அத்தியாயம்-19
தேன் மிட்டாய் சேவைக்கு வருணியோ, “ஊட்டிக்கு வந்து ஹோம்மேட் சாக்லேட் எத்தனை சாப்பிட்டு இருக்கேன் தெரியுமா? அதுல இல்லாத டேஸ்ட் இந்த தேன் மிட்டாய்ல இருக்கு. ஆமா… எனக்கு தேன் மிட்டாய் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும் ரஞ்சித்” என்று கேட்டதும் ரஞ்சித் உடனடியாக பதில் தராமல் வருணி சுவைப்பதை ரசித்திருந்தான்.
வருணி தன் காதலை ஏற்றுவிட்டால் இந்த இதழை நான் சுவைக்க வேண்டும் என்று நினைத்தவனை உலுக்கி கேட்டாள்.
“லவ் பண்ணற பொண்ணுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு தெரிந்துக்கறது ரொம்ப முக்கியம்” என்று ரசனையாக கூறினான்.
வருணிகா பேக்கெட்டோடு சுவைத்தவள், பார்வை கார் ஜன்னல் பக்கம் பார்த்து மிரண்டாள்.
ரஞ்சித் தனக்கு பின்னால் என்ன பார்த்து மிரள்கின்றாளென்று என்று திரும்ப மயக்க மறந்து ஸ்பிரே அடிக்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்த தலை என்பதால் யாரென்று கண்டறியாமல் மயங்கி சரிய, வருணியும் மயங்கி தன் மேல் சரிவதை உணர்ந்தான்.
அந்த மயக்கத்திலும் சிறு முறுவல். வருணி தன்மீது சாய்கின்றாளென்ற இதம், அதோடு வருணிக்கு ஆபத்து நேரிடுமோயென்ற பயம் இரண்டு கலந்து வருணி கையை உடும்பு பிடியாய் பிடித்து கொண்டான்.
இரண்டு மணி கடந்து ரஞ்சித் இமைகள் திறக்க முயன்றான். மசமசவென்ற மங்கலான காட்சிகள் தெளிவானது.
வருணி தன் மீதே சரிந்திருக்க, அவளுக்கு ஒன்றுமில்லை என்றதும் நிம்மதியடைந்து வருணி கன்னத்தை தட்டி எழுப்பினான்.
வருணியும் தலையை பிடித்து கழுத்தை திருப்பி, “யாரு அவங்க?” என்றதும் தான் தங்களை மயக்கப்படுத்தியது யாரென்றே அக்கம் பக்கம் தேடினான்.
“என் செயின்.. என் ஹாண்ட்பேக், என் மோதிரம், கம்மல், ஸ்மார்ட் வாட்ச், போன் எதுவும் இல்லை. ரஞ்சித் உன்னோட பர்ஸ் இருக்கா?” என்றதும் பேக்கெட்டை தொட்டு பார்த்து, “பர்ஸ் இல்லை… போனும் மிஸ்ஸாகிடுச்சு. என்னோட மோதிரம் வாட்ச் செயின் கூட மிஸ்ஸிங். ஐ திங்க திருட்டு நடந்திருக்கு” என்றவன் வருணிகா கன்னம் பற்றி உனக்கு ஒன்னும் இல்லையே?” என்று கேட்க, “இந்த கை மட்டும் வலிக்குது” என்று ரஞ்சித் சாஹிர் பிடித்த இடத்தை சுட்டிக்காட்டினாள்.
”சாரி மயக்கம் வர்ற மாதிரி இருக்கவும். உன்னை யாரும் எதுவுமா பண்ணிடக்கூடாதுன்னு அழுத்தமா பிடிச்சேன்.” என்று கையை தேய்த்து விட்டான்.
“பார்க்க தான் கொஞ்சம் ஒல்லியா தெரியறிங்க. ஆனா பிடிச்சா என்ன அழுத்தம்? முன்ன பார்த்ததை விட லைட்டா வெயிட் ஏறியிருக்கிங்க” என்று பாராட்டினாள்.
“மேபீ” என்றவன் காரிலிருந்து இறங்கி இடத்தை ஆராய்ந்து, “இந்த இடம் சரியில்லை நாம கிளம்பலாம்.” என்று காரை இயக்கினான்.
நடுவில் சற்று தங்களை நிதானம் படுத்தி கொள்ள வண்டியை நிறுத்தினான்.
அங்கிருந்த காரப்பொரி வண்டி வைத்தவனிடம்”டைம் என்ன?” என்று கேட்க மணி ஆறாகுது தம்பி” என்றார்.
“நாம அங்க நாலு மணிக்கு போனோம். இப்ப மணி ஆறு. இரண்டு மணி நேரமா மயங்கி இருக்கோம்”
வருணிகாவும் “சரி வாங்க போலீஸ்ல போய் கம்பிளைன் பண்ணுவோம்” என்று அழைக்க, ரஞ்சித்தோ “போலீஸ் வேண்டாம் வருணி” என்று மறுத்தான்.
“என்ன விளையாடறிங்களா? நகை, வாட்ச், மோதிரம், போன் எல்லாம் எவ்ளோ தெரியுமா? நகை விற்கிற விலைக்கு சும்மா விட முடியுமா? எப்படியும் இந்த ஏரியால திருடற திருட்டு கும்பலா இருக்கும். போலீஸ் கம்பிளைன் செய்து பிடிக்கலாம். எனக்கு என் மோதிரம் கண்டிப்பா வேணும்” என்று அடம் பிடித்தாள்.
போலீஸ் என்றதும் ரஞ்சித் சாஹிர் மறுத்தவனாய், “ஏரியா திருடனா என்னனு இந்த வாரத்துல நானே பார்த்துக்கறேன். அப்படியில்லைன்னா கூட உன்னை நகையால குளிப்பாட்டுறது என்னோட பொறுப்பு. எனக்கு நீ நல்லபடியா இருக்கணும். போலீஸ் எல்லாம் போனா அசிங்க அசிங்கமா பேசுவாங்க.
இந்த நேரத்துல நீங்க ஏன் அங்க போனிங்க? உனக்கும் எனக்கும் என்ன உறவு? மேட்டர் பண்ண போனோமா? இப்படி கேட்டு இம்சிப்பாங்க. அதுக்கு திருடனிடமே போய் நயமா பேசி வாங்கிடலாம்.” என்றான்.
“திருடங்களை எப்படி கண்டுபிடிப்ப?” என்று கேட்க, “ஹம்.. அதெல்லாம் தட்டி தூக்கணும்னு முடிவுப் பண்ணிட்டா கண்டுபிடிச்சிடுவேன். நீ வேற அந்த மோதிரம் இல்லைன்னு அழற. ஆமா என்ன ஸ்பெஷல் அந்த மோதிரத்துல?” என்றதும் “நான் வயசுக்கு வந்தப்ப தாய்மாமா சீரா எங்க அத்தை போட்ட மோதிரம். அதோட மகிழ் அத்தான் நிச்சயதார்த்தம் அப்ப போட்ட மோதிரமும் கையில போட்டிருந்தேன்.” என்று வாடிய கொடியாய் கூறினாள்.
ரஞ்சித்சாஹிருக்கு ‘அப்ப அந்த மோதிரம் போய் தொலையட்டும்.’ என்று சந்தோஷமே வந்தது.
என்ன சாஹிரின் போனும் தொலைந்து விட்டது. எப்படியும் லாக் போட்டதால் திறக்க இயலாது. அதற்குள் போனை திருடியவர்களை தேட வேண்டும்.
முதலில் வருணியை ஹாஸ்டலில் விட வேண்டிய பொறுப்பும் இருக்க, அவளை அழைத்து சென்றான்.
வருணி இறங்கும் தருணம், “நீ விரும்பின மகிழன் உன்னை விட்டு போயாச்சு. திரும்பி வந்தாலும் வநீஷா வாழ்க்கையை நீ அழிக்க மாட்ட. அட்லீஸ்ட் என் காதலை ஏற்றுக்கிட்டு என்னோட வாழலாமே.
உனக்கு என்னோட பழக எந்த தயக்கமும் வரலை. என்னோட இருக்கறப்ப சந்தோஷமா சிரிச்சு பேசற. வாழ்நாள் முழுக்க உன்னை இப்படியே பார்த்துப்பேன்னு வாக்கு தந்தும் என்னை காதலிக்கலாமே” என்று ரஞ்சித் மீண்டும் கூற, வருணிகா மெதுவாக ரஞ்சித்தை பார்த்து, “எங்கத்தை ஷீலா இங்க வர்றப்ப என்னை என்ன சொல்லி அனுப்பினாங்க தெரியுமா? மகிழ் அத்தானை விட நல்லவனை பார்த்தா, அவன் உன்னை விரும்பினா நீயும் காதலிச்சு கல்யாணம் பண்ணுடினு சொன்னாங்க. மகிழ் அத்தானை விட நல்லவனை……” என்று ரஞ்சித்தை பார்த்து எச்சிலை விழுங்கி ”எனக்கு கொஞ்சம் டைம் கொடு” என்று முடித்து நடந்தாள்.
“நாளைக்கு சொல்லுவியா?” என்று அவசரமாய் கேட்டான் ரஞ்சித்.
”டைம் கொடு… எதுனாலும் யோசித்து சொல்லறேன்” என்று முடித்து விறுவிறுவென நடந்தாள் வருணிகா.
ரஞ்சித் மகிழ்ச்சி அடைந்தவனாக காரில் தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
—-
இடம் : மும்பை
டாக்டர் கிரணின் மகன் அதுலின் மருத்துவமனை
கைரவ் மற்றும் சமித் இருவரும் அதுலின் முன் வீற்றிருந்தனர்.
“ஃபைல் எல்லாம் தரவ்வா பார்த்திங்களா? அந்த வீடியோ எல்லாம் கவனிச்சிங்களா? எப்பவும் மேஜர் ஆப்ரேஷன் பண்ணும் போது இது போல வீடியோ எடுத்து வைப்பது பழக்கம்.
ஒன்னு ஆப்ரேஷன் சக்சஸ் இல்லாம பேஷண்ட் உயிர் பிரிஞ்சிட்டா ஆப்ரேஷன் செய்த மருத்துவர் மேல தவறில்லை என்ற சாட்சிக்கும், அதோட இந்த மாதிரி ஆப்ரேஷன் அபூர்வம் இல்லையா. அடுத்தடுத்து மருத்துவருக்கு ஒரு லெசனா போட்டு காட்டுவோம்.
அப்படி சிக்கிய வீடியோ சார். அதோட அப்பா பேங்க்ல இருந்த பென்டிரைவ். அதுல மத்த விஷயம் இருக்கு.
முதல்ல அந்த பெண்டிரைவ் அப்பாவை தவறான கண்ணோட்டத்துல காட்டும்னு மறைக்க நினைச்சேன்.
ஆனா அப்பா இறந்ததுக்கு இது தான் காரணமா இருந்தா. நீங்க குற்றவாளியை தப்பிக்க விடக்கூடாது இல்லையா.” என்று பதவிசனமாய் முடித்தார் அதுல்.
கைரவ்வோ அந்த பெண்டிரைவிலிருந்த வீடியோ பார்த்து ஆடிப்போய் அமர்ந்திருந்தார். கிரண் வநீஷாவின் காம லீலைகள்.
வநீஷா மறுக்க மறுக்க வாய் வழியா புணர்ந்த வீடியோக்கள் எல்லாம் காணும் போது வநீஷா மீது இரக்கம் பிறந்தது. இரக்கம் பிறந்து என்ன பிரயோஜனம்.
கைரவ் நிகழ்வுலகிற்கு வந்து, “டாக்டர் கிரணை சாகடிச்சதுக்கு சம்மந்தப்பட்டவங்களை பிடிச்சு தண்டனை வாங்கி தருவோம் சார். சென்னையில் வநீஷா விவகாரம் அவங்க அப்பா வாக்குமூலம் தந்துட்டார்.
இப்ப அந்த வீட்லயும் மகிழன் என்பவர் மிஸ்ஸிங். எனக்கு என்னவோ அவரும் உயிரோட இருப்பாரா என்பதே சந்தேகமா இருக்கு. நாங்க மறுபடியும் சென்னை போய் இன்வஸ்டிகேஷன்ல குற்றவாளியை தேடறோம்” என்று எழுந்து விட்டார்.
அதுல்லோ சுழல் நாற்காலியில் சுற்றியபடி ”சார்… குற்றவாளி யாரு என்னனு விலாவரியா வீடியோ மூலமாக நானே கொடுத்தாச்சு. இனி இன்வஸ்டிகேஸன் செய்யறதை விட குற்றவாளியை கண் முன்ன நிறுத்துங்க.” என்று கட்டளையிட்டார்.
சமித் கைரவ் இருவரும் தலையாட்டி வெளியே வந்தார்கள்.
“என்ன சார் இது?” என்று சமித் கேட்க, “எனக்குமே கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை சமித்.” என்றார் கைரவ்.
“கிழவன் இந்த வயசுலயும் அந்த பொண்ணை எப்படி புரட்டி எடுத்திருக்கான் சார்.” என்று சமித் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து கலையாமல் பேசினான்.
“டாக்டர் இல்லையா… வயக்கார மாதிரி ஏதாவது மாத்திரையை முழுங்கி இந்த ஆட்டம் போட்டிருக்கான். அந்த பொண்ணும் தேர்ந்தெடுத்த செக்ஸ் ஓர்க்கர்யா. எல்லா விதத்திலும் கிழவனை சந்தோஷப்படுத்தியிருக்கா.
அவனவன் தேவைக்கு எப்படி மண்டியிட்டு வேலை பார்க்கறாங்க” என்று சிரிக்க சமித்தோ, “ஆனாலும் இந்த டாக்டர் அதுல் திமிரை பாருங்க சார். வீடியோ எல்லாம் தந்தாச்சு. குற்றவாளியை கண்டுபிடிங்கன்னு.
நாம என்ன சென்னைக்கும் ஊட்டிக்கும் சுற்றுலாவா போனோம். விசாரணை பண்ணி தானோ கேஸோட ஸ்டேடஸ் சப்மிட் பண்ணினோம். நமக்கு என்ன இந்த கிழம் இப்படியொரு ஆப்ரேஷன் பண்ணி, குதுகலாம இருந்து மண்டையை போட்டிருப்பான்னு தெரியுமா? நாளைக்கே இந்த வீடியோ லீக் ஆனா அவன் குடும்பம் நாறும், என்னவோ நம்மளை நக்கல் பண்ணறான்.” என்று ஹிந்தியில் பேசியபடி அடுத்து ஊட்டிக்கு செல்லும் முடிவில் இருந்தனர்.
ஊட்டியில் தானே வருணிகா இருக்கின்றாள். அதனால் நிச்சயம் சென்னையில் குற்றவாளி இருக்க வாய்ப்பில்லை தானே.?!
—–
இடம் : ஊட்டியில் உள்ள ரஞ்சித் சாஹரின் மர்ம அறை
லேசாக கை கால்கள் அசைவு பெற மகிழன், இமைகள் சொருக விழித்திறக்க கஷ்டப்பட்டான்.
மகிழன் தூண்டப்பட்ட கோமாவில் இருந்து மெதுவாக எழ முற்பட்டான்.
ஆனால் இத்தனை நாட்கள் மருந்து மாத்திரையால் படுத்த படுக்கையில் இருந்தவனுக்கு எழவும் தெம்புயில்லை.
உணவு என்பது வயிற்றுக்கு செல்லாததால் வயிறு ஒட்டி குடல் இழுத்தது.
கால் கட்டை விரலை அசைக்க கூட தெம்பில்லாமல் நாக்கு வறண்டு மீண்டும் மூச்சுவிட திணறினான்.
நடுவில் சாஹிர் இருந்த கோபத்தில் மகிழனுக்கு எப்பொழுதும் செலுத்தும் மருந்து மாத்திரையை நிறுத்திவிட்டான். அவனுக்கு இந்த அறையில் கொஞ்ச நாளில் மகிழன் இறந்துவிட்டால் அப்புறப்படுத்தும் நாழிகைக்கு காத்திருந்தான்.
அதோடு சிசிடிவியில் மட்டும் அடிக்கடி பார்த்துக்கொள்வான்.
மற்றபடி ஜடப்பொருளாய் நினைத்து அவ்வறையை திறக்கவேயில்லை.
இன்று ரஞ்சித் சாஹிர் போன் வேறு திருடப்பட்டதால், சாஹிர் உள்ளூர் திருடர்களை சந்தித்து போனை வாங்கும் வேலையில் யாரை சந்திக்கலாமென்று அலசினான். அதோடு தற்காலிகமாக புதுப்போனை வாங்கவும் வந்திருந்தான்.
ஒரே மாடல்கொண்ட இரண்டு போன் வாங்கினான்.
வருணிகாவின் அலைப்பேசியும் திருடு போய்விட்டது அல்லவா?! இந்த அமர்க்களத்தில் மகிழன் என்பவனை மறந்தே போனான்.
அதற்காக மகிழன் கதவை அடைத்து வெளிவந்து சாஹிரை புரட்டி எடுப்பானென்று நினைத்தால் அது தவறே. நம் நாயகன் ஒரு இன்ஞ் கூட நகர முடியாத சூழலில் படுத்த படுக்கையில் இமை திறக்கவும், மூச்சுக்கு போராடி வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட கதியில் போராடியபடி தவிக்கின்றான்.
-தொடரும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ivan elunthukanume
💜💜💜💜
It’s reality 👌
Good epi👍