Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-16 (pre final)

அலப்பறை கல்யாணம்-16 (pre final)

  அத்தியாயம்-16

   தமிழரசன் இமை மூடி ஒரு மாதம் முன் நடந்த செந்திலின் இறப்பை நினைத்து பார்த்தான். தமிழ்மலர் முகம் போகும் போதும், வரும் போதும் காண நேர, களையிழந்து காணப்பட்டது. இறப்புக்கு அழுததை விட, தன்னை அவள் தவிர்க்க நினைத்து கூனிகுறுகிய நொடிகள் அவளது மனமும் தன்னை போலவே வாடுவதை உணர்ந்தான்.

    ஆறுதலாக வந்து தமிழ்மலரின் சோகத்தை களைந்தெடுக்க நினைத்தவர்களில் பெரும்பாலும், அவர் பக்கவாதம் வந்து படுத்தபடுக்கையா இத்தனை வருஷம் இருந்ததே அதிசயம். காலம் கூடிவர போய் சேர்ந்தார்னு நினைச்சுக்கோ” என்று சாந்தப்படுத்த முனைந்தனர்.
  உள்ளுக்குள் மருகும் விஷயம் மற்றவருக்கு தெரியாதே.

     நிதானமாக இத்தனை நாள் முடிவெடுத்து, தமிழ்மலர் வீட்டுக்கு வந்தான்.
 
   காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் அவளிருக்க, வீட்டுக்குள் வராமல் வாசலில் நின்றான்.

  தன் வீட்டுக்கு முன் நிழலாட, எட்டி பார்த்தவள் திகைத்து முடித்து வரவேற்கவும் முடியாமல் தூணில் ஓரமாய் நின்றாள்.

   ”இங்க பாரு..‌. சுத்தி வளைச்சு நான் பேச வரலை. நேரா விஷயத்துக்கு வர்றேன். உங்கப்பா செத்து மேல போயிட்டார். ஆனா என் குடும்பம்… ஆமா அவங்க என் குடும்பமா பார்க்கறேன். அவங்க தினம் தினம் கல்யாணத்துக்கு கிளம்பி, சோகமா மாறி காணாம போறாங்க.

   அவங்க ஆத்மா சாந்தி அடையணும்னு நினைக்கறேன். அவங்க ஆத்மா, அவங்க இறப்பு, எப்படி நிகழ்ந்ததுனு தெரிந்துட்டா போயிடும்னா இந்நேரம் சாந்தியடைந்து இருக்கணும். ஆனா இன்னமும் கல்யாணத்துக்கு தான் கிளம்பறாங்க.

    அதனால என் வீட்ல நான் கல்யாணம் செய்து பார்த்தா தெரியும்னு நினைக்கறேன். என்னால வேற ஒருத்தியை கல்யாணம் செய்ய முடியாது.
   உனக்கே தெரியும்… நான் உன்னை உண்மையா தான் விரும்பினேன்.” என்றதும் தமிழ்மலர் விசும்பல் சத்தம் கேட்டது.
 
   “உன்னை அழ வைக்க நான் இங்க வரலை. உனக்கும் அந்த குடும்பத்தில் இருப்பவங்க ஆன்மா சாந்தியடையணும்னு எண்ணமிருந்தா, கல்யாணம்  செய்துக்கற நாடகத்தை நடத்தலாம். நாடகம் தான்…

   நம்ம கல்யாணம் நடப்பதை பார்த்து அவங்க பையன் கல்யாணம் முடிந்துடுச்சுனு அவங்க நினைச்சிட்டா, அவங்க ஆத்மா போனா, நான் நிம்மதியடைவேன். உனக்குமே அதுல நிம்மதி சந்தோஷம் இருக்கும்னு நினைக்கறேன். அதுக்கு…” என்று அவளை ஏறிட, அவளுக்கு அவன் கூறவரும் சாரம்சம் புரிந்தது.

“எப்ப கல்யாணம் செய்யற நாடகத்தை போடப் போறிங்க” என்றாள்.
  வார்த்தைகள் அழுத்தமாய் பேசினாலும் சுரத்தை குறைவாக இருந்தது.

   இந்த அளவு புரிதல் உண்டா என்பது போல “நீயே சொல்லு” என்றான்.‌

  “நாளை மறுநாள்?” என்று அவள் கூறினாள்.
  அவனோ “ஊர்ல யாராவது பார்த்துட்டா?” என்று கொக்கி போட்டு பார்த்தான்.

   “நான் விரும்பியதா சொல்லிக்கறேன். நீங்க அனுதாபத்துல வாழ்க்கை கொடுப்பதா சொல்லிக்கோங்க” என்றாள்.
  
   “அனுதாபம்?” என்றவனுக்குள் ஏளனம் எட்டி பார்த்து தோளைக்குலுக்கி கொண்டான்.‌

   அதன்பின் மளமளவென, பிளான் போட்டனர்.
  எப்படியும் மணமானதும் வீட்டில் உள்ளவர்கள் மாயமாகலாம். அப்படி மாயமாகும் போது திருமணதிற்கு வருபவர்கள் கண்டால் பிரச்சனையே. அதனால் திருமணம் என்ற நாடகம் இருவருக்கு மட்டுமே தெரிந்தால் போதுமென முடிவெடுத்தனர்.

தமிழரசனின் மணநாளுக்கு முந்தைய நாளும் வந்தது. எத்தனை நாள் கனவு, தினமும் கனவில் மனிதர்கள் வேறு ஆன்மாவாக உலாவியது.

   இரவோடு இரவாக தமிழ்மலர் தமிழரசன் வீட்டுக்கு மூன்று மணிக்கு வந்து சேர்ந்தாள்.

”ஆறு மணிக்கு காணாம போவாங்க. ஐந்துநாற்பத்தி ஐந்துக்குக்கு பொண்ணு காணோம்னு விஷயம் தெரிய வரும். அதனால நம்ம கல்யாணம் ஐந்து முப்பதுக்குள்ள முடிக்கணும். கல்யாணத்தை நேர்ல பார்த்துட்டா மேபீ அவங்க ஆன்மா பையன் கல்யாணம் முடிஞ்சதுனு நிம்மதி வந்துடும். ஆத்மா சாந்தியடைந்துடும்.” என்று கூற, “ஏற்கனவே இரண்டு முறை சொல்லிட்டிங்க” என்று தமிழ்மலர் சலித்தாலும் கூறினாள்.

    “இது எனக்கு நானே சொல்லிக்கறேன். நீ அந்த ரூம்லயே இரு. பொண்ணு இந்த ரூம்ல இருக்கானு அம்மாவை அங்க அனுப்புவேன்” என்றதும் தலையாட்டினாள்.

    எல்லாம் சரியென்று கூற, மணி நான்கு அடித்தது. பட்டு வேஷ்டி சட்டையில் தமிழரசன் மிடுக்காய் அவனது அறையிலிருந்து நடந்து வந்தான்.

  லதாங்கியோ, “ஏன்டா… கல்யாணம் பண்ண இத்தனை அவசரம் தான். அதுக்குனு யாரும் எழுந்துக்கறதுக்குள் ரெடியாகி நிற்கணுமா? யாராவது பார்த்தா மாப்பிள்ளைக்கு அவசரம்னு கேலி பண்ணப்போறாங்க. போய் ரூம்ல கொஞ்ச நேரம் இரு” என்று கூற, “பரவாயில்லம்மா.. நான் எல்லாரையும் கடைசியா ஒருதரம் கண்ணுக்குள்ள நிரப்பிக்கறேன்.” என்று கூறினான்.

   “என்னவோ இன்னும் விளையாட்டு தனமா பேசற” என்று ஆடலரசன் அக்கா பேச, “மச்சான் கல்யாண டிரஸ் போட்டாச்சா… அப்ப இந்தா தங்கத்துல மோதிரம், பிரேஸ்லேட்டு உங்கக்கா பட்டு வேஷ்டி போட்டதும் என் தம்பிக்கு போடுங்கன்னு சொன்னா.” என்று நகையை போட்டு அழகு பார்த்தார்.

  ”தேங்க்ஸ் மாமா” என்று கட்டிபிடித்தான்.

  “ஏன்டா… பேராண்டி… தாத்தா பேரை காப்பாத்தற விதமா நாலு குழந்தை பெத்துக்கணும்” என்று கூறி முதியவர் வந்தார். பாட்டியோ “ஆமா உங்க தாத்தா வருஷத்துக்கு ஒன்னுனு சொல்வார். விலைவாசி விற்கற விலைக்கு நீ இரண்டு பெத்துக்கோ ராசா” என்றார் பாட்டி.

  சரிங்க பாட்டி.” என்று சிரித்தான்

  “மாமா… நீ முதல்ல பொண்ணு பெத்துப்பியா? அம்மா சொன்னாங்க உனக்கு பொண்ணு பிறந்தா நான்   கல்யாணம் பண்ணிக்கலாம்னு” என்றதும், விக்கியை தூக்கி, “எனக்கு பொண்ணு பிறந்தா விக்கி என்கின்ற விக்னேஷுக்கு தான் கட்டி கொடுப்பேன்டா” என்று கண்ணீர் வடிய கூறினான் தமிழரசன்.

  “சரி சரி பொண்ணு வீட்டு ஆளுங்க வர்ற நேரம் ஆச்சு.” என்றதும், “பொண்ணு நான் இங்க தான் இருக்கேன். அம்மா அப்பா வர நேரமாகுமாம். நீங்க கல்யாணத்தை முடிங்கன்னு சொல்லிட்டாங்க.” என்றுரைத்தாள் மலர்.

“அம்மா அப்பா..‌. நீங்களாம் வாங்க, நான் தாலி கட்டப்போறேன்.” என்று தாலியை தூக்கி காண்பித்தான் அரசன்.

  “டேய் பொண்ணோட அப்பா அம்மா வரலை. அவளோட சொந்தம் பந்தம் வரலை‌. ஜோசியத்துல குறித்த நேரமிருக்கு டா” என்று சந்தேகிக்க, “அய்யோ அத்தை… அப்பா அம்மாவுக்கு கடைசி நேரத்துல இந்த கல்யாணம் வேண்டாம்னு நினைச்சிட்டாங்க. நான் உங்க பையனை விரும்பறேன். எனக்கு அவரை விட்டு வாழ முடியாது. உங்க பையன் கல்யாணம் இன்னிக்கு இப்பவே நடக்கும். என்னை வாழ்த்துங்க” என்று கூறி மேடையாக அமைக்கப்பட்டதில் அமர்ந்தாள்.

கடிகாரத்தை பார்த்து பார்த்து, அங்கிருந்தவர்களில் லேசான குழப்பம் ஏற்பட்டாலும் பொண்ணே இந்தா இருக்கு. கல்யாணம் முன்னபின்ன நடந்தா என்ன? என்ற தினுசில் இருந்தனர்.  “இப்ப தாலி கட்டறேன். மீதியே அப்பறம் பார்க்கலாம்.” என்று கூறினான்.

“என்னயிருந்தாலும் அவ அப்பா அம்மா வராம” என்று உதித்நாராயணன் தயங்க, “மாமா.. எங்கப்பா விட்டா இந்த கல்யாணம் நடக்கக்கூடாதுனு, நான் ஓடிப்போயிட்டதா கூட சொல்வார். அவருக்கு சொந்தத்துல கட்டி கொடுத்திட ஆசை வந்ததிலருந்து மனசு நிலையில்லாம இருக்கார். அதான் பொண்ணு வீட்ல யாரும் வரலை.
முதல்ல உங்க பையன் தாலி கட்டும் போது ஆசிர்வாதம் செய்யுங்க. இந்த போனை தூர வையுங்க” என்றதும் போன் தூர வைக்கப்பட்டது. பொண்ணு வீட்டு ஆட்கள் இல்லாதது சந்தேகம் வராத வண்ணம் இருவரும் சாமர்த்தியமாக பேசினார்கள்.

   “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று ஆடலரசுவின் உறவில் பெரிப்பா சித்தப்பா முழங்க, இறைவனை துதித்து தமிழரசன் தமிழ்மலருக்கு தாலி அணிவித்தான்.

  அதே நொடி போன் மின்னியது. பையனின் திருமணத்தை காணாமல் போனை நோண்டுபவரா உதித்நாராயணன்.

   அடுத்த நொடி “ஒரு வழியா பேரன் கல்யாணத்தை கண்ணாற பார்த்தாச்சு.” என்று தாத்தா பாட்டி நிறைவாய் எண்ண, மறைய துவங்கினார்கள்.

  அவர்களோடு, “இனி எனக்கு என்னடா வேண்டும்” என்று லதாங்கி உதித்நாராயணன் சேர்ந்து ஆசிர்வாதம் வழங்க, இருவரும் காலில் விழுந்தார்கள். மணி ஐந்து முப்பதை நெருங்க, ஒவ்வொருத்தராய் மாயமாக மாறினார்கள்.

  பொண்ணு ஓடிட்டா என்ற வாசகமும் யாரும் அறியாது அந்த இடத்தில் மறைந்தது. அதே போல விஷத்தால் இறக்கும் நொடிகள் அறியும் முன் நிம்மதியாக மறைந்தார்கள்.

  “எல்லாரோட ஆன்மாவும் ஆத்மசாந்தி அடைஞ்சியிருக்குமா?” என்று சந்தேகமாய் தமிழ்மலர் கேட்க, “அது நாளைக்கு காலையில் தெரியும்‌.” என்று இடக்காக தமிழரசன் கூறினான்.

அதோடு மாலையை கழட்டி வைத்து அவனுக்கான அறைக்குள் ஒதுங்கினான்.

    தமிழ்மலரோ அந்த வீட்டில் தனித்து ஹாலில் அமர்ந்திருந்தாள்.

   இன்றுடன் எல்லாம் நலமாக மாறினால் மட்டுமே தன்னால் நிம்மதியாக மூச்சுவிட முடியுமென்று புரிய சோபாவில் படுத்துக் கொண்டாள்.
  வீடு தாழிட்டு இருக்க, சமையல் கட்டில் டீ மட்டும் சூடாக இருந்தது.  

    பசிக்கும் போது அதில் பால் பிரட் என்று எடுத்துக்கொண்டனர் இருவரும்.

  அவளை இங்கிருந்து போ என்றும் தமிழரசன் கூறவில்லை. அதே போல தமிழ்மலரும் இங்கிருந்து போகட்டா? நாடகம் தான் முடிந்ததேனு கேட்கவும் இல்லை.

   திருமண கோலத்தில் மிதமான ஒப்பனையில், அவ்விடத்தில் நடமாடினாள்.

  தாலி என்ற மஞ்சள் கயிற்றை பிடித்து இதமாய் அணைத்துக் கொண்டாள்.

  அரசன் துரத்தினாலும் இனி அவளுக்கு கவலையில்லை.

  மதியம் சாப்பாடு செய்து வைத்திட சாப்பிட வந்தான்.
   அதே போல, மாலை டீ போட்டு தந்தாள். இரவும் தோசையை ஊற்றி நீட்டினாள்.

   இரவு நெருங்க, “இதை பேசலாமா வேண்டாமானு ரொம்ப யோசித்தேன். ஆனா காலையில் பிளான் சொதப்பி இருந்து இதை நான் கேட்டா, அவங்களுக்காக யோசிக்கறான்னு நீ முடிவுப்பண்ண வாய்ப்புண்டு. இல்லை… கல்யாணம் அவங்களுக்காக பண்ணியதா இருக்கலாம். ஆனா பொண்ணு எனக்கு பிடிச்சவளா இருக்கணும்னு தான் உன்னை தேர்ந்தெடுத்தது.

   அப்பா செய்த பாவம் பிள்ளைங்க அனுபவிப்பது முன்ன சரியா இருக்கலாம். ஆனா அவரவர் செய்த தப்புக்கு அவரவர் தண்டனை அனுபவிச்சா போதும்னு என்‌ மனசு சொல்லுது.

   நீ என்ன தப்பு செய்த? உன்னோட காலம் முழுக்க வாழ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா… பிராப்பரா ஒரு கல்யாணத்தையும் ரிசப்ஷனையும் வைக்கலாம்.” என்று கையை நீட்டினான்.‌

  தமிழ்மலரோ, அவன் நெஞ்சில் சாய்ந்து, தேம்பினாளே தவிர எதுவும் கூறவில்லை.

  அப்படியே இருவரும் ஒரே மெத்தையில் படுத்துக்கொண்டார்கள்.
காமத்தை அவர்கள் தேடவில்லை. அவர்கள் தேடல் எல்லாம் விடியல் பிறந்து, வீட்டில் இவர்களை தவிர யாரேனும் நடமாடுகின்றனரா? அல்லது ஆன்மா சாந்தியடைந்தார்களா என்ற ஆய்வில் இருந்தனர்.

    அதிகம் காத்திருக்க வைக்காமல் கதிரவன் உதிக்க தயாராகும் முன், இங்கு அலாரம் வைத்த தமிழரசனோ, முன்று நாற்பதுக்கு எழுந்து அமர்ந்தான்.‌

    தமிழ்மலரும் அரசனின் கையை பற்றி, பரிதவிப்பாக இருந்தாள். அவள் தந்தை அல்லவா அனைத்து உயிர் அல்லல்பட காரணம் என்ற கவலை.

  நான்கு மணி ஆனதும், வீடு அப்படியே இருந்தது. மாறவில்லை.. அரசன் கண்கலங்க, வீடு முழுக்க “அப்பா அம்மா… அக்கா டேய் விக்கி” என்று தேட, யாரின் வருகையும் இல்லை.

  ஹாலில் தொங்கிய புகைப்படத்தை எடுத்து அழத்துவங்கினான்.

  மலரோ அவன் தோளில் தீண்டவும், “என் குடும்பத்துல இருந்து எல்லாரும் இப்ப இல்லை தமிழ்.” என்றான்.‌

  எப்படியெல்லாம் வாழ வேண்டியவர்கள், வாழாயியலாத போது, மிதமிஞ்சி ஆன்மாவாக உலாத்தாமல் விடுதலை அடைய வேண்டுமென்று தான் எல்லோரின் எண்ணமும் இருக்கும்.
  அப்படி ஆன்மாவுக்கு விடுதலை கிடைத்த திருப்தி இருந்தாலுமே, தமிழரசனுக்கு தன் குடும்பம் மறைந்த கவலையும் ஆழ்த்தியது.

ஒரு மூச்சாக அழுது தீர்த்தான். அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். உனக்கா எல்லா உறவுமாக நான் இருப்பேனென்று‌.

-தொடரும்.

19 thoughts on “அலப்பறை கல்யாணம்-16 (pre final)”

    1. M. Sarathi Rio

      அலப்பறை கல்யாணம்..!
      எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
      (அத்தியாயம் – 16 Pre Final)

      அச்சோ..! இப்படி கல்யாணம் பண்ணி எல்லாரையும் விரட்டி விட்டுட்டிங்களே…? இத்தனை நாளா அவங்க எல்லாம் இருந்து தமிழுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் ஜாலியாத்தான் இருந்தது. இப்ப அவங்க எல்லாரும் போனது, தமிழுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் கஷ்டமாத்தான் இருக்குது, அழுகையா வருது. ஏதோ பேன்டஸி கதைன்னு சொல்லி கடைசியில இப்படி மனவலியை கொடுத்துட்டிங்களே. ஆனாலும், ரொம்ப வித்தியாசமா யோசிச்சிருக்கிங்க. அதுவும் பெத்தவங்க செய்த பாவம் இனியும் பிள்ளைங்க மேல விடிய தேவையில்லைன்னு
      எத்தனை பேருக்கு அப்படி நினைக்கத் தோணும் ?

      செந்தில் அவர் செய்த பாவத்தக்கு, பக்கவாத்துல விழுந்து போய் சேர்ந்துட்டாரு. அதே நேரத்துல அவரோட பொண்ணும் இருந்த ஒரே உறவான தன்னோட தகப்பனையும் இழந்து தனிக்கட்டையாகி தண்டனையும் அனுபவிச்சிட்டா.

      இனி தமிழுக்கு மலரும், மலருக்கு தமிழும் துணையா இருந்து தமிழ் மலராவும், தமிழுக்கு அரசனும், அரசனுக்கு தமிழும் துணையா இருந்து தமிழரசனாவும் சந்தோஷமா வாழட்டும்.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

  1. Super elarum athma vum shanthi adaichuruchu, vikki un ponn ah na kattikiren nu solela enaku alukai vanthutu tamil ellaraium thedi alukelaium enakum alukai vanthutu super ah eluthi irukenga sis. Bt enaku oru doubt tamilarasan kannuku yen ellarum terinchanga? Avan intha v2la irunthathu nalava? Ila intha v2 vankunathu nalava? Apadina ithuku munnadi intha v2ah vachchu irunthavaga kannuku terichurukanum la? Konjam soluga sis

  2. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  3. KALIDEVI

    wow superb ennada ipadi drama podalama nu kekurane nu ninachen paravala athuvarai konjam manasu mari ava kitta mrg panikalama nu ketutan avalukum aasai iruku tha solla mudila atha alugaila kamichitale athu pothatha ipo avan feel panum pothum nan irukenu solra aaruthal ava kodukurale
    wonderful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *