அத்தியாயம்-24
ஊட்டியில் படிப்பெல்லாம் தூக்கி போட்டு சென்னையில் வந்து மகிழன் இருக்கும் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் நடையோநடை நடந்தாள் வருணிகா.
மூன்று மாதத்திற்கு மேலாக இது தான் நடக்கின்றது. கொஞ்சம் முன்னேற்றம் அடைந்ததாக டாக்டர் கூறினாலும் வருணிக்கு எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை.
தினமும் ஏதேனும் அவனிடம் பேசுவாள், இன்றும் அப்படி தான் தனியாக பைத்தியம் போல பேசினாள்.
மகிழன் தலைக்கோதி “மகிழ் அத்தான் இந்நேரம் நமக்கு குறித்த நேரத்துல கல்யாணம் முடிந்திருந்தா ஆறு மாசத்துக்கு மேல ஆகியிருக்கும்.
பஸ்ட் கிஸ் பண்ணினிங்களே, அது மாதிரி தினம் நடந்திருக்கும். நிறைய கனவு கண்டு வச்சியிருக்கேன் மகிழ் அத்தான்.
உங்களை தவிர வேற யாரும் அந்த கனவுல ஆள் மாற்றி நுழைய முடியாது.
நான் என்ன சொல்ல வர்றேன் புரியுதா அத்தான். நீங்க என்னை தொட்டு கிஸ் பண்ணி கணவனா ஆளுவது” என்றவள் கண்ணீர் அவன் கையில் சொட்டியது.
“வர்ற சன்டே என் பிறந்த நாள் வருது மகிழ் அத்தான். நீங்க அதுக்குள்ள கண் முழிக்கலைன்னா அன்னைக்கு என் இறந்த நாளா மாறிடும்.
என்னால உங்களை இப்படி படுத்தப்படுக்கையா பார்க்க முடியலை.” என்று கரகரப்பான குரலில் கூறி முடித்து எழுந்தாள்.
அவள் முடிவெடுத்து சொல்லிவிட்டு சென்றாள். அதன் பின் மருத்துவமனைக்கு வரவில்லை என்று கூறிவிட்டாள்.
ஷிலா மருத்துவமனைக்கு வர கூறி அழுத்தம் தரவில்லை. மகனையே எத்தனை நாள் நினைத்து அவள் வாழ்வை கருகி கொள்வாள்.
மகிழனை மீட்டு தந்ததே பெரிய விஷயம்.
நடராஜன் கூட ‘மகேஸ்வரன் பிரெண்ட் ஜனார்த்தனன் பையன் ஷங்கர் கூட வருணியை நல்லா பார்த்துப்பான். அவனையாவது கல்யாணம் பண்ணி வாழ சொல்லிட்டேன். வருணிகா மகிழ் அத்தான்னு இவன் மேலயே உயிரா இருக்கா.
என் தங்கச்சி ரேணுகா எல்லாம் பெரிய பொண்ணு தான் வாழ தெரியாம வாழ்ந்து செத்துட்டா. இவளாவது நல்லபடியா வாழ கோவில் கோவிலா வேண்டிட்டு இருக்கா. மகேஸ்வரன் ரொம்ப உடைஞ்சி போயிட்டான்.
அந்தப்புள்ள வநீஷாவை நான் துரத்தாம படிக்க வச்சியிருந்தா, படிப்போட யோசித்து நல்லபடியா வாழ்ந்திருக்கும். இல்லையா.. கொஞ்ச நாள்ல எங்களோடவாவது வாழ்ந்திருக்கும். இந்தளவு மதி கெட்டு வன்மம் கொண்டு போயிருக்காது.
டாக்டர் கிரண், சாஹிர் இரண்டு கொலையை பண்ணிட்டு தற்கொலை பண்ணிட்டாளேனு கதறுறான்.” என்று கவலையாக கூறினார்.
அவர்களுக்கு மணிமொழி இறந்ததும் வநீஷாவால் என்று வருணிகா கூறவில்லையே.
ஷீலாவோ அது தெரியாததால் “நாம என்னங்க செய்ய முடியும்.
கடவுள் படைக்கும் போது ஆண் பெண் என்ற வித்தியாசத்தை தவிர, குழந்தையாக தான் பிறக்க வைக்கிறார். உணர்வுகள் எதிர்பாலினத்தை கண்டு மாற்றம் வர்றப்ப தானே இதெல்லாம்… அது கூட இப்ப எல்லாம் அதிகமா இப்படிப்பட்ட செய்தியா வருது. விடுங்க… அவ பிறந்த நாளுக்கு அவளிடம் நான் பேசறேன்” என்று மொழிந்தார்.
கடவுள் அணுகிரகமா, அல்லது வருணி இறந்து விடுவதாக சொல்லிவிட்டு சென்ற காரணமா, தினமும் அவள் குரல் கேளாது மகிழன் அவள் குரல் எங்கே என்று தேடி மனதோடு போரடி எழுந்தானா? கடவுளுக்கே வெளிச்சமானது.
வெள்ளி கிழமை இரவு எட்டு மணிக்கு உறவினர் யாரும் அருகேயில்லாத நேரம் இமை திறந்தான்.
பக்கத்தில் புத்தகம் வாசித்த நர்ஸ் மட்டும் இருக்க, அவள் கவனித்து டாக்டருக்கு அழைத்தாள். அவர் வந்தப்பின் மடமடவென மகிழனுக்கு சிகிச்சை ஆரம்பமானது.
டாக்டர் முதலில் வருணிக்கு அழைத்தார். இரவில் அவள் அலைப்பேசி அவ்வீட்டில் அவள் பெற்றோரையும் உலுக்கி விட்டது.
பயந்து தான் போனை எடுத்தார்கள். ஆனால் நல்ல விஷயம் என்றதும் வருணி போனை கையில் வைத்து ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
உடனே மருத்துவமனைக்கு இரவே கிளம்பினார்கள். ஷீலாவோ “மருமகளே… உன் மகிழ் அத்தான் கண் திறந்துட்டான்” என்று கட்டியணைத்து ஆனந்த கண்ணீரை உகுத்தினார்.
மருத்துவர் அனுமதியோடு மகிழனை காண வந்தாள் வருணி.
இன்னமும் மருத்துவ ஒயர்களின் உதவியோடு இருந்தான்.
“மகிழ் அத்தான்” என்று அருகே வந்து அருவியாய் பொழிந்து நிற்க, இமைகள் மெதுவாய் மூடி திறந்தபடி “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? உன் பெர்த்டே அப்ப?” என்று குரலழுப்ப கடினப்பட்டு கேட்டான் மகிழன்.
“கண்டிப்பா… இனி உங்களை விடறத இல்லை. எத்தனை மாசம் என்னை தவிக்க வச்சிட்டு போனிங்க” என்று அவன் கையை உதட்டில் வைத்து முத்தமிட்டாள்.
அதன்பின் அதிகம் தொந்தரவு தராமல் வெளியே நின்றாள்.
இரு வீட்டு பெற்றோரிடமும் ஞாயிறு தன் பிறந்த நாளில் மகிழ் அத்தானோடு திருமணம் முடித்து வையுங்கள் என்று கோரிக்கை வைத்தாள்.
மகிழன் மீது எந்தளவு பாசம் வைத்து இருக்கின்றாள் என்பதும், இந்த நிலையில் தவிர்க்க கூறவும் பெற்றவர்களுக்கு மனம் வரவில்லை.
அதனால் மிக மிக எளிமையாக வருணிகா அவள் பிறந்த நாளில் ஒரு சேலையில் அடக்கமாய் வந்தாள். மருத்துவமனையில் மகிழனை குளிக்க வைத்து உடை மாற்றி ஒரளவு ஒயர்கள் குறைக்கப்பட்டு இருக்க அவனிடம் தாலி நீட்டப்பட்டது.
அதை தொட்டு தடவி, “ஆபிஸ்ல ஹெவி ஒர்க் இருந்ததுன்னு தான் கல்யாணத்தை தள்ளி வச்சேன் வருணி. ஆனா அதுவே இத்தனை மாசம் தள்ளி விட்டதுல இனி தாமதிக்க மாட்டேன்.
உன்னை மாதிரி ஒருத்தியை நான் இழந்திருந்தா பாவம் செய்தவன். உன்னை அடைந்து புண்ணியம் செய்தவனா நிற்கறேன்” என்று தாலி அணிவித்தான்.
பெற்றவர்கள் சூழ, கொண்டு வந்த குலதெய்வ புகைப்படம் முன்னிலையில் மகிழன் வருணிகா கழுத்தில் தாலி கட்டினான்.
டாக்டர் நர்ஸ் எல்லாம் கிசுகிசுத்து பேசி சிரித்தனர்.
வருணிகாவை பற்றி ஓரளவு அறிந்தவர்கள் காதலனுக்கு உடல்நிலை சரியில்லை என்று தவித்த பெண், காதலன் சரியானதும் உடனே தாலி கட்ட சொன்னதாக பேசினார்கள்.
ஓரளவு உண்மையும் அது தானே.
கல்யாண சாப்பாடாக வெஜ் சூப் போன்ற பதத்தில் சாதம் குழைத்து மெதுவாக வருணி ஊட்டிவிட ருசித்தான். இன்னமும் வயிறு பழைய நிலையை அடையவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உணவுகள் மாற, மருந்துகள் மாற, பழைய மகிழன் திரும்புவான் என்று டாக்டர் கூறிவிட்டார்கள்.
மகிழன் விழி திறந்து சிரித்து பேசியதுமே வருணி வாழ்வு மலர்ந்து விட்டது. இனி பழைய மகிழன் மெதுவாக வந்திடுவான்.
சற்று ரேணுகா மகிழன் கைக்கும் ஒரு திருஷ்டி தாயத்தை அவர் மனசாந்திக்கு கட்டி முடித்தார்.
ஷிலாவோ, ரேணுகாவிடம் “எங்க வீட்ல மணிமொழியை பதினொன்று வயசுல தூக்கி கொடுத்தேன். வநீஷாவை இந்த வயசுல தூக்கி கொடுத்தாச்சு.
இப்ப மகிழன் வருணிகா சந்தோஷமா வாழ்ந்து ஒரு புள்ளையை பெத்து கொடுத்தா போதும். நம்ம பழைய சந்தோஷம் திரும்ப வரும் மதினி” என்று அணைத்து கொள்ள நடராஜனும் மகேஸ்வரனும் ஆமோதிப்பாய் பார்த்துக் கொண்டார்கள்.
சற்று புதுமண தம்பதிகளுக்கு தனிமை தந்து வெளியே பெற்றவர்கள் இருந்தனர்.
மகிழனும் வருணிகாவும் மருத்துவமனையில் ஒருவரையொருவர் இமைக்க மறந்து பார்த்தார்கள்.
மகிழன் தனக்கு நடந்ததை பற்றியோ வநீஷாவை பற்றியோ, வருணியிடம் பேசவில்லை. சொல்லப்போனால் ஊட்டிக்கு சென்றது எதுவுமே அவனுக்கு நினைவில் இல்லை. ஒரிரு முறை இமை திறக்க முயன்ற நினைவு மற்றபடி இம்மியும் அசைவின்றி இருந்ததே நினைவில் இருந்தது.
வருணிகாவிடம் ஏதேனும் கேட்கலாமென்றால், அவளோ என்னிடம் எதுவும் கேட்காதிங்க. நடந்து முடிஞ்சதை நான் மொத்தமா மறக்க நினைக்கறேன். வநீஷா என்ற அக்கா எனக்கு பிறக்கவேயில்லை என்ற அளவுக்கு மறக்க நினைக்கறேன்” என்று கூறிவிட்டாள்.
இது அன்னை ஷிலா மூலமாக அறிந்ததால் தன்னவளிடம் எதுவும் கேட்டிட கூடாதென்று முடிவெடுத்தான்.
மனைவிக்கு பிறந்த நாள், திருமணம் வேறு என்று வருணிகா அவனுடன் தான் இருந்தாள்.
அவன் கரத்தை தன் கன்னத்தில் வைத்து, அவனையே கண்சிமிட்டாமல் கண்டாள்.
மகிழனும் அதை தான் செய்தான் என்று தனியாக எழுத வேண்டுமா? என்ன மகிழனுக்கு வருணி மீது கூடுதல் காதல் பொங்கி வழிந்தது.
இப்படியாக ஒரு மாதம் கழிய, எளிமையான முறையில் மகிழன் உடல்நிலை கூறி, சந்தர்ப்பம் அமைந்ததால் வருணிகாவோடு திருமணம் முடிந்தது என்று மட்டும் குடும்ப உறுப்பினர்கள் கொண்ட வாட்சப் குழுவில் தகவலை பரப்பினார்கள்.
மருத்துவமனையில் முன்பு எடுத்த புகைப்படத்தில் ஒன்றை மட்டும் அதில் பகிர்ந்தார்கள்.
நிறைய வாழ்த்தும் ஆசிர்வாதமாக வந்தது. சிலர் மட்டும் வநீஷா பற்றி கேட்க அவள் சாஹிர் என்பவனை மணந்து மும்பையில் செட்டிலாகி விட்டதாக வருணிகா உரைத்தாள்.
வேறு தகவல் எதுவும் உறவுகளுக்கு அளிக்கவில்லை.
இது போதும்மென்று தவிர்த்து விட்டனர். மகிழன் நடுவில் காணவில்லையே என்று கேட்டதற்கு அவனுக்கு வநீஷா திருமணத்திற்கு சென்று திரும்பிய நேரம் ஆக்சிடெண்ட் ஆனதால், தவறாக வநீஷாவோடு திருமணம் என்று எண்ணிவிட்டதாகவும், விபத்து நடந்து யாரும் இந்த குடும்பத்தில் தெரிவிக்காததும் மகிழனை பற்றி அறியாமல் போனதாக கூறி சமாளித்தாள்.
வருணிகா நிறைய சமாளித்து விட்டாள். அவளால் ரஞ்சித் என்பவனை தான் மறக்க முடியாமல் திணறினாள்.
அவன் முகம், உடல், அவளுக்காக உடலில் மாற்றம் பெற்று கட்டு கட்டியது, விஷம் இருக்கின்றதென்று தெரிந்தும் பருகிய மில்க்ஷேக்.
அவனின் காதலால் வருணி கொஞ்சம் நிம்மதியில்லாமல் அலைக்கழித்தாள்.
பழைய மகிழன் திரும்ப வந்து உடல்தேறி சற்று எடை போட்டு வருணியை குழந்தை போல பாதுகாத்தான்.
கணவன் மனைவி என்ற கோட்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் அடியெடுத்து வைத்தார்கள்.
ரஞ்சித் என்பவனை வருணி அதன் பின் நினைக்கவில்லை. மகிழன் மற்ற ஆடவனை நினைக்கும் அளவுக்கு இடம் கொடுக்காமல், வருணியை அமுதமெனும் தாம்பத்திய கடலில் முழ்கடித்தான்.
*ஆலகால விஷம்* தான் தனியாக… தானாக…., வருணிக்காக ஒதுங்கி விட்டதே.
இனி வரும் காலம் மகிழன் வருணிகா வாழ்வில் இல்லறம் நல்லறமாக சுபமாக அமையும்.
~சுபம்~
பிரவீணா தங்கராஜ்
~~~~~
இந்தியாவில் அதிகமான திருநங்கைகள் மற்றும் டிஸ்மார்ஃபிக் நபர்கள் தங்கள் அடையாளங்களுடன் முன்வருவதை அடுத்து பாலின மாற்ற அறுவை சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருகிறது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர்களின் மாற்றம் அவர்களுக்கு நிறைவாகிறது.
பாலின மாற்றத்தைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் தரநிலைகள் வேறு நிலைக்கு உயர்த்தப்படுகின்றன.
எல்ஜிபிடி சமூகத்தை நமது சமூகத்தின் ஒரு அங்கமாக கருதுவது காலத்தின் தேவையாக உள்ளது.
ஆனால்…………
ஒரு ஆண் பெண்ணையும், ஒரு பெண் ஆணையும் நேசிப்பதே அடுத்தடுத்த சந்ததிகளை பெருக்க உதவும்.
அதனால் பெண் பெண்ணையும், ஆண் ஆணையும் விரும்புவதை முற்றிலும் ஆதரவாக கூறமாட்டேன் என்பது என் கருத்து.
மற்றபடி ஆண் பெண்ணாக மாறுவது, பெண் ஆணாக மாறுவது அவரவர் மனதிற்கு ஏற்ப அடையாளத்துடன் சமூகத்தை கடந்து செல்வது அவரவர் விருப்பமே. தனிப்பட்ட மனிதரின் விருப்பங்கள் தலையீடுவதும் தவறு.
இதுவே இக்கதையை எழுத காரணம்.
இது எனது வித்தியாசமான முயற்சி. காதல் கதை, குடும்பம் கதை, காமெடி கதை, ஃபேண்டஸி கதை, திரில்லர் கதை, கொலை கதை, மர்மம், திகில், பேய்கதை, வரிசையில் இந்த பிரிவும் எழுதி விட்டேன்.
பொறுமையாக வாசித்து முடிவை அறிந்துக் கொண்ட வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் கருத்தை கருத்து பகுதியில் கூறலாம். அல்லது விமர்சனம் பகுதியில் தெரிவிக்கலாம். முகநூலில் ரிவ்யு வழங்கலாம். நன்றி
Super super super super super super super super super super super super super super super super super
First indha story ah nega post pannum pothu enna ku shock than sis yen na nega disclaimer la 18+story nu sonniga .nan pratilipi app la unga la follow panni unga current story la irundhu past story varaikkum nega oru chinna scene 18+ah plus ah vachi nan padichathu illa.aanalum unga story writing eppovum iruku ah dignity mela ulla trust la than sis itha padichen oru edathula kooda nega mugam suzhikira mathiri feel panna vaikkala athukae first ungalukku hats off sis.
Endha oru vishyatha yum solluravaga sollura vithathula sonna atha keta mudiyum apadi na ra thuku unga writing oru best example sis ithu second plus point unga writing la itha nega eppovum mathama irukanum it’s my request sis
Story unmai ah vae nalla irundhuchi atha vida nega sonna vitham than super ovvoru character ah yum natural ah kammichiga and last varaikkum nega ranjith yaru maintain panna vitham ellamae super sis seriously last varaikkum sahir than ranjith nu nenachen nega athu vanisha nega la reveal pannatha varaikkum andha alavuku unga writing arumai ah irundhuchi
Vanisha transgender ah na marunathu avanga veetula proper ah handle panni irundhalum avalukku varuni mela irundha ennam mari irukum nu ennaku thonala ava pirapu la panna ah irundha athuku appuram ava thana mansualavula paiyan ah unardha aana ava varuni ava sister ah ninaika vae illayae athu than ah inga prachanai yae .
Varuni ku yae theriyama aval ah rasikkirathu ellam endha vagai la yum niyam nu sollamudiyathu yae eppudi irundhalum avaluku ava thangachi appa vera na uravu mariduvagala enna atha ava purinchikitu irundha manimozhi ah kollai panni iruku ah mata ipadi mazhihan ah sagura nilamai varaikkum izhuthutu poi iruka mata la .teenage la opposite gender mela feelings varuthu natural than aana atha infatuation than solluvaaga ipadi atha love ah ava nenachi ivolo panni irundhu iruku ah venam
Illa ellar oda suyanalam magizh varuni rendu per ah yum athigam ah hurt panniduthu and mozhi oda uyir um poga karanam aagiduthu
Sheela avanga vanisha avanga annan oda ponnu illa nu partiality kattama irundhu irukalam
Mahendran even avar vanisha ah va avar ponnu ah nenaikala na kooda aval ah veliya anupu ah nenaikala aana ava mozhi ah konnathu aval oda matram ithu na la varuni ku aabathu varum nu nenachi aval ah vittu vandhutaru athuvum oru vagai la thappu than
Sheela avanga vanisha ah va ponnu ah iruku ah solli force panna ma ava unarvu ah purinchi irundhu irukalam. Police investigation pothu avanga mahendran than blame panra parvai partha ga aana avanga vanisha than mozhi ah konnu ah therinthum amaithi ah than irundha ga unmai ah veliya sollala la appo mahendran thappu nu ivanga solla koodathu
Kiran avan ah ellam enna jenmam nu yar solla theriyala andha alavuku mosam ah na oru piravi
Sahir ivan thappu ah na thozhil panravan than and avan character um seri illa than aana vanisha mela ulla kadhal unmai than
Vanisha unmai ah vae azlagala visham than varuni ah porutha varaikum ava kasta tha anubuvachalum atha everything is fair in love and war nu eduthu ka mudiyathu yae iva varuni life la interfere aagama irundhu irukanum iva sollura la andha so called love varuni mela irundha apadi seiyala iva sex worker ah irukum pothu iva kita vara aalungalukum iva varuni kita behave pannathu kum endha vithiyasam illayae oruthar mela thappa ah na parvai ah veesuna kooda athuvum karpazhippu than
Finally varuni magizhan rendu perum mathavangala ah kasta pattalum avanga kadhal than rendu per ah yum oruthar ah innoruthar kita serthu iruku.
Atlast vazhakam pola endha journar ah irundhalum enga veena sis avanga writing ah compromise pannama dignity oda ezhuthuvanga nu kammi chi irukaga. Applause for your writing
Arumai…..really iam shocked to vanisha character……….semma…………any ways story is sooooogoood😜♥️♥️♥️♥️♥️♥️
Very interesting story…. unexpected turn and twist…..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super sis sema intersting enanala phonea kiza vaikave mudila avlo intresting ga erunthathu
Superb superb sisy interesting , unga stories vasichathula ithu oru different story epovum pola unga twist and turns lam superb ah irunthuchi 18+ sonninga but apadi onum perusa illa ithula real life la nadakuratha tha solringa niraya ippadi than nadakuthu niraya but athulam oru silarku than ok aguthu but Inga varunee avala love pannitu last la ellam sollitu sagavum ready agita therinji juice kudichi uyira vituta . Oru aana Mari avala virumbi iruka athaiym kora solla mudiyathu. It’s very interesting thrilling and very good msg also sisy.
Congratulations sissy
Super story. I don’t know you aware about this or not like this a tamil movie came starred by Aishwarya Rajesh. Movie name thittam Rendu. If possible watch it. The base story is female transform into male to get relationship with her close friend.
நல்ல திரில்லர் கதை படித்ததுமாதிரி இருந்தது அருமை அருமை….
👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Ur always rock….. 👌👌👌👌👌👌
Good story sis. Different story plot👏👏👏👏👏
😍😍😍
Endha story la vanisha character pathi negative ah solla neraiya erundhalum avaloda side la erundhu partha oru vela parents support kuduthu avala vera mari maathi erukalamo nu thonudhu enna pandradhu Ava neram eppdi ellam nadandhu kadaisila saganum nu eruku edhula varunikavum romba paavam anba erundha akka eppdi ayitaley nu avala pathi marakka mudiyama kashtam padra
Eppdiyo varuniyoda life magizhan kooda happy ya amanjuduchu👌👍😍❤️🥰
Sis neenga endha type of story kuduthalum best dhan sis semma keep rocking 👍