Skip to content
Home » இணையவலை கட்செவி அஞ்சல்

இணையவலை கட்செவி அஞ்சல்

         இணையவலை கட்செவி அஞ்சல் 

வலை-1

  ஆம்புலன்ஸ் ஒலி அந்த இடத்தையே ஆக்கிரமித்து ஒருவித மௌனத்தை மற்றவர்களைக் கொடுக்க வைத்தது.

      எட்டி எட்டிப் பார்த்தவர்கள் கிசுகிசுப்பான பேச்சுக் கூடச் சற்று நேரம் நிசப்தமாகக் கரைந்தது.

      அந்த வீட்டின் அழுகுரல் மட்டும் மனதை ரணப்படுத்தியது.

    உறங்கும் பதுமை போன்று இருந்த அந்தப் பெண்ணின் சடலத்தை ஏற்றிச் சென்றார்கள். சடலம் என்று சொல்லவும் இயலாது. இன்னமும் அதே கொள்ளை அழகு அவள் முகத்தில் மிளிர்ந்தது.

     தூக்கமாத்திரையை அளவுக்கு மீறி சாப்பிட்டு தற்கொலை செய்து இருக்கின்றாள் பாவையவள் அக்ஷரா.

   போலிஸ் ஒரு பக்கம் விசாரணை என்ற பெயரில் தன் உதிரமான மகளைச் சடலமாக எதிரே வைத்தப்படி ஆரம்பிக்கவும், “சார் என் பொண்ணு மார்க் கம்மியா வாங்கிட்டா அதனால இப்படித் தூக்க மாத்திரை எடுத்து தற்கொலை பண்ணிட்டா. தயவு செய்து போஸ்ட்மார்ட்டம் செய்து பாடியை தந்திங்கனா புண்ணியமா போகும். தகனம் கொடுத்து நாங்க காசில கரைக்கப் போறோம். வேறயேதும் கேட்காதிங்க. அதுவும் இந்த மாதிரி…” என்று கையெடுத்து மகேந்திரன் கும்பிடவும், அந்த ஏரியா ஸ்டேஷன் போலிஸ் விமல் தற்போது ஒதுங்கிக் கொண்டார்.

    இவரே இப்படியெனில் ஜானகிதேவியோ இடிந்துப் போய் மற்றொரு சவமாகக் காட்சி அளிப்பவரை என்னவென்று விசாரிப்பது?

        போஸ்ட் மார்ட்டம் வரவும் அது மகேந்திரன் கூறியது போலவே தூக்கமாத்திரையை விழுங்கியதால் ஏற்பட்ட மரணம் என்று ஊர்ஜிதமானது. போலிஸ் ஒருவரின் மேற்காணலில் இறுதி சடங்கு முடிந்து அழகான பாவை அக்ஷரா கலசத்தில் எஞ்சிய துகள்களாக மாறியிருந்தாள்.

     போலிஸ் அதன் பின் எத்தனை முறை, எத்தனை விதமாகக் கேட்டும் அதே பதில் மதிப்பெண் குறைவென்பதால் இறக்க முயன்றாள் என்பதே இறுதிவரை பதிலாகப் பெற்றவர்கள் அளித்தனர்.

    “சார் உங்க பொண்ணு எழுபத்தியந்து சதவீதம் மதிப்பீடு வாங்கிட்டு இருந்தாங்க. இந்தக் கடைசி ஆறுமாதம் தான் ஜஸ்ட் பார்டர் பாஸ் என்ற நிலை. அதனால தற்கொலை என்றதில எங்களுக்குச் சந்தேகமா இருக்கு. வேற காரணம் இருந்தா சொல்லுங்க.மறைக்க வேண்டாம்” என்று விமல் சலிக்காமல் கேட்டார்.

     “சார் அடிக்கடி இப்படி ஜஸ்ட் பாஸ் எடுத்தா தப்பா தோன்றாது சார். இப்படித் திடீரென வரவும் கொஞ்சம் தவறான முடிவெடுத்துட்டா. எங்களை நிம்மதியா விடுங்க சார். கொலையா இருந்தா நொண்டி நொண்டி துருவுங்க. இது தற்கொலை தானே விடுங்களேன். எங்களை ரணப்படுத்தாதிங்க.

     ஒத்த பிள்ளையைப் பெற்றெடுத்து நெருப்புக்கு வாறி கொடுத்து நிற்கறோம்.” என்று கத்தி கெஞ்ச துவங்கினார்.

     “உங்க பொண்ணோட போன்.” என்று மற்றும் “அவளோட திங்க்ஸ்.” என்று போலிஸ் கொடுத்துவிட்டு நகர்ந்தனர்.

      அதனை ஜானகி தேவி அந்த டேபிளில் இருந்து தள்ளி விட்டு கதற, அந்தக் கதறல் கேட்பவரை உலுக்க வைக்கும் அளவிற்குக் கேட்டதும் மகேந்திரன் அணைத்துக் கொண்டார்.

    அக்ஷரா கல்லாரி பாவை. கலர்புல் வாழ்வில் இருபது வயதில் இறப்பை தானாக ஏற்றுக்கொண்டாள். அவளாகவே….

இன்று பதினாறாவது நாள் அக்ஷராவிற்குப் படையலாகப் படைத்து தெய்வமாகக் கும்பிட்டு அவளின் அஸ்தியை கங்கையில் கரைக்கப் பயணத்தைத் துவங்கினார்கள்.

    முகத்தில் சிரிப்பு என்றால் என்னவென்று அறியாத கற்சிலையாக மாறி இருந்தனர் அவளின் பெற்றோர்.

***

     நாட்கள் கலங்கிய குட்டையாக இருந்தது தெளிந்த நீரோடையாக மாறிக் கொண்டிருந்தது.

      எக்ஸ்பிரஸ் அவின்யுவில் போவோர் வருவாரின் அழகு, ஆர்யா கண்ணில் மங்கையவர்களின் மான்விழியில் காதலெனும் தூண்டில் போட காத்திருந்தான்.

       கூலிங் கிளாஸ் அணிந்து அவனின் பார்வை தன்னை மையலில் சாய்பவளை தேடியது. இன்று கிரகம் சரியில்லை அவனுக்குத் தான் தேடிம் பாவை கிடைக்கவில்லை.

    அஜயோ தான் வாங்க வேண்டிய பொருளை பில் போட்டு வந்தவன் “என்ன ஆர்யா… யாரை தேடற” என்றான்.

     “யாரை தேட எவளாவது ஒருத்தி என்னவளா மாறுவானு பார்க்கறேன். எல்லாம் நின்று பார்த்து போறாளுங்க. வரவர காதலுக்கு மதிப்பு கொடுக்க மாட்டறாங்க டா.” என்றான் ஆர்யா சலித்துக் கொண்டு.

      “காதல் எல்லாம் டைம் வேஸ்ட் டா. போய்ப் படிக்கிற வேலையைப் பாரு. எனக்கு இன்னொரு புக் வேண்டும் ஈவினிங்க நீ லைப்ரரிக்கு வர்றியா?” என்று கேட்க ஆர்யா தலைக்கு மேல் கும்பிட்டு போட்டு மறுத்தான்.

   அஜய் தனியாகப் புக் எடுக்கச் சென்றான்.

    அவனுக்குத் தேவையானதை தேடிக் கொண்டிருக்க, எதிரே அனிதா மீது பெரிய புத்தகம் அவளின் தலையில் விழுவதைக் கண்டு வேகமாக வந்தவன் அனிதா கையைப் பிடித்து இழுக்கச் சட்டென்று அவள் தள்ளி இருந்த காரணத்தால் தொப்பென்ற விழும் சத்தம் கேட்டதும் அந்தப் புத்தகத்தின் அளவை கண்டு “தேங் காட் தேங்க்ஸ் அஜய். உன்னை இங்க எதிர் பார்க்கலை. சரியான டைம்ல ஹெல் பண்ணிட்ட.” என்று நன்றி நவின்றாள்.

      “இட்ஸ் ஓகே அனிதா. என்னோட கஸின் ஒருத்தன் புக் கேட்டான். அதான் எடுக்க வந்தேன். நான் என்னைக்காவது சம் டைம் வருவேன். ரெகுலர் ரீடர் இல்லை.” என்று கூறினான்.

    “ஓ… நான் ரெகுலரா புக் எடுக்க வருவேன். ஸ்டடிஸ் டைம் எக்ஸாம் முடிஞ்சதும் நாவல் எடுத்து ஸ்டெரெஸ் ரெலிப் பண்ண கதை படிப்பேன். அதுக்குத் தான் வந்தேன்.” என்று கூறியதும் அஜய் அவளின் புத்தகத்தைக் கண்டு “ஓகே பை” என்று கிளம்பினான்.

   “என்ன அனிதா நீ பேசிட்டு இருக்க அவன் பை சொல்லிட்டு கிளம்பிட்டான்.” என்றாள் அஸ்மி.

    “அவன் இங்கனு இல்லை அஸ்மி. காலேஜ்லயும் அப்படித் தான். படிப்பை பற்றி அதிகமா பேசுவான். வேற எதைப் பற்றிப் பேச ஆரம்பிச்சாளும் ஓடிடுவான்.” என்று செல்பவனையே பார்த்து முடித்தாள்.

     அனிதா அடிக்கடி அஜயை படிப்புச் சம்மதமாகக் கண்டதுண்டு. அப்பொழுது எல்லாம் பெரிதாக யோசிக்கவில்லை. இன்று அஸ்மி கேட்டப் பின்னே அவன் நின்று ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் என்று எண்ணினாள்.

***

நிரல்யா வீடு: 

நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது.

       சாந்தனு உறங்கி கொண்டிருந்தவன் எதச்சையமாக எழுந்து பார்க்க, தன் மனைவி நிரல்யா இல்லையென்றதும் அவளின் ஸ்டடிஸ் அறையில் மினி லைட்டின் வெளிச்சம் இருந்தை கண்டான்..

   நீரருந்த வந்த சாந்தனு நிரல்யா அறையில் எட்டி பார்த்தான். அங்கே அவள் யாரிடனோ சாட் மூலமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

      “நிரல்யா மணி ஒன்றாகுது. இன்னும் என்ன பண்ணற…” என்றதற்கு “சாட் பண்ணறேன் பார்த்தா தெரியலை” என்று எரிந்து விழுந்தாள்.

      “லுக் நிரல்யா. இந்த நேரத்தில் இப்படிச் சாட் பண்ணறது தப்பு மா.” என்று கணவன் எடுத்துரைத்தான்.

     “உனக்கென்ன பிரச்சனை சாந்தனு. அட்வெஸ் என்ற பெயரில் எதையும் பேசிடாதே. லீவ் மீ அலோன்.” என்று எரிந்து விழுந்தவள், கணினியில் “யா எனக்கும் சேம் கலர் பிடிக்கும். மோஸ்ட்டா அந்தக் கலர் டிரஸ் வாங்கியிருப்பேன்.” என்று பதில் அளித்தாள்.

   சாந்தனு அந்தச் சாட்டைப் படித்து மெதுவாக, “நிரலி இந்த நேரம் இந்தப் பிரெண்ட்லி சாட் தேவையா…?” என்றான்.

    “லுக் சாந்தனு. எந்த நேரம் என்றாலும் என்னை நீ கண்ட்ரோல் பண்ணாதே. அப்பறம் இது பிரெண்ட்லி சாட் இல்லை.” என்று பதில் தந்து அடுத்து டைப்பிங் என்று வருவதைக் கண்டு ஆர்வமாக அதே கணினியில் பார்வை பதித்தவாறு இருந்தாள்.

     “நீ இப்ப எல்லாம் சரியில்லை நிரல்” என்றான்.

     “ஆமா… எனக்குப் பேபி வேண்டும். உன்னால கொடுக்க முடியாதுல. பிறகு நான் என்ன செய்தா உனக்குகென்ன சாந்தனு. ஜஸ்ட் கெட் அவுட். சாட் பண்ணறப்ப டிஸ்டர்ப் பண்ணாதே. போய்ப் போர்வையை இழுத்து தூங்கு” என்று கூறியதும் சாந்தனு கையாளாகாத தனத்தோடு முகம் செத்துத் திரும்பினான்.

     நிரல்யா சொல்லி விட்டு அவள் பாட்டிற்குச் சாட் செய்ய ஆரம்பித்தாள். சாந்தனு மனம் வலிக்க நிரல்யாவின் நிலையைக் கண்டு வெதும்பினான்.

    எத்தனை டாக்டரிடம் சென்று வந்தாயிற்று. கைவிரித்த பதிலில், என்ன சொல்லி நிரல்யாவை சாந்தப்படுத்த. சாந்தனுவால் இயலாமல் போனதன் விளைவு நிரல்யாவின் இந்தச் செய்கையை அடக்கவும் முடியாது தவித்தான்.

வலை-2

    சாந்தனு தனியாக மனநல மருத்துவரை பார்க்க வந்திருந்தான்.

     காத்திருக்கும் இடத்தில் ஆடவன் ஒருவன் இருக்கவும் அவனைப் பார்த்தான்.

   அவனோ போனில் தலையை விட்டுக் கொண்டு இருக்கவும், சாந்தனு மனம் இந்த உலகம் எப்படி மாறிடுச்சு. எல்லார் கையிலும் போன் எந்த இடத்திலும் போன், எங்கப்போனாலும் நெட், இடைவிடாம போனில் பேசி பழகி, அவர்களுக்குத் தெரிந்த மனிதர்கள் நேர்ல பேசி பழக வந்தாலும் அவசரமாகச் சென்று கொண்டே போனில் பேசுவதாகச் செல்கின்றனர். நேரில் இரண்டு வார்த்தை பேசவும் யோசிக்கின்றனர்.

    நேரில் பக்கத்து வீட்டு ஆட்களைச் சந்தேகத்துடனும், போனில் யாரென்ற அறியாதவரிடம் நம்பகமாகப் பேசுவதும் இந்த உலகம் எதை நோக்கி செல்கிறது. ஆபத்தென்று எத்தனை விழிப்புணர்வு கொடுத்தும் பெண்கள் தானாக அக்குழியில் விழுவது எவ்வாறு? ஆண்களும் எத்தனை லாவகமாகப் பெண்களைத் தேர்ந்தெடுத்து வலையில் விழ வைக்கின்றனர்.

    நிரல்யாவை எண்ணி பெருமூச்சை விடுத்தவன், டோக்கன் எண் சொல்லி அவன் பெயரை அழைக்கவும் எழுந்து சென்றான்.

    நர்மதா மனநல க்ளினிக் பெரும்பாலும் கூட்டம் மிதமாக இருக்கும்.

   நிரல்யா பற்றி ஒரு மணி நேரம் பேசியவன் பதிலுக்கு நர்மதா கூறியதை நிதானமாகச் செவிக்குள் ஏற்றிக் கொண்டான்.

      “டாக்டர் இந்த விஷயம்… வேற யாருக்கும்?” என்று தயங்கினான்.

     “இங்க பாருங்க சாந்தனு. பொதுவா டாக்டரிடம் வரும் பேஷண்ட் ஹிஸ்ட்ரியை யாருக்கும் சொல்ல மாட்டோம். அதுலயும் இது மனநலம் பற்றியது. நீங்க சொன்னதை யாரிடமும் கலந்தாலோசிக்க மாட்டேன். நிம்மதியா போங்க. சில நாளுக்குள் நான் சொன்ன மாதிரி கேட்டுப் பாருங்க. தன்மையா பேசி புரியவைங்க.” என்று கூறவும் சாந்தனு அமைதியாய் வெளி வந்தார்.

      நிரல்யாவுக்கு மட்டும் அல்ல இந்தக் கவுன்சீலிங் தனக்குமே வேண்டிதான் வந்தது. அவருக்குமே இந்தக் காலக்கட்டத்தைச் சந்திக்க மிகவும் கவலையாகப் போனது.

     இன்றிலிருந்து நிரல்யா செல்லும் திசைக்குச் சென்று அவளை மீட்க வேண்டுமென முடிவோடு அவளுக்குப் பிடித்த உணவுவகையை வாங்கிக் கொண்டு சென்றான் சாந்தனு.

     “நிரல் உனக்குப் பிடிச்ச இடியாப்பம் இறால் பிரியாணி” என்று நீட்டினான் சாந்தனு.

    ஒரு பார்வை சாந்தனுவை பார்த்து விட்டு “தேங்க்ஸ்” என்று வாங்கி அருகே வைத்துக் கொண்டாள்.

    “சூடாறதற்கு முன்ன சாப்பிடு நிரல்.” என்றான்.

     “பச்.. எனக்குத் தெரியும் சாந்தனு.” என்றாள். தலையை அழுத்தி பிடித்து எதையோ எண்ணி கலங்கியது உள்ளம். புதிதாகத் திருமணமான நாளில் சாந்தனு அறிமுகப்படுத்திய உணவு, ப்ரியாணியை இப்படிப் பார்க்காத நிரல்யாவுக்கு இது மிகவும் பிடித்துப் போனது.

   எப்பொழுது சாந்தனுவோடு இந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் இதையே ஆர்டர் செய்வாள்.

    வெளியே இருந்து வந்ததும் பிறகு இனிமையான தாம்பத்தியம் என்று காதல் வாழ்வில் திளைத்த நாட்கள்.

     நிரல் சாப்பிட்டு குளித்து வந்தவள் மெத்தையில் சாந்தனு அருகே வரவும் சாந்தனு நிரல்யாவினை மென்மையாக முத்தமிட்டு கூடலுக்குள் அழைத்துச் சென்றான்.

     அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கூடுதல் ஆனதும் சாந்தனு உறங்கினான். நிரல்யா விழித்திருந்து நேராகப் போனை எடுத்து யாரிடமோ பேச தயாரானாள்.

     சாந்தனு இரவு அணைக்கச் செல்ல அது தன்னவள் அல்ல  தலையணை என்றதும் சட்டென விழித்திறந்தான்.

    இம்முறை ஸ்டடிஸ் அறையில் இல்லை. ஹாலிலேயே இறுக்கமாக அமர்ந்து போனில் தொடுத்திரையில் கையை வேகமாகத் தட்டச்சுச் செய்து கொண்டிருந்தாள்.

     “என்ன நிரல் பண்ணற… டயர்டா இல்லையா. தூங்கிருப்பனு நினைத்தேன்.”

      “டயர்டா…. ம்…” விரக்தியாகச் சிரித்தாள்.

     “உன் வேலை தான் முடிஞ்சுதே. போய்த் தூங்கு.” என்றவளின் பேச்சுக்கு நாலறை விட்டு ‘என்னடி வேண்டும். இதே பிடிவாதம் பிடிச்சா நான் செத்து தான் போகணும். பொருத்து பொருத்துப் பார்த்துட்டேன்’ கத்த தோன்றியது. முடியவில்லை… நர்மதாவிடம் கவுன்சிலீங் போயும் தன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

    டாக்டர் நர்மதா சொன்ன வார்த்தை, ‘பொறுமை ரொம்ப முக்கியம் சார். நீங்க பட்டுனு பேசினிங்கனா அவங்க ஒடிஞ்சிடுவாங்க.’ என்றதும் அமைதியாக நின்றான்.

     நிரல்யா வேகமாக அவளுக்கு வந்த ஆடியோ மெஸேஜை பிளே செய்து ஆழ்ந்து அந்தக் குரலை உள்வாங்கினாள். 

   ஏனோ இம்முறையும் சலிப்பு வரவும் ஹெட்செட்டை தூரயெறிந்து தங்கள் அறைக்குச் சென்று மெத்தையில் சுருண்டு படுத்தாள்.

     சாந்தனு அந்த ஹெட்செட்டை எடுத்து வைத்து ஹாலில் உள்ள மினி விளக்கையும் அணைத்து வந்தான்.

     நீண்ட நேரம் கழித்து நிரல்யா உறங்கியதை கண்டதும் அவளை அணைத்துக் கொண்டான்.

***

     அஜய் நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.

   ஆர்யா இரண்டாவது பீரை உள்ளுக்குத் தள்ளி கொண்டிருந்தான்.

அஜய் ஆர்யா இருவரும் ஒரே வீட்டை வாடகை பிடித்துத் தங்கி படிக்கும் மாணவர்கள். ஆர்யா நாகர்கோவிலிருந்தும் அஜய் குமரியிலிருந்தும் வந்ததால் நட்பாகப் பேசி வைத்துச் சென்னையில் இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்துத் தனியாக இருக்கின்றனர்.

     வாடகை, கரண்ட், தண்ணீர் என்று எல்லாம் இரு பில்லாகப் பிரித்துப் பகிர்ந்துக் கொள்வார்கள். உணவு இருவருமே வெளியே பார்த்துக் கொள்வார்கள். ஏதேனும் சின்னச் சின்னது மட்டும் வீட்டில் செய்வதுண்டு. 

     “என்ன தைரியம் டா அவளுக்கு… என்னை இன்சல்ட் பண்ணிட்டா….

    உன்னிடம் பேச வந்தா, பேசிட்டு போக வேண்டியது தானே… தேவையில்லாம என் விஷயத்துல தலையிடறா…” என்று மடக்மடக்கெனக் குடித்து முடித்தான் ஆர்யா.

      அஜய்க்கும் என்னவோ குழப்பம் தான். ஆர்யாவை இம்சித்து விட்டாளே. தன்னிடம் ஏதோ கேட்க வந்தவளிடம் ஆர்யா பேச போக முதலில் நன்றாகப் பேசியவள் போகப் போக ஆர்யாவின் கிண்டலில் கடுப்பாகி லிமிட்டில் இருக்கச் சொன்னாள். ஆனால் ஆர்யா  கேட்டால் தானே. என்ன வம்பளந்து வைத்தானோ அடிக்கும் அளவிற்குச் சென்று விட்டாள்.

     அடிப்பதற்குள் தான் சென்று அனிதாவை தடுத்துக் கேன்டீனில் அழைத்து வந்து என்ன ஏது என்றால் அவளும் கூறவில்லை. இதோ ஆர்யா இரண்டு பீரை குடித்து முடித்தும் என்ன பிரச்சனை என்று வாயை திறக்கவில்லை.

    தன்னையும் கோபமாகப் பார்த்து தனியறைக்குள் புகுந்து கொண்டான்.

       அஜய்க்கு என்ன பிரச்சனை என்று யோசித்துத் தலைவலி வந்தது தான் மிச்சம். எப்பவும் டிவி பார்த்துக் கொண்டு ஒலிப்பெருக்கி அதிர படம் பார்ப்பாவன் ஆர்யா. அஜயோ அறைக்குள் சென்று படிக்க ஆரம்பிப்பான். இன்று தலைக்கீழ் மாற்றம். ஆர்யா அறைக்குச் சென்று அடைந்து கொள்ள, அஜய் டிவியைப் பார்க்க ஆரம்பித்தான்.

வலை-3

      அஜய் வந்துக் கொண்டிருந்த நேரம் அனிதா கையில் கட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள் அஸ்மி. 

    “இதே வேலையா வச்சிட்டு இருந்தா கம்பிளென் பண்ணு அனி” அவனுக்கு என்ன தைரியம். திமிர் பிடிச்சவன். இதுல என் பிரெண்ட்ஷிப்பை கட் பண்ண சொல்லறான். இடியட்…. அனி அவன் பேச்சை கேட்ட, அங்கிள் ஆன்டிகிட்ட வந்து நானே உன்னை பற்றி புகார் சொல்ல வேண்டியதா இருக்கும்.” என்றாள் அஸ்மி. 

    “ஐய்யோ… தாயே… அப்படி பண்ணி தொலைக்காதே.” என்று அனிதா சலித்தாள். 

     அஜயை கண்டதும், “இதோ வந்துட்டான் பாரு அவனோட ரூம் மேட்” என்றாள் அஸ்மி. 

     “என்னாச்சு அனிதா…” என்றான் பதற்றமாக. 

     “இன்னும் என்ன ஆகணும். இங்க பாரு அஜய்.. உன் பிரெண்ட் ஓவரா பண்ணறான். சொல்லி வை. இல்லை பிரின்சிப்பாலிடம் கம்பிளென் பண்ண வேண்டியாதா இருக்கும்.” என்று அஸ்மி வெடித்தாள். 

     “இங்க பாருங்க. என்னனு தெரியாம என்னிடம் கத்தினா என்ன செய்வேன். அவனிடம் நேற்று முழுக்க கேட்டாச்சு. எதுவும் சொல்ல மாற்றான். இரண்டு பீர் காலி பண்ணிட்டு ரூம்ல கதவை லாக் பண்ணிட்டான். நீங்க சொல்லறதும் புரியலை. இதுல என்னை கண்டு நீங்க எரிந்து விழுந்தா என்ன அர்த்தம்.” என்று அஜய் கேட்டான். 

     “ஆமா… ஒரே ரூம்மேட் தெரியாதாக்கும். அவன் செய்யற வேலை. இதுல பிரெண்ட்ஷிப் வேற” என்று அஸ்மி இடையில் கத்தினாள். 

     “பச் சும்மா இரு அஸ்மி. நீ போ… நான் அஜயிடம் பேசிட்டு வர்றேன்.” என்று அஸ்மியை அனுப்பி வைத்தாள். 

     அஜய் அனிதா மெதுவாக தங்கள் வகுப்பறைக்கு வெளியே நின்று பேச தயாரானார்கள். 

      “அஜய்… நீங்களும் ட்ரிங் பண்ணுவிங்களா…?” என்றாள். 

        “நோ நோ எனக்கு அந்த பழக்கம் இல்லை.” 

      “ஸ்மோக்கிங்.” என்று கேட்டாள். 

     “இ…இல்லிங்க…” 

     ”வேறயெதும்..?” என்று கேட்டாள் அனிதா. 

     “என்னங்க நீங்க.. எதுவுமில்லை. படிக்க நேரம் கிடைக்கிறதே அபூர்வம். நான் இதுக்கு எல்லாம் நேரம் ஒதுக்கறதுயில்லை.” என்று மறுத்தான். 

     “அப்பறம் ஏன் உங்க ரூம் மேட் ட்ரிங் ஸ்மோக்கிங் பண்ணறார். இந்த லட்சணத்துல என்னை லவ் பண்ணறானாம். நீங்களே சொல்லுங்க. எந்த பொண்ணு இப்படி பிகேவ் பண்ணறவனை விரும்புவா? 

   இதுல காலையில ஸ்கூட்டி நிறுத்திற இடத்துல வந்து ஓவரா பேசறார். என்னவோ நான் உங்களோட பிரெண்ட்லியா பேசறது அவருக்கு எரிச்சலா இருக்காம். இங்க பாருங்க எனக்கு அவர் பேசறது கடுப்பா இருக்கு. சொல்லி வைங்க. இல்லை போலிஸ்ல கம்பிளென் பண்ண சொல்லி அஸ்மி தொடர்ந்து சொல்லறா… அப்பறம் அதை தான் செய்யணும்.” என்று நகர்ந்தாள். 

     ‘போகும் பொழுது இரண்டு பீர் காலி பண்ணியிருக்கான் எருமை… எருமை… மாடு தொழுவத்துல குடிக்கிற மாதிரி குடிச்சிட்டு மட்டையாகி இருக்க வேண்டியது தானே காலையிலேயை அரை தூக்கத்துல போதையில வந்துட்டான்.’ என்று முனுமுனுப்பது கேட்டது. 

      அஜய்க்கு ஆர்யா மேல் அளவுக்கடந்த கோபம் வந்தது. நான் என்ன கனவு கண்டு இருக்கேன். இவன் என்ன பண்ணி தொலைக்கிறான். இவனால நான் மாட்டிட்டு முழிக்கணுமா.” என்று கோபமாக ஆர்யாவுக்கு போன் போட, அவன் போன் எடுக்கவில்லை. 

  யாரிடமோ பேசிக்கொண்டிருக்க பிஸி பிஸி என்று வந்தது. 

       அன்று முழுவதுமே ஆர்யா கல்லூரிக்கு வரவில்லை. அஜய்க்கு இருக்க பிடிக்காமல் கடைசி ஹவர் இருக்காமல் வீட்டிற்கு சென்றான். வீட்டில் ஆர்யா இல்லை. 

     அஜய் தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டான். 

     ஆர்யா வந்தது போல தோன்றவில்லை. இம்முறை ஹாஸ்டலில் இருக்கும் மாணவன் ஒருவன் அஜயிடம் ஆர்யா இங்கு தான் இருப்பதாக கூறி வைத்தான். 

***

     நிரல்யா போனை பிடுங்க முயன்று தோற்று போனான் சாந்தனு. 

   சாந்தனுவை தள்ளி விட அவனோ மேஜையின் மோதி சின்னதாய் இரத்தம் வந்தும், நிரல்யா அப்படியே வேடிக்கை தான் பார்த்தாள். 

     சாந்தனு அருகே வந்து, “ஏன் நிரல்யா இப்படி பண்ணற?” 

     “எனக்கு பேபி வேண்டும்.” என்றாள் நிரல்யா. அதில் அழுத்தம் மட்டுமே. 

      “நாம பரிகாரமா ஒரு குழந்தையை வளர்க்கலாம் நிரல்யா. ஏன் ஒன்றுக்கு இரண்டு குழந்தை அடாப்ட் பண்ணலாம். உனக்கு பிடிச்ச மாதிரி என்ன பெயர் வைக்கணுமோ வச்சி வளர்க்கலாம்.” ஒரு வித ஆர்வோத்தோடு கேட்டு முடித்தான். நர்மதா கேட்க சொன்னவை தான். 

   நிரல்யா அங்கும் இங்கும் நடந்து முடிந்து, சாந்தனுவை பார்த்து “குழந்தையை வளர்த்தா மட்டும் போதுமா சாந்தனு…. இல்லை… உனக்கு நான் சொல்லறது புரியலை சாந்தனு. புரியலை…  புரியலை… சாந்தனு நீ என்னோட வாழ்ந்து என்னை புரிஞ்சிக்கலை.” என்று ஆங்காரமாக கத்த துவங்கினாள். 

    சாந்தனுவோ, “புரியறதால தானே நிரல் அமைதியா கையைக் கட்டி நீ பண்ணற தப்பை வேடிக்கை பார்க்கறேன்.” என்றான்.

     “தப்பா… நான் பண்ணறதா… நீ தான் தப்பு. நீ நல்ல ஆண் மகன் இல்லை. உன்னிடம் என்ன பேச்சு. நானே தீர்வு கண்டுப்பேன். இன்னிக்கு தான் கொஞ்ச நேரம் அந்த வாய்ஸ் சாட்ல நிம்மிதியா உணர்ந்தேன். நீ கெடுத்துட்ட. இட்ஸ் ஓகே… எனக்கு வேலை இருக்கு. உனக்கு சமைச்சி வச்சிட்டேன். சாப்பிட்டாச்சு. குட் நைட்” என்று ஸ்டடிஸ் ரூம் சென்று கதவை அடைத்து கொண்டாள். 

      சாந்தனுவிற்கு அதிகபட்ச கோபம் வந்தது. எந்த ஆணும் தன் எதிரில் வேறொருவனிடம் காதல் வசனம் பேசினால் யார் தாங்கிக் கொள்வார். நிரல்யா செய்கின்றாள்… தடுக்க வழியறியாது சாந்தனு போனை பிடுங்க முயன்றும் தோற்றுப் போனான். 

   பெண் ஒரு முடிவில் இருந்தால் அவளின் மனபலம் மட்டும் அல்ல உடலும் பலம் பெற்று விடுகிறது. 

     அவனிடம் இருந்து போனை காப்பாற்றி சென்று விட்டாளே. சாந்தனு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிரல்யா போகும் பாதையில் அவளுக்கு முட்கள் விரிப்பே காத்திருக்கின்றன என்று அறிந்தும் செல்கின்றாள். அனைத்திற்கும் காரணம் பேபி. 

     சுவற்றை கூடுமானளவு வரை குத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தினான். 

   இங்கு அறைக்குள் நிரல்யாவோ, சாப்பிட்டியா தூங்கினியா என்ன பண்ணற? எந்தவூர்? எந்த ஏரியா என்றதை தாண்டி எந்த நிற உடை உடலின் வடிவ எண் வரை கூறி கொண்டிருந்தாள். யாரோ ஒருவனிடம்… ஒரு போனின் பத்து  இலக்க எண்ணை மட்டும் தெரிந்து, அவனின் ஆசைக்குரிய வார்த்தைக்கு பதில் தந்து கொண்டிருந்தாள். 

வலை -4

    நிரல்யா வீட்டின் அழைப்பு மணி அடிக்க துவங்கியது. 

   சாந்தனு யாராக இருக்கும் என்று கதவை திறந்து பார்க்க, அங்கே “அமேசான் ஆர்டர் வந்திருக்கு சார்.” என்று பார்சலை நீட்டினான். 

     “நான் ஆர்டர் பண்ணலையே.” என்று சாந்தனு குழம்பினான். நிரல்யா இருக்கும் நிலைக்கு பர்சேஸ் செய்யும் மனநிலையும் இல்லையே.

     “நிரல்யானு..?” என்றதும் சாந்தனு தன் மனைவி என்று பார்சலை வாங்கினான். 

     பணம் ஏற்கனவே செலுத்தியதாக இருப்பதால் வந்தவன் சென்று விட்டான். 

    சாந்தனு பார்சலை பிரித்து பார்க்க உடையிருந்தது. 

    அதுவும் சீ த்ரு ஆடை போன்று இருந்ததும் நிரல்யா இப்படி வாங்கமாட்டாளே என்று நிரல்யாவிடம் கேட்க அவளோ “நான் தான் ஆர்டர் செய்தேன். சோ வாட் இனி போட செய்வேன்.” என்று பேசி ஆடையை பிடுங்கி சென்றாள். 

    சாந்தனுவிற்கு திக்கென்று இருந்தது. 

     சாட் டாக், ஆடியோ டாக், அடுத்து வீடியோ டாக் என்று நிரல்யாவை இழுத்து செல்வதை யூகித்தான். 

     இனியும் தாமதித்தால் ஏதேனும் விபரீதம் வந்து சேருமோயென்றே அஞ்சினான். 

     டாக்டர் நர்மதாவின் எண்ணை தொடர்பு கொண்டு பேசி போனை பிடுங்கிடவா என்ன செய்யலாம் என்று கேட்டான்.

    போலிஸீக்கு செல்லவும் யோசித்தவனாக திணறினான். 

    நர்மதாவிடம் “ஏதாவது வழி சொல்லுங்க மேம். எனக்கு இந்த தண்டனை ரொம்பவே வலிக்குது.” என்று பிதற்றினான். 

      “கூல்… கூல்.. சாந்தனு. மனதை சிதறவிடாதிங்க. நான் ஒரு அரை மணி நேரத்துல பதில் யோசித்து சொல்லறேன்.” என்று வாக்களித்தாள். 

      போலிஸ் என்று போனாலே நிரல்யா மனம் கூடுதலாக பாதிக்கும் என்பது நர்மதாவுக்கு புரிந்தது. ஆனால் இதில் தலையிடாமல் மேலும் அடுத்த நடவடிக்கை எடுக்கவும் அஞ்சினாள். 

       காரியமும் இதற்கு அடுத்த கட்டம் சென்றால் தவறு தான். நிரல்யாவுக்கும் பாதுகாப்பு என்பது கடினமாகும். 

    சாந்தனு இன்று மட்டும் பேசட்டும் நான் போன் லாப்டாப் உடைக்கிறேன் என்று கோபமாக காத்திருந்தான். 

     நிரல்யாவோ அந்த ஸ்டடிஸ் அறையில் ஒவ்வொரு இடமாக யோசித்து கொண்டிருந்தாள். 

     அவள் செய்வது அவள் மனதுக்கு தவறாகபடவில்லை.. 

     சாந்தனுவிற்கு மதியம் உணவை தயாரித்தாள். சாப்பிடும் நேரம் நினைவுகள் எங்கெங்கோ சென்றது.

     கண்ணீரும் உகுத்திட துடைத்து கொண்டு முடிவில் மாற்றத்தை மட்டும் யோசிக்கவில்லை. 

     கொக்குக்கு மீன் ஒன்றே குறியாக இருந்தாள். தான் செய்வதை செய்தே முடித்திடும் தீவிரம் அதில் இருந்தது. 

       சாந்தனு போன் வரவும் அவனும் டாக்டர் நர்மாதாவின் அழைப்பு என்றதும் எடுத்து பேச ஆரம்பித்தான். 

   நர்மதா சொல்ல சொல்ல முதலில் பயந்தவன் பிறகு சற்று “மேம் அதுக்குள்ள ஏதாவது பிக்சர் வெளியே போயிட்டா. அவ இப்ப சரியில்லை.” என்று பதறவும் செய்தான்.

     “இல்லை பயப்பட தேவையில்லை. ப்யூ ஹவர்ஸ்ல எல்லாம் சால்வ் ஆகிடும்.” என்று பதில் கொடுத்தாள். 

     சாந்தனு மாலை நகம் கடித்தபடி ஹாலில் ஏதோவொரு படத்தை ஒடவிட்டு நிரல்யாவையே பார்த்தான். 

    அவளோ தீவிரமாக போன் சாட்டில் பேசிக் கொண்டிருந்தாள். 

      சில நிமிடத்திற்கு பிறகு அறைக்கு சென்று கதவை தாழிட்டு முடித்தாள். 

     சாந்தனுவிற்கு கோபமும் இயலாமையும் வந்து தொலைத்தது. 

    சாந்தனுவிற்கு நிச்சயம் அவள் இன்று வந்த சீ த்ரு ஆடையோடு முன்பின் அறியாத ஒருவனோடு வீடியோ காலில் பேச போகின்றாள். பேசி வைத்ததும் இருப்பிடம் கேட்டு அலைய போகின்றாள். 

   தலையிலடித்து கண்களை இறுக மூடினான். 

   கண்களுக்குள் தூக்கிலிட்டு நிரல்யா இறப்பது போன்று காட்சிகள் முன் வந்தது. 

     நர்மதா சொல்லியும் கதவை படபடவென தட்டினான். 

     நேரம் கழித்து கதவை திறந்தவள் சாந்தனு எண்ணியது போலவே உடையோடு நின்றாள். 

      “சாந்தனு நான் கண்டுப் பிடிச்சிட்டேன். கொஞ்சம் நேரம் கொடு. இது அவனே தான். ப்ளிஸ்… பல்லை கடிச்சிட்டு எனக்கு அவகாசம் தா.” என்றாள் அபலை அவள். 

     “நீ இப்படி போய் தான் கண்டு பிடிக்கணுமா நிரல். இது ரிவர்ஸ் ஆகிட்டா என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சியா. 

     அக்ஷரா மாதிரி உன்னை இழக்க விரும்பலை நிரல். புரிஞ்சிக்கோ… போலிஸிடம் எதையும் சொல்லாததுக்கு காரணம் அவளோட இறப்பு பற்றிய பேச்சு தப்பா சித்தரிச்சிடுவாங்கனு தான். 

     நீ என்ன திட்டினாலும் பரவாயில்லை. ஏன் ஆம்பளையே இல்லை. தைரியமற்றவன் கூட சொல்லிக்கோ. கையாளாகதாவனா இருந்துக்கறேன். ப்ளில் நிரல்.” என்று சாந்தனு கெஞ்சினான். 

    ஆனால் கணினியில் மின்னி மின்னி மறைந்த அழைப்பு கண்டு நிரல் தீர்க்கமாக, சாந்தனுவை வெளியே தள்ள முயன்றாள். 

     “நிரல் இருக்கற மானம் மரியாதை  போயிடும் டி.” என்றான். 

     நிரல் சாந்தனுவை தள்ளிவிட்டு அறைக்கு செல்ல முயன்றாள். 

  சாந்தனுவோ நிரலை இழுத்து ஹாலுக்கு தள்ளி அறையை தாழிட முயன்றான். 

      இருவரும் தள்ளுமுள்ளென்று இருக்க வாசல் அழைப்பு கேட்டது. 

      சாந்தனு அதிர்ந்திருக்க, நிரல் வெற்றிகரமாக அறைக்கு செல்ல சாந்தனு வாயில் கதவை திறந்தான். 

     “டாக்டர் நர்மதா அனுப்பினாங்க. நான் உங்க வொய்ப் கூட இரண்டு நிமிஷம் பேசணும்” என்று சித்தார்த் என்பவன் அறிமுகமாக நின்றான். 

     சாந்தனு திகைத்து விழிக்க, “டாக்டர் கேஸ் டீடெய்ல் சொல்லியிருக்காங்க. டோண்ட் ஓர்ரி. ஐ அம் டிடெக்டிவ் ஏஜன்ஸி அண்ட் ஹக்கர் டூ. ஷல் ஐ….?” என்று கேள்வியாய் நிறுத்தினான்.

      “அவ… அந்த நம்பரை தேடறேன்னு  பைத்தியம் மாதிரி… ரூமுக்குள்ள போயிட்டா சார்.” என்று அழுதான் சாந்தனு. 

      “ஒன்னும் பிரச்சனையில்லை. ப்யூ மினிட்ஸ் அவனோட லோகேஷன் பார்த்து முடிச்சிட்டறேன். அதுக்கு பிறகு மற்றதை பார்த்துக்கலாம்.” என்று கொண்டு வந்த பையில் லாப்டாப் ஒபன் செய்தான். ஏற்கனவே லாகின் செய்து வந்திருந்தமையால் உடனடியாக நிரல்யா வீட்டின் ஐபி அடரஸ் வாங்கி தேடுதலை ஆரம்பித்தான். 

    கணினிக்குள் தலையை விட்டு சில பல லிங்க்கில் நுழைந்தான். 

     சரியாக இருபது நிமிடம் கடக்க, “டோர் ஓபன் பண்ணுங்க. மாட்டிட்டான்…” என்று கூறவும் சாந்தனு நிரல்யாவின் ஸ்டடிஸ் அறையை தட்டினான். 

     “நிரல்… நிரல்… கதவை திற.” என்று கத்தி கதவை உடைக்கும் அளவுக்கு தட்டினான்.

      இரண்டு நொடிகள் கடக்க, நிரல்யா கதவை திறந்து, “நாளைக்கு நீ வீட்ல இருக்காதே சாந்து… எங்கயாவது போ… நான் அவனை இங்க அழைச்சிட்டு கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடறேன்.” என்று கதறினாள். 

     சாந்தனு வேண்டாம் என்று பலமாக தலையசைத்து மறுத்தான். 

    “அதுக்கு அவசியம் இல்லை மேம். அரை மணி நேரத்துல அவனை பிடிச்சிடுவோம். 

    கடைசியா அவனோட ஹிஸ்ட்ரி முழுதும் நம்ம கைக்கு வந்துடுச்சு. இதே பொழப்பா இருப்பான் போல. கடைசியா அவனோட டார்கெட் அனிதானு சேவ் பண்ணியிருக்கு. அந்த பொண்ணையும் அலார்ட் பண்ணணும். 

     அக்ஷரா கேஸை டீல் பண்ணிட்டு இருக்கறது விமல் அங்கிள் தானே. போன்ல சொல்லிட்டு நாம அவன் வீட்டுக்கு போயி கையும் களவுமா பிடிச்சிடலாம்.” என்று கூற நிரல்யா யாரிவன் என்பது போல நிற்க சாந்தனு அவளின் ஆடையை சுற்றி போர்வையை போட்டு மூடினான். 

     “வந்து பேசறேன் மேம். உங்க முயற்சி நிச்சயம் அவனை உள்ளத்தள்ளும்.” என்று கிளம்பினான். 

    சாந்தனு நிரல்யாவை அணைத்து கொண்டான். 

      “நம்ம பேபி அக்ஷராவுக்கு நியாயம் கிடைக்கும் டா.” என்று சாந்தப்படுத்தினான். 

***

   இங்கே ஆர்யா அனிதா கையை பிடித்து மன்னிப்பு வேண்டி நிற்க, அனிதா, “பொழச்சி போ. முதல்ல எந்திரி. பழைய மாதிரி லவ்னு சுத்தாதே. பிரெண்டா அக்சப்ட் பண்ணறேன். போதுமா டா. இப்ப கையை விடு.” என்று ஸ்கூட்டி எடுத்து நிமிர “அஸ்மி சொன்னா கட் பண்ணிட மாட்டள?” என்று கேட்டான் ஆர்யா. 

   “ம்ம்… பண்ண மாட்டேன். போய் தொலை” என்று வண்டியை கிளப்பினாள். 

    ‘நான் போய் தொலைக்க மாட்டேன் அனி… திரும்ப உன்னை டார்ச்சர் பண்ணுவேன்.’ என்று அவனும் அவனின் வண்டியை செலுத்தினான். 

     சித்தார்த் விமலிடம் கூறி அக்ஷரா கேஸ் சம்மர்தப்பட்டவன் தானே அந்த வீட்டில் இருக்கும் ஐடியென்று தொடர்புப்படுத்தி ஆதாரத்தை காட்டினான். 

     “தென் வாட் நெக்ஸ்ட் போய் அவனை கைது செய்வோம். ஆனா பாரு சித்தார்த்… போலிஸ்னா எப்படி பயப்படறாங்க. முதல்லயே சொல்ல என்னவாம். ஆமா அக்ஷரா அப்பா அம்மா வந்துட்டாங்களா…” 

    “இல்லை அங்கிள்… அவங்க இன்னமும் திரும்ப வரலை.” என்று அந்த வீட்டின் இடம் தேடி அக்ஷரா இறப்புக்கு காரணமானவனை தேடிச் சென்றனர். 

வலை-5

     சாந்தனு நிரல்யா கப்போர்டை திறந்து அக்ஷரா புகைப்படத்தை எடுத்து பார்த்தனர். நிரல்யா கண்ணீர் அந்த புகைப்படத்தில் சொட்டுகளாய் வழிய, சாந்தனு நிரல்யாவை அணைத்து ஆறுதல்படுத்தினான். 

     அக்ஷரா… இங்கு படிக்க வந்த நேரம் மகேந்திரன் ஜானகிதேவி சென்னைக்கு குடியேறவில்லை, திருச்சியில் தான் இருந்தனர். 

   மகேந்திரன் சாந்தனு இருவரும் அண்ணன் தம்பி. அதே போல ஜானகி நிரல்யாவுமே அக்கா தங்கை. 

  அதனால் இருவீட்டு ஆண்களும் பெண்களுக்குமே அக்ஷராவுக்கு முக்கியமானவர்கள். 

    தங்கை நிரல்யா வீட்டில் தன் மகள் அக்ஷராவை தங்கி படிக்க வைத்தாள். 

   ஜானகிதேவி நிரல்யா பத்து வருடம் வயது வித்தியாசம். ஜானகிதேவிக்கு பதினொன்பது வயதில் திருமணம் செய்த காரணத்தால் அடுத்த இருபதாவது அகவையிலேயே அக்ஷரா பிறந்தாள். சில பல கஷ்டம் அந்த வயதில் அடைந்து அக்ஷராவை வளர்த்து முடித்தார்கள். 

   நிரல்யாவை திருமணம் செய்த சாந்தனுவிற்கும் அக்ஷரா அண்ணன் மகள் என்றதை தாண்டி குழந்தையற்ற இவனுக்குமே மகள் ஸ்தானமானாள். 

    கல்லூரி என்றதும் யோசிக்காமல் தங்க இதுவே போதுமானதாக இருந்தது. 

     நிரல்யா சாந்தனு எவ்வித குறையுமின்றியே அக்ஷராவை வரவேற்று தனியறை ஏற்படுத்தி தந்தார்கள். 

     ஜானகி தேவி தான். நிரல்யா காதில் “நீயும் அவரும் தனியா சுதந்திரமா இருந்துட்டிங்க. இப்ப அக்ஷரா தங்கினா அசௌவுகரியமா தான் இருக்கும். நான் ஹாஸ்டலில் அவளுக்கு ரூம் பார்க்கட்டா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார் ஜானகி தேவி. 

     “அய்யோ அக்கா… நாங்க என்ன திருமணமான புதுமண தம்பதியா. அதெல்லாம் நேரம் ஒதுக்கிப்போம். உனக்கு தான் அக்ஷரா பொண்ணு. எனக்கு பொண்ணு மட்டுமில்லை பிரெண்டும் தான். 

    அதுவுமில்லாம குழந்தையில்லாத எனக்கு மனழுத்தம் அதிகமா இருக்கு அக்கா. அக்ஷரா இருந்தா மனசு விட்டு பேசுவேன். எனக்கும் ரிலாக்ஸா இருக்கும்.” என்றதும் ஜானகிதேவி மறுவார்த்தை ஹாஸ்டல் என்பதையே மறந்து தங்கை வீட்டில் உரிமையாய் விட்டு சென்றார். 

    தனி வீடு தோழி போல சித்தி நிரல்யாவோடு அக்ஷரா அரட்டை, சித்தப்பா சாந்தனுவோடு சந்தேகம் கேட்டு பாடத்தில் தெளிவு பெறுதல், சாந்தனுவும் அண்ணன் மகளை தன் மகளாக பாவித்து ஸ்நாக்ஸ் முதல் உடை வரை நிரல்யாவுக்கு வாங்குவது போலவே வாங்கி கொடுத்தான். 

    அக்ஷரா கூட ‘அப்பா அம்மா உங்களை விட சித்தாப்பா சித்தி வாங்கி தர்ற டிரஸ் அதிகமா இருக்கு.’ என்று ஜானகிதேவியிடம் பெருமையாக கூறினாள். 

   முதல் வருடம் டிரஸ் கொடுத்து படிக்க தேவையான டேபிள், ஷெல்ப் என்று பார்த்து பார்த்து ஆர்டர் செய்து  வாங்கி தரவும் அகஷரா சலித்துக் கொண்டு, “எல்லாரும் போன் வச்சியிருக்காங்க சித்தப்பா. அதுவும் ஸ்மார்ட் போன். நான் மட்டும் பாருங்க. கால் பேசி அட்டன் பண்ண ஒரு டப்பா போன். அப்பாவை ஸ்மார்ட் போன் வாங்கி தர சொல்லுங்க சித்தப்பா.” என்று சாந்தனுவிடம் அடம் பிடித்தாள். 

   சாந்தனு “அண்ணாவிடம் கேட்கறேன் மா.” என்று பதில் தந்தார். 

    “நீ நல்லா படிச்சி மார்க் வாங்கினா… நானே வாங்கி தர்றேன் பேபி.” என்று நிரல்யா அக்ஷராவுக்கு வாக்கு தந்தாள். 

      “போ சித்தி…” என்று சிணுங்கினாலும் படிப்பில் ஆர்வமானாள். 

     “சரி சரி இன்னிக்கு காலேஜ்ல என்ன நடந்தது. ஏதோ சீனியர் பையன் பேசினான்னு சொன்ன.. பார்க்க எப்படி இருக்கான்.” என்று கேட்டாள். 

      “போங்க சித்தி அவனும் படிப்பை பற்றியே பேசறான்.” என்று சலித்து கொண்டாள். 

      “உங்க வயசுக்கு படிப்பு பாவக்காயா இருக்கு.” என்று நிரல்யா பேச, “சித்தி… எனக்கு அட்வைஸ் பண்ணாதே. எனக்கு தூக்கம் வருது.” என்று சென்றவளை, “பேபி… நீ நிஜமா படிச்சி இந்த செம் என்பது சதவீதம் மேல எடு. போன் நான் வாங்கி தர்றேன்.” என்றதும் அக்ஷரா குண்டு கண்ணை உருட்டி “டீல் ஓகே” என்றாள். 

      அகஷரா அறையில் அடிக்கடி லைட் எரியவும் நிரல்யா வந்து எட்டி பார்க்க, அக்ஷரா படிக்கவும் டீ தயாரித்து முன் நீட்டினாள்.

        அக்ஷரா வாங்கி பருகி படிக்க ஆரம்பித்தாள். 

      நிரல்யா சாந்தனுவிடம் அக்ஷரா படிப்பை பற்றியும் அவளின் சேட்டையும் விவரிப்பாள். 

   சனி கிழமை படம் பார்க்க தியேட்டர் செல்வார்கள். ஞாயிறு என்றால் அக்ஷரா பேபி சொல்லும் ஹோட்டலுக்கு சென்று அவள் விருப்ப உணவை உண்பார்கள். 

       அக்ஷரா இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைத்தாள். 

      தெளிந்த நீரோடையாக வண்ணமையமாக வாழ்ந்தவளின் வாழ்வில் அது வரும் வரை. 

     இரண்டாம் ஆண்டு முதல் செமஸ்டரில் அக்ஷரா மதிப்பெண் கண்டு நிரல்யா ஸ்மாட்போனை நீட்டவும், அக்ஷரா கண்கள் ஆர்வத்தில் விரிந்து மீண்டும் சுருங்கியது. 

    “அம்மா திட்டுமே…” 

    “நான் சொல்லிக்கறேன் பேபி.” என்று நிரல்யா சொல்லவும் மற்றொரு சிம் போட்டு சாந்தனு கையில் தந்தான். 

      தாய் தந்தையருக்கு அவர்கள் கொடுத்த போனில் பேசுவாள். தோழிகளிடம் காட்ட நிரல்யா கொடுத்த போனை தான் காண்பித்தாள். எண்ணும் அதையே பகிர்ந்தாள். 

     அவனிடமும்… 

    அவனின் பேச்சு முதலில் நட்பாக பாதுகாப்பிற்காக இருந்தது. 

     இப்படியாக இரண்டு மாதம் கடந்தது. மூன்றாம் மாதம் நிரல்யா எங்கயாவது கூப்பிடவும், “சித்தி நீங்க சித்தப்பாவோட போங்க நான் எதுக்கு லவ் பேர்ட்ஸ்குள்ள நந்தி மாதிரி, அதுவுமில்லாம எழுதவேண்டியதும் படிக்க வேண்டியதும் நிறையயிருக்கு.” என்று நழுவினாள். 

    முதலில் நிரல்யா அதை நம்பி விடுத்து சென்றாள். சில நாட்கள் பின் அக்ஷரா இல்லாமல் போகவும் பிடிக்காமல் அன்று ஸ்டடிஸ் அறைக்கு வந்து பார்க்க, அவசரமாக போனை மறைக்க முயன்றாள். 

      நிரல்யாவுக்கு அப்பொழுதும் எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை. 

         ஒரு நாள் அவசரமாக கதவை திறக்கும் நேரம் அக்ஷரா அழுவதை கண்டு விசாரிக்கவும் முதலில் சொல்லத் தயங்கி பிடிவாதமாக மறைத்தாள்.

    தன்னை ஒருவன் காதலிப்பதாகவும், முதலில் கெஞ்ச  கெஞ்சி நம்பரை வாங்கி பதவிசமாக பேசி, நல்லவனாக காட்டி இவளே மனமாற காதல் என்று அவனிடம் இரஞ்சித்து காதல் வேண்டுதல் கேட்டு அவன் காதல் சம்மதம் கொடுத்ததாக கூற முடியுமா. 

     கொஞ்சல் நாட்களில் அவனின் காதல் பேச்சுக்கள் கொஞ்சல் மொழியில் தன்னை இழுத்ததையும்.

  வார்த்தைக்கு வார்த்தை தேன் தடவும் பேச்சும், உரிமையான டி போட்டு மனைவி போன்று பேசவும், அக்ஷரா மனதில் அவன் தான் தன்னவனாக உணரத் துவங்கினாள். 

     கெஞ்சியும் கொஞ்சியும் பேசிய பேச்சு சும்மாவே இருக்குமா… அடுத்த கட்டமாக தாவ துவங்கியது. 

   போன் பேசினாலே ஆடியோ பதிவை செய்யும் காலம். இதில் வீடியோ வசதி இருக்க சபலம் கொண்டவன் சும்மா இருப்பானா…? 

     உனக்கு இந்த டிரஸ் நல்லா இருக்கும். அதை ட்ரை பண்ணு. இதை ட்ரை பண்ணு என்று சுடிதாரை சுற்றியிருந்த ஷாலை போர்வையாக பேசியவளின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக உடலோடு இறுகி பிடித்து அங்கம் தெரியும் ஆடையை அவளாக அணிவித்திடும் அளவுக்கு யோசனையை வழங்கினான். 

      பெரும்பாலும் ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழி அறிந்தவள் கண்ணாடி முன் பார்க்க உடலோடு ஒட்டிய உடைகள் வெள்ளிதிரை நாயகியினை புறம் தள்ளும் அழகை பிரதிபலித்தது.  

     உண்மை தான். முகப்பூச்சும், உடலை கவ்வும் ஆடையும், தினசரி பழச்சாறும் அறிந்தினாலே ஒரளவு பருவவயதில் இந்திரலோகம் போற்றும் அழகைக்கூட்டும். 

       அக்ஷரா கண்ணாடி அவ்வாறே காட்ட, அவளின் அழகை தன்னவனிடம் வெளிகாட்டவும் தயங்கவில்லை. அவனால் தான் இந்த உடை இந்த கலர் என்று தேர்வு செய்தது. அவனுக்கு காட்சியளித்து அவன் கூறும் கருத்தை கேட்டு வானத்தில் பறக்கும் உள்ளமதில் பூரித்தாள். 

    “உன்னை இப்பவே பார்க்கணும் குழந்தை வடிவில்” என்று கெஞ்சினான் அவன். 

      முதலில் மறுத்தாலும் அவன் பொய் கோபமாக, “சும்மா நான் பாட்டு படிப்பு என் வேலைனு இருந்தேன் அக்ஷூ காதல் கத்திரிகானு என் டெம்பிரேச்சர் ஏற்றுவது நீ தான். நீயும் நானும் விரும்பறது காலேஜ்ல யாருக்கும் தெரியாம பார்த்துக்கிட்டேன். எதுக்கு… நீ சங்கடப்படக் கூடாதுனு தான். உனக்காக இப்படி யோசித்தா. எனக்காக கொஞ்சம் கூட பாவம் பார்க்க மாட்டற” என்று சலித்தான். 

     ஒரு நாள் அவனின் நல்லவன் பட்டம் அவளுக்குள் அவன் முன் குழந்தையாக நிற்க வைத்தது. காத்திருந்த கொக்காக வீடியோ, ஸ்கிரின் ஷாட் என்று எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான். 

     அடுத்த கொஞ்ச நாளிலேயே “உன்னை நேரில் ஒப்படைக்க மாட்டியா..” என்று துபாம் போட்டான். 

    மறுத்து அப்படி செய்ய மாட்டேன் என்று விளையாட்டாய் பேசி சிரித்த மயிலின் சிறகை பிடுங்கவே போனில் அவள் புகைப்படத்தை அனுப்பினான். 

   முதலில் அதிர்ந்து எதுக்கு இப்படி எடுத்து வச்சியிருக்க என்ற அதிர்வில் அழிக்க சொல்ல, அவனின் சுயயுருவம் வெளிப்படுத்தினான். 

      “எனக்கு நீ வேண்டும் அக்ஷூ. தந்துட்டு உன் கையால டெலிட் பண்ணிடு. இல்லைனா என்ன பண்ணுவேன்னு உனக்கு சொல்ல தேவையில்லை.” என்று சிரிப்பான்.  

      பொறுத்து பார்த்து தனியாக போராடி எதையும் மாற்ற இயலாது என்று உணர்ந்தாள். அவனிடம் கால அவகாசம் கேட்டு கெஞ்சிட்டு நின்றாள் அக்ஷரா. அவனுமே அவகாசம் தந்தான்.

       அதே நேரம் தாய் தந்தை சென்னையில் புது வீடு வாங்கி குடியேறி தங்கிடும் எண்ணத்தோடு வந்தனர். 

      பால் காய்ச்சிய அடுத்த வாரத்தில் அக்ஷரா தன் வீட்டை நோக்கி சென்றாள். 

      அங்கே ஒரு வாரம் இருந்த பொழுதும் அறைக்குள் படிப்பு படிப்பு என்று அடைந்து கொள்கின்றாளென ஜானகிதேவி விட்டு விட்டார். 

     அந்த அவனின் தொடர் வற்புறுத்தலும் கெடுவாக அடுத்த மாதம் துவங்கும் முன் அவனுக்கு அவளை தந்தாக வேண்டும் என்ற மிரட்டலும் அக்ஷராவை அச்சுறுத்தியது. 

    படிப்பில் கவனமில்லை… தோழிகளிடம் பெற்றோரிடம் பகிரவோ அச்சம். 

   பெரும்பாலும் இந்த அச்சம் தான் பெண்களின் வாழ்வில் இறுதி பகுதிக்கு கொண்டு விடுகிறது. 

     நான் காதலித்தேன் அதனால் புகைப்படம் கேட்க தந்தேன். தற்போது அதை வைத்து மிரட்டுகிறான் என்று போலிஸுக்கு சென்றிருக்கலாம். இல்லையா பெற்றோரிடம் கூறி தன் தவறை மன்னித்து தீர்வு கேட்டு நிற்கலாம். 

     இரண்டும் சொல்ல அக்ஷராவுக்கு அச்சம். நாம சொல்லப் போய் தன் புகைப்படத்தை நெட்டில் உலவ விட்டுடுவானோ என்ற ஒன்றே மற்றதை மழுங்க செய்தது. 

    தவறு செய்தவன் அஞ்சாமல் வெளியிட காத்திருப்பான். தவறே செய்யாமல் நம்பிக்கை அடிப்படையில் பெண்ணவள் புகைப்டம் அசிங்கமாக சித்தரித்து அவளை முடக்கிடுமே இந்த உலகம். 

      இந்த அச்சம் தானே ஆண்களின் துருப்பாக மாறி பெண்ணை வலைக்க வைக்கிறது. 

     அக்ஷரா அவனுக்கு இரையாக போவதும் இல்லை, தன்னால் அதற்கு தீர்வு காணவும் முடியாது, வீட்டில் பெற்றோருக்கும் சித்தி சித்தப்பாவுக்கும் சொல்லாமல் உயிரை துறக்க முடிவெடுத்தாள். 

    அன்று கடைசியாக நிரல்யா வீட்டில் வந்து அவர்களை பார்த்துவிட்டு போனை அங்கயே வைத்துவிட்டு சென்று விட்டாள். தன்னை பற்றி அறியக் கூடாதென அனைத்தும் டெலிட் செய்து விட்டால் அக்ஷரா. 

     இனி உன் விருப்பப்படி மிரட்ட முடியாது நான் இந்த உலகத்தை விட்டு போறேன் என்று கடைசியாக அவன் மிரட்டும் நேரம் சொல்லி கத்தரித்தாள். 

    தூக்கமாத்திரை உண்டு இறந்துகிடக்க நிரல்யா அவளின் போனை எடுத்து பதறி வந்தாள். நிரல்யா போனிலே அனைத்தும் அறிந்து கொண்டவள் அக்ஷராவை காப்பாற்ற வந்து தோற்று போனாள். பெயரும் கோட் வெர்டில் சேமித்து இருக்க, நிரல்யாவால் உடனடியாக கண்டறிய இயலவில்லை. போலிஸிடம் கூறினால் பெண்ணவளின் நிலை எப்படியும் சித்தரிக்கப்பட்டு இறப்பு மற்றவரின் பேச்சுக்கு அவலாக போயிடுமென்று ஜானகிதேவி மகேந்திரன் தங்கள் வாங்கி தந்த போனை மட்டுமே தந்தனர். 

நிரல்யா வாங்கி தந்த போன் அவளிடமே இருந்தது. 

      விளையாட்டுக்கு சொல்கின்றாள் எப்படியும் தனது இழுப்புக்கு வருவாள் என்று இருந்த அக்ஷரா காதலன்? அடுத்த நாள் கல்லூரியில் அவளின் இறப்பை பற்றி அறிந்தப்பின் ஆடிப்போனான். 

      போலிஸில் படிப்பால் மதிப்பெண் குறைந்ததால் இந்த முடிவு எடுத்து விட்டாளென கூற கேட்கவும் அவன் நகைத்து விளையாட்டாய் எண்ணி விட்டான். 

    இதில் நிரல்யா தான் பெரிதும் பாதிக்கப்பட்டு போனாள். போலிஸிடம் சொல்ல சொல்லி பல முறை போராடினாள். ஆனால் அண்ணன் தம்பி இருவரும் மகள் இறந்தது இறந்ததாக போகட்டும். இனி மேலும் எதுவும் ஆரம்பிக்காதே. அவள் எதற்கு இப்படி ஆடையின்றி அனுப்பினாள் என்ற கேள்வியும் அவளின் ஒழுக்கமும் மட்டுமே வெளியுலகம் குறை கூறும் என்றனர். 

  ஜானகிதேவியோ, பொண்ணை பத்திரமா பார்த்துக்க சொன்னா போனை வாங்கி தான் எமனா மாறிட்டியே” என்று இன்னமும் அதிகமாக பேச அக்கா தங்கை உறவும் அறுந்தது. 

   சாந்தனுவிற்கு நிரல்யா இதில் என்ன தவறு செய்தாள். அண்ணி இப்படி பேசுகிறார்கள். அக்ஷரா பெரிய பெண் தானே அவளுக்கு அறிவில்லையா என்று மனைவிக்காக யோசித்து பேச மகேந்திரன் பேச்சும் அறுப்பட்டது. 

   சாந்தனு மனைவியின் திக்கற்ற பார்வைக்கு விடைத் தேடி அவளை மாற்ற போராடினான். 

   பித்து பிடித்தவள் போல “என்னால தானே நான் தான் தப்பு. போன் வாங்கி கொடுத்திருக்க கூடாது. அக்ஷர் பேபியை நானே கொன்றுட்டேன். அவனை சும்மா விட மாட்டேன்.” என்று பிதற்றி கொண்டிருந்தாள். கடைசியாக ஒரு ஆடியோ பதிவு மட்டும் அந்த அவன் மிரட்டும் குரல் இருக்க அதை துருப்பாக பிடித்து கொண்டாள்.

       யார் அந்த அவன் என்றதில் தான் அக்ஷரா சொல்லாமல் சென்று விட்டாள். நிரல்யா கல்லூரியில் படிக்கும் அத்தனை ஆண்களில் நிரல்யாவோடு பழகும் ஆண்களின் நம்பரை ப்யூன் மூலமாக வாங்கி சேமித்தாள். முதலில் வகுப்பு தோழர்களோடு சாட் செய்ய ஆரம்பித்தாள். அடுத்து சீனியரிடம் என்று போனது. இதோ இன்று தான் அவனை அடையாளம் கண்டது. 

   ஆண்கள் பாதிக்கு மேல் சபலமாக சாட் செய்ய, கண்டறிய நாட்கள் எடுத்தது. 

    அந்த ஆடியோ குரல் இன்று அறிய நேர்ந்ததும் நிரல்யாவை காப்பாற்ற சாந்தனு எடுத்த முயற்சியும் சேர்ந்திட, சித்தார்த் மூலமாக இதோ அந்த அவனை சிறை செய்ய போகின்றனர். 

   அந்த வீட்டில் இருவர் மட்டுமே தங்கியிருக்கின்றனர். ஆம் அக்ஷராவின் சீனியர் ஆர்யா அஜய் இருக்கும் வீடு அது.

வலை -6

      ஆர்யா வண்டியை தன் வீட்டில் நிறுத்தி கூலிங்கிளாஸை எடுத்து  ஊதி தூசியை போக்கி சட்டை பேக்கெட்டில் மாட்டி அறைக்கு செல்ல அங்கே போலிஸ் நான்கைந்து பேர் நின்றிருக்க, பயந்தவனாக அப்படியே நின்றான்.

     அஜயை போலிஸ் உடையணிந்த விமலும், ஜீன் புல்ஷர்ட் என்று உடையணிந்த சித்தார்த்தும் இழுத்து வரக் கண்டான்.

     “சார் என்ன.. என்ன சார்.. எதுக்கு அஜயை இப்படி இழுத்துட்டு போறிங்க. அவன் என்ன செய்தான்.” என்று ஆர்யா பயந்தாலும் தன்னை போன்று இருந்த சித்தார்த்திடம் கேட்டான்.

      “என்ன பண்ணினானா… கூட படிக்கிற காலேஜ்ல பெண்ணை லவ்னு பேசி சாட் பண்ணியிருக்கான். அவள் நம்பிக்கையா பிக்சர் செண்ட் பண்ணினா இவன் அதை வைத்து மிரட்டி படுக்க கூப்பிட்டு இருக்கான். அந்த பொண்ணு தற்கொலை பண்ணிட்டு செத்து போயிட்டா.” என்று உதைக்க செய்தான். சித்தார்தின் இளரத்தம் விட்ட அறையில் உதடு கிழிந்து இரத்தம் வந்தது அஜயிற்கு.

     துவண்டு ஹாலின் டேபிளை பிடித்து விழுந்தான்.

     “சார் அவன் ரொம்ப நல்லவன் சார். யாரிடமும் பேசமாட்டான். தம்மு தண்ணி எந்த கெட்ட பழக்கமும் இல்லை. படிப்புல ஏ கிரேடு சார். உங்களுக்கு யாராவது தப்பான தகவல் தந்திருக்கலாம்.

     நானாவது டிரிங் பண்ணுவேன் ஸ்மோக் பண்ணுவேன். அஜய் படிப்பை தவிர எந்த பெண்ணிடமும் பேசிகூட பார்க்கலை.” என்று ஆர்யா தன் கூடயிருக்கும் அஜய்க்கு ஆதரவாக பேசி முடித்தான்.

     “இவனோட எத்தனை வருஷம் இங்க ஸ்டே பண்ணற.” என்று சித்தார்த் தன் முழங்கையை மேலேற்றி கேட்டான்.

    “ஒ…ஒன்றை வருஷம்” என்று ஆர்யா திணறி பதிலளித்தான்.

     காது சவ்வு கிழியும் அறையை அஜய்யுக்கு கொடுத்து அவனை நிறுத்தினான். ஆர்யா அந்த அடியை கண்டு இரண்டடி பின்னகர்ந்தான்.

     “ஒன்றை வருஷம் கூட இருக்கிறான் உன் லட்சணம் தெரியலை. எவ்ளோ ஸ்மார்டா நடிச்சிருக்க.” என்று எட்டி மிதித்தான் அஜயை.

     சித்தார்த் அஜய் போனை எடுத்து காட்டினான். “இது யாரு போன்?” என்றான்.

     “தெ.. தெரியலையே சார். அஜய் போன் அதோ…” என்று வேறொன்றை சுட்டி காட்டினான்.

    சித்தார்த் நீட்டிய போனை பார்த்தான். AJ என்று போனின் பின்னால் கவர் இருக்க, அதனை வாங்கி பார்த்தான்.

    அதில் இருந்தவையை பார்த்ததும் ஆர்யா அஜயை புழுவை போல நோக்கினான்.

     “சார் காதல் எல்லாம் வேஸ்ட் அப்படியிப்படி பேசினானே… நான் கூட படிக்கிறவனோட தண்ணி அடிச்சிட்டு கிடக்கறோம் அவனை டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு என் பிரெண்டோட ஹாஸ்டலிலேயே ஒரு தடவை தங்கினேன் சார்.”
 
     “இவனை பொருத்தவரை காதல் டைம் வேஸ்ட் தான். நேரா லஸ்ட் தான் முக்கியமுனு வாழறவன் ஆச்சே.”

     “சார்… இது அ..அனி அனிதா சார். என்னோட லவ்வர். எங்க காலேஜ். செகண்ட் இயர் பட் வேற குரூப்.” என்று அதிர்ந்தான். அனிதாவை அலங்கோலமான உடையில் முகத்தை பொருத்தியிருப்பதை கண்டான்.

   அஜயை பார்த்து கோபமாக முறைத்தான்.

        ஆர்யா சித்தார்த் செலுத்திய ஊசியின் விளைவால் மெல்ல போதையின் உச்சத்தில் வந்தவன்,

     “ஈஸியா மடிக்கியிருப்பேன். உன் லவ்வர் என்றதும் அப்படியே நிறுத்தி வச்சேன்.” என்று கண் சிமிட்ட, ஆர்யாவுக்கு கோபம் கோபமாக வந்தது.

     அங்கிருந்த பூஜாடியை கொண்டு அஜய் தலையிலடித்தான் ஆர்யா.

     “சித்தார்த் அக்ஷரா தற்கொலைக்கு இவன் தான் காரணம்னு புகார் தரலை… இப்ப இந்த கேஸ் என்னனு எடுத்துக்க,” விமல் சித்தார்த் பழக்கத்தின் காரணமாக சிநேகத்தோடு அடுத்து என்ன செய்யலாம் என்பதாய் கேட்டார்.

     “நிரல்யா மேம் நிச்சயம் கம்பிளென் தருவாங்க அங்கிள். பட் அக்ஷரா கேஸ் வச்சி நிச்சயம் கம்பிளென் தரமாட்டாங்க. அதுவும் இல்லாம அவங்க இந்த மாதிரி புகார் தந்து தான் இவனை உள்ளத்தள்ளனும்னு அவசியமில்லை அங்கிள்.

    தண்ணி தம்முனு இவனுக்கு கெட்ட பழக்கம் இல்லாம போகலாம். பட் போதை மருந்து பழக்கம் இருக்கு.  அதை வைத்து கைது செய்யலாம்.” என்று இரண்டு மூன்று பேக்கேட்டை எடுத்து கப்போர்டில் அடுக்கினான்.

     “சாரி அங்கிள். இவனை உள்ள தள்ள வேண்டிய கட்டாயமா நினைக்கிறேன்.

    ஒரு பெண்ணோட வாழ்வில் சதையை தீண்டுற நோக்கத்தோடு எந்த வலையை விரிச்சாலும் அவனுக்கு தண்டனை கிடைச்சே ஆகணும்.

     எத்தனை பேர் இப்படி அலையுறது எரிச்சலா இருக்கு. முகநூலில் அழகா ஒரு பெண் பிக்சர் இருந்திட கூடாது. உடனே மெஸஞ்சரில் போய் ஹாய் ஹலோனு பேசிட வேண்டியது.

    யாரு எவன்னு தெரியாமா சாப்பிட்டியா
தூங்கினியா
எந்த ஊர்
காலை வணக்கம்
இரவு வணக்கம் என்று எத்தனை இமேஜ் சென்ட் பண்ணி தூரத்தறாங்க.

   இன்ஸ்டால டிவிட்டரில் துவங்கி டிக்டாக் ஸ்மூல் சே… எந்த ஆப்ல இன்பாக்ஸில் பேசலாம்னு காத்துட்டு இருக்கற கூட்டம்.

      ஆர்யா… உங்க லவ்வர் அனிதாவை எதில மடக்க ட்ரை பண்ணினான்னு தெரியுமா?

     அனிதா ஸ்டெரஸ் ரிலிஸ்க்கு ஒரு ஆப்ல கதை படிக்க போயிருக்கா. அதுல ஹாய் ஹலோ என்று ஆரம்பித்து வச்சியிருக்கான்.

     அனிதாவுக்குனு இல்லை… இதே மாதிரி பல ஐடிக்கு அனுப்பியிருக்கான். நூறுல முப்பது பதில் தரும் அதுல எப்படியும் பில்டராகி ஐந்து மடக்கி நல்லவனா பிளே பண்ணி… ப்பா… என்னவொரு ஓர்க் பண்ணி வைப்பான் தெரியுமா.

      பேசாத பொண்ணுங்களோட இன்பாக்ஸில் போய் எனக்கு பிரெண்ட் இல்லை, நான் தனிமையா இருக்கேன். எனக்கு அப்பா அம்மா இல்லை அநாதை இப்படி ஏதாவது சிம்பத்தில போய் நம்பர் வாங்கி நெருக்கமா பேசற லெவலுக்கு போயிடுவான்.

    கொஞ்ச நாள் போனதும் பேச மட்டுமா செய்வான். அதுவும் ஸ்மார்ட் போன்ல… உன் குரலை கேட்கணும்னு வாய்ஸ் மெஸேஜ்ல கெஞ்சுவான்.

     அதுவும் சக்சஸ்னா பார்க்கணும் வைக்கணும்னு வீடியோ காலில் கெஞ்சுவான். அடுத்து அழகா இருக்க ஐஸ்வர்யாவுக்கு தங்கச்சியா இருக்க கொஞ்சுவான்.

    இந்த பெண்கள் மனசு இருக்கே. இவன் சரியில்லை இன்பாக்ஸில் வந்து எதுக்கு யாருனு தெரியாதவன் ஹாய் ஹலோ சொல்லி வர்றான்னு யோசிச்சு முதல்லயே ரிப்ளை பண்ணாம பிளாக்ல போட்டுடுவாங்க.

    அடுத்த கேட்டகிரி பேசறதை பொருத்து ஜஸ்ட் டாக்ல மட்டும் என்னனா என்ன அவ்ளோ தான். அதுக்கு மேல போனா ஸ்கிரின் ஷாட் போட்டு முகத்திரையை கிழிச்சு விழிப்புணர்வு பதிவு போட்டு வைப்பாங்க.

     இதுல ஏமாந்த கேட்டகிரி பெண்கள் மனதளவில் திடமா இல்லாதவங்க தான். இவனை மாதிரி ஆட்கள் எளிதா பேசுற விதத்தில் பேசி மூளை சலவை செய்தா ஏமாந்து போறாங்க. அதுவும் பேரண்ட்ஸ் கண்டுக்காதவங்க, கணவன் அன்பை எதிர்பார்த்து ஏங்கிற மனைவி. வயது வித்தியாசம் எல்லாம் நினைக்க மாட்டான் இவன்” என்றதும் அஜய் தள்ளாடி கண் திறக்க விமல் அவனை கைது செய்து அழைத்து சென்றான்.

      அடுத்த நாள் அஜயை பற்றி இறப்பு செய்தி நிரல்யாவுக்கு வந்து சேர்ந்தது.

    குளியலறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்ததாக, ஆனால் இறப்பு இயற்கையாக நிகழவில்லை என்று புரிந்தது.

      நிரல்யா தனது போனை எடுத்து அக்கா ஜானகிதேவிக்கு கூற அழைக்க அவர்களோ நிரல்யாவின் போனை தவிர்த்தார்கள்

     சாந்தனு “விடு நிரல் உன் பாசம் அவங்களுக்கு புரியாது. அக்ஷராவை இழந்தது உன்னாலனு நினைக்கறாங்க. இல்லை டா. அவளோட கள்ளத்தனமும் தான். அவ முதலிலேயே நம்மிடம் காதலிக்கறதை சொல்லியிருந்தா நாம விசாரித்து இருக்களாம். மேபி அவன் நம்மிடமும் நடித்திருக்கலாம். பட் அவன் என்ன இவ எல்லாம் பெரியவங்களிடம் சொல்லறானு யோசித்து அக்ஷராவிடம் அத்துமீற யோசித்து நழுவியிருப்பான்.

  இல்லைனா.. காசலிச்சேன் இப்ப இப்படி ஆகிடுச்சுனு அவன் மிரட்டறான்னு அவ சொல்லிருந்தா கூட நாம அவனை வார்ன் பண்ணி போலிஸில் சைபர் கிரைம்ல சொல்லி போட்டோவை வாங்கி அழித்திருக்கலாம். அக்ஷரா அப்படி செய்யலையே. அண்ணி அண்ணாவும் புரிஞ்சிக்கலை.
  
     நாம கெடுதலுக்குனு போனை வாங்கி தரலையே. எத்தனையோ நல்ல வழியும் இருக்கு. அதுக்கு தானே வாங்கி கொடுத்த. நீ உன்னால முடிந்தளவு அக்ஷரா இறப்புக்கு முடிவு கட்டிட்ட நிரல். போதும்… இனி நமக்காக வாழு.” என்றான் சாந்தனு.
  
     நிரல்யா முடியுமா? என்பது போல பார்த்தாள்.

    கண்களில் வழிந்த நீரை அழுத்தி துடைத்து விட்டு வேகமாக, “அக்ஷரா பேபி இறப்புக்கு காரணமானவன் இறந்துட்டான் அக்கா. என்னால யாரு என்னனு கண்டுபிடிச்சி என் கையால் கொல்ல பார்த்தேன். பட் முடியலை. போலிஸ் அந்த வேலையை பார்த்துடுச்சு. போலிஸ்லயும் நல்லவங்க இருக்காங்க போல. அக்கா நான் ஒன்றும் அக்ஷராவுக்கு கெடுதலுக்காக போன் வாங்கி தரலை. ப்ளிஸ் அக்கா என்னை குற்றவாளியா எண்ணிடதே… மன்னிச்சிடு” என்று டைப் செய்து வாட்ஸப்பில் அனுப்பியவள் மயங்கி சரிந்தாள்.

      சாந்தனு வேகமாக நிரல்யாவை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றான். அங்கே நிரல்யா கர்ப்பமாக இருப்பதாக, மருத்துவர் கூற சாந்தனு கண்கள் நீரை வடித்தது.

       தன் அண்ணா அண்ணியிடம் பகிர போனை எடுக்க, மகேந்திரனே போனில் அழைத்தார்.

     “சாந்தனு தயவு செய்து நாங்க எல்லாம் மறக்க முயற்சித்து கஷ்டப்படறோம். செத்தது எங்க பொண்ணு.

    திரும்ப உன் மனைவியை ஜானகிக்கு வாட்ஸப் அனுப்ப வேண்டாம்னு சொல்லு. போதும் பட்டடது எல்லாம்.” என்று கூறினார் மகேந்திரன்.

   சாந்தனுவோ, “அண்ணியிடம் அவங்க முதல் பொண்ணா எண்ணியிருந்த அவங்க தங்கை நிரல்யா கர்ப்பமா இருக்கானு சொல்லிடு. நானோ நிரல்யாவோ எந்த தவறும் பண்ணலை… தவறுக்கு துணையும் போகலை. நிச்சயமா நீ அண்ணி மன்னிக்காம இருக்கலாம். அக்ஷரா எங்க மகளா நிரல்யா வயிற்றில் பிறந்து கடவுள் உங்களுக்கு புரியவைப்பார்.

     அக்ஷரா இறப்புக்கு காரணமான பொறுக்கி இறந்துட்டான். தெளிவா யார் என்ன எப்படின்னா விமல் சாரிடம் கேட்டுக்கோ. இனி தொந்தரவு பண்ண மாட்டேன் அண்… மகேந்திரன் சார்.” என்று அண்ணாவை தவிர்த்து முடித்து விட்டான் சாந்தனு.

   மகேந்திரன் விமலுக்கு போன் செய்து விசாரிக்க அக்ஷரா தவறும் அறிந்தப் பின் ஜானகி தேவியிடம் மகேந்திரன் நிரல்யா நிலையை பகிர்ந்தார். ஜானகிதேவி கண்கள் வெறித்த பார்வையில் இருந்து கலங்கி கண்ணீர் உகுத்தியது.

***
   நிரல்யா கர்ப்பம் உறுதியானப்பின் சாந்தனு ‘நர்மதா மனநல க்ளினிக்’கிற்கும் அழைத்து வந்து நிரல்யா பிரகனட்டாக இருப்பதையும், கூறி நன்றி நவில்ந்து வணங்கினான்.

      “சாந்தனு நன்றி சொல்லற அளவுக்கு ஒன்றுமே பண்ணலை. நீங்க என் பேஷண்ட். உங்க கவலை போக்கி தீர்வு சொல்லறது தான் என் கடமை.

     என்ன அக்ஷரா முதல்ல இங்க வந்தா அவளுக்கும் தீர்வு என்ன என்று அறிந்து களைந்திருக்கலாம். பட்…  தலைவிதினு ஒன்று இருக்குல… இந்த தலைமுறை தன் புகைப்படம் தவறா போகும்னு அந்த தப்பு செய்ய பயப்படமாட்டறாங்க. ஆனா தப்பை ஒத்துக்கொண்டு அதை தீர்வு களைய பயப்படறாங்க. 

    அப்படி தீர்வு காண வழி தேடினா குற்றம் பாதியா தடுக்க முடியும். என்ன செய்ய ரேப் பண்ணினவனை விட ரேப் செய்யப்பட்ட பெண்ணை தானே புகைப்படம் போட்டு போட்டு காட்டி மீடியாவே அந்த பெண் வாழ்வை முடக்கிடுது.

    இட்ஸ் எனாப்… நடந்தது முடிந்ததா இருக்கட்டும். நிரல்யா… நீங்க இனி உங்க வாழ்வை பார்க்க ஆரம்பிங்க. சாந்தனு நம்பற மாதிரி அக்ஷரா உங்க வயிற்றில் பிறப்பாங்க. நல்லா பார்த்துக்கோங்க.

    உங்களுக்கு வயது முப்பதியொன்று அதனாலயும், ரொம்ப நாள் கழித்து கரு தங்கியிருக்கு அதற்காகவும் உங்களை அதிகமா கேர் எடுத்து பார்த்துக்கறது தான் இப்ப நல்லது.
 
     நல்லா சாப்பிடுங்க. நல்லதை பாருங்க. நல்லதை படிங்க. எதையும் மனசுல போட்டு யோசிக்காதிங்க. ஒரு உயிரோட இறப்பை ஈடுகட்ட இன்னொரு உயிர் வருவதை உணருங்க.
  
     பாவம் சாந்தனு உங்களுக்காக அண்ணா அண்ணிகிட்ட பகைச்சிட்டு, உங்களை குறை சொல்ல கூட விடாம பார்த்துக்கிட்டார். நடுவுல உங்களோட நடவடிக்கையில் பயத்திலேயே வாழ்ந்தவர்.

   வேலைக்கு கூட போகலை… ஒர்க் ப்ரம் ஹோம் வாங்கிட்டு உங்களை பார்த்துக்கறது தான் வேலைனு இருந்துட்டார்.

     இனி நீங்க உங்க குழந்தை பற்றி யோசித்து கவனிச்சா… மனசு தானா மாறும். இழந்தது திரும்ப கிடைக்கும்.” என்று டாக்டர் நர்மதா கூறவும் இதுவரை கண்ணீர் உகுத்து குனிந்திருந்தவள் நிமிர்ந்தாள்.

   “முயற்சி பண்ணறேன் டாக்டர்.” என்று நிரல்யா கையெடுத்து கும்பிட்டாள். மலர்ந்த முகத்தோடு நர்மதா வழியனுப்பி வைத்தாள்.

ஆறு வருடங்களுக்கு பிறகு….

     “அக்ஷரா குட்டி ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிக்க போகுது. ஆ.. வாங்கு.” என்று ஜானகிதேவி சோறுட்ட, சாந்தனு-நிரல்யாவின் மகள் வேண்டாம் என்று தன் பெரிம்மாவிடம் மல்லு கட்டினாள்.

    “லாஸ்ட் உருண்டை டா செல்லம். ப்ளிஸ்.. ப்ளிஸ்…” என்று மகேந்திரன் கெஞ்ச துவங்கினார்.

     அக்ஷரா ஆ காட்டவும் ஊட்டி விட்டு திருஷ்டி சுழித்தார்.

       மகேந்திரன் போனில் ஜூம் ஆப்பில் லிங்கில் சென்று அக்ஷராவுக்கு வகுப்பை ஆரம்பித்து அருகே அமர்ந்திட, ஒரு மணி நேரம் வகுப்பு துவங்கி முடிந்தது.

     சந்தோஷத்தோடு டிவி ஆன் செய்ய “டோரா வேண்டுமா, சோட்டா பீம்மா?” என்று மாற்ற செய்தி அலைவரிசையில் இருந்தபடி மகேந்திரன் கேட்க, தொலைக்காட்சி செய்தியோ, ‘ஆன்லைன் வகுப்பு மூலமாக வாட்ஸப்பில் மாணவி எண்ணை அறிந்த ஆசிரியர் மதிப்பெண்ணை குறைப்பதாக காரணம் காட்டி மாணவியிடம் ஆபாசமாக பேசி வலை விரித்தார்’ என்றும் ஆன்லைன் வகுப்பில் மேலும் சில சிறுவ சிறுமிகள் உடைகள் அங்கம் தெரிய இருக்க அதனை ஸ்கிரின் ஷாட் எடுத்து இரசித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பள்ளியின் நிர்வாகம் இதற்கு..” என்றதும் ஜானகிதேவி டிவியை அணைத்து விட்டு ”கடவுளே…. இதென்ன ஆபத்து. படிக்க தானே ஆன்லைன் வகுப்பு அதுலயுமா…” என்று அக்ஷராவை அணைத்து கொண்டு நடுங்கினார் ஜானகி.

    மகேந்திரனுக்கோ ஒரு நிமிடம் தன் மகள் அக்ஷரா கண்ணெதிரில் வந்து மறைந்தாள்.

   அவருமே தம்பி சாந்தனுவின் மகளை அணைத்து ஜானகிதேவியினை கண்டு “அக்ஷரா முழிக்கிறா மா. அவளை ஆன்லைன் வகுப்பில தனியா விடாதே. ரைம்ஸ் பார்க்கவும் போனை தராதே. அப்படியே தந்தா கூடவே உட்கார்ந்துக்கோ.” என்று நெஞ்சில் கைவைத்து நின்றார்.

     “அக்ஷரா பேபி… அக்கா… மாமா.. ” என்று நிரல்யா குரல் கொடுத்து கடைக்கு சென்ற சாந்தனு நிரல்யா வந்தார்கள்.

    “அக்ஷரா… கேக் ஆர்டர் பண்ணியாச்சு. இந்தா… நீ கேட்ட ஆரேஞ்சு கலர் பலூன்” என்று கொடுத்தாள்.

   முகம் எல்லாம் பூவாக அக்ஷரா வாங்கி கொண்டு ஓடினாள்.

    “என்னாச்சு அண்ணா…” என்றான் சாந்தனு. இந்த இடைப்பட்ட காலத்தில் நிரல்யாவின் மகளை காண வந்து உறவுக்குள் துன்பம் மறைந்து வாழ முயன்றனர்.

    நிரல்யாவும் அக்கா மாமா கையில் குட்டி அக்ஷராவை தந்து உங்களுக்கும் இவள் மகள் தான் என்பதாக கூற மீண்டும் மகள் பிறந்ததாகவே ஜானகிதேவி மகேந்திரன் எண்ணினார்கள்.

     இருக்குடும்பமும் ஒரே வீட்டில் அக்ஷராவை வளர்க்க முடிவெடுத்தனர்.

    நாளை அவள் பிறந்தநாள் அதற்கு தான் கேக் ஆர்டர் செய்து விட்டு, அவளுக்கு வீடு நிறைய பலூனை நிரப்ப வாங்கி வந்ததில் இரண்டை தற்போது கொடுத்திருந்தான் சாந்தனு.

    “ஒன்னுமில்லை… சாந்தனு. ஆன்லைன் வகுப்புல மாணவியிடம் மதிப்பெண் குறைப்பேனு சொல்லி ஒரு காமுகன் விளையாடியிருக்கான். செய்தியா கேட்டதும் நம்ம அக்… பழைய நினைவு வந்துடுச்சு.

     இந்த போன் இருக்கே… அய்யோ… பயமா இருக்கு சாந்தனு. இந்த தலைமுறையில் குழந்தையை வளர்க்கவே. நாம தவறே செய்யலைனாலும் தானா வரும் நிகழ்வை எப்படி தடுக்கவேனு புரிய மாட்டேங்குது. விதினு பழி சுமத்தவா, நம்ம நேரம் என்று கடக்கவோ முடியலை டா.

     ரோஜா பூ போல ஒரு மகளை பெற்றெடுத்து, குத்துவிளக்கு மாதிரி வளர்த்தா எவன்எவனோ எங்கிருந்தோ வந்து மானத்தை விலைப்பேசி பூவை நாசம் செய்யறான். பொண்ணை பாதுகாப்பா வளர்க்கணும்.” என்றார் வருத்தமான குரலில்.

    “பொண்ணை பாதுகாப்பா வளர்த்தா மட்டும் போதாதுனா. ஆம்பிளை பிள்ளையை பெற்றவங்களும் அவங்க பையனுக்கு நல்லது சொல்லி வளர்க்கணும்.

    இப்ப இருந்தே பெண்கள் மேல மரியாதை விட்டுக்கொடுத்தல் கொண்டு வந்தா தானே பிற்காலத்தில் வாலிபன் ஆனாலும் மதிப்பான். தப்பு செய்ய மாட்டான்.

இப்ப இருக்கற பெற்றோர் முந்தைய தலைமுறை மாதிரி அடிச்சி  வளர்க்கறதே இல்லை. அடிச்சி வளர்த்தா என்னவோ, என்ன அப்பா அம்மா இவங்க என்று நம்மை தான் கொடுமைக்காரங்களா பார்த்து வைக்கிறாங்க.

     எங்க அடிச்சி வளர்க்கணுமோ அங்க அடிச்சி வளர்க்கணும் அண்ணா. அப்போ தான் சரி தவறு உணர்வாங்க. சின்ன தப்புக்கே அப்பா அம்மா அடிப்பாங்க. நம்மை கேள்வி கேட்பாங்கனு பயம் வந்தா, பெரிய தவறை யோசிக்க மாட்டாங்க.

இப்ப இருக்கற பெற்றோர் பெரிய தவறே செய்தாலும் பையனை காப்பாற்றணும்னு பணத்தை செலவழிக்கறாங்க. அப்படியிருந்தா அம்மா அப்பாவிடம் செண்டிமெண்டா பேசி தப்பை சரிபண்ணிடலானு புத்தி போகுது. எதுவும் சொல்லறதுக்கு இல்லைண்ணா.

   இந்த உலகம் போகிற பாதையில முட்கள் அதிகம் உண்டு. முடிந்தவரை நாம பூதூவி விடணும் நல்ல வளர்ப்பில்..” என்று சாந்தனு குதித்து பலூனை பிடிக்க முயற்சிக்கும் மகளை பார்த்தான்.

     குதித்து குதித்து கீழே விழ இரு பெற்றோர்களும் தாங்க ஓடி வந்தார்கள்.

-முற்றும்.

-பிரவீணா தங்கராஜ்.

  இது பிரதிலிபில *மகாநதி* போட்டிக்கு எழுதியது. என்னடா கதை  போனை பற்றி தானா… இதே மாதிரி ஒரு நம்பரின் தவறிய அழைப்பில்…(என்னோட கதை தாங்க.) வந்திடுச்சே சொல்லறது கேட்குது.

  
  பட் ஸ்மார்ட் போன் வைத்து டெக்னாலஜி சோஷியல் மீடியா என்று எத்தனை வகையில காமுகர்கள் வலை விரிக்கிறாங்கனு நமக்கு தெரியாதது இல்லை. அதை ஒரு கோர்வையா கொடுக்க முனைந்தேன். இதிலும் பச்சையா விரிவா எழுத நிறையவே இருக்கு. பட் என்னால முடியாது.

    ஏதேனும் விரிவா எழுதி அதை தேடி யாரும் சென்று கெட எனக்கு விருப்பமில்லை. படிப்பவர்கள் பதினெட்டு அடியெடுத்து வைத்தாலும் எதையும் என்னால பச்சையா எழுத மாட்டேன்.

      இன்ஸ்டால், ஷேர்சாட், கதைக்குரிய ஆப், கிண்டல், youtube, குகூள், வாட்சப், facebook mesenger, twitter, இன்னும் எத்தனை எத்தனையோ… எல்லாவற்றிலும் முகப்பு படம் மெயில் கமெண்ட்ஸ் செய்யும் பக்கம் மற்றும் தனிபட்ட உரையாடல்(inbox chat), என்று இளைஞர் முதல் நடுத்தர வயது குழந்தைகள் வரை ஆண்களில் காமுகர்கள் பலர் வலை விரித்து எப்ப பறவையான பெண்கள் மாட்டுவார்கள் என்று காத்திருக்கின்றனர். நாம முதல்ல பிரெண்டலியா பேசறதில் என்ன தப்பு, தவறான பேசினா பிளாக்ல போடலாம்னு கூட இருப்போம். பட் எந்த லூப் மூலமாக நம் தனிபட்டவை வெளிப்பக்கம் செல்லாது பாதுகாப்பாக இருங்க.

   நிறைய விழிப்புணர்வு பதிவு பார்க்கறோம், படிக்கிறோம், ஏன் நாம கூட அட்வைஸ் பண்ணறோம். பட் மனசு என்பது ஆசைக் கொண்டது. அது எப்போ தடுமாறும்னு சொல்ல முடியாது. முடிந்தவரை முகமற்றவரிடம் இருந்து ஹாய் ஹலோ எந்த ஊர் என்று ஆரம்பிக்கம் உரையாடலை கண்டு விழிப்படையுங்கள். எந்தவூர் என்றால் எதுக்கு படையெடுக்கணும்.

    என்னவோ எனக்கு தெரிந்தவரை எழுதறேன். பகிர்கின்றேன்.

   ஓகே… அட்வைஸ் போதும். எனக்கு அழுகையா எழுத வராது. அட்வைஸ் அதிகம் வராது. இது போட்டிக்கு என்று யோசித்து வைத்து கதைக்கரு இல்லை. ஏற்கனவே யோசித்து வைத்தேன் எழுதறதுக்கு, பட் மகாநதிக்கு எழுதிட்டேன்.

நன்றி
வணக்கம். 😊🙏
படித்து பிடித்திருந்தா கமெண்ட்ஸ்ல நிறை குறை சொல்லுங்க.

முகநூலில் விமர்சனம் அளிக்கலாம். சிறு விழிப்புணர்வு கதை
  

2 thoughts on “இணையவலை கட்செவி அஞ்சல்”

  1. Kalidevi

    Very good information to a children and students. Ellam therinjalum thadumarura pasanga irukanga apram tha yosikuranga. Nalla story avasiyamum kuda

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *