ஆலகால விஷம்
happy newyear my dear readers, புது கதையோடு வந்துவிட்டேன்.
இந்த கதை சாரல் தளத்தில் பெயர் மறைத்து வில்லங்கம்(antihero/antiheroine) பிரிவில் எழுதி 2000 பரிசு பெற்ற கதை. வித்தியாசமான கதைக்களம். சில தகாத வார்த்தைகள், இடம் பெற்றிருக்கும். 18
+ சிறிதளவு கலந்தவையே… விருப்பம் இல்லாதவர்கள் கடந்து விடுங்கள். எப்பவும் போல என் எழுத்தில் முடிவு சரியாக இருக்கும் தவறாக எதையும் எழுத மாட்டேன் என்று எண்ணுபவர் வாசிக்கலாம்.
அத்தியாயம்-1
காலம் : 2014 மே மாசம் 25ஆம் தேதி
தண்டட்டி கருப்பாயி
தாளை ஊரு மருதாயி
தண்டட்டி கருப்பாயி
தாளை ஊரு மருதாயி
பேச்சியம்மா சடங்காயி
குச்சுக்குள்ள வாராளே
கொலுசுங்க சத்தமிட
கல்லுடைய மண்உடைய
குதியாட்டம் போட்டபுள்ள
குமரிபுள்ள ஆனாளே
ஆயிரங்கால் மண்டபத்த
அரைநாளில் பாத்தவக உன்
அழகபாக்கனுனா ஒரு மாசம்
புடிக்குமடி
உச்சநூறு மாமனுங்க
குச்சுகட்ட வந்திருக்கான்
உசுலம்பட்டி மாமன்காரன்
உச்சுகொட்ட வந்திருக்கானே….
கல்லுவச்ச கம்மலையும்
கனமான சங்கிலியும்
கல்லுபட்டி மாமன்காரன்
காலடியில் வச்சிருக்கான்
ஆசைக்கு பொட்டு
அழகென்ன காட்டு ஆத்தாடி
அதுக்குதான் காத்திருக்கான்
மொய் எழுதி வந்த நக
எடைபோட்டு மாளுதடி
வெள்ளாட்டு குட்டி வெட்டி
வயித்தி எல்லாம் ரொம்புதடி
சோத்துக்குள்ள கரியா கரிக்குள்ள சோறா
பந்தியில சாதி சனம் கொழம்புதடி…
மாமரத்து மேலிருந்து மாமரத்து மேலிருந்து
நேத்து சமஞ்ச
புள்ள மாலை முடியயில்ல
மாலை முடியயில்ல
மாலைக்கு ஆசபட்டு மயங்குனாரு மாமன்மகன்
மாலைக்கு ஆசபட்டு
மயங்குனாரு மாமன்மகன்
சுபமங்கள நித சுபமங்களம்…
வாயாடி பேச்செல்லாம்
ஏறகட்டிக்கோ வாலாட்டும்
வேலையெல்லாம் மூட்ட
கட்டிக்கோ
பூவுன்னா வண்டு
வரும் புரிஞ்சி நடந்துக்கோ
பொண்ணுன்னா வெட்கம்
வரும் தெரிஞ்சு நடந்துக்கோ
அவன் பார்த்ததுமே
நான் பூத்து விட்டேன்… அந்த
ஒரு நொடியை நெஞ்சில்
ஒளித்து வைத்தேன்…
நான் குழந்தை
என்று நேற்று நினைத்திருந்தேன்…
அவன் கண்களிலே என்
வயதறிந்தேன்..
அவன் பார்த்ததுமே
நான் பூத்து விட்டேன்… அந்த
ஒரு நொடியை நெஞ்சில்
ஒளித்து வைத்தேன்…
நான் குழந்தை
என்று நேற்று நினைத்திருந்தேன்…
அவன் கண்களிலே என்
வயதறிந்தேன்…
பம்பரக்கா சுத்தாம அடக்கி வெச்சுக்கோ
பல்லாங்குழி ஆட என்ன துணைக்கு வெச்சுக்கோ
ஒத்தையில படுக்காத மனசில் வெச்சுக்கோ
நம்ம குல சாமி தின்னூறு தலைக்கு வெச்சுக்கோ…
மதுரை மாநகரில் வருணிகாவின் பூப்பெய்தும் சடங்கிற்கான இடத்தில், 2004-இல் பத்து வருடத்திற்கு முன் வந்த ‘காதல்’ படத்தின் திரைப்படப் பாடலை தான் ஒலிப்பெருக்கி சப்தமாய் ஒலித்தது.
வருணிகாவுக்கு இதற்கு முன் அணிந்திருந்த கவுன் சௌகரியமாக இருந்தது. அந்த கவுனில் பூப்பெய்தியதால் தனியாக எடுத்து வைத்து விட்டார்கள்.
அவளுக்கு அந்த கவுன் மிகவும் பிடித்தமானது. இனி அதனை உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். ஊரில் சலவை தொழிலில் இருக்கும் வண்ணாத்தியிடம் கொடுத்துவிட வேண்டுமென ஒருபாட்டி அவள் அம்மா ரேணுகாவிடம் உரைத்த போது ஒட்டுக் கேட்டாள்.
அந்த கவுன் முட்டிவரை அழகாக, வருணிகாவை தேவதை பெண்ணாக பாவிக்க வைக்கும்
ஆனால் தற்போது ஷீலா அத்தை அணிவித்த சேலை காலை தடுக்கியது. இடுப்பில் சேலை மடிப்பு சொருகியதால் ஆங்காங்கே அசௌகரியம் ஏற்பட்டது.
இதில் இடுப்பும் முதுகும் காற்றின் தீண்டலால் உடலில் புதிதாய் கூச்சம் வேறு ஏற்பட்டது. அதை விட, குச்சி கட்டும் ஷீலா அத்தையின் மகன் மகிழன் வேறு அவளை குறுகுறுவென பார்த்தான்.
இதெல்லாம் போதாதென்று தலையில் உச்சிபில்லையில் முடியோடு சேர்த்து பூக்களால் தலையலங்காரம் செய்திருக்க, யாரோ தன்னை தலையில் கைவைத்து அழுத்துவது போல உணர்ந்தாள்.
கையில் வெங்கி, இடையில் ஒட்டியாணம் கூட உடலை இறுக்கியது.
ஒன்றரை டஜன் வளையல் அதுவும் கைகளுக்கு பாரமாக மாற, கழுத்தில் நெக்லஸ் நகைகள் அவள் கழுத்தை கவ்வியது.
எல்லாவற்றையும் அவிழ்த்து போட்டு, தன் அக்கா வநீஷாவோடு விளையாட செல்ல ஆவல். பதினான்கு வயது சிறுமிக்கு விளையாட்டின் மீது ஆர்வம் கூடுதல் தானே.?! ஆனால் தன் உடலில் மாற்றங்களையும் விழாவாக கொண்டாடுவதையும், அடிவயிற்றில் சிறுவலியும், அறவே வெறுத்தாள் வருணிகா.
காரணம் இதே போல வநீஷா அக்காவிற்கு செய்தப்போது அவள் முகம் அஷ்டக்கோணலாக தான் இருந்தது. இப்படி அம்மா, அத்தை போல சிறுமிகளான தங்களுக்கு சேலையை சுற்றி விட்டால் எரிச்சல் தானே?! அக்காவும் அன்று அவஸ்தை கண்டிருப்பாளன வருணிகாவின் எண்ணம்.
வநீஷா வருணிகாவை விட ஒரு வயது மூத்தவள். ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்னால் பூப்பெய்தி விட்டாள். துணைக்கு அடிக்கடி வந்து தங்கையை பார்த்து ரசிக்கின்றாள்.
ஏனோ வருணிகாவுக்கு யார் சிரித்தாலும் பார்த்தாலும், கிண்டல் செய்வது போலவே தோன்றியது.
தனக்கு கவுன் அழகாக இருக்கின்றது அதை போல வேறு கவுன் அணியட்டுமா என்று நுணி நாக்கு வரை கேட்டிட ஏங்கியது.
அம்மா ரேணுகாவிடம் கூறினால் பார்வையாலே பஸ்பமாக்கி விடுவார். வயதிற்கு வந்த பெண் ஒரிடமாக அமர வேண்டுமென்றும், இப்படியிப்படி இருக்க வேண்டுமென்ற நீண்ட பட்டியல் வேறு, இரண்டு நாளாக ஒரே அறிவுரை வழங்கி விட்டார்.
அறிவுரைகள் செவியில் போதும்போதுமென்ற அளவிற்கு அள்ளி வழங்கியதாலும், அன்னையின் மிரட்டல் பேச்சிலும் அமைதியின் சொரூபமாக அடக்கவொடுக்கமாக வேறுவழியின்றி மகிழன் கட்டிய குச்சியோலை வீட்டில் வீற்றிருந்தாள்.
மகிழன் ப்ளஸ் டூ படிக்கும் சிறுவன். அதனால் மீசை அரும்பும் நேரம் பாரபட்சமின்றி மாமன் மகளான வநீஷா, வருணிகா என்று கண்ணுக்கு விருந்து படைக்கும் இருவரையும் தரிசித்தான்.
வநீஷாவும் தாவணி உடுத்தியிருந்தாள். சேலை வேண்டாமென பிடிவாதமாய் மறுத்துவிட்டாள். தங்கை பெரிய மனுஷியாக ஆனதற்கு சேலை கட்டு என்று ரேணுகா கூறியும், ‘அங்கயிங்க கடைக்கு போகணும், வேலை செய்ய சொல்லுவிங்கம்மா’, தாவணி போதுமென்றாள்.
ரேணுகாவுக்கும் அந்த பதில் சரியென்றே தோன்றியது.
காலையிலிருந்து தலைக்கு மேல் வேலை பார்க்க கூடுதலாய் ஒரு உதவியாளராக வநீஷா இருப்பது நிம்மதி தான். அவளும் சேலை உடுத்தி, நடந்தால் தடுக்குது அதுயிதென்று வேலை செய்யாமல் சாக்குபோக்கு சொல்லி காலாட்டி உட்கார்ந்து கொள்வாள்.
இன்று மஞ்சதண்ணீர் எல்லாம் ஊத்தியதால் போட்டோ பிடித்தனர்.
நடராஜன் ஷீலா இருவரும் வருணிகாவுக்கு ‘V’ என்ற மோதிரத்தை பரிசளித்தனர்.
“மாமா… மோதிரம் லூசா இருக்கு.” என்று வருணிகா கூறவும், “நீ வளர்ற பொண்ணுயில்லையா? நீ காலேஜ் படிக்க போறப்ப இந்த மோதிரம் சரியா விரலுக்கு பொருந்தும்.” என்றார்.
“என்னங்க அண்ணா பெரியவளுக்கு சேலை மட்டும் எடுத்துட்டு வந்திங்க. செய்முறை எல்லாம் பொறுமையா செய்திங்க. சின்னவளுக்கு இப்பவே மோதிரம் வாங்கிட்டிங்க. என்ன அவசரம்?” என்றார் ரேணுகா.
“அதென்னவோ உங்கண்ணி எப்படியும் செய்யறது தானே. இப்பவே வாங்கிடுங்கன்னு சொன்னா” என்று பேச, ஷீலாவோ, “பொண்ணு சடங்கான நேரத்தை குறிச்சு வச்சிட்டிங்களா அண்ணி?” என்று கேட்டார்.
“ஆஹ்.. 2014 மே மாசம் 25ஆம் தேதி நேரம் எல்லாம் குறிச்சி வச்சிட்டோம் அண்ணி” என்றார் ரேணுகா.
மேலும் “போன தடவை பெரிய கழுதை எப்ப சடங்கானா என்றதையே என்னிடம் சொல்லலை. நானா தான் துவைக்கிறப்ப துணியில இரத்தகறை இருக்குன்னு அதட்டி கேட்கவும் ஆமான்னு சொன்னா. தேதி ஒழுங்காவே சொல்லலை, அதனால நேரமெல்லாம் குத்துமதிப்பா தான் எழுதி ஜாதகத்தை பார்த்தோம். அதனால் இந்த முறை நேரம் நொடியெல்லாம் துல்லியமாக எழுதி வச்சிட்டேன்.” என்று பதிலுரைத்தார்.
மகேஸ்வரனோ “விட்டா பேசிட்டு இருப்ப உங்கண்ணாவையும் என் தங்கச்சியையும் சாப்பிட அழைச்சிட்டுப்போ” என்று விரட்டினார்.
மொட்டை மாடியில் பந்தலிட்டதால் உணவெல்லாம் அங்கே பரிமாறப்பட்டது.
“இருக்கட்டும் மாப்பிள்ளை. நாளை வரை இங்க தானே இருப்போம். சாப்பாடு உங்களோட சாப்பிட்டுக்கறேன்” என்றார் நடராஜன்.
வருணிகா தந்தை மகேஸ்வரனோ, “இரண்டு வருஷம் முன்ன பெரிய பொண்ணு வநீஷாவுக்கு தண்ணீ ஊத்தறப்ப கையில் பத்து பைசா இல்லை மச்சான். சொந்த பந்தத்திற்கு சொல்லாம ஏதோ சேலை உடுத்தி உட்கார வச்சி நம்ம வீட்டு வரை செய்தது. அப்ப இருந்த வீடும் சின்னது.
இப்ப நம்ம வருணிகாவுக்கு ஊரே அசந்து போற அளவுக்கு செய்தாச்சு மச்சான். சொந்த வீட்டு மாடிலயே பங்ஷன் வைக்கிற அளவு இடம் இருக்கவும் பந்தல் போட்டு தடபுடலா செய்தாச்சு. ரொம்ப சந்தோஷமாயிருக்கு” என்று மகிழ்ந்தார்.
ரேணுகா சும்மாயில்லாமல், “அதென்னவோ பெரியவ சடங்கானப்ப கடனும், வட்டி கட்டவும்னு காலம் போச்சு.
சின்னவ சடங்கானப்ப தொழில் அமோகமா இருக்கு. கையில் காசு புழங்குது. நமக்கு வருணிகா அதிர்ஷ்ட குழந்தைங்க” என்றார்.
இதை கேட்டிருந்த ஷீலாவோ “மகிழன் பிறந்தப்பவும் இப்படி நாங்க உணர்ந்திருக்கோம் அண்ணி” என்றார்.
நடராஜனும் “ஆமா… ஆமா.. என்னயிருந்தாலும் உங்களுக்கு ஒரு குழந்தை ஆணா பிறந்திருக்கலாம். அந்த விஷயத்துல உங்களை விட நான் பாக்கியசாலி. ஒரு பையன் மகிழன், ஒரு பொண்ணு மணிமொழி” என்று பெருமைபட்டுக் கொண்டார்.
இதையெல்லாம் படிக்கட்டில் நின்று பேசவும் அதனை கேட்ட வநீஷாவிற்குள் வருத்தம் உண்டானது.
அதையெல்லாம் எண்ணி பார்க்க நேரமின்றி, ஆண்மகனை போல தாவணியை தூக்கி சொருகி பந்தியில் கேசரியை பரிமாறினாள்.
மகிழன், மணிமொழி மட்டும் பந்தியில் அமர்ந்து சாப்பிட தயாராக, வநீஷாவோ மணிமொழியை பார்த்து பார்த்து கவனித்தாள். அத்தைக்கு பையன் மட்டுமா? ‘மணிமொழி’ என்ற மகளும் உண்டு.
மகிழனோ “வநீ எனக்கு இன்னும் கொஞ்சம் கேசரி வேண்டும்” என்றான் கெஞ்சலாக.
“ஒருமுறை தான் வைப்பேன். மத்தவங்களும் கேசரி சாப்பிட வேண்டாமா?” என்று துடிக்காய் கேட்டாள் பதினைந்து வயது சுட்டிப்பெண் வநீஷா.
“உன் பங்கை எனக்கு கொடு. நீ திங்காத” என்றான் பதினேழை தாண்டும் காளையவன்.
வநீஷா அனலாய் பார்த்து கரண்டியால் வேண்டா வெறுப்பாய் வைத்தாள்.
“வநீ எனக்கும் கேசரி” என்றாள் பத்து வயது மணிமொழி.
மகிழனுக்கும் மணிமொழிக்கும் ஏழு வருட இடைவெளி. அண்ணனின் வார்த்தையை அச்சு பிசகாது கேலி கிண்டல் கொஞ்சலில் உபயோகப்படுத்துவாள்.
மணிமொழி கேட்டதும் மறுக்க மனமின்றி கேசரியை அவளுக்கும் வாறி வழங்கினாள்.
“எனக்குன்னா குட்டியூண்டு வைக்கிறது. என் தங்கச்சிக்குன்னா அள்ளி வழங்குற” என்றான் மகிழன்.
“அவ அழகான குட்டிப் பொண்ணு. நீ எனக்கு பிடிக்காத அத்தை பையன்” என்று திமிராய் பதில் தந்தாள்.
மகிழனோ கேசரியை ஒவ்வொரு விள்ளாக எடுத்து சுவைத்தான். கண்கள் மட்டும் வநீஷா செல்லுமிடமெல்லாம் சுழன்றது.
மே மாதமென்பதால் பள்ளி விடுமுறை என்று இரவு அங்கே தங்கினார்கள் மகிழன் குடும்பத்தார்.
வீடும் பெரிய வீடு. நான்கு அறைகள் கொண்டது.
பழங்கால வீடு என்பதால் மாடிக்கு செல்லும் படிகள், ஒரு அறைக்குள் இருந்தது. பெரும்பாலும் இந்த அறை மாடிக்கு சென்றால் மட்டும் பயன்படுத்துவதால் காலியாக இருக்கும்.
இன்று அனைவரும் அங்கு தான் தங்க முடிவெடுத்தனர்.
பாய் தலையணைகளை போட்டுவிட்டு வநீஷா எல்லாவிதமான உதவிகளை செய்து முடித்து தங்கை உறங்கும் அறைக்கு வந்தாள். இங்கே பெரிய அறை என்பதால் இங்கு பெரிய கட்டில் போட விலையெல்லாம் பார்த்து வைத்திருந்தனர்.
“சாப்பிட்டியா வருணி?” என்று வநீஷா வரவும், “சாப்பிட்டேன் அக்கா. நீ…?” என்றாள் வருணிகா.
“ம்ம்” என்ற வநீஷா தங்கை கழுத்தில் அணிந்திருந்த மயில் மாடல் செயினை தொட்டு பார்த்தாள்.
“இது செத்துப்போன நம்ம பாட்டியோடையது. அடகு கடையில் இருந்ததாம். இப்ப தான் கொஞ்ச நாளுக்கு முன்ன அப்பா நகையை மீட்டியதால அம்மா ஜாக்கிரதையா வச்சிக்கோன்னு போட்டு விட்டாங்க” என்றாள் வருணிகா.
“ஓ.” என்றவள் கண்கள் பிரகாசமான தங்கையின் வதனத்தையே சுற்றி வட்டமிட்டது. தங்கைக்கு எல்லாம் போட்டு அழகு பார்க்கின்றார்கள்.
-தொடரும்.
வாசிக்கும் அன்பு உள்ளங்கள் அப்படியே கருத்தை தட்டி விட்டு செல்லுங்கள்.
நன்றி.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Super
starting arumaiya iruku ithula oru ponna vitu innouru ponnuku parapatcham pakurangalo
💜💜💜💜
Super
Nice epi👏👍👍
Nice starting 🌷
Super sis nice starting 👌👍 interesting 😍🥰
Nice!!!