அவ்வைசண்முகி இந்த படம் எல்லாருக்கும் பேவரைட்டா இருக்கும். ஏன் எல்லாரும் பார்த்த படமாகவும் இருக்கும்.
கமலஹாசன், மீனா, ஜெமினிகணேசன், நாசர், நாகேஷ் டெல்லிகணேஷ், மணிவண்ணன் சார், ஹீரா, அந்த குழந்தை நட்சத்திரமா வந்த பெண் என்று அனைவருமே சூப்பரா ஆக்ட் பண்ணிருப்பாங்க.
கே.எஸ்.ரவிக்குமார் சார் டேரக்ஷன்ல கிரேஸிமோகன் சார் வசனத்துல ஒவ்வொரு சீனும் சும்மா நகைச்சுவையா, கூடவே செண்டிமெண்ட் குடும்ப படமா இருக்கும்.
முதல் காட்சியே டிவோர்ஸ் என்று கோர்ட் சீன். அப்பா அம்மா பிரிதல் என்று ஆரம்பிக்கும். ஆக்சுவலி எத்தகைய கஷ்டமானா சீன் தெரியுமா. ஆனா அதை இலகுவா கையாண்டு காமெடியா இருக்கும். தன் குழந்தைக்காக தகப்பனா கமலஹாசன் சார் பெண் வேடமிட்டு டேக்கேரா போகறார். போற இடத்துல சிட்டுவேஷன் ஹான்டில் செய்து மனைவி மனதிலும் மாமனார் மனதிலும் அவ்வை சண்முகியாக மனதில் இடம் பிடிக்கின்றார். கூடவே பிரிந்த பாண்டியனை(கமலை) மீனாவிடம் சேர்த்து வைக்கின்றான் அவ்வைசண்முகி.
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
ஆங்கிலப்படம் Mrs.Doubtfire படத்தினை தழுவி எடுத்த படமே அவ்வை சண்முகி. அதுவும் நன்றாகவே இருக்கும்.
தாலிகட்டி வாழ்ந்த மீனாவுக்கு தன் கணவனை அடையாளம் தெரியலை ஆனா குழந்தை கண்ணுக்குட்டி காளைமாடுனு அறிந்து லூட்டி அடிப்பாங்க.
கமலஹாசன் பணியால் தனக்குண்டான அனைத்தும் ஒரு மாயத்தில் மீனா தள்ளியதாக ஒவ்வொரு முறையும் மாமியான பெண் வேடம் கொண்ட தன் கணவரிடமே குற்றம் சாட்டுவார்.
இது ஒரு நகைச்சுவை படம் என்பதாலோ என்னவோ மாமிக்கு ஒரு காதலன் என்று ஜெமினி சாரை காட்டும் போது ஓஎம்ஜி சிரிச்சி சிரிச்சி முடியலை.
அதோட அந்த காதலை கெடுக்க இரண்டு வில்லனா மணிவண்ணன் சார் டெல்லிகணேஷன் காட்டுவாங்க பாருங்க. போகும் போதும் வரும்போதும் இடித்து விட்டு செல்ல கூடுதலாக ரோஜாப்பூ விழும் பாருங்க.😆😆
டெல்லிக்கணேசன் காதுல மல்லிப்பூ ஒவ்வொரு இன்சிடெண்டும் ரசித்து பார்த்தது.
சின்ன வயசுல பார்த்தப்ப இந்த படம் வெறும் நகைச்சுவைக்காக பார்த்தது. பின்னர் நிறைய முறை கணக்கு இல்லாமல் பார்த்திருக்கின்றேன். இன்றும் பார்க்க அமர்ந்தால் ரசிக்க கூடிய படம்.
மாமி கனல்கண்ணன் பைட் பண்ணற சீனாகட்டும். ‘துணுக்குள்ள இருப்பான்டி துரும்பிலும் இருப்பான்டி’ பாட்டுல ஜெமினி ‘அன்பு பிப்டி சிக்ஸ்டி ஆனாப்பொழுதும் மலரும்‘ பாட்டுல ஜெமினி ஒரு அர்த்தம் புரிந்து காதல் பார்வை வீசுவார் அந்த கால காதல் மன்னன் ஆச்சே😉
கடைசி சீன் அவ்வை சண்முகி காப்பாத்தறதுல பாடி ஆத்தோட போச்சுனு பாவம் ஜெமினி காதல் மனசை மீண்டும் பீல் பண்ண வைப்பாங்க.
அது புரிந்த சைடு இது புரியாத சைடுனு நாகேஷ் சார்… யூ ஆர் தி ஜீனியஸ்.
அச்சோ… நாசர் சாரை சொல்ல மறந்துட்டேன். இவர் இல்லைனா காதல் மன்னனுக்கு யார் ஐடியா கொடுப்பா.
எப்பவும் கமல் படத்துல நாகேஷ் சார் நாசர் சார் முக்கிய படத்துல இருப்பார். நோட் பண்ணி பாருங்க.
இது ஆங்கிலப்படத்தின் தழுவல் என்பதால் அதையும் பார்க்க ஆசைக்கொண்டேன். என்ன இருந்தாலும் கமல் சார் கிரேஸிசார் காம்பினேஷன் எப்பவும் வேற லெவல்.
நான் ஒரு முறை கிரேஸி சாரோட மேடை நாடகத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்ப ஒரு சிறுமியாக பார்த்தேன். என்ன நாடகமென்று நினைவில்லை. ஆனா ரசித்தேன். அப்ப அவரை பற்றி எல்லாம் தெரியாத வயது.
தற்போது சே… எத்தகைய நல்ல மனிதரை விரைவில் இந்த உலகம் எடுத்து சென்றுவிடுகிறது. ஆனால் காலத்திற்கும் அழியாத வசனத்தை கொடுத்தவர் அவர்.
அவ்வை சண்முகி படத்தை இன்னமும் அதே ரசனையோடு நான் பார்க்க முக்கிய காரணங்கள் கமல் சார் கிரேஸி சார் முக்கிய காரணம்.
-நன்றி
-பிரவீணா