அத்தியாயம்-14
தினமும் அன்னையின் கையை பிணைத்துக் கொண்டு அப்படியே ஒவ்வொரு உறவினராக கையை பிணைத்து போக விடாமல் தினமும் ஒருத்தரோடு பழகினான்.
அக்கா, மாமா, பெரிப்பா, பெரிம்மா, சித்தி, சித்தப்பா, அவர்கள் பசங்க, தூரத்து தங்கை உறவு தாத்தா பாட்டி என்று அனைவரையும் தினமொருத்தராக வரவழைத்து பழகினான். இதில் இடைப்பட்ட நேரத்தில் தமிழ்மலருக்கு அழைப்பதை நிறுத்திவிட்டான். அவளுமே அவனிடம் தான் என்ன எதிர்பார்க்கின்றோமென சிந்திக்கலாயினாள்.
காதல் வந்தால் அவனிடம் அன்பு காட்டி பேச வேண்டும். காதலிக்காவிட்டால் போன் பேசி ஆசையை கிளறுவானேன்.
ஆனால் தினமும் காலை மாலை பால் ஊற்றும் போதும், தமிழரசனின் முகமலர்ச்சியை ஆராய்வாள்.
அதோடு மதியமும் அவன் வீட்டை கடக்கும் போது, இமைக்க மறந்து பார்ப்பாள்.
தானாக உதவியும் செய்யமுடியாமல், அவனது வாழ்க்கை மாயத்தில் இருப்பதை உணர்த்திட அன்று முடிவெடுத்தாள்.
தமிழ்மலர் கிட்டதட்ட இருபது நாட்களுக்கு பிறகு தமிழரசனுக்கு அழைத்தாள்.
“சொல்லுங்க” என்றான் மொட்டையாக.
“என்னத்தடா சொல்லணும். உன்னை நான் விரும்பறேன். உன்னிடம் பேசாம என்னால இருக்க முடியலை. பேயோட வாழறது உனக்கு சந்தோஷமா இருக்கலாம். எனக்கு பயமாயிருக்கு. தினம் தினம் உனக்கு ஏதும் ஆபத்தில்லையேனு உன் வீட்டை கண்கானிக்கறப்ப என் மேலயே எனக்கு வெறுப்பு உருவாகுது.
இந்த கருமத்துக்கு உன்னிடம் காதலை சொல்லிட்டு பேய் வந்து போற வீடு வேண்டாம்னு உன் கையை பிடிச்சு இழுத்துட்டு வர தோணுது. ஆனா நீ என்னை ஏத்துக்க மாட்ட. ஏன்னா உன் எதிர்பார்ப்புக்கு குறைச்சலா நான் இருக்கேன்.
உன்னை மறக்கவும் முடியாம, உன்னிடம் காதலை சொல்லி நெருங்கவும் முடியாம தினம் தினம் திணறுறேன்.
என்ன சொன்ன… போன்ல மட்டும் தான் உன் கூட என் நலம் விசாரிப்பு இருக்கும்னு கேலியா சொல்லற.
நான் உன் நலனை தினமும் பார்த்து நிம்மதியடையறது, உன்னை ரசிக்கறது உனக்கு தெரியுமா?” என்றாள்.
“தமிழ்…. நீ அப்ப என்னை நேர்ல வந்து பார்த்திருக்கியா?” என்று அவசரமாக ரோட்டுக்கு வந்தான்.
மலரோ அவளது வீட்டு மாடியில் கீழே அமர்ந்து, “ஆமானு சொன்னா என்ன செய்வ?” என்றாள்.
“கல்யாணம் பண்ணிப்பேன் டி” என்றான்.
“மாட்ட… நீ கேட்கற மாதிரி பெரிய குடும்பம் என்னுடையது இல்லை. நானுமே உன்னை மாதிரி தான்” என்றாள்.
“த.. தமிழ்? நீ… நீ இதுக்கு முன்ன என்னிடம் பேசியிருக்க? நான் உன்னை திட்டியிருக்கேன். உன் பெயர்.. தமிழ்னு சொன்ன? அந்த பொண்ணு தானே நீ?” என்றதும் தமிழ் மென்னகைத்தாள்.
“ப்ப்பா இப்ப தான் கண்டுப்பிடிச்சியா?” என்றதும், தமிழரசனோ, “தமிழ்” என்று கூப்பிட, “சாரிடா… நீ முன்ன சொந்தக்காரங்க எல்லாம் வேண்டும். அந்த மாதிரி பெரிய குடும்பமா இருக்கற பொண்ணு வேண்டும்னு சொன்னப்ப கூட, உன்னை கிண்டலா நினைச்சிருந்தேன். இவரே அனாதை. இவன் எதிர்பார்ப்பு மட்டும் பெரிய குடும்பம் வேண்டுமாம்னு. அதை சொல்லி கூட உன்னை காயப்படுத்நினேன். ஆனா பேய்களா இருந்தாலும் எனக்கு சொந்தபந்தம் கிடைத்ததுனு நீ இந்த இடைப்பட்ட நாளில் அவங்களோட வாழறப்ப, உன் ஏக்கம் எனக்கு புரியுது.
நான் உன்னை காதலிக்கறேன் தமிழ். ஆனா நான் வேண்டாம். நீ பெரிய குடும்பத்துல வாழற பொண்ணை கல்யாணம் செய்து வாழணும். அதையும் நான் பார்த்து வாழ்த்துவேன். இதை சொல்ல தான் கால் பண்ணினேன் தமிழ்.” என்று துண்டித்தாள்.
“ஏய் தமிழ் தமிழ்.” என்று அரசன் கூப்பிட, போனை கத்தரித்து, சிம்மை தனியாக எடுத்துவிட்டாள்.
கால் செய்து ஏமாந்து போனவன், அன்னையிடம் தன்னை ஒருத்தி காதலிப்பதை உரைத்தான்.
லதாங்கியோ ”நாளைக்கு என்னை விட்டுடு. நானும் தினமும் காலையில் நம்ம குடும்பத்தில் இருப்பவங்க வர்றதும் போறதும் பார்த்துட்டேன்.
நாங்க ஏன் செத்தோம்னு தெரியலை. எப்படி செத்தோம்னு தெரியலை. இதுக்கெல்லாம் விடையை கண்டுபிடி. இங்க சுத்தற ஒவ்வொருத்தருக்கும் ஆன்மா விடுதலை அடைய என்ன செய்யணுமோ அதை செய் அரசு. உங்கப்பா ஒவ்வொரு தடவையும் கடைசில வர்றார். சட்டுனு போறார். அவரை பிடி. எப்படி பொண்ணு ஓடிப்போனானு கேளு.” என்றதும், தமிழும் இனி ஆன்மாவாக அலைபவர்களுக்கு விடுதலை கொடுக்கும் நாள் வந்துவிட்டது என்பதாக ஆமோதித்தான்.
அடுத்த நாள் காலை விடிந்தது.
லதாங்கி உங்கப்பா இருக்கற இடத்துக்கு போ” என்று அனுப்ப, அம்மா… அங்க போன இங்கயிருக்கற உங்களை மிஸ் பண்ணுவேன்” என்று கலங்கினான்.
“மிஸ் பண்ணினா என்னப்பா… திரும்ப விடியல் வந்தா சந்திப்போம். இல்லை முக்தி கிடைச்சாலும் சந்தோஷம். ஆனா என் சந்தோஷம் எல்லாம் உன் கல்யாணம் நடக்கணும்” என்று கூறினார்.
“அதுக்கு அவ வரணும் அம்மா.” என்று சோர்வாய் கூற, “வருவா… வராம எங்க போவா?” என்று நெற்றியில் முத்தமிட்டார்.
மணி நான்காக பையன் என்ன நாலுக்கே எழுந்துட்டான், நாதஸ்வரத்தை ஊதுங்க, ஏலேய் விக்கி மாமா கல்யாணத்துக்கு நேரம் வந்துடுச்சு. எழுந்து பல் தேய்ச்சி குளி.” என்ற வசனங்கள் வர, ஆறு முப்பது அடைய, பால் ஊத்தும் பெண் மட்டும் வீட்டிற்கு வர, முதல் முறை மலர் மீது லேசாய் ஐயம் துளிர்த்து.
ஏற்கனவே பாத்திரத்தை வெளியே வைத்தவன் பால்கனி பக்கமிருந்த கதவு வழியாக தந்தையின் வருகைக்கு காத்திருந்தான்.
“பொண்ணு ஓடிட்டா” என்று ஆங்காங்கே சலசலப்பு கேட்டது. எல்லாரும் தமிழரசனை சூழ, அவனோ லதாங்கியை ஏறிட்டான். அவர் இமை மூடி நல்லதே நடக்கும் என்ற விதமாக பார்வையிட, உதித்நாரயணன் வந்தார்.
“அப்பா… என்னாச்சு?” என்று அவர் கையை பிடிக்க, பொண்ணு ஓடிட்டா டா. அதோட.. அதோட…” என்று கூற ஆளாளுக்கு மயங்க மறைய, ஆரம்பித்தார்கள்.
தமிழரசன் உதித்நாரயணன் கையை பிடித்து கொள்ள அவரும் தூள்தூளாய் மறைந்து மீண்டும் உருவமாய் வந்தார்.
பொண்ணு ஓடிப்போனது யாருக்கும் தெரியக்கூடாதுனு, நம்ம வீட்டு சாப்பாட்டுல விஷம் கலந்துட்டாங்க டா.” என்று இதயத்தை பிடித்து அழுதார்.
கல்யாண வீடே மாயமாய் மறைந்து சாதாரட வீடாக காட்சியளித்ததும், “எ…எங்க அவங்க?” என்று திகைத்தார்.
ஒரு வேளை திருமணத்தன்று எல்லோரும் இறந்துவிட, மிஞ்சியது தானும் தன் மகனுமா? என்று அவர் நினைத்தார்.
அதை சொல்லியும் கேட்க, மீண்டும் பழையபடி ஆரம்பித்து உரைத்தான்.
நாரயணனுக்கு “நான் செத்துட்டேனா?” என்று கேட்க, கசந்த முறுவலோடு ஆமென்றான்.
நம்ப மறுக்காமல் களோபரம் செய்ய, போனில் புகைப்படம் எடுத்து காட்டினான். அதில் உதித்நாராயணன் முகம் இல்லை. இது வாடிக்கையானதே. தன் அக்காவின் கணவனாக வந்தவரிடமும் தாத்தா பாட்டி சிலரிடமும் இதை கூறி தெளிவடைய வைத்தப்பின் தான் பழகியது.
பின்னே யார் தான் இறந்துவிட்டதாக கூறினால் ஒப்புக்கொள்வார்கள்.
கொஞ்சம் நேரம் தந்து, “இப்ப சொல்லுங்கப்பா… உங்களுக்கு தெரிந்தவரை சொல்லுங்க” என்று கூறினான்.
“என்னத்தப்பா சொல்லறது. பொண்ணு ஏற்கனவே காதலிச்சிருப்பா போல. அவசர அவசரமா மாப்பிள்ளை பார்த்திருக்காங்க பொண்ணை பெத்தவங்க.
வகையா சிக்கியது நம்ம குடும்பம். நம்ம பொண்ணு பார்த்து பேசி முடிச்சோம். சொந்த வீட்ல கல்யாணம் செய்யலாமானு கேட்டேன். அதுக்கு பொண்ணு வீட்ல பெருசா எங்க சொந்தபந்தம் குறைவு தான். அதனால் சத்திரம் வேண்டாம், வீட்லயே கல்யாணத்தை வையுங்கன்னு சம்பந்தி வீட்ல சொன்னாங்க. நாங்களும் சந்தோஷமா இந்த வீட்டையே கல்யாண வீடா மாத்தினோம்.
கல்யாணத்தப்ப நம்ம வீட்டு சொந்தக்காரங்க எல்லாம் வீட்ல குழுமியிருந்தாங்க. காலையில் கல்யாணம் என்று உங்கம்மா நாலு மணிக்கே சின்ன பிள்ளைங்க முதல் கொண்டு எழுப்பி விட்டுட்டா.
எல்லாம் குளிச்சு தயாராகணும்னு மடமடனு வேலை ஆச்சு. நம்ம மாடில தான் காலையில டீயும் வடை போண்டா பரிமாறனாங்க.
எல்லாம் காலை டிபன் சாப்பிட பொண்ணு வீட்டு ஆட்கள் வரலாம்னு டிபன் எல்லாம் ரெடி செய்தோம். ஆனா எனக்கு ஐந்தரைக்கே பொண்ணு ஓடிப்போனது நெரிந்துடுச்சு. இங்க வந்து சொல்ல தயங்கி நின்றேன். ஆனா சொல்லி ஆகணும்னு உன் தாத்தாவிடம் சொன்னேன். அப்ப பாட்டி பக்கத்தில் இருந்து கத்திட்டாங்க. அதோட, நம்ம சாப்பாட்டில் விஷம் கலந்துட்டாங்க.
அவங்க பொண்ணு ஓடிப்போனதை நாம ஊர்ல சொல்லி அசிங்கப்படுத்திடுவோம்னு மொத்தமா மாப்பிள்ளை குடும்பம் இறந்துட்டதா சொல்லி, பொண்ணை அந்த துக்கத்துல தாங்காம வெளியூர்ல அனுப்பியதா பொய் சொல்லிடலாம்னு பொண்ணு வீட்ல பேசியதா செந்தில் சொன்னான். அதோட செந்திலிடம் தான் விஷத்தை கலந்து கொடுக்க பணம் தந்ததா கேள்விப்பட்டேன். இங்க வந்து எல்லாரையும் ஹாஸ்பிடல்ல கூட்டிட்டு போயிடலாம்னு நினைச்சேன். ஆனா எல்லாரும் மயங்கி சரிந்தவரை நினைவுயிருக்கு. இப்ப ஆவியா ஆன்மாவா அலைவது நீ சொல்லி தான் தெரியுது.” என்றார்.
“அப்பா… என்ன பெயர் சொன்னிங்க?” என்றான்.
“செந்தில்… நம்ம வீட்ல வேலை செய்தவன்.” என்று கூறியதும், “அவர் இதுக்கு முன்ன எங்க இருந்தார்?” என்று கேட்க, “பக்கத்துல தான் இருப்பான். அவன் தான் இந்த மாதிரி இந்த வீடு வாங்கலாம்னு சொன்னது. புரோக்கர் கமிஷன் கூட கொடுத்தேன்.
பாவி… அவன் பொண்ணு நல்லா வாழணும்னு நம்ம குடும்பத்தில் எத்தனை உயிரை பலிவாங்கிட்டான்.” என்று கதறினார்.
தமிழரசனோ மலருக்கு போனில் அழைத்தான். அது தான் சுவிட்ச்ஆப் என்று வந்ததே.
தலையிலடித்து, “இங்க அவரோட வீடு நினைவிருக்காப்பா?’ என்று கேட்க, தலையாட்டினான். இருவரும் வெளியே வர, உதித்நாராயணனுக்கு பாதைகளே வித்தியாசமாய் தெரிந்தது.
“பத்து வருஷத்துக்கு முன்ன இருந்த ரோடு, இப்ப எதுனு தெரியலைப்பா” என்று கைவிரித்திட, “ஒவ்வொரு தெருவாக அழைத்து சென்றான்.
எந்தயிடம் என்பதே மறந்திருந்தார். முன்பு இந்த வீட்டை தவிர எதுவும் அருகேயிருந்ததில்லை. இன்று கடைகள் வீடுகள் ஏராளமாக இருக்க ஒவ்வொரு வீடாக சென்று செந்தில் இருக்காரா? என்று கேட்டான்.
பத்து வருடத்திற்கு முன் செந்தில் வீடு எது என்று கேட்டால் சுட்டிக்காட்டியிருப்பார்கள்.
தற்போது மலரின் வீடு என்ற அடையாளத்தோடு காட்சியளிக்க, சற்று தேடுதலில் அலைக்கழிந்தது.
டீக்கடைக்கு வந்து கேட்டதும் கூட, “செந்திலா… தெரியலையேப்பா.” என்றுரைத்தார்.
சோர்ந்தவனாக தந்தையை அழைத்து நடமாடியவன் கண்ணில் தமிழ்மலர் குறுக்கே நடந்து சென்றதை கவனிக்கவில்லை.
ஏதோ பரபரப்பாய் சுற்றுவதை மலர் அறிந்துக்கொண்டாள்.
ஆனால் தந்தையின் உடல்நிலை அல்லவா அவள் கவனிக்க வேண்டும். முதலில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தவளாக பறந்தாள்.
இங்கே பங்கஜம் எதிரே வந்து, “பட்டணத்து தம்பி, என்ன இன்னிக்கு ரோட்டுல அங்கயிங்கனு ஓடறிங்க? யாரை தேடறிங்க?” என்று கேட்டார்.
“செந்தில்னு ஒருத்தரை தேடறேன்ங்க. முன்ன அப்பாவுக்கு தெரிந்தவராம். இப்ப தான் தெரிந்தது. அவர் எங்கன்னு தேடி அலையறேன்” என்றதும் பங்கஜம் நெற்றி சுருங்கி “அட நம்ம மலரோட அப்பா. அவர் பேரு தான் செந்தில். அவருக்கு தான் பக்கவாதம் வந்து படுத்தபடுக்கையா இருக்கானே. பல வருஷமா வைத்தியம் பார்த்தாச்சு. யாருக்கு என்ன பாவம் செய்தானோ, கடவுள் குணமடையவே வைக்கலை.
அந்த பொண்ணு தமிழ்மலரு தான் அவங்க அப்பாவை குழந்தை மாதிரி பார்த்துக்குது. பாவம் செய்த கையோட புண்ணியம் செய்திருப்பான். அதான்… இந்த காலத்துல அந்த மாதிரி புள்ள தகப்பனை அப்படி பார்த்துக்குது.” என்று கூற, மலரா… அந்த பொண்ணு பெயரு, தமிழ்மலரா?” என்று கேட்க, “ஆமா தம்பி, கல்யாண வரன் எல்லாம் பதிவு செய்யற வேலையில் இருக்குது. பார்ட் டைம்மா போயிட்டு வரும். என்ன சொல்லு… செருப்பு தைய்க்கறவனுக்கு செருப்பு இருக்காதாம். அது மாதிரி கல்யாண வரன் எல்லாம் பார்த்து, யார் யாருக்கோ ஜோடி போட்டு முடிச்சு விடற இடத்துல இருந்தும் இந்த புள்ளைக்கு ஒரு வரன் அமைய மாட்டேங்குது.” என்று வரிசையாக கூற, தமிழுக்கு, அனைத்தும் நொடியில் புரிந்தது.
தன் ஜாதகத்தை வைத்து தனக்கு முன்பு தமிழ் என்ற பெயரில் அழைத்தது பால் ஊற்ற வந்த மலரே.
அதன் பின் பால் ஊற்ற வந்தவளுக்கு தங்கள் வீட்டில் உருவம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவள் பயப்படாமல் தான் பேய் என்று கூறியபோதும் பைத்தியமா இவன் என்று எண்ணாமல் நம்பியிருக்கின்றாள்.
இங்கேயே இருப்பதால் தான் அவள் தன் நலத்தை அறிந்திடும் விதமாக காலை மாலை பால் ஊற்ற வந்து தன் நலத்தை அறிந்தும் சென்றிருக்கின்றாள்.
அதோடு மதியம் அவள் தன் வீட்டை கடக்கும் போதும் தன் வீட்டையே எட்டி பார்த்து சொல்வதை ஜன்னல் மூலமாக தமிழ் கவனித்திருந்தானே.
அதோடு சொந்தம் பந்தம் இல்லை தன் எதிர்பார்ப்புக்கு குறைவானவள் என்று கதைத்ததும் தொடர்புப்படுத்தி கொண்டான்.
“வாங்கப்பா… எத்தனை பேரை விஷத்தை வைத்து கொன்ற அந்த செந்திலை பார்த்து பேசுவோம்” என்று மலரின் வீட்டிற்கு கோபமாய் நடைப்போட்டான்.
-தொடரும்.
Super sis nice epi 👍👌😍 eppdi oru flashback varum nu nenaikala pa😳 malar appa dhan edhukellam kaaranam ah edhu malar ku therinja paavam romba kashtam paduva😢🥺 anga poi enna pesa porano😕🧐
Pochaaaaa…. Flower…. Unnaku erukku innaiki😂😂
Wow super. Sema twist. Intresting sis.
Interesting😍
😱👌👌👌👌💕💕💕💕
அலப்பறை கல்யாணம்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 14)
ஓ மை காட்…! எம்புட்டு பெரிய ட்வீஸ்ட்…? அதை ரிவீல் பண்ண பதினாலு அத்தியாயத்தை கடக்க வேண்டியதா இருந்திச்சு.
அது சரி, இப்ப இந்த தமிழரசன் தன்னோட குடும்பத்தையே விஷம் வைச்சு கொன்னவோட பொண்ணை கட்டிப்பானா, இல்லையான்னு தெரியலையே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super twist
Super twist
Tamil ku ella unmai yum therinchiduthu Malar unga appa than main culprit yae
Ella unmaium terichutu, ponnu yaru nu kuda terinchutu
Achacho ipdi oru twistuuu ethirpaakkave illa sis
Malar nalla maattikitta
💛💛💛💛👌👌👌👌
oho itha panavare ivar thana athan annaiku malar sollum pothu aluthu irukar intha pavatha panathuku than kadavul thandanai koduthuru ipo malar ku therinja ava kasta paduvale
Semma…twist