அத்தியாயம்-10
வருணிகா கண்கள் தாரை தாரையாக நீரை வெளியிட்டது.
“செத்துடுவேன் மகிழ் அத்தான்.” என்றாள். சற்று முன் மகிழன் வருணியிடம், “நமக்கு ஒரு வேளை ஏதாவது ஒரு காரணத்தால் கல்யாணம் தடையான என்ன செய்வ வரு” என்றான். அதற்கு தான் வருணி அழுதவாறு இந்த பதிலுரைத்தாள்.
“நீங்க இப்பயெல்லாம் ஒரு மாதிரி நெகட்டிவா பேசறிங்க அத்தான்.
நிச்சயம் முடிஞ்சப்ப, ஏன் அதுக்கு முன்னாடி கூட என்னிடம் பேச ஆசைப்படுவிங்க. அப்பா தான் நீங்க வீட்டுக்கு வந்தாகூட அவரும் கூடவேயிருந்து பேசி அனுப்புவார்.
நீங்க என்னுடன் பழக ஆசைப்படுவிங்க. நிச்சயத்தப்ப என் இடுப்பு பிடிச்சி என்மனசுல ஆசையை விதைச்சி பேசினிங்க.
அந்தளவு அத்தானுக்கு என் மேல காதலா? அப்படின்னு நான் சந்தோஷப்பட்டேன்.
இப்ப என்னாச்சு? அடிக்கடி ஏதோ காதல் தோல்வி அடைந்தவர் போல பேசறிங்க.
யாரையாவது காதலிக்கறிங்களா? ” என்றாள்.
மகிழனோ கசந்த முறுவளோடு, “அதெல்லாமில்லை” என்றவன் அவளையே ஊடுருவி பார்த்தான்.
“பின்ன எதுக்கு கல்யாண தேதியை தள்ளி வச்சிங்க?” என்றாள்.
“ஆபிஸ்ல ஒர்க் பிரஷர் வநீ” என்றான். அடுத்த நொடியே வநீ என்ற பெயரை உச்சரித்ததை விடுத்து “சாரி வரு. ஆபிஸ்ல ஒர்க் பிரஷர். கல்யாணம் முடிச்சி அந்த கோபத்தை உன்னிடம் காட்ட முடியாது. கொஞ்சம் அந்த பிராஜக்ட் முடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆவேன். மாமா கூட ஒத்துக்கிட்டார்.” என்றான்.
முதலில் வநீ என்றதும் வருணிக்கு அதிர்ச்சி. அடிக்கடி மகிழ் அத்தான் உதட்டில் அக்கா பெயரே அடிப்படுகின்றது.
இரண்டு நாட்களுக்கு முன் அக்காவை பார்த்திங்களா? அவ பெயரை அடிக்கடி சொல்றிங்க? என்று கேட்டதற்கு ‘ஒரே பேட்டர்ன்ல மாமா உங்களுக்கு பெயர் வச்சிட்டார்.
எனக்கு லைட்டா குழப்புது.’ என்று சமாளித்தான்.
“எங்கப்பா ஒன்னும் சாமான்யமா ஒத்துக்கலை. நீங்க தான் பேசிபேசியே கன்வின்ஸ் பண்ணிட்டிங்க. அத்தை மாமாவுக்கு இன்னமும் உங்க முடிவுல அதிருப்தி தெரியுமா?
அப்பா என்னிடம் வந்து எப்படி திட்டினார் தெரியுமா? நீ தான் மகிழனிடம் பேச தெரியாம பேசி கல்யாண தேதியை தள்ளி வச்சியிருக்கன்னு திட்டறார்.” என்று கூறவும், “ஏய் அப்படியெல்லாம் இல்லைம்மா. நிஜமா எனக்கு வேலையில பிரச்சனை.” என்றான்.
நீங்க என்னை கல்யாணம் செய்துப்பிங்க தானே மகிழ் அத்தான்?” என்று கேட்டாள்.
“ம்ம்” என்றவனின் கையை அவள் கன்னத்தில் வைத்து கொண்டாள்.
பீச் பக்கம் ஒரு தனி ரெஸார்ட்டை ஒட்டிய ஹோட்டல் என்பதால் பெரும்பாலும் பக்கத்தில் ஆளில்லை.
“நீங்க வேண்டுமின்னா என்னை கிஸ் பண்ணிக்கோங்க. நான் பயந்து நடுங்கலை. உங்களுக்கு என் இடுப்புல கை போடணுமா? போட்டுக்கோங்க. கட்டுப்பட்டியா அப்பா மாதிரி நானும்னு என்னை விட்டு விலகாதிங்க” என்றாள்.
மகிழனிற்கு கவலை கூடியது. மாமா மகேஸ்வரன் அதிகப்படியாக கட்டுப்பெட்டியாக வருணிகாவை வளர்த்து விட்டார். அதீத விதிமுறைகளோடு, அதன் காரணமாக மகிழனுக்கு மகேஸ்வரன் மீது சிறு பிடிக்காத தன்மை.
தன் அன்னை ஷீலாவிடம் கூட, “நான் அப்படி வருணியை என்ன பண்ணிட போறேன்மா. ஜஸ்ட் ஏதாவது சும்மா போனா கூட வாட்ச்மேன் மாதிரி கூடவே நின்று பேசி அனுப்பறார்.
வருணி கூட உரிமைய பேச முடியலை. என் காலேஜ் பொண்ணுங்க கூட என்னிடம் வாயாடுதுங்க. மாமன் பொண்ணுங்ககிட்ட தான் யாரோ மாதிரி பேச விடறார். மாமா மொத்தமா மாறிட்டார் வநீ தொலைந்ததிலருந்து மொத்தமா மாறிட்டார். சரியான பட்டிக்காட்டான் மாதிரி இருக்கார். எனக்கு மாமாவை சில நேரம் பிடிக்கலை” என்பான்.
மகிழனுக்கு தந்தை போல தானும் மகிழ் தீண்ட வரும் முன் விலக, மும்பை கோவா பெங்களூர், என்று சுற்றி வந்த மகிழ் அத்தானுக்கு தன்னையும் பிடிக்கவில்லையென்ற நினைப்பில் இப்படி பேசினாள்.
என்னை வேண்டுமென்றால் முத்தமிட்டு கொள்ளுங்கள், தீண்டிக்கொள்ளுங்கள் என்று மடத்தனமாய்.
மகிழனோ தன் நிலையை கூற முடியாது, ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். எனக்கு சாதாரணமாவே வருணியை பிடிக்கும்” என்று முன் நெற்றியில் முத்தமிட்டான்.
“இல்லை எனக்கு இங்க தான் வேணும்” என்று உதட்டை தொட்டு காண்பித்தாள்.
“விளையாடறியா? பப்ளிக் பிளேஸ்ல இருக்கோம்” என்று மறுத்தான் மகிழன்.
“நீங்க தானே அன்னைக்கு வீட்டுக்குள்ள வந்து விடறப்ப முத்தமிட்டிங்க. அதுலயிருந்து என்மனசு சரியில்லை. இப்ப மட்டும் என்னவாம்” என்றாள்.
அவளுக்கு மகிழனின் விலகல் அந்தளவு இதயத்தில் வலிக்க, அவன் ஆசைக்கு இணங்கும் அளவிற்கு இறங்கி நின்றாள்.
“இங்க பாரு வரு. அன்னைக்கு வீட்டுக்குள்ள… நோட் பண்ணு… வீட்டுக்குள்ள… இடுப்பு பிடிச்சது என் ரூம்ல… பொதுயிடத்துல நான் தொட்டேனா? கையை பிடிச்சி பேசறது மட்டும் இருக்கும். இப்ப கூட நெற்றில முத்தமிட்டேன். உன்னை பிடிக்காம இதெல்லாம் செய்ய முடியாது. எனக்கு என் மாமா பொண்ணுன்னா உயிர் தான்” என்றான்.
வருணியின் கண்ணீர் நின்றது.
“என்னவோ போங்க… கல்யாண தேதியை தள்ளி வச்சிட்டு எல்லாம் பேசுவிங்க” என்று சிணுங்கினாள்.
“இப்ப என்ன கல்யாண தேதி தள்ளி வச்சது குத்தமா? வாரத்துக்கு ஒரு முறை உன்னை சந்திக்காம தவிர்க்கறேன்னா? சொல்லு… வாரத்துல ஒரு நாள் உன் முன்ன நிற்கறேன். இதெல்லாம் கண்ணுலப்படாதே” என்று கையை கிள்ளிவிட, வருணி புன்னகைத்தாள்.
தூரத்தில் பேண்ட்பேக்கெட்டில் கையை விட்டு ஒயிலாக நின்ற உருவம் மெதுவாக பொறாமையோடு இவர்களை பார்த்தது.
அந்த உருவத்தின் பேக்கெட்டில் ஹிந்தி படப்பாடல் போன் ரிங்டோனாக ஒலித்தது.
“ஹலோ சாஹிர் ஸ்பீக்கிங்” என்றதும் மறுபக்கம், “என்ன சாஹிர் வநீஷாவோட தங்கச்சியை பார்க்க சென்னைக்கு போயிருக்க போல?” என்று கேட்டது அறுபது வயது கிழவனான டாக்டர் கிரண் குரல்.
“ஆமா டாக்டர். வருணியை பார்க்காம இருக்க முடியலை” என்றான்.
“இங்க என்ன களோபரம் செய்துட்டு அங்க போயிருக்க? படா கேடி பையா நீய்ய்” என்று பாராட்டி பேச, “டாக்டர் கிரண் ப்ளீஸ் ஏதாவது பேசி என்னை காயப்படுத்தாதிங்க. அங்க நடந்து முடிந்ததுக்கு நான் காரணமில்லை” என்றார்.
“சரி சரி… அடுத்து மும்பை எப்ப வருவ? உன்கூட எனக்கான பேரம் இருக்கு. அதை மறந்துடாத. வர்ற சனிகிழமை வந்துடு. அதை பத்தி பேச தான் கூப்பிட்டேன். வைக்கறேன்” என்றதும் சாஹிர் போனை துண்டித்தான்.
‘கிழவா… ஒரு நாள் சங்குலேயே மிதிக்க போறேன்.’ என்றவன் மகிழ்-வருணிகாவையே கண்காணிப்பாளராக தொடர்ந்தான்.
சாஹிர் இருவரும் செல்லுமிடமெல்லாம் அவர்கள் பைக்கை தொடர்ந்து வந்தான்.
ஹெல்மெட் அணிந்து துரத்த, முன்செல்வோருக்கு யாரென்று தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் மகிழனுக்கும் வருணிக்கும் இந்த சாஹிர் புதியவனே.
சிக்னலில் மகிழ் முதுகில் வருணி மோதி, அவனிடையை சுற்றியும் கைகளை கோர்த்தாள்.
மகிழன் உதடு புன்னகை விரிந்து கண்ணாடியில் வருணியை காண அவளோ சங்கடமாய் கையை எடுக்க நினைத்தாள்.
மகிழ் விடுவித்தால் தானே?! “கையெடுத்த, வீட்டுக்கு போகற வரை வேண்டுமின்னே பிரேக் அடிச்சி மேல விழவைப்பேன். எப்படி சௌகரியம்.” என்றதும் அவனை அணைத்து கொண்டாள்.
கல்யாண தேதி தள்ளி வைக்க எத்தனை கேள்வி? எம்புட்டு அழுகை?.’ என்றவன் சிரிக்க வருணியை வெட்கப்படவும் வைத்தான்.
அங்கு அவர்கள் பக்கத்திலிருந்த வண்டியில் இருந்த இதயத்திற்கு தான் நெருப்பை விழுங்கும் நிலை.
இது தான் இந்த உணர்வு தான் காதலா? இந்த உணர்வுக்கு தான் இத்தனை நாட்கள் மனம் குதியாட்டம் கண்டதா? இதுவரை வாழ்வில் புணர்ந்த நிமிடங்கள் தாண்டி, இந்த உணர்வில் தான் தன் மனம் முழுவதும் தெளிவடைய, அவர்களையே பின் தொடர்ந்தது அந்த இருசக்கர வாகனம்.
அன்று மட்டும் அல்ல அதன் பின் அந்த பல மாதமும் வருணிகா மகிழன் பின்னால் நிழல் போல தொடர்ந்தது வருணி மகிழ் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அன்றும் அப்படி தான் மகிழன் வருணி படம் பார்க்க வந்தார்கள். இந்தியன் 2. படம் எப்படி என்றெல்லாம் அவர்களிடம் கேட்டால் பதில் வராது. வருணி பேச்சு எல்லாம், அக்காவும் நானும் சின்ன பிள்ளையா இருந்தப்ப இந்தியன் படம் பார்த்தோம். அக்காவுக்கு கமல்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்தியனை விட அவ்வை சண்முகி படம் காமெடியா இருக்குன்னு அடிக்கடி சிடி பிளேயர்ல போட்டு பார்ப்பா.
இப்ப சிடி பிளேயரும் இல்லை. அக்காவும் இல்லை.” என்று வாட்டமாய் முடித்தாள்.
”லூசு.. என்னை எப்பபாரு வநீ பத்தி பேசறிங்கன்னு சொல்லிட்டு நீ தான் வநீ பத்தி பேசற. முதல்ல வநீயை மறந்து தொலை.
கல்யாணம் ஆனா எங்கம்மா முன்ன வநீஷா பத்தி மூச்சு விடக்கூடாது. அம்மாவுக்கு மணிமொழி இறந்தப்பிறகு நீ பாட்டுக்கு வநீஷா அக்கா தான் கண்ணாமூச்சி விளையாட சொன்னா. அவ ஒளியுற இடத்துல மணிமொழி ஒளியவும் இறந்ததா வாக்குமூலம் மாதிரி தர, அம்மாவுக்கு வநீயை சுத்தமா பிடிக்காது. புரிஞ்சுதா…இனி வநீ பத்தி பேசவே கூடாது.’ என்றான் மகிழன்.
பின்னிருக்கையில் இவர்களையே பார்க்க வந்த ஆண்மகன் சாஹிரோ, “வநீயை பத்தி பேசக்கூடாதா? டேய்… அவ உங்களை நினைச்சு தான்டா செத்து போயிருக்கா. ம்ம்ம்… எனிவே… அவளை பத்தி இனி பேசக்கூடாது. ஏன்னா… எனக்கு வருணி வேணும். ஒரு விதத்துல மகிழன் சொல்லறதும் எனக்கு சரியாபடுது.’ என்று மகிழனை அளவிட்டான்.
உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டு, அலைஅலையான கேசம். தன்னை போல வெளுத்த தோள் இல்லை. சௌவுத் இந்தியன் கலர் என்று வருணிகாவுக்கு பிடித்த நிறம். அதனாலையே மகிழன் மீது சாஹிருக்கு சினம் உண்டானது.
இவன் இருக்கற வரை வநீயை என் பக்கம் திரும்பி பார்க்க வைக்க முடியாது என்ற உண்மை சுடவும், அந்த முடிவை எடுத்தான் சாஹிர்.
படம் முடித்து வீட்டுக்கு வந்து மகிழ் வருணி வீட்டிற்கு வந்து விடவும், மகேஸ்வரன் வாசலில் நின்றிருந்தார்.
வருங்கால மாப்பிள்ளையான தங்கை மகனுமான மகிழனிடம், “மகிழன் இனி இப்படி அடிக்கடி வருணியோட வெளியே போறதை அவாய்ட் பண்ணிடு. முன்ன கல்யாண தேதி குயிக்கா வச்சோம். அதனால் சேர்ந்து வெளியே போனாலும் நான் அதை பெரிசா எடுத்துக்கலை. இப்ப கல்யாண தேதி தள்ளி வச்சியிருக்க. அதுவரை நீ என் மக இப்படி சேர்ந்து ஜோடியா சுத்தினா ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க. அதுக்கு சொல்லறேன். உனக்கு எப்படியோ. எனக்கு என் மக எந்த கெட்டப்பெயரும் வாங்கிடக்கூடாது.” என்றார்.
மகிழிற்கு கோபம் கூடியது. ஆனாலும் வயசுக்கும் உறவுக்கும் மரியாதை தந்து, “சரிங்க மாமா.” என்று கூறிவிட்டு வருணிகாவை முறைத்து புறப்பட்டான்.
வீட்டுக்கு வந்து அன்னை ஷீலாவிடம் கொதித்து கொண்டிருந்தான்.
‘பெருசா… வந்துட்டார்… ஊர்ல பேசுவாங்க உலகத்துல பேசுவாங்கன்னு.. நான் எல்லாம் எவன் எது பேசினாலும் மயிரா போச்சுன்னு வாழறவன். என்னிடம் வந்து இப்படி பண்ணாத அப்படி செய்யாதன்னு சொல்றார். அம்மா.. உங்க அண்ணாவுக்கு இதான் மரியாதை. கல்யாண தேதியை தள்ளி வச்சதுலயிருந்து மார்க்கமா தான் இருக்கார்.
ஒரு நாள் இல்லை ஒரு நாள் பாருங்க.. எங்குட்டாவது ஓடி ஒளிய போறேன். வநீஷா மாதிரி” என்றான்.
“இப்ப எதுக்கு அவ பேச்சு? எங்கண்ணா சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். நீ வருணியிடம் பேசி பழகாதவனாடா. எதுக்கு வாரம் வாரம் சனி ஞாயிறு அவளை இழுத்துட்டு பீச் பார்க், தியேட்டர், காபி ஷாப், ஹோட்டல்னு சுத்தற. இதுல சும்மாயில்வாம வாட்ஸப்ல ஸ்டேடஸ் விடுற. சொந்தக்காரங்க எப்படா ஏதாவது சொல்லலாம்னு இருக்கறப்ப, இப்படி வாட்ஸப்ல ஸ்டேடஸ் போட்டா எங்கண்ணாவிடம் கேள்விக் கேட்க மாட்டாங்க?
என்கிட்ட கூட தான், மந்தவெளி மாயா ‘என்ன கல்யாணத்துக்கு முன்ன நடிகர் நடிகைகள் தான் ஷாப்பிங், டேட்டிங் போய் தாய்லாந்து சிங்கப்பூரு தீவுல சுத்தறதை ஜிம்ல நடக்கறதை, அந்த ஊர் தெருவுல சாப்பிடறதுனு வீடியோவா எடுத்து போட்டு தள்ளறாங்க. நம்ம மகிழனும் வாரம் வாரம் போடுறான். பார்த்து மதினி கல்யாணத்துக்கு முன்ன கர்ப்பமா நிற்க போறா’ சிரிச்சிட்டே என்னை குத்தறாங்க.
என்னிடமே இப்படின்னா? பொண்ணை பெத்தவர் மனசுல என்னயென்ன விஷத்தை வீசியிருக்காங்களோ? அப்படி தான் பேசுவார். உனக்கு உன் தாய்மாமா பேசறது குத்துது குடையுதுன்னா வருணி கழுத்துல தாலி கட்டிட்டு நம்ம வீட்ல வச்சிக்கோ” என்று அண்ணனுக்கு ஆதரவாய் பேசினார்.
தந்தை நடராஜனை காண, அவரோ அவர் பங்கிற்கு, “பொண்ணை பெத்தவர் மனநிலை, பெத்தவருக்கு தான் தெரியும்” என்று சென்றார். இறந்து போனாலும் மணிமொழி என்ற பொண்ணை பெத்தவரே. அதனால் மகேஸ்வரனின் மனநிலையை அறிந்தவராய் உரைத்தார்.
மகிழனுக்கு ஒன்னு கூடிட்டாங்க. இனி நாம் பேசியதை யாரும் கேட்க மாட்டாங்க.’ என்று அறைக்குள் கதவை தாழிட்டான்.
வநீ புகைப்படத்தை கண்டு போனை எடுத்தான்.
மகிழனுக்கு நீண்ட மாதங்களாக வநீஷாவுடன் பேசாதது உரைத்திட, அவளுக்கு அழைத்தான்.
சாஹிர் பேண்ட்டில் போன் அலறியது.
‘Makizhan’ என்ற பெயரில் ‘இவன் எதுக்கு கால் பண்ணறான்’ என்ற ரீதியில் எடுக்காமல் இருக்க, நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்போது பிஸியாக இருக்கின்றார்’ என்று தமிழ் குரலில் வரவும், மகிழனோ ‘எப்பவும் ஹிந்தியில் வாய்ஸ் கால் இருக்கும். தமிழ்ல வருதுன்னா? அப்ப வநீ இங்க வந்திருப்பாளா? இங்க வந்தா என்னை பார்க்காம இருக்க மாட்டாளே?’ என்றவன் தனது எண்ணிலிருந்து எடுக்கவில்லை என்றதும், தந்தை எண்ணிலிருந்து அழைத்தான்.
புது எண் என்றதும் யோசிக்காமல் சாஹிர் எடுத்து,”ஹலோ சாஹிர் ஹியர்” என்றதும் ”சாஹிர்” என்று மகிழனும் திருப்பி கேட்க, பட்டென போன் துண்டிக்கப்பட்டது.
-தொடரும்.
mata pora sahir
💜💜💜
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice
👌👌👌