அத்தியாயம்-16
ஹாஸ்டல் அறைக்கு வந்த வருணிக்கு தலை சுற்றியது. ஹாஸ்டலுக்கு வரும் வழியில், சந்தித்த மூன்று போலீஸின் பேச்சும், காட்டிய வீடியோ புகைப்படங்கள் வருணிகாவுக்கு புரியவேயில்லை.
வநீஷா மும்பையில் செக்ஸ் ஓர்க்கர் என்றதுமே இதயம் வெடித்து விட்டது.
எத்தனை கதைகள் படங்களில் சிறுமியை ரெட்லைட் ஏரியாவில் மாட்டிக்கொண்டு கஷ்டம் அனுபவிப்பதை கேள்விப்பட்டிருக்கின்றாள்.
அக்கா தொலைந்தப்பின், யாரிடமோ அகப்பட்டு, மும்பை சென்று, என்னயென்ன கஷ்டப்பட்டாளோ எந்த வயதில் யார் யாருடன் கட்டிலில் கசங்கினாளோ?!
நினைத்து பார்க்கவே வருணிக்கு நெஞ்செல்லாம் வலித்தது.
வநீஷா அக்கா பாவமென்று தோன்றியது. ஆனால் இப்பொழுது மகிழன் அத்தானோடு சுகமாய் வாழ்கின்றாளா? என்று அறியும் பேராவல் தோன்றியது.
அடுத்த நொடியே, ‘அந்த போலீஸ் சாஹிர் என்பவரை அக்கா விரும்பியதா சொன்னார்களே. சாஹிரோட வநீஷா அக்காவும் கேசவன் போட்டோ ஸ்டூடியோ வந்திருந்ததை காட்டினார்களே.
அக்கா சாஹிர் என்பவரை விரும்பினா, அப்பறம் எப்படி மகிழன் அத்தானை விரும்பியிருப்பா?
ஒருவேளை மகிழன் அத்தானை பார்த்ததும் சாஹிரை வேண்டாம்னு அனுப்பியிருப்பாளா?
இதுல சாஹிரோட முழு பெயர் ரஞ்சித்சாஹிர்னு சென்னாங்க.
ரஞ்சித்… அய்யோ… எனக்கு ஒன்னும் புரியலையே.
மகிழ் அத்தான் எங்க? இந்த ரஞ்சித் சாஹிர் யாரு?
வநீஷாவுக்கு என்ன தான் ஆச்சு? ரஞ்சித் என்று என் பின்னால ஏன் சுத்தணும்?
போலீஸிடம் ஏதாவது சொல்லி மேற்கொண்டு விவரம் கேட்போமா? என்று சிந்தித்தாள்.
இதே பழைய வருணிகா என்றால் அப்படி தான் போலீஸை அணுகியிருப்பாள்.
ஏனோ வருணிகா உள்மனம் அவசரப்படாதே என்று அறிவுறுத்தியது.
அதனால் ரஞ்சித்திடம் பேசிபழக முடிவெடுக்க உரைத்தது.
கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சில நேரம் சில விஷயம் அறித்திடும் போது கஷ்டநஷ்டத்தை பார்க்க கூடாது.
வருணிகா முடிவெடுத்தவளாக ரஞ்சித்திடம் இனி நட்பு பாராட்டி பேச திட்டமிட்டாள்.
அடுத்த நாள் கல்லூரி செல்ல நடந்தவளை போலீஸ் பின் தொடர்ந்து வந்து விசாரித்தனர்.
வருணிகாவோ ”அப்பவும் இப்பவும் ஒன்னு தான் கேட்கறேன் சார். என் அக்கா வநீஷா, மகிழன் அத்தான் இவங்களை தேடி கண்டுபிடிச்சு தாங்க. நீங்க தேடாம என்னிடமே கேட்டா எப்படி?” என்று வினா கேட்டு துரத்திவிட்டாள்.
கைரவிற்கு மகேஸ்வரன் மீது தான் சந்தேகம் முளைத்தது. பெண்ணை பறிக்கொடுத்து அதன் பின் பெரிதாக தேடவில்லையே. அதோடு ரேணுகா வேறு வாயை திறக்காமல் அழுதது.
மீண்டும் சென்னைக்கு வந்து ரேணுகாவிடம் விசாரணை துவங்க திரும்பினார்கள்.
கையில் மற்றும் சமித் கூடவே ரவி மூவரை பொறுத்தவரை ஊட்டியை இந்த நான்கு நாளில் சுத்தி பார்த்து விட்டார்கள்.
மீண்டும் சென்னையில் ஒரு விசாரணை முடித்து மும்பைக்கு சொன்னது ரிப்போர்ட்டை கொடுக்கும் முடிவில் இருந்தார்கள்.
அதனால் அவர்கள் வருணிகா அன்னையிடம் விசாரணை மேற்கொண்டார்கள். மகேஸ்வரன் அப்பொழுதும் கல்லு போல இருந்தார்.
இங்கு நிலவரம் இப்படியிருக்க, வருணியினை பின்தொடர்ந்த ரஞ்சித்தை கேட்டுக்கொண்டு வருணி அவன் முன் வந்தாள்.
தோழிகள் கூட ரஞ்சித்தை நோக்கி நடக்கவும் வருணியை கேலி செய்தனர். அதெல்லாம் சிரித்து மழுப்பி அவனை காண நின்றாள்.
“உங்களை பத்து நாளா ஆளைக்காணோம். எங்க போனிங்க?” என்று கூந்தலை ஒதுக்கி கேட்டாள்.
சாஹிரோ இத்தனை நாள் பேசாமல் கடந்து சென்றவள் போலீஸ் வந்து சென்றதும் பேசி உறவாட, மூளை அலாரமிட்டது.
காதல் விஷயத்தில் மூளை சொல்வதை என்று தான் கேட்போம். எல்லாம் மனதின் பரிபாஷை தானே முன்னிலை வகிக்கும்.
“நான் இல்லைன்னு தேடினியா வருணி?” என்று ரஞ்சித் கேட்க, ”ஆமா…ன்னு சொல்லமாட்டேன். நீங்க என் பின்னால வர்றதை பார்த்து என் பிரெண்ட்ஸ் எல்லாம் பொறாமைபட்டாங்க.
இந்த வீக் உங்களை காணோம் என்றதும் என் பிரெண்ட்ஸ் ஆளாளுக்கு உங்களை கேட்டு விசாரிச்சாங்க.
அது என்னவோ எனக்கு உங்களை தேட தோணுச்சு. மத்தபடி வேற நோக்கமில்லை.” என்று கூறினாள்.
ரஞ்சித் சாஹிர் சில நொடி மேகத்தில் பறந்து இறங்கினான்.
“உன்னை தேடி யாரோ போலீஸ் வந்தாங்க? ஏன் திரும்ப தற்கொலை முயற்சி செய்து மலையில் ஏறி யாராவது கேஸ் போட்டுட்டாங்களா?” என்று வினவினான்.
தற்கொலை முயற்சி செய்தால் 309 பிரிவுக்கு கீழ், ஒரு வருட தண்டனையும் அபராதமும் உண்டல்லவா?!
அதன் காரணமாக போலீஸ் தண்டணைக்கு பதிலாக வருணியை எச்சரிக்கை செய்திருப்பாரோ என்ற கோணத்தில் விளையாட்டாய் கேட்டான். உண்மையில் அவனை தேடி வந்துவிட்டாரா என்ற விதத்தில் போட்டு வாங்க நினைத்தான்.
முகத்தை வைத்தே அது மும்பை போலீஸ் என்று அறிந்தே வருணிகாவிடம் அப்படி கேட்டான் சாஹிர்.
வருணிகாவோ, உண்மையை மறைக்காமல் அப்படியே கூறினாள்.
“எங்க அக்கா வநீஷாவை தேடி போலீஸ் வந்தது. ஆக்சுவலி அக்கா மகிழன் அத்தானை மணந்துட்டு சந்தோஷமா இருப்பான்னு நினைச்சேன். ஆனா அக்காவை காணோம்னு மும்பையில் யாரோ புகார் தந்திருக்காங்க. அதன் காரணமாக மும்பை போலீஸ் அம்மா வீட்ல விசாரணை முடிச்சி என்னிடமும் விசாரணை பண்ணிட்டு போனாங்க” என்று கூறினாள்.
இன்று பேசிக்கொண்டே நடந்தவள், “தொண்டை வலிக்கு கோல்ட் வர்ற மாதிரி இருக்கு. நான் சூப் குடிக்க போறேன். நீங்க வர்றிங்களா? தனியா இப்படி கடைக்கு போய் பழக்கமில்லை. தொண்டையும் வறட்சியா இருக்கு” என்று கேட்டாள்.
வருணி பேசியபடி ஒரு ஹோட்டல் நுழையவும், அவளிடம் பேசும் எண்ணத்தில் ரஞ்சித் கூடவே வந்தான். அவள் அழைத்து வராமல் போவானா?!
“ஒரு வாரமா ஒரே சளி இருமல். மாத்திரை போட்டாச்சு, சுடத்தண்ணி குடிச்சேன் காஷாயம் குடிச்சேன், எதுவும் செட்டாகலை. இன்னிக்கு தான் பரவாயில்லை. சூப் குடிக்க போறேன். உங்களுக்கும் ஆர்டர் செய்யவா?” என்று வருணி கேட்க ரஞ்சித் சாஹிரோ பூம்பூம்மாடு போல தலையாட்டினான். அவனோடு வருணி சூப் குடிக்க சேர்ந்து ஹோட்டல் வந்திருக்கின்றாள். இது தான் அவன் மனதை நிறைத்த இன்றைய ஆனந்தம்.
“ஆக்சுவலி அக்கா அங்க செக்ஸ் ஒர்க்கரா இருந்திருக்கா.” என்று குரல் உள்ளுக்குள் சென்ற விகிதமாக வருணி பேசினாள்.
‘இது எல்லாம் இவளுக்கு போலீஸ் சொல்லியிருக்கணும்.’ என்று ரஞ்சித் சாஹிர் யூகித்து இரண்டு சூப்பை ஆர்டர் செய்தான்.
“என் அக்கா செக்ஸ் ஓர்க்கர் என்று சொல்லறேன். உன் முகத்துல ரியாக்ஷன் இல்லையே.” என்று வருணி கன்னத்தில் கைவைத்து கேட்டாள்.
ரஞ்சித்தோ, “நான் உன்னை தானே விரும்பறேன். உங்க அக்கா வநீஷாவை இல்லையே” என்று பதில் தந்தான்.
“பாயிண்ட்” என்று வருணி கூறிவிட்டு, “அங்க அக்காவை சாஹிர்னு ஒருத்தன் விரும்பியிருக்கானாம். பட் அக்கா இங்க மகிழன் அத்தானோட காதலிச்சதா ஓடிட்டா. மகிழன் அத்தானுமே மாமா அத்தைக்கு பயந்து அக்காவோட ஓடிட்டார்.
ஆனா இந்த சாஹிர் யாரு? அவர் ஏன் குறுக்க வந்தார்? இவர் அக்காவை விரும்பியதா இருந்தா, மகிழ் அத்தானை ஏன் கட்டி வைக்க மெனக்கெட்டியிருக்கணும்” என்று கேட்டிட ரஞ்சித் தலையை கோதி உலுக்கினான்.
“உனக்கு வநீஷா செக்ஸ் ஓர்க்கர் என்றதும் அவ மேல கோபம் வரலையா?” என்று ஓரபார்வையில் கேட்டான் ரஞ்சித்.
வருணிகா மௌனமாக இருந்தவள் “அக்கா இதே ஊட்டிக்கு படிக்க அழைச்சிட்டு வர்றப்ப டீன்ஏஜ். பதினாலு பதினைந்து வயசு இருக்கலாம். அப்ப அக்கா தொலைந்திருக்கா. அந்த வயசுல யாரிடம் மாட்டி என்னனென்ன கஷ்டப்பட்டாளோ? அப்படியிருக்க அவ செக்ஸ் ஓர்க்கரா போனதில் அவ தப்பில்லையே. அப்போ நான் ஏன் அவ மேல கோபப்படணும்” என்று எதிர்வினா கேட்டாள்.
ரஞ்சித் “கரெக்ட்” என்று கூறி, நீண்ட பெருமூச்சை வெளியிட்டு “ஓகே… நீ விரும்பியது மகிழனை. அவனை உங்க அக்கா காதலிச்சு ஓடிட்டதா சொன்ன. இப்ப வநீஷா மேல உனக்கு கோபம் வந்திருக்கணுமே” என்று இடது கையை தாடையில் வைத்து கேட்டான்.
தலையை மறுக்கும் விதமாக அசைந்து, “மகிழ் அத்தான் வநீஷா சின்ன வயசுலயே ரொம்ப க்ளோஸ். சொல்லப்போனா, என்னை விட வநீஷா மனசு சங்கடப்பட்டா எனக்கு முன்ன மகிழ் அத்தான் வநீஷாவிடம் ஆறுதல் பேச போவார்.
வநீஷா அக்கா தான் முகம் திருப்பிட்டு போவா. அதுவுமில்லாம அக்கா கூடவேயிருந்தா மகிழன் அத்தானுக்கு தானே நிச்சயம் பண்ணிருப்பாங்க. அப்படி பார்த்தா அக்கா என் வாழ்க்கையை பறிக்கலை. மகிழ் அத்தானை குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு யாரை பிடிச்சிருக்கோ அவரோட வாழட்டும்.
வநீஷா வரவேமாட்டான்னு நினைச்சி என்னை கிஸ் பண்ணிருப்பார்” என்றதும் கண்ணீர் முத்து வழிந்தது.
அதனை சட்டென வலது கையால் துடைத்து, “இப்ப அக்கா வந்ததும் நான் தேவையில்லாம போயிட்டேன்” என்று தேம்பினாள்.
“ஏ… வருணி.. ரிலாக்ஸ்” என்று சுற்றிமுற்றி பார்த்து, “சூப்பை குடி. வாய்ஸ் பாரு ஆம்பளை குரல் மாதிரி இருக்கு” என்று கேலி செய்தான்.
“உங்களுக்கு கூட தான். நடுவுல நடுவுல பீமேல் வாய்ஸ் வருது.” என்று பதிலுக்கு வாறினாள்.
“உங்களிடம் ரொம்ப நாளா கேட்க நினைச்சேன். நீங்க சௌவுத் இந்தியா இல்லையா? கலரும், கண்ணும், உங்க தமிழ் கலந்த ஹிந்தி பேச்சும் வேற மாநிலம்னு தெரியுது” என்று சந்தேகத்தை கேட்டு சூப்பை ஊதி பருகினாள்.
வருணியின் சாயம் பூசாத உதடு, சூப்பை ஊத குவித்து காற்றை தள்ளி, சூப்பை பருக, அவள் தொண்டையில் மிடறாய் சூப் இறங்குவது, பளிங்காய் தொண்டையில் தெரிய அந்த தொண்டையில் இதழ் ஊர்வலத்தை நிகழ்த்த ரஞ்சித் சாஹிர் மனம் கொட்டமடித்தது.
வருணி அவன் கையை தீண்டி “உங்களை தான்” என்று கேட்டதும் சுதாரித்தவன், “நான் வேலை பார்த்த இடம் நார்த். அந்த மக்களிடம் பேசி பழகியதால் தமிழ் ஹிந்தி கலந்து வரும்.
உன்னிடம் பேசறப்ப தான் குரல் உடையுது.” என்றவன் நொடியில் சமாளித்து “ஏ… நான் பேசற தமிழ் கலந்த ஹிந்தி உனக்கு புரியுதா?” என்று கேட்டதும் வருணி நல்லாவே புரியுது’ என்று சிரித்தாள்.
“போலீஸ் போயிட்டாங்களா இல்லையா?” என்று கேட்டான். அவர்கள் எல்லை தாண்டியதை தான் கவனித்துவிட்டு நிம்மதியானானே.
“போயாச்சு இனி வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்” என்று தோளைத் குலுக்கினாள்.
பில் வரவும் வருணி பர்ஸை திறக்க, ரஞ்சித்தோ அவசரமாய் அவன் பணத்தை நீட்டினான்.
“என்னோட நேரம் செலவழித்து இருக்க. எனக்கு இது ஸ்பெஷல் டே” என்று ரஞ்சித் கூற, “ஓ.. அப்படியா… நல்லது” என்று சிரித்தாள்.
வருணிகா சிரிப்பில் “கார்ல வர்றியா? டிராப் பண்ணிடுவேன்” என்று அடுத்து சேர்ந்து செல்ல விரும்பியவனாய் கேட்டான்.
”வேண்டவே வேண்டாம். இங்க அப்பா பிரெண்ட் ஜனார்த்தனன் இருக்கார். அவர் பார்வையிலயோ இல்லை வார்டன் பார்வையில நான் விழுந்தேன். அவ்ளோ தான் கதம் கதம்.
போலீஸ் வந்துட்டு போனதை வச்சி அப்பா என்னிடம் பேசலை. அதுக்கு போன் போடலாம். இல்லையா நேர்ல கூட வரலாம். உங்க கார்ல போய் இறங்கி வார்டன் பார்த்து அப்பாவுக்கு போன் பண்ணிட்டா எதுக்கு வம்பு?” என்று நடந்தாள்.
“அப்ப அட்லீஸ்ட் என்னோட போன்ல சாட் பண்ணு” என்று கோரிக்கை வைத்தான்.
“ரஞ்சித் இங்க நான் படிக்க வந்தேன். உங்களோட சாட் பண்ணயில்லை. ஒருவேளை எனக்கே உங்களிடம் பேசணும்னா சாட் பண்ணறேன்.” என்றவள் சோகமாய் மாறி, “நானும் மகிழ் அத்தானை மறக்க முயற்சி செய்யறேன். மேபீ உங்களிடம் பேசினா அவரை மறக்க வாய்ப்புண்டு. உங்களிடம் பேச ட்ரை பண்ணறேன். ஆங்…. ட்ரை தான்.” என்று புன்னகை உதிர்த்து சென்றாள்.
ரஞ்சித் சாஹிருக்கு அங்கேயே வானத்தில் கயிறு கட்டி மேலே பறந்து திரியும் ஆசை. அந்தளவு இன்று ஆனந்தத்தில் திளைத்தான்.
-தொடரும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
una crt ah madaka pora paru vani
Nice epi👍
💜💜💜💜
👌👌👌