Skip to content
Home » ஆலகால விஷம்-18

ஆலகால விஷம்-18

அத்தியாயம்-18

  வருணிகா நான் ஒருத்தரை விரும்பறேன் என்றதும், ஷங்கரோ வெகுயியல்பாய், “அங்கிள் சொல்லிட்டார் வருணிகா. மகிழனை தானே லவ் பண்ணின. அவன் தான் உங்க அக்கா வநீஷா காதலிச்சு ஓடிட்டானே. ஐ அம் சாரி… உனக்கு நடந்த நிச்சயதார்த்தம், கல்யாணம் வரை போனதை அங்கிள் விலாவரியாக எங்களிடம் சொல்லிட்டார்” என்று கூறவும், வருணிகாவோ ‘தெரிந்துயிருந்தும் என்ன பார்க்க பரோட்டாவை தூக்கிட்டு வந்துட்டானே’ என்று உள்ளுக்குள் பொறுமினாள்.

  “என்னால மகிழ் அத்தானை மறக்க முடியாது. டைம் முடிஞ்சிடுச்சு நான் ரூமுக்கு போறேன்’ என்று திரும்ப, “வருணிகா இன்னிக்கு சந்திச்சவரை பத்தி அங்கிளுக்கு தெரிவிக்கலாமா?” என்று கேட்க, அவசரமாய் அவனருகே வந்து, “ப்ளீஸ் ஷங்கர். அப்பாவிடம் எதுவும் சொல்லி தொலைக்காத. நான்… நான் உனக்கு எப்படி புரியவைப்பேன்.” என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள்.

  “சரி சரி நான் அங்கிளிடம் சொல்லலை. நீ பரோட்டா சாப்பிடு. அந்த பையனை இங்க தானே இருக்கான். நானே தெரிஞ்சுக்கறேன்.” என்று பரோட்டாவை கொடுத்து சென்றான்.

  அதற்கு மேல் ஹாஸ்டலில் நிற்க கூட முடியாது. கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது.

  பரோட்டாவை அறைக்கு கொண்டு சென்று, சூடாக பிரித்து சுவைத்தாள்.

  இடையிடையே ரஞ்சித் குறுஞ்செய்தியில் பேச, பதிலுக்கு அவளும் பேசினாள். இதில் ஷங்கரும் வந்து ‘பரோட்டா ஓகேவா? சாப்பிட்டியா?” என்று கடலை வறுக்க, தந்தையிடம் ஏதேனும் சொல்லிவிட்டால் என்ற பயத்தில் அவனுக்கு சில குறுஞ்செய்தி தட்டி விட்டாள்.

  இப்படியாக நேரம் போவதே தெரியாமல் இருவரிடம் பேசி விட்டு தூங்கியும் வழிந்தாள்‌‌.

     அடுத்த நாள் கல்லூரிக்கு கிளம்ப, ரஞ்சித் காரில் வந்து சேர்ந்தான்.

  “வருணி காலேஜிக்கு கார்ல வர்றியா?” என்று கேட்க, தன் சிகையை செவிமடலுக்கு பின் ஒதுக்கி, “நாம அந்த அளவு இன்னமும் பழகலை ரஞ்சித்” என்று தவிர்த்தாள்.

  “நேத்து அவ்ளோ பேசினோம். எல்லாம் வேஸ்டா கோபால்” என்று சலிப்பாய் சிரிக்க, வருணிகாவோ “இதை விட அதிகமா, அந்தரங்கமா, என் மகிழ் அத்தானோட பேசியிருக்கேன். அவரே நீ யாரோ எவரோனு என்னை நிராகரிச்சு போயிட்டார். நீங்க எந்த மூலைக்கு?” என்று நடந்தாள்‌.

   “ஏய்.. என்னையும் அவனையும் ஒப்பிடாத. நான் உனக்காக என்னலாம் பண்ணிருக்கேன் தெரியுமா?” என்று பொங்கினான் ரஞ்சித்சாஹிர்.‌

    “என்னலாம் செய்திங்க?” என்று காரில் ஒரு கையை ஊன்றி கேட்டாள் வருணிகா.

  “நீ கார்ல ஏறு சொல்லறேன்” என்றான் சாஹிர். சமாளிக்கும் விதமாக கூறிவிட்டாலும் லேசான குறுகுறுப்பு மின்னலாய் வந்து செல்ல, ”பெட்டர் லக் நெக்ஸ்டைம்” என்று ஷேர் ஆட்டோ பிடித்து சென்றாள்.

     அவள் சென்ற ஷேர் ஆட்டோவை பின் தொடர்ந்து வந்தவன், ஷங்கரையும் கவனித்தான். ஷங்கர் கேட்டில் நின்றிருந்தான்.

   வருணிகாவோ அவன் கண்ணில் படாமல் நைஸாக கூட்டத்தோடு கூட்டமாக ஓடிமறைய, ரஞ்சித் சாஹிர் வருணியின் குறும்பில் நகைத்தான்.

   ஆனால் நகைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று உக்கிரமாக ஷங்கரை கவனித்தான்.‌

  ‘நானே மகிழனை தூக்கி, அடைச்சி வச்சி, இன்டுயூஸ்டு கோமா இன்ஞெக் பண்ணி படுத்த படுக்கையில் போட்டு, இவளிடம் காதலை சொல்லி உள்ள நுழைஞ்சா, அந்த மகேஸ்வரனோட பிரெண்ட் பையன்னு சைட்ல இவன் வேற வர்றான்.‌

  வருணிகா பார்வை மட்டும் உன் பக்கம் போச்சு. நீ ரோட்டில் கார் இடிச்சி தூக்கியெறியப்பட்டு செத்து கிடப்படா நாயே’ என்று ரஞ்சித் சாஹிர் மனதில் பேசி முடித்தான்.

     ஷங்கரோ கேட் மூடவும் துவண்டு சென்றான்.

   மாலையில் ரஞ்சித் காரை கண்டு வேகமாக ஓடிவந்த வருணிகாவோ, “ஷங்கர் வர்றதுக்குள்ள காரை எடு” என்று ரஞ்சித் தோளில் தட்டி அவசரப்படுத்தினாள்‌ வருணிகா.

    “ஏன் அவனோட பேசிட்டு தான் வாயேன்” என்று கிண்டல் செய்யவும், “உதைக்க போறேன் வண்டியை எடு” என்று கூற ஆனந்தமாய் வண்டியை எடுத்தான்.‌

”ஹாஸ்டலுக்கா?” என்று விசாரிக்க, “வேண்டாம் ஒன் ஹவர் டிரைவிங்ல போ.” என்று கூறினாள்.

  ‘வா போ’ என்ற மிரட்டல் ரஞ்சித்சாஹிருக்கு இனித்திருக்க, தன்னிஷ்டம் போல வண்டியை இயக்கினான்.

   “கார்ல ஏறுற அளவுக்கு பழக்கமில்லைனு காலையில் பேசின. இப்ப பொசுக்குன்னு ஏறிட்ட, ஷங்கரை பார்த்ததாலனு மட்டும் பொய் காரணம் சொல்லாத. பிகாஸ் அங்க ஷேர் ஆட்டோ நிறைய இருந்தது.” என்று கூறவும், கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து அழகை ரசித்த வருணிகாவோ “ஷேர் ஆட்டோ உடனே வண்டியை எடுன்னா எடுப்பானா? நீ தான் இளிச்சவாயன். நான் சொன்னா கேட்ப” என்று தோளை குலுக்கி சிரித்தாள்.

  அழகான நளினம் திகட்டாத இளமை, கொஞ்சிடும் முகபாவணை, அவளை அணைக்க துடித்தது சாஹிர் கைகள்.

    வருணிகா அங்கிருந்த பிளேயரில் பாட்டு போட்டு விட்டாள்.

    தமிழ் பாட்டு தான் இருந்தது.

  “நீ ஹிந்தியை விட தமிழை அதிகமா பேசுவியா? கேட்பியா? இங்க பிளேலிஸ்ட்ல் தமிழ் பாட்டா இருக்கு” என்று கேட்டாள்.

  “ம்ம்” என்று பதில் தர, நன்றாக காரில் சாய்ந்து கொண்டு இமை மூடினாள்.

  ரஞ்சித் சாஹிர் ரோட்டில் கவனத்தை செலுத்தினாலும் பக்கத்தில் இருந்த வருணிகாவையும் அடிக்கடி கண்களால் அளவிட்டான்.

  சுடிதார் தேவதை என்றால் மிகப்பொருத்தமாக இருக்கும். அந்தளவு செதுக்கி வைத்த அழகில் மாசுமருவற்ற முகம், ஊட்டி ஆப்பிள் வேறு அங்கங்கே கண்ணில் பட, வருணிகா கன்னமும் ஆப்பிளை ஒப்பிட்டு இருந்தது. இதில் சிவந்த இதழ் சாஹிரை கொல்லாமல் கொன்றது.

‌ இதற்கு மேல் காரை ஓட்டுவது சாத்தியமில்லாதது. கவனம் சிதறினால் மரணம் நிகழும் என்பதற்கிணங்க, காரை ஓரமாய் நிறுத்தி அவளையே விழுங்கினான்.

  ஏசி ஓடுவதால் கார் நிறுத்தம் அறியாத வருணி ஐந்து நிமிடம் கழித்தே இமை திறந்தாள்.

  “வண்டியை நிறுத்திட்ட ஏன்?” என்று இடத்தை ஆராய்ந்தாள்.

  “நீ எங்க போகணும்னு சொல்லலை. அதான்” என்று சிரிக்க, “எங்கயாவது போயிடணும் ரஞ்சித். அப்பா, அப்பா பிரெண்டோட பையன் ஷங்கர் இப்படி பழைய ஆட்கள் யாரோட தொடர்பும் இல்லாம எங்கயாவது.
  இந்த தமிழ் பாட்டு கூட வேண்டாம். அதுவுமே மகிழ் அத்தானை நினைவுப்படுத்தும்’ என்று பாடலை அணைத்தாள்.

  ரஞ்சித்சாஹிரோ, “நீயா பாட்டை போட்ட, இப்ப அணைச்சிட்ட, உனக்கு என்ன செய்ய தோணுதோ அதை செய்.
   வருணி… உனக்கு என்னை பிடிச்சிருந்தா என்னை கல்யாணம் பண்ணிக்கோ. நான் உன்னை பார்த்துக்கறேன். நாம எங்கயாவது போயிடலாம்‌. அங்க யாருமே வேண்டாம்” என்று ஆர்வமாய் கேட்டான்.

  வருணிகாவோ “எங்க அக்கா தான் செக்ஸ் ஓர்க்கர் ரஞ்சித்‌. நான் இல்லை.‌.. என் மனசுல மகிழ் அத்தானை தவிர யாரும் நுழைய முடியாது.” என்று சட்டமாய் கூறினாள்.

  “அப்ப என்னோட பழகறது?” என்று ரஞ்சித் கோபமாக கேட்டான்.

  “தெரியலை… இங்க யாருமே எனக்கு தெரியாது. ஷங்கர் அப்பாவோட.. பிரெண்டோட பையன். அவனிடம் பழக பிடிக்கலை. ரூமுக்கு போனா பைத்தியம் பிடிக்குது. லூசுத்தனமா ஏதாவது செய்னு மனசு பிராண்டுது.

   எனக்கு தற்கொலை பண்ணிக்க பயமாயிருக்கு. அதனால உன்னிடம் விளையாடிட்டு இருக்கேன். உன்னோட பேசி சிரிக்கறதால உன்னை காதலிக்கறதா சொல்லவும் முடியாது.

   எதை திண்ணா பித்தம் தெளியுமென்ற ரீதியில் இருக்கேன்.
உனக்கு என்னை பிடிச்சிருக்கு. நான் பழகினா நீ சந்தோஷப்படற. அவ்ளோ தான்… இப்ப யாரிடமும் நம்பி பேச முடியலை. உன்னிடம் நான் அட்வான்டேஜ் எடுத்துக்கறேன்.” என்று கூறவும் ரஞ்சித் தலையாட்டி “ஓகே பிரச்சனையில்லை. இந்த உயிரே உனக்கு தான்.‌ நீ என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்” என்று வாக்குறுதி போல பேசினான்.‌

   “உனக்கு ஏன் என்னை பிடிக்கும்? எதனால் பிடிக்கும்‌? என்ன எப்ப பார்த்த? சென்னையிலிருந்தே பாலோவ் பண்ணிட்டியா? ” என்று வினாவை வரிசை கட்டினாள்.
 
   “ஏன் பிடிக்கும், எதனால் பிடிக்கும்னு கேட்டா… என்ன சொல்லறது. என்னை எனக்கே அடையாளப்படுத்தியது நீ.” என்று எண்ணங்கள் தறிக்கெட்டு போக பதில் தந்தான்.
  ‘அடையாளம்.’ என்று வருணிகா புரியாமல் முழிக்க, “நீ பிறக்கும் போதே உன்னை பார்த்திருப்பேன். உன் கண்ணுக்கு தெரிந்திருக்காது” என்று கூறவும் வருணிகா ‘அடஅடஅடடா’ என்று உச்சு கொட்டினாள்.

  “ஏய் வருணி கிண்டல் பண்ணிட்டு இருக்க?” என்று ரஞ்சித் பேச, “காதலிச்சா உலறுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.‌ ஏன் நானுமே மகிழ் அத்தானை பார்த்து என்னயெல்லாம் பேசினேனோ? இப்ப நீ பேசறப்ப தான் காதல் கிறுக்குத்தனமானதுனு புரியுது” என்று நகைத்தாள்.

   “உன்னை சென்னையிலருந்தே பாலோவ் பண்ணறேன்” என்றதும் வருணிகா சிரிப்பு நின்றது.

  “என்ன எப்ப பார்த்த?” என்று ரஞ்சித் சட்டையை பிடித்து கேட்டாள்.

  “வருணி… உன் மகிழன் கூட நீ பைக்ல ஊர் சுத்தும் போது பார்த்திருக்கேன். பார்த்து உள்ளுக்குள் ஏங்கியிருக்கேன்”  என்றதும், வருணிகா “உன் வயிற்றெரிச்சலில் தான் மகிழ் அத்தான் என்னை விட்டு போயிட்டாரா?” என்று சோகமானாள்.

  “என் உண்மையான அன்பால நீ எனக்கு திரும்ப கிடைச்சேனு நான் நினைக்க கூடாதா?” என்று எதிர் வினா கேட்டதும் வருணி பதில் கூற முடியாது கைகடிகாரத்தை பார்த்து, ”நான் ஹாஸ்டலுக்கு போகணும். என்னை கொண்டு போய் விட்டுடு.” என்று கோரிக்கை வைத்தாள்.
  
  ரஞ்சித் மறுக்காமல் காரை இயக்கி ஹாஸ்டலில் விட்டுவிட்டு, புறப்பட, வருணிகாவுக்கு ரஞ்சித் பேசியதையே அசைப்போட்டாள்.

அவனுமே அவள் பேசியதையே அசைப்போட்டான்.

   அடிவயிறு லேசாய் வலிக்க, தங்கியிருக்கும் பங்களாவிற்கு புறப்பட்டான்.

  அடிவயிற்றில் பேண்டேஜ் அகற்றிவிட்டு புது பேண்டேஜ் போட்டு முடித்தான்.‌

  உயிர் போய் உயிர் வந்த வேதனை சமீபகாலமாக குறைந்திருக்கின்றது.
   விரைவில் அடியோடு வலிகள் வேதனைகள் களைவது உணர முடிந்தது.
 
   வருணிகா மட்டும் காதலிக்க துவங்கினால் இந்த சின்ன சின்ன வலிகளும் கடந்திடும் வல்லமை பெறலாம்’ என்றவன் மகிழன் என்பவனையே மறந்து போனான்.

   சொல்லப்போனால் ஒரு வாரமாக மருந்து செலுத்தாமல் மகிழனை மறந்தே போனான்.
       அவ்வறைக்கு செல்லவும் இல்லை. சிசிடிவியில் சடலம் போல உறங்கியவனை கண்டதோடு சரி. விரைவில் உண்மையாகவே சடலமானாலும் இரவோடு இரவாக தோட்டத்தில் குழி வெட்டி புதைக்க தயாராக இருக்கின்றான். மற்றபடி மகிழன் நலத்தை எல்லாம் மசிருக்கு சமமாக நினைத்தான் என்றால் சரியாக இருக்கும்.

-தொடரும்.

5 thoughts on “ஆலகால விஷம்-18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *