அத்தியாயம்-23
வருணி அழவும் அதை தாங்க இயலாதவனாக ரஞ்சித் “நீ எதுவும் சொல்ல வேண்டாம் வருணி. நீ என்ன நினைப்பன்னு என்னால புரிந்துக்க முடியுது.
ஆசை யாரையும் விடாது.. அதுவும் பேராசை… மொத்தமா அழிச்சிடும்.
எனக்கு ஏன் இந்த நிலை? நான் ஏன் இப்படி மாற ஆசைப்பட்டேன், ஏன் உன்னை விரும்பினேன் இது எதுக்கும் என்கிட்ட பதில் இல்லை.
இந்த கடவுள் இருக்கானே… படைக்கும் பொழுது நம்ம தலையில் என்னென்னவோ எழுதிடறான். அது நடக்கும் போது பகீர்னு இருக்கு.
காலம் மாறுது வருணி. ஒரு பொண்ணும் ஒரு பொண்ணும் சேர்ந்து வாழறதை பகிரங்கமா யூடியூப்ல போடறாங்க. பேட்டி தர்றாங்க. இதெல்லாம் நம்ம ஊர்ல சர்வசாதாரணமா நடக்குது.
பையன் பையன் தாலி கட்டறான். அதையும் கேலியா போட்டு கமெண்ட்ஸ்ல கழுவி கழுவி ஊத்தறாங்க.
நிறைய பார்த்திருக்கேன்… இது சரி இது தப்பு என்ற கண்ணோட்டத்துல நான் போகமாட்டேன்.
ஆனா உன்னை விரும்பறேன் வருணி. உனக்காக தான் என் மனசு உடம்பு இரண்டும் மாறி வந்திருக்கேன்.
இப்ப வநீஷா தான் ரஞ்சித் என்று நீ தெரிந்தப்பிறகு என்னை நேசிக்க மாட்ட. ஐ நோ… இதுக்கு தான் ரஞ்சித் ஆகவே உன்னிடம் சந்திச்சு, பழகி, காதலிச்சு, கல்யாணம் செய்ய ஆசைப்பட்டேன்.
என் விதி… உன் மனசுல இடம் பிடிக்கும் முன்ன மாட்டிக்கிட்டேன்.
மகிழனை சாகடிச்சு போட்டிருந்தா நீ செத்துடுவன்னு பயந்து தான் வநீஷாவோட ஓடிட்டதா கதை கட்டினேன்.
ஆனா மகிழன் எவளோடவும் போகமாட்டான்னு நீ நம்பிக்கையா இருந்துட்ட.
போ…. அந்த கப்போர்ட்ல துணியை நகர்த்திட்டு லெப்ட்ல சுவிட்ச் ஃபோர்டு இருக்கு, அதை அழுத்து. அங்கயிருக்கற கதவு திறக்கும். அந்த ரூம்ல தான் மகிழன் இருக்கான். அந்த ரூமை மறைச்சு கப்போர்ட்டா மாத்தி அந்த ” என்றதும் வருணி அவசரமாய் எழுந்து ஓட, அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான் ரஞ்சித்.
“இந்த ஜென்மத்துல எனக்கு இது போதும்.” என்றவன் வருணி கன்னம் பற்றி அவளிதழில் முத்தமிட்டான் ரஞ்சித்.
வருணி பயந்து தள்ள முயற்சிக்க, ரஞ்சித்தோ, கடைசி முத்தம் என்பதாக அவளிதழை பட்டும் படாமலும் முற்றுகையிட்டான்(ள்).
ரஞ்சித் சற்று தள்ளாட்டம் காணவும் வருணி சுதாரித்து தள்ள, “மில்க் ஷேக் இரண்டும் வேற வேற பிளேவர். ஏன் வருணி? பாதம்ல விஷம் கலந்திருக்க அப்படி தானே? மகிழனை காப்பாத்த முடியலைன்னா நீ குடிச்சிட்டு சாகவா? இல்லை.. என்னை குடிக்க வச்சி சாகடிக்க திட்டமா? ஸ்ட்ராபெர்ரி உனக்கு பிடிச்ச பிளவர் என்று தான் நான் அதை தொடலை” என்றதும் உதட்டை வேகமாய் துடைத்து அழுதாள்.
உண்மையில் இரண்டுமே சாத்தியம் உண்டாகுமானால் பயன்படுத்தவே பாதாமில் விஷம் கலந்து அந்த கடையில் ஷங்கர் மூலமாக கொடுத்து வாங்கினாள்.
“போ… மகிழன் உயிரோட இருந்தா அவனோட வாழு. லவ் யூ வருணி” என்று ரஞ்சித் கூறிவிட்டு இரத்த வாந்தி எடுக்க, வருணி பயந்தவளாக ரஞ்சித் கைகாட்டிய கப்போர்ட் பக்கம் ஓடினாள்.
அங்கே இருந்த சுவிட்ச்சை தட்டி செல்ல அங்கே போனில் பார்த்தது போல படுத்த படுக்கையில் இருந்தான் மகிழன்.
தன்னால் இனி தனியாக சமாளிக்க முடியாதென்று உணர, போனை எடுத்து ஷங்கருக்கு அழைத்தாள். அந்த நேரம் கைரவ், சமித், மற்றும் ரவி மூவரும் வருணியை கல்லூரியில் இல்லை என்றதும் ஹாஸ்டலிலும் இல்லை என்றும் தேட, வருணி குடும்பத்தில் மகேஸ்வரனோ வநீஷாவின் லீலைகள் அனைத்தும் தெரிந்து ஷங்கரை தேடி வந்தார்.
ஷங்கர் காலையில் ஹாஸ்டலுக்கு வெளியே இருந்த கூல்டிரிங்க்ஸ் கடையில் ரஞ்சித்தோடு வருணி சென்றதை கூறினான். பின் தெடர நினைத்து செல்ல ரஞ்சித் வெகு சாமர்த்தியமாக வருணியை அழைத்து சென்றதை உரைத்தான்.
தற்போது வருணி அழைக்கவும் இடத்தின் இருப்பிடத்தை வாட்சப்பில் அனுப்பி உடனடியாக வரக்கூறினாள்.
மகிழன் நிலையை கூறியதால் ஆம்புலன்ஸையும் உடன் அழைத்து வரக்கூறினாள்.
போலீஸும் ஆம்புலன்ஸும் வந்து சேர கூடவே தந்தை மகேஸ்வரன் மாமா நடராஜனும் மற்றும் ஷங்கர் என்றிருக்க வருணி தந்தையை தேடி ஓடினாள்.
“அப்பா… மகிழ் அத்தான் அப்பா. மாமா மகிழ் அத்தான். அவர் வநீஷாவோட ஓடிப்போகலை” என்று அரற்ற, மகேஸ்வரனோ ‘எல்லாம் போலீஸ் சொல்லிட்டாங்கம்மா.” என்று அணைத்து ஆறுதல் படுத்தினார்.
மகிழன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கான சிகிச்சை நடந்தது.
மற்றொரு ஆம்புலன்ஸில் ‘வநீஷா என்ற ரஞ்சித்’ வாயில் இரத்தம் வெளிவந்து இறந்து கிடந்தான்(ள்).
வருணியோ வநீஷா அக்கா என்று கத்தி கதறி ஓட நினைத்தாள்.
ஆனால் அங்கே அவள் கண்ணில் காண்பது ரஞ்சித் என்ற இளைஞனை. அவளை விரும்ப, வலிகளை சுகமாய் தாங்கியவன். தான் மில்க் ஷேக்கில் விஷம் கலந்து எடுத்து வந்து, பேசுவதை அறிந்தவனாக, தன் மீது கொண்ட அன்பால் உயிரை துறந்த ரஞ்சித்தை அவளால் ஓடி சென்று அணைத்து அழு முடியாது ஸ்தம்பித்தாள்.
அவள் ரஞ்சித் என்பவனை தான் இறுதியாக அங்கே கண்டது. அக்கா வநீஷாவை அல்ல.
—-
♂️ஒரு வாரம் கடந்த நிலையில்…. மருத்துவமனையில்…♀️
வருணி சோகமே உருவாய் மகிழனின் சிகிச்சை அறைக்கு வெளியே வீற்றிருந்தாள்.
கல்லூரிக்கு முழுக்கு போட்டிருந்தாள். ஷங்கர் வீட்டில் தாய் தந்தை அத்தை மாமா என்று வந்து விட்டார்கள். அத்தனை பேரை தாண்டி இன்று மருத்துவர் மகிழனின் உடல்நிலையை பற்றி பேச பத்து மணிக்கு அழைத்திருக்க, எட்டு மணிக்கே மருத்துவமனைக்கு வந்து தவம் கிடக்கின்றாள்.
பத்து நிமிடம் முன்பு தான் வந்தார்கள். யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. எப்பொழுது மகிழன் உடல்நிலை சரியாகுமோ அப்பொழுது தான் முகத்தில் சிரிப்பு பூக்கும் என்பதாக இருந்தனர்.
வருணி எதிர்பார்த்த விதமாக பத்து மணிக்கு டாக்டர் வந்தார்.
அவளை அழைத்து பேச தயாரானார்.
இருக்கையில் அமர்ந்து “டாக்டர்… மகிழ் அத்தான்” என்று கேட்டு கண்ணீரை வெளியிட, “இங்க பாரும்மா… காட் கிரேஸ் ஒன்னு இருப்பதால் தான் இத்தனை நாள் எத்தனை விதமான மருந்தை அவர் உடல்நிலை எடுத்துக்கிட்டாலும் இறப்பு நிகழாம இருக்கு.
அந்த காட் கிரேஸ் நமக்கு போதாதும்மா. இன்னும் தேவைப்படுது.
மகிழனை ரஞ்சித் induced koma மருந்தின் கட்டுப்படுத்தப்பட்ட டோஸ் மூலம் ஏற்படும் ஒரு தற்காலிக கோமா அதாவது ஆழ்ந்த மயக்கநிலையில் தள்ளியிருக்கான்.
ஏற்கனவே சொல்லிருந்தேன் இந்த தூண்டப்பட்ட கோமா ஆப்ரேஷன்ல சம்டைம் யூஸ் பண்ணுவதை. இதை யூஸ் பண்ணினா பாதகம் தான் அதிகம்.
தூண்டப்பட்ட கோமா பொதுவாக குறிப்பிடத்தக்க அமைப்பு ரீதியான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். நோயாளி முற்றிலும் சுவாச இயக்கத்தை இழக்க நேரிடும் மற்றும் இயந்திர காற்றோட்டம் தேவைப்படும். இதெல்லாம் ரஞ்சித் சரியாக கொடுத்து தான் மகிழனை நல்லா பார்த்துக்கிட்டாலும் என்ன தான் ஒரு டாக்டர் மேற்பார்வையில் பார்த்துகற பேஷண்டுக்கும், ரஞ்சித் பார்த்துக்கொண்டதுக்கும் வித்தியாசம் இருக்கு.
மகிழனோட குடல் இயக்கம் குறைஞ்சிடுச்சு. ஹைபோடென்ஷன் பெருமூளை துளையிடும் அழுத்தத்தை பராமரிப்பதற்கான முயற்சிகளை சிக்கலாக்கியிருக்கு. பெரும்பாலும் வாசோபிரஸர் மருந்துகளின் பயன்பாடு தேவைப்படுது. ஹைபோகாலேமியா அடிக்கடி நேருது. மகிழன் கொஞ்ச நாளைக்கு மருத்துவத்தோட சப்போர்ட் இல்லாம கண் திறக்கறதுக்கு சாத்தியமேயில்லை. இப்ப கண் திறந்துடுவார் என்ற உத்திரவாதத்தை எங்களால் இப்ப தரமுடியாது.” என்று கூற வருணி உடைந்தவளாக முகம் பொத்தி அழுதாள்.
ஷிலாவும் நடராஜனும் கேட்டு அவர்களுமே துடித்தார்கள்.
“அம்மா அழாதிங்க. என்னை சொல்ல விடுங்க” என்று டாக்டர் கூற, கவனித்தார்கள்.
“இத்தனை மாதம் அசையாத நோயாளியா மகிழன் இருக்க படுக்கைப்புண்கள் மற்றும் வடிகுழாயில் இருந்து தொற்று ஏற்படும் அபாயமிருக்கு.
எண்டோட்ராஷியல் குழாய் மற்றும் இயந்திர காற்றோட்டம் இருப்பது மட்டும் தொடர்ச்சியான மயக்கம் மற்றும் கோமாவின் அறிகுறிகளாக இல்லை. இன்ட்ராக்ரானியல் ஹைபர்டென்ஷன், ரிஃப்ராக்டரி ஸ்டேட்டஸ் எபிலெப்டிகஸ், இயக்கத்துடன் ஆக்சிஜனேற்றம் செய்ய இயலாமை போனதும் மகிழன் தூண்டப்பட்ட கோமாவின் அதிக அபாயங்களை எட்டியிருக்கார்.
இப்பவும் இவர் இறப்புக்கான நாட்களில் போராடிட்டு இருக்கார். இவர் அபாய கட்டத்தை தாண்டலை.” என்றதும் ஷிலா கத்த நர்ஸ் ஒருவர் அவரை வெளியே அழைத்து சென்றார்.
நடராஜனும் வருணியும் கண்ணீரை கட்டுப்படுத்தி மருத்துவர் பேச்சிற்கு செவி கொடுத்து இருந்தனர். ஏதேனும் நல்ல வார்த்தை உதிப்பாரா என்ற ஆவலுடன்.
நோயாளிகள் மயக்க நிலையில் தூங்கவில்லை என்றாலும், அவர்கள் மாயத்தோற்றம் மற்றும் பிரமைகளை அனுபவிப்பார். உங்களால் முடிந்த முயற்சியை தினமும் அவரிடம் உட்கார்ந்து பார்த்து பேசுங்க. பாஸிட்டிவ் வைப்ஸா கூடவே இருங்க. கடவுள் அணுகிரகம் இருந்தா எமனையே எதிர்த்து உயிர் திரும்புவாங்க.
அதனால் அதுவரை ஹாஸ்பிடல்ல டாக்டர் மேற்பார்வையில் இருக்கட்டும்.
உங்களுக்கு சென்னையில் யாராவது டாக்டர் தெரிந்தா அங்க ஷிப்ட் பண்ணணும்னாலும் பண்ணிவிடறேன்.” என்று மகிழன் நிலையை தெளிவாக கூறிமுடித்தார் டாக்டர் ரகுவரன்.
வருணி வணக்கம் வைத்து மௌனமாய் எழுந்து வந்தாள்.
“என்னம்மா முடிவெடுத்து இருக்க?” என்று கேட்டார் நடராஜன்.
“என்ன முடிவு எடுக்கணும் மாமா” என்று வருணி கேட்டாள்.
நடராஜன் மனதை கல்லாக்கி கொண்டு, “ஷங்கரை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழுமா.” என்று கூறி குலுங்கி குலுங்கி அழுதார்.
வருணிகா வறட்டு புன்னகை வீசி, “ஷங்கரை கல்யாணம் செய்யவா மாமா இவ்வளோ நடந்துச்சு? எனக்கு மகிழ் அத்தான் வேணும் மாமா. அவர் திரும்பி வருவார். என்னை கல்யாணம் செய்வார்.
இப்ப என் யோசனை எல்லாம் ஊட்டில படிச்சிட்டு மகிழன் அத்தானை பார்க்கலாமா? இல்லை… சென்னைக்கு மகிழ் அத்தானை அழைச்சிட்டு போய் நம்ம எல்லாரும் சேர்ந்து மகிழ் அத்தானை பார்த்துக்கலாமா? இதான்.
உங்களுக்கு எது சரின்னு தோனினாலும் சொல்லுங்க.” என்று முடித்தாள்.
மகேஸ்வரனோ “நம்ம ஊருக்கே போகலாம்மா இங்க இரட்டிப்பு செலவு. அதோட அங்கண்ணா நம்ம எல்லாரும் பார்த்துக்கலாம்” என்று கூற சென்னையில் எந்த மருத்துவமனையில் மகிழனை சேர்க்கலாம் என்று டாக்டர் ரகுவரனிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு அவராகவே அவருக்கு தெரிந்த பெஸ்ட் மருத்துவமனையில் பெஸ்ட் மருத்துவரிடம் பேசி உதவ கோரிக்கை வைத்தார்.
வருணி வாழ்வில் மாயங்கள் நிகழ்த்துமா காலம்?
-தொடரும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Good epi👍
Kandipa nikalthanum kalam. Ena than aambalaiya marinalum antha juice kudichi un uyira eduthuduchi varunee
💜💜💜💜🫰
Spr going
Varunikaga Ranjith eppdiyavudhu thirumba varanum pa😢
Acho sorry sis typing mistake Ranjith nu maathi vandhuduchu