அத்தியாயம்-14
ஊட்டியில் சுற்றும் சாஹிருக்கு தினசரி பணி, வருணியை பின் தொடர்வதே.
அவள் செல்லும் தடங்களில் பாதை மாறாமல் பின் தொடர, வருணி கண்ணீரோடு சென்றது ஒரு மலை குன்றிற்கு.
சாஹிருக்கு அவள் செல்லும் நோக்கம் புரியவே இரண்டு நொடியெடுக்க, வேக வேகமாய் ஓடி வந்து, அவளை இழுத்து அறைந்து முடிக்க, வருணிகாவுக்கு இங்கே யார் தன்னை காப்பாற்றியதென்று ஏறிட்டாள்.
மூச்சு வாங்க ஒரு ஆண் என்றதும் சலிப்படைந்து எழுந்தாள்.
இரண்டெட்டு முன்னே நடந்தவளை கைபற்றி “சாகணும்னு அவ்ளோ அவசரமா? ஏன் லவ் பெயிலியரா?” என்றான் சாஹிர்.
“யார் நீ இங்க வந்து என்னை காப்பாத்தி தப்பு பண்ணாத. நான் சாகணும்” என்று கையை உருவமுயன்றாள்.
“நானா? ஐ அம் ரஞ்சித் சா…” எல்லாரும் சுருக்கமா சாஹிர்னு சொல்வாங்க என்று கூற வந்தவன், ஏனோ ‘சாஹிர்’ என்ற பெயரையும் தவிர்த்தான். அதனால் ரஞ்சித் என்ற பெயரோடு அடையாளப்படுத்தி கொண்டான்.
“ரஞ்சித்தா.. அதுக்கு இப்ப என்ன?” என்று எரிந்து விழுந்தாள். தன்னை சாக விடாமல் தடுத்து விட்டானே என்ற கோபம்.
ரஞ்சித் என்று வருணிக்கு அறிமுகமானவனோ “இந்த பக்கம் வந்தேன். நீ மலையுச்சிலயிருந்து குதிக்க பார்த்த, கடவுள் என்னை காப்பாத்த சொன்னார்.
கடவுள் ஒரு மனுஷனை உருவாக்க ரொம்ப கஷ்டப்படறார். அதிலும் அழகான பொண்ணுங்க செத்துப் போன ரொம்ப வருத்தப்படுவார். அதான் என் படைப்பை வீணாக்காம அந்த பொண்ணை காப்பாத்துன்னு அந்த கடவுள் என்னிடம் மண்டியிட்டார். கடவுளே ஒரு பொண்ணுக்காக மண்டியிட்டு கேட்கறப்ப நான் சக மனுஷன் சும்மா வேடிக்கை பார்க்க முடியுமா?!
காப்பாத்த ஹீரோ எண்ட்ரியா வந்துட்டேன்.” என்று பேச வருணிகா முகம் திருப்பினாள்.
இந்த அழகான மலையுச்சியில் வருணிகா தனியாக இருக்கவும், “கடவுள் அந்த பொண்ணுக்காக மட்டும் என்னை காப்பாற்ற சொல்லலை. அந்த பொண்ணுக்காக இன்னொரு உயிரையும் படைச்சி அனுப்பியிருந்தாராம். அந்த உயிரை அந்த பொண்ணு இன்னும் பார்க்காம இருந்து, அவ சந்தித்தவனால தோல்வியை கொடுந்தவங்களை தான் துணையுன்னு நம்பிடறாளே.
உனக்காக ஒருத்தன் வருவான்னு சொல்ல சொன்னார்.” என்று கூறவும் வருணிகா கையை உருவாமல், ரஞ்சித்தை(சாஹிரை) அளவிட்டாள்.
நல்ல நிறம் ஆண்கள் இந்த மாதிரி வெந்நிறத்தில் இருப்பது வடக்கு பக்கமே. இவன் தென் தமிழகத்தில் பிறக்க வேண்டியவனா? என்ற ஆச்சரியமும் லேசாக மீசை அரும்பிய வழவழப்பான கன்னம் குறுகுறுப்பை கூட்டும் நீலநிற கண்கள். அந்த கண்கள் வேறு அவளையே ரசித்திருக்க, “நான் சாகலை. அட்வைஸ் பண்ணறேன்னு என்னை சாகடிச்சிடாதா?” என்று கையை உதறி குன்றிலிருந்து இறங்கி நடந்தாள் வருணிகா.
தன்னிரு கையையும் பேண்ட் பேக்கெட்டில் விடுத்து அவளை அவளறிந்து பின் தொடர்ந்தான்.
இத்தனை நாள் பின் தொடர்ந்தவனை அவள் கவனித்ததில்லை. ஆனால் இன்று அவள் உயிரை காப்பாற்றி, பின்னால் வரவும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே தன் முன்னடியே எடுத்து வைத்தாள். ஓரிடத்தில் கல் தடுக்கி கால் இடர, சாஹிர் அவளது இடையில் கை பதித்து விழாமல் தாங்கினான்.
வருணிகா சுடிதார் அணிந்திருக்க அவள் ஆடையில் அவன் கைகள் பதித்திருந்தான்.
“யார் நீ… உன்னை பார்த்தா சரியா தோணலை. இதுக்கு முன்ன என்னை தெரியுமா?” என்று கேட்டவள் (சாஹிர்)ரஞ்சித் கையை எடுத்து விட்டு நின்றாள்.
“தெரியும்.” என்றுரைத்தான்.
“எப்படி?” என்று கேட்க, ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ அப்படின்னு வச்சிக்கோ. உன்னை பார்த்த முதல் நாளே எனக்கு பிடிச்சிருந்தது. அதனால் லவ் பண்ணலாம்னு பின்னாடியே வருவேன். இன்னிக்கும் அப்படி தான் வந்தேன். தேங்காட்…. சாக வந்துயிருக்க? உன்னை இப்ப நான் தான் காப்பாத்தியிருக்கேன். நீ எனக்கு சொந்தம் வருணிகா.” என்று கண்களை காதல் தேக்கி மொழிந்தான்.
ஒருவழியாக வருணிகாவுடன் சந்திப்பு, அவளிடம் தன் காதலையும் கிடைத்த இடைவெளியில் பகிர்ந்தான்.
“புல்ஷிட்” என்று கூறி வேகமாக நடையிட்டாள்.
சாஹிர் வருணிகா செல்லவும் “ரூமுக்கு போ.. சாகணும்னு தோணுச்சுன்னா உன் துப்பட்டாவால் பேனில் மாட்டி கழுத்துல சுருக்குமாட்டிக்கோ. கண்ணு வெளியே பிதுங்கி, நாக்கு வெளிய தொங்கி அகோரமா சாவ.
அதுக்கு பதிலா, மச் பெட்டர் ஐடியா சொல்லறேன். ஒரு காபி குடிச்சிட்டு, பிறக்கும் போது உனக்காக தான் பிறந்த, வளரும் போதும் உனக்காக வளருற, சாப்பிடற, அப்படியிருக்க எவன் உன்னை விட்டு போனாலும் நீ உனக்காக வாழ்ந்து பார்க்க திங்க் பண்ணு. லவ் யூ வருணிகா” என்று கத்தி அவளை தொடர்ந்து வந்தான்.
அவள் காதை மூடியவளாக அவன் பேசுவதை கேட்டு, ஹாஸ்டல் வந்து கேட் கதவை தாழிட, பறக்கும் முத்தமொன்றை வீசினான் சாஹிர்.
“ஃபுல் ஷிட்” என்று திரும்பி அறைக்கு அவசரமாய் ஓடினாள்.
அவளது அறையில் மெத்தையில் வீழ்ந்து தேம்பினாள்.
‘மகிழ் அத்தான்.. ஏன் மகிழ் அத்தான் என்னை விட்டு வநீஷா கூட போனிங்க? பாருங்க கண்டவன் வந்து எனக்கு ஃபிளையிங் கிஸ் தர்றான். காதலிக்கறானாம், லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டாம். என் பெயரை ஏலம் விடறான்.’ என்று தேம்பி அழுதாள்.
‘நான் உங்களை தானே மனதார விரும்பினேன். என்னை முத்தமிட்டு கட்டி பிடிச்சி என்னென்னவோ பேசிட்டு, என் மனசுல ஆசை வளர்த்து, இப்படி அம்போன்னு போயிட்டிங்க. உங்களுக்கு வநீ அக்காவை தான் பிடிச்சிருக்கா?
இந்த வநீ அக்காவுக்கு என்மேல பாசமும் இரக்கமும் இல்லையா? சின்ன வயசுல என் கையை பிடிச்சி என்னை கவனிச்சிப்பாளே. இப்ப எப்படி என்னை சந்திக்காம உங்களை வந்து சந்திச்சா?
அப்பாவிடம் அக்காவை தேட சொன்னா முகம் திருப்பிட்டு போயிட்டார். இப்ப இவனால் சாகவும் முடியலை. நான் லவ் பெயிலியர் என்றவரை தெரிந்திருக்கான்.” என்று தனியறையில் தேம்பினாள்.
தூக்குப்போடும் விதமாக எண்ணி பார்த்தவளுக்கு ரஞ்சித் சொன்னது நினைவில் வந்து செல்ல, பயந்தவளாய் படுத்துக்கொண்டாள். வருணிக்கு சாஹிர் அறிமுகம் ரஞ்சித் என்பதல்லவா.
மெதுமெதுவாய் சுடு நீரை வைத்து பால் ஊற்றி காபி கலந்தாள்.
சின்ன வயசுல அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி என்னை அலங்கரித்தாங்க. நான் அம்மாவுக்காக வாழ்ந்தேன். வளரவளர அப்பா இப்படி தான் இருக்கணும், இந்த டிரஸ் தான் போடணும், இதை செய்யணும், இதை செய்யாதேன்னு ‘ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்’ போட்டார். இப்ப காதல் வளர மகிழ் அத்தானுக்காக என்னை மாற்றி அவர் முத்தத்திற்கு பைத்தியமா கிடந்தேன். இனியும் யாருக்காக வாழ? எனக்காக மட்டும் இனி வாழ்ந்துப் பார்க்கணும். ஆஹ்… இனி எனக்காக மட்டும்.’ என்றவளின் மனம் சரியான முடிவே என்று பாராட்ட, மூளையும் வழிமொழிந்தது.
என்ன தான் யோசித்து முடிவெடுத்தது வருணிகா என்றாலும் காப்பாற்றிய ரஞ்சித் என்பவனுக்கும் நன்றி உரைத்தாள்.
உதவி செய்தவனை மறக்க முடியாது அல்லவா?! இந்நேரம் அவன் தடுக்காவிட்டால் மலையிலிருந்து விழுந்து இறந்திருக்க கூடும்.
ரஞ்சித்? யாரிவன்…? கண்டதும் காதல் என்று பிதற்றிக்கொண்டு திரிந்தான். இங்கு வந்து ஒன்றரை மாதம் இருக்குமா? ஆளும் முகறகட்டையும். பூனை முடி போல தாடியும் அவன் நிறமும் என்று திட்டினாளாயென ஆச்சரியப்படும் விதமாக இருந்தது.
ஆனால் அதன் பின் கல்லூரிக்கு போகும் போதும் வரும் போதும் ரஞ்சித் பின் தொடர்வதை பெரிதாக மூளையில் ஏத்திக்காமல் நடந்தாள்.
இதற்கிடையே ஜனார்த்தனனும் அவரது துணைவி மாலா மற்றும் மகன் ஷங்கரும், ஹாஸ்டலில் வந்து குடும்ப சகிதமாக அறிமுகப்படுத்தி கொண்டார்கள்.
தந்தை வேறு ‘என் பிரெண்ட் ஊட்டில தான் இருக்காங்க. உன்னை வந்து பார்த்தாலும் பார்ப்பாங்க.” என்றார்.
சரி பார்த்துவிட்டு செல்லட்டும் என்று வருணிகா எண்ணியிருக்க, ஷங்கர் அடிக்கடி தன்னை மறந்து வருணிகாவை ஆசையாக பார்த்தான். ஒரு நாள் வீட்டிற்கு உணவருந்த வரவேற்று சென்றார்கள். எல்லாம் வேண்டா வெறுப்பாய் தலையாட்டி கொண்டாள்.
லேசாய் ஐயம் எழுந்தது. இந்த ஷங்கருக்கு தன்னை மணமுடிக்க தந்தை திட்டம் தீட்டுகின்றாரோ என்று.
இம்முறை தந்தையின் எண்ணத்தில் இடியை இறக்குவதில் தயங்க கூடாதென்ற முடிவில் இருந்தாள் வருணிகா.
வருணிகாவுக்கு தினமும் தனிமையில் மகிழ் அத்தானும், வநீ அக்காவும் எங்கு சென்றிருப்பார்கள் என்று வாட்டமும் இருந்தது.
கல்லூரி செல்லும் போதும், வரும் போதும் ரஞ்சித் பின் தொடர்வதில் முதலில் எரிச்சலாய் கடந்தாள் வருணிகா. ஆனால் கூடவே வரும் தோழி ரஞ்சித்தை பார்த்து “நல்லா தான் இருக்கான். லவ் பண்ணலாமே என்னை ‘அப்ரோச்’ செய்தா ஓகே சொல்லிருப்பேன். ஆள் நடிகர் சூர்யா அளவு உயரம், வெள்ளை நிறம், நீலநிற கண்ணு, குட்டி குட்டி தாடி மீசை என்னவோ அழகாயிருக்கான்” என்று மகிழன் என்பவனை இவள் விரும்பியது தெரியாமல் கூறினாள்.
தோழியின் பேச்சில் ரஞ்சித்தை அளவிட்டாள்.
ரஞ்சித் மூக்கும் முழியும் அழகான ஆணாக பறைசாற்றியது. அந்த கருநீலக் கண்கள் அவளை அந்தளவு குறுகுறுப்பாய் ஏறிடுவது கூடுதல் கவர்ச்சியாக இருந்தது.
என்ன சற்று உடல் கூடுதலாக எடைப் போட்டிருக்கலாம். வட இந்தியன் போல சப்பாத்தி, தால் சாப்பிட்டு வளர்ந்த உடல் என்பதால் அப்படி அளவாய் இருக்கின்றானோ? என்றெல்லாம் அவனை பற்றி சிந்திக்கும் அளவிற்கு சென்றாள்.
வருணிகாவிடம் தினமும் தூரத்தில் பார்த்து செல்வது அவன் ஒருவனே.
தினமும் வருணிகா ரஞ்சித்தை நினைக்காமல் இருக்க மாட்டாள். ஒன்று அவனை திட்டுவதற்கு நினைப்பாள். இல்லை மகிழனை மறக்க முடியாமல், பிதற்றல் மொழியோடு, ‘நானும் ரஞ்சித்தை லவ் பண்ணட்டுமா மகிழ் அத்தான். நீ சந்தோஷப்படுவியா? ஆனா நீ உதட்டில் முத்தமிட்டு சொன்னியே. நான் உன்னோட வருணினு’ என்று அந்த கூட்டுக்குள்ளே அடைந்து திரிவாள்.
—-
இடம் : மும்பை
ஹிந்தி உரையாடல் இங்கே தமிழில்…
கிரணின் மகன் ‘அதுல்’ “இல்லை சார் அப்பா இயற்கை மரணத்துல இறந்தார் என்றால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா அப்பாவுக்கு கொஞ்ச மாசத்துக்கு முன்ன சாஹிர் என்ற ஆளுக்கும் அவருக்கும் பெரிய சண்டை வந்திருக்கு. வநீஷான்னு அப்பாவிடம் ஒரு பொண்ணு அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வந்திருக்கா, அது அவன் காதலன் சாஹிருக்கு பிடிக்கலைன்னும் அப்பா மேல கோபமா அவரையே கொல்லறதா பேசியிருக்கிறான்.
ரீசண்டா எங்க கார் டிரைவர் கமல் ஹாஸ்பிடல்ல வேலை செய்யுற நர்ஸ் பெண்ணிடம் சாஹிருக்கு கிரண் சாரை கொல்லற அளவு வெறியிருக்கு. சாஹிரையும் ரொம்ப நாளா காணோம். அவன் இருந்தா ஐந்து பத்து பணத்தை சம்பாதிச்சுயிருப்பேன்னு குடிச்சிட்டு புலம்பியிருக்கான்.
அந்த பர்டிகுலர் நர்ஸ் என்னிடம் இதை சொன்னாங்க. சாஹிர் அப்பாவை கண்டபடி திட்டிய வீடியோ இது. அப்பாவும் இறந்துட்டார் அந்த சாஹிரை காணோம். அப்பாவிடம் ட்ரீட்மெண்ட் பார்த்த வநீஷாவையும் காணோம். அதான் கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு.” என்று அங்கிருந்த போலீஸ் கைரவ்-விடம் வீடியோவை காட்டினார். ரிஸப்ஷனில் இருந்த சிசிடிவியில் சாஹிர் நடந்துக்கொண்ட முறை ஒலிப்பரப்பானது.
அதுல்லோ இன்னும் உள்ளது என்பது போல “அதோடு அப்பா இறந்தப்பிறகு கடற்கரை வீட்டை ரீசண்டா சுத்தம் செய்தப்ப, இந்த கார்ட் அவரோட கப்போர்ட்ல இருந்தது. ஏதோ சென்னையில் ‘கேசவன் ஸ்டூடியோ’னு ஒரு கார்ட். அப்பா எல்லாம் சென்னைக்கு போனதேயில்லை. இதுல வர்ற கார்டுக்கு போன் பண்ணி பேசினப்ப சாஹிர் வநீஷா முன்ன கல்யாணம் பண்ணிப்பதா பேசிட்டு கல்யாண ஆல்பத்துக்கு அவங்களை போட்டோ எடுக்க கோரிக்கையெல்லாம் வச்சதா சென்னார்.
நீங்க ஒருமுறை அந்த வநீஷா சாஹிரை தேடி நேர்ல ஒரு முறை பார்த்து என்கொயிரி செய்து, அப்பா மரணம் இயற்கையானதா? இல்லை சாஹிர் ஏதாவது செய்துட்டு தப்பிச்சு தலைமறைவா இருக்கானா என்னனு சொல்லுங்க சார்.
ஒருவேளை அப்பா மரணம் இயற்கையானது என்றால் நிம்மதி கிடைக்கும். அப்படியில்லை கமல் புலம்புறதுலயும், இந்த வீடியோல வெறியா கத்துற அளவுக்கு பழிவாங்கற எண்ணமிருந்து, அப்பாவை சாஹிர் ஏதாவது செய்திருந்தா அவனுக்கு தண்டனை கிடைக்கட்டும்.” என்று கேசவன் ஸ்டூடியோ கார்டையும், எஃப்ஐஆரில் கையெழுத்தும் போட்டார் கிரணின் மகன் அதுல்.
போலீஸ் கைரவ் மற்றும் சமித் க்ளியர் ஸ்டேட்மெண்ட் வாங்கிக் கொண்டார்.
சென்னை போலீஸுக்கு தொடர்பு கொண்டு பேசினார்கள். ஆனால் சாஹிர் என்ற பெயரையே வருணிகா வீட்டிலும், மகிழன் வீட்டிலும், அறிந்திருக்கவில்லை. வநீஷாவை மட்டும் தெரிந்தவள் தலைமூழ்கிவிட்டதாக கூறினார்கள்.
ஏனோ சென்னை போலீஸ் கூறியதை நேரில் ஒருமுறை விசாரணை நடத்தி அறியும் எண்ணத்தில் மும்பை போலீஸ் திட்டமிட்டது. அதனால் இன்ஸ்பெக்டர் கைரவ் அவருக்கு உதவியாக சமித் என்பவரும், சென்னைக்கு செல்லும் இரயிலில் சாஹிரை தேடி பயணித்தனர்.
-தொடரும்.
ipo tha doubt vanthu iruku avan mela sikram ellam kandupidichi avana arrest pannunga
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice epi👍
💜💜💜💜
Interesting
Police vandhu kandipa evana kandu pidikanun pa kadavuley 🙄