இருக்கணும்” என்றுரைத்தாள்.
”சரி டி… இனி களங்க மாட்டேன். எனக்கு நீ இருக்க அது போதும்” என்று மகிழ்ச்சியாக போனை அணைத்தான்.
மலரோ தமிழரசனின் வீட்டை பார்த்து, நான் மட்டும் போதுமா அரசா.” என்று கண்கள் கலங்கி ஆனந்தமாய் வேடிக்கை பார்த்தாள்.
இப்படி ஒரு வார்த்தை கூறினால் அவள் இந்நேரம் தமிழரசனின் காதலியாக இருந்திருப்பாள். ஏனோ இந்த குடும்பம் என்ற மாயையும் எதிர்பார்க்கின்றானே.’ என்று நினைக்க செந்தில் இரும ஆரம்பித்தார்.
அப்பா.” என்று ஓடி சென்று அவரை கவனிக்க, அவரோ யார் என்ன என்று சமிக்ஜையில் ஆரம்பித்தார்.
வழக்கமான செய்கைகளுக்கு அர்த்தம் புரிந்தவளோ, “முக்கு தெரு வீட்டை விலைக்கு வாங்கியவர் அப்பா. ரொம்ப நல்ல மனுஷன் தனியா தான் தங்கிருக்கார். தினமும் காலையில் மாலையில் பால் ஊத்த போவேன். ஏதோ..ஏதோ.. அந்த வீட்ல அமானுஷ்யமா இருக்காம். வீடு முழுக்க காலையில் நாலு டூ ஆறு ஏதோ கல்யாண வீட்டுக்கு தயாராகுற மாதிரி பேயுங்க தயாராகுதுங்க. அதான் யாரிடமாவது இதுக்கு முன்ன அந்த வீட்ல யார் இருந்தா? என்று கேட்க இங்க வந்தார்.
வீட்டை விற்ற ஆளோட அப்பா தான் இதுக்கு முன்ன இருந்தது. வீட்டை விற்றவரோட பையன் வெளிநாட்ல தான் படிச்சார். அதனால் இங்க அப்பா நிலத்தை விற்க வந்துட்டு ஓடிட்டார். யாராவது தெரிந்தவங்க இருந்தா விலாவரியா கேட்க நினைச்சார்.
இங்க தான் எல்லாம் தாம்பரம் ஈசிஆர்ரோடு, பெருங்களத்தூர் ஊரப்பாக்கம்னு வீடு வாங்கி அங்குட்டு போயிட்டாங்க. இந்த இடத்துல பல வருஷமா இருக்கறது நீயும் நானும் தான்.
எனக்கு விவரம் தெரிந்து அங்க என்ன நடந்துச்சுனு நினைவில்லை. உனக்கும் பக்கவாதம் வந்து இழுத்துக்குச்சு. வேற யாரிடமாவது கேட்டுக்க சொன்னேன்” என்று கூறியவள் மெய்யான வருத்தத்தோடு கூறினாள்.
செந்திலோ ஏதேதோ சொல்ல வாயெடுத்து வாய் குழறி எச்சி ஒழுக ஆரம்பித்தது. சாதாரணமாய் சில நேரம் கைகள் நடுங்கும் இன்று அதிகமாக நடங்கி ஏதோ சொல்ல வந்தார்.
ஆனால் அவரால் எதையும் உதிர்க்க முடியவில்லை.
ஆனால் கண்ணில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
அங்கேயே இருந்திருந்தால் மலர் கவனித்து துடைத்துவிட்டிருப்பாள்.
அவள் இரவு உணவை தயாராக்க மும்முரமானாள்.
தமிழரசனோ விக்கியிடம், “விக்கி… உனக்கு என்னயென்ன வேண்டுமோ ஆசை தீர சாப்பிடுடா. நாளைக்கு…” என்றவன் பேச்சை விழுங்கினான்.
நாளைக்கு மறைந்துவிட்டால்… கூடவே வைத்துக்கொள்ள முடியுமா?!
நாளை வேறு யாரை பிடித்து வைப்பது, என்ற யோசனையில் திளைத்தான்.
மனதிற்குள் ‘அம்மா’ என்ற ஆனந்தம் பெருகியது.
-தொடரும்.
இக்கதை எண்டர்டெயின்மெண்ட் பர்பஸிற்காக எழுதப்படுவதே. .
Spr going sis 👌
Super super😍😍
அலப்பறை கல்யாணம்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 12)
அட.. மலர் கொடுத்த ஐடியா சூப்பர். இது ஏன் தமிழுக்கு தோணாம போயிடுச்சு. ஆனாலும் மலர் ரொம்ப மோசம்.
அவளுக்காவது அப்பான்னு ஒரு துணையிருக்கு. அவனுக்கு அப்படி யாருமே இல்லைத் தானே..? அப்புறம் ஏன் அவன் மேல அப்படி எறிஞ்சு எறிஞ்சு விழறா..? அவன் பாவம் தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 nalla idea Naalaiku periyavangala pudichi visaricha therinjidum super 🥰 malar appa ku yetho therinjiruku paavam avarala yedhuvum solla mudiyala🙄
Super very intresting
Malar appa ku ethuvum therinjirukkumo, etho solla varaaru 🙄🙄🙄🙄🙄
Malar appa ku etho terichurukku pola
Really super sister
Good going..
Malar kuduthu ah idea super. Malar oda appa ku yetho therinchi iruku aana avar ah la express panna mudiyala
Different thinking sis👍
💛💛💛💛💛
superb ipovum malar tha idea kodukura tamilava vera aasaiya valakura aana nee ena pana pora therila